பக்கங்கள் செல்ல

Sunday, October 30, 2016

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-12: கிறித்தவமும் பேய்வணக்கமும்

ஏக இறைவனின் திருப்பெயரால்
         
            சென்ற தொடர்களில் கிறித்தவர்களின் வேதமான பைபில் குறித்து ஆய்வு செய்தோம். அதில் இருந்த முரண்பாடுகள் மற்றும் வரலாற்று பிழைகளையும் கண்டோம். ஏன் அவர்களின் கொள்கையில் ஒன்றான ஏசுவின் சிலுவை மரணத்தை குறித்தும் அதன் குளறுபடிகளையும் அறிந்தோம். வரலாற்று குறிப்புகளில் ஏசுவின் சிலுவை மரணம் குறித்த செய்திகளில் கிறித்தவர்களின் திருகுதாளங்களையும் கண்டோம். வரும் தொடரில் அவர்களின் சில நம்பிக்கைகளையும் அதன் மூலம் எது என்பதையும் ஆய்வு செய்வோம்.

திரித்துவம் என்னும் பேய்வணக்கம்:

      இன்று இருக்கும் பெரும்பான்மை கிறித்தவர்கள் கூறும் கடவுட்கொள்கையானது திரித்துவம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது கர்த்தர், இயேசு, மற்றும் பரிசுத்த ஆவி மூன்றும் பிரிந்து கிடந்தாலும் மூன்றும் ஒன்றுதான் என்பதுதான். இந்த மூன்று தெய்வ கொள்கையின் மூலகங்களை ஆய்வு செய்வதினாலும் உன்மையில் ஏசு திரித்துவத்தைதான் போதித்தாரா என்பதை ஆய்வு செய்வதின் மூலம் இன்று இருக்கும் கிறித்தவத்தின் மூலம் அல்லது ஆதி தோற்றுவிப்பாளர்கள் யார் என்பதை அறிய முடியும். உன்மையில் பைபில் இந்த கருத்தை தோற்றுவிக்கிறதா அல்லது மறுக்கிறதா, அல்லது இரண்டையும் கூறுகிறதா என்பதை முதலில் ஆய்வு செய்வோம். மேலும் இதன் மூலம் ஆதி ஏசுவின் சீடர்கள் எந்த கொள்கை உடையவாராய் இருந்திருப்பர் என்பதையும் அருதியிட்டு கூற முடியும். பிறகு மற்ற பல கடவுள் கொள்கை உடையோரின் கருத்தை ஒப்பிட்டு திரித்துவத்தின் உன்மை வேர்களை அறிவோம்.

      முதலில் பைபிலின் எந்த பகுதியிலும் ஏசு தன்னை கர்த்தர் என்று பிரகடனம் செய்ததை காணமுடியவில்லை. உதரணமாக ஏசு பின்வருமாறு பைபிலில் பிரகடணம் செய்கிறார்

           பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானே அல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளை துரத்தினோம் அல்லாவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதனகளை செய்தோம் அல்லவா? என்பார்கள்.அப்போது நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை;அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:21-23)
நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாது இருங்கள். கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராய் இருக்கிறார், நீங்கள் அனைவரும் சஹோதராய் இருக்கிறீர்கள். பூமியில் ஒருவனையும் உங்கள் பிதா என்று அழைக்காதீர்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாய் இருக்கிறார்.(மத்தேயு 23:8,9)


       சில இடங்களில் தன்னை கர்த்தருடன் இரண்டறக்கலந்துள்ளதாக ஏசு கூறும் வசனங்களை அடிப்படையாக் கொண்டு ஏசுவும் கர்த்தரும் ஒன்றுதான் என்ற கருத்தை இன்றைய கிறித்தவர்கள் தோற்றுவிக்கின்றனர். ஆனால் புதிய ஏற்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்தும் போது அதற்கு எதிரான கருத்தையே தருகிறது. உதாரணமாக,
   
        நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.(யோவான் 10:30)  
  
அதாவது மூன்றாம் நூற்றாண்டு வரை பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்பது தனிதனியானவை என்ற நம்பிக்கையைதான் கிறித்தவர்கள் கொண்டிருந்தனர்.ஆனால் மூன்றும் ஒன்றுதான் என்ற கருத்தாக்கம் நான்காம் நூற்றாண்டில்தான் உருவெடுக்க துவங்கியது. இப்படி இன்று பெரும்பான்மை கிறித்தவர்கள் கூறும் கடவுட்கொள்கைக்கும் அவர்களது வேதத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. இவர்களது திரித்துவ கொள்கையின் உண்மை வேர்கள் பலதெய்வ
     ஆனால் இது போன்ற வேறு பல இடங்களை ஒப்பிட்டால் இந்த கருத்து எவ்வளவு விபரீதமானது என்பது விளங்கும்.          அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்கிறேன். நாம் ஒன்றாரிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்கு தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். (யோவான் 17:21-22)     ஆக ஒன்றியிருத்தல் என்ற வார்த்தை பிரயோகம் நிச்சயம் திரித்துவத்தின் எந்த வேர்களையும் கொண்டிருக்க வில்லை என்பது விளங்கும். திரித்துவம் என்ற இறைகொள்கைக்கு எந்த முகாந்திரமும் பைபிலில் இல்லை. சரி பின் வந்த ஆரம்ப கால தேவாலய பிதாக்களாவது இந்த கருத்தை கொண்டிருந்தனரா என்றால் அதுவும் இல்லை.
  
                They introduce God as a Being unknown; they suppose Christ to be unbegotten; and as to the Spirit, they do not admit that He exists. Some of them say that the Son is a mere man, and that the Father, Son, and Holy Spirit are but the same person, and that the creation is the work of God, not by Christ, but by some other strange power. (P.No:188 ,the epistle of Ignatius to trallians,ch IV-abstain from the Poison of heretics)
              
      அதாவது இக்னேஸியஸ் கூறும் போது சில மறுப்பாளர்கள் பிதா சுதன் பரிசுத்த ஆவி இம்மூன்றும் ஒன்று என்று கூறுவதாக கூறுகிறார். ஆதாவது இன்று கூறப்படும் கிறித்தவ நம்பிக்கை ஆரம்ப காலத்தில் இல்லை. இது நான்காம் நூற்றாண்டின் இடைசெருகல். இன்னும் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மித்ராவின் சின்னமான சிலுவையை தலையில் வரைய வற்புறுத்திய டெர்டுல்லியன் கூட இதை ஏற்க வில்லை என்பதுதான் ஆச்சரியத்தின் உச்சமே.

           Thus the Father is distinct from the Son, being greater than the Son, inasmuch as He who begets is one, and He who is begotten is another; He, too, who sends is one, and He who is sent is another; and He, again, who makes is one, and He through whom the thing is made is another (Chapter IX.—The Catholic Rule of Faith Expounded in Some of Its Points. Especially in the Unconfused Distinction of the Several Persons of the Blessed Trinity, Against Praxeas by Tertullian).
       
      அதாவது மூன்றாம் நூற்றாண்டு வரை பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்பது தனிதனியானவை என்ற நம்பிக்கையைதான் கிறித்தவர்கள் கொண்டிருந்தனர்.ஆனால் மூன்றும் ஒன்றுதான் என்ற கருத்தாக்கம் நான்காம் நூற்றாண்டில்தான் உருவெடுக்க துவங்கியது. இப்படி இன்று பெரும்பான்மை கிறித்தவர்கள் கூறும் கடவுட்கொள்கைக்கும் அவர்களது வேதத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. இவர்களது திரித்துவ கொள்கையின் உண்மை வேர்கள் பலதெய்வ வழிபாட்டாளர்களான பாபிலோனியர்களிடமிருந்து பெறப்பட்டதுதான். அதனால்தான் ஃப்ரான் குமோன்ட் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார், 

             Having become scientific, it conceived the gods as cosmic energies, the providential action of which is ordered in a harmonious system. Oriental theologians developed the idea that the world forms a trinity; it is three in one and one in three (P.No: 123,Astrology and religion among the Greeks and Romans by Franz Cumount)
          We can imagine how powerful the religious influence of that country on the Syrian paganism must have been. That influence manifested itself in various ways. First, it introduced new gods. In this way Bel passed from the Babylonian pantheon into that of Palmyra and was honored throughout northern Syria. It also caused ancient divinities to be arranged in new groups. To the primitive couple of the Baal and the Baalat a third member was added in order to form one of those triads dears to Chaldean theology. This took place at Hierapolis as well as at Heliopolis, and the three gods of the latter city, Hadad, Atargatis and Simios, became Jupiter, Venus and Mercury in Latin inscriptions. Finally, and most important, astrolatry wrought radical changes in the characters of the celestial powers, and, as a further consequence, in the entire Roman paganism.(P.No: 123, Oriental Religions by Cumont).  

        பாபிலோனிய இடப்பெயர்ச்சிக்கு பிறகு இது யூதேயா, இஸ்ரவேல் தேசங்களில் ஊடுருவிய கடவுட்கொள்கையாகும். நிம்ரோது(பிதா), தாமூஸ்(சுதன்), செமிராமிஸ்(புறாவினால் குறிக்கப்படும் பரிசுத்த ஆவி) இது பாபிலோனியர்களிடம் இருந்த முக்கடவுள் கொள்கையாகும். இதை அடியோட்டி யூதரல்லாத புறசாதியினரால் புகுத்தப்பட்ட கொள்கைதான் இன்றிருக்கும் கிறித்தவத்தின் முக்கடவுள் கொள்கையாகும். கிறித்தவர்கள் கொடுக்கும் உருவகமும் பயன்படுத்தும் சின்னங்களும், அவர்களது விழாக்களும் அதை தெளிவாக பறைசாட்டுகின்றன.

கடவுளுக்கு வாரிசு:


            ஏசுவை கர்த்தரின் வாரிசாக தேவ குமாரனாக கிறித்தவர்கள் சித்தரித்து வருகின்றனர். ஆனால் கடவுளுக்கு வாரிசுகளை சூட்டுவது எல்லாம் பாபிலோன், ரோம் போன்ற பல தெய்வ நம்பிக்கையின் வேர்கள்தான் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. 

பரிசுத்த ஆவி என்ற பெண் தெய்வம்: 
       
  ஏசுவின் மீது இறங்கிய பரிசுத்த ஆவி குறித்து பின்வருமாறு பைபில் கூறுகிறது. 

         இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.(மத்தேயு 3:16) 
           
            பரிசுத்த ஆவியை புறாவாக சித்தரிப்பது என்பது பாபிலோனிய நம்பிக்கை தான்.
        Macrobius (Saturn, i. 30) says, "to the great God Adad 'the one' is added the Goddess Atargatis ; these being the Sun and Harth ; and her statue stands on lions, as the Phrygians represent the Mother-Goddess Earth." (See below, p. 54-7.) From this Adad or Hadad is derived the Syrian name of Ben-Hadad (1 Kings XV. 18). On the Goddess Earth, and the bearded Apollo (Baal, or the Sun) at Hierapolis, see Macrobius (Saturn i.19). Both the Syrians and Assyrians "considered the dove a Goddess" (Diodor, ii. 4, 20; Athenag. Legat.); and the fable of the Egg that fell from heaven into the Euphrates, and was hatched by two doves, appears to be a variation of that of Semiramis, and relates also to Astarte. (P.No:544 Vol 2, History of Herodotus By GEORGE RAWLINSON, M.A) 

          இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. அதாவது அரமேய ஹீப்ரு மொழிகளில் புனித ஆவியை குறிக்க பெண்பாலே பயன்படுத்தப்படுகிறது. கிரேக்க மொழியில் அஃறினையாக கூறிப்பிடப்படுகிறது. அப்படி இருக்கையில் அஃறினையில் குறிபிடப்படும் ஒன்று எப்படி கடவுளாக உருமாறியது? மேலும் பல பழைய சிரியாயிக் ஏடுகளில் புனித ஆவியானது பெண்பாலினமாகவே கூறப்படுள்ளது. உதாரணமாக யோவான் 14:26 வசனம் பின்வருமாறு அமைந்துள்ளதை காணமுடிகிறது.


              இப்படி பழைய சிரியாயிக் ஏடுகள் புனித ஆவியை பெண்பாலாக சித்தரிக்கிறது. மேலும் எபியோனைட்டுகளில் நற்செய்தியாக கூறப்படும் ஹீப்ரு நற்செய்தியில்(Gospel according to Hebrews) புனித ஆவியை ஏசுவின் தாயாக சித்தரிக்கிறது. இப்படி புனித ஆவியை பெண்ணாகவும், அதனை புறாவாக சித்தரிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மிக எளிமையாக புரிந்து கொள்வதாக இருந்தால் புனித ஆவி என்ற பெயரில் ரோம் கிரேக்க பாபிலோனிய பெண்தெய்வ வழிபாடு திரித்துவமாக கிறித்தவத்தில் புகுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

உயிர்த்தெழுதல்: 

               
                  சென்ற தொடர்களில் உயிர்தெழுதலும் அதன் வரலாற்று முரன்களையும் கண்டோம். இங்கு ஒரு விஷயம் கவனிக்க வேண்டியுள்ளது கிறித்தவ மூலங்கள் அல்லாத ஆசிரியர்களான டாசிடஸ், ஜோசபஸ், போன்றவர்களின் குறிப்புகளில் ஏசு சிலுவையில் அறையப்பட்டது மட்டுமே உள்ளது. (உயிர்தெழுதல் குறித்து காணப்படும் ஜோசபஸின் குறிப்பில் உள்ள திருகு தாளங்கள் சென்ற தொடரில் தொழுரிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க).கிறித்தவர்கள் ஆரம்பம் முதலே ஏசுவை கடவுளாக்கும் பொருட்டு பாபிலோனிய கிரக்க கடவுளர்களின் குணத்தை ஏசுவிற்கு சூட்ட துவங்கினர். அதன் ஒரு பகுதிதான் உயிர்தெழுதல் என்ற வரலாற்று திரிபாகும். பாபிலோனிய கடவுளான தாமூஸ் மூன்று நாட்களுக்கு பிறகு உயித்தெழுந்தார் என்ற கதையுண்டு. அதேபோல் கிறித்தவர்களும் கூறிவருகின்றனர்.

சிலுவை என்னும் சின்னம்: 

           
சிலுவை என்பது கொடிய கொலைக்கருவி. அதில் அறையப்பட்டவர் துளி துளியாக தனது இரத்தம் சொட்டி கொடிய மரணத்தை தழுவுவர். இத்தகைய மரணத்தை தரும் கொலைகருவியான சிலுவை கிறித்தவர்களின் சின்னமானது இதற்கு முன்பு பாபிலோனியர்களின் புனித சின்னமாக விளங்கிய ஒன்று. ஆனால் கிறித்தவர்கள் இதை தங்களது சின்னமாக ஏற்று கொள்ள மூன்று நூற்றாண்டுகள் தேவைபட்டது. பலதெய்வ வணக்கத்தில் இருந்து கிறித்தவத்தை ஏற்று கொண்ட கான்ஸ்டண்டைனின் தாயார் தான் முதலில் ஏசு அறையப்பட்டதாக கூறப்பட்ட சிலுவையை புனித மாக்கியது

             There was a certain  lady of rank in Jerusalem who was afflicted with a grievous  and incurable disease : Macarius, bishop of Jerusalem, accompanied by the mother of the emperor and her attendants, repaired to her bed-side. After engaging in prayer, Macarius  signified by signs to the spectators that the divine cross would be the one which, on being brought in contact with the in  valid, should remove the disease. He approached her in turn  with each of the crosses ; but when two of the crosses were  laid on her, it seemed but vanity and mockery to her, for she  was at the gates of death. When, however, the third cross was in like manner brought to her, she immediately opened  her eyes, regained her strength, and arose. It is said that a dead person was, in the same way, restored to life. The  divine cross having been thus identified, the greater portion  of it was deposited in a silver case, in which it is still preserved in Jerusalem : but the empress sent part of it to her son Constantine, together with the nails by which the body of Christ had been fastened.
                                                                  (Ecclesiastical history of sozomen by philostorigus p.no.51) 
                 
           இப்படி ஆரம்ப கால கிறித்தவர்கள் ரோமானியர்கள், மற்றும் அவர்களது பலதெய்வ நம்பிக்கையினால் மாற்றப்பட்டனர் என்பதற்கு எடுத்துகாட்டுதான் மேற்குறிபிட்ட சம்பவம். இதன் பிறகு தான் கிறித்தவர்கள் சிலுவையை புனிதமானதாகக் கொள்ளத்துவங்கினர். காண்ஸ்டண்டைன் தான் வழிபடும் சூரியனின் சின்னமான சிலுவையை கனவில் கண்டு அதை கிறித்தவர்களின் புனித சின்னமாகவும் மாற்றினர் என்ற குறிப்பு யூசிபியஸ் வரலாற்று குறிப்புகளில் காணமுடிகிறது. 
      
                 Accordingly he called on Him with earnest prayer  and supplications that He would reveal to him who  He was, and stretch forth His right hand to help him in his present difficulties. And while he was thus praying with fervent entreaty, a most marvellous sign appeared to him from heaven, the account of which it might have been difficult to receive with credit, had it been related by any other person. But since the victorious emperor himself long after- wards declared it to the writer of this history, when he was honoured with his acquaintance and society. and confirmed his statement by an oath, who could hesitate to accredit the relation, especially since the testimony of after-time has established its truth ? He said that about mid-day, when the sun was beginning to decline, he saw with his own eyes the trophy of a cross of light in the heavens, above the sun, and bearing the inscription. Conquer by this. At this sight he himself was struck with amazement, and his whole army also, which happened to be following him on some expedition, and witnessed the miracle. (P.No:27, Ch:XXX, Life of Constantine by Eusebius).
     இப்படி ரோமானியர்களின் பல தெய்வ வழிபாட்டின் சின்னங்கள் காண்ஸ்டண்டைனால் கிறித்தவத்தில் நுழைக்கப்பட்டது. கான்ஸ்டண்டைனின் இந்த சூழ்ச்சி வலையில் விழுந்து கிறித்தவர்கள் வழிகேடில் விழுந்து கொஞ்சம் ஒட்டி கொண்டிருந்த ஓரிறை கொள்கையின் சுவடுகளையும் இழந்தனர். பல தெய்வ வணக்கப்பாதைக்கு திசை திருப்பப்பட்டனர்.

ஞாயிறு என்ற வாரவழிப்பாட்டு நாள்:

        குறிப்பாக கான்ஸ்டண்டைன் காலத்தில் தான சிலுவை போன்ற சின்னங்கள் கிறித்தவர்களின் சின்னமாக ஆனாது. கான்ஸ்டண்டைன் கிறித்தவ மதத்தை ஏற்பதற்கு முன்பு கிறிஸ்டோஸ் ஹீலியோஸ் என்று அழைக்கப்படும் சூரியனை வழிபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சூரிய கடவுளின் சின்னமாக கூறப்பட்ட சிலுவை தான கிறித்தவர்களின் சின்னமாக ஆனது. சூரிய கடவுளின் வழிப்பாட்டு நாளான ஞாயிறு (Sun-day) கிறித்தவர்களின் வார வழிபாட்டு நாளானது. பின்வருமாறு கிப்பான் தனது நூலில் குறிப்பிடுகிறார். 

                During the whole course of his reign, the stream of Christianity flowed with a gentle, though accelerated, motion ; but its general direction was sometimes checked, and sometimes diverted, by the accidental circumstances of the times, and by the prudence, or possibly by the caprice, of the monarch. His ministers were permitted to signify the intentions of their master in the various language which was best adapted to their respective principles; and he artfully balanced the hopes and fears of his subjects, by publishing in the same year two edicts ; the first of which enjoined the solemn observance of Sunday,and the second directed the regular consultation of aruspices. (P.No: 296,History of Christianity By Edward Gibbon)

 கிறிஸ்மஸ்:

        ஏசுவின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் டிசம்பர் 25 சூரிய கடவுள் வழிபாட்டாளர்களின் சூரிய கடவுளின் பிறந்த நாளாக கொண்டாப்பட்டு வந்தது.இது ரோமானியர்களிடம் இருந்து யூதர்களிட நுழைந்த வழிகேடாகும். பழைய ஏற்பாட்டில் பின் வரும் செய்தி இடம் பெறுகிறது
                
                  என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள். (எசக்கியேல் 8:14)

                 உண்மையில் பைபிலை ஆய்வு செய்தால் ஏசுவின் பிறந்த மாதம் நிச்சயம் டிசம்பர் அல்ல என்பதை அருதியிட்டு கூற்வியலும்.

       அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். (லூக்கா 2:7-9)

           அதாவது வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் காத்து கொண்டிருப்பது என்பது எல்லாம் நிச்சயம் அறுவடை முடிந்த பிறகு மழைகாலத்திற்கு முன்பாக செய்யும் செயலாகும். அதாவது கால்நடைகள் அறுவடைக்கு பின் எஞ்சியவற்றை உண்டு அங்கேயே தனது கழிவுகளை விட்டுவிடும். இதனால் அந்த வயல்வெளி வளமுடையாதாக மாறும். இதனால்தான் மெய்பர்கள் தங்களது கால்நடைகளை வய்ல்வெளிகளில் கட்டி இராத்தங்குவார்கள். இதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் ஏசு பிறந்தது டிசம்பர் அல்ல என்பதை கூறவியலும். ஆனால் இன்றும் தாமூஸிற்கு டிசம்பர் 25 அன்று விழா எடுக்கப்படுகிறது கிறித்தவ தேவாலயங்களில் கிறிஸ்மஸ் என்ற பெயரில்.
இஸ்தரும் ஈஸ்டர் முட்டைகளும்:
         இத்தொடரின் முற்பகுதியில் புனித ஆவி என்ற பெண்தெய்வ வழிபாடு குறித்து கண்டோம். அதன் ஒரு அத்தாட்சியாக இன்று கிறித்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை ஏசு உயிர்தெழுந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஈஸ்டர் என்பது இஸ்தர் என்ற பெண் தெய்வத்தின் உயிர்த்தெழுந்த நாளாக பாபிலோனியர்கள் கொண்டாடி வந்தனர். 
              Lucian thinks Astarte was the Moon, which was one of the characters of this universal Goddess, and his opinion is confirmed by the Assyrian name of the moon being Ishtar. Even the word star is thought to be related to Astarte.(P.No:541 Vol 2, History of Herodotus By GEORGE RAWLINSON, M.A)  
                  
             ASHTORETH : The name given in the Old Testament to the old Semitic mother-goddess, called in Phenicia, Ashtarte; in Babylonia, Ishtar; and in Arabia, Athtar. (For her worship among the Hebrews, see Astarte.) Ashtoreth is derived from Ashtarte by a distortion after the analogy of " Bosheth". (Jewish Encyclopedia vol 2 by Isidore Singer). 
            
         Macrobius (Saturn, i. 30) says, "to the great God Adad 'the one' is added the Goddess Atargatis ; these being the Sun and Harth ; and her statue stands on lions, as the Phrygians represent the Mother-Goddess Earth." (See below, p. 54-7.) From this Adad or Hadad is derived the Syrian name of Ben-Hadad (1 Kings XV. 18). On the Goddess Earth, and the bearded Apollo (Baal, or the Sun) at Hierapolis, see Macrobius (Saturn i.19). Both the Syrians and Assyrians "considered the dove a Goddess" (Diodor, ii. 4, 20; Athenag. Legat.); and the fable of the Egg that fell from heaven into the Euphrates, and was hatched by two doves, appears to be a variation of that of Semiramis, and relates also to Astarte. (P.No:544 Vol 2, History of Herodotus By GEORGE RAWLINSON, M.A)   
        பாபிலோனியர்கள் இஸ்தர் சுவர்கத்தில் இருந்து விழுந்த முட்டையில் இருந்து மறுமுறை உயிர்த்தெழுந்ததாக நம்பினர். அதை குறிப்பிடும் வகையில் அவர்கள் அன்று வண்ண முட்டைகளை படைத்து கொண்டாடி வந்தனர். அதை அப்படியே காப்பி அடித்த கிறித்தவ உலகம் ஈஸ்டர் முட்டைகளை உருவாக்கி ஈஸ்டரை சிறப்பிக்கின்றனர். அதாவது அந்த வண்ண முட்டைகளில் இருந்துதான் ஏசு உயிர்த்தெழுந்தார் என்று கூறுகிறார்களா?????   
       Easter: Springtime sacrificial festival named for the Saxon Goddess Eostre, or Ostara, a northern form of Astarte. Her sacred month was Eastremonath, the Moon of Eostre. Saxon poets apparently knew Eostre was the same Goddess as India's Great Mother Kali. Beowulf spoke of "Ganges' waters, whose flood waves ride down into an unknown sea near Eostre's far home." 2 The Easter Bunny was older than Christianity; it was the Moon hare sacred to the Goddess in both eastern and western nations. Recalling the myths of Hathor-Astarte who laid the Golden Egg of the sun, Germans used to say the hare would lay eggs for good children on Easter Eve.(P.No: 267, The Woman's Encyclopedia of Myths and Secrets by Barbara G.Walker)
     அதாவது மிக எளிமையாக புரிந்து கொள்வதென்றால் ஏசுவிற்கு ஒரு திருநாளாக சூரிய கடவுளின் பிறந்த தினம் கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுகின்றனர். புனித ஆவி என்ற பெண் தெய்வத்தை வழிபட ஈஸ்டர் திருநாள். ரோமானியர்களின் பல தெயவ நம்பிக்கை கிறித்தவத்தை முழுமையாக ஆக்கரமித்தது. யூதர்களின் ஓரிறை கொள்கைக்கு எதிரான பல தெய்வ வணங்கிகளான ரோமானியர்கள் சூழ்ச்சி கிறித்தவர்களின் ஆண்மையின்மையால் வெற்றிப்பாதையை நோக்கி நகரத் துவங்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.

எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண                    உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண

No comments:

Post a Comment