பக்கங்கள் செல்ல

இஸ்லாம் குறித்த விமர்சனங்களும் பதில்களும்

 1.சுவர்க்கத்தில் 72 கன்னியர்கள்: ஓர் ஆய்வு


பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் 72 ஹூருல் ஈன்களை அல்லாஹ் தருவதாக போகிற போக்கில் இந்த குற்றச்சாட்டை தொடர்ச்சியாக பரப்பித்திரிந்து தங்களது அரிப்பை தீர்த்து வருகின்றனர். ஆகவே இந்த தொடரில் இந்த செய்திகளை பரப்பும் மிசனரி/ நாத்திக வேடதாரிகளின் தகவல் மூலமான விக்கி இஸ்லாம், ஆன்சரிங்க் இஸ்லாம் போன்ற மிசனரி தளங்களின் ஆங்கில கட்டுரைகளுக்கு(1) பதில் அளிப்போம் இன்ஷா அல்லாஹ். அவற்றில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு செய்தியின் மூலங்களை மூல நூல்களில் இருந்து எடுத்து பதிந்து அவற்றின் தரத்தை ஆய்வு செய்வோம் இன்ஷா அல்லாஹ். மேலும் வாசிக்க

நபி (ஸல்) அவர்களோ, சொல்லும் பதிலை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இல்லாமல் எழுத்துப் பூர்வமான ஆதாரத்துடன், எல்லா காலத்திலும் பரிசோதித்துக் கொள்ளக் கூடியதாக சொல்லியுள்ளார்கள் என்றால் அது மனிதனால் முடியாது.
இறைவனின் உதவியால் மட்டுமே முடியும்...
Ref Book: The Man in the Red Under Pants
Author: A.R.Green......மேலும் வாசிக்க


3.இஸ்லாத்தின் பார்வையில் அடிமை முறையும், சமத்துவமும் - 1

இஸ்லாம் அடிமைகளை ஆதரிக்கின்றது ..அதனால் இஸ்லாத்தில் சமத்துவம் இல்லை என்று கூறும் சிலரின் கூற்றில் உள்ள முரண்பாடுகளை எடுத்துக்காட்டுவதற்காக இந்தத் தொடர் எழுதப்படுகின்றது.
அடிமைத் தனம் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பாகவே இருந்து வந்த ஒரு கொடுமையான பழக்கம். கேட்பார் யாருமில்லை... தடி எடுத்தவன் தண்டல் காரன் என்ற பழமொழி இன்றைக்கு எவ்வாறு பொருந்துமோ, அதைவிட பல்லாயிரம் மடங்கு கூடுதலாக அன்று பொருந்தியது. மேலும் வாசிக்க

 
4.பிற மதத்தவர்களுடன் நல்லுறவு............. (பதிவு : சகோதரர் அப்துல் சலாம் , வரைகலை : Meezan-தராசு )

முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் பல இடங்களில் கட்டளையிடுகிறது. இஸ்லாம் இன வெறியைத் தூண்டுவதாக இவ்வசனங்களைப் பார்க்கும் சிலர் எண்ணலாம்.
இவ்வாறு எண்ணுவது தவறாகும். திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள். எப்படியாவது முஸ்லிம்களை அழித்து இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். போர் நடக்காத வருடமே இருக்கவில்லை. சில வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களையும் முஸ்லிம்கள் சந்தித்தனர். மேலும் வாசிக்க


முதல் சம்பவத்தில், இஸ்லாமிய சட்டம் பயின்ற அந்த பெண் துணிச்சலாக செய்தது, "தாவீஸ்" என்ற பெயரில் குரான் வசனங்களை எழுதி, அணிந்து வரும் மூட நம்பிக்கையை, அந்த தர்கா வாசலிலே எதிர்த்தது. அங்கு உள்ள தர்கா பொருப்புதாரியான ஜைனுதீன், ஆங்குள்ள மக்களிடம், "இவள் அமெரிக்காவின் ஏஜன்ட், குரானை அவமதித்து விட்டாள்", என்று திசை திருப்பிவிட்டான். மேலும் வாசிக்க


6.இஸ்லாம்: விமர்சனங்களும் பதில்களும் பகுதி - 01 - ஜிஸ்யா வரி

சமூக இணையத்தளங்களில் இஸ்லாத்தின் விரோதிகளால் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் தவறாக சித்தரிக்கப்பட்டு காட்டப்படுகின்றது. இதற்கு இஸ்லாத்தின் விரோதிகள் பயன்படுத்தும் ஓர் ஆயுதம் ஜிஸ்யா வரியாகும். ஜிஸ்யா என்றால் என்ன? அது ஏன்? என்பதை பார்ப்போம். மேலும் வாசிக்க


துறவறம் இயற்கைக்கு மாறானது என்றால் நோன்பும் இயற்கைக்கு மாறானது தானே? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு எப்படி பதில் சொல்வது?
இஸ்லாம் துறவறத்தை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் துறவறம் என்பது மனிதர்கள் யாரும் கடைபிடிக்க முடியாத பொய்யான கொள்கையாகும். இதனால் மனித சமுதாயத்துக்கு பாதிப்புகளைத் தவிர நன்மைகள் ஏற்படுவதில்லை. மேலும் வாசிக்க

"பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்", என்ற தலைப்பில் முகநூளில் வந்த பதிவிற்கு, பதில்.
இதை பார்க்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும், இது இஸ்லாம் சொன்னது அல்ல என்று தெரிந்துவிடும். மாற்று மத சகோதரர்களுக்கு தெளிவாக்க வேண்டும் என்ற காரணத்தினால் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்கபகுத்தறிவுவாதிகள், பெண்ணியவாதிகள் என தம்மை அழைத்துக்கொள்பவர்கள் இஸ்லாத்தில் ஆண்கள் செய்யும் பலதார திருமண முறையை ஆணாதிக்க முறை, பெண்ணடிமைத்தனம் என்று பலவாறாக கூறுவார்கள், இஸ்லாம் பலதார திருமண முறையை வலியுறுத்தி கூறவில்லை. தேவையேற்பட்டால் அவ்வாறு செய்யலாம் எனக்கூறுகின்றது. பெண்கள் அதிகம் உள்ள ஊர்களில் இதனை சாத்தியமான நடைமுறை ஒன்றாக கூறலாம். ஆனால் அண்மையில் முன்னாள் முஸ்லிம் தன்னை அழைத்துக்கொள்ளும் தஸ்லிமா நஸ்ரின் என்னும் பகுத்தறிவாதி நானும் ஆண்கள் போல் ஓரே நேரத்தில் 4 திருமணம் செய்வேன். ஆணும் பெண்ணும் சமம் எனக்கூறினார். இதே கருத்தையே பல பகுத்தறிவாதிகளும் இன்று கூறி வருகின்றனர். இது சாத்தியமானல் என்ன நடக்கும் ஒரு சிறு கற்பனை! மேலும் வாசிக்க

10.முஸ்லிம் பெண்கள் விவாகரத்து சட்டமா? 125 சி.ஆர்.பி.சி சட்டமா?

ஒரு கணவர் மனைவியை விவாகரத்து செய்த பின் அவள் மறுமணம் செய்யும் வரை அல்லது மரணிக்கும்வரை ஜீவனாம்சம் தரச் சொல்கிறது சி.ஆர்.பி.சி. 125வது பிரிவு. இதை வைத்தே இந்திய நீதிமன்றங்கள் முஸ்லிம் பெண்களின் விவாகரத்து வழக்கிலும் தீர்ப்பளிக் கின்றன என்றாலும், முஸ்லிம் பெண்களின் விவாக ரத்து வழக்கில் வெவ்வேறு விதமான (செய்திக் கட்டுரையில் கண்ட மும்பை குடும்பநல நீதிமன்றத்தைப்போல) தீர்ப்புகளையும் பல்வேறு காலகட்டத் தில் அவை வழங்கியிருக்கின்றன. மேலும் வாசிக்க


11.கடவுளை படைத்தது யார்?

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை அல்லது அதன் பயன்பாடு மற்றும் செயற்பாடு அல்லது அதன் விசையைக் கட்டுப்படுத்தா விட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும் , இருக்க வேண்டும் .
ஆகாயம் வீழ்ந்து விடாதவாறு தடுக்க வேண்டிய தேவை உண்டு; அதனால் அது தடுக்கப்பட்டு வருகிறது என திருக்குர்ஆனால் எப்படிக் கூற முடியும்?
எனவே குறைந்த பட்சம் பேரண்டத்திற்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதும் மேலும் அதை சமன் செய்யும் மற்றொரு ஆற்றல் இப்பேரண்டத்தில் வெயல்பட்டு வருகிறது எனும் கருத்தும் இந்த வசனத்தில் (22:65) இருந்து தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. மேலும் வாசிக்க


12.மூஸா நபி தம் சமூகத்தாரை தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்றார்களா?

இஸ்லாத்தில் எந்த காரணத்திற்காகவாவது தற்கொலை செய்து கொள்ள அனுமதி உண்டா?
மூஸா தம் சமூகத்தாரை, தற்கொலை செய்து கொள்ளுங்கள். அதுவே இறைவனிடத்தில் இருந்து பாவங்களை போக்கி நற்பலனை அளிக்கும் என்கிறார்??? மேலும் வாசிக்கஇந்த பதிவானது பலதார மணம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன என்பதை தெளிவாக இஸ்லாமிய சகோதர்ரகளுக்கும் இஸ்லாமிய எதிர்பாளர்களுக்கும் விளக்கவே. பொதுவாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் பலதார மணம் குறித்து பேசும் போது பெண்ணின் உரிமை பாதிப்பதாகவே வாதிடுவார்கள். மேலும் இதனால் முதல்தாரத்தின் உரிமை பறிக்கப்படுவதாகும் வாதிடுவார்கள். உண்மையில் இஸ்லாமின் பலதார மணம் குறித்த பார்வையை தெளிவு படுத்தினாலே பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எப்படி இஸ்லாம் வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் கடமைகளையும் வழங்கியுள்ளது.... மேலும் வாசிக்கசில காலமாக சில இந்துத்துவா கும்பலும், கிறித்தவ மிசனரிகளும் இஸ்லாமிய திருமணத்தில் வழங்கப்படும் மஹர் குறித்து விமர்சனம் செய்து வருகின்றன. அது பெண்ணின் யோனியை உபயோகிக்க விதிக்கப்படும் தொகை என கூறி அதை விமர்சித்து வருகின்றன. இஸ்லாமிய திருமண முறையில் இடம் பெறும் மஹர் குறித்து பார்ப்பதற்கு முன்பு திருமணம் என்றால் என்ன என்பதையே இவர்களுக்கு விளக்க வேண்டிய அவல நிலை இங்கு ஏற்பட்டுள்ளது என்பதையே இவர்களின் இந்த அறிவீன வாதம் உணர்த்துகிறது. மேலும் வாசிக்க

நபி(ஸல்) - ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் மற்றும் இஸ்லாமின் திருமண வயது ஆகிவற்றை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பித்திரியும் வலைத்தளங்களின் விமர்சனங்களும் அதற்கான தக்க பதில்களும். பாகம் 1.நபி(ஸல்), ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் ..பாகம் 2.நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) யை மணந்ததால் அவர் ஒரு குழந்தை புணர்வாளர்: விமர்சனமும் பதிலும்.. அனைத்து பாகங்களையும் வாசிக்க


நபி(சல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆனுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை என்ற கருத்தை தனது விமர்சனத்தில் முன்வைத்துள்ளார். நாம் சிறிது ஆய்வு செய்தோமென்றால் குர்ஆனை நபி(சல்) அவர்கள் எந்த வடிவில் விட்டு சென்றார்ளோ அதே வடிவத்தில்தான் இன்றும் பயன்பாட்டில் உள்ளது என்பதைதான் காட்டும். அதற்கான வரலாற்று செய்திகளை வரிசைபடுத்தினால் கட்டுரையாளரின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். மேலும் வாசிக்க


17.குர்ஆன் பாதுகாக்கப்படவில்லையா?- பாகம் 2

அதாவது எழுத்து பூர்வமாக குர் ஆன் பாதுகாக்கப்பட வில்லை என்பது இன்றிருக்கும் மிசனரிகளின் வாதமாக இருக்கிறது. இது குறித்து நாம் விளங்கும் முன்னர் இன்று சுருள்களின் காலத்தை நிர்ணயம் செய்யும் Radiocarbon Dating குறித்து நாம் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது இவ்வாறு Radiocarbon Dating தரும் தகவல் குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதன் துல்லியத்தின் அளவு குறித்த விபரங்களை நாம் அறிந்து கொள்வது இந்த கட்டுரையை விளங்க ஏதுவானதாக இருக்கும். மேலும் வாசிக்க


குர்ஆனின் பாதுகாப்பு குறித்தும் அது எவ்வாறு பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த இஸ்லாமிய சமூகம் நன்கு அறியும். ஆயினும் இன்று முளைத்திருக்கும் சில மிசனரிகளும் தங்களை முன்னாள் முஸ்லீம்கள் என்று கூறித்திரியும் சிலரும் இஸ்லாம் மீது கொண்ட காழ்ப்புணர்சியாலும் , ஃபோபியாவினாலும் குர்ஆன் எந்த வழியிலும் பாதுக்காக்கப்பட வில்லை என்று அவதூறு பரப்பி திரிகின்றன. எழுத்து வடிவிலும் ஓசை வடிவிலும் பாதுகாக்கப்படாத ஒரு ஏடு எப்படி பல கோடி முஸ்லீம்களிடம் அதுவும் உலகின் பல பகுதியில் வாழும் முஸ்லீம்களிடம் ஒரே மாதிரி இருக்கிறது . அனைத்து பாகங்களையும் வாசிக்க
No comments:

Post a Comment