இஸ்லாம் அடிமைகளை ஆதரிக்கின்றது ..அதனால் இஸ்லாத்தில் சமத்துவம் இல்லை என்று கூறும் சிலரின் கூற்றில் உள்ள முரண்பாடுகளை எடுத்துக்காட்டுவதற்காக இந்தத் தொடர் எழுதப்படுகின்றது.
அடிமைத் தனம் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பாகவே இருந்து வந்த ஒரு கொடுமையான பழக்கம். கேட்பார் யாருமில்லை... தடி எடுத்தவன் தண்டல் காரன் என்ற பழமொழி இன்றைக்கு எவ்வாறு பொருந்துமோ, அதைவிட பல்லாயிரம் மடங்கு கூடுதலாக அன்று பொருந்தியது.
சமீப காலங்களில் கூட இன்னும் மோசமாக பலராலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது
இன்னும் நாட்டிற்கு நாடு, மதத்திற்கு மதம் இவைகள் மாறுபட்டு இருப்பதை நாம் காணலாம்.
இதை இஸ்லாம் எப்படி அணுகியது? இஸ்லாத்தின் விதிமுறைகள், மற்றவர்களின் கொள்கையோடு எப்படி வேறுபடுகின்றது என்பதை அடுத்தடுத்த பாகங்களில் பார்ப்போம்.
இஸ்லாம், இறைச் சட்டமாக இருப்பதால் தான், எந்தக் காலத்திற்கும் மாற்றம் தேவைப்படாத, ஒரு பிரச்சனையின் அனைத்துக் கோணங்களையும் அலசி அதற்க்கான முடிவுகளைத் தருகின்றது.
விமர்ச்சனம் செய்பவர்களை, உங்கள் வாதங்களில் நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் இது போன்ற பிரச்சனைகளுக்கு எக்காலத்திலும் மாற்ற முடியாத அளவிற்கு தீர்வுகளைத் தாருங்கள் என்றும் கேட்கின்றது.
- ஒரு மனிதன், மற்றொரு மனிதனின் சொத்தாக கருதப்பட்டான்
- வாரச் சந்தையில் மனிதர்களும் விற்கப்பட்டனர்
- தந்தை தன் வாரிசுகளை விற்கவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ அதிகாரம் கொண்டவனாக இருந்தான்
- தங்களிடம் உள்ள அடிமைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து,
- சமூகத்தில் அவர்களின் அந்தஸ்துகள் உயர்ந்தன
- ஒரு அடிமைக் கொல்லப்பட்டால், அதற்க்கு எந்த தண்டனையும் கிடையாது
- எந்த ஒரு ரோமன் பேரரசிடரிடமும், குறைந்த அளவு 20,000 அடிமைகள் இருந்தனர்
- தங்களின் பொழுது போக்கிற்காக, அடிமைகளை சண்டையிட வைத்து சாகடித்த சம்பவங்கள் ஏராளம்
macquirealtory.com |
- அமெரிக்கர்களால் நடை முறைப்படுத்தப்பட்டு வந்த அடிமை முறை (trans-atlantic) மனித வரலாற்றில் நடந்த கொடூரமான சம்பவங்களில் ஒன்று
- இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் ஒழிக்கப்பட்ட தேவதாசி முறை
- அந்நிய நாட்டில் உள்ள ஒருவரை எந்த வித சட்ட விதிமுறைகளும் இல்லாமல், கடத்திச் சென்று, குவாண்டானமோ சிறைச்சாலையில் அடைத்து வைத்திருப்பதும் நவீன கால நாயகர்களின் சாதனை