பக்கங்கள் செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.பறையோசை வேர்ட்பிரஸ்-ஆரம்பத்தை நோக்கி தொடருக்கான எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
Wednesday, August 24, 2016
திருக்குர்ஆன் மலர்கள்: 2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)
திருக்குர்ஆன் மலர்கள்: 2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2): சீர்த்திருத்தவாதத்திற்கு எதிராக பயங்கரவாதம் சவுதி அராபியாவில் மக்கா நகரில் பிறந்து வளர்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது நாற்...
Tuesday, August 23, 2016
திருக்குர்ஆன் மலர்கள்: 1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)
திருக்குர்ஆன் மலர்கள்: 1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1): பொறுமை - தர்மத்தின் காவலர்களின் கடமை! இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அதன் இனியொரு பொருள் கீழ்படிதல் என்பது. படைத்த இறைவனுக்கு கீ...
திருக்குர்ஆன் மலர்கள்: இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?
திருக்குர்ஆன் மலர்கள்: இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?: இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்? = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இ...
Monday, August 22, 2016
திருக்குர்ஆன் மலர்கள்: பயங்கரவாதிகள் எதைக்கண்டு அஞ்சுகிறார்கள்?
திருக்குர்ஆன் மலர்கள்: பயங்கரவாதிகள் எதைக்கண்டு அஞ்சுகிறார்கள்?: பாம்புப்பண்ணை ஒன்றில் ஒரு காட்சி...... அதோ அங்கே நிறைய ஆட்டுக்குட்டிகளும் முயல்களும் கோழிகளும் ஆனந்தமாகத் துள்ளி விளையாடிக் கொண்டி...
Monday, August 15, 2016
திருக்குர்ஆன் மலர்கள்: உழைப்போர் உரிமை அல்ல, மனித உரிமை!
திருக்குர்ஆன் மலர்கள்: உழைப்போர் உரிமை அல்ல, மனித உரிமை!: அனைத்து மனிதர்களுக்கும் அவரவர் உரிமைகளை நியாயமாகப் பங்கிட்டு வழங்கக்கூடிய ஒரு அமைப்பு (system) இருக்குமானால் அங்கு தொழிலாளர் உரிமை, ...
Sunday, August 14, 2016
எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-6- புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை
ஏக இறைவனின் திருப்பெயரால்
நாம் சென்ற தொடரில் புதிய
ஏற்பாடின் மூல ஏடுகள் குறித்து பார்த்தோம். இந்த தொடரானாது புதிய ஏற்பாட்டின்
ஆகமங்களின் பெயர்கள் இடம்பெறும் பண்டைய ஏடுகள் குறித்த சிறிய அறிமுகமாகும். இந்த
ஏடுகளில் இடம்பெறும் ஆகமங்களின் பெயர்களைக் கொண்டு நாம் ஏசுவின் காலத்திற்கு பிறகு
மக்களின் பயன்பாட்டில் குறிப்பாக சர்சுகளில் வாசிக்கப்பட்டு வந்த ஆகமங்கள்
குறித்து அறிந்து கொள்ள முடியும். இது புதிய ஏற்பாட்டின் தோற்றம் குறித்த தெளிவான
பார்வையை வழங்கும் இன்ஷா அல்லாஹ்.
புதிய ஏற்பாட்டின் ஆகமங்கள் குறித்த வரலாற்று ஆவணங்கள்:
இது குறித்து அறிந்து கொள்ள
நமக்கு இருக்கும் வரலாற்று ஆவணங்கள் ஆரம்ப கால தேவாலய பிதாக்களின் குறிப்புகளில்
காணப்படும் வசனங்கள் மற்றும் ஆகமங்களின் பெயர்கள். அடுத்ததாக பண்டைய கிரேக்க
ஏடுகளில் காணப்படும் ஆகமங்கள் குறித்த குறிப்புகள். இவற்றை இங்கு ஒப்பிடுவதினால்
நாம் புதிய ஏற்பாட்டின் ஆகமங்களின் உறுதிசெய்யப்பட்ட எண்ணிக்கையை? அறிந்து
கொள்ளலாம்.
ஆரம்ப கால தேவாலய பிதாக்களின் குறிப்புகள:
இங்கு ஆரம்ப கால தேவாலய பிதாக்கள் சிலரின் குறிப்புகளை இங்கு காண்போம். இதுவே நம்மை தலை சுற்றவைக்க போதுமானது!!!!!!!!!
பாலிகார்பின் குறிப்புகளில் காணப்படும் ஆகமங்கள்: (கிபி 69-155)
1. மத்தேயு, 2. மாற்கு, 3. லூக்கா, 4. அப்போஸ்தல நடபடிகள்
5. பவுலின் 8 கடிதங்கள்: (1 கொரிந்தியர், 2கொரிந்தியர், எபேசியர், பிலிப்பியர், காலாத்தியர், 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர், ரோமர், 6. பவுலின் 2 தனிநபர் கடிதங்கள்: 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு 7. எபிரேயர், 1பேதுரு, 1யோவான், 3யோவான்
விடுபட்ட ஆகமங்கள்:
1. யோவான், 2. பவுலின் 1 கடிதம்: கோலோசியர், 3. பவுலின் 2 தனிநபர் கடிதம்: தீத்து, பிலேமோன் 4. யாக்கோபு, 2பேதுரு, 2யோவான், யூதா, வெளிப்படுத்தின விஷேசம்
குறிபிடப்பட்டவை: 18 விடுபட்டவை: 09
இரேனியஸின் குறிப்புகளில் காணப்படும் ஆகமங்கள்: (கிபி 130- கிபி 202)
1. மத்தேயு, 2. மாற்கு, 3. லூக்கா, 4. யோவான் 5. அப்போஸ்தல நடபடிகள் 6. பவுலின் 9 கடிதங்கள்: (1 கொரிந்தியர், 2கொரிந்தியர், எபேசியர், பிலிப்பியர், கோலோசியர், காலாத்தியர், 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர், ரோமர், 7. பவுலின் 3 தனிநபர் கடிதங்கள்: தீத்து, 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு 8. எபிரேயர், யாக்கோபு, 1 பேதுரு, 1யோவான், 2யோவான், வெளிப்படுத்தின விஷேசம்
1. பவிலின் 1 தனிநபர் கடிதம்: பிலேமான் 2. 2 பேதுரு, 3 யோவான், யூதா
இன்று இருக்கும் புதிய ஏற்பாட்டில் இல்லாத ஏற்கத்தக்க ஆகமங்கள் :
1 கிளமண்ட்
குறிப்பிடபட்டவை: 23 விடுபட்டவை: 04 புதிய ஏற்பாடில் இல்லாதவை: 01
அலெக்சாண்டியாவின் கிளமண்டின் குறிப்புகளில் காணப்படும் ஆகமங்கள்: (கிபி 150-215):
1. மத்தேயு, 2. மாற்கு, 3. லூக்கா, 4. யோவான் 5. அப்போஸ்தல நடபடிகள் 6. பவுலின் 9 கடிதங்கள்: 1 கொரிந்தியர், 2கொரிந்தியர், எபேசியர், பிலிப்பியர், கோலோசியர், காலாத்தியர், 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர், ரோமர், 7. பவுலின் 3 தனிநபர் கடிதங்கள்: தீத்து,
1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு 8. எபிரேயர், 1 பேதுரு, 1 யோவான், யூதா, வெளிப்படுத்தின விஷேசம்
விடுபட்ட ஆகமங்கள்:
1. பவுலின் 1 தனிநபர் கடிதங்கள்: பிலேமான் 2. யாக்கோபு, 2 பேதுரு, 2 யோவான், 3 யோவான்
இன்று இருக்கும் புதிய ஏற்பாட்டில் இல்லாத ஏற்கத்தக்க ஆகமங்கள்:
1. எகிப்திய நற்செய்தி 2. எபிரேய நற்செய்தி 3. மத்தியாவின் செய்திகள்
4. பேதுருவின் போதனைகள் 5. 1 கிளமண்ட் 6. பார்ணபாவின் கடிதம் 7. டிடாக்
8. ஹெர்மஸின் மேய்ப்பர் (Shepherd of Hermas) 9. பீட்டரின் வெளிபடுத்தின விஷேசம் (Apocalypse of Peter)
குறிப்பிடப்பட்டவை : 22. விடுபட்டவை: 05 புதிய ஏற்பாட்டில் இல்லதவை: 09
ஓரிகனால் குறிப்பிடப்படும் ஆகமங்கள்: (கிபி 184-254):
1. மத்தேயு, 2. மாற்கு, 3. லூக்கா, 4. யோவான் 5. அப்போஸ்தல நடபடிகள் 6. பவுலின் 9 கடிதங்கள்: (1 கொரிந்தியர், 2கொரிந்தியர், எபேசியர், பிலிப்பியர், கோலோசியர், காலாத்தியர், 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர், ரோமர், 7. பவுலின் 4 தனிநபர் கடிதங்கள்: பிலேமோன், தீத்து, 1 தீமோத்தேயு,
2 தீமோத்தேயு 8. எபிரேயர், 1 பேதுரு, 1யோவான், யூதா, வெளிப்படுத்தின விஷேசம் சந்தேகத்திற்கு உரியவை: யாக்கோபு, 2 பேதுரு, 2 யோவான், 3 யோவான்
குறிப்பிடபட்டவை: 23 சந்தேகத்திற்குரியவை: 04
யூஸிபியஸின் (கிபி 263-339) குறிப்புகளில் புதிய ஏற்பாட்டின் 21 ஆகமங்கள் ஏற்கத்தக்கவை எனவும் சந்தேகத்திற்குரியதாக 06ம் கூறப்படுகிறது . அவை எபிரேயர், யாக்கோபு, 2 பேதுரு, 2யோவான். 3யோவான், யூதா ஆகியவையாகும்.
முரேடொரியன் துண்டுகளில் காணப்படும் ஆகமங்களின் பெயர்கள் (Muratorian Fragments) :(கிபி. 170)
இது 7ம் நூற்றாண்டின் இலத்தின் மொழியிலான பொருளடக்கமாகும். இதில் இருக்கும் குறிப்புகள் கிபி 170ஐ சேர்ந்த கிரேக்க மூலத்தின் இலத்தின் மொழியாக்கம் என்பதை பறைசாற்றுகிறது. இது மூரேடொரி என்ற பாதிரியால் 1740ல் அம்புரோசியா நூலகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகும். கிபி 170ன் கிரேக்க மூலத்திலிருந்து பெறப்பட்டது என்று நம்பப்படுவதால் இதுதான புதிய ஏற்பாடின் ஆகமங்களின் பொருளடக்க குறிப்புகளில் மிக பழமையானது என்று கூறப்படுகிறது.(இன்று வரை கிரேக்க மூலம் கிடைக்கவில்லை). இன்று இருக்கும் புதிய ஏற்பாட்டின் 27 ஆகமங்களில் 22 ஆகமங்களின் பெயர் இதில் இடம்பெறுகிறது. அவை பின் வருமாறு:
1. மத்தேயு, மாற்கு (எந்த இடத்திலும் இரண்டு ஆகமத்தின் பெயர்களும் இல்லை. ஆயினும் 3வது ஆகமமாக லூக்கா குறிப்பிடப்படுவதால் இவை இரண்டும் தான் இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது)
2. லூக்கா
3. யோவான்
4. அப்போஸ்தல நடபடிகள்
5. பவுலின் 9 கடிதங்கள்: (1 கொரிந்தியர், 2கொரிந்தியர், எபேசியர், பிலிப்பியர், கோலோசியர், காலாத்தியர், 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர், ரோமர்,
6. பவுலின் 4 தனிநபர் கடிதங்கள்: பிலேமோன், தீத்து, 1 தீமோத்தேயு,
2 தீமோத்தேயு
7. யூதா, 1 யோவான், 2 யோவான், வெளிப்படுத்தின விஷேசம்
விடுபட்ட ஆகமங்கள்:
1. எபிரேயர் 2. யாக்கோபு 3. 1 பேதுரு 4. 2 பேதுரு 5.3 யோவான்
இன்று இருக்கும் புதிய ஏற்பாட்டில் இல்லாத ஏற்கத்தக்க ஆகமங்கள்
1. சாலமோனின் ஞானம்
2. பீட்டரின் வெளிபடுத்தின விஷேசம் (Apocalypse of Peter)
3. ஹெர்மஸின் மேய்ப்பர் (Shepherd of Hermas)
குறிப்பிடப்பட்டவை: 22, விடுபட்டவை: 05, புதிய ஏற்பாட்டில் இல்லாதவை: 03
இப்படி சமகாலத்தில் உள்ள ஆரம்ப கால தேவாலய பிதாக்கள் குறிப்புகளில் ஏற்றுகொள்ளப்படும் ஆகமங்கள் முரண்பட்டதாய் உள்ளது. பலரால் ஏற்றுகொள்ளப்பட்டது சிலரால் மறுக்கப்பட்டும் விடுபட்டும் இருக்கிறது. சிலரால் மறுக்கப்பட்டது பலரால் குறிபிட்டப்படாமல் விடுபட்டும் உள்ளது.சில ஞானப்பாட்டை(Gnostic) போற்றும் ஏடுகள் சிலரால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலை கிட்டதட்ட நான்காம் நூற்றாண்டின் இறுதி வரை காணப்பட்டது. அதாவது கிபி 393ல் ஆயர்கள் சபையில் ஹிப்போவின் அகஸ்டின்தான் இன்றிருக்கும் 27 புதிய ஏற்பாட்டின் ஆகமங்களை முன்மொழிந்தார். இப்படி எந்த எந்த ஆகமங்கள் ஏறகத்தது என்பதை முடிவு செய்வதற்கே பல நூற்றாண்டுகள் தேவைபட்டது கிறித்தவ உலகத்திற்கு என்பதே புதிய ஏற்பாட்டின் நிலையை எடுத்துரைக்க போதுமானது.
Reference:
1.http://www.ntcanon.org/table.shtml
2.The Canon of the New Testament : Its Origin, Development, and Significance by
BRUCE M . METZGER
எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண
Reference:
1.http://www.ntcanon.org/table.shtml
2.The Canon of the New Testament : Its Origin, Development, and Significance by
BRUCE M . METZGER
எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண
Thursday, August 4, 2016
Dr Zakir Naik's dialogue with Sri Ravi Sankar in Tamil
அரசியல்வாதிகளின் பேச்சில் உண்மை இருக்காது - எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மை.
ஊடகங்கள் பணத்திற்காக எதையும் சொல்வார்கள் - இதுவும் அனைவருக்கும் தெரியும். கேப்டன் "துப்பியது" உலகப் புகழ் பெற்றது.
நம் சகோதரரை ஒருவன் தவறாகச் சொன்னால், அதை அவரிடம் தீர விசாரித்து உண்மையை அறியவே ஒரு நேர்மையான உள்ளம் விரும்பும்.
ஜாகிர் நாயக்கை அரசியல் வாதிகளில் சிலரும், பணத்திற்காக எதையும் சொல்லும் ஊடகங்களில் சிலரும் தவறாக சித்தரிக்கின்றனர்.
நீங்களே நேரிடையாக கேட்டு, உண்மையை தெரிந்து கொள்ளுங்களேன்.
டாக்டர் ஜாகிர் நாயக், ஹிந்து, கிறிஸ்துவ, புத்த மற்றும் சீக்கிய மத வேதங்களில் உள்ளதை ஒளிவு மறைவில்லாமல் மக்களிடம் வைப்பதினால் மாற்று மத சகோதரர்களும் தங்கள் வேதங்களை அறிந்துகொள்வதில் ஆர்வமூட்டப்படுகின்றனர்.
நீங்கள் ஒரு குரு அல்லது சாமியாரைப் பின்பற்றினால் அவர்களின் வேதங்கள் பற்றிய நிலைப்பாடுகளில் ஒரு அஜெண்டா இருக்கும். அவர்கள் ஆதரிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் தான் சொல்வார்கள்.
டாக்டர் ஜாகிர் நாயக்கின் அணுகுமுறையில் நீங்கள் அறிந்திராத, இதுவரை உங்களிடம் சொல்லப்படாத உங்கள் வேதங்களின் கருத்துக்கள் இருக்கும்.
உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ ரவிஷங்கர் முன்னிலையில் வேதங்களில் உள்ளவைகளை எடுத்துச் சொல்லும் போது மறுக்க முடியாமல் ரவிஷங்கர் ஏற்றுக் கொள்ளும் உண்மைகளை, ஒரு ஹிந்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கேட்டுத்தான் பாருங்களேன்!!
Part 3- https://www.youtube.com/watch?v=9ggrKNGwJto
Part 4 - https://www.youtube.com/watch?v=GofZOEkZWUM
Part 5 - https://www.youtube.com/watch?v=DLLk6Ko9VF0
Part 6 - https://www.youtube.com/watch?v=HiwG6H6qKLs
Part 7 - https://www.youtube.com/watch?v=9dirPp4NRSw
Part 8 - https://www.youtube.com/watch?v=2Yka8McMk80
சூபியிசம் ஒரு யூத சதியே :- Part- 1
By Nasrath S Rosi
சூபியிசம் என்றால் என்ன ? என்கிற கேள்விக்கு , அது இஸ்லாத்தின் ஆன்மீக பிரிவு என எளிமையாக பதில் சொல்வார்கள் தரீக்காவாதிகள்..! இஸ்லாம் என்பதே ஒட்டுமொத்த ஆன்மீக மார்க்கம் தானே இதில் தனியாக என்ன கிளை நிலை ஆன்மீகம் என கேட்போரிடம்...' தியான நிலையும் தபஸ்நிலையுமல்லாத வணக்கம் நம்மையும் நம் மனதையும் இறைவனிடம் கொண்டு சேர்க்காது ' என்பார்கள்...
முன்னுரை
************
தொழுகையின் போது நம் மனம் ஒன்றி ஆழ்ந்த நிலையில் பிரார்த்திக்க வேண்டுமானால் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும், அதுவல்லாது மனதை அலைபாய விட்டு தொழும் தொழுகை ஒரு மதச்சடங்காக இருக்குமேயொழிய அது ஒரு வணக்கமாக ஓரிறையத்தேடிய நம் இறைஞ்சலாக அது இருக்காது, ஆகவே நம் மனதை ஒருநிலைப்படுத்தி அலைபாயும் நப்ஸை அடக்கி, நமது கட்டுப்பாட்டில்
உதவுவதே திக்ரும் என்னும் தியானம் அதை கற்பிப்பதே சூபியிசம் என்கிறார்கள் சூபியாக்கள்.
தமது ஹஜ்ஜத்த்-அல்-விதா வின் போது இறுதிப்பேருரையில் " இந்தநாள் நான் உங்களுக்கு இந்த மார்க்கத்தை இறுதியாக்கி பூர்த்தி செய்துவிட்டேன், அல்லாஹ் எனக்கருளிய இந்த புனித மார்க்கத்தை நான் முழுமையாக உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன், எனக்கு பிறகு மார்க்கத்தின் பெயரால் எதை புகுத்தினாலும் அவர் நபிகளின் மீது பொய்யுரைத்த குற்றத்திற்கு ஆளாவார் " என்று தெளிவாக கூறிவிட்டு தானே சென்றுள்ளார்கள்...? அவர் அறைகுறைநாக விட்டுச்சென்றதை பூர்த்தி செய்ய முளைத்தவர்களா சூபிக்கள்...?
இஸ்லாத்தை களங்கப்படுத்துவதற்காகவே யூதர்களால் பழக்கத்திற்குள்ளாக்கப்பட்டு இதுவும் இஸ்லாம் தான் பரப்பிக்கொண்டு திரியும் சூபியாக்கள் தாங்களும் யூதருக்கு உடன்பட்டிருப்பதை உணராமலே அதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.. நபி ஈசா மரணித்த பிறகு சுமார் நூறு வருடம் கழித்தே கிறிஸ்தவத்தை புகுத்தினான் யூதன்...அதுபோலவே இஸ்லாத்தை களங்கப்படுத்த திட்டமிட்டு இருநூறு ஆண்டுகள் கழித்து சூபித்துவம் இஸ்லாத்தில் நுழைக்கப்படுகிறது.
திட்டமிட்ட இந்த சதி கிபி.8 ம் நூற்றாண்டின் இறுதியில் தான் துவங்குகிறது...மார்க்கத்தை கடினமாக நினைத்து தப்பிக்க நினைத்தவர்களால் உருவாக்கப்பட்டது சூபியிசம். இவர்களுக்காகவே அரபியில் முனாஃபிக் என்கிற சொல் உள்ளது..ஆம்..! சூபியாக்கள் முனாஃபிக்குகள்...நாங்களும் அல்லாஹ் என்கிற ஓரிறையை வணங்குகிறோம், நபி முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வசல்லத்தை பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொண்டே இஸ்லாத்தை மீறிவிட்டனர்.
( இந்த பாகத்தில் சூபியசம் என்பது என்ன என்பதனை சூபியாக்கள் கூறும் கோட்பாட்டோடு விளக்கியுள்ளோம், இதற்கு அடுத்த பாகத்தில் சூபியசம் எதிலிருந்து தோன்றியது எதற்காக தோன்றியது, சூபியிசத்தின் இருட்டு பக்கங்கள் என்ன , அவர்கள் மார்க்கத்தின் பெயரால் செய்யும் வழிகேடு என்ன என்பதனை அடுத்த பாகத்தில் காணலாம். )
------------------------------------------------------
Al-Qushayri எழுதிய Principles of Sufism என்கிற நூலிலிருந்து.....
சூபிக் கோட்பாடு
****************
சூபி அரபுச் சொல் தூய்மை என்ற பொருள் கொண்ட ஸாப்(saaf) மூலச் சொல்லிலிருந்து பிறந்தது என்றும், ஸஃபா, ஸிஃப என்னும் அரபுச் சொல்லில் பிறந்த சிகிச்சை என அர்த்தம் கொள்ளக்கூடிய Healing என உட்பொருள் கொண்ட அதாவது இதயத்தின் நோய்களை அகற்றி குணமளிக்கும் தத்துவமே சூபித்துவம் எனவும் , அணி வரிசை என்னும் பொருள் கொண்ட ஸூப்(suf) மூல வார்த்தையிலிருந்து உருவானது என்றும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.
சூபி என்ற சொல்லை சோபோஸ் (sophos) என்ற கிரேக்கச் சொல்லுடன் இணைத்து அறிஞன் என்றும் பொருள் கொள்வதுண்டு. இது உண்மை (wisdom) அறிவு (enlightment) என்பதான அர்த்தங்களையும் கொண்டுள்ளது.
அரபு மொழியில் ஸூ (suf) என்றால் முரட்டு கம்பளி என்றும் அர்த்தம். ஆடம்பர வாழ்வை துறந்து மனோ இச்சைகளை அடக்கி எளிய வாழ்வின் சின்னமாக கம்பளியை விரும்பி அணிந்து கொண்டவர்கள் சூபிகள் என்பதாக இக்கருத்தோட்டம் அமைகிறது. நபிகள்நாயகம்(ஸல்)அவர்களின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய அஸ்ஹாபுஸ் ஸூபா என்பவர்கள் திண்ணைத்தோழர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். குர்ஆனில் சூபியானி என்றோ சூபிக்கள் என்றோ ஒரு வார்த்தை கூட வரவில்லை...ரசூலுல்லாஹ் அவர்களும் சூபியாக்கள் என்கிற பிரிவினர் இஸ்லாத்தில் இருந்ததாக கூறவுமில்லை.
சூபியிசம் - அறிதல் கோட்பாடு
******************************
Khwaja Shamshudin Azeemi அவர்கள் எழுதிய Muraqaba என்கிற நூலிலிருந்து....
சூபிசம் அறிதல் கோட்பாடு குறித்த சில பார்வைகளை நெகிழ்ச்சியாக முன்வைக்கிறது. மனிதனுக்கு புறத்தே இயங்கிக் கொண்டிருக்கிற உலகை, நிகழ்வுகளின் தொகுப்பை அறிந்து கொள்ள சில நடைமுறைகளை கவனத்திற் கொள்ளச் சொல்கிறது. தர்க்கமும், பகுத்தறிவும் இணைந்த கூறுகளை பரிந்துரை செய்கிறது. மனித உணர்விற்கும், பொருளின் இருப்பிற்குமான உறவுநிலையைப் ஒருங்கிணைந்ததாகவும் இது அமைகிறது.
இல்முல்யகீன் (அனுமான ஞானம்), ஐனுல் யகீன் (தரிசனஞானம்) ஹக்குல் யகீன் (அனுபவஞானம்) என்பதாக அறிதலின் வகையினங்களை சூபிசம் பகுத்துக் காட்டுகிறது.
தூரத்தில் புகைவந்து கொண்டிருக்கிறது. ஆனால் கண்ணுக்கு நெருப்பு புலப்படுவதில்லை. புகையை வைத்துக் கொண்டு நெருப்பு இருப்பதாக அனுமானம் கொள்வது இல்முல்யகீன். இது இறைவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையிலான உறவுநிலைக் குறியீடாகும்
ஐனுல் யகீன் எரியும் நெருப்பை நேரடியாக கண்ணால் தரிசிப்பதாகும். இது இறைவனுக்கும் மெய்ஞானிகளான வலிமார்களுக்கும் இடையிலான உறவின் வகையைக் குறிப்பதாகும்.
எரியும் நெருப்பை தொட்டுப்பார்த்து அல்லது அதனுள் சென்று நெருப்பு சுடும் என்பதை நடைமுறை ரீதியாக உணரும் அனுபவ ஞானத்திற்கு பெயர் ஹக்குல்யகீன். இது இறைவனுக்கும் நபிமார்களுக்குமான பிணைப்பு பற்றி பேசப்படுகிற சொல்லாடலாகும்.
உலகம் -உயிர் -மனம் பற்றியகருத்தாக்கம்
************************************
உலகம் பற்றிய சிந்தனைமுறையிலும் சூபியசம் நான்கு வித உலகங்களை அடையாளப்படுத்திக் காட்டுகிறது.
1. சமகால மனித உலகம் நாசூத், ( நாஸ் என்பது மனிதக்கூட்டத்தை குறிக்கும் அரபுச்சொல் )
2.மனித ஜீவராசிகள் இல்லாத ஒளியால் படைக்கப்பட்ட இனமான மலக்குகள் என்னும் வானவர்களின் உலகம் மலக்கூத்,
சக்தியின் உலகம் ஐபரூத் இறைவனில் தோயும் உலகம் லாகூத் என்கிற வகையிலே விரிவான தனித்த அடையாளங்கொண்ட உலகங்கள் படைத்துக் காட்டப்படுகிறது.
உயிர் பற்றிய கோட்பாட்டுச் சிந்தனையையும் சூபியசம் முன்மொழிகிறது. உலகின் உயிர்கள் பற்றி பகுப்பாய்வு செய்து அதன் தனித்தன்மைகளை கண்டறிந்து விளக்க முற்படுகிறது.
1. ஜடப் பொருட்களின் உயிர் ரூஹுல்ஜிமாத்து என்று அழைக்கப்படுகிறது. ஜடப் பொருட்களுக்கு உயிர் உண்டு. ஆனால் வளர்ச்சி கிடையாது. இடப்பெயர்ச்சித் தன்மையும் இல்லை. இங்கே பூமியின் ஈர்ப்பு விசை உயிர்த்தன்மை சார்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
2. தாவர இனங்களின் உயிர் ரூஹுல் நபாத்து என்பதாகும். விதையிலிருந்து, முளைகள், கிளைகள், செடிகள், கொடிகள், மரங்களாக வளர்கிறது. உயிர்த்தன்மை இருப்பதாலேயே செடி கொடிகள் வளர்கிறது. ஆனால் இவ்வுயிருக்கு ஓரிடத்தைவிட்டு இடம்பெயர்ந்து இன்னொரு இடத்தில் நிலைகொள்ளும் நகரும் தன்மை கிடையாது. மாறாக இவற்றின் வேர்கள் மட்டுமே பூமிக்குள்ளே நகர்ந்து செல்கிறது.
3. ரூஹுல் ஹைவானி என்பது விலங்-கினங்களின் உயிர்குறித்த சொல்லாக்கமாகும். இதற்கென சில தனித்த பண்புத்தன்மைகள் உண்டு. இவ்வுயிர்களுக்கு வளர்ச்சி உண்டு. ஓரிடம் விட்டு வேறொரிடம் நகர்வதற்கான ஆற்றல் உண்டு. ஆனால் உழைப்பின் மூலமாக பொருளுற்பத்தி செய்யும் படைப்புத்திறன் கிடையாது.
4. மனித உயிரை குறிப்பதற்கு ரூஹுல் இன்சானி சொல்லாக்கம் பயன்படுத்தப்படுகிறது. இடம்பெயர்தல், வளர்ச்சி, சிந்தனை, உழைப்பு, உற்பத்தி உள்ளிட்ட அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கிய கருத்தாக்கமாக இது விளங்குகிறது.
மனம் என்னும் கருத்துருவாக்கம்
*****************************
மனம் என்னும் கருத்துருவாக்கம் பற்றியும், அது பல்வேறு உணர்வு நிலைகளால் பின்னிப் பிணையப்பட்ட விதம் குறித்தும் சூபி ஞானக் கோட்பாடு அதிகம் பேசியது. ஏனெனில் அகமியஞான உணர்வுநிலை முற்றிலும் நப்ஸ் எனப்படும் ஆன்மா சம்பந்தப்பட்ட கருத்து நிலையிலிருந்தே உருவாகி வளர்கிறது.
எல்லாமும் கடந்த இறைநிலை மெய்மையோடு மனிதமனம் இரண்டறக் கலத்தலே இஸ்லாமிய அனுபூதி சிந்தனையின் வழிமுறை. எல்லைக்குட்பட்ட ஒன்று எல்லை கடந்த ஒன்றோடு சேர்ந்து ஒன்றாவது என்பதாக இதற்கு அர்த்தங்கள் உண்டு. அதீத உலகியல் நுகர்ச்சிக்கு மாற்றாக உலக இன்பங்களிலிருந்து விடுபட்ட ஆன்மா பிழைபொறுக்க (தவ்பா) வேண்டி இறையிடம் பூரண நம்பிக்கை (தவக்கல்) கொள்கிறது.
சூபிக் கோட்பாடு மனித ஆன்மாவின் இயல்புகளை ஏழு வகைகளாக பாகுபடுத்திச் சொல்கிறது.
1. தீயகெடுதியைத் தூண்டுகிற ஆன்மா நப்ஸ் அம்மாரா,
2. மிருககுணம் நீங்கி நற்குணம் திரும்பும் ஆன்மா நப்ஸ் லவ்வாமா,
3. நன்மையான காரியங்களை செய்யும் ஆன்மா நப்ஸ் முல்ஹிமா
4. அமைதி நிலையில் இருக்கும் ஆன்மா நப்ஸ் முத்மஇன்னா.
5. இறைச் சோதனையை தாங்கி நம்பிக்கை தளராது உறுதியோடு இருக்கும் ஆன்மா நப்ஸ் ராளிய்யா,
6. தன்னைத்தானே நிறைவு பெற்ற ஆன்மா நப்ஸ் மரளிய்யா,
7.இறைஞானம் முழுமையாக ஒளிர்ந்த ஆன்மா நப்ஸ் காமிலா என்பதாக இந்த படித்தரங்கள் விவாதிக்கப்படுகின்றன.
( Sufism the mystic of Islam - என்கிற புத்தகத்தில் இருந்து )
சூபியிசத்தில் கூறப்படும் தியான நிலைகள் - stages of muraqaba
*************************************
அரபிக் மற்றும் பாரசீக மொழியில் முராஃகபா என்பது தியானம் என்கிற அர்த்தத்தை உடையது... சூபி ஞானிகள் தங்களது சீடர்களுக்கு முதலில் கற்றுத்தருவது இதுவே. ஆனால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் புழங்கும் சூபியிசத்திற்கும் அயல்நாடுகளான இரான்,இராக்,துருக்கி,சீனா,அப்கான் மற்றும் இஸ்லாமை அனுமதித்த மற்ற நாடுகளில் புழங்கும் சூபியிசத்திற்கும் ஏணியில் எட்டாத அளவு வேறுபாடு உண்டு..இந்திய சூபியிசத்தை அடுத்த பாகத்தில் காணலாம்.
1. Ghanood - தியானத்தின் முதல்நிலை, கண்களை மூடியவாறு அமர்ந்திருந்து அல்லாஹுவின் பெயரை திக்ரு செய்வது, தூக்கத்தை குறைத்துக்கொண்டு தியானத்தை தொடங்கும் ஆதி நிலை
2.Adraak - இது தூக்கத்தை முற்றிலுமாக ஒழித்து subconscious mind என்னும் ஆத்மார்த்த எண்ணங்களை உணருவது, இந்நிலை அடைய நாம் இரண்டு வருட கனூத் தியானநிலையை அடைந்தவராக இருக்க வேண்டும்.
3. Warood - விழித்திருக்கும் நிலையிலேயே தியானித்திருப்பது..அதாவது நாம் எந்த நிலையில் இருந்தாலும், உறக்கத்திலோ- உணவு உண்ணும் போதோ- மலஜலம் கழிக்கும் நிலையிலோ நாம் தியான சிந்தனையிலிருந்து விலகாமல் இருப்பது.. ( ஜடம் மாதிரி கிடக்கிறது ) இந்த இறுதிகட்ட தியானநிலையில் இருப்போர் கண்களால் காணாமலேயே உலகில் நடப்பனவற்றை அறிந்துகொள்வது , நடக்கவிருக்கும் செயல்களை முன்கூட்டியே அறியிப்பு செய்வது.. ( இது மனிதனால் முடியுமா முடியாதா என நீங்களே தீர்மானியுங்கள் ).
J.Nicholson எழுதிய The mystic of Islam புத்தகத்திலிருந்து....
Gnosis of Universe- விண்ணுலக மறைஞானம் பெறுதல்
**************************************
Kashaf or ilhaam - சாதாரண மனிதராய் இருந்து பிறரால் உணர முடியாதவற்றை தாமாக உணர்ந்துகொள்வது.
Shahood - தமக்கு உண்டாகும் உள்ளுணர்வுகளின் மூலம் உலகை சுற்றி நடப்பவற்றை காணாமலே தெரிந்துகொள்வது, கேட்காமலே அறிந்துகொள்வது, நுகராமலே உணர்வது, தொடாமலேயே அந்த பொருளின் தன்மையை அறிந்துகொள்வது.... ( இறைவன் தன்னுடைய 100% பேரறிவிலிருந்து மனிதனுக்கு அளித்திருப்பது வெறும் 10% அறிவு தான், அதில் புலணறிவு என்பது மனிதனுக்கு 7% மட்டுமே இதில் காணாமலே,கேட்காமலே,நுகராமலே,தொடாமலே பொருட்களின் தகவினை அறிவது எப்படி...?? மனிதனை கடவுள்தன்மைக்கு நிகராக இந்த தியானம் அழைத்துச்செல்லுமா...தீர்மானியுங்கள். )
Fatah - நேரத்திலிருந்தும் மண்ணுலக வாழ்விலிருந்தும் விடுபட்டவராக மாற்றும் ஃபத்தா நிலை..! இருந்த இடத்தில் இருந்தபடியே விண்ணுலகில் சஞ்சாரிக்க முடியுமாம்.
Fana - இந்த நிலையை அடைந்த ஒருவர் அல்- இன்ஸானுல் கமீல் ஆகிறார், அதாவது ஆங்கிலத்தில் திருமதி . க்ரீன் கூறுகையில் He becomes a perfect man, யாவற்றையும் தியாகம் செய்த , முற்றும் துறந்த மோனநிலை அடைந்த முழு மனிதராகிறார்...
அப்போ சூபியிசத்தை கடைபிடிக்காதவன் முழு மனிதனில்லையா...?
எந்த ஒன்றையும் சொந்தமாக்காமலும், எந்த ஒன்றிற்கு சொந்தமாகாமலும் இருத்தல் என்பதும் நீ உன்னில் இறந்துவிடும்படி இறைவன் உன்னைச் செய்து அவனில் உன்னை வாழும்படி செய்தல் என்பதும் சூபியிசத்தின் அடிப்படை.
ஆன்மாவின் தூய்மை, நன்மை தீமைகளை பகுத்துணரும் வல்லமை அன்பினால் அதனை சுடர்விடச் செய்தல் என்பதான நுண்ணிய கருத்தாக்கங்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.
இந்தியாவில் சூபியிசம்
***********************
இந்திய பண்பாட்டுச் சூழலில் சூபிமார்க்கம் ஒருபுறம் இறைநேசத்தையும் மறுபுறம் மனிதகுலநேசத்தையும் அடிப்படையாகக் கொண்டே வெளிப்பட்டுள்ளது. எளிமை, சுயஅடக்கம், பரந்தநோக்கு, சமயஒற்றுமை உணர்வு உட்பட்ட லட்சியங்களின் வடிவமாக இது செயல்பட்டுள்ளது.
நீங்கள் விளக்கைப் போலவும்ஊசியைப் போலவும் ஆகிவிடுங்கள்
சூபிகள் இஸ்லாமிய மெய்ஞானிகளாக, சித்தர்களாக, அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
உலகியல் சார்ந்த அறவியல் கோட்பாடுகளையும், ஆன்மீகம் சார் வாழ்வியல் நெறிகளையும் ஒருங்கிணைத்து மனிதகுலத்திற்கு வழிகாட்டும் மார்க்கமாக இஸ்லாம் தன்னைஅர்த்தப்படுத்தியுள்ளது.தொழுகை, நோன்பு, புனித ஹஜ்பயணம் என எல்லாவித கடமைநிறைவேற்றுதல்களிலும் ஒருவித கூட்டு வழிபாட்டுமுறையை முன்வைக்கிறது.
மேல் - கீழ், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்கிற இறுக்கமான சமுதாய அடுக்கு முறைகளின் அடிப்படையை தகர்த்து எல்லோரும் சமம் என்னும் பேருணர்வை பூமியெங்கும் பரப்பி, மனிதநேயத்தையும், மனித நீதிக்கான அடித்தளங்களையும் வலுவாக்கிக் கொண்டது.
இஸ்லாமியத்தை நபிமுகமது பிரச்சாரம் செய்து நடைமுறைப்படுத்திய மக்கா. மதினா அரேபிய பிரதேசங்களில் இது துவக்கம் கொண்டுள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நபிகளின் உற்ற ஸகாபாக்கள் அஸ்ஹாபுஸ் ஸூபா திண்ணைத் தோழர்களின் அறிமுகத்-திலிருந்தே இதற்கான துவக்கக் கூறுகள் தென்படுகின்றன.
நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பின் இமாம்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி கலீபாக்களின் ஆட்சிக்குப் பிறகு இஸ்லாம் பேசிய ஒற்றுமை உணர்வு, சமதான சகவாழ்வு, வறியவருக்கு உதவுதல் உள்ளிட்ட மனிதப் பண்புகளின் சிதைவாக்கம் நிகழ்வுத்துவங்கியது. உமய்யாக்கள், அபாசித்துகள் ஆட்சிக்காலத்தில் இதன் கோரம் விரிவானபோது இஸ்லாம் முன்வைத்த எளிமைசார்ந்த மனிதநேய வாழ்வை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் சிந்திக்கவும், செயல்படவும் துவங்கினர்.
சூபியசம் பல்வேறு நாடுகளின், சூழல்களின் தன்மைகளைக் கொண்டு முகிழ்த்தது.
துன்னுன் மிஸ்ரி (கி.பி. 796-862)
ரபியத்துல் அதானியா ( கி.பி. 801 ல் இறந்துவிட்டார் )
பயாஸித் பஸ்தமி ( கி.பி 804 ல் இறந்துவிட்டார் )
ஜுனைத் ஆப் பக்தாத் ( கி.பி. 830 - 910 )
மன்சூர் ஹல்லாஜ் (கி.பி. 858 --- 922)
கஸ்ஸஅலி (கி.பி. 1058--1111)
முஹயத்தீன் இப்னு அல் அரபி (கி.பி. 1165)
அப்துல் காதிர்ஜலானி (1078--1166)
இப்னு அராபி ( கி.பி. 1165 - 1240 )
காஜா முகீனுதீன் சிஷ்தி- கரீப் நவாஜ், (1141-1236)
அபுல் ஹசன் அஷ்-ஷாதிலி ( கி.பி. 1258 ல் இறந்துவிட்டார் )
மெள்லவி ஜலாலுத்தீன் ரூமி (1207--1273)
அஹமது மொஹ் மைஸ்பந்திரி (1826-1906 )
என உலக அளவில் சூபி ஞானிகள் முக்கியத்துவம் பெறத் துவங்கினர்.
இந்திய மண்ணில் அலிய்யுனுல் ஹஜ்வீரி, பரீதுத்தீன் கஞ்சேஷகா (1175-1265), அலாவுத்தெள்லா சிம்னானி (1261--1336), ஷெய்கு நிஜாமுதீன் அவுலியா (1325) ஷாஒலியுல்லா,
அகமது மனோ
கபீர் தாசர்
சூர் தாசர்
ஷிரடி சாய்பாபா
உட்பட்ட முக்கியமான மெய்ஞானிகளின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது.
சூபியிச சிந்தனைகளின் பல்வேறு தத்துவப்போக்குகள் பின்பற்றுதல்கள் நிகழ்ந்ததன் விளைவாக
பக்தாஷி,
குப்ராவியா,
மெவ்லவியா,
முரீதியா,
காலிதியா,
சுலைமானியா,
ஹக்கானியா,
நியமத்துல்லாஹி,
நூர்பக்ஷி,
ஒவைசி,
முயிஸ்பந்தாரி,
செஹ்னூசி,
சர்வார்காதிரியா,
டிஜ்ஜானியா,
சிஸ்தியா,
காதிரிய்யா,
சுக்ரவர்த்தியா,
நக் ஷபந்தியா,
ஷாதிலிய்யா, உள்ளிட்ட ஞானவழி மார்க்க பிரிவுகள் (தரீகாக்கள்) உருவாகின. இஸ்லாமிய சூபியிச சிந்தனைப் போக்கு பல்வேறு கருத்துப்போக்குகளை முன்நிறுத்திய தத்துவ இயலாகவும் பரிணமித்தது. ( இந்த தரீக்காக்களின் பெயரை படிக்கவே மூச்சு வாங்கும் நமக்கு, இவர்கள் தலைக்கு ஒவ்வொரு கொள்கையும் கோட்பாடுகளும் அவரவர் வசதிக்கேற்ற வணக்கமுறைகளும் வைத்திருக்கிறார்கள், இவர்கள் செய்த முதல் வேலை தொழுகையில் ரக்ஆத்துகளை கூட்டி குறைத்தது மார்க்கத்தை சாமானிய மனிதன் பின்பற்ற இயலாத வகையில் கடினமாக்கியது இதனாலேயே சூபிக்களுக்கு வஹாபிகளை பிடிப்பதில்லை காரணம் வஹாபிகள் இஸ்லாத்தில் குர்ஆன் ஹதீதை தவிர மற்ற சூபி கித்தாபுகளை மதிப்பதுமில்லை சூபி ஞானிகளை இஸ்லாத்தை சேர்ந்தவர்களாக அங்கீகரிப்பதுமில்லை...)
இறைவனை ஒருவன் என்பதை ஏற்றுக் கொண்ட சூபிகள் இறைவனை அறிதல் குறித்த பாதையைப் பற்றி வித்தியாசமான கருது-கோள்களைக் கொண்டிருந்தனர். இஸ்லாத்தின் அகம்சார் மறைஞான, ஆன்மீக உளவியலின் பரிமாணமாக சூபியசம் முக்கியத்துவம் பெறுகிறது. மனித மனங்களின் உள் ஆழங்களில் நிகழும் இறைத்தேட்ட பயணங்களினூடே இறைவனை அடியான் நெருங்கிச் செல்வதற்கான தடயங்களை சொல்லிச் செல்கிறது.
சூபிகள் ஆடம்பரத்திற்கு எதிராக எளிமை, பொய்மைக்கு எதிராக தூய்மை, சண்டைச் சச்சரவுகளுக்கு எதிராக சமாதானம், ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக சமத்துவம் என்கிற அடிப்படை உணர்வுகளுடன் இஸ்லாமிய ஆத்மஞான சிந்தனையை செலவிட ஆரம்பித்தனர்.
இஸ்லாமியத்தை முரண்பாடுகளுள்ள நடைமுறைத் தத்துவமாக ஆக்கபட்டதை சகிக்காமல் ஞானத்தை இந்த நடைமுறை இருப்பியல் வாழ்விற்கு அப்பால் தேடினர். முரணற்ற, நிரந்தரதன்மை கொண்ட உண்மையை எதிர்நோக்கினர். புலன் உணர்வுகளாலும் அறிவாலும் உணரமுடியாத அந்த உண்மையைத் தேடி தியானம் செய்ய முயன்றனர்.
இத்தகைய அனுபூதவியல் தன்மைகொண்ட இறைவனை அறிதலுக்கு, மனதை தூய்மைப்படுத்துதல் என்கிற உபாயத்தை முன்வைத்தனர். வஞ்சகம், ஏமாற்று, பொறாமை, கோபம், ஆணவம், மனோஇச்சை உள்ளிட்ட உணர்வுகளுக்கு அப்பால் பரிபக்குவ நல்லுணர்வுகளால் சூழப்பட்ட தூய பேருண்மையை தரிசிப்பது என்பதான நடவடிக்கையை கோட்பாட்டுருவமாக்கினர்.
இதற்கென உடல்பற்றிய ஞானத்தை அறியமுற்பட்டனர். உயிரைகாக்க உடலை வலுப்படுத்துதல், பாதுகாத்தல், மரணமில்லா பெருவாழ்வை பற்றி சிந்தித்தல் என்பதாகவும் இது நிகழ்ந்தது.சூபிகளின் இறையியல் கருத்து தனிமைப்பட்ட, வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்ட ஒன்றானதுபோல் தெரிந்தாலும் அவற்றின் அடிப்படை புறவாழ்வில் மனிதனை சிறுமைப்படுத்தும் குணங்களை விட்டொழித்து அகவய உயர்பண்புகளின் உணர்வுகளால் மனத்தை தூய்மையுறச் செய்வதே ஆகும். இதன் இன்னொரு பரிமாணமாகவே மனிதகுலத்திற்கு பணியாற்றும் பண்பினை சூபிகள் முதன்மைப்படுத்தினர். எனவே சூபிகளின் சமூக செயல்பாட்டு இயக்கம் குறித்தும் இவற்றினூடே நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
குணங்குடி மஸ்தான் சாகிபு,
தக்கலை பீர்முகம்மது சாகிபு,
கோடை நகர மெய்ஞானி ஷெய்கு முகியத்தீன் மலுக்கு முதலியார்,
காலங்குடி இருப்பு மச்சரேகைசித்தர், அய்யம்பேட்டை அப்துல்கனி சாகிபு, காயல்பட்டணம் செய்யது முஹம்மது காதிர்,
கணியாபுரம் ஷெய்கு அப்துல்காதர் , வாலைமஸ்தான் யாகோபுசித்தர், தென்காசி இறசூல்பீவி,
கீழக்கரை ஆசியாவும்மா
இளையான்குடி கச்சிப்பிள்ளையம்மாள் போன்றோரின் வாழ்க்கை, பாடல் மரபு வழியாக இந்த உண்மைகளை நாம் உணர முற்படலாம்.
பாரசிக பெண் சூபியான ராபியத்துல் பசரியா மனிதகுலத்திற்கு தொண்டாற்றும் நற்செயலை கீழ்கண்டவாறு விளக்குகிறார்.
நீங்கள் விளக்கைப் போலவும் ஊசியைப் போலவும் ஆகிவிடுங்கள் என்று தனக்காக அன்றி பிறருக்காகவே எரிந்து எரிந்து ஒளிதருகின்ற விளக்கு போலவும், நிர்வாணியாக இருந்து கொண்டே கிழிந்த ஆடைகளைத் தைக்கும் ஊசியைப் போலவும் தன்னலமற்று மனிதகுல மேன்மைக்காக பணியாற்ற வேண்டும் என்பதாகவும் இது அமைகிறது.
இந்திய மண்ணில் வர்ணாசிரம மேலாதிக்கத்தாலும் சாதிப்படிநிலை வரிசை முறையினாலும், மனித உடம்பையே தீட்டென சொல்லி ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் சூபிகளின் சகோதரத்துவ உணர்வு ததும்பிய சமயப்பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு சாதீயக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றனர்.
இந்திய சூபிஞானி ஷெய்கு நிஜாமுத்தீன் அவுலியா எல்லாமக்களுக்கும் சாந்திவேண்டும் எனவும் மனித குல நலனுக்காக இறைவனை நேசிப்பவரும், இறைவனுக்காக மனிதகுலத்தை நேசிப்பவரும் இறைவனின் நெருக்கத்துக்கு உரியவர்கள் எனவும் பேசினார்.
வட இந்திய பக்திமார்க்கத்தின் முக்கிய மூலவரான கபீர் (1838 - 1440) இந்து முஸ்லிம் சிந்தனை இணைப்பின் முக்கிய சரடாகத் திகழ்ந்தார். சமயங்களின் பெயரால் புறமத அடையாளங்கள், குறியீடுகளை முன்வைத்து நடைபெறும் சண்டைகளுக்கும் அநியாயங்-களுக்கும் முடிவுகட்ட ஒரு சமரச வழித்தடத்தை உருவாக்கினார்.
அன்புத்ததும்பும் ஞானநெறியின் உயர்நிலை அடைந்தவர்கள் புறசமய அடையாளங்களை களைந்து, வேற்றுமை பாராட்டும் பண்பினை மறுப்பவர்களாக, இருந்துள்ளனர். பரந்த பண்பட்ட நோக்கில் எல்லாமும் அவர்களுக்கு ஒன்றாகவே தெரிந்துள்ளது. எனினும், சைவ, வைணவ சித்தரீய குறியீடுகளின் தாக்கம் பெற்ற சூபிகளின் பாடல்களை இஸ்லாமிய சிந்தனை வட்டாரத்திற்குள் பிறசமயக் குறியீடுகளையும் உள்வாங்க முயற்சித்த சமய நோக்கின் விளைவாகவும் கருதலாம்
ஒவ்வொரு வகுப்பினருக்கு்ம் நாம் ஒரு திருத்தூதரை அனுப்பினோம் (16:36)
என்ற திருமறை வசனத்தின் அடிப்படையில் இந்துமக்களையும் அஹ்லேகிதாப் என்னும் வேதம் பெற்ற மக்கள்தான் என்று சூபிஞானிகளில் ஒரு பிரிவினர் கூறியுள்ளதை இங்கு நாம் கவனத்திற் கொள்ளலாம்
**அடுத்த பாகத்தில் சூபியிசம் ஒரு மாயை என்பதனை விளக்கும் பதிவு வெளியாகும் இன்ஷா அல்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)