கிறித்தவர்களின் மத நூலான புதிய ஏற்பாடு குறித்தும் அதன் நிலை குறித்தும் வரலாற்று தரவுகளின் அடிப்படையில், கையெழுத்துப்பிரதிகளின் அடிப்படையில் காணவுள்ளோம்.
பொதுவாக இஸ்லாமியர்கள் ஆகிய நாம் புதிய ஏற்பாடு குறித்து ஆவணங்கள் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைக்கும் போது மிஸனரிகள் முன்வைக்கும் மிக பிரதானமான எதிர் விமர்சனம் “உங்கள் குர்ஆனே இன்ஜீலிற்கு சான்று பகர்ந்திருக்கும் போது அதனை நீங்கள் மறுக்கிறீர்கள்” என்பதுதான். எனவே இந்த தொடரில் நாம் இஸ்லாமிய ஆவணங்கள், மற்றும் வரலாற்று ஆவணங்கள் கூறும் இன்ஜீல் குறித்து காண இருக்கிறோம்...மேலும் வாசிக்க
புதிய ஏற்பாடு அதன் அளவுகோலின் படி பாதுக்காக்கப்பட்டுள்ளதா என்பதற்கு அதன் மொழி எது என்று அறிவது மிக அவசியமாகும். எழுத்தின் ஒரு உருபு அவமாவதையே மிகப்பெரும் விஷயமாக நாம் மேற்குறிபிட்ட வசனம் காட்டுகிறது, ஆனால் எதார்த்தம் வேறாக உள்ளது. எந்த பெருமதத்தின் நூலிலும் இல்லாத மொழி சிக்கல் கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறது. புதிய ஏற்பாட்டின் மூல மொழி எது என்பதில் பல ஆண்டு கால குழப்பம் கிறித்தவ உலகில் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அதுவே புதிய ஏற்பாட்டின் அள்ளியும் புள்ளியும் அவமாகி, வேதம் சல்லி சல்லியாக ஆகிவிட்டதை படம்பிடித்து காட்டும். இங்கு புதிய ஏற்பாட்டின் மூலமொழி எது? என்று நிறுவுவது நமது நோக்கம் அன்று. மாறாக வேத மொழி குறித்து கிறித்தவ அறிஞர்களே எப்படி முரண்படுகின்றனர் என்பதை இங்கு விளக்குவதே நமது நோக்கம். மேலும் வாசிக்க
நாம் பைபிலின் புதிய ஏற்பாட்டின் பாதுகாப்பு குறித்து பார்த்து வருகிறோம். புதிய ஏற்பாட்டின் வரலாற்று தரவுகள் அடிப்படையில் அதன் நம்பகத்தன்மையை எடை போடுவதற்கு முன்பு புதிய ஏற்பாட்டின் முதல் மூன்று நற்செய்தி நூல்கள் குறித்து இங்கு காணவுள்ளோம். புதிய ஏற்பாட்டின் முதல் மூன்று நற்செய்தி நூல்களான மத்தேயூ மாற்கு மற்றும் லூக்கா என்பவை ஒத்தமை நற்செய்தி நூல்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நற்செய்தி நூல்கள் ஒவ்வொன்றும் மற்ற நற்செய்தி நூலினை தழுவி எழுதப்பட்டதாக பல நூற்றாண்டுகளாக கிறித்தவ உலகம் விவாதித்து வருகிறது. அது குறித்தும் அதனை விளக்க முற்படும் அனுமானங்கள் குறித்தும் இந்த கட்டுரையில் காண உள்ளோம் இன் ஷா அல்லாஹ்….மேலும் வாசிக்க
நாம் புதிய ஏற்பாட்டின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடராக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் சென்ற தொடரில் ஒத்தமை நற்செய்தி நூல்களின் ஒத்தமை சிக்கல் குறித்தும், அந்த சிக்கலை தீர்க்க கிறித்தவ உலகம் எப்படியெல்லாம் கதையளந்து வருகிறது என்பதையும், அவர்கள் அளந்த அந்த அனுமானக் கதைகளே எப்படி ஒத்தமை நற்செய்தி நூலின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது என்பதையும் அவர்களது வாய்களினாலே ஆதாரப்பூர்வமான வாத பிரதி வாதங்கள் அடிப்படையில் விளக்கி இருந்தோம். இந்த கட்டுரை அதனுடைய தொடர்ச்சி என்று கூட கூறலாம். இந்த கட்டுரையில் இன் ஷா அல்லாஹ், புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களின் எழுத்தாளர்கள் குறித்த வரலாற்று தரவுகளை காணவிருக்கிறோம். அந்த தரவுகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் ஆய்வுக்கு உடப்டுத்துவதன் மூலம் நற்செய்தி நூல்களின் வரலாற்று தரவுகளின் நிலையையும், அது ஏற்படுத்தும் குழப்பமே ஒத்தமை சிக்கலுக்கு தீர்வில்லாத அனுமானங்களை உருவாக்க கிறித்தவ அறிஞர்களை தள்ளியுள்ளது என்பதையும் தோழுரிக்கவுள்ளோம். மேலும் வாசிக்க
நற்செய்தி நூல்களின் எழுத்தாளர்கள் யார்? யாரின் வழியாக இவர்களது அறிவிப்பை பெற்றார்கள்? இவர்கள் யாரிடம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்? என்று, இந்த எழுத்தாளர்கள் விஷயத்தில் கிறித்தவ உலகின் நிலை குறித்தும், அந்த எழுத்தாளர்கள் குறித்த வரலாற்று ஆவணங்களும், புற ஆதாரங்களும், அதே நற்செய்தி நூல்களின் உள்ளடக்கமும் எவ்வாறு முரண்பட்டு அந்த புற ஆதாரங்களையே பதம் பார்க்கிறது என்பதையும் விரிவாக காணயிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ். அந்த வரிசையில் முதலாவதாக வேதம் என்று அழைக்கப்படும் புதிய ஏற்பாட்டின் மத்தேயூ சுவிஷேசத்தின் அவல நிலையை இங்கு தோழுரிக்கவுள்ளோம். மேலும் வாசிக்க
புதிய ஏற்பாட்டின் நூல்களின் பாதுகாப்பு மற்றும் வரலாற்று ஆவாணங்களை நிலை குறித்து தொடராக கண்டு வருகிறோம். அந்த வரிசையில் அடுத்ததாக காணவிருப்பது மாற்கு சுவிஷேசமாகும். மாற்கு சுவிஷேசத்தை பொறுத்தவரை பீட்டரின் சீடர் அல்லது மொழிபெயர்ப்பாளரான மாற்கு என்பவரால் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாற்கு குறித்த வரலாற்று ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துவற்கு முன்பாக, யார் இந்த மாற்கு? என்பதையும், கிறித்தவ உலகம் எப்படி யார் இந்த மாற்கு என்பதில் தெளிவற்று நிற்கிறது என்பதையும் முதலில் காண்போம். மேலும் வாசிக்க
கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள் குறித்தும் அதன் எழுத்தர்கள் குறித்த வரலாற்று குளறுபடிகள் குறித்தும் கண்டு வருகிறோம். அந்த வரிசையில் இன் ஷா அல்லாஹ் அடுத்ததாக லூக்காவின் படியான சுவிஷேசம் குறித்து பார்க்க இருக்கிறோம். புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களின் கிரேக்க மொழியியலில் பெரிதும் பண்பட்ட வடிவத்தை லூக்காவின் படியான நற்செய்தி நூல் தாங்கி நிற்பதாக கிறித்தவ உலகத்தால் கூறப்படுகிறது. இப்படி கிறித்தவ உலகத்தால் சிலாகித்து கூறப்படும் லூக்காவின் படியான நற்செய்தியின் ஆசிரியரின் வரலாற்று தரவுகளையும், புதிய ஏற்பாட்டின் தரவுகளையும் ஒப்பிட்டு அதன் நிலையை இந்த கட்டுரையில் விரிவாக விளக்க இருக்கிறோம். மேலும் வாசிக்க
கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள் குறித்தும் அதன் எழுத்தர்கள் குறித்த வரலாற்று குளறுபடிகள் குறித்தும் கண்டு வருகிறோம். அந்த வரிசையில் இன் ஷா அல்லாஹ் அடுத்ததாக யோவானின் படியான சுவிஷேசம் குறித்து பார்க்க இருக்கிறோம். கிறித்தவ உலகின் கூற்றின் படி ஏனைய சுவிஷேசங்களில் இருந்து மாறுபட்டு இந்த சுவிஷேசம் இயேசு குறித்து பிறப்பில் இருந்து விவரிக்காமல், படைப்பின் ஆரம்பத்தில் இருந்து இருப்பதாக கூறுகிறது.எனவே கிறித்தவர்களின் இறையியலின் ஆணி வேரை சுமந்து நிற்பதாக இந்த சுவிஷேசம் அமைந்துள்ளது. இப்படி கிறித்தவ உலகத்தால் சிலாகித்து கூறப்படும் யோவானின் படியான நற்செய்தியின் ஆசிரியரின் வரலாற்று தரவுகளையும், புதிய ஏற்பாட்டின் தரவுகளையும் ஒப்பிட்டு அதன் நிலையை இந்த கட்டுரையில் விரிவாக விளக்க இருக்கிறோம். மேலும் வாசிக்க
முன்சென்ற கட்டுரைகளில் புதிய ஏற்பாட்டு நூலின் பாதுகாப்பு குறித்து காணும்போது சபைபிதாக்களின் ஆதாரங்களின் அவல நிலையை படம் பிடித்து காட்டி இருந்தோம். வரலாற்று ஆதாரங்களின் அவல நிலையும், நற்செய்தி நூல்களின் அரைகுறை தகவல்களும் நற்செய்தி நூல்களின் நிலையை கேள்விக்கு உள்ளாக்குவதால் கிறித்தவ உலகம் அதனை எதிர் கொள்ள, இந்த சபை பிதாக்களின் எழுத்துக்களில் இருக்கும் நற்செய்தி நூல்களின் மேற்கோள்களை காட்டி நற்செய்தி நூல்கள் ஆதி காலம் தொட்டே புலக்கத்தில் இருப்பவை என்று நிறுவுவதற்கு முயல்கின்றனர். இந்த முயற்சி எவ்வளவு பலவீனமானது என்பதையும் சேர்த்து இந்த கட்டுரையில் காண இருக்கிறோம். மேலும் வாசிக்க
இஸ்லாமிய கிரந்தங்களில் காணப்படும் மாறுபட்ட குர்ஆன் ஓதல்களை கொண்டுவந்து குர்ஆனின் பகுதிகள் காணாமல் போனதாக உளறிய வாதங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக நாம் விளக்கம் கொடுத்திருக்கிறோம்.(2)அந்த வசனங்கள் ஒரு சில அறிவிப்புக்களில் காணப்படுபவை, முஸ்லீம் சமூகத்தினால், பெரும்திரள் மக்களினால் ஓதல் கேட்டல் மூலமாக வாழையடி வாழையாக கடத்தப்பட்ட முத்தவாதீரான கிராத்களில் அவை காணப்படாததினால் அவை நிராகரிக்கப்படுகிறது என்ற தெளிவான, பகுத்தறிவான அளவுகோலை கொண்டு இஸ்லாமிய சமூகம் அதனை நிராகரிக்கிறது என்பதையும் ஒவ்வொரு கட்டுரையிலும் விளக்கி கூறியிருக்கிறோம். இப்படி அறிவார்ந்த விளக்கத்தை புறம் தள்ளும் கிறித்தவ மிசனரிகளின், திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் காணப்படும், புதிய ஏற்பாட்டில் இல்லாத இயேசுவால் கூறப்பட்ட வசனங்களுக்கு அவர்களால் கூறப்படும் அறிவார்ந்த???? விளக்கத்தை எதிர் நோக்கி இந்த கட்டுரையும், இதற்கு முந்தைய கட்டுரையும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
No comments:
Post a Comment