பக்கங்கள் செல்ல

பரிணாமம் : உண்மையா ஊகமா?

பரிணாமம் : உண்மையா ஊகமா?


தொடர் 1: பரிணாமம் டார்வினுக்கு முன்

பரிணாமம் குறித்து விளங்குவதற்கு அதன் வரலாற்று பார்வையை முதலில் நாம் அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். அனைவரும் பரிணாமம் குறித்து ஓரளவிற்கு அறிந்திருந்தாலும் அதன் கட்டமைப்பை புரிந்து கொள்ள பரிணாமம் குறித்த வரலாற்றை அறிந்து கொள்வது சிறந்த வழியாகும். இன்ஷா அல்லாஹ் அதன் வரலாறு குறித்து நாம் பார்ப்பதற்கு முன்பு பரிணாமம் என்றால் என்ன என்பதை பார்ப்போம். மேலும் வாசிக்க.......


தொடர் 2: லாமார்க்கிஸம்சந்ததிகளில் தோன்றும் பெறப்பட்ட குணங்கள்
(Inheritance of acquired characters)

நாம் நவீன பரிணாமம் குறித்து பார்ப்பதற்கு முன்பு பரிணாமத்திற்கு டார்வினிஸம் அல்லாத மாற்று பரிணாமவியல் கோட்பாடுகள் மற்றும் அதன் மறுப்பையும் சற்று பார்த்துவிடுவது நமக்கு பரிணாமவியலின் இன்றைய நவீன நிலைபாட்டை ஆய்வு செய்யவும் விமர்சிக்கவும் துணையாக இருக்கும். அந்த வரிசையில் டார்வினஸத்திற்கு மாற்றாக கூறப்பட்ட கோட்பாடுகளில் லாமார்கிஸமும் ஒன்று. இந்த தொடரில் லாமார்க்கிஸம் குறித்தும் அதன் அறிவியல் மறுப்பு குறித்தும் பார்த்து விடுவோம் இன் ஷா அல்லாஹ். மேலும் வாசிக்க....



தொடர் 3: ஆர்தோஜெனிஸிஸ்

சிகப்பு நிற பூ இருக்கும் தாவரத்திற்கும் வெள்ளை நிற பூ இருக்கும் தாவரத்திற்கும் இடையே இனச்செர்க்கை ஏற்படும் போது டார்வினின் அன்றைய கருத்தியலான பேன்ஜெனிஸிஸ் அடிப்படையில் இனச்சேர்க்கையில் பிங்க் நிற பூ பூக்கும் தவாரம் கிடைக்க வேண்டும் முடிவாக. ஆனால் அதற்கு மாற்றமாக இரண்டாம் தலைமுறை பூக்கள் சில வெண்மையாகவும், சில சிகப்பாகவும் இருக்கிறது. இது போன்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் இயற்கை தேர்வு திணறிக்கொண்டிருந்த காலத்தில்........மேலும் வாசிக்க.....



தொடர் 4: இனம்(Species) எனும் கருத்தியல்:

பரிணாமவியலின் முக்கிய ஆவணம் அல்லது ஆதாரம் என்று அழைக்கப்படும் ஒரு இயங்கியல்(Process) இனப்பிரிகையாகும்(SPECIATION). இதன் வேர் சொல் அல்லது அடிப்படை இனம்(SPECIES) ஆகும். ஆம் பரிணாமவிலாளர்களின் இறுதி இலக்கான “ இனமாக பிரிதல்(speciation) என்னும் இயங்கியல் குறித்தும் அதன் மையமாக அமைந்த இனம்(species) என்ற பதம் குறித்தும் , உயிரியல் வகைபடுத்தலில் அடிப்படை அளகான அந்த இனம் என்ற சொல்லை வரையறுப்பத்திலும் அறிவியல் உலகம் பல்வேறு முரண்பட்ட விளக்கங்களை கூறி தத்தளித்து வருவதை காண்கையில் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் வாசிக்க.....



தொடர் 5: உயிரினத் தோற்றம் அறிவியல் கோட்பாடு என்றால் என்ன?

நாம் சென்ற தொடரில் குறிபிட்டது போல் உருவத்தில் இருக்கும் சிறு வேற்றுமையின் அடிப்படையில் தொல்லியலாளர்கள் அவற்றை தனி இனமாக பிரித்திருப்பார்கள் ஆக படிநிலையில் சிறு தொடர் மாற்றங்களினால் உயிர் இனங்கள் தோன்றும் என்பதும், வாழ்க்கை போராட்டத்தில் உயிரினங்கள் முற்றிலும் அழிந்தன என்பதும் படிமங்களின் அடிப்படையில் நம்பும் படியாக இல்லை. இவ்வாறு உயிர் இனங்கள் படிநிலையில் சிறு சிறு தொடர் மாற்றங்களினால் தோன்றியதற்கான ஆதாரங்கள் படிமங்களில் இல்லாத காரணத்தினால்தான் ஜே கோல்ட் போன்றவர்கள் “Punctuated Equilibrium” எனும் கோட்பாட்டை முன்வைக்கின்றார்கள். எது பரிணாமத்தின் இயற்கை???? என்பதிலேயே கோல்டும் டாவ்கின்ஸும் மோதிக்கொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். மேலும் வாசிக்க