பக்கங்கள் செல்ல

Monday, January 15, 2024

இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்

  بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

       குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபியாவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிறித்தவ மிசனரிகளால் எழுப்பப்பட்ட பல விமர்சனங்களையும் அதன் விளக்கங்களையும் தொடராக கண்டுவந்தோம். அவர்களால் எழுப்பப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் விடைகாணும் போது, அல் குர்ஆன் இன்றுவரை பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பதை, அதன் பாதுகாப்பு மற்றும் வரலாறு குறித்தும் இஸ்லாமிய ஆவணங்கள் தெளிவான சான்றுகளையும், வழிமுறைகளையும் கொண்டுள்ளது என்பதை நம்மால் தீர்க்கமாக அறிந்து கொள்ளவும் முடிந்தது. மாஷா அல்லாஹ். நாம் இன் ஷா அல்லாஹ் இனி வரும் தொடர்களில் கிறித்தவர்களின் மத நூலான புதிய ஏற்பாடு குறித்தும் அதன் நிலை குறித்தும் வரலாற்று தரவுகளின் அடிப்படையில், கையெழுத்துப்பிரதிகளின் அடிப்படையில் காணவுள்ளோம்.

        பொதுவாக இஸ்லாமியர்கள் ஆகிய நாம் புதிய ஏற்பாடு குறித்து ஆவணங்கள் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைக்கும் போது மிஸனரிகள் முன்வைக்கும் மிக பிரதானமான எதிர் விமர்சனம் “உங்கள் குர்ஆனே இன்ஜீலிற்கு சான்று பகர்ந்திருக்கும் போது அதனை நீங்கள் மறுக்கிறீர்கள்” என்பதுதான். எனவே இந்த தொடரில் நாம் இஸ்லாமிய ஆவணங்கள், மற்றும் வரலாற்று ஆவணங்கள் கூறும் இன்ஜீல் குறித்து காண இருக்கிறோம்.


    குர்ஆன் கூறும் இன்ஜீல் என்ற சொல்லானது ܐܘܢܓܠܝܘܢ – அவங்கலியூன் என்ற அரமேய சொல்லில் இருந்து பிறந்த சொல். இது குறித்து இப்னு மன்ஸூர் லீசான் அல் அரப் (11/648)-ல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
ﺇﻧﺠﻴﻞ، ﻭﻫﻮ اﺳﻢ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ اﻟﻤﻨﺰﻝ ﻋﻠﻰ ﻋﻴﺴﻰ، ﻋﻠﻴﻪ اﻟﺴﻼﻡ، ﻭﻫﻮ اﺳﻢ ﻋﺒﺮاﻧﻲ ﺃﻭ ﺳﺮﻳﺎﻧﻲ،
    இன்ஜீல் ஈஸா(அலை) அவர்களுக்கு இறங்கிய அல்லாஹ்வின் வேதத்தின் . பெயராகும். அது ஹீப்ரு அல்லது அரமேய பெயராகும்.
சுவிசேஷம் அல்லது நற்செய்தி (Gospel) என்பது அதன் பொருள். அல் குர்ஆனில் இந்த சொல்லானது 12 இடங்களில் இடம்பெறுகிறது. 


        கிறித்தவ மிசனரிகள் இன்ஜீல் என்பது பைபிளின் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள்தான் என பல வருடங்களாக பொய்யுரைத்து வருகின்றனர். ஆனால் வரலாற்றில் எத்தனை நற்செய்தி நூல்கள் (இன்ஜீல்) இருந்தன என்று தேடினோம் என்றால் புதிய ஏற்பாட்டில் இருக்கும் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூற்கள் அல்லாமல் இன்னும் பல நற்செய்தி நூல்கள் நபி(ஸல்) அவர்களது காலத்திற்கு முன்பே இருந்துள்ளதாக பல வரலாற்று தரவுகள் உள்ளன. அந்த நூல்களை கிறித்தவ உலகம் பேதக்காரர்களின் ஏடுகள் என்று முத்திரை குத்தி ஓதுக்கித்தள்ளிவிட்டனர் அல்லது அழித்தொழித்துவிட்டனர். அந்த நூல்களில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறோம்.

மறுக்கப்படும் சுவிஷேசம் 
 
குறிப்புரைகிடைக்கப்பட்ட    
பிரதி

தோமாவின் சுவிசேஷம்


ஹிபோபோலிடஸ் (கி.பி.170–236) The Refutation of all Heresies, Book V, Chapter II, P.No.131

1)Oxyrhynchus Papyrus (3rd Century AD) -  P.Oxy. 654,P.Oxy. 655,P.Oxy. 01.
2)Nag Hammadi Codex II(4th /5th century AD)- Tractate 2 (NHC II, 2)
மார்சியோன் சுவிசேஷம்
ஓரிகனின் (கி.பி.185- 254), Commentary on the Gospel of John., Book V, Chapter IV, P.No.649

Oxyrhyncus Papyrus 69
(3rd Century AD)-           P.Oxy. 2383
பாஸிலிடியஸின் சுவிசேஷம்
ஓரிகனின் (கி.பி.185- 254), Homilies on Luke , Homily 1, P.No.6
காணவில்லை
ஐரேனியஸின் (கி.பி.130- 202), Against Heresies, Book III, Ch.XI, P.No. 1091
Nag Hammadi Codex (4th /5th century AD)-
1)Codex I, Tractate 3 (NHC I, 3),
2)Codex XII, Tractate 2 (NHC XII, 2),
மரியாளின் சுவிசேஷம் --
1) Berlin Codex, 5th Century AD
2) Oxyrhynchus Papyrus 3525, 3rd Century AD
3) Rylands Papyrus 463, 3rd Century AD
யூதாசின் சுவிசேஷம்
ஐரேனியஸின் (கி.பி.130- 202), Against Heresies,
Book I, Ch.XXXI, P.No. 935

Codex Tchacos, 3rd Century AD

ஹிபோபோலிடஸ் (கி.பி.170–236) The Refutation of All Heresies, Book V, Ch II, P.No.129

காணவில்லை
பேதுருவின் சுவிசேஷம்
ஓரிகனின் (கி.பி.185- 254), Commentary on the Gospel of Matthew, Book X, Ch 17, The Brethren of Jesus. P.No.810

1)The Akhmim Fragment(6th Century AD)-   P.Cair. 10759
2) Oxyrhynchus Papyrus(2nd /3rd Century AD)- P.Oxy. 2949
3)Oxyrhynchus Papyrus (2nd Century AD)- (P.Oxy. 4009)
இரகசிய மாற்கு சுவிசேஷம்அலெக்ஸான்டிரியா வின் கிளமணட் இன் (கி.பி. 150 – 215), Mar Saba Letter Morton Smith’s,  Clement of Alexandria and a Secret Gospel of Mark
செரின்தஸின் சுவிசேஷம்ஸலாமிஸின் எபிஃபேனியஸின் (கி.பி 310 - 403) Panarion, Against Ebionites, P.No.133காணவில்லை

பர்த்தலோமியுவின்
சுவிசேஷம்

ஜெரோமின் (கி.பி.342 –420), Commentary on Matthews, Preface. காணவில்லை
லூசியஸின் சுவிசேஷம்
போப் கெலசியஸ் I-
(கி.பி. 492 –496), Decretum Gelasianum, Ch V,
காணவில்லை
பிலிஃப்பின் சுவிசேஷம்--Nag Hammadi Codex (4th /5th century) CodexII, Tractate 3 (NHC II, 3)
ஓரிகனின் (கி.பி.185- 254), Homilies on Luke , Homily 1, P.No.6Harvard Syriac 93 (8th Century)
பரிபூரணத்தின் சுவிசேஷம்ஸலாமிஸின் எபிஃபேனியஸின் (கி.பி 310 - 403) Panarion, Against Gnostics, P.No.92) காணவில்லை
ஓரிகனின் (கி.பி.185- 254), Homilies on Luke , Homily 1, P.No.6 Nag Hammadi Codex (4th /5th century) Codex III, Codex IV
எபிரேயர்களின் சுவிசேஷம் ஜெரோமின் (கி.பி.342 –420), Commentary on Ezekiel 6காணவில்லை
எபியோனைட்களின் சுவிசேஷம்ஸலாமிஸின் எபிஃபேனியஸின் (கி.பி 310 - 403) Panarion, Against Ebionites, P.No.133 காணவில்லை
மத்தியாஸின் சுவிசேஷம்ஓரிகனின் (கி.பி.185- 254), Homilies on Luke , Homily 1, P.No.6 காணவில்லை
அப்பெலஸின் சுவிசேஷம்ஜெரோமின் (கி.பி.342 –420), Commentary on Matthews, Preface. காணவில்லை
பார்னபாவின் சுவிசேஷம்
போப் கெலசியஸ் I-
(கி.பி. 492 –496), Decretum Gelasianum, Ch V,
காணவில்லை

        மேலே நாம் காட்டியுள்ள நற்செய்தி நூல்கள் (இன்ஜீல்) அல்லாத இன்னும் பல இன்ஜீல்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் அதற்கு முன்பும், பின்பும் புலக்கத்தில் இருந்துள்ளதை சர்ச் வரலாறு பதிவு செய்துள்ளது. நாம் இத்தனை இன்ஜீல் இருந்ததற்கான ஆவண வரலாற்றை அவர்களது சர்ச் பிதாக்களின் குறிப்புக்களில் இருந்தே கொடுத்துள்ளோம். அவற்றுள் பல நற்செய்தி நூல்கள் காணாமல் போயுள்ளன. அதன் எழுத்துப்பிரதிகள் எதுவும் கிடைக்கவில்லை. இவ்வாறு காணாமல் போன நற்செய்தி நூல்களின் கையெழுத்து பிரதிகள் எதையும் நாம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அந்த சர்ச் பிதாக்களின் குறிப்புகளில் இருந்து அந்த நூல்களின் உள்ளடக்கம் என்ன என்பதை அறியமுடியும்.

கிறித்தவத்தின் அடங்காத நூல் அழிப்பு வெறியும் அழிக்கப்பட்ட இன்ஜீல்களும்

        இஸ்லாம் கூறும் இன்ஜீலும், பைபிளின் நற்செய்தி நூலும் வேறுபட்டவை என்று கூறியதும், மிஸனரிகள் முன்வைக்கும் மிக முக்கிய கேள்வி அதனை காட்டச்சொல்வதே. எழுத்துப்பிரதியாக இருப்பதே, அது வேத நூலுக்கு ஆதாரம் என்றால் நாம் முன்னர் காட்டிய அட்டவனையில் பல நற்செய்தி நூல்கள் நமக்கு எழுத்துப்பிரதியாக கிடைத்துள்ளது அதனை வேதம் என்று ஏற்பார்களா???. மேலும் இந்த கேள்வியை கேட்கும் எந்த கிறித்தவரும் தனது வரலாற்றையும் உலக வரலாற்றையும் சிறிதும் அறியாத மூடராகத்தான் இருப்பார்கள். இவர்களது வரலாற்றை நாம் ஆய்வு செய்தோம் என்றால் கி.பி 4ம் நூற்றாண்டிற்கு பிறகு இவர்களது கத்தோலிக்க சர்ச் பாதிரிகள் தொடர்ந்து பிறப்பித்த ஒரே உத்தரவு அவர்களது கொள்கைக்கு மாற்றமான நூல்களை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்பதே. கிட்டத்தட்ட சென்ற நூற்றாண்டு வரை இந்த வேலையை கணக்கட்சிதமாக முடித்த ஒரு கூட்டம் இவர்களது கொள்கையில் இருந்து மாறுப்பட்ட செய்திகள் கொண்ட அல்லாஹ் இறக்கிய அந்த இன்ஜீலை கொண்டு வந்து காட்டுங்கள் என்பது ஆக அயோக்கியத்தனம் அல்லவா???? கி.பி 4ம் நூற்றாண்டில் இவர்களுக்கு அதிகாரம் கிடைக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு நூற்றாண்டிலும் அவரகளது கொள்கையில் இருந்து மாறுபட்ட நூல்களை குறி வைத்து கொளுத்தி இருக்கிறார்கள் என்பது வரலாற்று பக்கங்கள் கூறும் சாட்சி அதில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறோம்.

காலம் அழிக்கப்பட்ட நூல்கள்/நூலகங்கள்
கி.பி. 325     கிறித்தவத்தை ஏற்ற கான்ஸ்டண்டைனின் உத்தரவின் பேரில் ஏரியஸின் “தாலியா” என்ற நூலிற்கும், கிறித்தவ பிஷப்புகள் மாறி மாறி ஏசிக்கொண்ட தொகுப்பினை கொண்ட “லைபெல்லி” என்ற குறிப்பேட்டிற்கும், இன்னும் பல பேதக்காரர்களுக்கும் தடையாணை பிறக்கப்பட்டு, எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.(1)
கி.பி. 386    தியோடோஸியஸ்-I கத்தோலிக்க கிறித்தவத்தை அரச மதமாக அறிவித்தார். இதற்கு மாற்றமான கொள்கைகள், மதங்கள் அனைத்திற்கும் தடை பிறபிக்கப்பட்டது. கத்தோலிக்கத்திற்கு மாற்றமான ஏடுகளை யாரெனும் வைத்திருந்தால் அதனை அழித்து விட வேண்டும், அல்லது அதன் எழுத்தர் யார் என்பதை காட்டிக்கொடுக்க வேண்டும் அல்லது அதனை வைத்திருப்பவர் கொல்லப்படுவார்.(2)
கி.பி. 398     ஆர்கேடியஸின் உத்தரவின் பேரில் ஏரியஸின் பேதத்தில் இருந்து உருவான யூனோமியர்கள் எனும் கிறித்தவ பிரிவின் நூல்கள் தடையாணை பிறக்கப்பட்டு, எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.(3)
கி.பி. 407     ஹொனோரியஸ் மற்றும், தியோடோஸியஸ்-II ஆகிய இருவரும், “பலதெய்வ வழிபாட்டாளர்கள், பேதக்காரகள், மானியர்கள் ஆகியோர்கள் மற்றும் அவர்களது நூல்கள் மீது முன்பு விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் நடைமுறையில் இருக்கிறது என்று அறிவித்தார்கள். அவர்களை நாடு கடத்துவதும், அவர்களது நூல்களை எறிப்பதும் தொடரும் என்று அறிவித்தார்கள்.(4)
கி.பி. 431      தியோடோஸியஸ்-II இன் உத்தரவின் பேரில் நெஸ்டோரிய கிறித்தவ பிரிவினரின் நூல்கள் அழிக்கப்பட்டன.(5)
கி.பி. 435     தியோடோஸியஸ்-II இன் உத்தரவின் பேரில் கிறித்தவதத்திற்கு எதிராக களமாடிய போர்பைரி என்ற தத்துவவியலாளரின் நூல்கள் அனைத்தும் கிறித்தவத்திற்கு ஆபத்தானது என்று கூறி எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது. இத்துடன் கிறித்தவத்திற்கு எதிரான அனைத்து நூல்களும் அழிக்கப்பட்டது.(6)
கி.பி. 455     தியோடோஸியஸ்-II இன் உத்தரவை, மார்சியோன் மேலும் விரிவுபடுத்தி, புத்தக அழிப்பில் அப்போலிநேரியஸ் மற்றும் யூடிகீஸ் ஆகியோரின் புத்தகங்களும் சேர்த்து கொள்ளப்பட்டது.(7)
கி.பி. 5ம் நூற்றாண்டின் பிற்பகுதி     மானியின் புத்தகங்களை அழிக்க ரோமின் பிஷப்கள் உத்தரவிட்டனர். மானியர்களின் புத்தகங்கள் அனைத்தும் ரோமின் புனித மரியா பேராலயம் முன்பு தீயிட்டு கொளுத்தப்பட்டது. சிமாக்கஸ் மானியர்களை நாடு கடத்தி அவர்களது எஞ்சிய நூல்கள் அனைத்தும் கான்ஸ்டண்டைன் பேராலயம் முன்பாக தீயிலிடப்பட்டது.(8)
கி.பி 514 - 523     போப் ஹொர்மிஸ்டஸ் ஆணைப்படி முன்பு தடைசெய்யப்பட்ட கொள்கையில் உடையோரின் நூல்கள் கண்டறியப்படவே, அவர்களை நாடு கடத்தி, அவர்களது நூல்கள் அனைத்தும் தீயிலிடப்பட்டது. நகரத்தின் மத்தில்யில் வைத்து பேதக்காரர்களின் நூல்களை தீயிலிடுவது மத்திய காலம்வரை தொடர்ந்தது.(9)
கி.பி  589     ஸ்பெயினின் விசிகோதிக் சர்ச்களுக்கு முடிவுரை எழுதப்பட்டது. அவர்களது நூல்களும், ஏரியனின் பைபிள்களும் அழிக்கப்பட்டன.(10)
கி.பி. 649    லேட்டரன் கவுன்சில், கிறித்தவ பிரிவான மோனோதெலைட்களின் புத்தகங்கள் தீயிலிட ஆணைபிறப்பித்தது. கிபி 649 லேட்டரன் கவுன்சிலின் ஆணையை கிறிஸ்தவப் பொதுச்சங்கம், கான்ஸ்டண்டினோபிளிலில் வழிமொழிந்தது.(11) 
கி.பி. 692     ட்ருல்லன் கவுன்சில் கிறித்தவ தியாகிகளை கொச்சைப்படுத்தும் நூல்களை பொதுவில் வாசிக்க தடை விதித்தது. மேலும் அந்த நூல்களை கொளுத்த ஆணையிட்டது.(12)
கி.பி. 866     முஸ்லீம்களிடம்(சராசன்ஸ்) இருந்து கைபற்றிய நூல்களை தீயிட்டு கொளுத்த போப் நிக்கோலஸ்-I உத்தரவிடுதல்.(13)
கி.பி. 1099         சிலுவை வீரர்கள் ஜெருசலேமில் இருந்த இஸ்லாமிய, யூத மற்றும் கிறித்தவ பேதக்காரர்களின் கல்வி நிலையங்களும், ஆலயங்களும் தீக்கிரையாக்கப்பட்டது(14).
சிரியாக் கிறித்தவர்களும் குறிவைத்து தாக்கப்பட்டார்கள்.(15)
கி.பி. 1109     திரிப்போலியின் நூலகம் சிலுவை வீரர்களால் அழிக்கப்பட்டது. ஓஸாமா இப்னு முன்கீஸ் என்ற கவிஞரின் கவிதை தொகுப்பு- கிட்டதட்ட 4000 நூல்கள், ஏக்கர் கோட்டைக்கு திருடி செல்லப்பட்டது.(16)
கி.பி. 1204     கான்ஸ்டண்டினோபிளின் அரச நூல்கம் சிலுவை வீரர்களால் சூறையாடப்பட்டது. அந்த நூல்கத்தில், பலங்கால எழுத்துப்பிரதிகள் பல அழிக்கப்பட்டது. இந்த சூறையாடலில் கிறித்தவ அரசர்களின் கல்லறைகளுக்கும் அடக்கம். இந்த நூல்கத்தில் பல பணடைய கிரேக்க நூல்களை பிரதியாக்கி பாதுகாக்க கான்ஸ்டன்டைன்-II என்பது குறிப்பிடத்தக்கது.(17)
கி.பி. 1208     கதார் எனும் கிறித்தவ பிரிவினரை இன சுத்திகரிப்பு செய்ய போப் இன்னொசண்ட்-III அழைப்பு விடுத்தார்.14ம் நூற்றாண்டிற்குள் அவர்களும் அவர்களது நூல்களும் முழுமையாக அழித்தொழிக்கப்பட்டது.(18)(19)

        இன்னும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே எலைன் பேகல்ஸ் போன்ற சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தை இங்கு பதிவிட்டாள் அதுவே இந்த கிறித்தவ கூட்டத்தின் அவர்களுக்கு ஒவ்வாத கோட்பட்டினை கூறும் புத்தங்கங்களின் மேல் இருக்கும் வன்மம் என்னவென்று புலப்படும்.
    This campaign against heresy involved an involuntary admission of its persuasive power; yet the bishops prevailed. By the time of the Emperor Constantine's conversion, when Christianity became an officially approved religion in the fourth century, Christian bishops, previously victimized by the police, now commanded them. Possession of books denounced as heretical was made a criminal offense. Copies of such books were burned and destroyed. But in Upper Egypt, someone, possibly a monk from a nearby monastery of St. Pachomius,19 took the banned books and hid them from destruction—in the jar where they remained buried for almost 1,600 years. (Elaine Pagels, the Gnostic gospels, Introduction, P.No. XVIII- XiX)
    பேதங்களுக்கு எதிரான இந்த பிரச்சாரம் அதன் வற்புறுத்தும் ஆற்றல் அனிச்சையாக உட்படுத்தப்பட்டது; மேலும் ஆயர்கள் வெற்றி பெற்றனர். பேரரசர் கான்ஸ்டன்டைன் மதம் மாறிய நேரத்தில், நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மதமாக மாறியது, முன்பு காவலர்களால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆயர்கள் இப்போது அவர்களுக்கு கட்டளையிட்டனர். கண்டிக்கப்பட்ட பேத புத்தகங்களை வைத்திருப்பது கிரிமினல் குற்றமாக ஆக்கப்பட்டது. அத்தகைய புத்தகங்களின் பிரதிகள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. ஆனால் மேல் எகிப்தில், யாரோ ஒருவர், ஒருவேளை அருகிலுள்ள புனித பச்சோமியஸ் மடத்தைச் சேர்ந்த ஒரு துறவி, 19 தடை செய்யப்பட்ட புத்தகங்களை எடுத்து அழிவிலிருந்து மறைத்து வைத்தார் - கிட்டத்தட்ட 1,600 ஆண்டுகளாக அவை ஜாடியில் புதைந்துகிடந்தன.(Elaine Pagels, the Gnostic gospels, Introduction, P.No. XVIII- XiX)
    Access to the texts (Nag Hammadi Library) was deliberately suppressed not only in ancient times but, for very different reasons, in the more than thirty years since the discovery.( Elaine Pagels, the Gnostic gospels, Introduction, P.No. XXIV)
    அந்த நூல்களை அணுகுவது (நாக் ஹம்மாடி லைப்ரரி) பண்டைய காலத்தில் மட்டுமல்ல, கண்டுபிடிக்கப்பட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வேறுபட்ட காரணங்களுக்காக வேண்டுமென்றே நசுக்கப்பட்டது .( Elaine Pagels, the Gnostic gospels, Introduction, P.No. XXIV)

    Up until our time, this movement was known almost solely by the battle that the Fathers of the Church, who regarded it as a Christian heresy, waged against it. Numeruus refutations of this heresy had survived, while the writings of the Gnostics themselves, hunted down and destroyed during the centuries, had almost all disappeared.(Simon Petrement , A Separate God, P.No.1)
     நம் காலம் வரை, இந்த இயக்கம் கிறிஸ்தவ மதங்களுக்கு எதிரான கொள்கையாகக் கருதப்பட்ட திருச்சபையின் பிதாக்கள் அதற்கு எதிராக நடத்திய போரின் மூலம் மட்டுமே அறியப்பட்டது., பல நூற்றாண்டுகளில் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்ட ஞானவாதிகளின் எழுத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்தும் மறைந்துவிட்ட நிலையில், இந்த பேதங்களுக்கு எதிரான மறுப்புகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. (Simon Petrement , A Separate God, P.No.1)

            மேலே இருக்கும் தொகுப்பை அய்வு செய்யும் யாரும் ஒவ்வொரு ரோம கத்தோலிக்க ஆயர்களும் தங்களது கொள்கைக்கு எதிரான நூற்களை அரச பயங்கரவாத துணை கொண்டு குறிவைத்து அழிப்பதையே பிழைப்பாக கொண்டிருந்தனர் என்பதை கூறிவிடுவார்கள். மேலும் ஒரு ஆயர் விட்டு சென்ற நூல் அழிப்புப்பணியை அடுத்தடுத்து வந்தவர்கள் தொடர்ச்சியாக, தடையில்லாமல் செய்துள்ளனர். சிலுவை யுத்தம் என்ற பெயரில் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், கிறித்தவ ஆட்சிக்கு உட்பட்ட, உடபடாத பகுதிகளிலும் படையெடுப்பு நிகழ்த்தியும், படுகொலைகளை அரேங்கேற்றியும் தங்களுக்கு எதிரான நூல்களையும், அறிங்ஞர்களையும் அழித்தொழித்துள்ளனர். இதன் மூலம் இவர்களது கொள்கைக்கு எதிரான நூல்களை இல்லாமல் அழித்துள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. இன்றைய கிறித்தவ மிஸனரிகளும், அவர்களது மூதாதைய கிறித்தவ வெறியர்களின் அடியொட்டி  அல்குர்ஆனை பொது இடங்களில் எரித்து தங்களது தீராத வெறியை தீர்த்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.. 

மேற்குறிபிட்ட விஷயங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக ரிச்சர்ட் ஓவெண்டென் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
        Many key works were, however, lost during the period we now call ‘Late Antiquity’ (the period from roughly the third to the eighth centuries), and we know this through the occasional ghostly traces of them in later books, or from chance finds of fragments of papyri, where previously unknown texts have been found by archaeological digs over the last 150 years. (Burning the Books, A History of the Deliberate Destruction of Knowledge by RICHARD OVENDEN P.No.39 )
    எவ்வாறாயினும், நாம் இப்போது 'லேட் ஆண்டிக்விட்டி' (தோராயமாக மூன்றாம் முதல் எட்டாம் நூற்றாண்டு வரையிலான காலம்) என்று அழைக்கும் காலகட்டத்தில் பல முக்கிய படைப்புகள் தொலைந்துவிட்டன, மேலும் இதைப் பிற்கால புத்தகங்களில் அவ்வப்போது நிழல் தடயங்கள் மூலமாகவோ அல்லது தற்செயலான பாப்பிரஸ் துண்டுகள் கண்டுபிடிப்புகளின் மூலமாகவோ அறிகிறோம். கடந்த 150 ஆண்டுகளில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மூலம் முன்னர் அறியப்படாத நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது(Burning the Books, A History of the Deliberate Destruction of Knowledge by RICHARD OVENDEN P.No.39 )
        இன்ஜீலை எடுத்து வாருங்கள் என்று கூறும் எந்த மிஸனரிக்கும் வரலாறு குறித்த அறிவு உப்புக்கும் இல்லை என்பதை ரிச்சர்ட் ஓவெண்டென் அவர்களது குறிப்பு தொழுரித்து காட்டுகிறது. இப்படி தங்களுக்கு எதிரான கொள்கை உடைய நூல்களை குறிவைத்து அழித்தொழித்த பெருமைக்குரிய கிறித்தவ வெறியர்கள், இஸ்லாம கூறும் இன்ஜீலை கொண்டுவந்து காட்டுங்கள் என்று கொக்கரிப்பது எவ்வளவு அயோக்கியத்தனம் என்பது இப்போது விளங்கியிருக்கும்.


     கிறித்தவ மிசனரிகள் தொடர்ச்சியாக தங்களுக்கு எதிரான நூல்களையும், நூலகங்களையும் அழித்தொழித்த போது, அல்லாஹ்வின் வேதமான இன்ஜீலின் சிலபகுதிகள் நம்மை வந்தடைந்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. சர்ச் பிதாக்களின் பேதக்கார நற்செய்தி நூல்களின் எதிர் உரைகளில் இருந்து எப்படி காணாமல் போன பேதக்கார நற்செய்தி நூல்களின் உள்ளடக்கம் என்ன என்பதை நம்மால் அறிய முடிகிறதோ, அதே அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இன்ஜீல் எது?, அது எத்தகைய நூல்? என்பதை இஸ்லாமிய அவணங்கள், மற்றும் வரலாற்று நூல்களில் இருந்து நம்மால் பெறமுடிகிறது. குறிப்பாக இவர்கள் நாடுகளை தாண்டி தங்களது கோறைப்பற்களை காட்டிய சிலுவை யுத்தத்திற்கு முன்பான அவணங்களில் காணப்படும்,  இன்ஜீல் என்று அறியப்பட்ட நூலின் சில பகுதிகளை இங்கு பதிவிட்டாலே இன்றிருக்கும் நற்செய்தி நூல்கள், குர்ஆனும் இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களும் கூறும் இன்ஜீல் அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ள போதுமானதாயிருக்கும். 

ஆதாரம் 1:
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (அல் குர்ஆன்  5:46) 

 ஆதாரம் 2:

இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் -ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான். (அல் குர்ஆன் 48:29)

 ஆதாரம் 3:

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.( அல் குர்ஆன் 42:13)

 ஆதாரம் 4:

(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல் குர்ஆன் 9:111)

 ஆதாரம் 5:

"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! (அல் குர்ஆன்  3:55)

 ஆதாரம் 6:

ﺃﺧﺒﺮﻧﺎ ﺟﺮﻳﺮ، ﻭﻋﻴﺴﻰ ﺑﻦ ﻳﻮﻧﺲ، ﻋﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﻦ ﺃﺑﻲ ﺧﺎﻟﺪ، ﻋﻦ اﻟﻌﻴﺰاﺭ ﺑﻦ ﺣﺮﻳﺚ، ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ، ﻗﺎﻟﺖ: ﻭاﻟﻠﻪ ﺇﻥ ﻣﺤﻤﺪا ﻟﻤﻜﺘﻮﺏ ﻓﻲ اﻝﺇﻧﺠﻴﻞ ﻟﻴﺲ ﺑﻔﻆ ﻭﻻ ﻏﻠﻴﻆ ﻭﻻ ﺳﺨﺎﺏ ﻓﻲ اﻷﺳﻮﺃﻕ ﻭﻻ ﻳﺠﺰﺉ ﺑﺎﻟﺴﻴﺌﺔ ﺳﻴﺌﺔ ﻭﻟﻜﻦ ﻳﻌﻔﻮ ﺃﻭ ﻳﻐﻔﺮ.
    ஆயிஷா(ரலி) கூறியதாவது, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக முஹம்மத் குறித்து இன்ஜீலில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. அவர் முரட்டு சுபாவம் உடையவராகவோ, அகம்பாவம் கொண்டவரகவோ, சந்தைகளில் சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார். அவர் தீமைக்கு பகரமாக தீங்கிழைப்பவராக இருக்கமாட்டார். மாறாக பொறுத்து கொள்பவராகவும், மன்னிக்கக்கூடியவராகவும் இருப்பார். (முஸ்னத் இஸ்ஹாக் இப்னு ரஹவைஹ் 1610)
ஆதாரம் 7:
ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻗﺎﻝ ﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻜﺮﻳﻢ، ﻗﺎﻝ: ﻧﺎ ﻧﺼﺮ ﺑﻦ ﻏﺎﺯﻳﺔ، ﻗﺎﻝ: ﻧﺎ اﺑﻦ ﻋﻴﺎﺵ، ﻋﻦ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪ اﻟﻘﻴﺴﻲ، ﻗﺎﻝ: ﻧﺎ ﺭﺟﻞ، ﻓﻲ ﻣﺠﻠﺲ ﻣﻜﺤﻮﻝ ﻗﺎﻝ: ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: ﻃﻮﺑﻰ ﻟﻠﻤﺘﺮاﺣﻤﻴﻦ، ﻓﻲ ﺃﻭﻟﺌﻚ اﻟﻤﺮﺣﻮﻣﻮﻥ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ، ﻃﻮﺑﻰ ﻟﻠﻤﺘﻮاﺿﻌﻴﻦ، ﻓﻲ ﺃﻭﻟﺌﻚ اﻟﻤﺮﻓﻮﻋﻮﻥ ﻟﻤﻨﺎﺑﺮ اﻟﻤﻠﻚ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ، ﻃﻮﺑﻰ ﻟﻠﻤﻄﻬﺮﺓ . "
யஜீத் இப்னு சயீத் அல் கைஸ் கூறியதாவது மக்ஹூலின் சபையில் இருந்த மனிதர் : "இஞ்சீலில் பின்வருமாறு எழுதப்பட்டள்ளது: கியாம நாளில் எழுப்பப்படுபவர்களில் கருணையாளர்கள் பாக்கியவான்கள். கியாம நாளில் அரசர்களில் அடக்கமுடையவர்கள் பாக்கியவான்கள். தூய்மையடைந்தவர்கள் பாக்கியவான்கள்" என்று கூறினார். (அல் ஜுஹ்த் லி அபூ தாவுத் 2)
ஆதாரம் 8:
ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺣﺎﺗﻢ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﻃﺮﻳﻒ، ﻋﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ، ﻋﻦ ﺛﻌﻠﺒﺔ ﺑﻦ ﻣﺴﻠﻢ، ﻋﻦ ﺃﺑﻲ ﻋﻤﺮاﻥ اﻷﻧﺼﺎﺭﻱ: ﻗﺎﻝ: ﻭﺳﻤﻌﺖ ﺑﻌﺾ ﻣﻦ ﻳﻘﺮﺃ اﻟﻜﺘﺐ: ﺇﻧﻪ ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: «ﺃﻓﻠﺢ اﻟﺬﻳﻦ ﻳﺼﻠﺤﻮﻥ ﺑﻴﻦ اﻟﻨﺎﺱ، ﺃﻭﻟﺌﻚ ﺧﺼﺎﺋﺺ اﻟﻠﻪ ﻣﻦ ﺧﻠﻘﻪ
அபீ இம்ரான் அல் அன்ஸாரி கூறியதாவது: சிலர் வேதங்களில் வாசிக்கிறதை கேட்டுள்ளேன். இது இஞ்சீலில் எழுத்தப்பட்டுள்ளது. மனிதர்களுக்கிடையே சமாதானம் செய்பவர்கள் வெற்றியாளர்கள். இது தன்னை படைத்த இறைவனின் பண்பாகும். (அல் ஜுஹுத் இப்னு அபீ ஹாத்திம் 6)

 ஆதாரம் 9:

ﺳﻤﻌﺖ ﺷﻌﻴﺐ ﺑﻦ ﻋﻠﻲ ﺑﻦ ﺷﻌﻴﺐ اﻟﻘﺎﺿﻲ، ﺑﻬﻤﺪاﻥ ﻳﻘﻮﻝ: ﺳﻤﻌﺖ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﻭﺱ اﻟﻤﻘﺮﺉ، ﻳﻘﻮﻝ: ﺛﻨﺎ ﺇﺑﺮاﻫﻴﻢ ﺑﻦ اﻟﺤﺴﻴﻦ، ﺛﻨﺎ ﻣﻬﺪﻱ ﺑﻦ ﺃﺑﻲ ﻣﻬﺪﻱ، ﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻤﻠﻚ اﻟﺬﻣﺎﺭﻱ، ﺛﻨﺎ ﺧﺎﻟﺪ ﺑﻦ ﻳﺰﻳﺪ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﻭﻫﺒﺎ، ﻳﻘﻮﻝ: §ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: اﻟﺮﺷﻮﺓ ﺗﻌﻤﻲ ﻋﻴﻨﻲ اﻟﺤﻜﻴﻢ، ﻓﻜﻴﻒ ﻣﺒﻠﻐﻬﺎ ﻣﻦ اﻟﺠﺎﻫﻞ؟
ஹாலித் இப்னு யஸீத் கூறியதாவது, " இஞ்சீலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: லஞ்சம் அறிவாளியின் கண்ணையும் குருடாக்கும், அறிவிலி எப்படி செலவு செய்வான்??(அதுபோல)." என்பதை நான் செவியுற்றுள்ளேன். (அல் ஃபவாயித் அபீ யஃலா அல் ஹலீலி 17)

 ஆதாரம் 10:

ﺣﺪﻳﺜﻪ ﺃﺧﺒﺮﻧﺎ ﺃﺑﻮ اﻟﻤﻈﻔﺮ ﺑﻦ اﻟﻘﺸﻴﺮﻱ ﺃﻧﺎ ﺃﺑﻮ ﻋﺜﻤﺎﻥ اﻟﺒﺤﻴﺮﻱ ﺃﻧﺎ ﻭاﻟﺪﻱ ﺃﺑﻮ ﻋﻤﺮﻭ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﺣﻤﺪ اﻟﺤﺎﻓﻆ اﻟﺒﺤﻴﺮﻱ ﺃﻧﺎ ﺃﺑﻮ اﻟﻘﺎﺳﻢ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺳﻌﻴﺪ اﻷﻧﺪﻟﺴﻲ ﻣﻦ ﻛﺘﺎﺑﻪ ﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ اﻟﻘﺎﺿﻲ ﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ اﻟﺤﺴﻦ ﺑﻦ ﻗﺘﻴﺒﺔ اﻟﻌﺴﻘﻼﻧﻲ ﻧﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ اﻟﻮﻟﻴﺪ ﺑﻦ ﺑﺮﺩ ﻧﺎ ﺿﻤﺮﺓ ﺑﻦ ﺭﺑﻴﻌﺔ ﻋﻦ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻤﺮﻭ اﻟﺴﻴﺒﺎﻧﻲ ﻗﺎﻝ ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ اﺳﺘﻮﺻﻮا ﺧﻴﺮا ﺑﻤﻦ ﻳﻘﺪﻡ ﻋﻠﻴﻜﻢ ﻣﻦ ﻏﻴﺮ ﺑﻼﺩﻛﻢ ﻣﻦ اﻟﻐﺮﺑﺎء
    யஹ்யா இப்னு அபீ அம்ரூ அஷ்ஷைபானி கூறியதாவது: "உங்களைத் தவிர வேறு நாட்டிலிருந்து உங்களிடம் வரும் அந்நியர்களிடம் அன்பாக இருங்கள் என்று இஞ்சீலில் எழுத்தப்பட்டுள்ளது (தாரிக் திமிஷ்க் 64/166)
ஆதாரம் 11:
ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺤﻤﺪ، ﺃﻧﺎ ﺃﺑﻮ اﻟﺤﺴﻦ ﻋﻠﻲ ﺑﻦ ﻣﻌﺮﻭﻑ اﻟﺒﺰاﺯ، ﻧﺎ ﺃﺑﻮ ﻋﻴﺴﻰ ﻣﺤﻤﺪ ﺑﻦ اﻟﻬﻴﺜﻢ ﺑﻦ ﺧﺎﻟﺪ، ﻧﺎ ﺇﺑﺮاﻫﻴﻢ ﺑﻦ ﺳﻌﻴﺪ اﻟﺠﻮﻫﺮﻱ، ﻧﺎ ﻫﺎﺷﻢ ﺑﻦ اﻟﻘﺎﺳﻢ، ﻋﻦ ﺻﺎﻟﺢ اﻟﻤﺰﻱ، ﻋﻦ ﺃﺑﻲ ﻋﻤﺮاﻥ اﻟﺠﻮﻧﻲ، ﻗﺎﻝ: ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: ﺗﻌﻤﻠﻮﻥ اﻟﺨﻄﺎﻳﺎ ﻭﺗﻨﻜﺮﻭﻥ اﻟﻌﻘﻮﺑﺔ "
அபீ இம்ரான் அல் ஜூனி கூறியதாவது: நீங்கள் "பாவங்களைச் செய்கிறீர்கள், அதற்கான தண்டனையை மறுக்கிறீர்கள்" என்று இஞ்சீலில் எழுதப்பட்டுள்ளது. (அல் ஜஸா ஸாதஸ் 10)
ஆதாரம் 12:
ﻗﺘﺎﺩﺓ: ﻣﺜﻞ ﺃﺻﺤﺎﺏ ﻣﺤﻤﺪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ ﺃﻧﻪ ﺳﻴﺨﺮﺝ ﻗﻮﻡ ﻳﻨﺒﺘﻮﻥ ﻧﺒﺎﺕ اﻟﺰﺭﻉ ﻳﺄﻣﺮﻭﻥ ﺑﺎﻟﻤﻌﺮﻭﻑ ﻭﻳﻨﻬﻮﻥ ﻋﻦ اﻟﻤﻨﻜﺮ
கத்தாதா கூறியதாவது: முஹம்மத்( ஸல்) அவர்களது தோழர்கள் போன்றவர்கள் குறித்து இஞ்சீலில் " நன்மையை ஏவி தீமையை தடுப்பதை விதைக்கும் மக்கள் வருவார்கள்" என்று எழுதப்பட்டுள்ளது (தஃப்ஸீர் அல் ஹாஸன் 4/173)
ஆதாரம் 13:
ﻋﻦ ﻛﻌﺐ اﻷﺣﺒﺎﺭ ﻗﺎﻝ: ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: "ﻳﺎ ﻋﻴﺴﻰ، ﻗﻠﺐ ﻻ ﻳﺨﺸﻊ ﻋﻤﻠﻪ ﻻ ﻳﻨﻔﻊ، ﻭﺻﻮﺗﻪ ﻻ ﻳﺴﻤﻊ، ﻭﺩﻋﺎﺅﻩ ﻻ ﻳﺮﻓﻊ".
கஃப் அல் அஹ்பார் கூறியதாவது: இது இஞ்சீலில் எழுதப்பட்டுள்ளது: "ஓ ஈஷாவே! தன்னைத் தாழ்த்திக்கொள்ளாத இதயத்தின் வேலை பயனளிக்காது, அதன் குரல் கேட்கப்படாது, அதன் துவா ஏற்கப்படாது"((தஃஸீர் ரஜப் அல் ஹன்பலி 2/17)
ஆதாரம் 14:

ﻭﻋﻦ ﺃﺑﻲ ﺣﺎﺯﻡ اﻟﻘﻴﺴﺎﺭﻱ ﻗﺎﻝ: ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: "ﻳﺎ ﻋﻴﺴﻰ، اﻟﺤﻖ ﻭاﻟﺤﻖ ﺃﻗﻮﻝ: ﺇﻧﻲ ﺃﺣﺐ ﺇﻟﻰ ﻋﺒﺪﻱ ﻣﻦ ﻧﻔﺴﻪ اﻟﺘﻲ ﺑﻴﻦ ﺟﻨﺒﻴﻪ ".
“ ‘ஈஷாவே! உண்மைக்கு உண்மையாக நான் சொல்கிறேன்: என் அடியானுக்கு அவனது இரு பக்கங்களுக்கு இடையே உள்ள ஆன்மாவை விட நான் மிகவும் பிரியமானவன்.’ என்று இஞ்சீலில் எழுதப்பட்டுள்ளது”, என்று அபீ ஹாசம் அல்கைஸாரி கூறினார் (தஃஸீர் ரஜப் அல் ஹன்பலி 2/556)
ஆதாரம் 15:
ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: ﻛﻤﺎ ﺗﺪﻳﻦ ﺗﺪاﻥ. ﻭﺑﺎﻟﻜﻴﻞ اﻟﺬﻱ ﺗﻜﻴﻞ ﺗﻜﺘﺎﻝ."ﻓﺮ - ﻋﻦ ﻓﻀﺎﻟﺔ ﺑﻦ ﻋﺒﻴﺪ" 
நீங்கள் தீர்ப்பளிப்பது போல் நியாயம் தீர்க்கப்படுவீர்கள். எதை கொண்டு அளந்தீர்களோ அதை கொண்டே அளக்கப்படுவீர்கள் என்று இஞ்சீலில் எழுத்தப்பட்டுள்ளது என்று ஃபதாலா இப்னு உபைத் கூறினார்கள். (கன்சுல் அஹ்மல் 43031)
ஆதாரம் 16:
ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: اﺑﻦ ﺁﺩﻡ! ﺃﺧﻠﻘﻚ ﻭﺃﺭﺯﻗﻚ ﻭﺗﻌﺒﺪ ﻏﻴﺮﻱ! اﺑﻦ ﺁﺩﻡ ﺗﺪﻋﻮﻧﻲ ﻭﺗﻔﺮ ﻣﻨﻲ، اﺑﻦ ﺁﺩﻡ! ﺗﺬﻛﺮﻧﻲ ﻭﺗﻨﺴﺎﻧﻲ، اﺑﻦ ﺁﺩﻡ! اﺗﻖ اﻟﻠﻪ ﺛﻢ ﻧﻢ ﺣﻴﺚ ﺷﺌﺖ. "ﺃﺑﻮ ﻧﻌﻴﻢ، ﻭاﺑﻦ ﻻﻝ - ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ".
இப்னு உமர்(ரலி) கூறியதாவது :ஆதமின் மகனே! நான் உன்னை படைத்து உணவளிப்பது என்னை மட்டுமே வணங்குவதற்காகத்தான். ஆதமின் மகனே! என்னை நீ அழைத்தால் ஓடிவருவேன். ஆதமின் மகனே! என்னை நினைவு கூறு, உன்னை நான் நினைவு கூறுவேன். ஆதாமின் மகனே! அல்லாஹ்விற்கு அஞ்சிய நிலையில் எங்கு வேண்டுமானலும் நீ உறங்கு (கன்சுல் அஹ்மல் 44005)
        மேற்குறிபிட்ட வசனங்கள் தெளிவாக ஒரு விஷயத்தை இங்கு பதிவு செய்கிறன. அதாவது ஈஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய வேதம் இன்ஜீல். இஸ்லாமியர்களின் பார்வையில் இறைவேதம் என்பது அல்லாஹ்வின் சொற்களை மட்டுமே கொண்டிருக்கும். ஏனைய மனிதர்களின் விவரிப்புக்ளை அது கொண்டிருக்காது. இன்றிருக்கும் “Gospel According to Matthew”, “Gospel According to Mark”, “Gospel According to Luke”, “Gospel according to John” என்று கிறித்தவ பைபிளே சாட்சி கூறிக்கொண்டிருக்கும் போது அவர்களே அதில் இருந்து முரண்பட்டு இந்த நற்செய்தி நூல்கள், ஈஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் நேரடியாக கொடுத்தான் என்று கூறுவதே நகைமுரண். மேலும் அல்லஹ்விடம் இருந்து இறைச்செய்தி வர வர, அல்குர்ஆனை, எழுத நபி(சல்) அவர்கள் ஜைத்(ரலி) போன்ற பல எழுத்தர்களை நியமித்திருந்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இஸ்லாமிய ஆவணங்களில் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் குர்ஆனை போன்று தற்போது இருக்கும் நற்செய்தி நூல்களை, இறைச்செய்தி வர வர, எழுதுவதற்கு இந்த மத்தேயூ, லூக்கா, மாற்கு, யோவான் ஆகியோரை இயேசு பணித்திருந்தார் என்பதற்கு எந்த ஆவணங்களும் கிறித்தவ ஏடுகளிலோ, வரலாற்று நூல்களிலோ இல்லை.  கர்த்தரின் வேத வெளிப்படாக, இயேசு பிரித்தறிவித்த அனைத்தையும் முழுமையாக மனனமிட்டு தொகுத்தவர்கள் இருந்தார்கள் என்பதற்காவது  ஏசுவின் சமகால ஆதாரம் எதுவும் இருக்கிறதா, என்றால் அதுவும் இல்லை. அப்படி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தாலாவது ஏசுவிற்கு அல்லாஹ் இறைச்செய்தி கொடுத்தான், அந்த இறைசெய்திகள் மட்டும் ஒன்றிணைக்கப்பட்டு இன்ஜீல் என்றானது என்று கிறித்தவர்கள் வாதிக்க சிறு வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால் நற்செய்தி நூலை வாசிக்கும் யாரும், அதன் உள்ளடக்கத்தை அறிந்த யாரும், இது இறைவனிடம் இருந்து வந்த வஹீ-இறைச்செய்தி அல்ல என்று கூறிவிடுவார்கள். மாறாக இது இஸ்லாமில் கைகொள்ளும் ஸீரா போன்ற ஒரு நூல் என்று கூறிவிடுவார்கள்,(இஸ்லாமிய ஸீராவில் கூட அறிவிப்பாளர் தொடருடன் செய்திகள் பல இருக்கும் என்பது வேறு விடயம்). அப்படி இருக்க இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள்தான், அல்லாஹ்வால் ஈஸா(அலை) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இன்ஜீல் என்று கூறுவது எல்லாம் மிக கேலிக்குரியது. மேலும் இன்றிருக்கும் நற்செய்தி நூல்கள்தான் இன்ஜீல் என்று வாதிடுபவர்கள் மேற்குறிபிட்ட வசனங்கள் அனைத்தும் ஒரு சேர அமைந்த நூலை இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டில் இருந்து காட்டுவார்களா??? இவர்களது பாஷையில் சொல்வதாக இருந்தால் திராணி இருந்தால் இவர்கள் வைத்திருக்கும் புதிய ஏற்பாட்டில் இருந்து இதைகாட்ட வேண்டும் நற்செய்தி நூல்கள்தான் இன்ஜீல் என்று வாதிடுபவர்கள்…

முன்சென்ற வேதத்தை பாதுகாக்க இயலாதவனா அல்லாஹ்???

        நபி(ஸல்) அவர்களது காலத்துவரை இருந்த இன்ஜீல் இப்போது இல்லை. அது அழிக்கப்பட்டுவிட்டது என்று கூறியதும் கிறித்தவ மிசனரிகள் அடுத்ததாக முன் வைக்கும் வாதம், “முன்சென்ற வேதமான இன்ஜீலை ஏன் பாதுகாக்கவில்லை? எனவே முன்சென்ற வேதத்தை பாதுகாக்க இயலாதவன் இறைவனாக இருக்க முடியாது” என்பதே ஆகும். ஆனால் அல்லாஹ் எந்த இடத்திலும் இன்ஜீலை தான் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்ததாக அல் குர்ஆனில் எந்த இடத்திலும் அல்லாஹ் குறிப்பிடவில்லை. மாறாக அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
    (நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்ட திட்டங்களைக் கொண்டதாக, இ(வ் வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து (உம்மை இரட்சிக்கும் உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ (எவரும்) உமக்குக் கிடைக்க மாட்டார். (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை ஒவ்வொரு தவணைக்கும் ஒரு  ஏடு உள்ளது. (எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கறது.(அல் குர்ஆன் 13:37-39)
    மேற்குறிபிட்ட வசனமே போதுமானது அல்லாஹ் ஏன் முன்சென்ற வேதங்களை பதுகாக்கவில்லை என்பதற்கு. ஆக்கலும் அழித்தலும் அவனது நாட்டத்தை பொறுத்தது. இதில் சுய விருப்பம் கொள்ள யாருக்கும் அதிகாரம் இல்லை. மாறாக அல்லாஹ் குர்ஆனை பாதுகாப்பதில் அவன் பொறுப்பெடுத்துக்கொண்டான். இன்ஜீலை பாதுக்காக்காதவன் இறைவனா என்று கேள்வியை முன்வைப்பவர்கள், அல்குர்ஆன் கூறும் இன்ஜீலில் “அல்லாஹ் இன்ஜீலை பாதுகாப்பேன்” என்று வாக்களித்ததை காட்ட வேண்டும் அல்லது அல்குர்ஆனில் இன்ஜீலை பாதுகாப்பேன் என்று கூறப்பட்டிருப்பதையாவது காட்ட வேண்டும். இவர்கள் வைத்திருக்கும் பைபிளில் இருந்து எதையாவது காட்டுவது நியாயம் ஆகாது, அவர்களது “Gospel According to Matthew”, “Gospel According to Mark”, “Gospel According to Luke”, “Gospel according to John” ஆகியவை இஸ்லாம் கூறும் இன்ஜீல் அல்ல….

Reference:
 1.   Margins and Metropolis: Authority across the Byzantine Empire P.No.340
 2.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.69-70
 3.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.76
 4.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.71
 5.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.115
 6.   Books on Fire- The Destruction of Libraries throughout History P.No.324 
 7.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.100
 8.   Margins and Metropolis: Authority across the Byzantine Empire P.No.342
 9.   Margins and Metropolis: Authority across the Byzantine Empire P.No.342
 10.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.274
 11.   Margins and Metropolis: Authority across the Byzantine Empire P.No.342
 12.   Margins and Metropolis: Authority across the Byzantine Empire P.No.349
 13.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.276
 14.   Books on Fire- The Destruction of Libraries throughout History P.No.66
 15.   The Crusades by Asbridge Thomas P.No.174
 16.   Books on Fire- The Destruction of Libraries throughout History P.No.66
 17.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.259
 18.   The Cathars and the Albignesian Crusade- A Source book
 19.   The Albignesian Crusade by Jonathan Sumption