பக்கங்கள் செல்ல

Friday, September 16, 2016

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-7 மாற்கு சுவிஷேசம்ஏக இறைவனின் திருப்பெயரால்எதிர்தொடர் 19: உடைந்த சிலுவை பாகம்-7: மாற்கின் சுவிஷேசம் 
      சென்ற தொடரில் புதிய ஏற்பாட்டின் ஆகமங்களில் எண்ணிக்கை குறித்த முரண்பட்ட நிலையை எடுத்து கூறினோம். இந்த தொடரில் இந்த ஆகமங்களின் உன்மைதன்மை குறித்தும் இதை இயற்றியவர்கள் உன்மையில் ஏசுவை கண்டவர்களா? அல்லது ஏசுவின் சீடர்களை கண்டவர்களா என்பதையும் புதிய ஏற்பாட்டில் காணப்படும் நான்கு சுவிஷேசங்களின் நிலையையும் ஆய்ந்து அறிவோம் இன்ஷா அல்லாஹ்.

மாற்கின் சுவிஷேசம்:

      இந்த சுவிஷேசம் தான் இன்று இருக்கும் கிறித்தவ அறிஞர்களால் நான்கு சுவிஷேசங்களிலும் மிகப்பழமையானது என்று கொள்ளப்படுகிறது. பரப்பரியமாக எபிரேய மத்தேயுதான் பழமையானது என்று கூறப்பட்டாலும் இன்று இருக்கும் மத்தேயு எபிரேய மத்த்தேயு அல்ல. இன்று இருக்கும் மத்தேயு கிரேக்க மொழியிலான மொழிபெயர்ப்பு என்று உறுதி செய்யப்பட்டதால் மாற்குதான் மிகப்பழமையானது என்று கொள்ளப்படுகிறது. மாற்கு சுவிஷேசமானது கிபி 70 களில் அதன் மூல மொழியான கிரேக்க மொழியில் இயற்றப்பட்டது. மாற்கு சுவிஷேசம் 5 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. அத்தியாயம் 1.1 முதல் 1.13 வரை உடையது ஏசுவின் பொது வாழ்க்கையின் ஆரம்பத்தை கூறுவதாகவும், 1.14 முதல் 9.50 வரை ஏசுவின் போதனைகள் மற்றும் அற்புத்ங்களை குறித்து கூறுவதாகவும், 10ம் அத்தியாயம் ஏசுவின் ஜெருசலம் பயணம் குறித்தும், 11முதல் 15 வரை உள்ள அத்தியாயங்கள் ஏசுவின் சிலுவை மரணம் வரை உள்ள இறுதி பகுதிகளையும் 16.1-8 ஏசுவின் உயிர்தெழுதல் குறித்தும் பேசுகிறது. இதை எழுதிய மாற்கு ஏசுவின் நேரடி சீடரான பேதுருவின் சீடராக கருத்தப்படுகிறார். இந்த கருத்தை முதல் முதலில் கூறியவர் பேப்பியேஸ் (Papias of Hieropolis CE:60-130) பின்வரும் வாசகம் பேப்பியஸ் கூறியதாக யூசிபியஸ் அவர்களால் தனது History of Eccelestial church என்ற புத்தகத்தில் கூறுகிறார்:

                14.  Papias  gives also in his own work other accounts of the words of the Lord on the authority of Aristion who was mentioned above, and traditions as handed down by the presbyter John; to which we refer those who are fond of learning. But now we must add to the words of his which we have already quoted the tradition which he gives in regard to Mark, the author of the Gospel.
                15. “This also the presbyter said: Mark, having become the interpreter of Peter, wrote down accurately, though not in order, whatsoever he remembered of the things said or done by Christ. For he neither heard the Lord nor followed him, but afterward, as I said, he followed Peter, who adapted his teaching to the needs of his hearers, but with no intention of giving a connected account of the Lord’s discourses,so that Mark committed no error while he thus wrote some things as he remembered them. For  he was careful of one thing, not to omit any of the things which he had heard, and not to state any of them falsely.” These things are related by Papias concerning Mark.
              Writings of Papias, Book III, The History of Eccelestial church By Eusebius
      
      இதில் ஜான் என்ற மதபோதகர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த ஜான் யார் என்பதில் பல குழப்பம் இன்றும் நிலவுகிறது. இவரது வாழ்க்கை குறித்த தெளிவான சான்றுகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட செய்தியில் மாற்கு பேதுருவின் எழுத்தராக இருந்து சுவிஷெத்தை வரைந்தார் என்ற குறிப்பு கிடைக்கப்பெறுகிறது. மார்க்கினால் பேதுருவிடம் இருந்து பெறப்பட்டு பேதுருவின் மரணத்திற்கு பிறகு கிபி 70ல் இயற்றப்பட்டதாக கிறித்தவ உலகத்தால் கூறப்பட்டாலும் இதுவரை கிபி 70ஐ சேர்ந்த உண்மை ஏடு எதுவும் கிடைக்கப்பெற வில்லை. 

ஆய்வு 1: மாற்கு சுவிஷேசம் கிபி 70ல் இயற்றப்பட்டதா?

இந்த சுவிஷேசம் கிபி 70ல் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் இடம்பெறும் செய்திகள் கிபி 2-3 ம் நூற்றாண்டை சார்ந்தவையாக உள்ளது. உதாரணமாக பின்வரும் வசனத்தை எடுத்துக்கொள்வோம்.

எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைத் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள். (மாற்கு 7:1-3).

மேலே குறிப்பிடப்பட்ட வசனங்களில் சாப்பிடுவதற்கு முன்பு கைகளை கழுவுவதை யூதர்களின் பாரம்பரியமாகக் காட்டுகிறார் மாற்கு. யூதர்களின் பாரம்பரியத்தை விளக்கும் அவசியம் இங்கு என்ன? யூதரல்லாத மக்களுக்கு கூறப்படுவதால்தான் யூதர்களின் பாரம்பரியத்தை விளக்குகிறார் மாற்கு. மேலும் இத்தகைய பரிசேயரின் வழக்கங்கள் எல்லாம் யூதர்களின் பழக்கமானது கிபி 70க்கு பிறகுதான். அதாவது ஜெருசலம் ஆலயம் தீக்கிரை ஆக்கப்பட்டு சதுசேயர்களின் கைகளில் இருந்த யூதர்களுக்கான அதிகாரம் கடைநிலையிலிருந்த பரிசேயர்களின் கைகளில் விழுந்த பிறகுதான் யூதர்களின் வாழ்வியல் நெறிகளில் மாற்றங்கள் உண்டாயிற்று. ரப்பிக்களால் யூதர்களின் வாழ்வியல் நெறிமுறைகள் வரையறுக்கப்பட துவங்கியது. குறிப்பாக மிஸ்னா, தல்மூத் இயற்றப்பட்ட 2-3ம் நூற்றாண்டுகளில் இத்தகைய பழக்கங்கள் யூதர்களின் பாரம்பரியமானது. (Refer: Mishnah, Pharisees: Vol.8,9, Jewish Encyclopedia By Isidore Singer, Jewish History Wikipedia, Babylonian Talmud). ஆக இந்த மாற்கு சுவிஷேசமானது கிறித்தவர்களால் கூறப்படுவது போல பேதுருவால் மாற்கிற்கு வழங்கப்பட்டதல்ல. நமக்கு கிடைக்கும் பழமையான சுருள்கள் 2-3ம் நூற்றாண்டுகளை சார்ந்தவைதான் என்பது குறிப்பிடதக்கது.
 
ஆய்வு 2: மாற்கு யூதரா?

      மாற்கு ஆகமத்தை இயற்றிவர் யூதர் என்று கிறித்தவ உலகம் கூறிவருகிறது. ஆனால் இந்த ஆகமத்தில் இடம்பெறும் பல கருத்துகள் இதை இயற்றியவர் ஒரு யூதராக இருக்கமாட்டார் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது. யூதர்களின் மரபு குறித்த கருத்தே இதற்கு உதாரணம். மேலும் பின்வரும வசனத்தை காணும் பொழுது இதை இயற்றியவர் ஒரு யூதராக இருக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.(மாற்கு 7:10)

ஆதாவது மோசே கூறியதாக ஒரு சட்டத்தை ஏசு பரிசேயருக்கு விளக்குவதாக மாற்கு குறிப்பிடுகிறார். இது ஏசுவின் வார்த்தையாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. காரணம் இது கர்த்தர் மக்களுக்கு வழங்கியதாக மோசே கூறியது. (எண்: 21:15) எந்த யூதரும் இதை மோசேயின் கருத்தாக தவறுதலாகவும் கூறமாட்டார். இதை பேதுரு என்ற யூதர் நிச்சயம் கூறியிருக்க மாட்டார். இதை நிச்சயம் பேதுருவின் சீடரான மாற்கு என்ற யூதர் பதிவு செய்திருக்க மாட்டார். இதன் காரணத்தினால்தான் மத்தேயுவில் இதே சம்பவம் மிகத்துல்லியமாக கையாளப்பட்டுள்ளதை காணமுடியும்.

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.(மத்தேயு: 15:4).

இது போல பழைய ஏற்பாடின் வசனங்கள் மாற்கால குளறுபடியுடனே கையாளப்பட்டுள்ளது. அடுத்ததாக

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். (மாற்கு 1:1-3)

அதாவது இரண்டாவது வசனம் தீர்க்கதரிசனத்தில் இருப்பதாக மாற்கு கூறுகிறார். அது யோவான் குறித்து பேசுவதாக கூறுகிறார் மாற்கு. ஆனால் மலாச்சியில் இடம்பெறும் வசனம் எதை கூறுகிறது என்பதை காண்போம்.

இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ் செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல்கியா: 3:1-5).

மேலே குறிப்பிடப்படும் வசனமானது அந்த நாள் எத்தகையது என்பதையும் கூறுகிறது. அதாவது ஏசு விண்ணேற்றம் அடையும் காலம் வரை யூதர்கள் முழுமையாக சுத்திகரிக்கப்படவில்லை என்பதை நான் குறிப்பிட தேவையில்லை என்று எண்ணுகிறேன். இன்றும் யூதர்கள் கிறித்தவதத்தை ஏற்று கொள்ளவில்லையே. மேலும் யூதா மற்றும் எருசலேமின் காணிக்கைகள் கர்த்தருக்கு பிரியமாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏசுவின் விண்ணேறத்திற்கு பிறகு யூதர்கள் காணிக்கை செலுத்தும் எருசலேம் ஆலயம் கிபி 70ல் தீக்கிரையாக்கப்பட்டது.  ஆக மாற்கு குறிப்பிடுவது போல இந்த பழைய ஏற்பாட்டின் வசனத்திற்கும் யோவானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை புரிந்து கொண்ட மத்தேயு இந்த வசனத்தை தூக்கிவிட்டார் தனது ஆகமத்தில் (மத்தேயு 3:3). இப்படி தப்பும் தவறுமாக பழைய ஏற்பாட்டின் வசனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் மாற்கு சுவிஷேசத்தை இயற்றிவர் நிச்சயம் யூதராக இருக்க மாட்டார்.

ஆய்வு 3: மாற்கின் புவியியல் அறிவு: 

மாற்கு சுவிஷேசத்தை இயற்றிய பேதுருவின் சீடரான மாற்கு அவர்கள் எருசலேமை சேர்ந்தவர் என்றும் (அப்போஸ்தல் நடபடிகள்: 12:12) பவுல் மற்றும் பார்னபாவுடன் ஆசியா மைனர் வரை சுற்றி வந்தவர் என்றும் கிறித்தவ உலகம் கூறி வருகிறது. ஆனால் மாற்கு சுவிஷேசத்தை ஆய்வு செய்தால் அவருக்கு எருசலேம், பாலஸ்தீன புவியியல் சார்ந்த  அறிவு சுத்தமாக இல்லை என்பதே விடையாக உள்ளது. உதாரணமாக ஏசுவின் பயணங்கள் குறித்து கூறும் இடங்களில் மாற்கு சுவிஷேசம் முற்றிலும் எருசலேம் மற்றும் அதன் சுற்றுபுறம் குறித்த புவி அமைப்பிற்கு முரண்பட்டதாகவே உள்ளது. 

அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்..................அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார். (மாற்கு 9:33-10:1)

அதாவது மேற்கூறிய வசனத்தில் ஏசு கப்பர்நகூமில் இருந்து யூதேய தேசத்திற்கு யோர்தான் ஆற்றின் மறுகரை வழியாக வந்ததாக மாற்கு கூறுகிறார். ஆனால் யூதேயாவும் கப்பர்நகூமும் யோர்தான் ஆற்றின் மேற்கு கரையில் தான் உள்ளது. அதாவது யோர்தான் ஆற்றை இரண்டு முறை கடந்தால்தான் அது சாத்தியம். பின்வரும் வரைபடம் இதை தெளிவாக விளக்கும். இவ்வாறு ஏன் யோர்தான் ஆற்றை இருமுறை கடக்க வேண்டும் கப்பநகூமில் இருந்து யூதேயாவிற்கு நேரடி பாதை இருக்கும் போது.

 
இதே போல் ஆவிகள் பன்றிகள் கூட்டத்தில் நுழைந்த கதையிலும் மேற்கூறியது போன்ற புவியியல் பிழையை காணவியலும்.

பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய  நாட்டில் வந்தார்கள். அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான். அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்துகொண்டு.............அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது. (மாற்கு 5:1-13). கதரேனருடைய  பகுதியை சுற்றிலும் இத்தகைய நீர்நிலைகள் எதுவும் இல்லை. இதை அறிந்திருந்த மத்தேயு இதை கெர்கசேனர் என்று மாற்றிவிட்டர். (மத்தேயு 8:24)(பார்க்க உள்படம்)

இப்படி பாப்பியஸின் கருத்திற்கு ஒத்துவராத ஒருவரால் தான் மாற்கு சுவிஷேஷம் இயற்றபட்டுள்ளது என்பதற்கான சான்றுகள்தான் மேலே குறிபிட்டது. மேலும் மார்க்கின் சுவிஷேஷம் பணடைய சுருள்களில் இன்று இருப்பதை போல இல்லை. உதரணமாக codex sinaiticusல் மாற்கின் சுவிஷேஷம் 16:8 உடன் முழுமையடைகிறது. அதன் பிறகு லூக்கா ஆரம்பமாகிறது. இப்படி குளறுபடிகளின் மொத்த உருவமாக திகழ்கிறது மாற்கு சுவிஷேசம். இந்நிலையில் மாற்கு சுவிஷேசம் குறித்து அலெக்ஷாண்டிரியாவின் கிளமண்ட் , தியோடர் என்பவருக்கு வரைந்த கடிதமான மார் ஷபா கடிதம் மாற்கு சுவிஷேசம் குறித்து வேறு வகையில் கூறுகிறது. மார் ஷபா கடிதம் குறித்து அடுத்த தொடரில் காண்போம், இன்ஷா அல்லாஹ்........

எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண             உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண


No comments:

Post a Comment