பக்கங்கள் செல்ல

Monday, May 27, 2019

என்னை சுமந்து சொல்ல ஏன் இந்த மக்கள் போட்டி போடுகின்றனர்?

"மற்றவர்களின் இதயங்களை வென்றடுப்பது எப்படி" என்று தேடினால் ஹார்வார்ட் பல்கலை கழகத்திலிருந்து மோடிஜி வரை அவரவரின் அறிவுக்கு ஏற்ப  பல வழிகளை சொல்வார்கள் ஆனால் எந்தவித அறிவுரையும் இல்லாமல் வெறும்  செய்கைகளின் மூலம் மட்டும்   பல தேச மக்களை  ஒரே  நேரத்தில்   வென்றெடுக்க முடியமா  என்றால் சாத்தியமே.

இதோ ஒரு உண்மைச் சம்பவம்:

நபியின் பள்ளியில் ஜனாஸாக்கள் (இறந்தவர்களின் சடலங்கள்) கொண்டுவரப்படுகின்றன. யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது சொல்லப்படுவதில்லை.

 அங்கெ  உள்ள அனைத்து மக்களும் அவர்களுக்காக தொழுகை நடத்துகின்றனர். எப்படி அடக்கம் செய்கிறார்கள் என்பதைக் காண நானும் பின்தொடர்ந்தேன்.

தொழுகை முடிந்தவுடன்  நான்கு ஜனாஸாக்கள்  கொண்டு செல்லப்பட்டன. அந்த ஜனாஸாக்களை சுமந்து செல்ல கடும் போட்டி நடக்கின்றது.  ஒவ்வொருவருக்குமென தனியாக குறிப்பிட்ட இடம் இல்லை. எங்கே காலியாக உள்ளதோ அங்கெ அடக்கம் செய்கின்றனர்.

அடக்கம் செய்யும் இடத்தில்  பொறுமையாக நின்று ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து,   இறுதியில் அமைதியாக கலைந்து செல்கின்றனர்.

நான் யாரோ ஒருவன்.. ...என்னை சுமந்து சொல்ல  ஏன்  இந்த மக்கள் போட்டி போடுகின்றனர்?  முகமறியா எனக்காக  அவர்கள் பிரார்த்தனை செய்வது ஏன்? நபி அவர்களின்  அடக்கத்தலத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள மேலும் புகழ் பெற்ற  நபித்தோழர்கள் அடங்கியுள்ள இடத்தில் அந்நியனாகிய என்னை எப்படி இங்கே அடக்கம் செய்கின்றார்கள்?

பொதுவாக இறந்தவரின் சமூக, மத அந்தஸ்த்தை வைத்து அவரின் இறப்பு தொடர்பான காரியங்களும், அடக்கத்தலங்களும் வேறுபடுவது தான் உலகில்  நாம் காணும் ஒன்று ஆனால் அரசன் முதல் ஆண்டி வரை எல்லோருக்கும் ஒரே முறையை  செயல்படுத்தி வருவது இஸ்லாம் மட்டுமே.

நபியின் காலம் முதல் இன்று வரை இப்படித்தான் நடக்கின்றது. இஸ்லாம் கூறுவது வெறும் வாரத்தை ஜாலம் அல்ல.  செயல்முறை விளக்கம் அதனால் தான் மிகவும் குறுகிய காலத்தில் அதிகமான மக்களை  வென்றெடுத்தது, வென்று வருகின்றது மேலும் வென்றெடுக்கும்.

Saturday, May 18, 2019

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்!!



பறவைகளைப் போல் வானத்தில் பறக்க வேண்டும் என்பது மனிதனின் நீண்ட கால கனவு. பல ஆயிரக்கணக்கான வருடங்கள் இதற்காக முயற்சி செய்தும் 20ம் நூற்றாண்டில்  காற்றின் அடுக்குகளை பற்றி ஆய்வு  செய்த பின்பு  தான், விண்ணில் பறப்பதற்கும்,  வான் மண்டலங்களுக்கு செல்வதற்குமான அறிவு கிடைத்தது.

வானில் உயரமாக செல்லும்போது, காற்றில் உள்ள ஆக்சிஜன் குறைந்து விடும் அதனால்  தான் விமானங்களில் ஆக்சிஜன் முகமூடிகள் வைத்துள்ளார்கள்.

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.

ஆனால், இந்த விடயம்  எப்படி  ஆயிரம் வருடங்களுக்கு முன்புள்ள, கல்வியறிவு பெறாத ஒரு நபரால் சொல்லப்பட்டிருக்க முடியும் என்பதது தான் மிகவும் ஆச்சரியமான ஒன்று.

"அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக விசாலமாக்குகிறான் -யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்" [திருக்குர்ஆன் 6:125]

சமீபத்தில் சவுத்வெஸ்ட்  விமான பயணத்தின் போது, என்ஜினிலிருந்து உடைந்த பாகம் ஒன்று விமான ஜன்னலைத் தாக்கியதால் விமானத்தில் காற்றின் அழுத்தம் குறையவே, பயணிகள் அனைவரையும் ஆக்சிஜன் முகமூடி அணியுமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதிகமானோர் சரியாக அணியாததை விளக்கும் படம் இது

இது நிச்சயமாக மனிதனால் சொல்லப்பட்டது என்பதை உண்மையான பகுத்தறிவு ஏற்க மறுக்கின்றது. காற்றையும், மனிதனையும், வானங்களையும் படைத்த ஒருவனால் மட்டுமே சொல்லியிருக்க முடியும்.

Ref: http://kaheel7.com/eng/index.php/earth-science/289-as-if-he-is-climbing-up-to-the-sky-
        https://www.telegraph.co.uk/travel/travel-truths/truth-about-oxygen-masks-on-planes/