பக்கங்கள் செல்ல

Thursday, November 30, 2023

அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா???

  بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

 
        குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகள் மற்றும் கிறித்தவ மிசனரிகளின் விமர்சனங்களுக்கான மறுப்பை நாம் தொடராக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்கள் குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் விமர்சனத்திற்கான பதிலை இந்த கட்டுரையில் காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ்.

 
ஆதாரம் 1:
ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.
………………….எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்யுன்) அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128 , 129) (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது. இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், '(அவ்விரு வசனங்கள்) 'குஸைமா'(ரலி) அல்லது 'அபூ குஸைமா'(ரலி) அவர்களிடம் இருந்தன' என (ஐயப்பாட்டுடன்) அறிவிக்கப்பட்டுள்ளது. (ஸஹீஹ் புகாரி 4679, மேலும் பார்க்க ஸஹீஹ் புகாரி 4986,4989,7191)

ஆதாரம் 2:
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
        நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். (ஒரு வழக்கின் போது) அவரின் சாட்சியத்தை இரண்டு மனிதர்களின் சாட்சியத்திற்குச் சமமாக நபி(ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள்.  அந்த இறைவசனம் இதுதான்: அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23) (ஸஹீஹ் புகாரி 2807,மேலும் பார்க்க:4049, 4784, 4988)

ஆதாரம் 3:

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ أَنَّ الْحَكَمَ بْنَ نَافِعٍ حَدَّثَهُمْ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ أَنَّ عَمَّهُ حَدَّثَهُ وَهُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ فَاسْتَتْبَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَقْضِيَهُ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَشْيَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ فَطَفِقَ رِجَالٌ يَعْتَرِضُونَ الْأَعْرَابِيَّ فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ وَلَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ فَنَادَى الْأَعْرَابِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسِ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَ الْأَعْرَابِيِّ فَقَالَ أَوْ لَيْسَ قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَقَالَ الْأَعْرَابِيُّ لَا وَاللَّهِ مَا بِعْتُكَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَى قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ هَلُمَّ شَهِيدًا فَقَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بَايَعْتَهُ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ بِمَ تَشْهَدُ فَقَالَ بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ بِشَهَادَةِ رَجُلَيْنِ

உமாரா பின் குஸைமா தனது தந்தையின் சகோதரி கூறியதாக கூறியதாவது:
        நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி (அதற்கான கிரயத்தைப் பெறுவதற்காக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக நடந்து வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத மக்கள் அந்தக் கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி நபிகள் நாயகத்தை உரத்த சப்தத்தில் அழைத்து நீங்கள் இதை வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன் என்று கூறினார். உடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்றார்கள். நான் தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தக் கிராமவாசி அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை உங்களுக்கு விற்கவில்லை என்றார். இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது கிராமவாசி இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார். அப்போது குஸைமா என்ற நபித்தோழர் கிராமவாசியைப் பார்த்து நீ நபிகள் நாயகத்திடம் விற்றாய் என்று சாட்சி கூறுகிறேன் என்றார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குஸைமாவிடம் நீ எப்படி சாட்சி கூறினாய் என்று கேட்டார்கள். உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி கூறினேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்குச் சமமாக ஆக்கினார்கள். (அபூதாவூத் 3130)

மேற்குறிபிட்ட ஆதாரங்களின் ஊடாக இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதங்கள்:

வாதம் 1:
அல்குர்ஆன் 9:128-129, 33:23 ஆகிய வசனங்கள் ஒரே சாட்சியினால்தான் கூறப்பட்டுள்ளது, எனவே அது குர்ஆன் தொகுப்பு குழுவிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு மாற்றமான ஒன்று. எனவே இம்மூன்று வசனங்களும் ஆதாரமற்றவை.

வாதம் 2:
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தின் முதல் குர்ஆன் தொகுப்பின் போது ஒரு வசனம் விடுபட்டுவிட்டது அதனை மீண்டும் உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தில் தான் ஸைத்(ரலி) கணடறிந்தார்கள். எனவே முதல் தொகுப்பு அரைகுறையான தொகுப்பு.

வாதம் 3:
ஆதாரம் 3ன் அடிப்படையில் காணும் போது நிகழிடத்தில் இல்லாத குஸைமா(ரலி) பொய்சாட்சியம் பகர்ந்துள்ளார். எனவே அல்குர்ஆன் 9:128-129, 33:23 ஆகிய வசனங்கள் குறித்த அவரது சாட்சியம் நம்பகமற்ற பொய் சாட்சி எனவே அம்மூன்று வசனங்களும் குர்ஆனின் வசனங்களாக இருக்க முடியாது என்பது இஸ்லாமோஃபோபுகள் மற்றும் கிறித்தவ மிசனரிகளின் வாதம்.



        அல் குர்ஆன் 9:128-129 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) அவர்கள் மட்டும்தான் சாட்சி என்பது போல் அவர்கள் முன்வைக்கும் ஆதாரத்தில் தெரிந்தாலும் மொழிபெயர்ப்பாளர்கள் அதில் “எழுதப்பட்டு” என்ற குறிப்பை அடைப்புக்குறிக்குள் இட்டுள்ளதை காணமுடிகிறது. அதாவது எழுத்து வடிவில் குஸைமா(ரலி) அவர்களிடம் மட்டுமே இருந்தது என்பதை குறிக்கும்படியாக அவர்கள் கூறியுள்ளனர். அதற்கான காரணம் பின்வரும் ஆதாரங்கள் தான்.

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺇﺑﺮاﻫﻴﻢ ﺑﻦ ﺳﻌﺪ، ﻋﻦ اﻟﺰﻫﺮﻱ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﻴﺪ ﺑﻦ اﻟﺴﺒﺎﻕ، ﺃﻥ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ، ﺣﺪﺛﻪ ﻗﺎﻝ: " ﻓﻘﺪﺕ ﺁﻳﺔ ﻛﻨﺖ ﺃﺳﻤﻊ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﺮﺃ ﺑﻬﺎ، ﻓﺎﻟﺘﻤﺴﺘﻬﺎ، ﻓﻮﺟﺪﺗﻬﺎ ﻋﻨﺪ ﺧﺰﻳﻤﺔ ﺑﻦ ﺛﺎﺑﺖ {ﻟﻘﺪ ﺟﺎءﻛﻢ ﺭﺳﻮﻝ ﻣﻦ ﺃﻧﻔﺴﻜﻢ   (اﻟﺘﻮﺑﺔ :128) اﻵﻳﺔ، ﻓﺄﻟﺤﻘﺘﻬﺎ ﻓﻲ ﺳﻮﺭﺗﻬﺎ

 ஸைத் இப்னு ஸாபித்(ரலி) “நான் ஒரு ஆயத்தை விட்டுவிட்டேன், அதனை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஓத கேட்டுள்ளேன், அதனை தேடினேன், அது குஸைமா இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் பெற்றுக்கொண்டேன்., ‘நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்.(அத் தவ்பா:128)’ என்ற அந்த ஆயத்தை அந்த சூராவில் சேர்த்துக்கொண்டேன்.” என்று கூறினார்கள் (முஸ்னத் அபீதாவூத் அல் தயாலிசி 612)

ஆதாரம் 2: உபை இப்னு கஃஅப்(ரலி) அவர்களது சாட்சியம்

حَدَّثَنَا أَبِي، ثنا يَحْيَى بْنُ الْمُغِيرَةِ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنِ الرَّبِيعِ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ " أَنَّهُمْ جَمَعُوا الْقُرْآنَ، فَلَمَّا انْتَهَوْا إِلَى هَذِهِ الْآيَةِ: {ثُمَّ انْصَرَفُوا صَرْفَ اللَّهُ قُلُوبَهُمْ} [التوبة: 127] فَظُنُّوا آخِرَ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ فَقَالَ لَهُمْ أُبَيُّ بْنُ كَعْبٍ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِي بَعْدَ هَذَا آيَتَيْنِ: {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ} [التوبة: 128] إِلَى قَوْلِهِ: {لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ} [التوبة: 129]

அபூ ஆலியா,  உபை இப்னு கஃஅப்(ரலி) வழியாக அறிவிப்பதாவது:              அவர்கள் குர்ஆனை தொகுத்து கொண்டிருக்கையில், “பிறகு அவர்கள திரும்பி விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான். (அத் தவ்பா:127)” என்ற ஆயத்தை அடைந்த போது, இதுதான் குர்ஆனின் இறுதி ஆயத் என்று எண்ணினார்கள். அப்போது உபை இப்னு கஃஅப், “இதன் பிறகு நபி(ஸல்) அவர்கள் இரண்டு ஆயத்களை என்னிடம் ஓதிக்காட்டியுள்ளார்கள், அவை ‘நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்.( (அத் தவ்பா:128)’ என்பதிலிருந்து ‘அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி" என்று நீர் கூறுவீராக!’ (அத் தவ்பா:12) வரை” என்று கூறினார்கள் (தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்தம் 10172)

மேற்குறிபிட்ட செய்தியில் குஸைமா(ரலி) அவர்கள் மட்டும் இந்த வசனத்திற்கு சாட்சியாக இருக்கவில்லை. மாறாக ஸைத் இப்னு ஸாபித்(ரலி), உபை இப்னு கஃஅப்(ரலி) ஆகியோரும் இந்த 9:128-129 வசனத்திற்கு சாட்சியாக இருந்துள்ளனர். எனவே ஒற்றை சாட்சியத்தின் அடிப்படையில் இந்த வசனங்கள் குர்ஆனில் இணைக்கப்பட்டுள்ளது என்பது எல்லாம் அரைவேக்காட்டு வாதம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குஸைமா(ரலி) அவர்களை தவிர யாரிடமும் அந்த வசனம் இல்லை என்பது எழுத்து பிரதியாக இல்லை என்பதைத்தான் குறிக்கும் என்பதாலேயே மொழிப்பெயர்ப்பாளர் “இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை”  என்று அடைப்புக்குறியுடன் மொழியாக்கம் செய்துள்ளார்.


9:128-129 வசனம் எப்படி பலரால் அறியப்பட்டிருந்ததோ அதுபோலத்தான் 33:23 வசனமும் பலரால் அறியப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரத்தை இங்கு பதிவிடுகிறோம்.

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்
நாங்கள் குர்ஆனுக்குப் பிததிகள் எடுத்தபோது 'அல்அஹ்ஸாப்' எனும் (33 வது) அத்தியாயத்தில் ஒரு வசனம் காணவில்லை. அதனை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். அதை நாங்கள் தேடியபோது அது குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:) 'அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெயப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் உயிரை அர்ப்பணிக்க வேண்டுமென்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்ற தக்க தருணம்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23) உடனே நாங்கள் அ(ந்த வசனத்)தை குர்ஆன் பிரதியில் அதற்குரிய அத்தியாயத்தில் இணைத்துவிட்டோம். (ஸஹீஹ் புகாரி 4988)

  ஆதாரம் 2: அனஸ்(ரலி) அவர்களது சாட்சியம்

 ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺣﺎﺗﻢ ﺑﻦ ﻧﻌﻴﻢ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﺣﺒﺎﻥ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﻋﻦ ﺳﻠﻴﻤﺎﻥ ﺑﻦ اﻟﻤﻐﻴﺮﺓ، ﻋﻦ ﺛﺎﺑﺖ، ﻋﻦ ﺃﻧﺲ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﻋﻤﻲ ﺃﻧﺲ ﺑﻦ اﻟﻨﻀﺮ: ﺳﻤﻴﺖ ﺑﻪ. ﻭﻟﻢ ﻳﺸﻬﺪ ﺑﺪﺭا ﻣﻊ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻜﺒﺮ ﺫﻟﻚ ﻋﻠﻴﻪ ﻭﻗﺎﻝ: «ﺃﻭﻝ ﻣﺸﻬﺪ ﺷﻬﺪ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻏﻴﺒﺖ ﻋﻨﻪ، ﺃﻣﺎ ﻭاﻟﻠﻪ ﻟﺌﻦ ﺃﺭاﻧﻲ اﻟﻠﻪ ﻣﺸﻬﺪا ﻓﻴﻤﺎ ﺑﻌﺪ ﻟﻴﺮﻳﻦ اﻟﻠﻪ ﻣﺎ ﺃﺻﻨﻊ» ﻗﺎﻝ: «ﻭﻫﺎﺏ ﺃﻥ ﻳﻘﻮﻝ ﻏﻴﺮﻫﺎ، ﻓﺸﻬﺪ ﻣﻊ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻮﻡ ﺃﺣﺪ ﻣﻦ اﻟﻌﺎﻡ اﻟﻤﻘﺒﻞ، ﻓﺎﺳﺘﻘﺒﻠﻪ ﺳﻌﺪ ﺑﻦ ﻣﻌﺎﺫ» ﻓﻘﺎﻝ: ﻳﺎ ﺃﺑﺎ ﻋﻤﺮﻭ «ﺃﻳﻦ؟» ﻗﺎﻝ: «ﻭاﻫﺎ ﻟﺮﻳﺢ اﻟﺠﻨﺔ، ﺃﺟﺪﻫﺎ ﺩﻭﻥ ﺃﺣﺪ، ﻓﻘﺎﺗﻞ ﺣﺘﻰ ﻗﺘﻞ، ﻓﻮﺟﺪ ﻓﻲ ﺟﺴﺪﻩ ﺑﻀﻊ ﻭﺛﻤﺎﻧﻮﻥ ﻣﻦ ﺑﻴﻦ ﻳﻌﻨﻲ ﺿﺮﺑﺔ، ﻭﺭﻣﻴﺔ، ﻭﻃﻌﻨﺔ» ﻓﻘﺎﻟﺖ ﻋﻤﺘﻲ اﻟﺮﺑﻴﻊ ﺑﻨﺖ اﻟﻨﻀﺮ ﺃﺧﺘﻪ: ﻓﻤﺎ ﻋﺮﻓﺖ ﺃﺧﻲ ﺇﻻ ﺑﺒﻨﺎﻧﻪ ﻗﺎﻝ: ﻭﺃﻧﺰﻟﺖ ﻫﺬﻩ اﻵﻳﺔ {ﻣﻦ اﻟﻤﺆﻣﻨﻴﻦ ﺭﺟﺎﻝ ﺻﺪﻗﻮا ﻣﺎ ﻋﺎﻫﺪﻭا اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻓﻤﻨﻬﻢ ﻣﻦ ﻗﻀﻰ ﻧﺤﺒﻪ ﻭﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﻨﺘﻈﺮ ﻭﻣﺎ ﺑﺪﻟﻮا ﺗﺒﺪﻳﻼ}[ اﻷﺣﺰاﺏ: 23] 

அனஸ்(ரலி)  “என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளவில்லை. அவர் (திரும்பி வந்தவுடன்) “இறைத்தூதர் அவர்களுடன் முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; மீண்டும் போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான்.” என்று கூறினார்கள். அனஸ்(ரலி) கூறினார்கள் “ இன்னும் சிலவற்றை அவர் கூற விரும்பினார். அடுத்த ஆண்டில் இறைத்தூதர் அவர்களுடன் உஹத் போரில் அவர்கள் கலந்துகொண்டார்கள். ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவருக்கெதிரில் வரக்(கண்டு), அபூ அம்ரே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். அதனை உஹுது மலையில் காண்கிறேன்" என்று கூறினார்.அங்கே கொல்லப்படும் வரை போரிட்டார்கள். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். அவரின் சகோதரி ரபியா பின்த் நள்ர்(ரலி) அவர்களைத்  தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரின் விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது.” என்று கூறினார்கள். மேலும் அனஸ்(ரலி) "அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ளனர்." என்கிற (திருக்குர்ஆன் 33:23) இறைவசனம் இறங்கியது.” என்று கூறினார்கள். (ஸுனன் அல் குப்ரா 8223, மேலும் பார்க்க திர்மிதி 3201)   

  ஆதாரம் 3: அபூதர்(ரலி) அவர்களது சாட்சியம்

ﺣﺪﺛﻨﻲ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺻﺎﻟﺢ ﺑﻦ ﻫﺎﻧﺊ، ﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻳﺤﻴﻰ اﻟﺸﻬﻴﺪ، ﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻮﻫﺎﺏ اﻟﺤﺠﺒﻲ، ﺛﻨﺎ ﺣﺎﺗﻢ ﺑﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ، ﻋﻦ ﻋﺒﺪ اﻷﻋﻠﻰ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺃﺑﻲ ﻓﺮﻭﺓ، ﻋﻦ ﻗﻄﻦ ﺑﻦ ﻭﻫﻴﺐ، ﻋﻦ ﻋﺒﻴﺪ ﺑﻦ ﻋﻤﻴﺮ، ﻋﻦ ﺃﺑﻲ ﺫﺭ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: " ﻟﻤﺎ ﻓﺮﻍ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻮﻡ ﺃﺣﺪ ﻣﺮ ﻋﻠﻰ ﻣﺼﻌﺐ اﻷﻧﺼﺎﺭﻱ ﻣﻘﺘﻮﻻ ﻋﻠﻰ ﻃﺮﻳﻘﻪ، §ﻓﻘﺮﺃ {ﻣﻦ اﻟﻤﺆﻣﻨﻴﻦ ﺭﺟﺎﻝ ﺻﺪﻗﻮا ﻣﺎ ﻋﺎﻫﺪﻭا اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ} (اﻷﺣﺰاﺏ: 23) 

"அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை விட்டுச் சென்ற உஹத் போரின் போது, பாதையில் கொல்லப்பட்டு கிடந்த முஸ்அப் அல் அன்சாரி அவர்களை கடந்து சென்றார்கள். அப்போது “அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெயப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். (அல் குர்ஆன் 33:23) என்ற வசனத்தை ஓதினார்கள்," என்று அபூதர்(ரலி) கூறினார்கள். (முஸ்தத்ரக் அல் ஹாகிம் 4905) 

    மேற்குறிப்பிட்ட செய்திகளை காணும் போது அல்குர்ஆன் 33:23 வசனம் இறங்கிய சூழல் முதற்கொண்டு நபித்தோழர்கள் அறிந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது. நபி(சஸல்) அவர்கள் அந்த வசனத்தை ஓதக்கேட்டதாக மேற்குறிபிட்ட நபித்தோழர்கள் சாட்சியம் பகர்கின்றனர்.  முன்பு கூறியது போலவே, 9:128-129 ஆகிய வசனங்களைப் போல அல் குர்ஆன்33:23 வசனமும் குஸைமா(ரலி) அவர்களிடம் மட்டுமே எழுத்து வடிவில் இருந்தது என்றே ஸஹீஹ் புகாரி 2807 ஹதீஸ் கூறுகிறது. எனவே  இந்த வசனம் குறித்து குஸைமா(ரலி) அவர்களது சாட்சி மட்டுமே இருப்பதாக கூறும் இஸ்லாமோஃபோபுகளின் வாதம் எந்த மதிப்பும் அற்றது என்பது உறுதியாகிறது. 

        இந்த இடத்தில் “உள்ளத்தில் இவ்வசனங்கள் பாதுக்காக்கப்பட்டிருந்தால் ஏன் தேட வேண்டும்? என்ற கேள்வி எழும். அதற்கான விடையை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள், தனது ஃபத்ஹுல் பாரி- ஸஹீஹ் புகாரி 4986 ஹதீஸின் விரிவுரையில் பின்வருமாறு விளக்குகிறார்.
وكأن المراد بالشاهدين الحفظ والكتاب , أو المراد أنهما يشهدان على أن ذلك المكتوب كتب بين يدي رسول الله صلى الله  عليه وسلم , أو المراد أنهما يشهدان على أن ذلك من الوجوه التي نزل بها القرآن . وكان غرضهم أن لا يكتب إلا من عين ما كتب   بين يدي النبي صلى الله عليه وسلم لا من مجرد الحفظ

 மேலும் இரண்டு சாட்சிகள் என்பதன் நோக்கம், ஒன்று மனனம் மற்றும் எழுத்து என்பதாகும், அல்லது அவர்கள் இருவரும், எது எழுதப்பட்டுள்ளதோ, அது இறைத் தூதர்(ஸல்) அவர்களின் கட்டளையின் கீழ் எழுதப்பட்டது என்று சாட்சியம் அளித்தார்கள் என்று பொருள். மேலும் அவர்கள் மனனம் செய்யப்பட்டிருந்தால் மட்டும் அதனை எழுதவில்லை, எதனை நபி(ஸல்) அவர்களது காலத்திலேயே எழுதப்பட்டதாகவும் பெறுகிறார்களோ அதையே எழுதுவது என்பதே அவர்களது குறிக்கோளாகும். 

            அதாவது மனனத்தில் இருப்பதை மட்டும் எழுதுவதற்காக இரு சாட்சிகள் என்ற அளவுகோல் முன்வைக்கப்படவில்லை. மாறாக எது மனனமும் செய்யப்பட்டு நபி(ஸல்) அவர்களது காலத்தில் நபி(சல்) அவர்களது உத்தரவின் பேரில் எழுதவும் பட்டதோ அதனையே குர்ஆன் தொகுப்பில் இணைத்தார்கள். அதனால்தான் ஸைத்(ரலி) தானே அதனை அறிந்திருந்த போதும், அந்த வசனத்தை தேடியதாக கூறுகிறார்.

அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தின் தொகுப்பு அரைகுறையானதா???

     அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தின் தொகுப்பு அரைகுறையானது என்ற இஸ்லாமோஃபோபுகளின் இந்த வாதத்திற்கான காரணம் புகாரி ஹதீஸ் 4988 ஆகிய ஹதீஸ்களில் அடைப்புக்குறியில் “(உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) என்ற குறிப்பை மொழிபெயர்ப்பாளர்கள் சேர்த்துள்ளனர். இவ்வாறு அல் குர்ஆன் 33:23 வசனம் சேர்க்கப்பட்ட்து உஸ்மான்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தில் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அல் குர்ஆன் 33:23 வசனம் தொடர்பாக இடம் பெறும் எந்த ஹதீஸிலும் அது எந்த காலத்தின் தொகுப்பு என்ற எந்த குறிப்பும் இடம் பெறவில்லை மாறாக பின்வரும் செய்திகள், இரண்டு வசனங்களின் சேர்க்கையும் அபூபகர்(ரலி) அவர்களது காலத்திலேயே நடைபெற்றது என கூறுகிறது…….(குறிப்பு: ஸஹீஹ் புகாரி 4679 ஹதீஸை படித்துவிட்டு இந்த செய்தியை படிக்கவும்)

ﺣﺪﺛﻨﺎ ﺣﻔﺺ ﺑﻦ ﻋﻤﺮ اﻟﺪﻭﺭﻱ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﻦ ﺟﻌﻔﺮ ﺃﺑﻮ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﻋﻦ ﻋﻤﺎﺭﺓ ﺑﻦ ﻏﺰﻳﺔ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﻋﻦ ﺧﺎﺭﺟﺔ ﺑﻦ ﺯﻳﺪ ,عن زيد بن ثابت ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ: " ﻋﺮﺿﺖ اﻟﻤﺼﺤﻒ ﻓﻠﻢ ﺃﺟﺪ ﻓﻴﻪ ﻫﺬﻩ اﻵﻳﺔ {ﻣﻦ اﻟﻤﺆﻣﻨﻴﻦ ﺭﺟﺎﻝ ﺻﺪﻗﻮا ﻣﺎ ﻋﺎﻫﺪﻭا اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻓﻤﻨﻬﻢ ﻣﻦ ﻗﻀﻰ ﻧﺤﺒﻪ ﻭﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﻨﺘﻈﺮ ﻭﻣﺎ ﺑﺪﻟﻮا ﺗﺒﺪﻳﻼ}[اﻷﺣﺰاﺏ: 23] ﻗﺎﻝ: ﻓﺎﺳﺘﻌﺮﺿﺖ اﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﺃﺳﺄﻟﻬﻢ ﻋﻨﻬﺎ ﻓﻠﻢ ﺃﺟﺪﻫﺎ ﻣﻊ ﺃﺣﺪ، ﺛﻢ اﺳﺘﻌﺮﺿﺖ اﻷﻧﺼﺎﺭ ﺃﺳﺄﻟﻬﻢ ﻋﻨﻬﺎ، ﻓﻠﻢ ﺃﺟﺪﻫﺎ ﻣﻊ ﺃﺣﺪ ﻣﻨﻬﻢ، ﺣﺘﻰ ﻭﺟﺪﺗﻬﺎ ﻣﻊ ﺧﺰﻳﻤﺔ ﺑﻦ ﺛﺎﺑﺖ اﻷﻧﺼﺎﺭﻱ ﻓﻜﺘﺒﺘﻬﺎ، ﺛﻢ ﻋﺮﺿﺘﻪ ﻣﺮﺓ ﺃﺧﺮﻯ ﻓﻠﻢ ﺃﺟﺪ ﻓﻴﻪ ﻫﺎﺗﻴﻦ اﻵﻳﺘﻴﻦ: {ﻟﻘﺪ ﺟﺎءﻛﻢ ﺭﺳﻮﻝ ﻣﻦ ﺃﻧﻔﺴﻜﻢ}  [اﻟﺘﻮﺑﺔ: 128] ، ﺇﻟﻰ ﺁﺧﺮ اﻟﺴﻮﺭﺓ  ﻗﺎﻝ: ﻓﺎﺳﺘﻌﺮﺿﺖ اﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﺃﺳﺄﻟﻬﻢ ﻋﻨﻬﺎ ﻓﻠﻢ ﺃﺟﺪﻫﻤﺎ ﻣﻊ ﺃﺣﺪ ﻣﻨﻬﻢ، ﺛﻢ اﺳﺘﻌﺮﺿﺖ اﻷﻧﺼﺎﺭ ﺃﺳﺄﻟﻬﻢ ﻋﻨﻬﻤﺎ ﻓﻠﻢ ﺃﺟﺪﻫﻤﺎ ﻣﻊ ﺃﺣﺪ ﻣﻨﻬﻢ ﺣﺘﻰ ﻭﺟﺪﺗﻬﻤﺎ ﻣﻊ ﺭﺟﻞ ﺁﺧﺮ ﻳﺪﻋﻰ ﺧﺰﻳﻤﺔ ﺃﻳﻀﺎ ﻣﻦ اﻷﻧﺼﺎﺭ ﻓﺄﺛﺒﺘﻬﻤﺎ ﻓﻲ ﺁﺧﺮ ﺑﺮاءﺓ "

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறியதாவது: நான் முஸ்ஹஃபை முதல் முறை சரி பார்த்தேன், அதில் "அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். தமது இலட்சியத்தை அடைந்தவரும் அவர்களில் உள்ளனர் (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றவில்லை [அல்குர்ஆன் 33:23]" என்ற வசனத்தை காணவில்லை. அதனை முஹாஜிர்களிடம் தேடினேன், யாரிடமும் கிடைக்கவில்லை. பிறகு அன்ஸாரிகளிடம் தேடினேன், குஸைமா இப்னு ஸாபித் அல் அன்ஸாரி அவர்களைத் தவிர யாரிடமும் கிடைக்கவில்லை. அதனை எழுதிக்கொண்டேன். பிறகு மீண்டும் ஒருமுறை அதனை சரிபார்த்தேன். அப்போது "உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். .[அல்குர்ஆன் 9:128] என்பதிலிருந்து அந்த சூராவின் முடிவு வரை உள்ள இரு வசனங்களை காணவில்லை. அதனை முஹாஜிர்களிடம் தேடினேன், யாரிடமும் கிடைக்கவில்லை. பிறகு அன்ஸாரிகளிடம் தேடினேன், அன்ஸாரிகளில் ஒருவரான குஸைமாவிடம் தவிர யாரிடமும் கிடைக்கவில்லை. அதனை பாரஅத் சூராவின் இறுதியில் சேர்த்துவிட்டேன்." (தாரிக் மதீனா 3/1001)

 எனவே மேற்குறிபிட்ட செய்தியை காணும் போது 9:128-129 மற்றும் 33:23 ஆகிய குர்ஆன் வசனங்கள் அபூபக்ர்(ரலி) குர்ஆன் தொகுப்பிலேயே இடம் பெற்றுவிட்டது என்பதை அறிய முடிகிறது. உஸ்மான்(ரலி) அவர்கள் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்த அபூபக்ர்(ரலி) காலத்து குர்ஆன் தொகுப்பினை பிரதி எடுத்தும், ஒவ்வொரு முறையும் ஒப்பிட்டு சரிபார்த்தும் இஸ்லாமிய ஆட்சியின் அரபு அல்லாத பகுதிக்கு அனுப்பினார்கள் என்று இந்த தொடரின் பல இடத்தில் பதிவு செய்துள்ளோம். எனவே அபூபக்ர்(ரலி) காலத்து குர்ஆன் தொகுப்பு முழுமையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை… 

        மேற்குறிபிட்ட ஆதாரங்களே அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) அவர்கள் மட்டுமே சாட்சியாக இல்லை என்பதை விளக்க.  அவர்கள் முன்வைக்கும் ஆதாரம் 3ன் அடிப்படையிலும் அது தொடர்பான ஹதீஸ்களின் அடிப்படையிலும் குஸைமா(ரலி) அவர்களது சாட்சி பொய்யானது அல்ல என்பதை நிறுவ சில சிந்தனைக்கான விஷயங்களை முன்வைக்கிறோம்.

1.குஸைமா(ரலி) அவர்களது சாட்சியை வாதி பிரதி வாதியாக இருந்த நபி(ஸல்) மற்றும் அந்த கிராமவாசி ஏற்றிருக்கும் போது 14 நூற்றாண்டுகள் பிறகு வந்தவர்கள் எதன் அடிப்படையில் பொய் சாட்சி என்று கூறுகின்றனர். குறிப்பாக கிராமவாசி குஸைமா(ரலி) அவர்களது சாட்சியை பொய் சாட்சி என்று கூறினாரா???. 

 2.மேலும் அஹ்மத் 21883 ஹதீஸில் பின்வருமாறு இடம்பெறுகிறது 

 .......ﺟﺎء ﻣﻦ اﻟﻤﺴﻠﻤﻴﻦ ﻗﺎﻝ ﻟﻷﻋﺮاﺑﻲ: ﻭﻳﻠﻚ ﺇﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻟﻢ ﻳﻜﻦ ﻟﻴﻘﻮﻝ ﺇﻻ ﺣﻘﺎ. ﺣﺘﻰ ﺟﺎء ﺧﺰﻳﻤﺔ ﻟﻤﺮاﺟﻌﺔ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻣﺮاﺟﻌﺔ اﻷﻋﺮاﺑﻲ

......முஸ்லீம்களில் ஒருவர் கிராமவாசியிடம் " உங்களுக்கு கேடுதான்! அல்லாஹ்வின் மீதாணையாக!, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் சொல்ல மாட்டார்கள் என்று குஸைமா(ரலி), நபி(ஸல்) அவர்களையும், கிராமவாசியையும் சந்தித்து பரிசீலிக்கும் வரை கூறிக்கொண்டிருந்தார்.....

3.குஸைமா(ரலி),  நபி(ஸல்) அவர்களையும், கிராமவாசியையும் பரிசீலித்து கிராமவாசி விற்றார் என்று அறிவித்தால் அது எப்படி பொய் சாட்சியமாகும்?...ஷஹித என்ற சொல் கண்ணால் கண்டதற்கு சாட்சியம் அளிப்பதை மட்டும் குறிக்காது. பரிசீலித்து அறிவிப்பதையும் குறிக்கும். இன்றும் முஸ்லீம்கள் சொல்லும் “ஷஹாதா” அது போன்றதுதான். 

4.இஸ்லாமின் முழு அதிகாரம் படைத்த நபி(ஸல்) அவர்களே குஸைமா(ரலி) அவர்களது சாட்சியத்தை ஏற்றிருக்கும் போது, முஸ்லீம்களாகிய எங்களுக்கும், ஸைத்(ரலி) அவர்களுக்கும் அதில் எந்த சிக்கலும் இல்லை.

        மேற்குறிபிட்ட செய்திகளையும் கேள்விகளையும் அறிவுள்ள யார் ஆய்வு செய்தாலும் குஸைமா(ரலி) கூறியது பொய் சாட்சி அல்ல என்றே கூறுவார். 

        நாம் முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும் ஆதாரம் அல்ல, ஸைத் இப்னு ஸாபித்(ரலி), உபை இப்னு கஃஅப்(ரலி), அனஸ்(ரலி), அபூதர்(ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் நேரடியாக அந்த வசனங்களை நபி(ஸல்) அவர்களிடமே சேவியுற்றுள்ளனர் என்பது நிரூபனம் ஆகிறது. குஸைமா(ரலி) கூறிய சாட்சியம் அவர் பரிசீலித்து வழங்கியது என்பது நிரூபனம் ஆகிறது. எனவே அது பொய் சாட்சியம் அல்ல என்பது உறுதியாகிறது. அவரது சாட்சியம் எந்த விதத்திலும் குறையுள்ளது அல்ல. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நபிதோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்று அறிவிக்கும் எந்த முத்தவாதீர் கிராத்திலும் மேற்குறிபிட்ட வசனங்கள் விடுபடவில்லை என்பதிலிருந்து அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்கள் அல் குர்ஆனின் பகுதிதான் என்று உறுதியாகிறது…..அல்ஹம்துலில்லாஹ்…. 

Wednesday, November 8, 2023

முரண்பாட்டின் மொத்த உருவம் ஆர்தர் ஜெஃப்ரி

 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


    நாம் சென்ற தொடரில் அர்தர் ஜெஃப்ரி தனது நூலின் தலைப்பிலேயே எவ்வளவு மோசடிகளை கட்டவிழ்துள்ளார் என்று கண்டோம். இந்த கட்டுரையில் அவர் குர்ஆனின் தொகுப்பு குறித்து எவ்வாறு வரலாற்று மோசடிகளை செய்துள்ளார் என்பதையும் எப்படி தனக்குத்தானே முரண்படுகிறார் என்பதையும் காண்போம், இன் ஷா அல்லாஹ்.
  

முதல் பக்கத்திலேயே......

மிக சுருக்கமாக மேலே குறிப்பிடும் கருத்து என்னவென்றால
  1. குர்ஆன் குறித்த விசாரணை இன்னும் குழந்தை பருவத்தில்தான் இருக்கிறதாம்.
  2. இஸ்லாமிய வட்டத்தில் இது அதிக கவனத்தை ஈர்க்கவில்லையாம் காரிகளின் அதிகரிப்பு, இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் இந்த ஆர்வம் இருந்ததற்கு ஒரு சான்றாம்.
  3. உரையை இப்னு முக்லா மற்றும் இப்னு ஷா ஹி.322 நிலைநிறுத்திய பிறகு அதாவது ஹி. 328 பிறகு அந்த ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. 
    இவ்வாறு ஆர்தர் ஜெஃப்ரி தனது புத்தகத்தின் முதல் பக்கத்தில் புலம்பி தள்ளியுள்ளார். ஆனால் இப்படி எல்லாம் குர்ஆனில் உரைமாறுபாடுகள் இருந்ததாக ஆய்வு செய்த ஆர்தர் ஜெஃப்ரி, அவரது நூலின் ஆய்விற்கு துணைக்கு எடுத்த ஆதார நூல்கள் எல்லாம் எந்த காலத்தை சார்ந்தவை என்று பார்தோம் என்றால் இவரது முரண்பாடு எத்தகையது என்பது நமக்கு புரியும். நாம் சென்ற தொடரில் ஆர்தர் ஜெஃப்ரி உரை மாறுபாடுகளை கண்டறிய அவர எடுத்துக்கொண்ட ஆதார நூல்களின் பட்டியலை நாம் கொடுத்திருந்தோம். அதன் ஆசிரியர்களின் காலத்தை இங்கு பதிவிடுகிறோம். 





         ஆர்தர் ஜெஃப்ரி 32 நூல்களை ஆதாரநூல்களாக காட்டியுள்ளார். அதில் 3 நூல்கள் மேற்கத்திய ஆய்வாளர்களின் நூல்கள். ஏனைய 29 நூல்களில் ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டிற்கு முன்னுள்ள நூல்கள் 6. மீதம் இருக்கும் 23 நூல்கள் 4ம் நூற்றாண்டிற்கு பின்னுள்ளவை. ஹி. 328 பிறகு மாறுபட்ட குர்ஆன் ஓதல் குறித்த மக்களின் ஆர்வம் முடிவிற்கே வந்துவிட்டது என்பது எல்லாம் வடிகட்டிய பொய். ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டிற்கு பிறகு எழுதப்பட்ட இஸ்லாமிய நூல்களையே தனக்கு ஆதாரமாக வைத்துக்கொண்டு இப்படி ஆர்தர் ஜெஃப்ரி முன்னுக்கு பின் முரணாக உளறுவது தனது இஸ்லாமோஃபோபியா வாசகர்கள் எப்படி பட்ட குருடர்கள் என்பதை நன்கு அறிந்திருந்தார் என்று வேண்டுமானால் ஆச்சரியம் கொள்ளலாம்!!!!!

அபூபக்ர்(ரலி) அவர்களது தொகுப்பு அவரது தனிநபருக்கான தொகுப்பா????
That Abû Bakr was one of those who collected the revelation material was doubtless true. He may possibly have inherited material that the Prophet had stored away in preparation of the Kitâb. That he ever made an official recension as the orthodox theory demands is exceedingly doubtful. His collection would have been a purely private affair, just as quite a few number of Companions of the Prophet had made personal collections as private affairs. (Materials For The History Of The Text Of The Quran The Old Codices P.No.6-7)
        மேற்குறிபிட்ட அபூபகர்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பு குறித்த செய்தியில் மிகப்பெரிய ஒரு கற்பனையை கட்டவிழ்த்துள்ளார் ஆர்தர் ஜெஃப்ரி. அதாவது குர்ஆனை தொகுக்க வேண்டும் என்பது அபூபக்ர்(ரலி) அவர்களது தனிப்பட்ட தேவைக்கு என்பது வடிகட்டிய பொய். யமாமா யுத்தத்திற்கு பிறகு குர்ஆனை பாதுக்காக்க வேண்டும் என்பதற்காக அபூபகர்(ரலி) எடுத்த முயற்சியின் பயன்தான் முதல் எழுத்து வடிவிலான , இரு அட்டைக்கு மத்தியில் இருக்கும் குர்ஆன் முஸ்ஹஃப் என்பது ஆதாரப்பூர்வ ஹதீஸ்களினால் நிறுவப்பட்ட ஒன்று. அடுத்ததாக இவர் கற்பனையான சில நபித்தோழர்கள் அவ்வாறு வைத்திருந்தார்கள் என்பதும் பொய்.
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮ ﺑﻦ ﺷﺒﺔ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺃﺣﻤﺪ اﻟﺰﺑﻴﺮﻱ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﻋﻦ اﻟﺴﺪﻱ، ﻋﻦ ﻋﺒﺪ ﺧﻴﺮ، ﻋﻦ ﻋﻠﻲ ﻗﺎﻝ: ﺃﻋﻈﻢ اﻟﻨﺎﺱ ﺃﺟﺮا ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻓﺈﻧﻪ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻊ ﺑﻴﻦ اﻟﻠﻮﺣﻴﻦ
அலி(ரலி) கூறினார்கள், “முஸ்ஹஃப் விஷயத்தில் மிகப்பெரும் வெகுமதிக்கு உரியவர் அபூபக்ர்(ரலி) அவர்கள்தான். அவர்தான் முதன் முதலில் இரண்டு அட்டைகளுக்கு நடுவில் தொகுத்தவர் ஆவார்.”(அல் மஸாஹிஃப் 1/49)
        முழு தொகுப்பை வைத்திருந்த இவர் கூறும் அந்த சில நபித்தோழர்கள் யார் யார் என்று இவர் பட்டியலிடுவாரா???. அப்படி இருந்ததற்கான ஆதாரப்பூர்வ ஹதீஸ்கள் எதுவும் இல்லை என்பதே உண்மை. ஆனால் இப்படியான ஒரு பொய்யை ஆர்தர் ஜெஃப்ரி வலிந்து திணித்ததில் ஒரு காரணம் இருக்கிறது.

It is quite clear that the text which Uthmân canonized was only one out of many rival texts, and we need to investigate what went before the canonical text.[7] There can be no doubt that the text canonized by Uthmân was only one among several types of texts in existence at the time.    (Materials For The History Of The Text Of The Quran The Old Codices –Preface P.No.X )
        மேற்குறிபிட்ட ஆர்தர் ஜெஃப்ரியின் கருத்தில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் “உஸ்மான்(ரலி) அன்று இருந்த பல போட்டி உரைகளில் ஒன்றை canonize செய்தார்” என்ற கருத்தியலைத்தான். இது எந்த அளவிற்கு சரி என்பதை இது குறித்த ஹதீஸ்களில் இருந்து காண்போம்.

حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُ أَنَّ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ قَدِمَ عَلَى عُثْمَانَ وَكَانَ يُغَازِي أَهْلَ الشَّأْمِ فِي فَتْحِ إِرْمِينِيَةَ وَأَذْرَبِيجَانَ مَعَ أَهْلِ الْعِرَاقِ فَأَفْزَعَ حُذَيْفَةَ اخْتِلاَفُهُمْ فِي الْقِرَاءَةِ فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَدْرِكْ هَذِهِ الأُمَّةَ قَبْلَ أَنْ يَخْتَلِفُوا فِي الْكِتَابِ اخْتِلاَفَ الْيَهُودِ وَالنَّصَارَى فَأَرْسَلَ عُثْمَانُ إِلَى حَفْصَةَ أَنْ أَرْسِلِي إِلَيْنَا بِالصُّحُفِ نَنْسَخُهَا فِي الْمَصَاحِفِ ثُمَّ نَرُدُّهَا إِلَيْكِ فَأَرْسَلَتْ بِهَا حَفْصَةُ إِلَى عُثْمَانَ فَأَمَرَ زَيْدَ بْنَ ثَابِتٍ وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ وَسَعِيدَ بْنَ الْعَاصِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوهَا فِي الْمَصَاحِفِ وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ الْقُرَشِيِّينَ الثَّلاَثَةِ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَىْءٍ مِنَ الْقُرْآنِ فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ فَفَعَلُوا حَتَّى إِذَا نَسَخُوا الصُّحُفَ فِي الْمَصَاحِفِ رَدَّ عُثْمَانُ الصُّحُفَ إِلَى حَفْصَةَ وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ مِمَّا نَسَخُوا وَأَمَرَ بِمَا سِوَاهُ مِنَ الْقُرْآنِ فِي كُلِّ صَحِيفَةٍ أَوْ مُصْحَفٍ أَنْ يُحْرَقَ‏.

         அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள். (ஸஹீஹ் புகாரி 4987)

மேற்குறிபிட்ட ஹதீஸில் இரண்டு கருத்துக்கள் உள்ளன

1.இராக் வாசிகள் ஓதும் முறையில் (الْقِرَاءَةِ) வேறுபாடு கொண்டார்கள்.

2.உஸ்மான்(ரலி) முன்பே இருந்த முஸ்ஹஃபை பிரதி மட்டுமே எடுத்தார். 

கருத்து 1 கூறும் செய்தி:
        மேற்குறிபிட்ட செய்தியில் எந்த இடத்திலாவது இரண்டு முஸ்ஹஃப்களை வைத்து அல்லது குர்ஆன் உரைகளை வைத்துக்கொண்டு கருத்து வேறுபாடு கொண்டார்கள் என்றிருக்கிறதா? இல்லை. எனவே உரையை உஸ்மான் கெனானைஸ் செய்தார் என்ற கருத்தே சுத்த உளறல் அல்லது திரிபு வாதம்.

கருத்து 2 கூறும் செய்தி:
    உஸ்மான்(ரலி) முன்பே இருந்த பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்து பெற்று பிரதி எடுத்தார்கள் என்று கூறுகிறது. மேலும் இவ்வாறு பிரதி எடுத்தப்பிறகு மீண்டும் ஒருமுறை உஸ்மான்(ரலி) அவர்களே அதனை சரியும்பார்த்தார்கள்.
ﻗﺎﻝ ﺯﻳﺪ:…. ﻭﺃﺭﺳﻞ ﻋﺜﻤﺎﻥ ﺇﻟﻰ ﺣﻔﺼﺔ ﺃﻥ ﺗﻌﻄﻴﻪ اﻟﺼﺤﻴﻔﺔ ﻭﺣﻠﻒ ﻟﻬﺎ ﻟﻴﺮﺩﻧﻬﺎ ﺇﻟﻴﻬﺎ، ﻓﺄﻋﻄﺘﻪ، ﻓﻌﺮﺿﺖ اﻝﻣﺼﺤﻒ ﻋﻠﻴﻬﺎ ﻓﻠﻢ ﻳﺨﺘﻠﻔﺎ ﻓﻲ ﺷﻲء،

        ஸைத்(ரலி), “……உஸ்மான்(ரலி) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம்  எழுத்துப்பிரதியை கொடுத்தனுப்புமாறும் அதனை திருப்பி தந்துவிடுவதாகவும் உறுதியளித்தார்கள். எனவே அதனை அவர்கள் கொடுத்தார்கள். நான் முஸ்ஹஃப்பை அதனுடன் ஒப்பிட்டுகாட்டினேன், அதில் எந்த மாறுபாடும் காணப்படவில்லை” என்று கூறினார்கள்.(ஸரஹ் முஸ்கில் அல் அஸார் 8/128).

        முன்பே இருந்த முஸ்ஹஃப்பை பிரதி எடுத்து அதனை புதிதாக இஸ்லாம் பரவிய அரபி அல்லாத பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார்கள். இந்த உரையை எப்படி சரியான அங்கிகரிக்கப்பட்ட ஓதல் முறைகளின் படி ஓதவேண்டும் என்பதற்கு அதனுடனே காரிகளையும் அனுப்பினார்கள் என்று கிராஅத் குறித்த வரலாறு கூறுகிறது. 

 قال ابو علي"أﻣﺮ ﻋﺜﻤﺎﻥ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﺃﻥ ﻳﻘﺮﺉ ﺑﺎﻟﻤﺪﻧﻲ، ﻭﺑﻌﺚ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ اﻟﺴﺎﺋﺐ ﻣﻊ اﻟﻤﻜﻲ، ﻭاﻟﻤﻐﻴﺮﺓ ﺑﻦ ﺷﻬﺎﺏ ﻣﻊ اﻟﺸﺎﻣﻲ، ﻭﺃﺑﺎ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ اﻟﺴﻠﻤﻲ ﻣﻊ اﻟﻜﻮﻓﻲ، ﻭﻋﺎﻣﺮ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻘﻴﺲ ﻣﻊ اﻟﺒﺼﺮﻱ.

    அபூ அலி "உஸ்மான்(ரலி) ஜைத் இப்னு ஸாபித் அவர்களை மதீனாவில் ஓதும்படி கட்டளையிட்டார்கள், மேலும் அவர் அப்துல்லா பின் அல்-சயீப் அவர்களை மக்காவாசிகளுக்கும், அல்-முகீரா பின் ஷிஹாப் அவர்களை சிரியா வாசிகளுக்கும், அபா அப்துர் ரஹ்மான் அல்ஸுலாமி அவர்களை கூஃபா வாசிகளுக்கும், மற்றும் அமீர் பின் அப்த் அல்-கைஸ் அவர்களை பஸராவாசிகளுக்கும் அனுப்பினார்கள்,” என்று கூறினார்கள். (அல் ஜஹ்பரி அவர்களது ஜமீலா அர்பாப் அல் மராஸித் 1/370)
            உஸ்மான்(ரலி) அவர்களது இந்த செயல் அவர்களது நோக்கத்தை மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. குர்ஆனின் ஓதலில் ஏற்பட்ட முரண்பாடுகளை சரி செய்ய அதனை நபி(ஸல்) அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட முறையில் ஓதக்கூடிய காரீகளையும், அதற்கு சான்றாக முதன் முதலில் அபூபகர்(ரலி) அவர்களால் பிரதி எடுக்கப்பட்ட முழு முஸ்ஹஃப்பின் பிரதிகளையும், இஸ்லாமிய அரசு சார்பாக அதன் ஆட்சிக்கு உட்பட்ட அரபுமொழி அல்லாத பிராந்தியத்திற்கும் அனுப்பி வைக்கிறார்கள். இதில் உஸ்மான்(ரலி) குர்ஆனின் உரையை கெனானைஸ் செய்தார் என்ற ஆர்தர் ஜெஃப்ரியின் வாதம் சுத்த பேத்தலாக தெரிகிறது. இந்த பேத்தல் வாதத்திற்கு முட்டு கொடுக்கத்தான் அபூபக்ர்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பு என்பது தனிமனித தொகுப்பு என்ற கருத்தை முன்பே விதைக்கிறார்…..


ஆர்தர் ஜெஃப்ரியின் இந்த நூல் முழுமையிலும் தனக்குத்தானே பல இடங்களில் முரண்பட்டு பேசுவதையும், தனது நிலையை தானே மறுப்பதுமாக காணமுடிகிறது. அவற்றுள் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறோம்.

தனது நூலில் இப்னு அபீதாவுத் அவர்களது நூலான கிதாப் அல் மஸாஹிஃப் குறித்து பின்வருமாறு கூறுகிறார்.   

Much of the material given by Ibn Abî Dâwûd regarding the history of the text of the Qur'ân, though extremely unorthodox, yet agrees so closely with the conclusions one had reached from quite other directions that one feels confident in making use of it, however weak orthodoxy may consider its isnâds to be. [ Materials For The History Of The Text Of The Quran The Old Codices –Preface P.No.VIII]

    அதாவது இப்னு அபீதாவூத் அவர்களது நூலில் குர்ஆன் உரை குறித்து வரும் வரலாறு மிகவும் பலவீனமான அறிவிப்பாளர் தொடர்களை உடையவையாக இருந்தாலும், மற்ற கோணங்களின் ஆய்வினால எட்டிய முடிவுகளுக்கு (குறிப்பு:அந்த முடிவுகள் எத்தகையவை என்பதை இறுதியில் காண்போம்) மிக நெருக்கமாக இருப்பதால அதனை ஏற்கலாம் என்ற வாதத்தை முன்வைக்கும் ஆர்தர் ஜெஃப்ரி இதே அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த பாடத்தில் பின்வருமாறு முரண்பட்டு குறிப்பிடுகிறார்.

Variants from the Codex of Anas b. Malik are quoted in quite a number of works on Quranic science, showing that though the variants given from him were few they were famous. In some lists he is given as one of those who had collected Quranic material in the lifetime of the Prophet (Nashr, I, 6). The evidence for this is weak,  [ Materials For The History Of The Text Of The Quran The Old Codices –Preface P.No.215]

        ஏன் மேற்குறிபிட்ட செய்தி பலவீனமானது என்பதற்கு எந்த சான்றுகளையும் முன் நிறுத்த வில்லை. ஆனால் இஸ்லாமிய அறிஞர்கள் அறிவிப்பாளர் தொடர்களையும், குர்ஆன் கற்பிக்கப்பட்ட வரலாற்றையும்  ஆய்வு செய்து பலவீனமான செய்திகளை மறுப்பதை ஏற்க இயலாதாம். சரி மேற்குறிபிட்ட நிலையிலாவது இறுதிவரை நிற்கிறாரா என்றால் அதுவும் இல்லை.
“ஆசிரியரால் குறிப்பிடப்படும் அறிவிப்பாளர் தொடர்களில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்பது நாம் அனைத்து கட்டுப்பாடுகளை கைகொண்ட பிறகும், அதில் இருக்கும் சிலவை, அறிவிப்பாளர் தொடர்  குறித்து விமர்சிக்கும்  ஆய்வாளர்களிடம் தாக்குபிடிக்கவில்லை. இஸ்லாமிய அறிஞர்களின் துணையயை நாடினாலும் அது எந்த பயனும் தரவில்லை, ஏனென்றால் மரபுவழியில் இருந்து மாறுபடும் வாக்கியத்திற்கான ஒவ்வொரு அறிவிப்பாளர் தொடரும் அடிப்படையில் (அல்லது உண்மையில்) கண்டனத்திற்குரியது என்ற கோட்பாட்டை நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை.”
            அதாவது ஆர்தர் ஜெஃப்ரி என்ன சொல்றாருனா - இந்த மாதிரி குர்ஆன் உரை மாறுபாடு குறித்த செய்திகளின் அறிவிப்பாளர் தொடர் ஹதீஸ் கலை ஆய்வில் மண்ணை கவ்வுகிறதுனு புலம்புகிறார். இத்தகைய மாறுபாட்டுடன் கூடிய செய்திகளை முஸ்லீம் அறிஞர்கள் ஏற்கவில்லை என்று கூறுகிறார். மேலும் பின்வருமாறு கூறுகிறார்…
A similar problem of accurate transmission naturally attaches to variants themselves. Being uncanonical variants there was none of the meticulous care taken over their transmission such as we find for the canonical readings, and we not infrequently have various forms of the variants attributed to the same Reader in different sources. ( Materials For The History Of The Text Of The Quran The Old Codices P.No.15)
    இதேபோன்ற துல்லியமான கடத்தலுக்கான சிக்கல் இயற்கையாகவே மாறுபாடுகளுடன் தன்னை இணைத்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மாறுபாடுகளாக அவை இருப்பதால், ஏற்கப்பட்ட ஓதல்களின் கடத்தலுக்கு நாம் பார்ப்பது போன்ற பெரும் கவனம் செலுத்தப்படவில்லை. ஒரே காரீக்கான கூறப்பட்ட மாறுபாடுகளின் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கும் வெவ்வேறு மூலங்கள் அறிதாகவும் நம்மிடம் இல்லை.”
        மாறுபட்ட ஓதல்களை கற்று கற்பிப்பதில் எந்த கவனமும் செலுத்தப்படவில்லை என்று ஆர்தர் ஜெஃப்ரி கூறுகிறார். (குறிப்பு :இந்த இடத்தில் ஏன் இத்தகைய சிரத்தையை உலகின் பல பகுதிகளில் இருந்த மக்கள் எடுத்துக்கொண்டார்கள் என்பதற்கு எந்த அறிவார்ந்த விளக்கத்தையும் ஆர்தர் ஜெஃப்ரி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). ஆனால் பிரிதொரு இடத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மாறுபாட்ட ஓதல்களை தஃப்ஸீராக அதாவது விளக்கவுரையாக ஏற்பதாக உளருகிறார்.
Modern Muslim savants almost invariably set aside the variants recorded from the Old Codices on the grounds that they are Tafsîr, or as we would say, explanatory glosses on the Uthmânic text, and they roundly condemn such ancient scholars as Ibn Khalawaih and Ibn Jinnî for not knowning the difference between Qirâ'ât and Tafsîr. It is clear, however that only such Qirâ'ât as were of the kind that could be used for tafsîr had any likelihood of being preserved.( Materials For The History Of The Text Of The Quran The Old Codices P.No.10)
   தற்கால முஸ்லீம் அறிஞர்கள் பழைய எழுத்துப்பிரதிகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட மாறுபாடுகளை தஃப்சீர் அல்லது நாம் கூறுவது போல், உத்மானிய உரையின் விளக்க உரைகள் என்ற அடிப்படையில் ஒதுக்கி வைத்துள்ளனர், மேலும் கிராத் மற்றும் தஃப்ஸிருக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அறியாததற்காக இப்னு கலவாய் மற்றும் இப்னு ஜின்னி போன்ற பண்டைய அறிஞர்களை அவர்கள் கடுமையாக கண்டிக்கிறார்கள். எவ்வாறாயினும், தஃப்ஸீருக்குப் பயன்படுத்தக்கூடிய வகையான கிராத் மட்டுமே பாதுகாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது தெளிவாகிறது.,
        அதாவது ஆர்தர் ஜெஃப்ரி என்ன கூறுகிறாரென்றால், பதிவு செய்யப்பட்ட மாறுபாடுகள் என்பவை தஃப்ஸீர் விளக்கங்கள். இவை தஃப்ஸீருக்கு பயன்படுவதாலேயே பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். ஒரு இடத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மாறுபாடுகள் கொண்ட செய்திகளை கண்டனத்திற்குரிய அறிவிப்பாளர் தொடர் கொண்டவை என்று கூறி மறுக்கின்றனர் என்றும், அதனை கடத்த எந்த சிரத்தையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறார். அதற்கு மாற்றமாக அவை தஃப்ஸீர்கள் என்று அறிஞர்கள் ஏற்கிறார்கள் என்று உளருகிறார். ஒரு சில பக்கங்களுக்குள்ளாகவே தன்னுடைய நிலைபாட்டை பலமுறை மாற்றுகிறார் ஆர்தர் ஜெஃப்ரி என்பது இங்கு தெளிவாக தெரிகிறது. மேற்குறிபிட்டதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு பின்வருமாறு கூறுகிறார்,
Some of the variants in the form in which they have survived to us seem linguistically impossible, and in certain cases this has been noted in the source which quote the variant. The defect is doubtless due to faulty transmission, and it is possible that some of the scholars may even now spot where the corruption lies and restore us to original reading. ( Materials For The History Of The Text Of The Quran The Old Codices P.No.16) 
அவற்றுள் சில மாறுபாடுகள் இன்று நமக்கு கிடைத்திருக்கும் நிலையில், அவை மொழியியல் ரீதியாக சாத்தியமற்றதாகத் தோன்றுகின்றன. மேலும் சில சந்தர்ப்பங்களில் இவை குறிபிடப்படும் மூலங்களிலும் இதையே காணமுடிகிறது. இந்த குறைபாட்டிற்கு தவறான கடத்தலே காரணம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது, மேலும் சில அறிஞர்கள் இப்போது கூட தவறு எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அசல் ஓதலுக்கு நம்மை மீட்டெடுக்கலாம்.
        அதாவது மாறுபட்ட ஓதல்கள் தவறான அறிவிப்பாளர் தொடரை கொண்டிருப்பதாலேயே, அது மொழியியல் ரீதியாக சாத்தியமற்றதாக தோன்றுகிறதாம். இப்படி இரு வாக்கியத்தை கூறி தான் கூறும் மாறுபட்ட ஓதல் முறைகள் அனைத்தும் ஏன் ஏற்கப்படவில்லை என்று சொல்லி தனது நூலிற்கும் நோக்கத்திற்கும் முடிவுரையே எழுதிவிட்டார் சில பக்கங்களில்…. ஆர்தர் ஜெஃப்ரி…
    இன்னும் இதுபோல் பல குருட்டுத்தனமான வாதங்களையும், முரண்பாடுகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு நூல்தான் ஆர்தர் ஜெஃப்ரியின் “MATERIALS FOR THE HISTORY OF THE TEXT OF THE QUR’AN THE OLD CODICES”. அவற்றை பட்டியலிட்டு, பலர் இஸ்லாமிய ஆங்கில வலைதளத்திலும், வலைபூக்களிலும் எழுதியும் உள்ளனர். இப்படி ஓரியண்டலிஸ்ட்கள் மனம் போன போக்கில் முரண்பட்டு உளருவதற்கு ஒரு காரணம் உண்டு. அதனை எட்வர்ட் செய்ட் என்பவர் தனது “Orientalism” என்ற நூலில் உறித்து தொங்கவிட்டுள்ளார். அதில் சில பகுதிகள்.
Orientalism teaches us a great deal about the intellectual dishonesty of dissembling on that score, the result of which is to intensify the divisions and make them both vicious and permanent. Yet an openly polemical and right-minded "progressive" scholarship can very easily degenerate into dogmatic slumber, a prospect that is not edifying either,(Orientalism P.No.327 by Edward Said)
ஓரியண்டலிஸம் அந்த மதீப்பீட்டை சிதைப்பதில் அறிவார்ந்த நேர்மையற்றவைகளை அதிகமாக கற்றுக்கொடுக்கிறது, அதன் விளைவாக பிரிவிணைகளை அதிகப்படுத்தி, அதனை நிரந்தர தீமையாக மாற்றுகிறது. இன்னும் ஒரு வெளிப்படையான விவாதம் மற்றும் சரியான எண்ணம் கொண்ட முற்போக்கு புலமைப்பரிசிலையே மிகவும் எளிமையாக, மீழாத, பிடிவாதமான தூக்கத்தில் வீழ்ந்து சிதைந்துவிடும்,
I consider Orientalism's failure to have been a human as much as an intellectual one; for in having to take up a position of irreducible opposition to a region of the world it considered alien to Its own. Orientalism failed to identify with human experience. Failed also to see it as human experience (Orientalism P.No.328 by Edward Said)
உலகின் ஒரு பகுதியை தனக்கு புறம்பானதாகக் கருதி, மாற்ற முடியாத எதிர்ப்பின் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருப்பதால், நான் ஒரு மனிதனாக ஓரியண்டலிஸத்தின் தோல்வியை அறிவார்ந்த ஒன்றாக பார்க்கிறேன். ஓரியண்டலிசம் மனித அனுபவத்தை அடையாளம் காணத் தவறிவிட்டது. அதனை மனித அனுபவமாக பார்க்கவும் தவறிவிட்டது.
If the knowledge of Orientalism has any meaning, it is in being a reminder of the seductive degradation of knowledge, of any knowledge, anywhere, at any time. Now perhaps more than before.(Orientalism P.No.328 by Edward Said)
ஓரியண்டலிசத்தின் அறிவுக்கு ஏதேனும் அர்த்தம் இருக்குமானால், அது எந்த அறிவையும், எங்கும், எந்த நேரத்திலும் அந்த அறிவினை மயக்கும் சீரழிவை நினைவூட்டுவதாக இருக்கிறது,. இப்போது முன்பை விட அதிகமாக இருக்கலாம்…..
       மேற்குறிபிட்ட பகுதிகளுக்கு நான் எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். மிக எளிமையாக சொல்வதாக இருந்தால் ஓரியண்டலிஸம் என்பது தெளிவாக ஏமாற்றக்கற்று கொடுகத்து, அதன் மூலம் பிரிவிணைகளை ஏற்படுத்தும் ஓர் கோட்பாடு. இத்ததைய ஓரியண்டலிஸத்தின் மட்டமான கோட்பாடுகள்தான் ஆர்தர் ஜெஃப்ரி, மிகப்பெரும் கல்வியையும், பட்டங்களையும், அனுபவத்தையும் பெற்று அறிவூஜீவியாக இருந்த போதீலும், அவரை ஒரு மூடன் போல முரண்படச்செய்திருக்கிறது. ஆர்தர் ஜெஃப்ரியின் அடியோட்டிய கோட்பாட்டின் மேல் அமைக்கப்பட்ட கருத்தியலின் அடிப்படைகளை கொண்டே தற்கால இஸ்லாமோஃபோபுகள்- குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பிவருகின்றனர். ஒரு சில பக்கங்களிலேயே ஒரு அறிஞனை இவ்வளவு முரணபட்டு உளரச்செய்யும் ஒரு கோட்பாடுதான் இவர்களின் மூலாதாரம் என்றால் இன்றைய இஸ்லாமோஃபோபுகள் மற்றும் கிறித்தவ மிஸனரிகளின் நிலையை எண்ணி பரிதாபம் கொள்ளுவதை தவிர ஒன்றுமில்லை……..                                                                                         அல்லாஹு அஃலம்

Sunday, October 29, 2023

ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān” நூல் ஆய்வு - பாகம் 1

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


        நாம் குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களுக்கான விடைகளை ஆதாரப்பூர்வமான செய்திகளில் இருந்து வழங்கிவருகிறோம். அதன் ஊடாக இஸ்லாமோஃபோபுகளுக்கு அரைகுறையாக அறிவை போதிக்கும் வலைதளங்களின் உளறல்களை தோழுரித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் மிசனரி ஓரியண்டலிஸ்டான ஆர்தர் ஜெஃப்ரி என்ற அரைவேக்காடு குறித்தும், அவரது உளறல் நிறந்த “ Materials for the History of the Text of the Qur'ān” என்ற அவரது நூல் குறித்தும் காணயிருக்கிறோம், இன் ஷா அல்லாஹ்.


    ஆர்தர் ஜெஃப்ரி (1892-1959), ஆஸ்திரேலியாவைத் சேர்ந்த மிஷனரி ஓரியண்டலிஸ்ட் ஆவார். குர்ஆனின் உரை விமர்சனம் மற்றும் குர்ஆனின் சரித்திரம் பற்றிய மேற்கத்திய புலமைப்பரிசில் பெரும் பெயர் பெற்றவர். முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் இராணுவத்தில் உடல்நலக் காரணங்களுக்காக அவர் சேர முடியவில்லை, எனவே அவர் மிஷனரியாக இராணுவம் அல்லாத போர் சேவையில் சேர்ந்தார். அவர் சாலமன் தீவுகள், இந்தியா மற்றும் எகிப்தில் மிசனரி பணிக்காக நியமிக்கப்பட்டார். ‘Materials for the History of the Text of the Qur'ān’, ‘The Foreign Vocabulary of the Qur'ān’, ‘The Qur'ān as Scripture and The Koran: Selected Suras’. ஆகிய இவரது எழுத்தாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் தனது வாழ்க்கையின் கடைசி இருபது ஆண்டுகளை கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் யூனியன் இறையியல் கல்லூரியில் கழித்தார். மேலும் ஆர்தர் ஜெஃப்ரியின் மிசனரி சாகசங்களை “அன்ஸரிங் இஸ்லாம்” என்ற இஸ்லாஃபோஃபியாவை பரப்பும் மிசனரி வலைத்தளம் மெச்சுவதை இங்கு காணலாம். ஆர்தர் ஜெஃப்ரி ஒரு வடிகட்டிய கிறித்தவ மிசனரி என்பதற்கு இதுவே போதுமான தகவல்.

ஆர்தர் ஜெஃப்ரி கொடுத்த மோசடி தலைப்பு

        ஆர்தர் ஜெஃப்ரி தனது “MATERIALS FOR THE HISTORY OF THE TEXT OF THE QUR’AN THE OLD CODICES” என்ற நூலில் ,மோசடியை தலைப்பில் இருந்தே துவங்குகிறார். அதாவது அவர் தலைப்பிலேயே தான் மாறுபட்ட ஓதல்களை இப்னு மஸ்வூத்(ரலி), உபை(ரலி), அலி(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அனஸ்(ரலி) அபூ மூஸா(ரலி) மற்றும் இதர ஆரம்ப கால குர் ஆனிய நிபுனர்களின் வேத எழுத்துச்சுவடிகளில் இருந்து பெற்றதாக ஒரு கதையை அளக்கிறார்.




MATERIALS FOR THE HISTORY OF THE TEXT OF THE QUR’AN THE OLD CODICES
                      THE KITAB AL-MASAHIF OF IBN ABl DAWUD TOGETHER                    WITH A COLLECTION OF THE VARIANT READINGS FROM THE CODICES OF IBN MA'SUD, UBAI, ‘ALI, IBN ABBAS, ANAS, ABU MUSA AND OTHER EARLY QURANIC AUTHORITIES WHICH PRESENT A TYPE OF TEXT ANTERIOR TO THAT OF THE CANONICAL TEXT OF ‘UTHMAN
        உண்மையில் இவர் குறிப்பிடும் வேத எழுத்துச்சுவடிகள், அவரது காலத்தில் இருந்ததா? அல்லது இப்னு அபூதாவூத் அவர்கள் கிதாப் அல் மஸாஹீப்பை எழுதும் போதாவது அவர் கைகளிலாவது இருந்ததா? இந்த இரண்டு கேள்விக்கான பதில்களான “இல்லை” என்பதே ஆர்தர் ஜெஃப்ரியின் மோசடியை விளக்க போதிய சான்று. இவர் குறிப்பிடும் முஸ்ஹஃப்கள் குறித்த வரலாற்று சான்றுகளையும் அதன் விளக்கத்தையும் பார்த்தோம் என்றால் இவர் குறிப்பிட்ட எந்த நபர்களின் ஆதாரப்பூர்வ எழுத்துப்பிரதியையும் இவர் கண்டிருக்கமாட்டார் என்பதை உறுதிபட கூறலாம்.

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:
ﻭﺭﻭﻯ اﻟﻔﻀﻞ ﺑﺈﺳﻨﺎﺩﻩ ﻋﻦ اﻷﻋﻤﺶ ﻗﺎﻝ ﻓﻲ ﻗﻮﻟﻪ ﻓﻲ ﻗﺮاءﺓ ﻋﺒﺪ اﻟﻠﻪ (ﺣﻢ ﺳﻖ) ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺳﺤﺎﻕ ﺭﺃﻳﺖ ﻋﺪﺓ ﻣﺼﺎﺣﻒ ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺳﺤﺎﻕ ﺭﺃﻳﺖ ﻋﺪﺓ ﻣﺼﺎﺣﻒ ﺫﻛﺮ ﻧﺴﺎﺧﻬﺎ ﺃﻧﻬﺎ ﻣﺼﺤﻒ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻟﻴﺲ ﻓﻴﻬﺎ ﻣﺼﺤﻔﻴﻦ ﻣﺘﻔﻘﻴﻦ
        முஹம்மத் இப்னு இஸ்ஹாக் கூறியதாவது (கிபி ~ 700) நான் இப்னு மஸ்வூதின் முஸ்ஹஃப் என்று எழுத்தர்களால் கூறப்படும் பல முஸ்ஹஃப்களை கண்டுள்ளேன் .ஆனால் அவற்றுள் ஒன்று போல் அமைந்த இரு முஸ்ஹஃப்கள் இருந்ததில்லை." (அறிவிப்பாளர்: அல் அஃமாஸ்,  ஃபிஹ்ரிஸ்த் 1/44)
        மேற்குறிப்பிட்ட குறிப்பானது ஒரு விஷயத்தை தெளிவாக கூறுகிறது அதாவது கிபி 7ம் நூற்றாண்டிலேயே இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் பெயரால் பல போலி கையெழுத்துப்பிரதிகள் இருந்ததை அறிய முடிகிறது. எனவே கிபி 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்த்தர் ஜெஃப்ரி அதன் உரைமாறுபாடுகளை கையெழுத்துப்பிரதியில் இருந்து எடுத்ததாக தலைப்பிட்டது வடிகெட்டிய பொய்.

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﺮﺑﻴﻊ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﺑﻦ )ﻭﻫﺐ، ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﻤﺮﻭ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺑﻜﻴﺮ: ﺣﺪﺛﻨﻲ ﺑﺴﺮ ﺑﻦ ﺳﻌﻴﺪ، ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﻧﺎﺳﺎ ﻣﻦ ﺃﻫﻞ اﻟﻌﺮاﻕ ﻗﺪﻣﻮا ﺇﻟﻴﻪ ﻓﻘﺎﻟﻮا: ﺇﻧﻤﺎ ﺗﺤﻤﻠﻨﺎ ﺇﻟﻴﻚ ﻣﻦ اﻟﻌﺮاﻕ، ﻓﺄﺧﺮﺝ ﻟﻨﺎ ﻣﺼﺤﻒ ﺃﺑﻲ ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ: " ﻗﺪ ﻗﺒﺾﻫ ﻋﺜﻤﺎﻥ ﻗﺎﻟﻮا: ﺳﺒﺤﺎﻥ اﻟﻠﻪ ﺃﺧﺮﺟﻪ ﻟﻨﺎ ﻗﺎﻝ: ﻗﺪ ﻗﺒﺾﻫ ﻋﺜﻤﺎﻥ "
பஸ்ர் இப்னு ஸயீத் கூறியதாவது:
            இராக் வாசிகளில் சிலர் முஹம்மத் இப்னு உபை (உபை(ரலி) அவர்களது மகன் முஹம்மத்) அவர்களிடம் வந்து " நாங்கள் இராக்கில் இருந்து வருகிறோம். எங்களிடம் உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃபை கொண்டு வாருங்கள் " என்று கூறினார்கள். அதற்கு முஹம்மத் அவர்கள், "உஸ்மான்(ரலி) அதை கைப்பற்றி கொண்டார்கள்." என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் ," அல்லாஹ் தூயவன். அதை எங்களிடம் கொண்டு வாருங்கள்", என்றனர். அதற்கு (முஹம்மத்) அவர்கள், "உஸ்மான்(ரலி) அதை கைப்பற்றி கொண்டார்கள்." என்று கூறினார்கள்.   (மஸாஹிஃப் இப்னு அபீ தாவூத் 1/103)
        மேற்குறிபிட்ட செய்தியில் உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃப் உஸ்மான்(ரலி) ஆட்சிக்காலத்திலேயே அழிந்துவிட்டது எனும் போது, கிபி 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்த்தர் ஜெஃப்ரி அதன் உரைமாறுபாடுகளை கையெழுத்துப்பிரதியில் இருந்து எடுத்ததாக தலைப்பிட்டது வடிகெட்டிய பொய்.

அனஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:
அபூ அல்ஹஸன் அல் அஸ்அரி கூறியதாவது:                                                               நான் அனஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை பஸராவில் அவரது வழிதோன்றல்களிடம் கண்டேன். இன்றைய முஸ்ஹஃப்புடன் எந்த மாற்றமுமின்றி அது சரியாக ஒத்திருப்பதை கண்டேன். மேலும் இது உபை(ரலி) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்டு அனஸ்(ரலி) அவர்களால் எழுதப்பட்டது என்று அவரது வழித்தோன்றல்கள் கூறினார்கள். (அல் இன்திஸார் 1/277)
            உபை(ரலி) அவர்களது ஓதல்தான் அனஸ்(ரலி) அவர்களது பிரதி என்று கூறப்படுவதில் இருந்தும், அது இன்றைய முஸ்ஹஃப்போடு ஓத்திருப்பதாக கூறப்படுவதில் இருந்தும் ஒரு விஷயம் தெளிவாகிறது அதில் உரை மாறுபாடுகள் இல்லை என்பதே. இவர் எந்த ஆதாரங்களில் இருந்து இந்த உரை மாறுபாடுகளை எடுத்தார் என்பதை அவரே பட்டியலிட்டுள்ளார். அதனையும் இந்த கட்டுரையின் பிற்பகுதியில் காண்போம்.

அபூ மூஸா(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺜﻤﺎﻥ، ﺣﺪﺛﻨﺎ ﺟﺮﻳﺮ، ﻋﻦ ﻋﻤﺮ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﻗﺎﻝ: ﻛﺎﻥ ﻟﺃﺑﻲ ﻣﻮﺳﻰ ﻣﺻﺤﻒ ﻭﻛﺎﻥ ﻳﺴﻤﻴﻪ ﻟﺒﺎﺏ اﻟﻔﺆاﺩ
              அபூ மூஸா (ரலி) அவர்களிடம் ஒரு முஸ்ஹஃப் இருந்தது அதனை “லுபாப் அல் ஃபுவ்ஆத்” என்று அழைப்பார்கள்” என்று அம்ரு இப்னு ஸாபித்(ரலி) கூறினார்கள் (அல் ஜுஹ்த் 2288 , தாரிக் திமிஷ்க் 38/242)
        அபூமூஸா(ரலி) அவர்களே தனது முஸ்ஹஃப்பை, குர்ஆன் என்று அழைக்காத போது அதன் உரை மாறுபாடுகள் எந்த மதிப்பும் அற்றவை.


               அலி(ரலி) அவர்களது முஸ் ஹஃப் என்பது தனித்த உரை மாறுபாடுகளை கொண்டவை என்ற கருத்தை நான்கு கோணங்களில் ஆய்வுசெய்வதினால் அதனை பொய் என நிறுவலாம்.

கோணம் 1: உஸ்மான்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை ஏற்ற அலி(ரலி)
ﻋﻠﻲ ﺑﻦ ﺃﺑﻲ ﻃﺎﻟﺐ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﺳﻤﻌﺘﻪ ﻳﻘﻮﻝ: " ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻨﺎﺱ §ﻻ ﺗﻐﻠﻮا ﻓﻲ ﻋﺜﻤﺎﻥ ﻭﻻ ﺗﻘﻮﻟﻮا ﻟﻪ ﺇﻻ ﺧﻴﺮا ﺃﻭ ﻗﻮﻟﻮا ﻟﻪ ﺧﻴﺮا ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﻭﺇﺣﺮاﻕ اﻟﻤﺼﺎﺣﻒ، ﻓﻮاﻟﻠﻪ ﻣﺎ ﻓﻌﻞ اﻟﺬﻱ ﻓﻌﻞ ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﺇﻻ ﻋﻦ ﻣﻸ ﻣﻨﺎ ﺟﻤﻴﻌﺎ،

            அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் “ மக்களே! உஸ்மான்(ரலி) குறித்து வரம்பு மீறிவிடாதீர்கள். முஸ்ஹஃப் குறித்தும், முஸ்ஹஃப்கள் எறிக்கப்பட்டது குறித்தும் அவர் விஷயத்தில் நல்லதை தவிர ஏதும் கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீதானையாக, முஸ்ஹஃப்பின் விஷயத்தில் அவர்கள் செய்தது எல்லாம், எங்களது அலோசனையின் படி அல்லாமல் வேறு எதுவும் அல்ல.”   ( அல் மஸாஹிஃப் 1/97-98)

        மேற்குறிபிட்ட செய்தியில் இருந்து உஸ்மான்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த முடிவுகள் அனைத்தும் தன்னாலும் ஏற்கப்பட்ட ஒன்று என்று அலி(ரலி) அவர்களே சான்று பகிர்கிறார்கள் என்பதை அறியலாம்.

கோணம் 2: அபூபகர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த பணியை சிலாகித்து கூறுவதும் அபூபகர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்தான் அட்டைக்கு நடுவே தொகுக்கப்பட்ட முதல் முஸ்ஹஃப் என்ற சான்றும்:
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮ ﺑﻦ ﺷﺒﺔ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺃﺣﻤﺪ اﻟﺰﺑﻴﺮﻱ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﻋﻦ اﻟﺴﺪﻱ، ﻋﻦ ﻋﺒﺪ ﺧﻴﺮ، ﻋﻦ ﻋﻠﻲ ﻗﺎﻝ: ﻋﻈﻢ اﻟﻨﺎﺱ ﺃﺟﺮا ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻓﺈﻧﻪ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻊ ﺑﻴﻦ اﻟﻠﻮﺣﻴﻦ

        அலி(ரலி) கூறினார்கள், “முஸ்ஹஃப் விஷயத்தில் மிகப்பெரும் வெகுமதிக்கு உரியவர் அபூபக்ர்(ரலி) அவர்கள்தான். அவர்தான் முதன் முதலில் இரண்டு அட்டைகளுக்கு நடுவில் தொகுத்தவர் ஆவார்.”(அல் மஸாஹிஃப் 1/49)

        அபூபகர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த பணியை சிலாகித்து அலி(ரலி) அவர்களே கூறுவது அந்த பணியை அலி(ரலி) அவர்களும் ஏற்றார்கள் என்பதற்கு போதிய சான்று. மேலும் அபூபக்ர்(ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட அந்த முஸ்ஹஃப்பும் , உஸ்மான்(ரலி) அவர்களால் பிரதி எடுக்கப்பட்டதும் ஒன்றுதான் என்பதை பின்வரும் செய்தி தெளிவாக கூறுகிறது.  

ﻗﺎﻝ ﺯﻳﺪ: ﻭﺃﺭﺳﻞ ﻋﺜﻤﺎﻥ ﺇﻟﻰ ﺣﻔﺼﺔ ﺃﻥ ﺗﻌﻄﻴﻪ اﻟﺼﺤﻴﻔﺔ ﻭﺣﻠﻒ ﻟﻬﺎ ﻟﻴﺮﺩﻧﻬﺎ ﺇﻟﻴﻬﺎ، ﻓﺄﻋﻄﺘﻪ، ﻓﻌﺮﺿﺖ اﻝﻣﺼﺤﻒ ﻋﻠﻴﻬﺎ ﻓﻠﻢ ﻳﺨﺘﻠﻔﺎ ﻓﻲ ﺷﻲء،
        ஸைத்(ரலி), “உஸ்மான்(ரலி) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் எழுத்துப்பிரதியை கொடுத்தனுப்புமாறும் அதனை திருப்பி தந்துவிடுவதாகவும் உறுதியளித்தார்கள். எனவே அதனை அவர்கள் கொடுத்தார்கள். நான் முஸ்ஹஃப்பை அதனுடன் ஒப்பிட்டுகாட்டினேன், அதில் எந்த மாறுபாடும் காணப்படவில்லை” என்று கூறினார்கள்.(ஸரஹ் முஸ்கில் அல் அஸார் 8/128)
        மேலும் மேற்குறிபிட்ட அலி(ரலி) அவர்களது அறிவிப்பில் ஒரு முக்கிய செய்தியும் அடங்கியுள்ளது. அதாவது குர்ஆன் என்பது ஒரு முஸ்ஹஃப் ஆக தொகுக்கப்பட்டது அபூபகர்(ரலி) அவர்களுடைய ஆட்சிக்காலத்தில்தான். அதற்கு முன்பு ஜம்வூ செய்யப்பட்ட்தாக வரும் அனைத்து அறிவிப்புகளும் மனனத்தில் தொகுக்கப்பட்டதைதான் குறிப்பிடுகிறது என்பதை தெளிவாக விளக்குகிறது. எனவே அபூபக்ர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை ஏற்ற அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் உரைமாறுபாடுகள் இருப்பதாக கூறுவது பொய்.

கோணம் 3: அலி(ரலி) அவர்களது கிராஅத் இன்றைய கிராஅத்துடன் ஒத்திருப்பது.
        இன்றிருக்கும் முத்தாவதீர் கிராஅத் ஆன ஹஃப்ஸின் கிராஅத், ஹம்ஸாவின் , அபூ அம்ர்ன் கிராஅத் ஆகிய அனைத்தும் அலி(ரலி) அவர்களின் ஓதலையும் அடிப்படையாக கொண்டவை. எனவே அலி(ரலி) அவர்கள்து முஸ்ஹஃப்பில் உரை மாறுபாடுகள் இருந்ததாக கூறுவது பொய்.

கோணம் 4: அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப் என்று கூறப்படுபவை குறித்த தற்கால ஆய்வு

        அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப் என்று கூறப்படுபவை குறித்து ஆய்வு செய்த தய்யார் ஆல்டிகுலாக் பின்வருமாறு கூறுகிறார்.

        There is no difference between them as regards to the surats, the arrangement of ayats within the surats and their sequence. In all the copies, there is uniformity in the text from the beginning to the end. If an ayat is written in a certain way in one copy, there is no doubt that it is the same in every other copy. Some insignificant spelling differences which do not affect the meaning and some simple and very limited mistakes made by the scribes do not carry any importance as regards to the protected nature of the Holy Book.

       Therefore the following may be briefly said with a clear conscience: We had the opportunity of examining the copies that reached us way back from 13-14 centuries ago. The Holy Book reached the present day from all geographies and all periods of time not only through memorization and recitation by the imams of reading, but it is in the hands of the people of the 21st century, with documents that were written in periods which were very close to the generation of the Companions, probably when some of them were alive (maybe some were penned by the Companions).
                சூராக்கள், சூராக்களுக்குள் ஆயத்துகளின் அமைப்பு மற்றும் அவற்றின் வரிசை ஆகியவற்றில் அவைகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாப் பிரதிகளிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே மாதிரியான எழுத்து முறை. ஒரு ஆயத் ஒரு பிரதியில் ஒரு குறிப்பிட்ட முறையில் எழுதப்பட்டிருந்தால், மற்ற எல்லா பிரதிகளிலும் அதுவே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. புனித நூலின் பாதுகாக்கப்பட்ட தன்மையைப் பொறுத்தவரை, அர்த்தத்தை பாதிக்காத சில முக்கியமற்ற எழுத்து வேறுபாடுகள் மற்றும் சில எளிய மற்றும் மிகக் குறைந்த எழுத்தர் பிழைகள், எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை.
        எனவே, தெளிவான மனசாட்சியுடன் பின்வருவனவற்றைச் சுருக்கமாகச் சொல்லலாம்: 13-14 நூற்றாண்டுகளுக்கு முந்தைய பிரதிகளை ஆராயும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இந்த புனித நூலானது அனைத்து புவியியல் மற்றும் அனைத்து காலக்கட்டத்தில் இருந்தும் இன்றைய நாளை அடைந்திருக்கிறது என்பது, ஓதல் இமாம்கள் மனனமிட்டு ஓதியதின் வழியாக மட்டும் அல்ல, மாறாக இது நபிதோழர்களின் தலைமுறைக்கு மிக நெருக்கமான காலங்களிலும், அவர்களில் சிலர் உயிருடன் இருந்தபோதும் எழுதப்பட்ட, ஆவணங்களுடனும் சேர்த்து (சிலவை தோழர்களால் எழுதப்பட்டிருக்கலாம்), 21ம் நூற்றாண்டு மக்களின் கைகளில் அது உள்ளது, (Al Mushaf al Sharif Attributed to Ali b. Abi talib (The Copy of Sana) By Tayyar Altikulac P.No.157)
        அதாவது 20ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் ஆர்த்தர் ஜெஃப்ரிக்கு, தய்யார் ஆல்டிகுலாக் போன்ற அறிஞர்களுக்கு கிடைத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று அந்த முஸ்ஹஃப்களை ஆய்வு செய்த அறிஞர்கள் குர்ஆனின் 14 நூற்றாண்டு பாதுகாப்பை பெருமையுடன் கூறுகின்றனர். அதாவது குர்ஆனின் பாதுகாப்பை உறுதி படுத்தும் ஆவணமாக இந்த எழுத்துப்பிரதிகளை அறிஞர்கள் முன்னிறுத்தும் நிலை இன்றுள்ளது. எனவே அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் உரைமாறுபாடுகள் என்று கூறுவதெல்லாம் வெறும் அரைவேக்காட்டு உளறல்தான்.

முஸ்ஹஃப் குறித்த வாதங்களிலே ஆக அறிவின்மையான வாதத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்து ஆர்த்தர் ஜெஃப்ரி முன்வைக்கிறார்.அதனை கீழே தருகிறோம்.

            அதாவது “ அவரது விஷயத்தில், அது அரிதாக குறிப்பிடப்படுவதாலேயே, அது உண்மையானது என்பதற்கான வாதமாக அமைகிறது,”….என்று கூறுகிறார். அரிதாக கூறப்படுவதால் ஒரு விஷயம் எப்படி உண்மை என்றாகும். உதாரணமாக ஆர்தர் ஜெஃப்ரி ஒரு அரை மெனடல் என்று நான் கூறுவது அரிதான குறிப்பு அதற்காக அது உண்மை ஆகிவிடுமா. இவ்வாறான உளறலே, இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது எந்த முஸ்ஹஃப்பும் இவரால காணமுடியவில்லை என்பதற்கு போதிய சான்று.

   எந்த எழுத்துப்பிரதிகளில் இருந்தும் தனது ஆய்வின் ஆதாரங்களை வைக்கத்தவறியதில் இருந்து, ஆர்தர் ஜெஃப்ரி வாசகர்களை திசை திருப்பும் நோக்கத்தோடு மட்டுமே இவ்வாறு தலைப்பிட்டிருக்கிறார் என்பது ஆணித்தரமாக உறுதியாகிறது. மேலும், இவர் உண்மையில் மேற்குறிபிட்ட நபித்தோழர்களின் உரை மாறுபாடுகளை எதில் இருந்து பெற்றார் என்பதையும் தானிட்ட தலைப்பிற்கே முரண்படுகிறதே என்பதை கூட உணராமல பின்வருமாறு இஸ்லாமிய நூல்களை பட்டியலிட்டும் உள்ளார்.


        இப்படி தஃப்ஸீர் கிதாப்கள், வரலாற்று கிரந்தங்கள், ஆய்வு நூல்கள், மொழியறிவு நூல்கள் அனைத்திலும் இருந்து பெறப்பட்ட செய்திகளில் இருந்து தான் தனது நீண்ட நெடிய ஆய்வை முன்னெடுத்துள்ளார். மேலும் இவர் பட்டியலிடும் உரைமாறுபாடுகள் அனைத்தும் ஒற்றை அறிவிப்பாளர் தொடர் கொண்ட ஹதீஸ்கள்தாம். அதுவும் அவற்றுள் பெரும்பாலனவை குறிபிட்ட நபித்தொழர்கள் ஓதியதாக இடம் பெறும் ஒற்றை அறிவிப்பாளர் தொடர்களை கொண்ட விசித்திர செய்திகள்(ஷாத் ஹதீஸ்கள்) என்று இஸ்லாமிய அறிஞர்களாலேயே முத்திரை குத்தப்பட்டவை. இத்தகைய செய்திகளால் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட முத்தவாதீரான ஓதல்களை எப்படி கேள்விக்குள்ளாக்க இயலும். ஆக இவரது ஆக்கம் என்பதே இஸ்லாமோஃபோபுகளை மெய்சிலிர்க்கச் செய்யும் வெத்து புத்தகம். இதில் கூத்து என்னவென்றால் உரை மாறுபாடுகள் குறித்த ஆய்வுகளுக்கு இஸ்லாமிய சமூகம் அஞ்சுவதாக மிசனரிகள் கதை சொல்லி திரிகின்றனர். . மேலே பட்டியலிடப்பட்ட நூல்கள் பல இஸ்லாமிய அறிஞர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே செய்யப்பட்ட ஆய்வுகள் தான் என்பதை இங்கு குறிப்பிட்டுக்கொள்கிறோம்........தொடரும் இன் ஷா அல்லாஹ்