பக்கங்கள் செல்ல

Wednesday, October 7, 2015

எதிர்தொடர் 18: விதியின் விதி

ஏக இறைவனின் திருப்பெயரால்


 
          இதுவரை நாம் சந்தித்த பல தொடர்களில் இது ஒரு தத்துவியல் சார்ந்த விவாதத்தை கொண்ட ஒரு தொடர். இந்த தொடரில் கட்டுரையாளரின் இஸ்லாம் கூறும் விதி குறித்த பல கேள்விகளையும் விமர்சன்ங்களையும்[1] எதிர் கொள்ளும் தொடராக இது இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

விதி குறித்து மனித விவாதம்:
     விதி என்பது இஸ்லாம் மட்டும் குறிப்பிடும் கோட்பாடு அல்ல. விதி குறித்து மனிதன் பல நூற்றாண்டுகளாக விவாத்தித்தும் இது குறித்த தெளிவான நிலையை இன்றுவரை அடைய முடிவில்லை என்பதுதான் நிதர்சன உன்மை. மனிதன் இதை நியதிக்கொள்கை(determinism) என்றும் சுயதேர்வு என்றும் மனிதன் பல நூற்றாண்டுகளாக விதி குறித்து பல பெயர்களில் விவாதம் செய்தான் என்பதையும் இன்றும் விவாத்தித்து கொண்டுள்ளான் என்பதையும் கட்டுரையாளர் ஏனோ தெரிந்து இருக்க வில்லை.

நியதிகொள்கை:
     இது இவ்வுலகில் நடைபெறும் அனைத்து செயல்களும் முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதும் அதை இயற்கையாய் தோன்றும் சூழல்கள் தான் நிர்ணயக்கின்றன என்ற கொள்கை. இவர்கள் இவர்களுக்குள்ளும் பல பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இதில் ஒரு உட்பிரிவுதான் விதிக்கொள்கையாகும். விதிக்கொள்கையானது மனிதனுக்கு எந்த சுய தேர்ச்சி செய்யும் அதிகாரமும் இல்லை . அனைத்து செயல்களும் விதியினால் தான் முன்னெடுக்கப்டுகிறது அல்லது அனைத்தும் முன்பே நிர்ணயிக்கப்பட்டது என்று இப்பிரிவினர் கூறிவருகின்றனர்.( இஸ்லாமிய விதிகொள்கை முற்றிலும் இதில் இருந்து வேறுபட்டது என்பதை இந்த கட்டுரையின் இறுதியில் வாசிப்பவர் அறிந்து கொள்வார் இன்ஷா அல்லாஹ்). நியதிகொள்கையின் தேவை இன்றைய உலகில் இல்லை என்று பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்வோர்கள் வாதித்தாலும் இந்த கொள்கையானது இன்றும் அறிவியல் உலகில் கோலோச்சி கொண்டிருக்கிறது எனபதை யாராலும் மறுக்க இயலாது. இன்றைய அண்டத்தின் பிறப்பு குறித்து ஆய்வுகள் அனைத்தும் இந்த நம்பிக்கையை மூலமாக கொண்டதுதான். இந்த அண்டத்தின் நிகழ்வுகளுக்கு தேவையான அனைத்து அறிவியல் விதிகளும் அதன் ஆய்வுகளும் அடுத்து வருவதை இன்று இருக்கும் அறிவியல் விதிகளினால் நம்மால் கணிக்க முடியும் என்பதாக மனிதன் நம்புவதால்தான். Anthropic Principle போன்ற கோட்பாடுகள் சார்புடைய அறிவியலாளர்கள் அதிகமாக நியதிக் கோட்பாடின் பக்கம் சார்புடையவர்களாக உள்ளனர். ஒரு பொருளின் தற்பொதய நிலையை நாம் அறிந்தால் அடுத்த நிலைகளை நம்மால் அறிய முடியும் என்ற  Classical Physics ந் எண்ணம் நியதிக் கொள்கையின் ஒரு பகுதிதான் என Roger Penrose தனது The Emperor’s New Mind P.No:79 என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். மேலும் அவர் வர்ணிக்கும் Superb Theory அதிக முன் நிர்ணயம் செய்வதாய் இருக்கும் என்றும் அதே புத்தகத்தில் குறிப்பிடுகிறார். (The Emperor’s New Mind ,P.No: 226) ல் அதே போல் மரபணு ஆய்வாளர்களும் மனிதனின் அனைத்து செயல்களையும் நிர்ணயிப்பது மனிதனின் மரபணு எனபதில் உறுதியாக உள்ளனர். இதை அடிப்படையாக கொண்டு மனிதனின் குணாதசியங்களை நம்மால் கருவில் இருக்கும் போதே நிர்ணயம் செய்ய முடியும் என்று கூறத் துவங்கியுள்ளனர். மேலும் உளவியலும் இது குறித்து அதிக சார்ப்பு உடையாதாய் உள்ளது. இது குறித்த ஒரு நிகழ்வு நிலை ஆய்வு இந்த கட்டுரையில் இடம் பெறுகிறது. ஆக ஊழ்வழிக்கொள்கையானது அதன் பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ இன்றும் மக்களாலும் அறிஞர்களாலும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது என்பதுதான் உன்மை

சுயதேர்ச்சி:
     சுயதேர்ச்சி குறித்து நாம் நன்றாக அறிந்த ஒன்றுதான். நமக்கும் சுயதேர்ச்சி செய்யும் அதிகாரம் உள்ளது என்பதை நாம் அறிவோம். ஆக இந்த இரண்டும் எதிர் எதிர் தன்மை உடையதாய் மனித வரலாறு நெடுக இது தொடர்பான விவாதத்தை காண முடிகிறது. சுயதேர்ச்சி கொள்கையில் பிடிமானம் கொண்டவர்கள் மனிதன் நியதிகொள்கையை ஏற்றால் அவன் தனது செயலுக்கான பொறுப்பிகளை சுமக்கும் கட்டாயம் இல்லாமல் பொய் விடும் என்றும். இது மனிதன் தவறிழைக்க தூண்டிவிடும் போன்ற பல நியாயமான கூறுகளை முன்னிருத்துகின்றனர். சுயதேர்ச்சி குறித்து Roger Penrose பின் வருமாறு தனது புத்தகமான The Emperor’s New Mind ,P.No: 90 ல்  குறிப்பிடுகிறார் இந்த உலகமானது முன்பே நிர்ணயிக்கப்பட்டது ஆனால் நம்மால் கணக்கிட இயலாதது. மேலும் நமது சுயதேர்ச்சி என்பதும் இது போன்ற ஒன்றுதான் என்றும் கூறுகிறார்
     மேலே குறிபிட்ட சான்றுகளே போதுமானது விதி மற்றும் சுயதேர்ச்சி குறித்த மனித தேடல் குறித்து அறிந்து கொள்ள. . இவ்வாறு அறிவியல் உட்பட்ட பல துறைகள் இவ்வாறு இரட்டை நிலையைத்தான் கொண்டுள்ளது.

இஸ்லாமும் விதியும் :
     இஸ்லாமும் விதியை நம்புவது இறைநம்பிக்கையின் ஒரு அம்சமாக கொண்டுள்ளது. விதியின் மீது நம்பிக்கை கொள்ள வில்லை என்றால் அது இறை மறுப்பு என்கிறது இஸ்லாம். ஏக இறைவனான அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இஸ்லாம் கூறுகிறது. அவன் முக்காலத்தையும் அறிந்தவனாக முக்காலத்தையும் செயல் படுத்துபவானாக அவனது இறைவேதம் பல இடங்களில் கூறுகிறது. ஏன் மனிதன் நல் வழி அடைவதும், வழிகெடுவதும் அவனது நாட்டமே என்று கூறுகிறது. அத்தகைய வசனங்களைதான் நமது கட்டுரையாளர் கூறுகிறார். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் ஆக அவன் அனைத்திற்கும் ஆற்றல் உடையவன் என்பது மிக எளிய ஒரு உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் சதுரங்கம் விளையாடி இருக்கிறோம். அதில் ஒவ்வொரு பக்கமும் 16 காய்கள் இருக்கும். சதுரங்கத்தில் 64 கட்டங்கள் இருக்கும். நாம் அடுத்து எந்த காயயை நகர்துவோம் என்பது மனிதன் யாராலும் கணிக்க இயலாது. ஆனால் காய்களின் எண்ணிகையை குறைப்போம். ஒரே ஒரு சிப்பாய். இரண்டு அல்லது நான்கு கட்டங்கள் என்று மாற்றுவோம். இந்த நிலையில் அந்த சிப்பாயின் நகர்வை நாம் துள்ளியமாக கணித்து விடுவோம். ஏன்? ஆம் நாம் அந்த சிப்பாயின் நகரும் அளவிடுகளையும் இருக்கும் ஆப்சனையும் நன்று அறிந்த வைத்திருப்பதின் விளைவு. நம்மால் இன்று வருங்காலத்தை அறிய முடியாமல் இருப்பதின் காரணமும் இதுதான். நாம் இந்த உலகத்தின் அனைத்து விஷயங்களையும் அறிய முடியாது. அதைதான் குவாண்டம் இயற்பியல்,  Uncertainity Principle மூலம் இந்த உலகிற்கு விளக்கியது. மனிதனால் யாவற்றையும் துள்ளியமாக அறிய முடியாது என்று நிறுபணம் ஆனது. ஆனால் அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் என்பதால் அனைத்தும் அவன் வகுத்த நியதிக்கு உட்பட்டு இருப்பதால் நன்கு அறிவான். ஆக அல்லாஹ் முன்பே அறிந்த ஒன்றுதான் அவனால் வகுக்கப்பட்ட ஒன்றுதான் விதி என்பது. பின் வரும் இறைவசனம் இதை தெளிவாக கூறுகிறது.
(நபியே) ஏதேனும் ஒரு காரியத்தில் நீர் இருந்தாலும், குர்ஆனிலிருந்து எதையாவது நீர் கூறினாலும், (மனிதர்களே!) நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நீங்கள் ஈடுபடும் போது உங்களை நாம் கண்காணிக்காமல் இருப்பதில்லை. பூமியிலும், வானத்திலும் அணுவளவோ, அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ உமது இறைவனை விட்டும் மறையாது. (அவை) தெளிவான பதிவேட்டில் இல்லாமல் இருப்பதில்லை.(அல் குர்ஆன் 10:61 ).

இஸ்லாமும் சுயதேர்வும்:
    விதியை முழுமையாக நம்பிக்கை கொள்ள இஸ்லாம் வலியுறுத்தும் அதே வேலையில் மனிதனின் சுயதேர்வினால் தான் அவனது அனைத்து செயல்களும் அமைவதாக கூறுகிறது. பின் வரும் இறைவசனம் பின் வருமாறு கூறுகிறது:
உங்களுக்கு ஏற்படும் எந்தத் துன்பமாயினும் உங்கள் கைகள் செய்ததன் காரணத்தினால் ஏற்பட்டது. அவன் அதிகமானவற்றை மன்னிக்கிறான்.(அல் குர்ஆன் 42:30)
    இவ்வாறு மனிதனின் சுயதேர்ச்சியின் அவசியத்தையும் அதனால் அவன் பெறும் நன்மை மற்றும் தீமை குறித்து பல குர்ஆன் வசனங்களை பார்க்க முடியும் அதைதான் நமது கட்டுரையாளர் மிக நீளமாக பட்டியலிட்டுள்ளார். 

விதியின் மீது பழிபோட்டு தப்ப முடியுமா?
     எல்லாம் விதி என்று கூறி நாம் செய்யும் எந்த தீமையையும் நம்மால் தட்டி கழிக்க முடியாது நாம் செய்யும் அனைத்திற்கும் நாம் தான் பொறுப்பாளர்களாவோம். பின் வரும் நபி மொழி இதை உறுதி செய்கிறது.
அலீ(ரலி) அறிவித்தார்
      நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவிற்காக (வருகை தந்து) இருந்தார்கள். அப்போது நபியவர்கள் குச்சியொன்றை எடுத்துத தரையில் குத்தியபடி (அழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், 'தம் இருப்பிடம் நரகத்திலா, அல்லது சொர்க்கத்திலா என்று எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் (இதன்மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்கள். பிறகு, '(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்' எனும் (திருக்குர்ஆன் 95:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள்.(புஹாரி 4946)
     விதியை நம்புவதையும் சுயதேர்ச்சி எனும் நமது முயற்ச்சியையும் ஒரு சேர மனிதன் மேற்கொள்வதைதான் இஸ்லாம் வழியுறுத்துகிறது. இதனால் விதியின் மீது பழிபோட்டு பாவம் செய்யவோ, முயற்சி செய்யாமல் சோம்பேரியாய் இருப்பதையோ இஸ்லாம் அனுமதிக்க வில்லை என்பதை மேல் உள்ள நபிமொழி கூறுகிறது.அறிவியலும் தத்துவியலும் இந்த விஷயத்தில் இரட்டை நிலையில் உள்ளதை முன்பே விளக்கியுள்ளோம்.  

இஸ்லாம் கூறும் முரணாகத்தோன்றும் விதி:
     இப்படி முரணாக தோன்றும் விதியை ஏற்பதால், நம்புவதால் ஏற்படும் நன்மைகளை குறிப்பிட்டு கூறுகிறது. பினவரும் இறைவசனம்:
       இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்). கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 57:22,23)
      இந்த இடத்தில் விதி குறித்து முரண்பட்ட நிலையை நம்மால் உணர முடிகிறது. ஆயினும் இந்த முரணை விளக்கி புரியும் அறிவு மனிதனிடம் இல்லை என்பதுதான் நிதர்சனம். பின் வரும் இறைவசனம் இதை தெளிவு படுத்துகிறது:
6:148. "அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்கள் முன்னோர்களும் இணைகற்பித்திருக்க மாட்டோம். எதையும் தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்கவும் மாட்டோம்'' என்று இணைகற்பிப்போர் கூறுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். முடிவில் நமது வேதனையை அனுபவித்தார்கள். "உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா? (இருந்தால்) அதை எங்களுக்குக் காட்டுங்கள்! ஊகத்தையே பின்பற்றுகிறீர்கள்! நீங்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறில்லை'' என்று கேட்பீராக! (அல் குர்ஆன் 6:148)
     மேலும் இது குறித்த மனிதனின் பல நூற்றாண்டு விவாதங்கள் இதை தெளிவாக கூறுவதாய் உள்ளது. மனிதன் எவ்வளவு முயன்றாலும் சுயதேர்ச்சி மற்றும் நியதிக் கொள்கை குறித்த தெளிவான முடிவை இன்றும் எட்ட முடிய வில்லை. ஆக     இஸ்லாமின் விதி குறித்த இந்த நிலையானது மிக சரியானது. Roger Penrose கூறுவது போல நம்மால் சுயதேர்ச்சி என்பது கணக்கியல் விதிகளால் கணக்கிட முடியாத சில காரணிகளை சார்ந்துள்ளதால், சுயதேர்ச்சி குறித்து அறிந்து கொள்ள முடியவில்லை. இந்த அண்டத்தின் அனைத்து விதிகளையும் வகுத்த, எது எந்த காரணியை சார்ந்து இருக்கும் என்பதை வகுத்த இறைவனுக்கு அது சாத்தியம்தான் எனும் போது இஸ்லாத்தின் விதி கொள்கை மிக சரியான அளவீடுகளை கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. ஆதாவது மனித அறிவின் எல்லை. மனித அறிவின் பலவீனம்தான விதி குறித்து அறிய முடியாததின் காரணம். ஆக இஸ்லாம் இது குறித்து தெளிவான நிலையை கொண்டுள்ளது. மனிதனால் எதுவெல்லாம் தனது ஆய்வினால் அறிய முடியாதோ அவை மறைவானவையாக இஸ்லாம் கூறுகிறது. அதே நேரத்தில் அதில் நம்பிக்கை கொள்ள நம்மை வலியுறுத்துகிறது. விதியை எப்படி ஆணித்தரமாக மறுக்க இயலாதோ அது போல சுயதேர்ச்சியையும் மறுக்க இயலாது. ஆக இரண்டையும் ஏற்க வலியுறுத்துகிறது. மேலும் இது குறித்து விவாதித்து கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை என்பதால் விதி குறித்து விவாதிப்பதை இஸ்லாம் தடையும் செய்துள்ளது. பின் வரும் நபிமொழி அதை தெளிவாக கூறுகிறது.
அப்துல்லாஹ் பின் அமர் பின் அல் ஆஸ்(ரலி) அறிவித்ததாவது:
     நபிதோழர்கள் சிலர் விதி குறித்து விவாதித்து கொண்டிருக்கையில் நபி(சல்) அவர்கள் மதுளை விதைகள் முகத்தில் சிதறியது போல் கோபத்தால் முகம் சிவந்தவராக  வெளியில் வந்துஇதற்காகத்தான் நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்களா அல்லது இதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளீர்களா? என்று கோபத்துடன் கேட்டார்கள். (மேலும்) “நீங்கள் குர்ஆனின் ஒரு பகுதியை மற்றோரு பகுதியுடன் மோதச்செய்கிறீர்களா? இதுதான் இதற்கு முன் சென்ற சமுதயங்கள் அழியவதற்கு காரணமாய் அமைந்ததுஎன்றும் கூறினார்கள்.                                                                               நூல்:கிதாபுல் சுன்னா (85), இப்னு  மாஜா
     ஆக இஸ்லாம் விதி குறித்து விவாதிப்பதை பல இடங்களில் தடுத்தும் உள்ளது. விதி குறித்த இஸ்லாமின் நிலைபாடு மிகச்சரியானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விதி குறித்தும் சுயதேர்ச்சி குறித்தும் என்ன முயன்றாலும் அறிவியலாலும் தத்துவவியலாலும் தெளிவான ஒரு நிலையை என்றும் எட்ட இயலாது. இரண்டையும் ஏற்கும் நிலைதான் ஏற்படும். இதற்கு மனித அறிவின் பலவீனமே காரணம் என்பதை தெளிவாக இஸ்லாம் நிறுவியுள்ளது இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என்பதற்கு போதிய சான்று.
நிகழ்வு நிலை ஆய்வு:
     இந்த பகுதி இந்த கட்டுரையில் சேர்க்கப்படுவதற்கான அவசியம் விதி என்பது இல்லை என்று கூறுவோருக்கு, அறிவியலும் விதி குறித்து முரண்பட்ட இரு நிலைகளை கொண்டுள்ளது என்பதை விளக்கவே.ஒருமுறை புகழ் பெற்ற மனோதத்துவ நிபுனர்  பார்க் எலியட் டயட்ஸிடம் பின் வரும் கேள்வி ஒரு கருத்தரங்கில் கேட்கப்பட்டது. “இன்னொரு டெட் பண்டி, டாமர், கேஸி, சிக்காட்டிலோ போன்ற தொடர் கொலைகாரர்களை விஞ்ஞானப்பூர்வமாக திட்டமிட்டு உருவாக்க என்னவெல்லாம் வேண்டும்?” என்று பார்க்கிட்ம கேட்கப்பட்ட்து.
     அதற்கு “மனைவியையும் குழந்தைகளையும் கெட்ட வார்த்தைகளால் திட்டித்தாக்குகிற, வன்முறை நிறைந்த தந்தை தேவை. ஹிஸ்டீரியாவும், குடிப்பழக்கமும், முன்கோபமும் உள்ள அம்மாவும் தேவை. குழந்தையை அம்மா மிக மோசமாக நடத்த வேண்டும். 12 வயதுவரை மகனை, அம்மா தன் பக்கத்தில் படுக்க வைத்து கொள்ள வேண்டும். செக்ஷுவலாக மகனை தூண்டி, அதை பிறகு குற்றம் சொல்லி அவனை கட்டிப்போட்டு பிரம்பால் விளாச வேண்டும்..........தவிர முளையின் முன்பக்கம் வளர்ச்சியடையாமை, அதீத டெஸ்டோஸ்டிரோன் சுரத்தல்...இவை அனைத்தும் குறிப்பிட்ட கலவையில் சேர்ந்த்தால் குழந்தையின் உள்ளத்தில் 99% வன்முறைக்கான முழுமையான வெடிமருந்த்து தீப்பற்றி ஒரு சீரியல் கொலைகாரன் உருவெடுப்பான்!” என்று டாக்டர் பதிலளித்தார்.
     விதி ஒன்று இல்லவே இல்லை என்று கூறுவோர் இதற்கு என்ன பதில் கூறுவர். இதில் இருக்கும் எத்துனை காரணங்கள் கொலை செய்த நபரால் தேர்வு செய்யப்பட்டது. மேலே கூறப்பட்ட கொலைகார்ர்கள் இந்த மாதிரியான காரணங்களில் ஒன்றோ பலவோ அவர்களது வாழ்க்கையில் இடம் பெற்று இருப்பதை காணமுடியும். ஏன் இந்த அடிப்படையில் இவர்களை தண்டனையில் இருந்து இந்த மனித சமுகம் விடுவிக்கவில்லை. அல்லது ஒட்டுமொத்த மனித சமுகத்தாலும் புரிய முடியாத ஏதேனும் காரணம் உள்ளதா. அல்லது சுயதேர்ச்சி என்பது இல்லவே இல்லையா? அறிவியல் ஏன் இப்படி மனித சமுகத்தின் முடிவுக்கும் அறிவுக்கும் முரணாக பேசுகிறது. விதியை மறுப்போர் மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன் “சுயதேர்ச்சியும், நியதியும் (விதியும்) உன்மைதான்” என்ற பெர்னார்ட் ஹாலண்டர் (IN SEARCH OF THE SOUL, AND THE MECHANISM OF EMOTION THOUGHT AND CONDUCT” Vol.2, P.No:18  என்ற புத்தகத்தில்  இருந்து) என்ற அறிவியலாளாரின் கருத்தை நினைவில் கொள்ளட்டும்