- சமர்கண்ட் மூலபிரதிகள்- ஒரு பார்வை
- வரலாறு
- உஸ்மான்(ரலி) அவர்கள் உருவாக்கிய மூலபிரதியா
- உண்மை பிரதியின் இன்றைய நிலை
- ஓரியண்டலிஸ்ட் S. பிஸாரெவ் செய்த மோசடி
- செபூனின் என்ற அறிஞரின் அறிக்கையும் அதன் உறுதிப்பாடும்
- ஆன்சரிங் இஸ்லாம் வலைதளத்தின் கூச்சலும் நமது பதிலும்
- அறிஞர் ஹைதம் சித்கியின் ஆய்வு
- கிறித்தவ மிஸனரிகள் வெளிபடுத்தியுள்ள அறியாமையை
- ஆய்வு தரும் முடிவுகள்
சமர்கண்ட் எழுத்துப்பிரதி- ஒரு பார்வை
Ø
வரலாறு
- உள்ளூர் வாசிகளின் கதையின் படி இது உஸ்மான்ரலி) அவர்களது சொந்த குர்ஆன் பிரதி. அவர் அதை ஓதிகொண்டிருக்கும் நிலையிலேயே கொல்லப்பட்டார். அதில் அவரது இரத்தம் படிந்துள்ளது என்று கூறப்படுகிறது.
- இந்த கையெழுத்து பிரதி, உஸ்மானிய சுல்தான் பாயஸீத்-I அவர்களால் கோட்ஜா உபைதுல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று அந்த பள்ளிவாசலின் இஸ்லாமிய அறிஞர்களால் கூறப்படுகிறது.
- இந்த கையெழுத்து பிரதி தைமூரினால் சமர்கண்டிற்கு கொண்டுவரப்பட்டது என்று புகாராவின் அமீரால் உறுதிப்பட ரஷ்யர்களிடம் கூறப்படவே, ரஷ்ய ஜெனரல் அலெக்சாண்டர் கே. அப்ரமோவ் அந்த கையெழுத்து பிரதியை கைபற்றிக்கொண்டார்.
Ø
உஸ்மான்(ரலி) அவர்கள் உருவாக்கிய மூலபிரதியா?????
Ø
ஓரியண்டலிஸ்ட் S. பிஸாரெவ் செய்த மோசடி
From other documents we learn that the publication, one copy of which was valued at 500 rubles, was undertaken by "an assistant clerk of the Board of the People's Teachers' Pension Fund, who does not have a rank", "the head of the Museum of the Archaeological Institute" Vasily Uspensky and "St. Petersburg Merchant Semyon Pisarev". (Semyon Pisarev, contrary to some unknown opinion, was not an Arabist. The merchant of the second guild sold fabrics in his own shop on Staro-Nevsky Prospekt and at the same time took part in publishing activities under the auspices of the Archaeological Institute.)(3)
These stylistic discrepancies between the dispersed leaves and Pisarev’s facsimile raise the possibility of an improvement during the writing process, as well as questions about the reliability of the facsimile. The degree to which the reinking of the leaves – which is not discernible in the facsimile – and the warping of the parchment may have affected the letters and causing fluctuations in the interlinear spacing. These questions can be answered only by physically inspecting the manuscript in Tashkent.( Elleonore Cellard,The Samarkhand Quran P.No.7)
வெளிய பரவி இருக்கும் பிரதியின் பகுதிக்கும், பிஸாரெவின் பிரதிக்கும் இடையிலான இந்த ஸ்டைலிஸ்டிக் முரண்பாடுகள், எழுதும் போது ஏற்பட்ட மாற்றங்களுக்கான சாத்தியத்தையும், பிஸாரெவின் பிரதியின் உண்மை தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. எந்த அளவிற்கு இந்த பிரதி மறு மையிடப்பட்டுள்ளது என்றால்,- (அது (பிஸாரெவின்) பிரதியில் புலனாக வில்லை) பிரதிகளை மடிப்பதே அதிலுள்ள எழுத்துக்களை பாதித்து, இரண்டு வரிகளுக்கான இடைவெளியில் கூட மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேள்விகளுக்கான விடையை நிஜ மூலப்பிரதியை தாஸ்கண்டில் நேரிடையாக ஆய்வு செய்தே அறிய முடியும்.( Elleonore Cellard,The Samarkhand Quran P.No.7)
Another Russian orientalist S. Pissareff, went over the illegible parts in the original copy with ink trying to make it more legible before the facsimile edition was made in 1905 However, numerous unintentional mistakes were made in this attempt."( Al Mushaf al Sharif Attributed to Ali b. Abi Talib P.No.83 by Tayyar Altikulac)
மற்றொரு ரஷ்ய ஓரியண்டலிஸ்ட் எஸ்.பிஸாரெவ், 1905ல் பிரதிகளை உருவாக்கும் முன்னர், நிஜ மூலபிரதியில் உள்ள தெரியாத பகுதியை, மையை கொண்டு தெரியும் படி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும், இந்த முயற்சியில் எண்ணற்ற பிழைகள் ஏற்பட்டுள்ளன." ( Al Mushaf al Sharif Attributed to Ali b. Abi Talib P.No.83 by Tayyar Altikulac)
இதே
குற்றச்சாட்டை அன்றைய இஸ்லாமிய அறிஞர்களும் கூறியதாக ஆர்தர் ஜேஃப்ரீயும் குறிப்பிடுகிறார்.(THE
ORTHOGRAPHY OF THE SAMARQAND CODEX by A. JEFFERY and I. MENDELSOHN P.No.3).
Ø செபூனின் என்ற அறிஞரின் அறிக்கை
Ø
ஆன்சரிங்க் இஸ்லாம் வலைதளத்தின் கூச்சலும் நமது பதிலும்
1. கிறித்தவ மிசனரிகள் இந்த ஆய்வில் தவற விட்ட முதல் விஷயம் குர்ஆன் என்பது எழுத்து வடிவம் பெற்று அந்த பிரதிகள் பரவலாக்கப்படுவதற்கு முன்பே ஓசை வடிவில் பெரும் பகுதி முஸ்லிம்களால் மனனமிடப்பட்டிருந்தது என்பதைத்தான். எழுத்துப்பிரதிகள் என்றும் குர்ஆனின் மூல ஆதாரமாக இருந்ததில்லை. அது ஒரு துணைச்சாதனமே. உஸ்மான்(ரலி) அவர்களால் எழுத்துவடிவில் கொடுக்கப்பட்ட குர்ஆன் பெரும்பான்மை மக்களின் ஓதல் வடிவத்துடன் ஓத்திருந்ததாலேயே அது இன்றுவரை பெரும்பான்மை மக்களின் முத்தவாத்திரான கிராத் ஆக நிலை பெற்றுவிட்டது என்ற அடிப்படை விஷயத்தை மறந்துவிட்டனர். மேலும் இது குறித்த ஆய்வை முன்பே நாம் வழங்கியுள்ளோம்.2. மொழியியல், எழுத்து வடிவங்கள் மற்றும் ஓசை மாற்றங்கள் குறித்த அடிப்படை அறிவே சமர்கண்ட் பிரதி குறித்த விமர்சனத்தை முன்வைத்தவரிடம் இல்லை என்பதை நிறுவியுள்ளனர். 3:147, 6:11, 6:39, 6:54, 6:68, 7:3, 7:9, 7:38, 7:40, 7:51, 7:58, 18:57, 20:42, 20:76, 27:5, 42:21, 42:25, 37:106, 41:31 ஆகிய 19 ஆயத்துக்களில் இவர்களின் குறிப்புக்களில், இவர்களின் எழுத்து வடிவ மாற்றம் மற்றும் ஒலிக்குறியீடு குறித்த அறியாமை பல்லிளிக்கிறது. நாம் அரபு எழுத்து மற்றும் ஓசை மாற்றம் குறித்த வரலாற்று தகவல்களை கிபி 10ம் நூற்றாண்டை சார்ந்த அபூ அம்ரு அல் தானீ அவர்களது அல் முக்னீ ஃபீ ரஸ்ம் மஸாஹிஃப் அல் அம்ஸார் என்ற நூலை கொண்டு நிறுவியுள்ளோம்.3. சாதரணமாக எழுத்துப்பிரதிகள் காலத்தால் பாதிப்படைந்து சிதைவடையும் என்ற அடிப்படை அறிவு இல்லை. 2:170, 37:103-105, 27:3-4, 36:18 ஆகிய இடங்களில் இந்த அறியாமை பல்லிளிக்கிறது4. எழுத்தர் பிழைகளா? அல்லது மாறுபடுகளா(Variants)? என்பதை ஏனைய சமகால பிரதிகளை ஒப்பிட்டு அறியும் அறிவு அறவே இல்லை. எனவே தான் தனித்தனி எழுத்துப்பிரதிகளை எடுத்துகொண்டு அவை மாறுபட்ட குர்ஆன் என்று மக்களை நம்பவைக்க பெரும் முயற்சி எடுப்பது பல்லிளிக்கிறது.
Ø மேற்குறிப்பிட்ட ஆய்வின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளை நாம் அடைகிறோம்
1. சமர்கணட் மூல பிரதி என்பது உஸ்மான்(ரலி) அவர்களால் எழுதப்பட்டது அல்ல. மாறாக அந்த பிரதியில் இருந்து பிரதி எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்பதை மாரிஜின் வான் பூட்டன் அவர்களது முடிவின் மூலம் விளக்கியுள்ளோம்.2. சமர்கண்ட் பிரதி எஸ்.பிஸாரெவ் என்ற அட்ரஸில்லாத ஓரியண்டலிஸ்டினால் மறு மையிடப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது என்பதை செபூனின், எலியோனூர் செல்லார்ட், தய்யார் ஆல்டிகுலாக் போன்ற ஆய்வாளர்களின் கூற்றை கொண்டு நிருவியுள்ளோம்.3. மாற்றம் செய்த பிறகு எடுக்கப்பட்ட பிரதிகளின் அடிப்படையிலேயே இன்றைய கிறித்தவ மிசனரிகள் தங்களது உளறலை முன்வைத்துள்ளனர். ஏனைய சமகால/அதற்கு முந்தைய பிரதிகளை ஒப்பிட்டு அதனை நிறுவியுள்ளோம்.4. எழுத்துப்பிழைகள், மாறுபாடுகள் என்று எந்த கையாடல் செய்தாலும், எது சரியான பிரதி என்பதை இன்றிருக்கும் ஓதல் முறைகளை கொண்டு பிரித்து அறியக்கூடிய வகையில் இருப்பதை இந்த ஆய்வு உறுதிபடுத்துகிறது.5. “Literary Critcism” என்று என்ன முயன்றாலும், உண்மை குர்ஆனின் ஓதல் இன்றும் பாதுக்கப்பட்டுதான் இருக்கிறது என்பதனை இன்றிருக்கும் குர்ஆனின் எழுத்து வடிவங்களை, பண்டைய எழுத்துப்பிரதிகளுடன் ஒப்பிட்டு அறிய முடிகிறது. Keith E.Small போன்ற ஓரியண்டலிஸ்ட்களே இந்த விஷயத்தில் பண்டைய எழுத்துபிரதிகளின் சூராக்களில் இருப்பவையே இன்றிருக்கும் குர்ஆனின் சூராக்களில் இருப்பதாக ஒத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.Also, while there may have been a longer period of flexibility of the order of surahs in collected Qur’āns, it appears that the basic content of the surahs that are represented in early manuscripts is the same as what is observed today. (Textual Criticism and Quran Manuscripts by Keith Small P.No.174)எழுத்துபிரதிகள் பரவலாவதற்கு முன்பு குர்ஆன் வேறுபட்டிருந்தது என்று ஓரியண்டலிஸ்ட்கள் முன்வைக்கும் ஹதீஸ்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை, முன்சென்ற தொடர்களில் அந்த ஹதீஸ்கள் மற்றும் அந்த செய்திகளின் நிலையையும் விளக்கிவிட்டோம்.
மேற்குறிபிட்ட ஆய்வின் மூலம் “நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.” என்ற அல்லாஹ்வின் வாக்கு உறுதியாகியுள்ளது. அல்லாஹூ அஃலம்
Reference:
1. On the Dating of an “Uthmanic Quran” from St.Petersburg bt E.A.Rezvan2. Van Putten “ ‘The Grace of God’ as Evidence for a Written’Uthmanic Archetype: The Importance of Shared Orthographic Idiosncrasies” P.No.286
No comments:
Post a Comment