பக்கங்கள் செல்ல

Sunday, October 29, 2023

ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān” நூல் ஆய்வு - பாகம் 1

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


        நாம் குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களுக்கான விடைகளை ஆதாரப்பூர்வமான செய்திகளில் இருந்து வழங்கிவருகிறோம். அதன் ஊடாக இஸ்லாமோஃபோபுகளுக்கு அரைகுறையாக அறிவை போதிக்கும் வலைதளங்களின் உளறல்களை தோழுரித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் மிசனரி ஓரியண்டலிஸ்டான ஆர்தர் ஜெஃப்ரி என்ற அரைவேக்காடு குறித்தும், அவரது உளறல் நிறந்த “ Materials for the History of the Text of the Qur'ān” என்ற அவரது நூல் குறித்தும் காணயிருக்கிறோம், இன் ஷா அல்லாஹ்.


    ஆர்தர் ஜெஃப்ரி (1892-1959), ஆஸ்திரேலியாவைத் சேர்ந்த மிஷனரி ஓரியண்டலிஸ்ட் ஆவார். குர்ஆனின் உரை விமர்சனம் மற்றும் குர்ஆனின் சரித்திரம் பற்றிய மேற்கத்திய புலமைப்பரிசில் பெரும் பெயர் பெற்றவர். முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் இராணுவத்தில் உடல்நலக் காரணங்களுக்காக அவர் சேர முடியவில்லை, எனவே அவர் மிஷனரியாக இராணுவம் அல்லாத போர் சேவையில் சேர்ந்தார். அவர் சாலமன் தீவுகள், இந்தியா மற்றும் எகிப்தில் மிசனரி பணிக்காக நியமிக்கப்பட்டார். ‘Materials for the History of the Text of the Qur'ān’, ‘The Foreign Vocabulary of the Qur'ān’, ‘The Qur'ān as Scripture and The Koran: Selected Suras’. ஆகிய இவரது எழுத்தாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் தனது வாழ்க்கையின் கடைசி இருபது ஆண்டுகளை கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் யூனியன் இறையியல் கல்லூரியில் கழித்தார். மேலும் ஆர்தர் ஜெஃப்ரியின் மிசனரி சாகசங்களை “அன்ஸரிங் இஸ்லாம்” என்ற இஸ்லாஃபோஃபியாவை பரப்பும் மிசனரி வலைத்தளம் மெச்சுவதை இங்கு காணலாம். ஆர்தர் ஜெஃப்ரி ஒரு வடிகட்டிய கிறித்தவ மிசனரி என்பதற்கு இதுவே போதுமான தகவல்.

ஆர்தர் ஜெஃப்ரி கொடுத்த மோசடி தலைப்பு

        ஆர்தர் ஜெஃப்ரி தனது “MATERIALS FOR THE HISTORY OF THE TEXT OF THE QUR’AN THE OLD CODICES” என்ற நூலில் ,மோசடியை தலைப்பில் இருந்தே துவங்குகிறார். அதாவது அவர் தலைப்பிலேயே தான் மாறுபட்ட ஓதல்களை இப்னு மஸ்வூத்(ரலி), உபை(ரலி), அலி(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அனஸ்(ரலி) அபூ மூஸா(ரலி) மற்றும் இதர ஆரம்ப கால குர் ஆனிய நிபுனர்களின் வேத எழுத்துச்சுவடிகளில் இருந்து பெற்றதாக ஒரு கதையை அளக்கிறார்.




MATERIALS FOR THE HISTORY OF THE TEXT OF THE QUR’AN THE OLD CODICES
                      THE KITAB AL-MASAHIF OF IBN ABl DAWUD TOGETHER                    WITH A COLLECTION OF THE VARIANT READINGS FROM THE CODICES OF IBN MA'SUD, UBAI, ‘ALI, IBN ABBAS, ANAS, ABU MUSA AND OTHER EARLY QURANIC AUTHORITIES WHICH PRESENT A TYPE OF TEXT ANTERIOR TO THAT OF THE CANONICAL TEXT OF ‘UTHMAN
        உண்மையில் இவர் குறிப்பிடும் வேத எழுத்துச்சுவடிகள், அவரது காலத்தில் இருந்ததா? அல்லது இப்னு அபூதாவூத் அவர்கள் கிதாப் அல் மஸாஹீப்பை எழுதும் போதாவது அவர் கைகளிலாவது இருந்ததா? இந்த இரண்டு கேள்விக்கான பதில்களான “இல்லை” என்பதே ஆர்தர் ஜெஃப்ரியின் மோசடியை விளக்க போதிய சான்று. இவர் குறிப்பிடும் முஸ்ஹஃப்கள் குறித்த வரலாற்று சான்றுகளையும் அதன் விளக்கத்தையும் பார்த்தோம் என்றால் இவர் குறிப்பிட்ட எந்த நபர்களின் ஆதாரப்பூர்வ எழுத்துப்பிரதியையும் இவர் கண்டிருக்கமாட்டார் என்பதை உறுதிபட கூறலாம்.

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:
ﻭﺭﻭﻯ اﻟﻔﻀﻞ ﺑﺈﺳﻨﺎﺩﻩ ﻋﻦ اﻷﻋﻤﺶ ﻗﺎﻝ ﻓﻲ ﻗﻮﻟﻪ ﻓﻲ ﻗﺮاءﺓ ﻋﺒﺪ اﻟﻠﻪ (ﺣﻢ ﺳﻖ) ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺳﺤﺎﻕ ﺭﺃﻳﺖ ﻋﺪﺓ ﻣﺼﺎﺣﻒ ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺳﺤﺎﻕ ﺭﺃﻳﺖ ﻋﺪﺓ ﻣﺼﺎﺣﻒ ﺫﻛﺮ ﻧﺴﺎﺧﻬﺎ ﺃﻧﻬﺎ ﻣﺼﺤﻒ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻟﻴﺲ ﻓﻴﻬﺎ ﻣﺼﺤﻔﻴﻦ ﻣﺘﻔﻘﻴﻦ
        முஹம்மத் இப்னு இஸ்ஹாக் கூறியதாவது (கிபி ~ 700) நான் இப்னு மஸ்வூதின் முஸ்ஹஃப் என்று எழுத்தர்களால் கூறப்படும் பல முஸ்ஹஃப்களை கண்டுள்ளேன் .ஆனால் அவற்றுள் ஒன்று போல் அமைந்த இரு முஸ்ஹஃப்கள் இருந்ததில்லை." (அறிவிப்பாளர்: அல் அஃமாஸ்,  ஃபிஹ்ரிஸ்த் 1/44)
        மேற்குறிப்பிட்ட குறிப்பானது ஒரு விஷயத்தை தெளிவாக கூறுகிறது அதாவது கிபி 7ம் நூற்றாண்டிலேயே இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் பெயரால் பல போலி கையெழுத்துப்பிரதிகள் இருந்ததை அறிய முடிகிறது. எனவே கிபி 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்த்தர் ஜெஃப்ரி அதன் உரைமாறுபாடுகளை கையெழுத்துப்பிரதியில் இருந்து எடுத்ததாக தலைப்பிட்டது வடிகெட்டிய பொய்.

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﺮﺑﻴﻊ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﺑﻦ )ﻭﻫﺐ، ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﻤﺮﻭ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺑﻜﻴﺮ: ﺣﺪﺛﻨﻲ ﺑﺴﺮ ﺑﻦ ﺳﻌﻴﺪ، ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﻧﺎﺳﺎ ﻣﻦ ﺃﻫﻞ اﻟﻌﺮاﻕ ﻗﺪﻣﻮا ﺇﻟﻴﻪ ﻓﻘﺎﻟﻮا: ﺇﻧﻤﺎ ﺗﺤﻤﻠﻨﺎ ﺇﻟﻴﻚ ﻣﻦ اﻟﻌﺮاﻕ، ﻓﺄﺧﺮﺝ ﻟﻨﺎ ﻣﺼﺤﻒ ﺃﺑﻲ ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ: " ﻗﺪ ﻗﺒﺾﻫ ﻋﺜﻤﺎﻥ ﻗﺎﻟﻮا: ﺳﺒﺤﺎﻥ اﻟﻠﻪ ﺃﺧﺮﺟﻪ ﻟﻨﺎ ﻗﺎﻝ: ﻗﺪ ﻗﺒﺾﻫ ﻋﺜﻤﺎﻥ "
பஸ்ர் இப்னு ஸயீத் கூறியதாவது:
            இராக் வாசிகளில் சிலர் முஹம்மத் இப்னு உபை (உபை(ரலி) அவர்களது மகன் முஹம்மத்) அவர்களிடம் வந்து " நாங்கள் இராக்கில் இருந்து வருகிறோம். எங்களிடம் உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃபை கொண்டு வாருங்கள் " என்று கூறினார்கள். அதற்கு முஹம்மத் அவர்கள், "உஸ்மான்(ரலி) அதை கைப்பற்றி கொண்டார்கள்." என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் ," அல்லாஹ் தூயவன். அதை எங்களிடம் கொண்டு வாருங்கள்", என்றனர். அதற்கு (முஹம்மத்) அவர்கள், "உஸ்மான்(ரலி) அதை கைப்பற்றி கொண்டார்கள்." என்று கூறினார்கள்.   (மஸாஹிஃப் இப்னு அபீ தாவூத் 1/103)
        மேற்குறிபிட்ட செய்தியில் உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃப் உஸ்மான்(ரலி) ஆட்சிக்காலத்திலேயே அழிந்துவிட்டது எனும் போது, கிபி 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்த்தர் ஜெஃப்ரி அதன் உரைமாறுபாடுகளை கையெழுத்துப்பிரதியில் இருந்து எடுத்ததாக தலைப்பிட்டது வடிகெட்டிய பொய்.

அனஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:
அபூ அல்ஹஸன் அல் அஸ்அரி கூறியதாவது:                                                               நான் அனஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை பஸராவில் அவரது வழிதோன்றல்களிடம் கண்டேன். இன்றைய முஸ்ஹஃப்புடன் எந்த மாற்றமுமின்றி அது சரியாக ஒத்திருப்பதை கண்டேன். மேலும் இது உபை(ரலி) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்டு அனஸ்(ரலி) அவர்களால் எழுதப்பட்டது என்று அவரது வழித்தோன்றல்கள் கூறினார்கள். (அல் இன்திஸார் 1/277)
            உபை(ரலி) அவர்களது ஓதல்தான் அனஸ்(ரலி) அவர்களது பிரதி என்று கூறப்படுவதில் இருந்தும், அது இன்றைய முஸ்ஹஃப்போடு ஓத்திருப்பதாக கூறப்படுவதில் இருந்தும் ஒரு விஷயம் தெளிவாகிறது அதில் உரை மாறுபாடுகள் இல்லை என்பதே. இவர் எந்த ஆதாரங்களில் இருந்து இந்த உரை மாறுபாடுகளை எடுத்தார் என்பதை அவரே பட்டியலிட்டுள்ளார். அதனையும் இந்த கட்டுரையின் பிற்பகுதியில் காண்போம்.

அபூ மூஸா(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺜﻤﺎﻥ، ﺣﺪﺛﻨﺎ ﺟﺮﻳﺮ، ﻋﻦ ﻋﻤﺮ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﻗﺎﻝ: ﻛﺎﻥ ﻟﺃﺑﻲ ﻣﻮﺳﻰ ﻣﺻﺤﻒ ﻭﻛﺎﻥ ﻳﺴﻤﻴﻪ ﻟﺒﺎﺏ اﻟﻔﺆاﺩ
              அபூ மூஸா (ரலி) அவர்களிடம் ஒரு முஸ்ஹஃப் இருந்தது அதனை “லுபாப் அல் ஃபுவ்ஆத்” என்று அழைப்பார்கள்” என்று அம்ரு இப்னு ஸாபித்(ரலி) கூறினார்கள் (அல் ஜுஹ்த் 2288 , தாரிக் திமிஷ்க் 38/242)
        அபூமூஸா(ரலி) அவர்களே தனது முஸ்ஹஃப்பை, குர்ஆன் என்று அழைக்காத போது அதன் உரை மாறுபாடுகள் எந்த மதிப்பும் அற்றவை.


               அலி(ரலி) அவர்களது முஸ் ஹஃப் என்பது தனித்த உரை மாறுபாடுகளை கொண்டவை என்ற கருத்தை நான்கு கோணங்களில் ஆய்வுசெய்வதினால் அதனை பொய் என நிறுவலாம்.

கோணம் 1: உஸ்மான்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை ஏற்ற அலி(ரலி)
ﻋﻠﻲ ﺑﻦ ﺃﺑﻲ ﻃﺎﻟﺐ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﺳﻤﻌﺘﻪ ﻳﻘﻮﻝ: " ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻨﺎﺱ §ﻻ ﺗﻐﻠﻮا ﻓﻲ ﻋﺜﻤﺎﻥ ﻭﻻ ﺗﻘﻮﻟﻮا ﻟﻪ ﺇﻻ ﺧﻴﺮا ﺃﻭ ﻗﻮﻟﻮا ﻟﻪ ﺧﻴﺮا ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﻭﺇﺣﺮاﻕ اﻟﻤﺼﺎﺣﻒ، ﻓﻮاﻟﻠﻪ ﻣﺎ ﻓﻌﻞ اﻟﺬﻱ ﻓﻌﻞ ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﺇﻻ ﻋﻦ ﻣﻸ ﻣﻨﺎ ﺟﻤﻴﻌﺎ،

            அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் “ மக்களே! உஸ்மான்(ரலி) குறித்து வரம்பு மீறிவிடாதீர்கள். முஸ்ஹஃப் குறித்தும், முஸ்ஹஃப்கள் எறிக்கப்பட்டது குறித்தும் அவர் விஷயத்தில் நல்லதை தவிர ஏதும் கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீதானையாக, முஸ்ஹஃப்பின் விஷயத்தில் அவர்கள் செய்தது எல்லாம், எங்களது அலோசனையின் படி அல்லாமல் வேறு எதுவும் அல்ல.”   ( அல் மஸாஹிஃப் 1/97-98)

        மேற்குறிபிட்ட செய்தியில் இருந்து உஸ்மான்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த முடிவுகள் அனைத்தும் தன்னாலும் ஏற்கப்பட்ட ஒன்று என்று அலி(ரலி) அவர்களே சான்று பகிர்கிறார்கள் என்பதை அறியலாம்.

கோணம் 2: அபூபகர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த பணியை சிலாகித்து கூறுவதும் அபூபகர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்தான் அட்டைக்கு நடுவே தொகுக்கப்பட்ட முதல் முஸ்ஹஃப் என்ற சான்றும்:
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮ ﺑﻦ ﺷﺒﺔ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺃﺣﻤﺪ اﻟﺰﺑﻴﺮﻱ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﻋﻦ اﻟﺴﺪﻱ، ﻋﻦ ﻋﺒﺪ ﺧﻴﺮ، ﻋﻦ ﻋﻠﻲ ﻗﺎﻝ: ﻋﻈﻢ اﻟﻨﺎﺱ ﺃﺟﺮا ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻓﺈﻧﻪ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻊ ﺑﻴﻦ اﻟﻠﻮﺣﻴﻦ

        அலி(ரலி) கூறினார்கள், “முஸ்ஹஃப் விஷயத்தில் மிகப்பெரும் வெகுமதிக்கு உரியவர் அபூபக்ர்(ரலி) அவர்கள்தான். அவர்தான் முதன் முதலில் இரண்டு அட்டைகளுக்கு நடுவில் தொகுத்தவர் ஆவார்.”(அல் மஸாஹிஃப் 1/49)

        அபூபகர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த பணியை சிலாகித்து அலி(ரலி) அவர்களே கூறுவது அந்த பணியை அலி(ரலி) அவர்களும் ஏற்றார்கள் என்பதற்கு போதிய சான்று. மேலும் அபூபக்ர்(ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட அந்த முஸ்ஹஃப்பும் , உஸ்மான்(ரலி) அவர்களால் பிரதி எடுக்கப்பட்டதும் ஒன்றுதான் என்பதை பின்வரும் செய்தி தெளிவாக கூறுகிறது.  

ﻗﺎﻝ ﺯﻳﺪ: ﻭﺃﺭﺳﻞ ﻋﺜﻤﺎﻥ ﺇﻟﻰ ﺣﻔﺼﺔ ﺃﻥ ﺗﻌﻄﻴﻪ اﻟﺼﺤﻴﻔﺔ ﻭﺣﻠﻒ ﻟﻬﺎ ﻟﻴﺮﺩﻧﻬﺎ ﺇﻟﻴﻬﺎ، ﻓﺄﻋﻄﺘﻪ، ﻓﻌﺮﺿﺖ اﻝﻣﺼﺤﻒ ﻋﻠﻴﻬﺎ ﻓﻠﻢ ﻳﺨﺘﻠﻔﺎ ﻓﻲ ﺷﻲء،
        ஸைத்(ரலி), “உஸ்மான்(ரலி) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் எழுத்துப்பிரதியை கொடுத்தனுப்புமாறும் அதனை திருப்பி தந்துவிடுவதாகவும் உறுதியளித்தார்கள். எனவே அதனை அவர்கள் கொடுத்தார்கள். நான் முஸ்ஹஃப்பை அதனுடன் ஒப்பிட்டுகாட்டினேன், அதில் எந்த மாறுபாடும் காணப்படவில்லை” என்று கூறினார்கள்.(ஸரஹ் முஸ்கில் அல் அஸார் 8/128)
        மேலும் மேற்குறிபிட்ட அலி(ரலி) அவர்களது அறிவிப்பில் ஒரு முக்கிய செய்தியும் அடங்கியுள்ளது. அதாவது குர்ஆன் என்பது ஒரு முஸ்ஹஃப் ஆக தொகுக்கப்பட்டது அபூபகர்(ரலி) அவர்களுடைய ஆட்சிக்காலத்தில்தான். அதற்கு முன்பு ஜம்வூ செய்யப்பட்ட்தாக வரும் அனைத்து அறிவிப்புகளும் மனனத்தில் தொகுக்கப்பட்டதைதான் குறிப்பிடுகிறது என்பதை தெளிவாக விளக்குகிறது. எனவே அபூபக்ர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை ஏற்ற அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் உரைமாறுபாடுகள் இருப்பதாக கூறுவது பொய்.

கோணம் 3: அலி(ரலி) அவர்களது கிராஅத் இன்றைய கிராஅத்துடன் ஒத்திருப்பது.
        இன்றிருக்கும் முத்தாவதீர் கிராஅத் ஆன ஹஃப்ஸின் கிராஅத், ஹம்ஸாவின் , அபூ அம்ர்ன் கிராஅத் ஆகிய அனைத்தும் அலி(ரலி) அவர்களின் ஓதலையும் அடிப்படையாக கொண்டவை. எனவே அலி(ரலி) அவர்கள்து முஸ்ஹஃப்பில் உரை மாறுபாடுகள் இருந்ததாக கூறுவது பொய்.

கோணம் 4: அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப் என்று கூறப்படுபவை குறித்த தற்கால ஆய்வு

        அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப் என்று கூறப்படுபவை குறித்து ஆய்வு செய்த தய்யார் ஆல்டிகுலாக் பின்வருமாறு கூறுகிறார்.

        There is no difference between them as regards to the surats, the arrangement of ayats within the surats and their sequence. In all the copies, there is uniformity in the text from the beginning to the end. If an ayat is written in a certain way in one copy, there is no doubt that it is the same in every other copy. Some insignificant spelling differences which do not affect the meaning and some simple and very limited mistakes made by the scribes do not carry any importance as regards to the protected nature of the Holy Book.

       Therefore the following may be briefly said with a clear conscience: We had the opportunity of examining the copies that reached us way back from 13-14 centuries ago. The Holy Book reached the present day from all geographies and all periods of time not only through memorization and recitation by the imams of reading, but it is in the hands of the people of the 21st century, with documents that were written in periods which were very close to the generation of the Companions, probably when some of them were alive (maybe some were penned by the Companions).
                சூராக்கள், சூராக்களுக்குள் ஆயத்துகளின் அமைப்பு மற்றும் அவற்றின் வரிசை ஆகியவற்றில் அவைகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாப் பிரதிகளிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே மாதிரியான எழுத்து முறை. ஒரு ஆயத் ஒரு பிரதியில் ஒரு குறிப்பிட்ட முறையில் எழுதப்பட்டிருந்தால், மற்ற எல்லா பிரதிகளிலும் அதுவே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. புனித நூலின் பாதுகாக்கப்பட்ட தன்மையைப் பொறுத்தவரை, அர்த்தத்தை பாதிக்காத சில முக்கியமற்ற எழுத்து வேறுபாடுகள் மற்றும் சில எளிய மற்றும் மிகக் குறைந்த எழுத்தர் பிழைகள், எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை.
        எனவே, தெளிவான மனசாட்சியுடன் பின்வருவனவற்றைச் சுருக்கமாகச் சொல்லலாம்: 13-14 நூற்றாண்டுகளுக்கு முந்தைய பிரதிகளை ஆராயும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இந்த புனித நூலானது அனைத்து புவியியல் மற்றும் அனைத்து காலக்கட்டத்தில் இருந்தும் இன்றைய நாளை அடைந்திருக்கிறது என்பது, ஓதல் இமாம்கள் மனனமிட்டு ஓதியதின் வழியாக மட்டும் அல்ல, மாறாக இது நபிதோழர்களின் தலைமுறைக்கு மிக நெருக்கமான காலங்களிலும், அவர்களில் சிலர் உயிருடன் இருந்தபோதும் எழுதப்பட்ட, ஆவணங்களுடனும் சேர்த்து (சிலவை தோழர்களால் எழுதப்பட்டிருக்கலாம்), 21ம் நூற்றாண்டு மக்களின் கைகளில் அது உள்ளது, (Al Mushaf al Sharif Attributed to Ali b. Abi talib (The Copy of Sana) By Tayyar Altikulac P.No.157)
        அதாவது 20ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் ஆர்த்தர் ஜெஃப்ரிக்கு, தய்யார் ஆல்டிகுலாக் போன்ற அறிஞர்களுக்கு கிடைத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று அந்த முஸ்ஹஃப்களை ஆய்வு செய்த அறிஞர்கள் குர்ஆனின் 14 நூற்றாண்டு பாதுகாப்பை பெருமையுடன் கூறுகின்றனர். அதாவது குர்ஆனின் பாதுகாப்பை உறுதி படுத்தும் ஆவணமாக இந்த எழுத்துப்பிரதிகளை அறிஞர்கள் முன்னிறுத்தும் நிலை இன்றுள்ளது. எனவே அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் உரைமாறுபாடுகள் என்று கூறுவதெல்லாம் வெறும் அரைவேக்காட்டு உளறல்தான்.

முஸ்ஹஃப் குறித்த வாதங்களிலே ஆக அறிவின்மையான வாதத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்து ஆர்த்தர் ஜெஃப்ரி முன்வைக்கிறார்.அதனை கீழே தருகிறோம்.

            அதாவது “ அவரது விஷயத்தில், அது அரிதாக குறிப்பிடப்படுவதாலேயே, அது உண்மையானது என்பதற்கான வாதமாக அமைகிறது,”….என்று கூறுகிறார். அரிதாக கூறப்படுவதால் ஒரு விஷயம் எப்படி உண்மை என்றாகும். உதாரணமாக ஆர்தர் ஜெஃப்ரி ஒரு அரை மெனடல் என்று நான் கூறுவது அரிதான குறிப்பு அதற்காக அது உண்மை ஆகிவிடுமா. இவ்வாறான உளறலே, இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது எந்த முஸ்ஹஃப்பும் இவரால காணமுடியவில்லை என்பதற்கு போதிய சான்று.

   எந்த எழுத்துப்பிரதிகளில் இருந்தும் தனது ஆய்வின் ஆதாரங்களை வைக்கத்தவறியதில் இருந்து, ஆர்தர் ஜெஃப்ரி வாசகர்களை திசை திருப்பும் நோக்கத்தோடு மட்டுமே இவ்வாறு தலைப்பிட்டிருக்கிறார் என்பது ஆணித்தரமாக உறுதியாகிறது. மேலும், இவர் உண்மையில் மேற்குறிபிட்ட நபித்தோழர்களின் உரை மாறுபாடுகளை எதில் இருந்து பெற்றார் என்பதையும் தானிட்ட தலைப்பிற்கே முரண்படுகிறதே என்பதை கூட உணராமல பின்வருமாறு இஸ்லாமிய நூல்களை பட்டியலிட்டும் உள்ளார்.


        இப்படி தஃப்ஸீர் கிதாப்கள், வரலாற்று கிரந்தங்கள், ஆய்வு நூல்கள், மொழியறிவு நூல்கள் அனைத்திலும் இருந்து பெறப்பட்ட செய்திகளில் இருந்து தான் தனது நீண்ட நெடிய ஆய்வை முன்னெடுத்துள்ளார். மேலும் இவர் பட்டியலிடும் உரைமாறுபாடுகள் அனைத்தும் ஒற்றை அறிவிப்பாளர் தொடர் கொண்ட ஹதீஸ்கள்தாம். அதுவும் அவற்றுள் பெரும்பாலனவை குறிபிட்ட நபித்தொழர்கள் ஓதியதாக இடம் பெறும் ஒற்றை அறிவிப்பாளர் தொடர்களை கொண்ட விசித்திர செய்திகள்(ஷாத் ஹதீஸ்கள்) என்று இஸ்லாமிய அறிஞர்களாலேயே முத்திரை குத்தப்பட்டவை. இத்தகைய செய்திகளால் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட முத்தவாதீரான ஓதல்களை எப்படி கேள்விக்குள்ளாக்க இயலும். ஆக இவரது ஆக்கம் என்பதே இஸ்லாமோஃபோபுகளை மெய்சிலிர்க்கச் செய்யும் வெத்து புத்தகம். இதில் கூத்து என்னவென்றால் உரை மாறுபாடுகள் குறித்த ஆய்வுகளுக்கு இஸ்லாமிய சமூகம் அஞ்சுவதாக மிசனரிகள் கதை சொல்லி திரிகின்றனர். . மேலே பட்டியலிடப்பட்ட நூல்கள் பல இஸ்லாமிய அறிஞர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே செய்யப்பட்ட ஆய்வுகள் தான் என்பதை இங்கு குறிப்பிட்டுக்கொள்கிறோம்........தொடரும் இன் ஷா அல்லாஹ்