உடைந்த சிலுவை
கிறித்தவ நூல்களின் அடிப்படையில் இஸ்லாம் மீது எழுப்பப்படும் விமர்சனங்களுக்கான பதில்கள்
இந்த தொடரில் கட்டுரையாளர் கிறித்தவ நம்பிக்கை உருவாக யார் காரணம் என்றொரு தலைப்பிட்டு சில கருத்துகளை answeringIslam.com என்ற கிறித்தவர்களால் நடத்தப்படும் இணையத்தின் கட்டுரையை மொழிபெயர்த்துள்ளார். இதற்கு முன்பும் பல கட்டுரைகள் கிறித்தவ மிசனரிகளின் வாந்திதான் என்பதை நிறுவியுள்ளோம். ஆனால் இம்முறை ஒரு சிறிய மாற்றம் கட்டுரையாளரே அதை ஏற்றுகொண்டது. ஆக இந்த கட்டுரையில் பதியப்பட்ட கேள்விகள் அனைத்தும் கிறித்தவ நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான். அதுவும் குறிப்பட்ட கிறித்தவ பிரிவினரின் நம்பிக்கைகை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த தலைப்பிற்கு பதிலான “அல்லாவின் நாட்டத்தால்தான் கிறித்தவ நம்பிக்கை உருவானது” என்பதே கட்டுரையாளரின் ஒவ்வொரு கேள்விக்கும் போதுமான பதிலாகும். ஆனால் இந்த தொடரானது கிறித்தவம் குறித்த மற்றோரு பரிமாணத்தை விளக்க எனக்கொரு சிறந்த சந்தர்ப்பமாக கருதுகிறேன். இன்ஷா அல்லாஹ் இந்த தொடர் பல பாகங்களாக வர உள்ளதால் ஒவ்வொரு தொடரையும் வாசகர்கள் கவனித்து வாசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.......மேலும் வாசிக்க
இந்த கட்டுரையானது கிறித்தவர்களின் நம்பிக்கையின் மையமான பைபில் குறித்து ஒரு சிறு வெளிச்சத்தை பாய்ச்சவுள்ளது. இதுவரை நாம் பல கட்டுரைகளை கிறித்தவம் குறித்து பல இணையங்களில் கண்டுள்ளோம். ஆனால் இந்த கட்டுரை சிறிது வேறு பட்டது. அதாவது பல கிறித்தவ எதிர்ப்பு இனையங்கள் பழைய ஏற்பாடு குறித்து விமர்சிக்கும் போது அதில் உள்ள கருத்து முரண்களையும் ஆபாசங்களையும் முன்வைக்கும் அதன் மூலம் பைபிலின் பழைய ஏற்பாடு இறைவேதம் இல்லை என்று வாதிக்கும். இந்த முரண்கள் ஏன் இறைவேதம் என்று கூறக்கூடியதில் நுழைந்த்து என்பதை ஆய்வு செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம். ஆதாவது பழைய ஏற்பாடின் வரலாற்றை அறிவதுதான் அதற்கு ஓரே வழி என்று எண்ணி அதே பாதையில் பயணித்து ஆய்ந்து அறிந்த வற்றை இங்கு வாசகர்களுக்கு கட்டுரையாக தந்துள்ளேன்.மேலும் வாசிக்க
சென்ற தொடரில் நாம் பைபில் பழைய ஏற்பாட்டின் மூல ஆதாரங்களில் ஒன்றான செப்டகண் குறித்தும் அது குறித்த வரலாற்று தகவல்கள் எப்படி முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இருக்கிறது என்பதை கண்டோம். அதுவல்லாத சில மூலங்களையும் அடிப்படையாக கொண்டாதுதான் பழைய ஏற்பாடு என்பதாக கிறித்தவ உலகம் இன்று கூறிகொண்டுள்ளது. அவை குறித்து இந்த தொடரில் காண்போம். மேலும் வாசிக்க
சீர்திருத்தத் திருச்சபைகள் (Protestantism, புரட்டஸ்தாந்தம்) என்பது கிபி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை தொடர்ந்து தொடங்கப்பட்ட கிறித்தவச் சபைகளைக் குறிக்கும். சீர்திருத்தச் சபைகளின் கோட்பாடுகள் விவிலியத்தின் உள்ளடக்கத்துக்கு ஏனையவர்கள் கொடுத்துள்ள விளக்கங்களை பின்பற்றாது விவிலியத்தை நேரடியாக பின்பற்றுகிறது. அது மார்ட்டின் லூதர் புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் என அழைக்கப்பட்டார். விவிலியத்தை கடவுளை அறிவதற்கான ஒரே வழியாகவும், மீட்படைய மனித செயல்களால் அல்ல, மாறாக கடவுளின் கருணையால் மட்டுமே முடியும் எனவும் போதிக்கிறது. மேலும் வாசிக்க
நாம் கிறித்தவ நம்பிக்கைக்கு யார் காரணம் என்ற தலைபிட்ட கட்டுரைக்கு மறுப்பாக இந்த எதிர்தொடர் கட்டுரையை தொடராக தந்து கொண்டிருக்கிறோம். சென்ற தொடர்களில் பழைய ஏற்பாடு குறித்து பதிவு செய்தோம். இந்த தொடரில் புதிய ஏற்பாடு குறித்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ். நாம் சென்ற பழைய ஏற்பாடு குறித்த ஆய்வு தொடரில் கையாண்ட அதே முறையையே இந்த தொடருக்கும் பயன்படுத்த வுள்ளோம். அதாவது புதிய ஏற்பாடின் மூலங்களின் ஆசிரியர் குறித்து ஆய்வு செய்ய வெளிப்புற ஆதாரங்கள் மற்றும் உள் ஆதாரங்களை ஒப்பீடாக வழங்க உள்ளோம். இன்ஷா அல்லாஹ். மேலும் வாசிக்க
நாம் சென்ற தொடரில் புதிய ஏற்பாடின் மூல ஏடுகள் குறித்து பார்த்தோம். இந்த தொடரானாது புதிய ஏற்பாட்டின் ஆகமங்களின் பெயர்கள் இடம்பெறும் பண்டைய ஏடுகள் குறித்த சிறிய அறிமுகமாகும். இந்த ஏடுகளில் இடம்பெறும் ஆகமங்களின் பெயர்களைக் கொண்டு நாம் ஏசுவின் காலத்திற்கு பிறகு மக்களின் பயன்பாட்டில் குறிப்பாக சர்சுகளில் வாசிக்கப்பட்டு வந்த ஆகமங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். இது புதிய ஏற்பாட்டின் தோற்றம் குறித்த தெளிவான பார்வையை வழங்கும் இன்ஷா அல்லாஹ். மேலும் வாசிக்க
சென்ற தொடரில் புதிய ஏற்பாட்டின் ஆகமங்களில் எண்ணிக்கை குறித்த முரண்பட்ட நிலையை எடுத்து கூறினோம். இந்த தொடரில் இந்த ஆகமங்களின் உன்மைதன்மை குறித்தும் இதை இயற்றியவர்கள் உன்மையில் ஏசுவை கண்டவர்களா? அல்லது ஏசுவின் சீடர்களை கண்டவர்களா என்பதையும் புதிய ஏற்பாட்டில் காணப்படும் நான்கு சுவிஷேசங்களின் நிலையையும் ஆய்ந்து அறிவோம் இன்ஷா அல்லாஹ். மேலும் வாசிக்க
இந்த கடிதமானது எருசலேமில் இருந்து 12 மைல் தொலைவில் உள்ள மார் சபா கிறித்தவ மடாலயத்தில் இருந்து மார்டான் ஸ்மித் என்ற அறிஞரால் 1958ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது மாற்கால் தோற்றுவிக்கப்பட்ட அலெக்ஸாண்டிரியாவின் திருச்சபையில் பயிற்றுவிப்பாளராக கிபி 200களில் பணியாற்றிய அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் அவர்களால் தியோடோர் என்பவருக்கு வரையப்பட்ட கடிதமாகும். இந்த கடிதமானது இக்னேஷியஸ் அவர்களின் கடிதங்களின் 17ம் நூற்றாண்டின் பதிப்பின் பின்பகுதியில் எழுத்து வடிவிலானதாக மார்டான் ஸ்மித் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதை புகைபடமும் எடுத்து கொண்டார் மார்டான் ஸ்மித். இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட மார்டான் ஸ்மித் அவர்கள் 1973 தனது ஆய்வு முடிவுகளை Clement of Alexandria and a Secret Gospel of Mark (Harvard University Press) என்ற புத்தகமாக வெளியிட்டார். இந்த ஆய்வு முடிவுகள் கிறித்தவ உலகத்தை அதிர்ச்சியில் உரையவே செய்துவிட்டது. அந்த கடிதத்தில் அப்படி என்னதான் உள்ளது. மேலும் வாசிக்க
ஏசுவினால் வென்றெடுக்கப்பட்ட ஆரம்ப கால யூதர்களை முஸ்லிம்களாக குர்ஆன் குறிப்பிடுகிறது. உண்மையில் ஏக இறைவனை ஏற்று அவர்கள் ஏசுவை இறைத்தூதராக ஏற்றிருக்கும் நிலையில் அவர்கள் முஸ்லிம்கள்தான் (முழுமையாக அல்லாஹ்விற்கு வழிபட்டவர்கள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் கிறித்தவ உலகம் கூறும் பிரிவினர்களில் யார் என்பதில்தான் குழப்பம். அவர்கள் யார் என்று அறிந்து கொள்வற்கு கிறித்தவ அறிஞர்கள் எடுத்து கொள்ளும் சாதனங்கள்தான் விசித்திரமானதாக உள்ளது. இன்றும் answeringislam.com போன்ற வளைத்தளங்கள் இதே முறையை கையாள்கின்றன. அதாவது ஆரம்ப கால தேவாலய பிதாக்களின் எதிர்வாதங்களின் அடிப்படையிலான புரிதல்கள்தான் அவை அனைத்தும். ஆனால் எதிர்வாதங்களை அடிப்படையாக கொண்டு ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கொள்கையை வரையறை செய்வது என்பது இருட்டில் கருப்பு பூனையை தேடுவதற்கு நிகரானது.மேலும் வாசிக்க
ஏசு மரணம் குறித்தும் ஏசுவின் உயிர்தெழுதல் குறித்தும் கூறப்படுவதாக கிறித்தவ உலகம் கூறுகிறது. ஆனால் உன்மையில் ஜோசப்பஸின் பல பிரதிகளை ஆய்வு செய்த ஜேம்ஸ் டன் போன்ற பல அறிஞர்கள் பின்வருமாறு கூறுகிறார்.
Josephus the Jewish historian in his Jewish Antiquities (written in the 90s) refers to Jesus twice. The first passage has clearly been subject to Christian redaction, but there is a broad consensus3 that Josephus wrote something like the following:
At this time there appeared Jesus, a wise man. For he was a doer of startling deeds, a teacher of people who received the truth with pleasure. And he gained a following both among many Jews and among many of Greek origin. And when Pilate, because of an accusation made by the leading men among us, condemned him to the cross, those who had loved him previously did not cease to do so. And up until this very day the tribe of Christians (named after him) has not died out (Ant. 18.63-64). (James Dunn, Jesus remembered P.No:141)
அதாவது 1.ஏசு குறித்து கிறிஸ்து என்ற குறிப்பு இல்லை. 2.ஏசுவின் உயிர்தெழுதல் குறித்தும் இல்லை. 3.ஆனால் கிறித்தவர்கள் குறித்த குறிப்பு இடம்பெறுகிறது. மேலும் வாசிக்க
ஏசுவின் சிலுவை மரணத்தை மறுக்கும் நேரடி வரலாற்று ஆதாரமாக திகழும் பல ஏடுகளை கினாஸ்டிக் ஏடுகள் என்றும் அப்போகிரிப்பா என்றும் இன்றை கிறித்தவ உலகம் தள்ளிவிட்டது. ஆனால் இவை தள்ளப்பட்டதற்கு, எந்த சிலுவை மரணம் கிறித்தவத்தின் முதுகெழும்பாக உள்ளதோ அதை உடைத்தது என்பதுதான் காரணம். மேலும் வாசிக்க
சென்ற தொடர்களில் கிறித்தவர்களின் வேதமான பைபில் குறித்து ஆய்வு செய்தோம். அதில் இருந்த முரண்பாடுகள் மற்றும் வரலாற்று பிழைகளையும் கண்டோம். ஏன் அவர்களின் கொள்கையில் ஒன்றான ஏசுவின் சிலுவை மரணத்தை குறித்தும் அதன் குளறுபடிகளையும் அறிந்தோம். வரலாற்று குறிப்புகளில் ஏசுவின் சிலுவை மரணம் குறித்த செய்திகளில் கிறித்தவர்களின் திருகுதாளங்களையும் கண்டோம். வரும் தொடரில் அவர்களின் சில நம்பிக்கைகளையும் அதன் மூலம் எது என்பதையும் ஆய்வு செய்வோம். மேலும் வாசிக்க
இன்றிருக்கும் கிறித்தவ மிசனரிகள் ஒரு வாதத்தை முன்வைத்து ஆள்சேர்க்கு வேலையில் ஈடுபட்டு வருகிறது. அதாவது இன்றிருக்கும் பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகம்தான் இஸ்லாம் கூறும் மோசேக்கு இறங்கிய தவ்ராத் என்னும் தோரா என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். ஆனால் நாம் உடைந்த சிலுவை தொடர் 4 ல் பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு புத்தகத்தையும் அந்த மொழியியல் மற்றும் வரலாற்றின் குறிப்புகளின் அடிப்படையில் அந்த 5 புத்தகமும் மோசேவின் பிற்காலத்தை சேர்ந்த் பெயர் அறியப்படாத ஒருவரால் இயற்றப்பட்டது என்பதை நிறுவியுள்ளோம். குர்ஆனும் நபிகளாரின் பொன்மொழிகளான ஹதீஸ்களும் என்ன கூறுகிறது என்பதை காண்போம். மேலும் வாசிக்க
"என்னையும், என் தூதரையும் நம்புங்கள்!' என்று (ஈஸாவின்) சீடர்களுக்கு நான் அறிவித்த போது "நம்பிக்கை கொண்டோம்! நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்விற்கு கட்டுபட்டவர்கள்) என்பதற்கு நீயே சாட்சியாக இருப்பாயாக!'' என அவர்கள் கூறினர்.(அல் குர் ஆன் 5:111).
அல்லாஹ் கூறுவது இதைத்தான் யார் ஈசா(அலை) அவர்கள் காலத்தில் அல்லாஹ்வை ஏக இறைவனாக ஏற்று, ஈசா(அலை) அவர்களை தூதராக ஏற்றார்களோ அவர்கள் முஸ்லீம்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படி பட்ட கூட்டத்தினர் குறித்தும் இஸ்லாம் குறிப்பிடும் நம்பிக்கை உடைய மக்கள் குறித்தும் உடைந்த சிலுவை பாகம் 9,10,11 தெளிவாக விளக்கியுள்ளோம். மேலும் வாசிக்க
இந்த தொடரில் இன்றிருக்கும் பிராட்டட்டண்ட்களால் ஏற்றுக்கொள்ளப்ட்ட தற்கால பைபிள் மொழியாக்கத்தின் மூலமாக கருத்தப்படும் மசோரெடிக் ஏடுகள் குறித்து காணவிருக்கிறோம்.இன்று இஸ்லாமியர்கள் பலர் தங்களது பதிவுகளில் பைபிளின் மூல மொழியான ஹீப்ருவில் இருக்கும் பைபிளின் மூல எழுத்துப்பிரதிகள் எதுவும் இருக்கிறதா என்று கேட்கின்றனர். அதற்கு பதிலளிக்க நுழைந்த தற்கால மிசனரிகள் ஆம் ஹீப்ருவில் இருக்கும் பைபிள் இன்றும் இருக்கிறது என்று கதை அளந்து வருகின்றன. அந்த பைபிளின் பழைய ஏற்பாட்டின் மூலமாக இருப்பது இந்த மசோரெடிக் ஏடுகள் தான். மேலும் வாசிக்க
இப்போது கிறித்தவர்கள் கொண்டாடும் வேதாகமத்தின் மறு பகுதியான புதிய ஏற்பாட்டிற்கு ஒவ்வொரு நூற்றாண்டிலும் எத்துனை துண்டு மூல பிரதி உள்ளது என்பதை பார்க்க போகிறோம். இந்த ஆய்வின் பெரும் பகுதி Kurt Aland and Barbara Aland ஆகியோரால் எழுதப்பட்ட THE TEXT of the NEW TESTAMENT : An Introduction to the Critical Editions and to the Theory and Practice of Modern Textual Criticism நூலின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல புதிய ஏற்பாட்டின் பணடைய கையெழுத்து பிரதிகளை கண்டறிந்து அதில் இருக்கும் விசயங்களையும் தங்களது மேற்குறிபிட்ட நூலின் மூலம் உலகின் வெளிச்சத்திற்கு கொண்டுவதவர்கள். Institute for New Testament Textual Research என்ற நிறுவனத்தை ஜெர்மனியில் உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடதக்கது. மேலும் வாசிக்க