பக்கங்கள் செல்ல

Sunday, March 20, 2022

கல்லெறி தண்டனை குர்ஆனில் காணவில்லையா???

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கல்லெறி தண்டனை - குர்ஆனில் காணவில்லையா???
  
 குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற இஸ்லாமோஃபோபுகளின் குற்றச்சாட்டில் மிக பிரதானமான இடத்தை பிடிக்கும் வாதம் குர்ஆனில் இருந்த கல்லெறி தண்டனை தொடர்பான வசனம் காணவில்லை என்பதாகும். அதாவது திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்ததற்காக பிடிக்கப்பட்டால் அவர்களின் மீது கல்லெறிதல் என்ற தண்டனை நிறைவேற்றப்படுதல் குறித்த வசனம் நபி(சல்) அவர்களது காலத்தில் குர்ஆனில் இருந்ததாகவும், அது தற்போதைய குர்ஆனில் காணவில்லை அல்லது உஸ்மான்(ரலி) தொகுத்த குர்ஆனில் காணவில்லை என்ற குற்றச்சாட்டுதான் அது. அதற்கு இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரங்கள் மற்றும் அதன் விளக்கத்தையும் காண்போம்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
........................................ அப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, 'நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்' (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:)

        நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளியதில் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி கொல்லலாகும்.

                அறிந்துகொள்ளுங்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மர்யமின் புதல்வர் ஈசா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்......(புகாரி 6830)
ஆதாரம் 2:

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، ‏.‏ وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ نَزَلَتْ آيَةُ الرَّجْمِ وَرَضَاعَةُ الْكَبِيرِ عَشْرًا وَلَقَدْ كَانَ فِي صَحِيفَةٍ تَحْتَ سَرِيرِي فَلَمَّا مَاتَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَتَشَاغَلْنَا بِمَوْتِهِ دَخَلَ دَاجِنٌ فَأَكَلَهَا ‏.‏
ஆயிஷா(ரலி) கூறியதாவது:
              கல்லெறி குறித்த ஆயத்தும், பருவமடைந்தவருக்கு பாலுட்டுவது குறித்த ஆயத்தும் இறங்கியிருந்தது. அது எழுதப்பட்ட காகிதம் எனது தலயணைக்கு கீழ் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் இறந்த போது ,நாங்கள் கவலையில் இருந்தோம். அப்போது வளர்ப்பு ஆடு ஒன்று அதை தின்றுவிட்டது (இப்னு மாஜா 2020)
          மேற்குறிபிட்ட இரு ஆதாரங்களின் விளக்கம் மற்றும் விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம் இஸ்லாமோஃபோபுகளின் பிதற்றல் வாததத்திற்கான பதிலை காண்போம் இன் ஷா அல்லாஹ்.

கல்லெறி தண்டனை வசனம் காணாமல் போனதா?

       மேற்குறிபிட்ட ஆதாரம் 1 க்கு இருவகையான விளக்கம் ஏனைய ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது பெற முடியும்

1.கல்லெறி தண்டனை வசனம் குர்ஆனில் முதலில் இறங்கிய வசனம் பின்பு அது உயர்த்தப்பட்டுவிட்டது. சட்டம் வழக்கில் உள்ளது.

2.கல்லெறி தணடனை வசனம் குர்ஆனின் ஆயத்தாக என்றும் இருந்ததில்லை. அது இறை சட்டமாக வந்தது. அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களால் பின்பற்றப்பட்ட சட்டம்.
விளக்கம் 1: கல்லெறி தண்டனை வசனம் குர்ஆனில் இறங்கிய வசனம் பின்பு அது உயர்த்தப்பட்டுவிட்டது சட்டம் வழக்கில் உள்ளது.

       கல்லெறி தண்டனை குறித்த வசனம் அல்லாஹ் முதலில் இறக்கிய வசனமாகும் ஆயினும் பின்னாளில் அது உயர்த்தப்பட்டுவிட்டது என்ற கருத்து பின்வரும் ஹதீஸில் இடம் பெறுகிறது.

حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا ابْنُ فَضَالَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، قَالَ: قَالَ لِي أُبَيُّ بْنُ كَعْبٍ: «يَا زِرُّ» كَأَيِّنْ تَقْرَأُ سُورَةَ الْأَحْزَابِ؟ " قَالَ: قُلْتُ: كَذَا وَكَذَا آيَةً قَالَ: " إِنْ كَانَتْ لَتُضَاهِي سُورَةَ الْبَقَرَةِ، وَإِنْ كُنَّا لَنَقْرَأُ فِيهَا: وَالشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا أَلْبَتَّةَ نَكَالًا مِنَ اللَّهِ وَرَسُولِهِ، فَرُفِعَ فِيمَا رُفِعَ "
            ஜிர் அவர்கள் கூறியதாவது : உபை இப்னு கஅஃப் (ரலி) அவர்கள் " ஜிர்ரே! நீங்கள் அல் அஹ்ஸாப் சூராவை எவ்வாறு ஓதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான் "இந்த இந்த ஆயத்களை ஓதுகிறேன்" என்று கூறினேன். அதற்கு அவர்கள் "அது சூரத் அல் பக்ரா விற்கு நிகராக இருந்தது. மேலும் அதில் நாங்கள் 'ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்கள் மாற்றமின்றி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் தண்டனை ஆகும்' என்பதை ஓதியிருக்கிறோம். பின்னர் உயர்த்தப்பட்டவைகளுடன் அதுவும் உயர்த்தப்பட்டுவிட்டது " என்று கூறினார்கள் (நூல்: முஸ்னத் அபிதாவூத் அல் தயாலிசி ஹதீஸ் எண்: 542)
          இதற்கு எல்லாம் முத்தாய்பாக உமர்(ரலி) அவர்களே தெளிவாக இந்த வசனம் அல்குர்ஆனில் இறங்கியது. அல்லாஹ்வின் தூதர்(சல்) இருந்த போது எடுத்துக்கொள்ளப்பட்ட வசனங்களுடன் அது எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று குறிப்பிடும் செய்தி இதோ:
اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻳﻘﻮﻝ: ﺃﻣﺮ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﻣﻨﺎﺩﻳﺎ ﻓﻨﺎﺩﻯ ﺃﻥ اﻟﺼﻼﺓ ﺟﺎﻣﻌﺔ، ﺛﻢ ﺻﻌﺪ اﻟﻤﻨﺒﺮ ﻓﺤﻤﺪ اﻟﻠﻪ ﻭﺃﺛﻨﻰ ﻋﻠﻴﻪ، ﺛﻢ ﻗﺎﻝ: ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻨﺎﺱ، ﻻ ﺗﺨﺪﻋﻦ ﻋﻦ ﺁﻳﺔ اﻟﺮﺟﻢ، ﻓﺈﻧﻬﺎ ﻗﺪ ﻧﺰﻟﺖ ﻓﻲ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ ﻭﻗﺮﺃﻧﺎﻫﺎ، ﻭﻟﻜﻨﻬﺎ ﺫﻫﺒﺖ ﻓﻲ ﻗﺮﺁﻥ ﻛﺜﻴﺮ ﺫﻫﺐ ﻣﻊ ﻣﺤﻤﺪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭﺁﻳﺔ ﺫﻟﻚ ﺃﻧﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺪ ﺭﺟﻢ، ﻭﺃﻥ ﺃﺑﺎ ﺑﻜﺮ ﻗﺪ ﺭﺟﻢ، ﻭﺭﺟﻤﺖ ﺑﻌﺪﻫﻤﺎ، ﻭﺇﻧﻪ ﺳﻴﺠﻲء ﻗﻮﻡ ﻣﻦ ﻫﺬﻩ اﻷﻣﺔ ﻳﻜﺬﺑﻮﻥ ﺑﺎﻟﺮﺟﻢ، ﻭﻳﻜﺬﺑﻮﻥ ﺑﻄﻠﻮﻉ اﻟﺸﻤﺲ ﻣﻦ ﻣﻐﺮﺑﻬﺎ ﻭﻳﻜﺬﺑﻮﻥ ﺑﺎﻟﺸﻔﺎﻋﺔ، ﻭﻳﻜﺬﺑﻮﻥ ﺑﺎﻟﺤﻮﺽ، ﻭﻳﻜﺬﺑﻮﻥ ﺑﺎﻟﺪﺟﺎﻝ، ﻭﻳﻜﺬﺑﻮﻥ ﺑﻌﺬاﺏ اﻟﻘﺒﺮ، ﻭﻳﻜﺬﺑﻮﻥ ﺑﻘﻮﻡ ﻳﺨﺮﺟﻮﻥ ﻣﻦ اﻟﻨﺎﺭ ﺑﻌﺪﻣﺎ ﺃﺩﺧﻠﻮﻫﺎ

    இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது: உமர்(ரலி) கூட்டுத்தொழுகைக்காக அறிவிப்பு செய்ய கட்டளையிட்டார்கள். பிறகு மின்பரில் ஏறி அல்லாஹ்வை புகழ்ந்தார்கள்.பிறகு, " மக்களே! ஆயத் அல் ரஜ்ம் குறித்து நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் வேதத்தில் அது இறக்கியிருந்தது. அதை நாங்கள் ஓதியும் இருக்கிறோம். ஆனால் முஹம்மது(ஸல்) அவர்கள்  இருக்கும் போது குர்ஆனில் பேரளவானது எடுத்து கொள்ளப்பட்டதுடன் அதுவும் எடுத்து கொள்ளப்பட்டுவிட்டது. அந்த ஆயத்தினால்தான் அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் கல்லெறி தண்டனையை நிறைவேற்றினார்கள். அபூபக்ர்(ரலி) அவர்களும் கல்லெறி தண்டனையை நிறைவேற்றினார்கள். அவர்களுக்கு பின் நானும் கல்லெறி தண்டனையை நிறைவேற்றினேன். ஆனால் இந்த சமூகத்தில் சில மக்கள் தோன்றி கல்லெறி தண்டனையை மறுப்பார்கள்,(உலக அழிவின் நெருக்கத்தில்) மேற்கில் இருந்து சூரியன் உதிப்பதையும், பரிந்துரைப்பதையும் மறுப்பார்கள், (கவ்ஸர்) தடாகத்தை மறுப்பார்கள், தஜ்ஜாலை மறுப்பார்கள், கப்ரின் வேதனையை மறுப்பார்கள், நரகத்தில் நுழைந்தவர்கள் சிறிது காலத்திற்கு பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்பதை மறுப்பார்கள்,"கூறினார்கள்.  (நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13364, துர்ருல் மன்ஸூர் 6/558, ஜாமீயுல் அஹாதீஸ் 28257, கன்ஸூல் அஃமால் 13518,முஸ்னத் ஜாமிஃ 10555)  

      எனவே கல்லெறி தண்டனை குறித்த வசனம் அல்லாஹ்வால் இறக்கப்பட்டது பின்னர் அது உயர்த்தப்பட்டுவிட்டது என்பது தெளிவாக இந்த செய்தி குறிப்பிடுகிறது. எனவே உயர்த்தப்பட்ட வசனம் தற்கால குர்ஆனில் இடம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பது தெளிவாகிறது.

1) இந்த கருத்தை அல் பைஹக்கி தனது சுனன் அல் குப்ராவில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
فِي هَذَا وَمَا قَبْلَهُ دَلَالَةٌ عَلَى أَنَّ آيَةَ الرَّجْمِ حُكْمُهَا ثَابِتٌ، وَتِلَاوَتُهَا مَنْسُوخَةٌ وَهَذَا مِمَّا لَا أَعْلَمُ فِيهِ خِلَافًا
           இந்த செய்தியும் இதற்கு முன்பு இருப்பதும் கல்லெறி தண்டனை என்பது உறுதியானது என்பதற்கு சான்றாகும். மேலும் அதன் ஓதல் உயர்த்தப்பட்டுவிட்டது என்பதில் எந்த மாற்று கருத்தும் இருப்பதாக நான் அறியவில்லை. (சுனன் அல் குப்ரா அல் பைஹக்கி 16913)
2) இதே கருத்தை நவவீ அவர்கள் தனது ஸரஹ் ஸஹீஹ் முஸ்லீமின் 1691 வது செய்தியின் விளக்கத்தின் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
ﻗﻮﻟﻪ (ﻓﻜﺎﻥ ﻣﻤﺎ ﺃﻧﺰﻝ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﺁﻳﺔ اﻟﺮﺟﻢ ﻗﺮﺃﻧﺎﻫﺎ ﻭﻭﻋﻴﻨﺎﻫﺎ ﻭﻋﻘﻠﻨﺎﻫﺎ) ﺃﺭاﺩ ﺑﺂﻳﺔ اﻟﺮﺟﻢ اﻟﺸﻴﺦ ﻭاﻟﺸﻴﺨﺔ ﺇﺫا ﺯﻧﻴﺎ ﻓﺎﺭﺟﻤﻮﻫﻤﺎ ﺃﻟﺒﺘﺔ ﻭﻫﺬا ﻣﻤﺎ ﻧﺴﺦ ﻟﻔﻈﻪ ﻭﺑﻘﻲ ﺣﻜﻤﻪ
          ("அல்லாஹ் அருளியதில் கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதை மனனமிட்டிருக்கிறோம். அதை விளங்கியுமிருக்கிறோம்") என்ற கூற்று 'திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்கள் மாற்றமின்றி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற வசனத்தில் ஓதல் உயர்த்தப்பட்டு அதன் சட்டம் மட்டும் வழக்கில் இருப்பதை கூறுகிறது. (ஸரஹ் ஸஹீஹ் முஸ்லீம் பாகம் 11 பக்கம் 191)

                    கல்லெறி தண்டனை குறித்த வசனம் இறங்கும் போதே குர்ஆனின் ஆயத்தாக இறங்கவில்லை. அது சட்டமாகவே இறங்கியது. என்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக அமைந்துள்ளது.

ஆதாரம் 1:
أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ الْمُقْرِئُ، أنبأ الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، ثنا يُوسُفُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، ثنا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: نُبِّئْتُ، عَنِ ابْنِ أَخِي كَثِيرِ بْنِ الصَّلْتِ قَالَ: كُنَّا عِنْدَ مَرْوَانَ، وَفِينَا زَيْدُ بْنُ ثَابِتٍ، قَالَ زَيْدٌ: كُنَّا نَقْرَأُ: الشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّةَ، قَالَ: فَقَالَ مَرْوَانُ: أَفَلَا نَجْعَلُهُ فِي الْمُصْحَفِ؟ قَالَ: لَا، أَلَا تَرَى الشَّابَّيْنِ الثَّيِّبَيْنِ يُرْجَمَانِ؟ قَالَ: وَقَالَ: ذَكَرُوا ذَلِكَ وَفِينَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: أَنَا أَشْفِيكُمْ مِنْ ذَاكَ، قَالَ: قُلْنَا: كَيْفَ؟ قَالَ: آتِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذْكُرُ كَذَا وَكَذَا، فَإِذَا ذَكَرَ الرَّجْمَ أَقُولُ: يَا رَسُولَ اللهِ أَكْتِبْنِي آيَةَ الرَّجْمِ، قَالَ: فَأتَيْتُهُ فَذَكَّرْتُهُ، قَالَ: فَذَكَرَ آيَةَ الرَّجْمِ، قَالَ: فَقَالَ: يَا رَسُولَ اللهِ أَكْتِبْنِي آيَةَ الرَّجْمِ، قَالَ: " لَا أَسْتَطِيعُ ذَاكَ "
                கஸீர் இப்னு சல்த் கூறியதாவது: நாங்கள் மர்வான் மற்றும் ஜைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோருடன் இருக்கும் போது , ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள், " நாங்கள் 'திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்கள் மாற்றமின்றி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்' என்று ஓதியிருக்கிறோம்" என்று கூறினார்கள். அதற்கு மர்வான் அவர்கள், “அதை  ஏன் நாம் முஸ்ஹஃப்பில்  சேர்க்கக்கூடாது? என்றார்கள். அதற்கு "கூடாது. நீங்கள் (விபச்சாரம் செய்த) திருமணமான ஆணும் பெண்ணும் கல்லெறிந்து கொல்லப்படுவதை காணவில்லையா? என்று கேட்டார்கள். அதை குறிபிட்டதும், எங்களது மத்தியில் இருந்த உமர் இப்னு அல் கத்தாப்(ரலி) அவர்கள், “நான் இது குறித்த தெளிவை தரட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் "எப்படி?" என்று கேட்டோம். அதற்கு (உமர்(ரலி)) அவர்கள் "நபி(சல்) அவர்கள் இவ்வாறு இவ்வாறு கல்லெறி தண்டனை குறித்து கூறியதும், நான் “ அல்லாஹ்வின் தூதரே! எனக்கு கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை எழுதி தாருங்கள்", என்று கேட்டேன். அதற்கு நபி(சல்), “நான் அவ்வாறு செய்ய இயலாது", என்று கூறிவிட்டார்கள். (சுனன் அல் குப்ரா அன் நஸ்யீ 7110, சுனன் அல் குப்ரா அல் பைஹக்கி 16913)
        மேற்குறிபிட்ட செய்தியில் ஆயத் அல் ரஜ்ம் குர்ஆனில் ஏன் இடம் பெறவில்லை என்ற மர்வான் அவர்களது கேள்விக்கு உமர்(ரலி) அவர்களே அது அல்லாஹ்வின் தூதர் எழுதித்தரவில்லை. ஆக அது குர்ஆனில் இடம் பெறவில்லை என்று விளக்குகிறார்கள்.

ஆதாரம் 2:
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ هَانِئٍ، ثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَا: ثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، عَنْ كَثِيرِ بْنِ الصَّلْتِ، قَالَ: كَانَ ابْنُ الْعَاصِ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ يَكْتُبَانِ الْمَصَاحِفَ فَمَرَّا عَلَى هَذِهِ الْآيَةِ، فَقَالَ زَيْدٌ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّةَ» فَقَالَ عَمْرٌو: " لَمَّا نَزَلَتْ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: أَكْتُبُهَا؟ فَكَأَنَّهُ كَرِهَ ذَلِكَ " فَقَالَ لَهُ عَمْرٌو: «أَلَا تَرَى أَنَّ الشَّيْخَ إِذَا زَنَى وَقَدْ أُحْصِنَ جُلِدَ وَرُجِمَ، وَإِذَا لَمْ يُحْصِنْ جُلِدَ، وَأَنَّ الثَّيِّبَ إِذَا زَنَى وَقَدْ أُحْصِنَ رُجِمَ» هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ "

        கஸீர் இப்னு சல்த் கூறியதாவது: இப்னு அல் ஆஸ்(ரலி) அவர்களும் ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் முஸ்ஹஃப்பை எழுதி கொண்டிருந்தார்கள். இந்த வசனத்தை கடந்து சென்றார்கள், மேலும் ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள் "ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்கள் மாற்றமின்றி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்'” என்று நபி(சல்) அவர்கள் கூற கேட்டுள்ளோம் என்று கூறினார்கள். அப்போது அம்ர் இப்னு அல் ஆஸ்(ரலி) கூறினார்கள் "இது இறங்கியதும் நபி(சல்) அவர்களிடம் சென்று "இதை எழுதட்டுமா?" என்று கேட்டேன். அவர்கள் அதை விரும்பவில்லை. மேலும் அம்ரு(ரலி) ,”திருமாணமானவர் விபச்சாரம் செய்தால் அவர் கசையடி கொடுக்கப்பட்டு கல்லெறிந்து கொல்லப்படுவதையும், திருமணமாகதவராக இருந்தால் கசையடி கொடுக்கப்படுவதையும், திருமாணவள் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லப்படுவதையும் நீங்கள் காணவில்லையா? என்று கேட்டார்கள். (முஸ்தத்ரக் அல் ஹாகிம் 8071)
            அம்ர் இப்னு அல் ஆஸ்(ரலி) அவர்களும் நபி(சல்) அவர்கள் ஆயத் அல் ரஜ்மை எழுத அனுமதிக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆக இந்த செய்தியானது ஒன்றுக்கு மேற்ப்ட்ட நபித்தோழர்களால் உறுதி செய்யப்பட்டது ஆகும். மேலும் முன்சென்ற முதல் விளக்கத்தின் ஆதாரமான முஸ்னத் அபிதாவூத் அல் தயாலிசி ஹதீஸ் எண்: 542, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13364 ஆகிய செய்திகளை   விட அறிவிப்பாளர் தொடர் ரீதியாக மிகவும் உயர்ந்த தரத்தில் உள்ளதாகும்.

             மேலும் நபி(சல்) அவர்களுக்கு குர்ஆனின் வஹி இறங்கும் தருணங்களில் எப்படி செயல் படுவார்கள் என்று பின்வரும் செய்தி உறுதிபடுத்துகிறது:

இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது:

            நான் உஸ்மான் பின் அஃபானிடம் “ அல் அன்ஃபால் நூறுக்கு குறைவான வசனங்களை கொண்டிருக்க, அது குறித்து உங்களது கருத்து என்ன ?, அல் பராஹ் அல்லது அத் தவ்பா நூறு வசனங்களுக்கு மேல் கொண்டிருக்க, அது குறித்து உங்களது கருத்து என்ன?” என்று கேட்டேன். மேலும் “நீங்கள் ஏன் அவ்விரணடையும் ஒன்றாக பதிவிட்டு ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதை எழுதாமல் விட்டீர்கள்” என்றும் கேட்டேன். அதற்கு உஸ்மான் அவர்கள் “ நபி(சல்) அவர்களுக்கு இறை அறிவிப்பு ஏதுமின்றி பல நாட்கள் சென்றிருக்கும், பிறகு சில நேரங்களில் அதிகமானவை இறங்கும். ஆக ஏதேனும் இறைவனிடம் இருந்து அறிவிக்கப்பட்டால், எழுத்தர்களை அழைப்பார்கள். மேலும் கூறுவார்கள் இந்த இந்த இடத்தில் இன்ன இன்ன வசனங்கள் இடம்பெறும் சூராவில் இந்த வசனத்தை எழுதுங்கள் என்று கட்டளையிடுவார்கள் ........( நூல்: திர்மிதி 3086)
           அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் குர்ஆனின் ஆயத்கள் இறங்கும் போது அதனை உடனே எழுத்தில் பதியவே கூறுவார்கள். நபி(சல்) அவர்கள் கல்லெறி தண்டனை வசனத்தை எழுத மறுத்ததில் இருந்து இந்த வசனம் குர்ஆனின் வசனம் அல்ல என்பது உறுதியாகிறது.

     மேலும் மேற்குறிபிட்ட செய்திகளை உறுதி படுத்தும் விதமாக உமர்(ரலி) அவர்களின் பின்வரும் செய்தி அமைந்துள்ளது:

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ عُمَرَ، - يَعْنِي ابْنَ الْخَطَّابِ - رضى الله عنه خَطَبَ فَقَالَ إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ فَكَانَ فِيمَا أَنْزَلَ عَلَيْهِ آيَةُ الرَّجْمِ فَقَرَأْنَاهَا وَوَعَيْنَاهَا وَرَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَرَجَمْنَا مِنْ بَعْدِهِ وَإِنِّي خَشِيتُ - إِنْ طَالَ بِالنَّاسِ الزَّمَانُ - أَنْ يَقُولَ قَائِلٌ مَا نَجِدُ آيَةَ الرَّجْمِ فِي كِتَابِ اللَّهِ فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللَّهُ تَعَالَى فَالرَّجْمُ حَقٌّ عَلَى مَنْ زَنَى مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ إِذَا كَانَ مُحْصَنًا إِذَا قَامَتِ الْبَيِّنَةُ أَوْ كَانَ حَمْلٌ أَوِ اعْتِرَافٌ وَايْمُ اللَّهِ لَوْلاَ أَنْ يَقُولَ النَّاسُ زَادَ عُمَرُ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ لَكَتَبْتُهَا ‏.‏
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
 
      உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள். அதில், "முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்தியத்துடன் அல்லாஹ் அனுப்பினான். அவர்களுக்கு வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளியதில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதை மனனமிட்டிருக்கிறோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) நிறை வேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாமும் அந்தத் தண்டனையை நடைமுறைப்படுத்தினோம். காலப்போக்கில் மக்களில் சிலர் "இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை" என்று கூறி, இறைவன் அருளிய விதியொன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்து, அதற்குச் சாட்சி இருந்தாலோ, அல்லது கர்ப்பம் ஏற்பட்டாலோ, அல்லது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறைச்சட்டத்தில் உள்ளதாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக "உமர் அல்லாஹ்வின் வேதத்தில் அதிகபடுத்திவிட்டார் " என்று மக்கள் கூறிவிடுவார்கள் என்ற அச்சம் இல்லை என்றால் நான் அதை அதில் எழுதியிருப்பேன்" ,என்று கூறினார்கள். ( நூல்: சுனன் அபூதாவுத் 4418)
      மேற்குறிபிட்ட ஆதாரங்களில் இருந்து உமர்(ரலி) அவர்கள் ஆயத் அல் ரஜ்ம் அல்குர்ஆனின் வசனம் அல்ல என்பதை தெளிவாக விளங்கியிருந்தார்கள் என்பதை அறியமுடிகிறது.

      அப்படி இருக்கையில் ஏன் உமர்(ரலி) “ அல்லாஹ் அருளியதில் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது.அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம் ". என்றும் “மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும்.” என்றும் கூறுவது எதனால்???? அதற்கான விடை இதோ.......

அல்லாஹ்வின் தூதர்(சல்) தடுத்தவையும் அனுமதித்தவையும் அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளதுதான்:

              அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் தடுப்பதும், அனுமதிப்பதும் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதுதான். அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்,
       இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை. (அல் குர்ஆன் 4:80)
மேலும் நபி(சல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ حَيَّانَ، سَمِعَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، وَابْنَ، عَبَّاسٍ أَنَّهُمَا شَهِدَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ وَالنَّقِيرِ ثُمَّ تَلاَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هَذِهِ الآيَةَ ‏ {‏ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ‏}
இப்னு உமர்(ரலி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்:
            அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் அத்துப்பா, அல் ஹன்தம், அல் முசஃப்பத் மற்றும் அன் நகீர் ஆகியவற்றை தடை செய்தார்கள். பிறகு நபி(சல்) அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள்: இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! (அறிவிப்பாளர்:சயீத் இப்னு ஜுபைர் நூல்: சுனன் அந்நஸயீ 5643)
மேலும் அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டல் அல்குர்ஆனின் வழிகாட்டல்தான் என்பதை நபி(சல்) அவர்களே விளக்கியுள்ளார்கள்

            நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்: (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது சம்பந்தமான) விஷயத்தை அவர்களிடம் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்! (அந்த அடிமை மரணித்த பின்) அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத் தான்!" என்று கூறினார்கள். பிறகு, மாலை நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்து, 'அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களின் அந்த நிபந்தனை வீணானது; (செல்லாதது;) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்!" எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்:ஆயிஷா(ரலி) .புகாரி 2155. )
    மேற்குறிபிட்ட நிபந்தனையான "அடிமை மரணித்த பின் அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத் தான்!" என்பது அல்குர்ஆனில் வசனமாக இல்லை. ஆயினும் இது வேதத்தின் நிபந்தனை என்று நபி(சல்) அவர்கள் கூறுவது அல்லாஹ்வின் தூதராகிய தன்னால் விதிக்கப்படும் நிபந்தனை என்பது வேதத்தின் நிபந்தனை என்பதால்தான்.

            அல்லாஹ் அல்குர்ஆனில் "இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார் (அல்குர்ஆன் 4:80) " மற்றும் "இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்!” என்னும் ஆயத்களின் அடிப்படையில் அல்லாஹ்வின் தூதரின் நிபந்தனை என்பது வேதத்தின் கட்டளை என்பது தெளிவாகிறது. மேலும் நபிதோழர்களும் அப்படித்தான் விளங்கியிருந்தனர் என்பதை பின்வரும் செய்தியும் உறுதி செய்கிறது.
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்:
            அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?' என்று கூறினார்கள்.6 இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, 'உம்மு யஅகூப்' எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, 'இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், '(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!' என்று கேட்டதற்கு அவர்கள், 'நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். 'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்' எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?' என்று கேட்டார்கள். அந்தப் பெண், 'ஆம் (ஒதினேன்)' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்' என்று கூறினார்கள். .........(புகாரி 4886)

          ஆகவே நபி(சல்) அவர்கள் விதிக்கும் சட்டம் என்பது வேதத்தின் சட்டம் தான். எனவே தான் அல்லாஹ் விபச்சாரம் செய்தவர்கள் குறித்து முதலில் பின்வருமாறு வசனத்தை இறக்கிவைத்தான்.
            உங்கள் பெண்கள் வெட்கக் கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள்! அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை வீடுகளில் அவர்களைத் தடுத்து வையுங்கள்!(அல் குர்ஆன் 4:15)
     அல்லாஹ் அந்த வழியை தனது வேதத்தின் வாயிலாகவும் நபி(ஸல்) அவர்களது விளக்கத்தின் மூலமாக காட்டினான். அதை நபி(சல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
            நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும்போது, அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களது முகம் (கறுத்து) நிறம் மாறிவிடும். ஒரு நாள் அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்படவே அவர்கள் இந்நிலையைச் சந்தித்தார்கள். பின்னர் அவர்களைவிட்டு அந்நிலை விலகியதும், "(விபச்சாரத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். (விபச்சாரம் செய்த) பெண்கள் தொடர்பாக அல்லாஹ் ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமான பெண் மணமான ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச் சட்டமாகும்). மணமாகாத பெண் மணமாகாத ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச்சட்டமாகும்). மணமானவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் கல்லெறி தண்டனையும் வழங்கப்பட வேண்டும். மணமாகாதவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும். (ஸஹீஹ் முஸ்லீம் 3490)
                ஆகவே அல்லாஹ் முதலில் இறக்கிய வேத வசனத்தின்படி (அல் குர்ஆன் 4:15) அவன் காட்டும் வழியை பின்பற்ற வேண்டும் என்பது கட்டளை. அதன் தொடர்ச்சிதான் நபி(சல்) அவர்களுக்கு காட்டித்தரப்பட்ட அல் ரஜ்ம் சட்டமாகும் ஆகும். அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் விதிக்கும் கட்டளை வேதத்தின் கட்டளைதான் என்று நபி(சல்) அவர்களே கூறியிருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களது கட்டளை வேதத்தின் கட்டளை என்று இப்னு மஸ்ஊத்(ரலி) போன்ற நபித்தோழர்கள் விளங்கியிருந்தார்கள் எனும் போது, உமர்(ரலி) அவர்கள் “மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபச்சாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும்.” என்று கூறுவது சரிதான். எனவே அல் ரஜ்ம் என்பது வேதத்தில் உள்ளதுதான்.

இந்த கருத்தை முன்வைக்கும் அறிஞர்கள்
(ﻭاﻟﺸﻴﺦ ﻭاﻟﺸﻴﺨﺔ ﺇﺫا ﺯﻧﻴﺎ ﻓﺎﺭﺟﻤﻮﻫﻤﺎ ﺃﻟﺒﺘﺔ ﻧﻜﺎﻻ ﻣﻦ اﻟﻠﻪ ﻭاﻟﻠﻪ ﻋﺰﻳﺰ ﺣﻜﻴﻢ). ﻓﺈﺫا: ﺇﻥ ﺃﺭﻳﺪ ﺑﺎﻟﻜﺘﺎﺏ اﻟﻘﺮﺁﻥ ﻓﺈﻥ ﺫﻟﻚ ﻣﻮﺟﻮﺩ ﻓﻴﻪ، ﻭﺇﻥ ﺃﺭﻳﺪ ﺑﺬﻟﻚ اﻟﺤﻜﻢ ﻣﻄﻠﻘﺎ ﻓﺈﻥ اﻟﻜﺘﺎﺏ ﻭاﻟﺴﻨﺔ ﻛﻠﻬﺎ ﺣﻜﻢ اﻟﻠﻪ ﻭﻛﻠﻬﺎ ﻓﻲ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ
('திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்கள் மாற்றமின்றி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது அல்லாஹ்வின் சட்டம். அல்லாஹ் ஞானமிக்கவன்). 
       இங்கு வேதம் என்று கூறப்படுவது அல் குர்ஆனை குறிப்பதாக இருக்குமாயின், அந்த தீர்வை நாம் உறுதியாக ஏற்கும்பட்சத்தில், வேதமும், சுன்னாஹ்வும் அல்லாஹ்வின் சட்டங்களே. அவை அனைத்தும் அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளதுதான்.  (இவ்வாறு அபாத் அவர்கள் கூறிவிட்டு இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் பச்சை குத்திவிடும் பெண்களை சபித்த ஹதீஸை முன்வைத்து இந்த கூற்றை உறுதி படுத்துகிறார்கள்) (ஸரஹ் சுனன் அபூதாவுத் அல் அபாத் பாகம் 500 பக்கம் 13)
ﺭﻭاﻳﺔ ﻇﺎﻫﺮﺓ ﺃﻥ ﻋﻤﺮ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﻟﻠﻨﺒﻲ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻟﻤﺎ ﻧﺰﻟﺖ ﺁﻳﺔ اﻟﺮﺟﻢ: ﻭاﻟﺸﻴﺦ ﻭاﻟﺸﻴﺨﺔ ﻓﺎﺭﺟﻤﻮﻫﻤﺎ ﺃﻟﺒﺘﺔ، ﺃﺛﺒﺘﻬﺎ ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻓﻘﺎﻝ ﻟﻪ: ﻻ ﺃﺳﺘﻄﻴﻊ ﺫﻟﻚ, ﻟﻘﻮﻟﻪ ﻋﻠﻴﻪ اﻟﺴﻼﻡ ﺇﻧﻪ ﻣﻤﺎ ﻧﻬﻲ ﻋﻦ ﺭﺳﻤﻪ، ﻭﻟﻮ ﻛﺎﻥ ﻣﻤﺎ ﺃﻣﺮﻧﺎ ﺑﺈﺛﺒﺎﺗﻪ ﻻﺳﺘﻄﺎﻉ ﺃﻥ ﻳﺜﺒﺘﻪ ﻭﻟﻢ ﻳﻜﻦ ﻟﺘﺮﻛﻪ
     (இந்த) நிகழ்வில் உமர்(ரலி) அவர்கள் " நபி(சல்) அவர்களுக்கு திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்கள் மாற்றமின்றி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற ஆயத் இறங்கியவுடன் அதை எழுதிக்கொடுங்கள் " என்று கேட்கிறார்கள், அதற்கு அவர்கள்(ஸல்)" அது என்னால் முடியாது" என்று கூறிவிடுகிறார்கள். அவ்வாறு அவர்கள் (ஸல்) கூறுவது அது எழுதுவதற்கு தடுக்கப்பட்டது என்பதால்தான். அது எழுதுவதற்கு கட்டளையிடப்பட்டிருந்தால் அதை நிச்சயம் எழுதியிருப்பார்கள், அதை எழுதாமல் விட்டிருக்க மாட்டார்கள்.
(அபூபக்ர் அல் பாக்கிலானியின் அல் இன்திஸார் 1/364)
ﻗﺎﻝ ﺃﺑﻮ ﻣﺤﻤﺪ: ﻭﻫﺬا ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ ﻭﻟﻴﺲ ﻫﻮ ﻋﻠﻰ ﻣﺎ ﻇﻨﻮا، أَنَّ آيَةَ الرَّجْمِ إذْ نَزَلَتْ حُفِظَتْ وَعُرِفَتْ وَعَمِلَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إلَّا أَنَّهُ لَمْ يَكْتُبْهَا نُسَّاخُ الْقُرْآنِ فِي الْمُصْحَفِ وَلَا أَثْبَتُوا لَفْظَهَا فِي الْقُرْآنِ وَقَدْ سَأَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ذَلِكَ كَمَا أَوْرَدْنَا فَلَمْ يُجِبْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إلَى ذَلِكَ
        (அபூமுஹம்மத் கூறினார்கள்) கல்லெறி தண்டனை குறித்த வசனம் இறங்கியதும், அது மனனமிடப்பட்டு, அது ஏற்கப்பட்டு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் செயல்படுத்தவும் பட்டது. ஆனால் குர்ஆன் பிரதிகளில் அதை எழுதவும் இல்லை. அதை குர்ஆனின் வார்த்தைகளாக உறுதிபடுத்தவும் இல்லை. முன்பே நாம் குறிப்பிட்டது போல உமர்(ரலி) அவர்கள் கேட்டபோது, அதனை எழுத அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் கட்டளையிடவுமில்லை. (இப்னு ஹஸம் அவர்களது அல்முஹல்லாஹ் 12/ 177)
மனனமிடப்பட்டதால் ஆயத் அல் ரஜ்ம் குர்ஆனின் வசனமா????
       நாம் சென்ற தொடரில் நபித்தோழர்கள் குர்ஆனை மட்டும் மனனம் செய்யவில்லை. அவர்கள் சுன்னாஹ்வையும் மனனமிட்டு ஓதினார்கள் என்று விளக்கியிருந்தோம். அல்லாஹ்வே குர்ஆனில்
وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
        உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான். (அல் குர்ஆன்33:34)
            மேற்குறிபிட்டபடி அல்லாஹ் கூறுவது போல நபித்தோழர்கள் குர்ஆனை அதன் விளக்கத்தையும் மனனமிட்டு ஓதிக்கொண்டிருந்தனர் என்பதை பின்வரும் செய்தி நமக்கு உறுதி படுத்துகிறது.
      'நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களைத் தவிர. அவர்களிடம் கொஞ்சம் நபிமொழிகள் இருந்தன. காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்ளேன்) எழுதி வைத்ததில்லை" என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி 113 )
எனவே மனனமிடப்பட்டு ஓதப்பட்டதால் ஆயத் அல் ரஜ்ம் குர்ஆனின் வசனமாக ஆகாது. அது வேதத்தின் சட்டம் மட்டுமே.

ஆயத் என்று அழைக்கப்டுவதால் ரஜ்ம் சட்டம் குர்ஆனின் ஆயத்தா???

        கல்லெறி சட்டத்தை "ஆயத் அல் ரஜ்ம்" என்று அழைக்கப்ப்டுவதால் அது குர்ஆனின் ஆயத்  என்று வாதிக்கின்றனர்.   எனவே முதலில் அரேபிய அகராதிகளான லேன்ஸ் லெக்சிகனும் , ஹன்ஸ் வெர் அகராதியும் என்ன கூறுகின்றன என்பதை பார்ப்போம்.


         
            மேற்குறிபிட்ட அகராதிகளின் படி ஆயத் என்பதின் முதன்மை பொருள் அத்தாட்சி என்பது. மேலும் அதற்கு குர்ஆனின் வசனம், ஒரு புத்தகத்தின் பத்தி, இறைவனின் வேதத்தின் வசனம், எச்சரிக்கை, ஒருவரிடம் இருந்து கிடைக்கும் தகவல் தொடர்பு , அற்புதம், ஆதாரம் உள்ளிட்ட பல பொருள்கள் உண்டு. அல்லாஹ்வும் அவனது தூதரும் வேறுபட்ட பல பொருள்களில் ஆயத் என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளதை குர்ஆனிலும் ஹதீஸிலும் பயன்படுத்தியுள்ளதை பார்க்கமுடியும்.

அல்லாஹ்வின் மொத்த வஹியும் ஆயத் :

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
         அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய ஆயத்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான், அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.(அல் குர்ஆன் 62:2)

        மேற்குறிபிட்ட வசனத்தில் அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை ஓதி காண்பிப்பதின் மூலம், அவர்களுக்கு வேத்ததையும் ஞானத்தையும் கற்பிப்பார் என்று இருக்கிறது. ஆயத் என்பது அல்லாஹ்வின் வஹீ மொத்தத்தையும்   குறிப்பதாக இருப்பதால்தான்  அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிப்பார் என்று இடம்பெறுகிறது.

மேலும் நபி(சல்) அவர்கள் குறிபிடும் போது,

8439- وحَدَّثنا بِشْر بن خالد العسكري، قال: أَخْبَرنا شبابة بن سوار عن اللَّيْث بن سَعْد، عَن سَعِيد بن أبي سعيد، عَن أَبِيه، عَن أَبِي هُرَيرة، عَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَالَ: مَا مِنْ الأنبياء نبي إلاَّ قد أعطى من الآيات ما مثله - أظنه - تؤمن عليه، وَإنَّما كان الذي أوتيت وحيا أوحاه الله إِلَيَّ فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة.
    
       " ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஆயத்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் மக்கள் 'நம்பியே ஆகவேண்டியிருந்தது. எனக்கு வழங்கப்பட்டது, அல்லாஹ் எனக்கு அருளிய வஹீதான். எனவே, நபிமார்களிலேயே மறுமைநாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன். " என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்' (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: முஸ்னத் பஸ்ஸார் 8439)
மேலும் நபி(சல்) கூறும்போது பின்வருமாறு கூறுகிறார்கள்:

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي كَبْشَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏" بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلاَ حَرَجَ، وَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏‏.‏
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி (ஆயத் ) கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி 3421, திர்மிதி 2669)
         மேற்குறிபிட்ட செய்தியில் இடம்பெறும் "‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً" என்ற சொற்றொடருக்கு பின்வருமாறு மழ்ஹரி விளக்கம் அளிக்கிறார்:
فقد أمر النبي -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- بالتبليغ عنه حيث قال: "بلغوا عني ولو آية" الحديث رواه البخاري رحمه الله. قال المظهري أي بلغوا عني أحاديثي ولو كانت قليلة.

       நபி(சல்) அவர்கள் ஹதீஸ்களை எடுத்துரைப்பது குறித்து  " என்னிடமிருந்து ஒரேயொரு  ஆயத்  கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்" என்று கூறி கட்டளையிட்டார்கள்.  இந்த ஹதீஸ் புகாரி(ரஹ்) அவர்களது அறிவிப்பாகும் ஆகும்.  "என்னிடம் இருந்து சில ஹதீஸ்களை பெற்றாலும் அதை எடுத்துரையுங்கள் என்பதே இதன் பொருள் ஆகும் " என்று  மழ்ஹரி கூறுகிறார் (உம்தத்துல் காரீ1/4) 

            இவ்வாறு அல்லாஹ் தனது வஹீயை மொத்தமாக ஆயத் என்று கூறுகிறான். அதையே நபி(சல்) அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.  

குர்ஆனின் வசனங்களும் ஆயத் என்று அழைக்கப்படுதல்:

                    அதே போல் அல்லாஹ் குர்ஆனில் ஆயத் என்ற சொல்லை குர்ஆனின் வசனத்தை குறிக்கவும் பயன்படுத்தியுள்ளான்.

وَلَوْ جَعَلْنَاهُ قُرْآنًا أَعْجَمِيًّا لَقَالُوا لَوْلَا فُصِّلَتْ آيَاتُهُ 
        இதை அரபு மொழியில் அல்லாத குர்ஆனாக நாம் ஆக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்படக் கூடாதா? (அல் குர்ஆன் 41:44)
                அதே போல் அல்லாஹ் குர்ஆனில் ஆயத் என்ற சொல்லை முன்சென்ற வேதத்தில் இருக்கும் ஆயத்களை குறிக்கவும் பயன்படுத்தியுள்ளான்.
وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِآيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ
                நிச்சயமாக நாம் மூஸாவை நம் ஆயத்களுடனும், தெளிவான அத்தாட்சியுடனும், அனுப்பிவைத்தோம். (அல் குர்ஆன் 11: 96)
            மேலும் முன்சென்ற வேதமான தவ்ராத்தில் இடம்பெற்று இருக்கும் கல்லெறி தண்டனை, " ஆயத் அல் ரஜ்ம்" என்ற பெயராலே அழைக்கப்பட்டுள்ளதை நாம் ஹதீஸ்களில் காணமுடியும்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ الْيَهُودَ، جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلاً مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ ‏"‏‏.‏ فَقَالُوا نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ‏.‏ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ كَذَبْتُمْ، إِنَّ فِيهَا الرَّجْمَ‏.‏ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا، فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا‏.‏ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ ارْفَعْ يَدَكَ‏. فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ‏. فَقَالُوا صَدَقَ يَا مُحَمَّدُ، فِيهَا آيَةُ الرَّجْمِ‏.‏ فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَا‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ فَرَأَيْتُ الرَّجُلَ يَجْنَأُ عَلَى الْمَرْأَةِ يَقِيهَا الْحِجَارَةَ‏.‏
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
                    யூதர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள், 'அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார்கள். உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) 'நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் 'விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்' என்று கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து மறைத்து, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), 'உன் கையை எடு" என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே (ஆயத் அல் ரஜம்) (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம் உண்மை கூறினார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது" என்று கூறினார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவளின் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை பார்த்தேன்.(புகாரி 3635)

    மேற்குறிபிட்ட ஹதீஸை பார்க்கும் யாரும், "ஆயத்" என்ற பதம் அல்லாஹ்வின் கட்டளை என்ற பொருளில்தான் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிவிடுவார்கள்.   

               ஆயத் என்பது இடத்துக்கு தக்க பொருள்தரும் பொதுவான சொல்தானே தவிர குர்ஆனின் வசனத்தை மட்டும் குறிக்கும் குறிப்புச்சொல் அல்ல. ஆகவே ஆயத் அல் ரஜ்ம் என்ற சொற்பிரயோகம் குர்ஆனின் ஆயத் என்ற பொருளில் பயன்படுத்தப்பட வில்லை. அல்லாஹ்வின் கட்டளை என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்பும் ஆயத் என்பது குர்ஆனின் வசனத்தை மட்டும் குறிக்கும் குறிப்புச்சொல் என்று யாரேனும் வாதிட்டால், ஆயத் என்ற சொல் குறித்த எந்த ஞானமும் அவர்களுக்கு இல்லை என்பதே பொருள்.

ஆயத் அல் ரஜ்ம் வசனம் எழுதப்பட்டிருந்த காகிதத்தை ஆடு தின்றுவிட்டதால் அது குர்ஆனில் இடம்பெறவில்லையா?
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، ‏.‏ وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ نَزَلَتْ آيَةُ الرَّجْمِ وَرَضَاعَةُ الْكَبِيرِ عَشْرًا وَلَقَدْ كَانَ فِي صَحِيفَةٍ تَحْتَ سَرِيرِي فَلَمَّا مَاتَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَتَشَاغَلْنَا بِمَوْتِهِ دَخَلَ دَاجِنٌ فَأَكَلَهَا ‏.‏
ஆயிஷா(ரலி) கூறியதாவது:
                    கல்லெறி குறித்த ஆயத்தும், பருவமடைந்தவருக்கு பாலுட்டுவது குறித்த ஆயத்தும் இறங்கியிருந்தது. அது எழுதப்பட்ட காகிதம் எனது தலயணைக்கு கீழ் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் இறந்த போது ,நாங்கள் கவலையில் இருந்தோம். அப்போது வளர்ப்பு ஆடு ஒன்று அதை தின்றுவிட்டது (இப்னு மாஜா 2020, முஸ்னத் அஹ்மத் 26316)
            மேற்குறிப்பிட்ட இந்த செய்தியில் இடம் பெறும் முஹ்ம்மது இப்னு இஸ்ஹாக் குறித்து சுஃப்யான் அஸ்ஸவ்ரி, சுஅபா இப்னு ஹஜ்ஜாஜ் போன்றவர்கள் போற்றியுள்ளனர். ஆயினும் இவர் குறித்து பலரும் விமர்சித்தும் உள்ளனர். அபூ பகர் அல் பைஹக்கி இவர் குறித்து கூறுகையில் இவர் பலவீனமானவர் என்கிறார். இவரை குறித்து அபூபக்ர் அல் பைஹக்கி கூறுகையில் இவர் நேரிடையாக செவியுற்றதற்கான வார்த்தைகள் இன்றி அறிவிக்கும் போது இவரது செய்திகள் பலவீனமானது என்கிறார். மேலும் இவரது செய்திகள் வழுவான அறிவிப்பாளரின் செய்திக்கு ஒத்தமைந்தால் ஏற்கப்படும் என்று கூறுகிறார், இவர் குறித்து இருட்டடிப்பு செய்பவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்.(தஹ்ரீப் அல் தஃதீப் 2/54 ). இவர் குறித்து அபூஹாத்தம் கூறுகையில் இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்றும், இவரது செய்திகளை மற்றவர் ஒத்துபார்த்து ஏற்க வேண்டும் என்கிறார். நஸ்யீ கூறுகையில் இவர் பலமானவர் அல்ல என்று கூறுகிறார். இதில் இவர் குறித்து உகைலீ கூறுகையில்:  அபூ அப்தில்லாஹ் "அவர் அதிகமாக இருட்டடிப்பு செய்பவர். அவர் இன்னாரிடம் கேட்டேன், அல்லது இன்னார் கூறினார் என்று கூறினாலும் அவர் அதில் இருட்டடிப்பு செய்வார்.  (அதாவது நான் இன்னாரிடம் கேட்டேன் என்று அவர் கூறும் போதும் கூட அவர் யாரிடம் கேட்டார் என்பது இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் என்று கூறுகிறார்)  

        இவ்வாறு முஹம்மத் இப்னு இஸ்ஹாக் குறித்த முரண்பட்ட விமர்சனங்களை ஓப்பிட்டு பின்வருமாறு அத்தஹபீ முடிவை முன்வைக்கிறார்.  இஸ்லாமிய சட்டவியல் குறித்த செய்திகளில் இவரது ஹதீஸ்கள் ஸஹீஹ் என்ற தரத்தில் இருந்து ஹஸன் என்ற தரத்திற்கு இறங்கிவிடும். இவர் மட்டும் தனித்து அறிவிக்கும் நிலையில் அந்த செய்தி நிராகரிக்கவே பட்டுவிடும். (சியார் 7/33-35) 

            இதுதான் இந்த செய்தியை பொருத்தவரை நமது நிலைபாடும். மேற்குறிபிட்டவாறு குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட ஏடுகளை ஆடு தின்றதாக அறிவிக்கும் செய்தி இவர் மட்டுமே தணித்து அறிவிக்கும் செய்தி. எனவேதான் முஸ்னத் அஹ்மதின் இந்த செய்தியை பதிவிட்டு இது ளயீபானது என்று ஷேக் சுஐப் அர்னாவுத் அவர்கள் தனது முஸ்னத் அஹ்மதின் விளக்கவுரை(43/343)-ல் குறிப்பிடுகிறார்.
               
                    அப்படியே இந்த செய்தியில் இருப்பது போல கல்லெறி குறித்த ஆயத் எழுதப்பட்ட காகித்தை ஆடு தின்றிருந்தாலும் அந்த வசனம் மக்கள் நினைவில் இருந்ததை மேற்குறிபிட்ட பல ஹதீஸ்ளில் காணலாம். ஆக அது குர்ஆனின் வசனமாக இடம்பெறவில்லை என்பதற்கு ஆடு திண்றது காரணம் அல்ல. அது குர்ஆனின் வசனமாக இல்லை என்பதுதான் காரணம். எனவே தான் இந்த செய்தி குறித்து விளக்கயில் இப்னு ஹஸம் மேலே நாம் கூறும் இதே கருத்தை முன்வைக்கிறார்.(அல்முஹல்லாஹ் 12/ 177)

            மேற்குறிபிட்ட விளக்கங்களே கல்லெறி வசனம் குர்ஆனின் வசனம் அல்ல என்பதற்கு போதுமானதாகும் ஆயினும் இவர்கள் வைத்த விமர்சனத்தின் ஊடாக பின்வரும் முடிவுகளையும் நாம் அடைய முடிகிறது.

1) கல்லெறி தண்டனை குறித்த வசனம் குர்ஆனில் இடம் பெறவில்லை என்பதற்கு இருகாரணங்கள் முன்வைக்கப்படுகிறது:
1)  முதலில் அந்த வசனம் குர்ஆனின் வசனமாக இறங்கியது. பின்பு அது உயர்த்தப்பட்டுவிட்டது.அதன் சட்டம் மட்டும் நடைமுறையில் இருக்கிறது. எனவே இன்றிருக்கும் குர்ஆனில் ஒரு வசனமாக இடம்பெறவில்லை. இதற்கு ஆதாரமாக உபை இப்னு கஃப்(ரலி) அறிவிக்கும் முஸ்னத் அபிதாவூத் அல் தயாலிசி ஹதீஸ் எண்: 542 பதியப்பட்டுள்ளது.
2) அல்லது இந்த வசனம் குர்ஆனின் வசனமாக இறங்கவில்லை. அது நபி(சல்) அவர்களது சுன்னாஹ்வாக இறங்கியது. எனவே இன்றிருக்கும் குர்ஆனில் ஒரு வசனமாக இடம்பெறவில்லை. இதற்கு ஆதாரங்களாக இரு நபிதோழர்களான உமர் (ரலி) மற்றும் அமர் (ரலி) ஆகியோரது முறையே சுனன் அல் குப்ரா அன் நஸ்யீ 7110, சுனன் அல் குப்ரா அல் பைஹக்கி 16913 மற்றும் முஸ்தத்ரக் அல் ஹாகிம் 8071 ஆகிய செய்திகள் பதியப்பட்டுள்ளது.
2)அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டல் அல்குர்ஆனின் வழிகாட்டல்தான் என்பதை நபி(சல்) அவர்களே விளக்கிய செய்தி புகாரி 2155, அவ்வாறே விளங்கியிருந்த இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களது செய்தி புகாரி 4886 பதியப்பட்டுள்ளது. அந்த வரிசையில் உமர்(ரலி) கல்லெறி தணடனை வசனம் இறைவேதத்தில் உள்ளது என்று கூறும் செய்தியும் அதை உறுதி படுத்துகிறது. மேலும் உமர்(ரலி) அவர்களே ஏன் குர்ஆனில் ஆயத் அல் ரஜ்ம் இடம்பெறவில்லை என்பதை விளக்கியிருக்கும் செய்தி (சுனன் குப்ரா அன் நஸ்யீ 7110, சுனன் அல் குப்ரா அல் பைஹக்கி 16913) இங்கு கவனிக்கப்படவேண்டியது.

3)ஆடு தின்றதால் இந்த வசனம் குர்ஆனில் இடம்பெறவில்லை என்பது ஜமுக்காலத்தில் வடிகட்டிய பச்சை பொய் என்பது இதன் மூலம் நிறுவப்பட்டுள்ளது. அந்த செய்தி பலவீனமானது மட்டும் அல்லாமல் அந்த வசனத்தை மக்கள் நினைவில் கொண்டிருந்தும் அதனை குர்ஆனில் பதியவில்லை என்பதற்கு அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களே அதை பதிய அனுமதிக்க வில்லை, நபி(சல்) அவர்களுக்கும் அந்த அனுமதியை அல்லாஹ் வழங்கவில்லை என்பதால்தான் என்பது தெளிவாகிறது.

4)அல்குர்ஆனை உஸ்மான்(ரலி) தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாற்றிவிட்டார்கள் என்று கப்ஸா விட்டுத்திரியும் இஸ்லாமோஃபோபுகளின் இந்த விமர்சனம் பொய்யானது என்று தெளிவாகிறது. இஸ்லாமிய ஆட்சியின் ஆரம்ப காலத்தில் அபூபக்ர்(ரலி) அவர்களுக்கு பிறகு உச்சபட்ச அதிகாரம் படைத்த கலிஃபாவான உமர்(ரலி) அவர்களாலேயே குர்ஆனில் எதையும் மாற்ற இயலவில்லை எனும் போது உஸ்மான்(ரலி) அவர்கள் குர்ஆனில் சேர்த்துவிட்டார் நீக்கிவிட்டார் என்பது எல்லாம் சுத்த கட்டுக்கதை என்பது இதன் மூலம் நிரூபனமாகிறது.

அல்லாஹூ அஃலம்