பக்கங்கள் செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
Thursday, September 29, 2016
திருக்குர்ஆன் மலர்கள்: இந்தக் கூடுகளுக்குள் வாழ்ந்த ஆத்மாக்கள் எங்கே?
திருக்குர்ஆன் மலர்கள்: இந்தக் கூடுகளுக்குள் வாழ்ந்த ஆத்மாக்கள் எங்கே?: மேற்கண்ட வீடியோவில் இன்றுவரை உடல் அழுகாமல் பாதுகாக்கப்பட்ட சடலங்கள் சிலவற்றைக் காணலாம்..... ஆம், சிலவற்றை நாம் இன்று காண முடிகிறது....
Friday, September 16, 2016
எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-8: மார் ஷபா கடிதம்
ஏக இறைவனின் திருப்பெயரால்
மாற்கு சுவிஷேசமும்
மார் சபா கடிதமும்
இந்த கடிதமானது
எருசலேமில் இருந்து 12 மைல் தொலைவில் உள்ள மார் சபா கிறித்தவ மடாலயத்தில் இருந்து மார்டான்
ஸ்மித் என்ற அறிஞரால் 1958ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது மாற்கால்
தோற்றுவிக்கப்பட்ட அலெக்ஸாண்டிரியாவின் திருச்சபையில் பயிற்றுவிப்பாளராக கிபி
200களில் பணியாற்றிய அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் அவர்களால் தியோடோர் என்பவருக்கு
வரையப்பட்ட கடிதமாகும். இந்த கடிதமானது இக்னேஷியஸ் அவர்களின் கடிதங்களின் 17ம்
நூற்றாண்டின் பதிப்பின் பின்பகுதியில் எழுத்து வடிவிலானதாக மார்டான் ஸ்மித்
அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதை புகைபடமும் எடுத்து கொண்டார் மார்டான்
ஸ்மித். இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட மார்டான் ஸ்மித் அவர்கள் 1973 தனது ஆய்வு
முடிவுகளை Clement of Alexandria and a
Secret Gospel of Mark (Harvard University
Press) என்ற
புத்தகமாக வெளியிட்டார். இந்த ஆய்வு முடிவுகள் கிறித்தவ உலகத்தை அதிர்ச்சியில்
உரையவே செய்துவிட்டது. அந்த கடிதத்தில் அப்படி என்னதான் உள்ளது. இதோ நமது
வாசகர்களுக்காக அந்த கடித்த்தின் ஆங்கில மொழியாக்கம்
From the Letters of the most holy Clement,
author of the Stromateis To Theodore:
You have done well in
muzzling the unmentionable doctrines of the Carpocratians. It is they who were prophetically called ‘wandering stars’ [Jude 13], who stray from the narrow way
of the commandments into the fathomless abyss of fleshly sins committed in
the body. They have been inflated with the knowledge, as they say,
of ‘the deep things of Satan’ [Rev. 2: 24]. They cast themselves unawares into the gloom of the darkness of
falsehood [cf. Jude 13]. Boasting that they are
free, they have become the slaves of lusts that bring men into bondage. These people must be totally opposed in
every way. Even if they were to say something true, not even so
would the lover of truth agree with them; everything that is true is not necessarily truth. Nor should one
prefer the apparent truth which is according to human opinions to the real truth which is according
to faith. But of the matters under dispute concerning the divinely-inspired Gospel
according to Mark, some are utterly false and some, even if they contain certain
things that are true, are not so truly delivered; for the things that are true are
corrupted by those that are fictitious, so that, as it is said, ‘the salt has lost its savour’
[Matt. 5: 13, Luke 14: 34].
Mark, then, during Peter’s
stay in Rome, recorded the acts of the Lord, not however reporting them all, for he did not indicate the
mystical ones, but selected those which he thought most useful for the increase of the
faith of those undergoing instruction.
When Peter had borne his
witness (i.e. suffered martyrdom), Mark arrived in Alexandria, taking his own and Peter’s memoirs.
From these he copied into his first book the things appropriate for those who were
making progress in knowledge but compiled a more spiritual Gospel for the use of
those who were attaining perfection. Yet not even so did he divulge the
unutterable things themselves, nor did he write down the Lord’s hierophantic teaching. But adding to
the previously written acts others also, he presented, over and above these,
certain oracles whose interpretation he knew would provide the hearers with mystical guidance into
the inner shrine of the seven-times hidden truth. Thus, then, he made advance preparation-not
grudgingly or incautiously, as I think―and on his death
he left his composition to the church in Alexandria, where even until now it is very well guarded, being
read only to those who are being initiated into the great mysteries.
But abominable demons are
always devising destruction for the human race, and so Carpocrates, having been instructed by them, used
deceitful devices so as to enslave a certain elder of the church in Alexandria
and procured from him a copy of the mystical Gospel, which he proceeded to interpret in accordance
with his own blasphemous and carnal opinion. Moreover,
he polluted it further by mixing shameless falsehoods with the holy and
undefiled sayings, and from this mixture the dogma of the Carpocratians has
been drawn out. To these people, then, as I have said already, one must never
yield, nor must one make any concession to them when they pretend that their
tissue of falsehoods is the mystical Gospel of Mark, but rather deny it with an
oath. It is not necessary to speak all the truth to everyone; that is why
the wisdom of God proclaims through Solomon: ‘Answer a fool according to his
folly’ [Prov. 26: 5] meaning that from those who are spiritually blind the
light of the truth must be concealed. Scripture also says, ‘From him who has
not will be taken away’ [Mark 4: 25] and ‘Let the fool walk in darkness’
[Eccles. 2: 14]. But we are sons of light, having been illuminated by ‘the
dayspring from on high’ of the Spirit of the Lord [cf. Luke 1: 78], ‘and where
the Spirit of the Lord is’, Scripture says, ‘there is liberty’ [2 Cor. 3: 17];
for ‘to the pure all things are pure’ [Tit. 1: 15]. To you, then, I will not
hesitate to give an answer to your questions, exposing their falsehoods by the very
words of the Gospel.
Immediately after the section which begins And they were on the road,
going up to
Jerusalem and continues to after three days he will
rise [Mark 10: 32-4], there follows, as the text goes: ‘And they come to Bethany, and
there was a woman there whose brother had died. She came and prostrated herself before
Jesus and says to him: “Son of David, pity me”. The disciples rebuked her, and
Jesus in anger set out with her for the garden where the tomb was. Immediately a loud voice
was heard from the tomb, and Jesus approached and rolled the stone away from the
entrance to the tomb. And going in immediately where the young man was he stretched
out his hand and raised him up, taking him by the hand. The young man looked on him
and loved him, and began to
beseech him that he might be with him. They came
out of the tomb and went into the young man’s house, for he was rich. After six days
Jesus laid a charge upon him, and when evening came the young man comes to him, with
a linen robe thrown over his naked body; and he stayed with him that night, for
Jesus was teaching him the mystery of the kingdom of God. When he departed thence, he
returned to the other side of the Jordan’
After this there follows And James and John come forward to him and all that section [Mark 10: 35-45]. But as for
‘naked to naked’ and the other things
about which you wrote, they are not to be found. After the words And he comes to Jericho [Mark 10:
46a] it adds only: ‘And there was the sister of the young man whom Jesus loved and
his mother and Salome; and Jesus did not receive them’. But as
for the many other things which you wrote, they are falsehoods both in appearance and in reality. Now
the true interpretation, which is in
accordance with the true philosophy........(F.F. Bruce, The ‘Secret’ Gospel of Mark)
மேலே
கூறியதுடன் கடிதம் முடிவடைகிறது. இந்த கடிதமானது கார்ப்போகிரேட்கள் மற்றும்
அவர்களது திருகுதாளங்களை தோழுரிப்பதாய் உள்ளது. அதாவது ஏசுவின் விண்ணேற்றத்தின்
100 ஆண்டுகளுக்குள்ளாகவே எப்படி சுவிஷேசனங்கள் மனித கரங்களால் பாழாக துவங்கியது
என்பதை இந்த கடிதம் விளக்குகிறது. இதில் கார்ப்போகிரேட்களை தியோடோர் ஒடுக்கியதற்கு
பராட்டும் காணப்படுகிறது. வேதங்களில் விளையாடிய கார்ப்போகிரேட்கள் குறித்து தோழுரிக்க
துவங்கிய கிளமண்ட் அவர்கள் மார்க் அவர்கள் இரண்டு சுவிஷேசங்களை வடித்ததாகவும்
அதில் முதலாவது ஏசுவின் செயல்களை குறிப்பதாகவும் இது ரோமில் இயற்றப்பட்ட்தாகவும்
கூறுகிறார். பேதுருவின் மரணத்திற்கு பிறகு அலேக்ஸாண்டியாவில் மாற்கால் இயற்றபட்ட இரண்டாவது
சுவிஷேசமானது முதலில் இயற்றியதோடு சேர்த்து அற்புதங்களுக்கான மறைபொருள்
விளக்கத்தையுடையது .அதாவது கினாஸ்டிக் (Gnostic) தன்மையுடையது என்றும் ஞானப்பாட்டை விளக்கக்கூடியது
என்றும் கூறுகிறார்.
மேலும்
கார்ப்போகிரேட்டுகளின் மாற்கு சுவிஷேசத்தில் இல்லாத பகுதி என்றும் உன்மையான
மாற்கில் இருக்கும் வசனம் என்றும் கூறி இன்றிருக்கும் மாற்கு சுவிஷேசம்
10:34க்கும் 35க்கும் இடையில் இருக்கும் வசனம் ஒன்றையும் சுட்டி காட்டுகிறார்
கிளமண்ட். அதுபோல மாற்கு 10:46 பிறகு உள்ள வசனத்தையும் குறிப்பிடுகிறார் கிளமண்ட்
அவர்கள். இதன் காரணத்தினால்தான் கிறித்தவ உலகம் அவரது ஆய்வை கண்டு அதிர்ச்சியில்
உறைந்து போனது.
இன்று கிறித்தவ
உலகம் கூறுவது போல் ஒரே ஒரு மாற்கு சுவிஷேசம் தான் இருந்தது என்பது தவறாகும்.
மாற்கு சுவிஷேசம் என்ற பெயரில் பல போலிகளும் ஏசுவின் விண்ணேறத்திற்கு பிறகு
சுழற்சியில் இருந்துவந்துள்ளது என்பதற்கான் சான்றுதான் மார் சபா கடிதமாகும். இன்று
நம் கைகளிலிருக்கும் மாற்கு தான உன்மை பேதுருவின் சீடரான மாற்கு எழுதியது
என்பதற்கு எந்த சான்றும் இல்லை. மூல பிரதிகளும் அகப்பட வில்லை. இடம்பெறும்
செய்திகளும் 2ம் நூற்றாண்டுகளை சார்ந்த வையாக உள்ளது.
மார் சபா கடிதமும்
கிறித்தவ உலகமும்:
இன்றிருக்கும் கிறித்தவ உலகம் இந்த கடிதமானது போலியானது
என்று வாதிக்கிறது. அது மார்டான் சுமித்தின் திள்ளுமுள்ளு என்று சாடியது. ஆனால்
அதன் எழுத்து வடிவங்களை ஆய்வுக்குட்படுத்தியவர்கள் Venetia Anastasopoulou, இது சுமிதின்
கிரேக்க கையெழுத்து இல்லை என்றார். Agamemnon
Tselikas இது 20ம் நூற்றாண்டின் புரட்டு என்றார். மேலும் இந்த கடிதம் இருந்ததை கை
ஸ்ட்ருமோஸா, சுலோமோ பைன்ஸ் போன்றவர்களும் கண்டிருக்கிறார்கள் என்பது அதிகப்படியான
தகவல். மேலும் நிச்சயம் 20ம் நூற்றாண்டை சார்ந்த ஒருவரால கிளமண்ட அடிகடி பயன்படுத்தும்
வார்த்தைகளை கொண்டு இத்த்கைய கடிதங்களை உருவாக்குவது என்பது அவ்வளவு சாத்தியம்
அல்ல. கனிணி கோலோச்சி இருக்கும் இன்றைய காலத்தில் கூட இவ்வாறு செயவது அவ்வளவு
எளிமையான காரியம் அல்ல எங்கிறார் பார்ட் எர்மான் (Bart Erhman). 1936ல் தான் ஓட்டோ ஸ்டாலின் என்பவர் கிளமண்டின்
கடிதங்களின் தொகுப்பை உருவாக்கி அதில் கிளமண்ட் பயன்படுத்தும் வார்த்தைகளின்
அடிச்சுவட்டை பதிவு செய்தார். இதனை அடிப்படையாக கொண்டு அந்த கடிதத்தின் ஒவ்வோரு
வார்த்தையையும் ஆய்வுக்கு உட்படுத்தியதை தனது ஆய்வில் தெளிவாக விளக்கியுள்ளார்
அறிஞர் மார்டான் சுமித் அவர்கள். இந்த கடித்தை கண்ட சாட்சிகள் இருக்க இந்த கடிதம்
மார் சாப மடாலயத்தில் இருந்து காணமல் போயிருப்பது மேலும் சந்தேகத்தை வழுக்கச்
செய்கிறது. மேலும் இந்த கடித்த்தின் புகைபடங்களை ஆய்வு செய்த ஸ்காட் புரவுன்(Scott G. Brown) அவர்கள் எழுதப்பட்ட மையானது
புகைபடங்களில் காணப்படும் இந்த நிலையை அடைய குறைந்தது 25 வருடங்கள் தேவை
என்கிறார். இது மார்டான் சுமித் அவர்களால் உருவாக்கபட வில்லை என்பதை மேலும் உறுதி
படுத்துகிறது.
இந்த கடிதம் கிறித்தவ உலகத்தில் இவ்வளவு
சர்ச்சையை உருவாக்கி தன்னிடம் கிறித்தவ உலகத்தின் கவனத்தை ஈர்க்க காரணம் “துப்பட்டியை
போர்த்தி கொண்டு வரும் நிர்வாண வாலிபர் ஒருவர் ஏசுவிடம் வந்து இரவு முழுக்க
பாடம்???? படித்ததாக” அமைந்த
கிளமண்ட்டின் கூற்றுதான். இந்த கடிதத்தில் கூறப்படும்படி எந்த சுவிஷேசமும்
இல்லை என்று இன்றை கிறத்தவ உலகம் வாதிட்டாலும் கிளமண்ட் அவர்கள் கூறுவது போன்ற
வசனங்களின் சாயல் இன்றிருக்கும் மாற்கு சுவிஷேத்தில் காணப்படுகிறது. உதாரணமாக
ஏசுவை காவலர்கள் கைது செய்தபோது நடந்த சம்பவத்தை மாற்கு சுவிஷேஷம் கூறும் போது
பின் வருமாறு விளக்குகிறது:
நான்
தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள்
என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது
என்றார். அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.ஒரு வாலிபன் ஒரு
துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள்.
அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களைவிட்டு ஓடிப்போனான். (மாற்கு 14:51-52)
மேற்குறிய
வசனத்தை மனதில் நிறுத்தி கொண்டு கார்ப்போகிரேட்டுகளின் உன்னதமான? கொள்கையில் ஒன்றை
ஆரம்ப கால தேவலாய பிதாவான எபிபேனஸின் வாயினால் கேட்போம்.
The plain fact is that these people perform
every unspeakable, unlawful thing, which is not right even to say, and
every kind of homosexual union and carnal intercourse with women, with
every member of the body ( 2.27.6 Against the
Carpocratians , The Panarion of Epiphanius of Salamis).
அதாவது ஓரினச்
சேர்க்கையை புனிதமாக கருதி அதையும் கூட்டமாக செய்யும் ஆயோக்கியர்கள்தான் இந்த
கார்ப்போகிரேட்டுகள். இன்றும் அவர்களது வளைதளங்கள் இதை பறைசாட்டி வருகின்றன.( http://www.antinopolis.org/carpocrates.htm). இவர்களின்
இந்த உன்னத கொள்கையின் வேர்களின் சுவடுகள்தான் இன்றைய மாற்கு சுவிஷேசத்தின்
மேற்கூறிய வசனமாகும். சீடர்களுடன் உரையாடி கொண்டிருக்கையில் நிர்வாண வாலிபருக்கு
அங்கு என்ன வேலை என்ற கார்ப்போகிரேட்டுகளின் கேள்விக்கு இன்றும் கிறித்தவ உலகம் விளக்கமளித்த
பாடில்லை. அதாவது கூட்டதில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபராக ஏசுவை (நவுதுபில்லாஹ்)
சித்தரிக்கிறார்கள் இந்த கார்ப்போகிரேட்டுகள். இதில் எங்களது வாதம் ஒன்றுதான்
கிளமண்ட் உள்ளிட்ட யாரிடமும் உண்மையான மாற்கின் சுவிஷேசம் இல்லை. கார்ப்போகிரேடுகள்
போன்ற கேடு கெட்ட கொள்கையினரின் திருத்தப்பட்ட ஏடுகளில் ஒன்றுதான் இன்றிருக்கும்
மார்க் சுவிஷேசம் என்பதில் எங்களுக்கு எள்முனை அளவும் சந்தேகம் இல்லை. இந்த ஏடுகளை
தொடர்ச்சியாக கிறத்தவ உலகம் மாற்றிவருவது இதை மேலும் உறுதி படுத்துகிறது. இது குறித்து 1883 ல் வெளிவந்த Revision Revised என்ற புத்தகத்தில் பக்கம் எண் 326ல் J.W. Burgoan பின்வருமாறு கூறுகிறார்
I request that the clock of
history be put back seventeen hundred years. This is A.D. 183, if you please;
and (indulge me in the supposition!) you and I are walking in Alexandria. We
have reached the house of one Clemens, a learned Athenian, who has long been a
resident here. Let us step into his library,-he is from home. What a queer
place! See, he has been reading his Bible, which is open at S. Mark x. Is it
not a well-used copy? It must be at least 50 or 60 years old. Well, but suppose
only 30 or 40. It was executed therefore within fifty years of the death of S.
John the Evangelist. Come, let us transcribe two of the columns... as
faithfully as we possibly can, and be off... We are back in England again, and
the clock has been put right. Now let us sit down and examine our curiosity at
leisure ... It proves on inspection to be a transcript of the 15 verses
(ver. 17 to ver. 31) which relate to the coming of the rich young Ruler to our
LORD. "We make a surprising discovery. There are but 297 words in those 15
verses,—according to the traditional Text of which, in the copy which belonged
to Clemens Alexandrinus, 39 prove to have been left out : 11 words are added :
22, substituted: 27, transposed: 13, varied; and the phrase has
been altered at least 8 times. Now, 112 words out of a total of 297, is 38 per
cent. What do you think of that?"
அதாவது
கிளமண்டின் காலத்திற்கு பிறகு எப்படியெல்லாம் மாற்கு சுவிஷேசம் மாற்றப்பட்டுள்ளது
என்பதற்கு ஒரு சிறிய எடுத்துகாட்டு தான் மேலே கூறியுள்ளது. எத்துனை வார்த்தைகள்
மாற்றப்பட்டுள்ளது எத்துனை வசனங்கள் மாற்றப்பட்டுள்ளது என்பதை பட்டியலிடுகிறார்
பர்கோன்.
மேலும் ஆரம்ப
கால கிறித்தவர்களான எபியோனைட்டுகள் போன்ற பிரிவினர் (இவர்கள் இறைசெய்திகளை
மனனமிட்டு பாதுகாத்தனர் என்று கூறப்படுகிறது) இன்றிருக்கும் கிறத்தவ ஏடுகள்
எதையும் அவர்கள் ஏற்க மறுத்தனர் என்ற குறிப்புகளெல்லாம் இன்றைய கிறித்தவ ஏடுகளின்
தன்மையை படம் பிடித்து காட்டுகின்றன். ஆரம்ப கால கிறித்தவர்கள்????? குறித்து
அடுத்த தொடரில் காண்போம், இன்ஷா அல்லஹ்
எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண
எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண
எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-7 மாற்கு சுவிஷேசம்
ஏக இறைவனின் திருப்பெயரால்
எதிர்தொடர் 19: உடைந்த சிலுவை
பாகம்-7: மாற்கின் சுவிஷேசம்
சென்ற தொடரில் புதிய ஏற்பாட்டின் ஆகமங்களில்
எண்ணிக்கை குறித்த முரண்பட்ட நிலையை எடுத்து கூறினோம். இந்த தொடரில் இந்த
ஆகமங்களின் உன்மைதன்மை குறித்தும் இதை இயற்றியவர்கள் உன்மையில் ஏசுவை கண்டவர்களா?
அல்லது ஏசுவின் சீடர்களை கண்டவர்களா என்பதையும் புதிய ஏற்பாட்டில் காணப்படும்
நான்கு சுவிஷேசங்களின் நிலையையும் ஆய்ந்து அறிவோம் இன்ஷா அல்லாஹ்.
மாற்கின் சுவிஷேசம்:
இந்த
சுவிஷேசம் தான் இன்று இருக்கும் கிறித்தவ அறிஞர்களால் நான்கு சுவிஷேசங்களிலும்
மிகப்பழமையானது என்று கொள்ளப்படுகிறது. பரப்பரியமாக எபிரேய மத்தேயுதான் பழமையானது
என்று கூறப்பட்டாலும் இன்று இருக்கும் மத்தேயு எபிரேய மத்த்தேயு அல்ல. இன்று
இருக்கும் மத்தேயு கிரேக்க மொழியிலான மொழிபெயர்ப்பு என்று உறுதி செய்யப்பட்டதால்
மாற்குதான் மிகப்பழமையானது என்று கொள்ளப்படுகிறது. மாற்கு சுவிஷேசமானது கிபி 70 களில் அதன் மூல மொழியான கிரேக்க மொழியில் இயற்றப்பட்டது.
மாற்கு சுவிஷேசம் 5 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. அத்தியாயம் 1.1 முதல் 1.13 வரை
உடையது ஏசுவின் பொது வாழ்க்கையின் ஆரம்பத்தை கூறுவதாகவும், 1.14 முதல் 9.50 வரை
ஏசுவின் போதனைகள் மற்றும் அற்புத்ங்களை குறித்து கூறுவதாகவும், 10ம் அத்தியாயம்
ஏசுவின் ஜெருசலம் பயணம் குறித்தும், 11முதல் 15 வரை உள்ள அத்தியாயங்கள் ஏசுவின்
சிலுவை மரணம் வரை உள்ள இறுதி பகுதிகளையும் 16.1-8 ஏசுவின் உயிர்தெழுதல் குறித்தும்
பேசுகிறது. இதை எழுதிய மாற்கு ஏசுவின் நேரடி சீடரான பேதுருவின் சீடராக
கருத்தப்படுகிறார். இந்த கருத்தை முதல் முதலில் கூறியவர் பேப்பியேஸ் (Papias of Hieropolis CE:60-130) பின்வரும் வாசகம் பேப்பியஸ்
கூறியதாக யூசிபியஸ் அவர்களால் தனது History of Eccelestial church என்ற புத்தகத்தில் கூறுகிறார்:
14.
Papias gives also in his own work
other accounts of the words of the Lord on the authority of Aristion who was
mentioned above, and traditions as handed down by the presbyter John; to which
we refer those who are fond of learning. But now we must add to the words of
his which we have already quoted the tradition which he gives in regard to
Mark, the author of the Gospel.
15.
“This also the presbyter said: Mark, having become the interpreter of Peter,
wrote down accurately, though not in order, whatsoever he remembered of the
things said or done by Christ. For he neither heard the Lord nor followed him,
but afterward, as I said, he followed Peter, who adapted his teaching to the
needs of his hearers, but with no intention of giving a connected account of
the Lord’s discourses,so that Mark committed no error while he thus wrote some
things as he remembered them. For he was
careful of one thing, not to omit any of the things which he had heard, and not
to state any of them falsely.” These things are related by Papias concerning
Mark.
Writings
of Papias, Book III, The History of Eccelestial church By Eusebius
இதில் ஜான் என்ற மதபோதகர் கூறியதாக
கூறப்படுகிறது. இந்த ஜான் யார் என்பதில் பல குழப்பம் இன்றும் நிலவுகிறது. இவரது
வாழ்க்கை குறித்த தெளிவான சான்றுகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால்
மேற்குறிப்பிட்ட செய்தியில் மாற்கு பேதுருவின் எழுத்தராக இருந்து சுவிஷெத்தை
வரைந்தார் என்ற குறிப்பு கிடைக்கப்பெறுகிறது. மார்க்கினால் பேதுருவிடம் இருந்து பெறப்பட்டு பேதுருவின்
மரணத்திற்கு பிறகு கிபி 70ல் இயற்றப்பட்டதாக கிறித்தவ உலகத்தால் கூறப்பட்டாலும்
இதுவரை கிபி 70ஐ சேர்ந்த உண்மை ஏடு எதுவும் கிடைக்கப்பெற வில்லை.
ஆய்வு 1: மாற்கு சுவிஷேசம் கிபி 70ல் இயற்றப்பட்டதா?
இந்த சுவிஷேசம் கிபி 70ல் இயற்றப்பட்டதாக
கூறப்படுகிறது. ஆனால் இதில் இடம்பெறும் செய்திகள் கிபி 2-3 ம் நூற்றாண்டை
சார்ந்தவையாக உள்ளது. உதாரணமாக பின்வரும் வசனத்தை எடுத்துக்கொள்வோம்.
எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில்
கூடிவந்தார்கள். அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே
போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். ஏனெனில் பரிசேயர் முதலிய
யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைத் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச்
சாப்பிடமாட்டார்கள்.
(மாற்கு 7:1-3).
மேலே குறிப்பிடப்பட்ட வசனங்களில் சாப்பிடுவதற்கு
முன்பு கைகளை கழுவுவதை யூதர்களின் பாரம்பரியமாகக் காட்டுகிறார் மாற்கு. யூதர்களின்
பாரம்பரியத்தை விளக்கும் அவசியம் இங்கு என்ன? யூதரல்லாத மக்களுக்கு
கூறப்படுவதால்தான் யூதர்களின் பாரம்பரியத்தை விளக்குகிறார் மாற்கு. மேலும் இத்தகைய
பரிசேயரின் வழக்கங்கள் எல்லாம் யூதர்களின் பழக்கமானது கிபி 70க்கு பிறகுதான்.
அதாவது ஜெருசலம் ஆலயம் தீக்கிரை ஆக்கப்பட்டு சதுசேயர்களின் கைகளில் இருந்த யூதர்களுக்கான
அதிகாரம் கடைநிலையிலிருந்த பரிசேயர்களின் கைகளில் விழுந்த பிறகுதான் யூதர்களின்
வாழ்வியல் நெறிகளில் மாற்றங்கள் உண்டாயிற்று. ரப்பிக்களால் யூதர்களின் வாழ்வியல் நெறிமுறைகள்
வரையறுக்கப்பட துவங்கியது. குறிப்பாக மிஸ்னா, தல்மூத் இயற்றப்பட்ட 2-3ம்
நூற்றாண்டுகளில் இத்தகைய பழக்கங்கள் யூதர்களின் பாரம்பரியமானது. (Refer: Mishnah, Pharisees: Vol.8,9, Jewish
Encyclopedia By Isidore Singer, Jewish History Wikipedia, Babylonian Talmud). ஆக இந்த மாற்கு
சுவிஷேசமானது கிறித்தவர்களால் கூறப்படுவது போல பேதுருவால் மாற்கிற்கு
வழங்கப்பட்டதல்ல. நமக்கு கிடைக்கும் பழமையான சுருள்கள் 2-3ம் நூற்றாண்டுகளை சார்ந்தவைதான்
என்பது குறிப்பிடதக்கது.
ஆய்வு 2:
மாற்கு யூதரா?
மாற்கு ஆகமத்தை இயற்றிவர் யூதர் என்று
கிறித்தவ உலகம் கூறிவருகிறது. ஆனால் இந்த ஆகமத்தில் இடம்பெறும் பல கருத்துகள் இதை
இயற்றியவர் ஒரு யூதராக இருக்கமாட்டார் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது. யூதர்களின்
மரபு குறித்த கருத்தே இதற்கு உதாரணம். மேலும் பின்வரும வசனத்தை காணும் பொழுது இதை
இயற்றியவர் ஒரு யூதராக இருக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும்
கனம்பண்ணுவாயாக என்றும்,
தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே
சொல்லியிருக்கிறாரே.(மாற்கு
7:10)
ஆதாவது மோசே கூறியதாக ஒரு சட்டத்தை ஏசு
பரிசேயருக்கு விளக்குவதாக மாற்கு குறிப்பிடுகிறார். இது ஏசுவின் வார்த்தையாக
இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. காரணம் இது கர்த்தர் மக்களுக்கு வழங்கியதாக மோசே
கூறியது. (எண்: 21:15) எந்த யூதரும் இதை மோசேயின் கருத்தாக தவறுதலாகவும் கூறமாட்டார்.
இதை பேதுரு என்ற யூதர் நிச்சயம் கூறியிருக்க மாட்டார். இதை நிச்சயம் பேதுருவின்
சீடரான மாற்கு என்ற யூதர் பதிவு செய்திருக்க மாட்டார். இதன் காரணத்தினால்தான்
மத்தேயுவில் இதே சம்பவம் மிகத்துல்லியமாக கையாளப்பட்டுள்ளதை காணமுடியும்.
உன் தகப்பனையும் உன் தாயையும்
கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது
தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.(மத்தேயு: 15:4).
இது போல பழைய
ஏற்பாடின் வசனங்கள் மாற்கால குளறுபடியுடனே கையாளப்பட்டுள்ளது. அடுத்ததாக
தேவனுடைய
குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். இதோ, நான் என் தூதனை
உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை
ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
கர்த்தருக்கு
வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று
வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன
ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
யோவான்
வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற
ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். (மாற்கு 1:1-3)
அதாவது
இரண்டாவது வசனம் தீர்க்கதரிசனத்தில் இருப்பதாக மாற்கு கூறுகிறார். அது யோவான்
குறித்து பேசுவதாக கூறுகிறார் மாற்கு. ஆனால் மலாச்சியில் இடம்பெறும் வசனம் எதை
கூறுகிறது என்பதை காண்போம்.
இதோ, நான் என் தூதனை
அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது
நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர்
தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர்
உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும்
புடமிடுவார். அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும் எருசலேமின்
காணிக்கையும் கர்த்தருக்குப்
பிரியமாயிருக்கும். நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும்
விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய
கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு
அநியாயஞ் செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல்கியா: 3:1-5).
மேலே
குறிப்பிடப்படும் வசனமானது அந்த நாள் எத்தகையது என்பதையும் கூறுகிறது. அதாவது ஏசு
விண்ணேற்றம் அடையும் காலம் வரை யூதர்கள் முழுமையாக சுத்திகரிக்கப்படவில்லை என்பதை
நான் குறிப்பிட தேவையில்லை என்று எண்ணுகிறேன். இன்றும் யூதர்கள் கிறித்தவதத்தை
ஏற்று கொள்ளவில்லையே. மேலும் யூதா மற்றும் எருசலேமின் காணிக்கைகள் கர்த்தருக்கு
பிரியமாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏசுவின் விண்ணேறத்திற்கு பிறகு யூதர்கள்
காணிக்கை செலுத்தும் எருசலேம் ஆலயம் கிபி 70ல் தீக்கிரையாக்கப்பட்டது. ஆக மாற்கு குறிப்பிடுவது போல இந்த பழைய
ஏற்பாட்டின் வசனத்திற்கும் யோவானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை புரிந்து கொண்ட
மத்தேயு இந்த வசனத்தை தூக்கிவிட்டார் தனது ஆகமத்தில் (மத்தேயு 3:3). இப்படி
தப்பும் தவறுமாக பழைய ஏற்பாட்டின் வசனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் மாற்கு
சுவிஷேசத்தை இயற்றிவர் நிச்சயம் யூதராக இருக்க மாட்டார்.
ஆய்வு 3: மாற்கின்
புவியியல் அறிவு:
மாற்கு
சுவிஷேசத்தை இயற்றிய பேதுருவின் சீடரான மாற்கு அவர்கள் எருசலேமை சேர்ந்தவர்
என்றும் (அப்போஸ்தல் நடபடிகள்: 12:12) பவுல் மற்றும் பார்னபாவுடன் ஆசியா மைனர் வரை
சுற்றி வந்தவர் என்றும் கிறித்தவ உலகம் கூறி வருகிறது. ஆனால் மாற்கு சுவிஷேசத்தை
ஆய்வு செய்தால் அவருக்கு எருசலேம், பாலஸ்தீன புவியியல் சார்ந்த அறிவு சுத்தமாக இல்லை என்பதே விடையாக உள்ளது. உதாரணமாக
ஏசுவின் பயணங்கள் குறித்து கூறும் இடங்களில் மாற்கு சுவிஷேசம் முற்றிலும் எருசலேம்
மற்றும் அதன் சுற்றுபுறம் குறித்த புவி அமைப்பிற்கு முரண்பட்டதாகவே உள்ளது.
அவர்
கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை
நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று
கேட்டார். அதற்கு அவர்கள்
பேசாமலிருந்தார்கள்; ஏனெனில்
அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்..................அவர்
அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய்
யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர்
தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார். (மாற்கு 9:33-10:1)
அதாவது
மேற்கூறிய வசனத்தில் ஏசு கப்பர்நகூமில் இருந்து யூதேய தேசத்திற்கு யோர்தான் ஆற்றின்
மறுகரை வழியாக வந்ததாக மாற்கு கூறுகிறார். ஆனால் யூதேயாவும் கப்பர்நகூமும்
யோர்தான் ஆற்றின் மேற்கு கரையில் தான் உள்ளது. அதாவது
யோர்தான் ஆற்றை இரண்டு முறை கடந்தால்தான் அது சாத்தியம். பின்வரும் வரைபடம் இதை
தெளிவாக விளக்கும். இவ்வாறு ஏன் யோர்தான் ஆற்றை இருமுறை
கடக்க வேண்டும் கப்பநகூமில் இருந்து யூதேயாவிற்கு நேரடி பாதை இருக்கும் போது.
இதே போல்
ஆவிகள் பன்றிகள் கூட்டத்தில் நுழைந்த கதையிலும் மேற்கூறியது போன்ற புவியியல்
பிழையை காணவியலும்.
பின்பு அவர்கள்
கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்.
அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து
அவருக்கு எதிராக வந்தான்.அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச்
சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம்
விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை
முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் எப்பொழுதும்
இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே
தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான். அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்துகொண்டு.............அப்பொழுது, அவ்விடத்தில்
மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பிசாசுகளெல்லாம்
அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை
வேண்டிக்கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள்
புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம்
உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில்
அமிழ்ந்து மாண்டது. (மாற்கு 5:1-13). கதரேனருடைய பகுதியை
சுற்றிலும் இத்தகைய நீர்நிலைகள் எதுவும் இல்லை. இதை அறிந்திருந்த மத்தேயு இதை கெர்கசேனர்
என்று மாற்றிவிட்டர். (மத்தேயு 8:24)(பார்க்க உள்படம்)
இப்படி
பாப்பியஸின் கருத்திற்கு ஒத்துவராத ஒருவரால் தான் மாற்கு சுவிஷேஷம்
இயற்றபட்டுள்ளது என்பதற்கான சான்றுகள்தான் மேலே குறிபிட்டது. மேலும் மார்க்கின் சுவிஷேஷம் பணடைய சுருள்களில்
இன்று இருப்பதை போல இல்லை. உதரணமாக codex
sinaiticusல் மாற்கின் சுவிஷேஷம் 16:8
உடன் முழுமையடைகிறது. அதன் பிறகு லூக்கா ஆரம்பமாகிறது. இப்படி குளறுபடிகளின் மொத்த
உருவமாக திகழ்கிறது மாற்கு சுவிஷேசம். இந்நிலையில் மாற்கு சுவிஷேசம் குறித்து
அலெக்ஷாண்டிரியாவின் கிளமண்ட் , தியோடர் என்பவருக்கு வரைந்த கடிதமான மார் ஷபா
கடிதம் மாற்கு சுவிஷேசம் குறித்து வேறு வகையில் கூறுகிறது. மார் ஷபா கடிதம் குறித்து அடுத்த தொடரில் காண்போம், இன்ஷா அல்லாஹ்........
எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண
எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண
Subscribe to:
Posts (Atom)