- இஸ்லாமோஃபோபுகளின் குருட்டு வாதமும் அதன் நோக்கமும்
- ஏழு அஹ்ரூஃப் குறித்த கருத்துக்கள்
- ஏழு அஹ்ரூஃபில் இறங்கிய அல்குர்ஆன்
- அஹ்ரூஃப் என்பதின் பொருள்
- அஹ்ரூஃப் என்றால் வட்டார வழக்கா???
- ஏழு அஹ்ரூஃப் என்பது இலக்கண மாறுபாடுகள் மட்டுமா????
- அஹ்ரூஃபின் - மாறுபட்ட முறை என்ற பொருளே அதன் விளக்கம்
- அஹ்ரூஃபும் கிராத்தும்
- குர்ஆனில் 10243 மாறுபட்ட ஓதல்களா- சாமூவேல் கிரீனின் பிதற்றலுக்கு பதில்
1. குர்ஆன் ஏழு வட்டார வழக்கில் இறங்கியது. ஆனால் இன்றிருப்பது ஓரே வழக்குதான். அதனால் குர்ஆனின் முழு பகுதியும் பாதுக்காக்கப்பட வில்லை.2. உஸ்மான்(ரலி) அவர்கள் குர்ஆனை தொகுக்கும் போது குரைஷியரின் வட்டார வழக்கில் தொகுக்க கட்டளை இட்டுவிட்டார். அதனால் அவர் நபி(சல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்து விட்டார்.3. இன்று பல ஓதல்கள் உள்ளன. அதில் எது நபி(சல்) அவர்களின் ஓதல் என்பதை அறிய இயலாது.
1.நபித்தோழர்கள் நம்பகத்தன்மை அற்றவர்கள். அல்லாஹ்வின் வேதத்தின் ஒரு பகுதியையே அழிக்கத்துணித்தவர்கள்.
2.அல்லாஹ்வின் குர்ஆன் ஓதலிலும் பாதுக்காக்கப்படவில்லை
ஏழு அஃரூஃப் குறித்து இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் நிழவுகின்றன. அவை
عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَقْرَأَنِي جِبْرِيلُ عَلَى حَرْفٍ، فَلَمْ أَزَلْ أَسْتَزِيدُهُ حَتَّى انْتَهَى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரேயொரு அஹ்ரூஃபின் படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல அஹ்ரூஃபின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு அஹ்ரூஃப் அளவிற்கு வந்து நின்றது. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 3219)
லேன்ஸ் லெக்ஸிகான் குறிப்பிடுவது போன்ற பொருளில் அல் குர்ஆனிலும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.
وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَىٰ حَرْفٍ ۖ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ ۖ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انْقَلَبَ عَلَىٰ وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ۚ ذَٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ
இன்னும்; மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.(அல் குர்ஆன் 22:11)
அஹ்ரூஃப் என்றால் வட்டார வழக்கா???
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِينَ وَتُنْذِرَ بِهِ قَوْمًا لُدًّا
(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும். ( அல்குர்ஆன் 19:97)
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.(அல் குர்ஆன் 44:58)
وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ الْقُرَشِيِّينَ الثَّلاَثَةِ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَىْءٍ مِنَ الْقُرْآنِ فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ فَفَعَلُواமேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷியரின் மொழிவழக்குப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள்.(புகாரி 4987)
உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அவர் அதை ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே அவரை நான் தண்டிக்க முனைந்தேன். (சற்று நிதானித்து) அவர் தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும் வரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.(அவர் தொழுகையை முடித்ததும் அவரின் மேல் துண்டை) அவரின் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'இந்த அத்தியாயத்தை நான் (உம்மிடமிருந்து) செவியேற்றபடி உமக்கு ஓதிக்கொடுத்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஓதிக் கொடுத்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம்மிடம் நான் செவியேற்ற இந்த அத்தியாயத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களே எனக்கு (நீர் ஓதியதற்கு மாற்றமாக) ஓதிக் கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக்கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக் கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன். இந்த அத்தியாயத்தை நீங்கள் எனக்கு (வேறு முறையில்) ஓதிக் கொடுத்துள்ளீர்கள்' என்று சொன்னேன். அப்போது, நபி(ஸல்) அவர்கள், 'ஹிஷாமே, அதை ஓதுங்கள்!' என்றார்கள். உடனே அவர் நான் அவரிடமிருந்து செவியேற்றபடியே (நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும்) ஓதிக் காட்டினார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் 'இப்படித்தான் (இந்த ) அருளப்பெற்றது' என்று கூறினார்கள்.பிறகு (என்னைப் பார்த்து), 'நீங்கள் ஓதுங்கள், உமரே!' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக் கொடுத்தபடி நான் ஓதினேன். (அதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த ) அருளப்பெற்றது' என்று கூறிவிட்டு, இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டுள்ளது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். (புகாரி 5401)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ لَقِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جِبْرِيلَ فَقَالَ يَا جِبْرِيلُ إِنِّي بُعِثْتُ إِلَى أُمَّةٍ أُمِّيِّينَ مِنْهُمُ الْعَجُوزُ وَالشَّيْخُ الْكَبِيرُ وَالْغُلاَمُ وَالْجَارِيَةُ وَالرَّجُلُ الَّذِي لَمْ يَقْرَأْ كِتَابًا قَطُّ قَالَ يَا مُحَمَّدُ إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ
அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்கள் ஜிப்ரீலை சந்தித்து கூறினார்கள்; ஜிப்ரீலே! நான் எழுத படிக்க தெரியாத சமூகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளேன். அதில் புத்தகத்தை ஓத முடியாத வயதான பெண்களும், ஆண்களும், சிறுவர்களும் சிறுமிகளும் இருக்கிறார்கள். அதற்கு “முஹம்மதே: நிச்சயமாக இந்த குர்ஆன் ஏழு அஃரூஃப்களில் அருளப்பட்டுள்ளது என்று (ஜிப்ரீல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: உபை இப்னு காஃப் நூல்:திர்மிதி 2944)
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) வந்து தொழலானார்; (தொழுகையில் குர்ஆன் வசனங்களை) ஒரு விதமாக ஓதினார். அதை நான் அறிந்திருக்கவில்லை. பிறகு மற்றொருவர் வந்து (அதே வசனங்களை) முதலாமவர் ஓதியதற்கு மாற்றமாக ஓதித் தொழலானார். தொழுகை முடிந்ததும் நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் "இவர் குர்ஆனை நான் அறிந்திராத (ஓதல்) முறையில் ஓதினார். பின்னர் மற்றவர் வந்து முதலாமவர் ஓதியதற்கு மாறாக (அதையே) வேறு முறையில் ஓதினார்" என்றேன். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் ஓதிக் காட்டும்படி பணித்தார்கள். அவ்விருவரும் ஓதினர். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் சரியாகவே ஓதினர் எனக் கூறினார்கள். (இதைக் கேட்டவுடன்) என் உள்ளத்தில் நபியவர்கள் பொய்யுரைக்கிறார்கள் என்ற எண்ணம் விழுந்தது. அறியாமைக் காலத்தில்கூட இத்தகைய எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. என்னை ஆட்கொண்டிருந்த (அந்த எண்ணத்)தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது என் நெஞ்சில் ஓர் அடி அடித்தார்கள். (அடி விழுந்ததும்) எனக்கு வியர்த்துக் கொட்டியது. அச்சத்தால் எனக்கு அல்லாஹ்வே காட்சியளிப்பதைப் போன்றிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "உபை, "குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக" என எனக்கு (இறைவனிடமிருந்து) செய்தியறிவிக்கப்பட்டது. உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் சுலபமாக்கும்படி (இறைவனிடம்) கோரினேன். அப்போது "குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக!" என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான். உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு சுலபமாக்கும்படி கோரினேன். மூன்றாவது முறையில் குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின் படி ஓதும்படி எனக்கு இறைவன் அறிவித்தான். மேலும், "நீர் கோரிய (மூன்று கோரிக்கைகளில்) ஒவ்வொரு கோரிக்கைக்கும் பகரமாக என்னிடம் உமக்கு ஓர் (அங்கீகரிக்கப்பட்ட) பிரார்த்தனை உண்டு" என்றும் (இறைவன்) கூறினான். எனவே நான் "இறைவா! என் சமுதாயத்தாரை மன்னிப்பாயாக! இறைவா! என் சமுதாயத்தாரின் குற்றங்குறைகளை மறைப்பாயாக!" என (இரண்டு) பிரார்த்தனை செய்தேன். (இவ்விரு பிரார்த்தனைகள் அல்லாமல்) மூன்றாவது பிரார்த்தனையை நான் ஒரு நாளைக்காகத் தாமதப்படுத்தி (பத்திரப்படுத்தி) வைத்துள்ளேன். அந்நாளில் படைப்பினங்கள் அனைத்தும் என்னிடம் (பரிந்துரைக்கும்படி) ஆவலுடன் வருவார்கள்; இப்ராஹீம் (அலை) அவர்கள் உட்பட" எனக் கூறினார்கள்.(முஸ்லிம் 1491)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒரேயொரு அஹ்ரூஃபின்படி (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல அஃரூஃப்களின்படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்கக் கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு அஹ்ரூஃப்கள் அளவிற்கு வந்து நின்றது.இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:அந்த ஏழு அஃரூஃப்கள் ஒரே கருத்தை பிரதிபலிப்பவையே ஆகும்; அனுமதிக்கப் பெற்றவை (ஹலால்) தடை செய்யப்பெற்றவை (ஹராம்) விஷயத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்தைத் தருபவை அல்ல.- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.(முஸ்லிம் 1490)
மேற்குறிபிட்ட செய்திகளில் இருந்து பார்க்கும் போது பின்வரும் முடிவுகளை பெற முடியும்
1. ஏழு அஹ்ரூஃப் என்பது மக்களுக்கு ஓதலில் இருக்கும் சிரமத்தை குறைக்க அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சலுகை. ஓதலுக்கான பிரத்தியேக சலுகை மட்டுமே.2. ஏழு அஹ்ரூஃப் இடையே கருத்து முரண்பாடு இல்லை.
ஏழு அஹ்ரூஃப் என்பது இலக்கண மாறுபாடுகள் மட்டுமா????
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
குர்ஆனை திருத்தமாக ஓதூவீராக.(அல்குர்ஆன் 73:4)
حَدثنِي مُحَمَّد بن الجهم قَالَ حَدثنَا عبد الله بن عَمْرو بن أبي أُميَّة الْبَصْرِيّ قَالَ أخبرنَا عبد الرَّحْمَن بن أبي الزِّنَاد عَن أَبِيه عَن خَارِجَة بن زيد بن ثَابت عَن أَبِيه قَالَ الْقِرَاءَة سنة فَاقْرَءُوهُ كَمَا تجدونه
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறியதாவது ஓதல் என்பது நபிவழியாகும். ஆகவே அதை உங்களிடம் வந்தவாறே ஓதுங்கள்.(கிதாப் அல் ஸபாஹ் ஃபீ கிராத் 1/50)
حَدثنِي عبد الله بن سُلَيْمَان قَالَ حَدثنَا عَمْرو بن عُثْمَان الْحِمصِي قَالَ حَدثنَا إِسْمَاعِيل بن عَيَّاش عَن شُعَيْب بن أبي حَمْزَة عَن مُحَمَّد بن الْمُنْكَدر قَالَ سمعته يَقُول قِرَاءَة الْقُرْآن سنة يَأْخُذهَا الآخر عَن الأول قَالَ وَسمعت أَيْضا بعض أشياخنا يَقُول عَن عمر بن الْخطاب وَعمر بن عبد الْعَزِيز مثل ذَلِك
உமர் அல் கத்தாப்(ரலி) கூறியதாவது: குர்ஆனின் கிராத் என்பது நபிவழியாகும். அதை முன்னவரிடம் இருந்து பின்னவர் எடுத்துக்கொள்வதாகும்.(கிதாப் அல் ஸபாஹ் ஃபீ கிராத் 1/51)
அதனால்தான் இப்னு அத்தியா பின்வருமாறு கூறுகிறார்கள்;
அல்லாஹ் ஏழு அஹ்ரூஃபை நபி(சல்) அவர்களுக்கு அனுமத்தித்ததும், அதன்படி ஜிப்ரீல் கொண்டுவந்ததும், உருவாக்க இயலாமை மற்றும் துள்ளிய ஓத்திசைவு ஆகியவற்றை உறுதி படுத்துவதாகவே இருந்தது. நபி(சல்) அவர்களது சொல்லான “உங்களுக்கு எது எளியதோ அவ்வாறு ஓதுங்கள் “ என்பது நபித்தோழர்கள் தாங்கள் விரும்பிய எதாவது ஒரு ஹர்ஃபில் சொற்றொடரை மாற்றியமைப்பதற்கான அனுமதியன்று. அப்படி இருக்குமாயின் குர்ஆன் உருவாக்க முடியாததாக இருக்காது, மக்கள் அதையும் இதையும் மாற்றி, அது அல்லாஹ் அருளாத வேறொன்றாக மாறியிருக்கும். நபி(சல்) அவர்களுக்கு ஏழு அஹ்ரூஃபின் அனுமதியானது அவர்களது சமூகத்திற்கு எளிமை படுத்ததான் அல்லாஹ்வால் வழங்கப்பட்டது. உபை அவர்களக்கு ஜிப்ரீல் கொண்டு வந்ததும் நபி(சல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். இப்னு மஸுத் அவர்களுக்கும், அவர்களுக்கு (நபி(சல்) வழங்கப்பட்டதை ஓதிக்காட்டினார்கள்.(தஃப்ஸீர் குர்துபி 1/48)
எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார். (அல்குர் ஆன் 26:193-195)
அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை அருளினோம்.(அல் குர்ஆன் 39:28).
மேற்குறிபிட்ட மொத்த கட்டுரையில் இருந்து பின்வரும் முடிவுகளை அடைய முடியும்:
1. அஹ்ரூஃப் என்பது மக்கள் ஓதும்போது ஏற்படும் சிரமத்தை குறைக்க அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சலுகை ஆகும்.2. இது சலுகை என்பதை மக்கள் புரிந்து கொண்டதால்தான் சட்ட விளக்கங்களை பெரும்பான்மை ஓதலில் அதாவது நபி(சல்) அவர்களது இறுதி ஓதலில் இருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.3. ஏழு அஹ்ரூஃப் என்பது ஒரு வசனத்தை இலக்கண அடிப்படையிலும், மொழிவழக்கின் அடிப்படையிலும் மாறுபட்டு ஓதுவதற்கான உட்சபட்ச வரம்பாகும். ஹர்ஃப் என்பதற்கு வரம்பு என்ற பொருளும் உண்டு என்பது குறிப்பிடதக்கது.4. கிராத் என்பது அஹ்ரூஃபின் அடிப்படையில் தோன்றும் எண்ணிலடங்கா ஓதல்களாகும். அங்கிகரிக்கப்பட்ட ஓதல் என்பதை 1) நபி(சல்) அவர்களது அங்கீகாரிக்கப்பட்ட வெகுஜன ஓதல்முறையும், 2)அரபு இலக்கணமும் கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் 7 முத்தவாதீரான கிராத்களை மட்டுமே இன்று காண முடிகிறது.5. மேற்குறிபிட்ட புரிதலின் அடிப்படையில் குர்ஆனை எழுத்து வடிவில் கொண்டுவரும் போது எண்ணிலடங்கா கிராத்தில் கொண்டு வர இயலாது. ஏதேனும் ஒரு ஓதலில்தான் தொகுக்க இயலும். அதனால்தான் ஏழு மாறுபட்ட முறைகளிலும் குர்ஆனை எழுத யாரிடமும் நபி(சல்) அவர்கள் கட்டளையிட்ட ஆதாரத்தை காண முடியவில்லை. அதனால்தான் உஸ்மான்(ரலி) அவர்களின் முஸ்ஹஃப் நபி(சல்) அவர்களது இறுதி ஓதலில் - அர்தா அல் ஆகிராவில் என்ற கிராத் அல் ஆம்மா- பெரும்பான்மை ஓதல் என்னும் ஓரே கிராத்தில் தொடுக்கப்பட்டது. ஓதல் என்பதை மேற்குறிபிட்ட இரண்டு அலகுகள் கட்டுப்படுத்தும் போது மக்களே தாங்கள் கற்றவாறு ஓதிக்கொள்வார்கள். எழுத்து வடிவிலான மஸாஹிஃப் எந்த தாக்கத்தையும் ஓதலில் ஏற்படுத்தாது. அதனால்தான் ஒவ்வொரு முஸ்ஹஃபுடன் கிராத் அல் ஆம்மாவை ஓதும் காரிகளையும் அனுப்பிவைத்தார்கள். மக்கள் அதை புரிந்து கொண்டதால்தான் சட்டத்தை கிராத் அல் ஆம்மாவில் இருந்து எடுத்துக்கொண்டார்கள், ஓதலில் இருக்கும் சலுகையை பயன்படுத்தி ஓதிக்கொண்டார்கள்.
மேற்குறிபிட்ட கருத்துக்களை புரிந்து கொண்டாலே போதும் கிறித்தவ மிசனரிகள் மற்றும் இஸ்லாமோஃபோபுகளின் மூன்று வாதங்களும் அதன் நோக்கமும் எவ்வளவு மூடத்தனமாது என்பதை விளங்க . அல்லாஹு அஃலம்….
No comments:
Post a Comment