பக்கங்கள் செல்ல

Sunday, January 14, 2018

எதிர்தொடர் 26: நபி(சல்) அவர்களது விண்ணுலகப் பயனம்

ஏக இறைவனின் திருப்பெயரால்


      நபி(ஸல்) அவர்களது விண்ணுலகப் பயனம் குறித்த விமர்சனத்தை இம்முறை கட்டுரையாளர் முன்வைத்துள்ளார்(1). நபி (சல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் ஒரு பகுதியாக பைத்துல் முக்கத்தஸ் பள்ளிக்கு சென்றதாக., அதாவது சுலைமான் அலை அவர்களால் கட்டியெழுப்பப்பட்டு பல முறை புணரமைக்கப்பட்ட ஆலயத்திற்கு சென்றதாக இஸ்லாமிய ஆவணங்கள் கூறுகின்றன. அதை மறுக்க புகுந்த கட்டுரையாளர். ஜெருசலேத்தில் அந்த ஆலயம் இல்லை அது இடிக்கப்பட்டுவிட்டது என்பதை நிறுவுவதன் மூலம் அந்த ஆலயத்திற்கு நபி(சல்) அவர்கள் சென்றதாக கூறப்படும் குர்ஆனின் வசனங்களும், ஹதீஸ்களும் இட்டுகட்டப்பட்ட கட்டுகதைகள் என்று நிறுவ கட்டுரையாளர் முற்பட்டுள்ளார். ஆனால் இந்த கருத்தானது கட்டுரையாளர் இன்னும் வரலாறு குறித்து அப்டேட் ஆகவில்லை என்பதையே காட்டுகிறது. அதற்கான தக்க ஆவணங்களை சமர்ப்பித்து மேற்குறிப்பிட்ட செய்திகள் யாவும் உண்மையே என்பதை இன்ஷா அல்லாஹ் நிறுவுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

குற்றச்சாட்டு 1: நெஞ்சம் பிளந்து பாவத்தை நீக்க முடியுமா:அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
                  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர்களைப் பிடித்துப் படுக்கவைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள். ஓர் (சதைத்) துண்டை வெளியில் எடுத்து, "இதுதான் உம்மிடமிருந்த ஷைத்தானுக்குரிய பங்கு" என்று ஜிப்ரீல் கூறினார். பிறகு ஒரு தங்கத் தாம்பூலத்தில் இதயத்தை வைத்து ஸம்ஸம் நீரால் அதைக் கழுவினார். பின்னர் முன்பு இருந்த இடத்தில் இதயத்தைப் பொருத்தினார். (நபியவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த) அந்தச் சிறுவர்கள் நபியவர்களின் செவிலித் தாயிடம் ஓடிச் சென்று "முஹம்மத் கொல்லப்பட்டுவிட்டார்" என்று கூறினர். குடும்பத்தார் நபியவர்களை நோக்கி வந்தபோது (அச்சத்தால்) நபியவர்கள் நிறம் மாறிக் காணப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

            நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.  (நூல்: முஸ்லிம் 261)

              இந்த செய்தியை நேரடியாக நபி(சல்) அவர்கள் அறிவிக்கவில்லை. அறிவிக்கும் நபித்தோழர் அனஸ்(ரலி) அவர்கள் யாரிடம் இருந்து அறிவிக்கிறார்கள் என்ற செய்தி இடம்பெறவில்லை. நபி(சல்) அவர்களது சிறுவயது சம்பவத்தை அனஸ்(ரலி) அவர்கள் அறிவிப்பது என்பது சாத்தியமற்றது. அனஸ்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்கள் மரணிக்கும் தருவாயில் அவர்களது வயது இருபதே. ஆக சிறு வயதில் நெஞ்சம் பிளக்கப்பட்டாதாகவும், சைத்தானின் பங்கு நீக்கப்பட்ட்தாகவும் கூறப்படும் செய்திகள் யாவும் அனஸ்(ரலி) அவர்களாலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக செய்தி ஏற்கும் தரத்தை அடையாதது. ஆக சிறுவயதில் இருந்து நபி(சல்) அவர்கள் இந்த கதையை கூறிவருவதாக கட்டுரையாளர் அப்பட்டமான கதையை கூறுகிறார்.


மொழிப்பெயர்ப்பில் இருட்டடிப்பு:

                முதலில் கட்டுரையாளரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் முன்பு இந்த கட்டுரையாளரின் மொழியறிவையும் ஆவணங்களை ஆய்வு செய்யும் லட்சனத்தையும் சற்று காண்போம். அவர் தனது குற்றச்சாட்டின் முதல் ஆவணத்தை ஆய்வு செய்த விதத்தை காண்போம்.            இப்னு இஸ்ஹாகின் ஆவணத்தில் நபி(சல்) அவர்கள் இரவு பயணம் குறித்த செய்திகளை காணும் போது.....அதில் உம்மு ஹானி அவர்களது அவணத்தை பதிவு செய்துள்ளார். அதில் இடம்பெறும் “Umm (Hani), Abu Talib’s daughter, Said: “The Apostle went on no journey except while he was in my house- இந்த சொற்றொடரை மொழிபெயர்க்க புகுந்தவர்...அல்லாஹ்வின் தூதர் என் வீட்டிலிருந்ததைதவிர எந்த பயணத்திற்கும் செல்லவில்லை என்று மொழிபெயர்த்துள்ளார். ஆனால் அந்த சொற்றொடரில் இரண்டு “negative” வாக்கியங்கள் இடம்பெற்று “என் வீட்டில் இருக்கும் போதெ தவிர அல்லாஹ்வின் தூதர் இரவுப்பயணத்திற்கு செல்லவில்லை” என்று பொருள்படும். அதாவது “என் விட்டில் இருந்துதான் இரவுப்பயணத்திற்கு நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள் என்று பொருள்படும்.

          இந்த அளவில்தான் கட்டுரையாளரின் ஆய்வுத்திறன் உள்ளது. சரி நாம் கட்டுரைக்குள் செல்வோம்.


பைத்துல் முக்கதஸிற்கு நபி(சல்) அவர்கள் செல்லவில்லையா?

          இது குறித்து நமது கருத்துகளை வைப்பதற்கு முன்பு கட்டுரையாளர் என்ன கருத்துகளை முன்வைத்துள்ளார் என்பதை பார்த்துவிட்டு அதன் உண்மை தன்மையை அறிவோம்.

குற்றச்சாட்டு 2:

 
நமது பதில்:

                இஸ்லாமிய படையெடுப்பு குறித்த மேற்குறிபிட்ட ஆதாரம் எந்த நூலில் உள்ளது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் கட்டுரையாளர் குறிப்பிடவில்லை. முதலில் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். இஸ்லாமிய மரபில் அல்லது அரபிய மொழி வழக்கில் மஸ்ஜித் என்பது சஜ்தா செய்யும் இடம் என்ற பொருளை கொண்டதுதான். ஆக மஸ்ஜித் என்பது கட்டிடம் என்பதே கட்டுரையாளரின் தவறான புரிதல்தான். சரி அவரது பொருளிலேயே மஸ்ஜித் என்ற சொல்லை கையாண்டாலும் இந்த செய்திகளில் எந்த குறையும் இல்லை என்பதுதான் உண்மை.

 ஆவணம் 1:

இது குறித்து விளங்க நாம் தபரியின் வரலாற்றில் இருந்து காண்போம்.

              ஜெருசலேமும் அதன் முழுவதும் அஜ்னதைனை தவிர உமர்(ரலி) அவர்களால் கைப்பற்றப்பட்டது. அஜ்னதைன் அம்ர் பின் அல் ஆஸ்(ரலி) அவர்களாலும், சிசேரா முஆவியா(ரலி) அவர்களால் கைப்பற்றப்பட்டது. அபூ உஸ்மான் மற்றும் அபூ ஹாரித் அவ்ர்களது கூற்றுப்படி ஜெருசலேம் மற்றும் அதன் பகுதிகளும் ரபியுல் ஆகிர் மாதத்தில் ஹிஜ்ரி 16ல் கைபற்றப்பட்டது.

               சலாமாவின் அடிமையாகிய அபூமர்யம் அவர்களது கூற்றின்படி: நான் ஜெருசலேம் மற்றும் அதன் பகுதி உமர்(ரலி)யால் வெற்றி கொள்ளபட்டதை கண்ணுற்றேன். அவர் அல் ஜாபியாவில் இருந்து ஜெருசலேம் சென்றார். அவர் மஸ்ஜிதினுள் நுழைந்தார். பிறகு தாவூத்(அலை) அவர்களின் தொழுமிடத்திற்குள் நுழைந்தார்கள். தாவூத்(அலை) அவர்களின் துதியை கூறியவராக சஜ்தாவில் விழுந்தார்கள். நாங்களும் சஜ்தாவில் விழுந்தோம்.
               ரஜா பின் ஹைவா அவர்களது கூற்றின் படி – (நிகழ்வின் போது அங்கிருந்த மக்கள்): உமர்(ரலி0 அவர்கள் அல் ஜாபியாவில் இருந்து ஜெருசலேம் அடைந்த போது அவர்கள் மஸ்ஜிதின் அருகாமைக்கு வந்தார்கள். கஃப் அவர்களை எனக்காக தேடுங்கள். அவர்களுக்காக நுழைவாயில் திறக்கப்பட்டது. “ யா அல்லாஹ்! நான் உனக்கு விருப்பானவற்றில் தொண்டாற்ற காத்திருக்கிறேன் என்று கூறினார்கள். பிறகு தாவூத்(அலை) அவர்களின் தொழுமிடம் நோக்கி திரும்பினார்கள். அங்கு இரவுத்தொழுகையை நிறைவேற்றினார்கள்....................உமர்(ரலி) அவர்கள் மஸ்ஜிதின் முன் பகுதியை கிப்லாவாக ஆக்கினார். (இதுதான் மஸ்ஜித் அல் கிப்லி என்று மேற்குறிபிட்ட அல் அக்ஸா வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது) பிறகு அவரது தொழுமிடத்தில் இருந்து எழுந்து ஆலயத்தை எந்த இடத்தில் ரோமர்கள் கட்டிட சிதிலங்கள் மற்றும் விணானவற்றை கொண்டு புதைத்தார்களோ அந்த இடத்திற்கு சென்றார்கள்.............(பக்கம் 195-196 பாகம் 12, தாரிக் தபரி). 
     ஆக தபரியின் கூற்றை நாம் உற்று நோக்கினால் மஸ்ஜிதில் நுழைந்து தாவுத்(அலை) அவர்களின் தொழுமிடத்திற்குள் நுழைந்தார்கள் என்ற சொற்பிரயோகம் குறிப்பது ஜெருசலேம் கோயில் மலையின் 35 ஏகர் நிலப்பரப்பையுமே குறிக்கும்.  

ஆவணம் 2:

          இந்த வார்த்தை பிரோயகத்தை ஜோசப்பஸின் “JEWISH WARS” பாகம் 5ல் காணமுடியும். .ஜோசப்பஸின் கூற்றின் படி ஆலயம் என்பது சுற்றுச்சுவர், துறவிகள் மற்றும் தலைமை போதகர் ஆகியோருக்கான வசிப்பிடம், தொழுமிடங்கள், திராட்சை தோட்டங்கள், ஆசாரிப்புக் கூடம் என்று அனைத்தையும் உள்ளடக்கியது. இது குறித்த வர்ணனையை தெளிவாக விளக்கியுள்ளார் ஜோசப்பஸ். 

ஆவணம் 3:
 
         இதேபோன்று மிஸ்னாஹ்வை ஆய்வு செய்தால் ஆலய சுற்றுசுவர் உள்ளே இருக்கும் ஒவ்வொரு பகுதியுமே புனிதமானது என்பதை அறியமுடியும். அதனால்தான் இன்றும் மேற்குச்சுவரில் யூதர்கள் வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.  

         ஆக மஸ்ஜித் அல் அக்ஸா என்பது 35 சதுர ஏக்கர் நிலத்தையும் ஒட்டுமொத்தமாக குறிக்கும். அதாவது இன்றிருக்கும் மக்கா பள்ளி எவ்வாறு அங்கிருக்கும் 3,56,000 சதுர அடியில் காபாவுடன் அமைந்த ஒட்டுமொத்த கட்டமைபும் புனிதமாக, மஸ்ஜித் அல் ஹரம் என்று முஸ்லிம்களால் அறியப்படுகிறதோ அதுபோல.  இதே கருத்தைத்தான் வரலாற்று ஆய்வாளர் ஓலெக் கிராப்பர் முன்வைக்கிறார்கள். ஆக கிபி 70ல் தரைமட்டமாக்கப்பட்டது என்பது எல்லாம். உள்ளே இருந்த தொழுமிடத்தைதான். அதைதான் இஸ்லாமிய ஆவணங்களும் கூறுகின்றன. ஆக நபி(சல்) அவர்கள் சென்ற போது அங்கே சுற்றுச்சுவரும் ஏனைய பகுதிகளும் இருக்கவே செய்தது.

ஆவணம் 4:
 
போர்டியக்ஸ் பயணியின் குறிப்பு

        அதாவது போர்டியக்ஸ் பயணியின் குறிப்பு கிபி 314 ல் இயற்றப்பட்டது. அதில் யூதர்கள் ஒவ்வொரு வருடமும் துளையிடப்பட்ட கல்லை தரிசித்து யூதர்கள் சுகந்தவர்கமிட்டுவந்தனர் என்ற குறிப்பு இடம்பெறுகிறது. மேலும் அந்த இடத்திலேயே எசெக்கியா யூதேயாவின் அரசனின் வீடும் அமைந்திருந்ததாக அந்த குறிப்பு கூறுகிறது.  ( P.No.22.,Itenarary from Bordeaux to Jerusalem)


            சுகந்த வர்கமிட நிச்சயம் ஆலயத்தின் மத்தியில் அமைந்த கல் தெரியும் படியே இருந்திருக்கும். இந்த கல்லை சுற்றித்தான் இன்றிருக்கும் பைத்துள் முக்கத்தஸில் இருக்கும் பள்ளி அமைந்துள்ளது. ஆக இதுபோன்ற ஏராளமான ஆவணங்கள் மஸ்ஜித் அல் அக்ஸாவின் 35 ஏகர் நிலப்பரப்பில் ஒரு இடத்தில் அமையபெற்ற தொழுமிடம் அழிக்கப்பட்டதையே காட்டுகிறது. எசேக்கியாவின் வீடு, இது குறித்து (ஜெரோம் கூறுகையில் இது ஆலயத்தின் எல்லை சுவற்றிற்குள் இருந்ததாக கூறுகிறார்.) சுற்றுச்சுவர்கள், துளையிடப்பட்ட கல் உள்ளிட்டவை நிலைத்திருந்தன.

             இவை அனைத்தும் பைத்துல் முக்கத்தஸின் ஒவ்வொரு காலத்திலும் அமையப்பட்டவை. அத்தகைய வரலாற்று (கிபி70 முதல் - கிபி 698 வரை) சம்பவங்களின் சிறு வரைபடம் இதோ,மேற்குறிபிட்ட வரை படத்தை சற்று கவனித்தால் பல கேள்விகள் ஏழும் அதாவது. கிபி 70ல் மொத்த ஆலயமும் அழிக்கப்பட்டு இருந்தால்

1.எந்த இடத்தை நோக்கி யூதர்கள் தொழுது வந்தனர் ?

2.எந்த இடத்திற்கு செல்வதற்கு பலமுறை யூதர்களுக்கு தடையும் அனுமதியும் வழங்கப்பட்டது.

3.போர்டியக்ஸின் பயணியின் குறிப்பு கூறும் அந்த கல் அமைந்த பகுதி எது.? அதுவே அந்த இடத்திற்கான குறிப்பு இல்லையா???

4.பலமுறை யூதர்களோடு பரிசீலனை செய்து நபி(சல்) அவர்களிடம் வினாத்தொடுத்த குறைஷி காஃபிர்கள். ஏன் இது குறித்து அவர்களோடு பரிசீலிக்கவில்லை. இந்த சம்பவம் ஹிஜ்ரதிற்கு முன்பு நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆவணம் 5:

1927 நிலநடுக்கம் வெளிக்கொணர்ந்த ஆதாரங்கள்:

           1927ல் ஜெருசலேம் நகரத்தை ஒரு நிலநடுக்கம் தாக்கியது. இஸ்லாமிய வக்ஃப் , ஆலயத்தை செப்பனிடும் பணியில் ஈடுபட்டது. இந்த தருனத்தில் அன்றைய தொல்பொருள்துறை தலைவர் ராபர்ட் ஹேமில்டன் அவர்களால் பல கட்டட இடிபாடுகள் புகைப்படம் எடுக்கப்பட்டது. ஆலய குவிமாடத்தில் 2000 வருத்திற்கு முந்தைய சைப்ரஸ் மற்றும் கேதுரு மரத்தினால் ஆன உத்திரங்களும், பண்டைய காலத்தில் ஆலயத்தின் உள் நுழைய பயனபடுத்தப்பட்ட சுரங்கப்பாதை , இரண்டாம் ஆலயத்தின் தூண்கள் எனப்பல ஆதாரங்கள் கிடைக்கப்பட்டது. இவை அனைத்தும் இரண்டாம் ஆலயத்தின் பகுதிகள் என்றே கருத்தப்படுகிறது. ஆவணம் 6:

இன்றும் இருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆலயத்தின் மிச்சம்

         இன்றும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆலயத்தின் பல பகுதிகள் நிலைத்து நிற்கின்றன என்பது கட்டுரையாளர் ஏனோ அறியவில்லை. அவற்றுள் சில

1.தங்க வாயில்- (Golden Gate) 2.வாரன் வாயில் 3.மூன்று வாயில் 4.இரட்டை வாயில் 5.ஒற்றை வாயில் 6.ஹுல்தா வாயில்


         இப்படியாக பல கட்டிடங்கள் 1ம் மற்றும் 2ம் ஆலயத்தின் பகுதிகள் இன்றும் உள்ளன. அதே போல் புணரமைப்பு செய்யபட்டதின் பகுதிகளையும் இன்றும் காணமுடிகிறது.


         ஆக இந்த கட்டுரையாளர் வரலாற்றையும், மொழியமைப்பையும் குறித்து எந்த அறிவும் அற்றவர். வெறும் இஸ்லாமின் மீது காழ்புணர்ச்சியால் எழுந்த விமர்சனம்தான் இவரது கட்டுரை.

          இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.  இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 24:1-2)

          என்ற பைபில் முன்னறிவிப்பினை உண்மைபடுத்த கிறித்தவ மிசனரிகள் உருவாக்கிய கட்டுகதையையே இங்கு பதிந்துள்ளார். என்பது நிறுபனமாகிறது.

குற்றச்சாட்டு 3: பூமியில் இரண்டாவதாக உருவாக்கப்பட்ட ஆலயம்:

நமது பதில்:


         நான் முன்பே கூறியது போல கட்டுரையாளரும் நாம் கூறும் கருத்தாகிய எந்த இடத்தில் தொழும் நேரத்தை அடைவோமோ அதுதான் நமக்கு தொழுமிடம். இதுதான் இவரது இந்த விமர்சனத்திற்கான பதிலாகும். ஆதம் அலை அவர்கள் முதலில் எந்த இடத்தில் ஆலயம் அமைத்து அல்லாஹ்வை தொழுதார்களோ அது மஸ்ஜித் அல் ஹரம், இரண்டாம் முறை ஆலயம் அமைத்து தொழுத இடம் மஸ்ஜித் அல் அக்ஸா அவ்வளவே. இங்கு கட்டிடம் இருக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஆக அவறிற்கு இடைப்பட்ட காலம் 40 ஆண்டுகள்.

        மேற்குறிபிட்ட அடிப்படையில் நோக்கும் போது அதே அடிப்படையில் நபி(சல்) அவர்களின் பின்வரும் ஹதீஸை காணும் போது இந்த செய்தியில் கட்டுரையாளர் கூறுவது போல எந்த கால முரண்பாடும் இல்லை.

அபூ தர்(ரலி) அறிவித்தார்

        நான் (நபி(ஸல்) அவர்களிடம்),'இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அவர்கள்,'அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்" என்று பதிலளித்தார்கள். நான்,'பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள்,'ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா" என்று பதிலளித்தார்கள். நான்,'அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது" என்று கேட்டேன். அவர்கள்,'நாற்பதாண்டுகள்" (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு,'நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது" என்று கூறினார்கள். (புஹாரி 3366.)


          மேலும் கட்டுரையாளர் கூறுவது அவரது அறியாமையையே காட்டுகிறது. உதாரணமாக யூதர்கள் மோசேயுடன் எகிப்தில் இருந்து வெளியேறிய பிறகு பலகாலம் சுற்றித்திரிந்த போது, மோசேக்கு கர்த்தர் தற்காலிக ஆலயம் அமைத்து அங்கு கர்த்தரை வழிபட வழிகாட்டியதாக பழைய ஏற்பாட்டில் காணமுடிகிறது

          நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக. (யாத்திராகமம் 25:9)

அதேபோன்று அந்த தற்காலிக ஆலயத்தை நகர்த்திக் கொண்டு செல்வதற்கான வழிகாட்டல்களும் அதில் உள்ளதை காணமுடியும்.

           பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.(எண்ணாகமம்: 4:15)

          ஆக தற்காலிக ஆலயம் அமைத்து தொழுவது என்பது சுலைமான்(அலை) அவர்கள் ஜெருசலேமில் ஆலயம் அமைக்கும் வரை இருந்து வந்த பழக்கம் என்பதை பைபிளும் ஒத்துக்கொள்ளத்தான் செய்கிறது. இதை ஏனோ கட்டுரையாளர் காணத்தவறிவிட்டார்.

Reference:


1. The Jewish encyclopedia by Isidore Singer

2.The works of Flavius Josephus : Translated by William Wiston A.M
 

3.Itinerary from Bordeaux to Jerusalem. 'THE BORDEAUX PILGRIM' translated by AUBREY   STEWART, Esq., M.A.,


4.Tareekh Tabari translated by Franz Rosenthal

5.The Lost history of Jerusalem Compiled by Roger Waite

6.The history: the temple of Jerusalem by Jalaluddin Suyuti translated by Rev James Reynold

7.Futhuhusham: the Islamic conquest of Syria

8. The History of Palestine: A Study By Fawzy Al-Ghadiry

9.Jerusalem: the Topography economics and history from the earliest times to 70 AD by George Adam Smith

10. ISLAM A GUIDE FOR JEWS AND CHRISTIANS by F. E. Peters

11. THE MISHNAH: T R A N S L A T E D FROM THE HEBREW WITH INTRODUCTION
AND BRIEF EXPLANATORY N O T E S By HERBERT DANBY, D.D.

12. https://en.wikipedia.org/wiki/Al-Aqsa_Mosque13.http://jcpa.org/secrets-under-the-al-aqsa-mosque-a-photographic-essay/

Notes :
                According to historian Oleg Grabar, "It is only at a relatively late date that the Muslim holy space in Jerusalem came to be referred to as al-haram al-sharif (literally, the Noble Sacred Precinct or Restricted Enclosure, often translated as the Noble Sanctuary and usually simply referred to as the Haram). While the exact early history of this term is unclear, we know that it only became common in Ottoman times, when administrative order was established over all matters pertaining to the organization of the Muslim faith and the supervision of the holy places, for which the Ottomans took financial and architectural responsibility. Before the Ottomans, the space was usually called al-masjid al-aqsa (the Farthest Mosque), a term now reserved to the covered congregational space on the Haram, or masjid bayt al-maqdis (Mosque of the Holy City) or, even, like Mecca's sanctuary, al-masjid al-haram."