பக்கங்கள் செல்ல

Tuesday, August 9, 2022

இப்னு மஸ்வூத்(ரலி)யும் அவர்களது ஓதலும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ



        குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களில் அடுத்ததாக முக்கிய இடத்தை வகிப்பது நபித்தோழர் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை அடிப்படையாக கொண்டதாகும். அதாவது நபி(ஸல்) அவர்களால் குர்ஆன் ஓதிக்கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நபித்தோழராகிய இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை ஓரம் கட்டிவிட்டு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை குர்ஆன் தொகுப்பு குழுவில் நியமித்தது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை ஓரம் கட்டி தங்களது இச்சைபடியான குர்ஆனை உருவாக்கவே என்பது அவர்களது வாதம். அதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும், அதன் ஊடாக அவர்கள் எழுப்பும் வாதத்தையும் பார்த்துவிட்டு அதற்கான நமது விளக்கத்தையும் பார்ப்போம் இன் ஷா அல்லாஹ்.

ஆதாரங்களும் விமர்சனங்களும்:

ஆதாரம் 1:
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.(புஹாரி 3806)
ஆதாரம் 2:
ﺃﺧﺒﺮﻧﺎ اﻟﺤﺴﻦ ﺑﻦ ﺇﺳﻤﻌﻴﻞ ﺑﻦ ﺳﻠﻴﻤﺎﻥ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪﺓ ﺑﻦ ﺳﻠﻴﻤﺎﻥ، ﻋﻦ اﻷﻋﻤﺶ، ﻋﻦ ﺃﺑﻲ ﺇﺳﺤﻖ، ﻋﻦ ﻫﺒﻴﺮﺓ ﺑﻦ ﻳﺮﻳﻢ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ: ﻋﻠﻰ ﻗﺮاءﺓ ﻣﻦ ﺗﺄﻣﺮﻭﻧﻲ ﺃﻗﺮﺃ، ﻟﻘﺪ ﻗﺮﺃﺕ ﻋﻠﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻀﻌﺎ ﻭﺳﺒﻌﻴﻦ ﺳﻮﺭﺓ، ﻭﺇﻥ ﺯﻳﺪا ﻟﺼﺎﺣﺐ ﺫﺅاﺑﺘﻴﻦ ﻳﻠﻌﺐ ﻣﻊ اﻟﺼﺒﻴﺎﻥ
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியதாவது:
    நான் யாருடைய ஓதலை போல் ஓதுவது?ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்களிடம் ஏறக்குறைய எழுவது சூராக்களை ஓதி காட்டியுள்ளேன், அப்போது ஸைத் (காதோரம்) இருசடைகள் வைத்துக்கொண்டு சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். (சுனன் நஸயீ 5063)

ஆதாரம் 3: 

ﺃﺧﺒﺮﻧﺎ ﻫﺎﺷﻢ ﺑﻦ اﻟﻘﺎﺳﻢ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﻟﻤﺴﻌﻮﺩﻱ ﻋﻦ اﻟﻘﺎﺳﻢ. ﻳﻌﻨﻲ اﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ. ﻗﺎﻝ: ﻛﺎﻥ ﺟﺒﺮﻳﻞ ﻳﻨﺰﻝ ﻋﻠﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻳﻘﺮﺋﻪ اﻟﻘﺮﺁﻥ ﻛﻞ ﻋﺎﻡ ﻓﻲ ﺭﻣﻀﺎﻥ ﻣﺮﺓ ﺣﺘﻰ ﺇﺫا ﻛﺎﻥ اﻟﻌﺎﻡ اﻟﺬﻱ ﻗﺒﺾ ﻓﻴﻪ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻧﺰﻝ ﺟﺒﺮﻳﻞ ﻓﺄﻗﺮﺃﻩ اﻟﻘﺮﺁﻥ ﻣﺮﺗﻴﻦ. ﻗﺎﻝ ﻋﺒﺪ اﻟﻠﻪ: ﻓﻘﺮﺃﺕ اﻟﻘﺮﺁﻥ ﻣﻦ ﻓﻲ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﺫﻟﻚ اﻟﻌﺎﻡ. ﻭاﻟﻠﻪ ﻟﻮ ﺃﻧﻲ ﺃﻋﻠﻢ ﺃﻥ ﺃﺣﺪا ﺃﻋﻠﻢ ﺑﻜﺘﺎﺏ اﻟﻠﻪ ﻣﻨﻲ ﺗﺒﻠﻐﻨﻴﻪ اﻹﺑﻞ ﻟﺮﻛﺒﺖ ﺇﻟﻴﻪ. ﻭاﻟﻠﻪ ﻣﺎ ﺃﻋﻠﻤﻪ. 

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியதாவது: 
    ஜிப்ரீல்(அலை) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் ஒவ்வொரு ரமலானிலும் இறங்கி குர்ஆனை ஒருமுறை ஓதிக்காட்டுவார்கள். அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் மரணித்த வருடத்தில் இரு முறை ஜிப்ரீல்(அலை) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்டது. அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூத்)(ரலி) கூறியதாவது: அந்த வருடத்தில் ஓதப்பட்ட குர்ஆனை, அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களது வாயில் இருந்து நான் பெற்றுக்கொண்டேன். என்னைவிட அல்லாஹ்வின் வேதத்தை கற்றறிந்த ஒருவர் இருக்கிறார் என்பதை நான் அறிந்தால், ஒட்டகத்தை பெற்று அவரிடம் சென்று கற்றுக்கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக, அவ்வாறு யாரையும் நான் அறியவில்லை. (தபக்கத் இப்னு சாஃத்(2/151)).                   

 மேலும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது ஓதல் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) பின்வருமாறு கூறுகிறார்.

ﺣﺪﺛﻨﺎ ﻳﻌﻠﻰ، ﻭﻣﺤﻤﺪ اﻟﻤﻌﻨﻰ، ﻗﺎﻻ: ﺣﺪﺛﻨﺎ اﻷﻋﻤﺶ، ﻋﻦ ﺃﺑﻲ ﻇﺒﻴﺎﻥ، ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ، ﻗﺎﻝ: ﺃﻱ اﻟﻘﺮاءﺗﻴﻦ ﺗﻌﺪﻭﻥ ﺃﻭﻝ؟ ﻗﺎﻟﻮا: ﻗﺮاءﺓ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﻗﺎﻝ: ﻻ، ﺑﻞ ﻫﻲ اﻵﺧﺮﺓ، " ﻛﺎﻥ ﻳﻌﺮﺽ اﻟﻘﺮﺁﻥ ﻋﻠﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﻛﻞ ﻋﺎﻡ ﻣﺮﺓ، ﻓﻠﻤﺎ ﻛﺎﻥ اﻟﻌﺎﻡ اﻟﺬﻱ ﻗﺒﺾ ﻓﻴﻪ، ﻋﺮﺽ ﻋﻠﻴﻪ ﻣﺮﺗﻴﻦ، ﻓﺸﻬﺪﻩ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﻓﻌﻠﻢ ﻣﺎ ﻧﺴﺦ ﻣﻨﻪ ﻭﻣﺎ ﺑﺪﻝ "

அபி ஜப்யான் கூறியதாவது:
    "என்னிடம் "நீங்கள் இரண்டு கிராத்களில் எது முதலில் வந்தது என்று எண்ணுகிறீர்கள் " என்று இப்னு அப்பாஸ்(ரலி) கேட்டார்கள். அதற்கு நான் "இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் கிராத்" என்று பதிலளித்தேன்.அதற்கு அவர்கள் " இல்லை, அதுதான் இறுதியானது. ஜிப்ரயீல்(அலை) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் குர்ஆன் முழுவதையும் ஓதிக்காட்டுவார்கள். அவர்கள் மரணித்த வருடத்தில் இருமுறை ஓதிக்காண்பிக்கப்பட்டது. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) சாட்சியாக இருந்தார்கள்.அதனால் எது எடுத்து கொள்ளப்பட்டது, எது மாற்றப்பட்டது என்பதனை கற்றுக்கொண்டார்கள். நூல்:முஸ்னத் அஹ்மத் 3422

மேற்குறிபிட்ட ஆதாரங்களை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதம்:

1) நபி(சல்) அவர்களால் அறிவுறுத்தப்பட்ட குர்ஆன் ஆசிரியரான இப்னு மஸ்வூத்(ரலி) குர்ஆன் குழுவில் இடம்பெறவில்லை. மாறாக அவர் குர்ஆனின் 70 சூராக்களை கற்றிருந்த போது சிறுவனாய் இருந்த ஸைத்(ரலி) அவர்களை குர்ஆன் தொகுப்பு குழுவில் நியமித்தது தவறு அல்லது உள்நோக்கம் உடையது
2) இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல்தான் நபி(சல்) அவர்களுக்கு இறுதியாக வழங்கப்பட்ட ஓதல். ஆனால் இன்றைய குர்ஆனோ ஸைத் இப்னு ஸாபித்(ரலி) யின் ஓதல்.
3) மேற்குறிபிட்ட காரணத்தினால்தான் பல ஹதீஸ்களில் காணப்படும் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கும் மாறுபட்ட ஓதல்கள், ஸைத்(ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட இன்றைய குர்ஆனில் இருந்து முரண்படுகிறது.

   எனவே குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பதே இஸ்லாமோஃபோபுகளின் வாதம் ஆகும். இன் ஷா அல்லாஹ் இவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கான மறுப்பை காண்போம்.

இப்னு மஸ்வூத்(ரலி) குறித்த நபி(சல்) அவர்களது அறிவிப்பும் விளக்கமும்:

    மேற்குறிபிட்ட வாதங்களுக்கு நபி(ஸல்) அவர்களால் அறிவுறுத்தப்பட்ட குர்ஆன் ஆசிரியரான இப்னு மஸ்வூத்(ரலி) குறித்து நபி(ஸல்) அவர்கள் குறிபிட்ட ஹதீஸை அல்லது அது தொடர்பான அனைத்து ஹதீஸ்களையும் நாம் முதலில் விளங்கிக்கொள்வது அவசியமாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
            இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.(புஹாரி 3806)
        மேற்குறிபிட்ட செய்தியில் சாலிம், முஆத் இப்னு ஜபல் (ரலி) ஆகியோர் அபூபகர்(ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் மரணித்து விட்டார்கள். எஞ்சியிருப்பவர்கள் இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோர்தாம். இதில் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் குறித்த நபி(சல்) அவர்களது முழு கூற்றையும் அது சார்ந்த விளக்கத்தையும் நாம் விளங்கிக்கொண்டாலே இஸ்லாமோஃபோபுகளின் வாதம் எவ்வளவு அறிவீனமானது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
      இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களிடம் ஆரம்ப கால மக்கா வாழ்க்கை முதற்கொண்டே குர்ஆனை கற்றவர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆரம்ப கால குர்ஆன் ஆசிரியர்களில் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் ஒருவர்.
        காஸிம் இப்னு அப்துர் ரஹ்மான் கூறியதாவது: நபி(சல்) அவர்களிடம் இருந்து முதன் முதலில் குர்ஆனை மக்காவில் ஓதியவர் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆவார்கள்.(தபக்கத் இப்னு சாஃத் 3/112) 

     மேலும் நபி(சல்) அவர்கள் இப்னு மஸ்வூத்(ரலி) குறித்து கூறுகையில் பின்வருமாறு கூறுகிறார்கள்:

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، ‏.‏ أَنَّ أَبَا بَكْرٍ، وَعُمَرَ، بَشَّرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ مَنْ أَحَبَّ أَنْ يَقْرَأَ الْقُرْآنَ غَضًّا كَمَا أُنْزِلَ فَلْيَقْرَأْهُ عَلَى قِرَاءَةِ ابْنِ أُمِّ عَبْدٍ ‏"‏ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியதாவது:
            அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் " குர்ஆனை இறங்கிய போது இருந்த பொலிவுடன் ஓத விரும்புவர் இப்னு உம்மு அப்து(இப்னு மஸ்வூத் (ரலி)விடம் ஓத கேட்கட்டும் என்று கூறினார்கள் என்ற நற்செய்தியை அபூபகர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோர் என்னிடம் தெரிவித்தனர். (நூல்: இப்னு மாஜா 138)
        மேற்குறிபிட்ட ஹதீஸில் இடம் பெறும் غَضًّا என்ற சொல்லிற்கு நாம் பொலிவுடன் என்று பொருளாக்கம் செய்துள்ளோம். இதன் பொருள் குறித்து கிதாப் அல் ஜீம் என்ற அரபு அகராதி (3/312) பினவருமாறு கூறுகிறது.

ﻭاﻷﻭﺿﺎﺡ ﻣﻦ اﻝﻏﻀﺎ: ﺻﻐﺎﺭﻩ  -      
غَضًّا என்ற சொல்லின் பொருள்: இளமையான என்பதாகும்.(கிதாப் அல் ஜீம் 3/312).

            மேலும் இந்த செய்தி குறித்து இமாம் புகாரி அவர்களது தாரிக் அல் கபீரில் பின்வருமாறு இடம் பெறுகிறது:

ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﻣﻦ ﺃﺭاﺩ ﺃﻥ ﻳﻘﺮﺃ اﻟﻘﺮﺁﻥ ﻏﻀﺎ ﻛﻤﺎ ﺃﻧﺰﻝ ﻓﻠﻴﻘﺮﺃﻩ ﻋﻠﻰ ﻗﺮاءﺓ اﺑﻦ ﺃﻡ ﻋﺒﺪ، ﻗﺎﻟﻪ ﻟﻲ ﻋﺒﺪ اﻟﻌﺰﻳﺰ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺟﻌﻔﺮ - ﻭﻛﺎﻧﺖ ﻗﺮاءﺗﻪ ﺣﺮﻓﺎ
    அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் " குர்ஆனை இறங்கிய போது இருந்த பொலிவுடன் ஓத விரும்புவர் இப்னு உம்மு அப்து(இப்னு மஸ்வூத் (ரலி)விடம் ஓத கேட்கட்டும் என்று கூறினார்கள். இது குறித்து முஹம்மத் இப்னு ஜாஃபர் "அது ஒரு ஓதல் முறை" என்று குறிபிட்டர்கள் என்று அப்துல் அஜீஸ் இப்னு அப்துல்லாஹ் கூறினார்கள்.(தாரிக் அல் கபீர் 1/360)

     மேலும் மேற்குறிபிட்ட செய்தி பின் வருமாறு முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா வில் இடம்பெறுகிறது.

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻣﻌﺎﻭﻳﺔ، ﻋﻦ اﻷﻋﻤﺶ، ﻋﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﻋﻦ ﻋﻠﻘﻤﺔ، ﻋﻦ ﻋﻤﺮﻭ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﻣﻦ ﺳﺮﻩ ﺃﻥ ﻳﻘﺮﺃ اﻟﻘﺮﺁﻥ ﺭﻃﺒﺎ ﻛﻤﺎ ﺃﻧﺰﻝ ﻓﻠﻴﻘﺮﺃ ﻋﻠﻰ ﻗﺮاءﺓ اﺑﻦ ﺃﻡ ﻋﺒﺪ
அம்ரு(ரலி) அவர்கள் கூறியதாவது
                அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் " குர்ஆனை, இறங்கிய போது இருந்த (ﺭﻃﺒﺎ) ஈரத்துடன் ஓத விரும்புவர் இப்னு உம்மு அப்து(இப்னு மஸ்வூத் (ரலி)விடம் ஓத கேட்கட்டும்" என்று கூறினார்கள். (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா 30133)
        அதாவது முதல் முதலில் குர்ஆன் இறங்கிய போது எப்படி இருந்ததோ அதுபோல் ஓதக்கூடியவர் இப்னு மஸ்வூத்(ரலி) என்று நபி(சல்) அவர்களே விளக்கியிருப்பதை இங்கு காணமுடிகிறது. எனவே நபி(ஸல்) அவர்களது கூற்றின் படியும், அதில் இடம் பெற்றிருக்கும் வார்த்தைகளின் அடிப்படையிலும், அதற்கான பொருளாக்கம் மற்றும் விளக்கத்தின் அடிப்படையில் இப்னு மஸ்வூத்(ரலி) குர்ஆனின் ஆரம்ப கால ஓதல் முறையில் தலைசிறந்தவராக விளங்கியுள்ளார் எனபது தெளிவாக புலப்படுகிறது.

ஸைத்(ரலி) சிறுவனாக இருந்த போதே 70 சூராக்களை கற்ற இப்னு மஸ்வூத்(ரலி)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியதாவது:
        நான் யாருடைய ஓதலை போல் ஓதுவது?ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்களிடம் ஏறக்குறைய எழுவது சூராக்களை ஓதி காட்டியுள்ளேன், அப்போது ஸைத் (காதோரம்) இருசடைகள் வைத்துக்கொண்டு சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். (சுனன் நஸயீ 5063)
            மேற்குறிபிட்ட செய்தியை பதிவிட்டு இஸ்லாமோஃபோபுகள் ஸைத்(ரலி) சிறுவனாக இருந்த போதே 70 சூராக்களை கற்ற இப்னு மஸ்வூத்(ரலி) முழு
குர்ஆனை கற்றிருக்க மாட்டாரா என்ன?? என்ற தங்களது கற்பனையின் அடிப்படையில் ஸைத்(ரலி) அவர்களை குர்ஆனை தொகுக்க தகுதியற்றவர் என்று உளறித்திரிகின்றன.


ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺣﻤﺎﺩ ﺑﻦ ﺳﻠﻤﺔ، ﻋﻦ ﻋﺎﺻﻢ، ﻋﻦ ﺯﺭ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﻗﺎﻝ: ﻛﻨﺖ ﻏﻼﻣﺎ ﻳﺎﻓﻌﺎ ﺃﺭﻋﻰ ﻏﻨﻤﺎ ﻟﻌﻘﺒﺔ ﺑﻦ ﺃﺑﻲ ﻣﻌﻴﻂ ﺑﻤﻜﺔ ﻓﺄﺗﻰ ﻋﻠﻲ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﺃﺑﻮ ﺑﻜﺮ ﻭﻗﺪ ﻓﺮا ﻣﻦ اﻟﻤﺸﺮﻛﻴﻦ ﻓﻘﺎﻝ: «ﻳﺎ ﻏﻼﻡ §ﻋﻨﺪﻙ ﻟﺒﻦ ﺗﺴﻘﻴﻨﺎ؟» ﻗﻠﺖ: ﺇﻧﻲ ﻣﺆﺗﻤﻦ ﻭﻟﺴﺖ ﺑﺴﺎﻗﻴﻜﻤﺎ ﻗﺎﻻ: «ﻓﻬﻞ ﻋﻨﺪﻙ ﻣﻦ ﺟﺬﻋﺔ ﻟﻢ ﻳﻨﺰ ﻋﻠﻴﻬﺎ اﻟﻔﺤﻞ ﺑﻌﺪ؟» ﻗﻠﺖ: ﻧﻌﻢ ﻓﺄﺗﻴﺘﻬﻤﺎ ﺑﻬﺎ ﻓﺎﻋﺘﻘﻠﻬﺎ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻭﺃﺧﺬ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ اﻟﻀﺮﻉ ﻓﺪﻋﺎ ﻓﺤﻔﻞ اﻟﻀﺮﻉ ﻭﺃﺗﺎﻩ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﺑﺼﺨﺮﺓ ﻣﻨﻘﻌﺮﺓ ﻓﺤﻠﺐ ﻓﻴﻬﺎ ﺛﻢ ﺷﺮﺏ ﻫﻮ ﻭﺃﺑﻮ ﺑﻜﺮ ﺛﻢ ﺳﻘﻴﺎﻧﻲ ﺛﻢ ﻗﺎﻝ ﻟﻠﻀﺮﻉ: «اﻗﻠﺺ» ، ﻓﻘﻠﺺ ﻓﻠﻤﺎ ﻛﺎﻥ ﺑﻌﺪ ﺃﺗﻴﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻘﻠﺖ: ﻋﻠﻤﻨﻲ ﻣﻦ ﻫﺬا اﻟﻘﻮﻝ اﻟﻄﻴﺐ ﻳﻌﻨﻲ اﻟﻘﺮﺁﻥ ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺇﻧﻚ ﻏﻼﻡ ﻣﻌﻠﻢ» ، ﻓﺄﺧﺬﺕ ﻣﻦ ﻓﻴﻪ ﺳﺒﻌﻴﻦ ﺳﻮﺭﺓ ﻣﺎ ﻳﻨﺎﺯﻋﻨﻲ ﻓﻴﻬﺎ ﺃﺣﺪ
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியதாவது:

            நான் இளைஞனாக இருந்த போது மக்காவில் உக்பா பின் அபூ முயீத்தின் கால் நடைகளை மேய்த்து கொண்டிருந்தேன்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் , அபூபகர்ரும் இறைமறுப்பாளர்களிடம் இருந்து தப்பித்து வெளியே வந்து என்னுடன் சேர்ந்து கொண்டார்கள். அவர்களோ அல்லது அவர்கள் இருவருமோ " நாங்கள் அருந்த உன்னிடம் பால் ஏதும் இருக்கிறதா,இளைஞனே?" என்று கேட்டார்கள் அதற்கு நான் " இது எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு. என்னால் நீங்கள் அருந்த தர இயலாது " என்று கூறிவிட்டேன்.

        அதற்கு அவர்கள" உன்னிடம் எந்த கன்றிற்கும் பால் கொடுக்காத இளம் ஆடு இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான் அதற்கு " ஆம், இருக்கிறதே என்று கூறிவிட்டு, ஒரு ஆட்டினை இழுத்து வந்து அவர்களிடம் விட்டேன். அபூபக்ர் அதனை இழுத்து கட்டினார்கள். அதன் பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அதன் மடியை பிடித்தவாரு பிராத்தித்தார்கள். மடி நிறைந்தது. அபூபகர் ஒரு குழியான கல்லை எடுத்து வந்தார்கள். அவர்கள் அருந்தினார்கள். பிறகு அபூபக்கரிடம் எனக்கும் கொஞ்சம் ஊற்றி கொடுக்க கூறினார்கள். பிறகு மடியிடம் அவர்கள் "நீ சுருங்கிக்கொள் "என்று கூற அப்படியே ஆனது.
      பின்னாட்களில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று " எனக்கு சில நல்ல விஷயங்களை கற்றுக்கொடுங்கள், அதாவது குர்ஆனை என்று கூறினேன்.அதற்கு அவர்கள் " நீ உன்னை நன்கு கற்றறிந்த இளைஞனாக எண்ணிக்கொள்" என்று கூறிவிட்டார்கள்.அதன் பிறகு நான் அவர்களது நாவில் இருந்து 70 சூராக்களை பெற்றுக்கொண்டேன். அதில் என்னிடம் யாரும் போட்டியிட முடியாது

        (நூல்: முஸ்னத் அபீ தாவுத் அல் தயாலிசி 351, முஸ்னத் இப்னு அபீ ஷைபா 388, முஸ்னத் அஹ்மத் 3599, சில வார்த்தை மாற்றங்களுடன் முஸ்னத் அஹ்மத் 4412 இடம்பெற்றுள்ளது)

        அது போல் தான் மொத்தமாகவே ஏறக்குறைய 70 சூராக்களைத்தான் நபி(சல்) அவர்களிடம் இருந்து பெற்றதாக இப்னு மஸ்வூத்(ரலி) சொல்லும் சம்பவமும் ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது குர்ஆன் எழுத்துப்பிரதியை ஒப்படைக்குமாறு கூற அபூமூஸா அல் அஸ்அரீ(ரலி) அவர்களும் ஹுதைபா(ரலி) அவர்களும் அனுப்படுகிறார்கள். இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அதனை தரமறுக்கும் சம்பவம் சுருக்கம் கருதி தாரிக் அல் கபீரில் இருந்து பதியப்படுகிறது.

ﻋﻤﺮ ﺑﻦ ﻗﻴﺲ ﺃﺑﻮ اﻟﺼﺒﺎﺡ اﻟﻤﺎﺻﺮ ، ﻛﻨﺎﻩ ﻭﻛﻴﻊ، ﻋﻦ ﻣﺠﺎﻫﺪ ﻭﺯﻳﺪ ﺑﻦ ﻭﻫﺐ، ﻳﻘﺎﻝ ﻣﻮﻟﻰ ﺛﻘﻴﻒ، ﺭﻭﻯ ﻋﻨﻪ اﻟﺜﻮﺭﻱ ﻭﺯاﺋﺪﺓ، ﻭﻗﺎﻝ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺇﺳﺤﺎﻕ ﻋﻦ ﺃﺷﻬﻞ : ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﻋﻮﻥ ﻋﻦ ﻋﻤﺮ اﺑﻦ ﻗﻴﺲ اﻟﻤﺎﺻﺮ ﻋﻦ ﺃﺑﻲ ﻣﻴﺴﺮﺓ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﺷﺮﺣﺒﻴﻞ - ﺃﻭ - ﺷﺮاﺣﻴﻞ: ﺩﺧﻠﺖ ﻭﺛﻢ ﺣﺬﻳﻔﺔ ﻭاﻷﺷﻌﺮﻱ ﻓﻘﺎﻝ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ: ﺃﻗﺮﺃﻧﻲ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻀﻌﺎ ﻭﺳﺒﻌﻴﻦ ﺳﻮﺭﺓ،
                அபீ மைஸரா கூறியதாவது: நான் உள்ளே சென்றேன். அதன் பிறகு ஹுதைஃபா(ரலி) அல் அஸரீ (ரலி) அவர்களும் பின் தொடர்ந்தார்கள். அப்போது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் என்னிடம் ஏறக்குறைய எழுபது சூராக்களை ஓதிக்காட்டியுள்ளார்கள். (தாரிக் அல் கபீர் 2121)
            இத்துடன் இப்னு மஸ்வூத்(ரலி) நிறுத்தி இருந்தாலும் இவர்கள் கூறுவது போல் ஸைத்(ரலி) சிறுவனாக இருந்த போதே 70 சூராக்களை கற்ற இப்னு மஸ்வூத்(ரலி) முழு குர்ஆனை கற்றிருப்பார் என்று யூகிக்கலாம், ஆனால் இந்த முழு செய்தியும் இடம் பெறும் ஹதீஸில் பின்வருமாறு இடம்பெறுகிறது.
ﻓﻘﺎﻝ: ﻭاﻟﻠﻪ ﻻ ﺃﺩﻓﻌﻪ ﺇﻟﻴﻬﻢ , ﺃﻗﺮﺃﻧﻲ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻀﻌﺎ ﻭﺳﺒﻌﻴﻦ ﺳﻮﺭﺓ، ﺛﻢ ﺃﺩﻓﻌﻪ ﺇﻟﻴﻬﻢ, ﻭاﻟﻠﻪ ﻻ ﺃﺩﻓﻌﻪ ﺇﻟﻴﻬﻢ
            (இப்னு மஸ்வூத்(ரலி)) "அல்லாஹ்வின் மீதாணையாக, அதை நான் தரமாட்டேன். அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் என்னிடம் ஏறக்குறைய எழுபது சூராக்களை ஓதிக்காட்டியுள்ளார்கள். பின்பு அதை நான் அவர்களிடம் கொடுக்க வேண்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, அதை நான் தரமாட்டேன்" என்று கூறினார்கள். என்று இடம் பெறுகிறது. (முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் 2896, ஃபதாயில் அல்குர்ஆன் 1/285)
        மேற்குறிபிட்ட செய்தியை படிக்கும் யாரும் விளங்கிக்கொள்வார்கள் நபி(சல்) அவர்களிடம் இருந்து நேரடியாக இப்னு மஸ்வூத்(ரலி) பெற்றுக்கொண்டது 70 சூராக்கள்தான். அதனை அவர்கள் தனது முஸ்ஹஃப்பில் எழுதியும் வைத்திருந்தார்கள்.  குர்ஆன் முழுவதையும், அவர்கள் நபி(சல்) அவர்களிடம் இருந்து பெற்றிருந்தால் மேற்குறிபிட்ட தருணத்தை விட வேறு எந்த தருணமும் அவர்கள் கூற தகுயதியானது அல்ல. அப்படியான தருணத்தில் கூட 70 சூராக்களை நான் பெற்றிருந்தேன் என்றும் அதை  எழுதி வைத்திருக்கும் தனது முஸ்ஹஃப்பை தரமாட்டேன் என்றும் கூறுவதே நபி(சல்) அவர்களிடம் இருந்து இப்னு மஸ்வூத்(ரலி) பெற்றது 70 சூராக்கள்தான் என்பதற்கு உறுதியான சான்று.

மேலும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் கூறும் போது
.....… என்னைவிட (இறைவேதத்தை) நன்கு அறிந்த ஒருவர் இருக்கிறார் என நான் அறிந்தால், (அவர் எங்கு இருந்தாலும் சரி) அவரை நோக்கி நான் பயணம் மேற்கொள்வேன்" என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூடியிருந்த (அந்த) அவையில் வீற்றிருந்தேன். அவர்களில் எவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை; அதற்காக அவரைக் குறை கூறவுமில்லை.(முஸ்லிம் 4860)
        இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் கூறியது போல் 70 அல்லாத ஏனைய குர்ஆனின் சூராக்களை முஜம்மி(ரலி) அவர்களிடம் கற்றுக்கொண்டார்கள். அதனை பின்வரும் செய்தி உறுதி செய்கிறது.
        ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது: நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேர் ஆவார்கள். அவர்கள் உபை இப்னு கஃப்(ரலி),முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி),சஅத் (ரலி) மற்றும் அபூ ஸைத்(ரலி), ஆவர். மேலும் முஜம்மி இப்னு ஜாரியா குர்ஆன் முழுவதையும் மனனமிட்டிருந்தார்கள் இரண்டு அல்லது மூன்று சூராக்களை தவிர.     மேலும் இப்னு மஸ்ஊத்(ரலி) 70 சூராக்களை மனனமிட்டிருந்தார்கள். குர்ஆனின் ஏனைய பகுதியை முஜம்மி(ரலி)- அவர்களிடம் இருந்து மனனமிட்டார்கள். (அல் தாரிக் வ அல் திமிஸ்க் பாகம் 47 பக்கம் 111)

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது ஓதல்தான் இறுதி ஓதலா???

அடுத்ததாக இஸ்லாமோபோஃபுகள் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல்தான் இறுதி ஓதல் அதில் இன்றைய குர்ஆன் இல்லை. என்பதற்கு அவர்கள் வைக்கும்  ஆதாரங்களை ஆய்வு செய்வோம். 

ஆதாரம் 1:

ﺃﺧﺒﺮﻧﺎ ﻫﺎﺷﻢ ﺑﻦ اﻟﻘﺎﺳﻢ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﻟﻤﺴﻌﻮﺩﻱ ﻋﻦ اﻟﻘﺎﺳﻢ. ﻳﻌﻨﻲ اﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ. ﻗﺎﻝ: ﻛﺎﻥ ﺟﺒﺮﻳﻞ ﻳﻨﺰﻝ ﻋﻠﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻳﻘﺮﺋﻪ اﻟﻘﺮﺁﻥ ﻛﻞ ﻋﺎﻡ ﻓﻲ ﺭﻣﻀﺎﻥ ﻣﺮﺓ ﺣﺘﻰ ﺇﺫا ﻛﺎﻥ اﻟﻌﺎﻡ اﻟﺬﻱ ﻗﺒﺾ ﻓﻴﻪ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻧﺰﻝ ﺟﺒﺮﻳﻞ ﻓﺄﻗﺮﺃﻩ اﻟﻘﺮﺁﻥ ﻣﺮﺗﻴﻦ. ﻗﺎﻝ ﻋﺒﺪ اﻟﻠﻪ: ﻓﻘﺮﺃﺕ اﻟﻘﺮﺁﻥ ﻣﻦ ﻓﻲ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﺫﻟﻚ اﻟﻌﺎﻡ. ﻭاﻟﻠﻪ ﻟﻮ ﺃﻧﻲ ﺃﻋﻠﻢ ﺃﻥ ﺃﺣﺪا ﺃﻋﻠﻢ ﺑﻜﺘﺎﺏ اﻟﻠﻪ ﻣﻨﻲ ﺗﺒﻠﻐﻨﻴﻪ اﻹﺑﻞ ﻟﺮﻛﺒﺖ ﺇﻟﻴﻪ. ﻭاﻟﻠﻪ ﻣﺎ ﺃﻋﻠﻤﻪ.

        அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியதாவது:  

        ஜிப்ரீல்(அலை) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் ஒவ்வொரு ரமலானிலும் இறங்கி குர்ஆனை ஒருமுறை ஓதிக்காட்டுவார்கள். அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் மரணித்த வருடத்தில் இரு முறை ஜிப்ரீல்(அலை) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்டது. அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூத்)(ரலி) கூறியதாவது: அந்த வருடத்தில் ஓதப்பட்ட குர்ஆனை, அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களது வாயில் இருந்து நான் பெற்றுக்கொண்டேன். என்னைவிட அல்லாஹ்வின் வேதத்தை கற்றறிந்த ஒருவர் இருக்கிறார் என்பதை நான் அறிந்தால், ஒட்டகத்தை பெற்று அவரிடம் சென்று கற்றுக்கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக, அவ்வாறு யாரையும் நான் அறியவில்லை. (தபக்கத் இப்னு சாஃத்(2/151)).
    மேற்குறிபிட்ட இந்த செய்தியின் அறிவிப்பாளர் பலவீனமானதாகும் இந்த அறிவிப்பளர் தொடரில் இடம் பெறும் அல் மஸூதி என்பவர் அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல்லாஹ் அல் மஸூதி ஆவார். இவரை குறித்து தக்ரீப் அல் தஹ்தீப்பில் பின்வருமாறு இடம் பெறுகிறது.
عبد الرحمن بن عبد الله بن عتبة بن عبد الله بن مسعود الكوفي المسعودي صدوق اختلط قبل موته وضابطه أن من سمع منه ببغداد فبعد الاختلاط
அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு உத்பா இப்னு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அல் கூஃபீ அல் மஸூதி நம்பகமானவர். மரணிப்பதற்கு முன்பு குழம்பி போய்விட்டார். பஹ்தாதில் இவரிடம் இருந்து செவியேற்றவர்கள் இவர் குழம்பிய பின்னர் கேட்டவர்கள் ஆவர்.(தக்ரீப் அல் தஹ்தீப் ப.எண்: 344)
         மேற்குறிபிட்ட அறிவிப்பில் அல் மஸூதி அவர்களிடம் இருந்து செவியேற்ற ஹாஸிம் இப்னு காசிம் பஹ்தாத்வாசி ஆவார்.(மீஸான் அல் இஹ்திதால் பாகம் 4). எனவே மேற்குறிபிட்ட அறிவிப்பு பலவீனமானதாகும்.

ﺣﺪﺛﻨﺎ ﻳﻌﻠﻰ، ﻭﻣﺤﻤﺪ اﻟﻤﻌﻨﻰ، ﻗﺎﻻ: ﺣﺪﺛﻨﺎ اﻷﻋﻤﺶ، ﻋﻦ ﺃﺑﻲ ﻇﺒﻴﺎﻥ، ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ، ﻗﺎﻝ: ﺃﻱ اﻟﻘﺮاءﺗﻴﻦ ﺗﻌﺪﻭﻥ ﺃﻭﻝ؟ ﻗﺎﻟﻮا: ﻗﺮاءﺓ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﻗﺎﻝ: ﻻ، ﺑﻞ ﻫﻲ اﻵﺧﺮﺓ، " ﻛﺎﻥ ﻳﻌﺮﺽ اﻟﻘﺮﺁﻥ ﻋﻠﻰ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﻛﻞ ﻋﺎﻡ ﻣﺮﺓ، ﻓﻠﻤﺎ ﻛﺎﻥ اﻟﻌﺎﻡ اﻟﺬﻱ ﻗﺒﺾ ﻓﻴﻪ، ﻋﺮﺽ ﻋﻠﻴﻪ ﻣﺮﺗﻴﻦ، ﻓﺸﻬﺪﻩ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﻓﻌﻠﻢ ﻣﺎ ﻧﺴﺦ ﻣﻨﻪ ﻭﻣﺎ ﺑﺪﻝ " 

அபி ஜப்யான் கூறியதாவது: "என்னிடம் "நீங்கள் இரண்டு கிராத்களில் எது முதலில் வந்தது என்று எண்ணுகிறீர்கள் " என்று இப்னு அப்பாஸ்(ரலி) கேட்டார்கள். அதற்கு நான் "இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் கிராத்" என்று பதிலளித்தேன்.அதற்கு அவர்கள் " இல்லை, அதுதான் இறுதியானது. ஜிப்ரயீல்(அலை) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் குர்ஆன் முழுவதையும் ஓதிக்காட்டுவார்கள். அவர்கள் மரணித்த வருடத்தில் இருமுறை ஓதிக்காண்பிக்கப்பட்டது. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) சாட்சியாக இருந்தார்கள்.அதனால் எது எடுத்து கொள்ளப்பட்டது, எது மாற்றப்பட்டது என்பதனை கற்றுக்கொண்டார்கள். நூல்:முஸ்னத் அஹ்மத் 3422 (மேலும் இதனை ஒத்த செய்திகள்: முஸன்னஃப் இப்னு அபி ஷைபா 30288, சுனன் அல் குப்ரா 7940, முஸ்னத் அபீ யஃலா 2562) 
    மேற்குறிபிட்ட ஆதாரத்தை பொறுத்தவரை அறிவிப்பாளர் தொடர் பலமானது. நாம் இந்த கட்டுரையின் முற்பகுதியில் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களே தான் நபி(சல்) அவர்களிடம் இருந்து 70 சூராக்களைத்தான் பெற்றிருப்பதாக சுய சாட்சியம் அளிக்கும் நிலையில், மேற்குறிபிட்ட ஹதீஸில் இடம் பெறும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது கிராத் எத்தகையது என்பதை விளங்க்கிக்கொள்வது அவசியமாகும். அதன் மூலம் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது கிராத் இறுதியானது என்று எந்த அடிப்படையில் இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகிறார்கள் என்று விளங்கிக்கொள்ள முடியும்.

         நாம் முன்சென்ற தொடரில் கிராத் அல் தாவில் அல்லது கிராத் அல் தஃப்ஸீர் என்பது குறித்து பார்த்தோம். இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது கிராத் என்பது கிராத் அல் தாவில் என்பதே ஆகும்.
ﺣﺪﺛﻨﺎ ﻧﻌﻴﻢ ﺑﻦ ﺣﻤﺎﺩ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻌﺰﻳﺰ ﺑﻦ ﻣﺤﻤﺪ، ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻋﺠﻼﻥ، ﻋﻦ ﻋﻮﻥ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﺘﺒﺔ ﺃﻥ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ، ﺃﻗﺮﺃ ﺭﺟﻼ {ﺇﻥ ﺷﺠﺮﺓ اﻟﺰﻗﻮﻡ ﻃﻌﺎﻡ اﻷﺛﻴﻢ}[اﻟﺪﺧﺎﻥ: 44] ﻓﻘﺎﻝ اﻟﺮﺟﻞ: (ﻃﻌﺎﻡ اﻟﻴﺘﻴﻢ) ﻓﺮﺩﺩﻫﺎ ﻋﻠﻴﻪ، ﻓﻠﻢ ﻳﺴﺘﻘﻢ ﺑﻪ ﻟﺴﺎﻧﻪ. ﻓﻘﺎﻝ: «ﺃﺗﺴﺘﻄﻴﻊ ﺃﻥ ﺗﻘﻮﻝ (ﻃﻌﺎﻡ اﻟﻔﺎﺟﺮ) ؟» ﻗﺎﻝ: ﻧﻌﻢ. ﻗﺎﻝ: «ﻓﺎﻓﻌﻞ»
அவ்ன் இப்னு அப்துல்லாஹ் இப்னு உத்பா கூறியதாவது :
    இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் ஒருவருக்கு " இன்ன ஸஜரத ஸ்ஸக்கூம் தஆமுல் அஸீம்"( ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உணவாகும்.(அத்துகான்:44) என்று கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் அந்த மனிதர் "தஆமுல் எத்தீம்"- (அனாதைகளின் உணவு) என்று கூறினார். எத்துனை முறை கூறியும் அந்த மனிதரின் நாவை சரி செய்ய முடியவில்லை. அவர்கள்( இப்னு மஸ்வூத்(ரலி) ) " தஆமுல் ஃபாஜிர் "-(அநியாயக்காரர்களின் உணவு) என்று கூற இயலுமா? என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் "ஆம்" என்று கூறினார். "அவ்வாறே செய்யுங்கள்" இப்னு மஸ்வூத்(ரலி) கூறிவிட்டார்கள். (நூல்: ஃபதாயில் அல் குர்ஆன் 1/311)
    மேலும் முஜாஹித்(ரஹ்) அவர்கள் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது கிராத் குறித்து பின்வருமாறு கூறுகிறார்கள்
ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﺃﺑﻲ ﻋﻤﺮ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ ﺑﻦ ﻋﻴﻴﻨﺔ، ﻋﻦ اﻷﻋﻤﺶ، ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﻣﺠﺎﻫﺪ: «§ﻟﻮ ﻛﻨﺖ ﻗﺮﺃﺕ ﻗﺮاءﺓ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻟﻢ ﺃﺣﺘﺞ ﺃﻥ ﺃﺳﺄﻝ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻋﻦ ﻛﺜﻴﺮ ﻣﻦ اﻟﻘﺮﺁﻥ ﻣﻤﺎ ﺳﺄﻟﺖ»
    அஃமஷ் அவர்கள் கூறியதாவது முஜாஹித்(ரஹ்) அவர்கள் " நீங்கள் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதலை ஓதினீர்கள் என்றால் ,நீங்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் குர்ஆன் குறித்து அதிகமானதை கேட்க வேண்டிய அவசியம் இருக்காது" என்று கூறினார்கள். (நூல்: இப்னு அஸாகிர் அவர்களது தாரிக் திமிஷ்க் 57/28)
மேற்குறிபிட்ட செய்திகளை வாசிக்கும் யாரும் சொல்லிவிடுவார்கள் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது கிராத்தான் இறுதியானது என்று. முன்பே இறங்கிய வசனத்தில் இடம் பெறும் வார்த்தைகளுக்கு நிகரான விளக்க வார்த்தைகளை கொண்ட ஓதல் முறைதான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களால் இப்னு மஸ்வூத்(ரலி)யின் ஓதல் என்று கூறப்படுகிறது. அதனால்தான் முஸ்னத் அஹ்மத் ஹதீஸில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் இப்னு மஸ்வூத்(ரலி) கிராத்தை கற்றுக்கொண்டார் என்று கூறுவதற்கு பதிலாக "எது எடுத்து கொள்ளப்பட்டது, எது மாற்றப்பட்டது என்பதனை கற்றுக்கொண்டார்கள்.” என்று கூறுகிறார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் கிராத் அல் தாவில் அதாவது விளக்க கிராத் குறித்தே அது இறுதியாக வந்தது என்று கூறுகிறார் என்பதனை அந்த ஹதீஸின் மேலதிக விளக்கத்தில் இருந்தும் , இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது கற்பித்தல் முறையினை கொண்டும், அவரது மாணவரான முஜாஹித்(ரஹ்) அவர்களது கூற்றில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

    இஸ்லாமோஃபோபுகளின் , இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் சிறப்பின் அடிப்படையில் எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு பின்வரும் பதில்களை மேற்குறிபிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நாம் முன்வைக்கிறோம்

1. குர்ஆனின் ஆரம்பகால ஓதலை தெளிவாக கற்றிருந்தவர் இப்னு மஸ்வூத்(ரலி) அதை நபி(சல்) அவர்களது கூற்றான " குர்ஆனை, இறங்கிய போது இருந்த (ﺭﻃﺒﺎ) ஈரத்துடன் அல்லது பொலிவுடன்(ﻏﻀﺎ) ஓத விரும்புவர் இப்னு உம்மு அப்து (இப்னு மஸ்வூத் (ரலி)விடம் ஓத கேட்கட்டும்" என்பது உறுதி செய்கிறது. இந்த வார்த்தைகளின் பொருளையும், அதற்குரிய தக்க விளக்கத்தையும் மேலே கொடுத்துள்ளோம். அவர்கள் கற்றுக்கொடுத்த முதல் ஓதல் முறையில் வந்த ஓதல்கள்தான் மாறுபட்ட ஓதல்களாக ஹதீஸ்களில் பதிய பட்டுள்ளன. அது ஸைத்(ரலி) அவர்களால் சாட்சியமளிக்கப்பட்ட கிராத் அல் ஆகீரா அல்ல. அன்றைய பெரும்பான்மை சமூகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட கிராத் அல் ஆம்மா அல்ல.

2. குர்ஆனின் இறுதி ஓதலின் ஏறக்குறைய 40 சூராக்களை நபி(சல்) அவர்களிடம் இப்னு மஸ்வூத்(ரலி) கற்கவில்லை. இதற்கு இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் கூற்றே சான்று பகிர்கிறது. இந்த 40 சூராக்களை முஜம்மி(ரலி) என்ற நபித்தோழரிடம் இப்னு மஸ்வூத்(ரலி) கற்றுக்கொண்டார்.

3 ஆயினும் இறுதி ஓதலையும் அவர்கள் கற்றிருந்ததால்தான் அவர்களின் முத்தவாதிரான ஓதல்களான கிராத் அல் ஆஸிம், கிராத் அல் ஹம்ஸா, கிராத் அல் கிஸாய், கிராத் அல் ஃகலஃப் என்று அழைக்கப்படும் எந்த ஓதல்களிலும், ஹதீஸ்களில் காணப்படும் முரண்பட்ட ஓதல்கள் இடம் பெறவில்லை. முத்தவாதிரான ஓதல் என்பது ஒவ்வொரு தலைமுறையிலும் அந்த சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஓதல் முறை. எனவேதான் இவ்வாறு ஹதீஸ்களில் இடம்பெறும் இவர்களது முரண்பட்ட ஓதல்கள் "ஸாத் கிராத்" என்று அழைக்கப்படுகிறது.
    இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள், அபூபக்ர்(ரலி)யால்  நியமிக்கப்பட்ட குர்ஆன் தொகுப்பு  குழுவிலும் இடம் பெறவில்லை. அதன் பிறகு உஸ்மான்(ரலி) காலத்தில் ஏற்படுத்தப்பட்ட குழுவிலும் இடம் பெறவில்லை. இதற்கு மேற்குறிபிட்ட காரணங்களே போதுமானது. அப்படி இருக்கையில் இது குறித்த இஸ்லாமோஃபோபுகளின் வாதம் அறிவிலித்தனத்தால் ஏற்பட்டது என்பதில் எந்த சந்தேமும் இல்லை. அல்லாஹு அஃலம்...

No comments:

Post a Comment