பக்கங்கள் செல்ல

எதிர் தொடர் - ஆதார பூர்வமற்ற குற்றச்சாட்டுகளும், ஆதாரப்பூர்வமான பதில்களும்!

உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

                இஸ்லாத்தின் மீது ஆதார பூர்வமற்ற வகையில் இஸ்லாமோஃபோபியா எனும் மன நோயினால் பாதிக்கப்பட்ட சிலர் தங்களது இணையதளத்தில் குற்றச்சாட்டுகளை பதிந்து வருவதற்கு மறுப்பு சொல்லும் விதமாக குரான் & ஹதீத் ஆதாரம் கொண்டு இங்கே விளக்கப்படுகின்றது.


இந்த தொடரில் அவர்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு நபியவர்கள் தொழுகையில் பொடும் போக்காக இருந்தார்கள் அல்லது அவர்களையும் சாத்தான் தொழுகையில் விட்டு வைக்க வில்லை என்று கூறவருகிறார். முதலில் சாத்தானால் நபியவர்கள் பிடிக்கப்பட்டவர் என்பதை கூறத்துவங்கியவர்கள் கிறித்தவர்களே. அவர்கள் இயேசு அவர்கள் அப்படி பட்டவர்கள் அல்ல என்பதை நிறுவ அவர்கள் எடுக்கும் மறைமுக ஆயுதம்தான் இது. இதை நாத்திகர்கள் தங்களது தளங்களில் பதிவு செய்திருந்தாலும் இந்த கட்டுரையின் உன்மையான ஆசிரியர் எந்த கொள்கையை சார்ந்தவர் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வதற்கு இந்த எதிர்தொடர். மேலும் வாசிக்க


இந்த தொடரில் நமது அருமை கட்டுரையாசிரியர் நபி(ஸல்) அவர்களுக்கு வந்த வேத வெளிப்பாடு குறித்து விளக்கியுள்ளார். ஆனால் தான் ஒரு மிசனரியல்ல என்பதை மிகவும் பாடுபட்டு நிறுவ மிசனரிகளின் கருத்தில் இருந்து மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார். ஆம் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வேத வெளிப்பாடானது இது வரை வந்த தூதர்களின் வேத அறிவிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அது சைத்தானால் தான் ஏற்ப்பட்டது என்று நிறுவ முயர்சிப்பர். இவர் அதே ஆதாரங்களை எடுத்து கொண்டு அருள்வாக்கு சாமியார் என்று கூறுகிறார். ஆனால் இவரது கூற்று அவர்களின் கூற்றைவிட மிக பலவீனமானது. மேலும் இந்த கட்டுரை ஆசிரியர் நபி(ஸல்) அவர்களின் வேதவெளிப்பாட்டிற்கு வேறு எந்த சாட்சியும் இல்லை என்று வேறு கூறுகிறார். மேலும் வாசிக்க


இந்த தொடரில் நபி(சல்) அவர்கள் தனது மனைவியாகிய ஆயிஷா(ரலி) மீது அவதூறு பரப்பட்ட சம்பவமும் அதை தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு நபி(சல்) அவர்கள் தனது மனைவியின் மீது சந்தேக, கொண்டதாகவும் நமது கட்டுரை(கதை) ஆசிரியர் குற்றம் சுமத்துகிறார். அவரது குற்றச்சாட்டு குறித்தும் அதற்கான பதிலையும் காண்போம். மேலும் வாசிக்க



எதிர் தொடர் 7: சக்களத்தி சண்டைக்காக வேத வெளிப்பாடா?: பதில்

இந்த கட்டுரையில் ஆசிரியர் சக்களத்தி சண்டைக்காக மட்டும்தான் வேதவெளிப்பாடு ஏற்பட்டதாக கூறுகிறார். ஆனால் அதன் உன்மைநிலை என்ன என்பதை இந்த கட்டுரையில் ஆய்வு செய்வோம்.




நபி(ஸல்) அவர்களின் மதிப்பை குறைக்க ஒரு மிக சிறந்த வாய்ப்பாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து பயன்படுத்திவரும் ஒரு ஆயுதம் தனது வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்தது. இது குறித்து மாண்ட்கொமெரி வாட் அவர்களின் கருத்தை பதிவு செய்துவிட்டு என்னுடைய ஆய்வை தொடர்கிறேன்
.         
     The marriage with Zaynab seemed incestuous, but this conception of incest was bound up with old practices belonging to a lower, communalistic level of familial institutions where a child's paternity was not definitely known ; and this lower level was in process of being eliminated by Islam. From the standpoint of Muhammad's time, then, the allegations of treachery and sensuality cannot be maintained. His contemporaries did not find him morally defective in any way. On the contrary, some of the acts criticized by the modern Westerner show that Muhammad's standards were higher than those of his time. In his day and generation he was a social reformer, even a reformer in the sphere of morals. He created a new system of social security and a new family structure, both of which were a vast improvement on what went before. By taking what was best in the morality of the nomad and adapting it for settled communities, he established a religious and social frame work for the life of many races of men. That is not the work of a traitor or an old lecher '. (P.No 233-234 ,Prophet and Statesman by W.Montgomery Watt) மேலும் வாசிக்க


முன்சென்ற கட்டுரையில் கட்டுரை ஆசிரியர் ஒரு கதை சொல்லி என்பதை நிறுவினோம். இந்த கட்டுரையில் சில இஸ்லாமிய அறிஞகர்களின் பதிலுக்கு எதிர் வாதம் வைத்திருப்பதாக எண்னிக்கொண்டு ஆசிரியர் சில உளறல்களை கூறியுள்ளார். அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம். மேலும் வாசிக்க




எதிர் தொடர் 10: நண்பர்கள் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும்- பதில்

இந்த கட்டுரையில் நண்பர்கள் மீது சந்தேகம் கொண்டதால்தான் ஹிஜாப் அமலாக்கப்பட்டதாக கூற வருகிறார். இவர் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையானதா..... 
  நமது மறுப்பு: விருந்துக்காக அழைக்கப்பட்டால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற நடைமுறையை இஸ்லாம் மக்களுக்கு கற்று கொடுக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது. விருந்து வைக்கும் நேரத்திற்கு மட்டும் அங்கு செல்வதுதான் அழகு. விருந்தினர் வேதனை கொள்ளும் அளவிற்கு முன்னும் பின்னும் அங்கு அமர்வது அநாகரிகம் என்று இஸ்லாம் சொல்கிறது...இதில் கட்டுரை ஆசிரியருக்கு என்ன வருத்தம் என்று தெரியவில்லை. மேலும் வாசிக்க


இந்த முறை நமது கட்டுரையாசிரியர் இஸ்லாத்தில் உள்ள அடிமை முறையை குற்றம்சுமத்த ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பெண்களை அடிமைகளாக பிடித்தல் பற்றி மிக விசாலாமாக ????  விளக்கியுள்ளார்.
[refer:Source]. அவர் அப்படி என்னதான் குற்றம் சுமத்துகிறார்....சற்று விரிவாக அலசுவோம்....மேலும் வாசிக்க


இந்த கட்டுரையில் ஒரு சேர பல குற்றச்சாட்டுகளை கட்டுரையாளர் அடுக்கியுள்ளார்.[refer:Source] அடிமை முறை குறித்து முன் சென்ற கட்டுரையில் தெளிவாக கண்டுவிட்டோம். அவரது அறியாமை இந்த தொடரிலும் பல்லிளிக்கிறது. இந்த தொடரில் அவரது அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரப்பூர்வமான சான்றுகளைக் கொண்டு பதிலளித்துள்ளோம். மேலும் வாசிக்க


இந்த தொடரில் நாம் கட்டுரையாளரின் வாதங்களுக்கு மறுப்பு கூறும் முன் அல்லாஹ்வின் வேதம் மற்றும் நபி(சல்) அவர்களது சுன்னாஹ் ஆகியவற்றை குறித்து ஒரு சிறிய அறிமுகத்தை பார்ப்போம். அல்லாஹ் நபி(சல்) அவர்களுக்கு தனது வகீயின் மூலம் சிறிது சிறிதாக 23 ஆண்டுகாலம் இந்த திருகுர்ஆனை இறக்கியருளியுள்ளான். மேலும் வாசிக்க


இந்த கட்டுரையில் கட்டுரையாளர் குர் ஆன் பூமியை தட்டையானது என்று கூறுகிறது என்று நிறுவ படாதபாடு படுகிறார்.[refer:Source]அல்லாஹ் பூமியை எப்படி படைத்திருக்கிறான் என்பதை குர் ஆன் எப்படி விளக்குகிறது என்பதையும் கட்டுரையாளரின் குற்றச்சாட்டுகள் எவ்வளவு மொன்னைத்தனமானது என்பதையும் பார்ப்போம். மேலும் வாசிக்க


இந்த முறை நமது அருமை கட்டுரையாளர் இஸ்லாம் டாலமியின் ‘பூமி மையக்கோட்பாட்டை’(geocentricism) ஆதரிப்பதாக வாதிட முயற்சிக்கிறார்[ refer:Source]. ஆனால் இஸ்லாம் உரைப்பது இன்றை நவீன அறிவியலைத்தான் என்பதும் இந்த கட்டுரையாளரின் அறிவியல் குறித்த புரிதல் 17ம் நூற்றாண்டை இன்னும் தாண்ட வில்லை என்பதும் புட்டு புட்டு வைக்கப்படும் இந்த தொடரில், இன்ஷா அல்லாஹ்....மேலும் வாசிக்க


இந்த தொடரில் நாம் மனித படைப்பின் ஆரம்பம் குறித்தும் அது குறித்து இந்த கட்டுரையாளரின் (1,2)புரிதல் குறித்தும் சிறிது நாம் அறிந்து கொள்வோம். மேலும் இந்த கட்டுரை அதிக விளக்கம் தேவை படும் கட்டுரையாக இருப்பதால் இதனை முழுவதுமாக குற்றச்சாட்டு பதில் என்று அமைக்காமல் விளக்கம் அளிப்பதாகவும் இதற்கடுத்து இடம் பெறும் கட்டுரையின் அடித்தளமாகவும் அமைக்கவுள்ளேன். ஆக அவர் கூறும் குற்றச்சாட்டுகளை தலைப்பாகயிட்டு சில விளக்கங்கக்ளும் இதில் இடம்பெற வுள்ளது இன்ஷா அல்லாஹ் ....மேலும் வாசிக்க


இதுவரை நாம் சந்தித்த பல தொடர்களில் இது ஒரு தத்துவியல் சார்ந்த விவாதத்தை கொண்ட ஒரு தொடர். இந்த தொடரில் கட்டுரையாளரின் இஸ்லாம் கூறும் விதி குறித்த பல கேள்விகளையும் விமர்சன்ங்களையும்[1] எதிர் கொள்ளும் தொடராக இது இருக்கும் இன்ஷா அல்லாஹ்.  மேலும் வாசிக்க



எதிர் தொடர் 19: உடைந்த சிலுவை

இந்த தொடரில் கட்டுரையாளர் கிறித்தவ நம்பிக்கை உருவாக யார் காரணம் என்றொரு தலைப்பிட்டு சில கருத்துகளை answeringIslam.com என்ற கிறித்தவர்களால் நடத்தப்படும் இணையத்தின் கட்டுரையை மொழிபெயர்த்துள்ளார். இதற்கு முன்பும் பல கட்டுரைகள் கிறித்தவ மிசனரிகளின் வாந்திதான் என்பதை நிறுவியுள்ளோம். ஆனால் இம்முறை ஒரு சிறிய மாற்றம் கட்டுரையாளரே அதை ஏற்றுகொண்டது. அனைத்து பாகங்களையும் வாசிக்க



எதிர் தொடர் 20: நசாராக்களின் கொள்கையை இஸ்லாம் போதிக்கிறதா?????.

சிலுவை மரணம் என்ற தொடரில் கட்டுரையாளர் சில கருத்துகளை முன்வைத்து இஸ்லாம் கூறும் ஈஸா(அலை) அவர்களது விண்ணேற்றம் குறித்த கருத்தை விமர்சிக்கிறார். அவர் தான வைக்கும் விமர்சனத்திற்கு ஆதாரமாக பார்னபாஸின் சுவிசேசத்தினை ஆதாரமாக கொண்டும், சில குர்ஆன் விரிவுரைகளையும் அடிப்படையாக கொண்டு தனது வாதத்தை முன்வைக்கிறார். விரிவுரைகளில் காணப்படும் சிலுவை மரணம் தொடர்பான விளக்கங்கள் அனைத்தும் அக்கால கிறித்தவர்களின் ஏடுகளில் இருந்து கூறப்பட்டவைதான். மேலும் வாசிக்க


நமது எதிர் கட்டுரையாளரின் வாதங்கள் அனைத்தும் ஒரே மையத்தை சுற்றியேதான் அமைந்துள்ளது. அதாவது ஈஸா(அலை) அவர்களின் விண்ணேற்றத்திற்கு பிறகு கிறித்தவர்கள் யூதர்கள் என்ற இரு பிரிவினர் மட்டுமே இருந்தாக எண்ணிய அனுமானம்தான் அது. பவுலின் முக்கடவுள் கொள்கையை ஏற்றவர்கள் அந்தியோக்காவில் தான் முதன் முதலில் கிறித்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்று இன்றிருக்கும் பைபிலே சான்று பகர்கிறது. அந்தியோக்காவிற்கு முன்னர் இருந்த சீடர்கள்தான் உண்மை முஸ்லீம்கள். இவ்வாறு ஏக இறைவனை ஏற்ற ஈஸா(அலை) அவர்களை உண்மை நபியாக ஏற்று ஈஸா (அலை) அவர்களது சிலுவை மரணத்தை மறுத்து விண்ணேற்றத்தை ஏற்ற, மக்கள் நபி(சல்) அவர்கள் காலம் வரை வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் உடைந்த சிலுவையின் பல பகுதிகளில் விளக்கியுள்ளோம்......மேலும் வாசிக்க



எதிர் தொடர் 22: அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்ற முடியாது  

இதற்கு முன்பும் தூதர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் பொய்பிக்கப்பட்டனர், அவர்களுக்கு இறுதியில் உதவி வந்தது. அல்லாஹ்வின் இந்த கட்டளையை மாற்றுவது யாரும் இல்லை. அதாவது இறைவன் விதித்ததை யாராலும் மாற்ற முடியாது என்பதுதான் பொருள். இது ஏனோ கட்டுரையாளருக்கு விளங்கவில்லை. மேலும் வாசிக்க


இந்த தொடரில் கட்டுரையாளர் குர்ஆன்பாதுகாக்கப்பட்டது குறித்து சில கேள்விகளை முன்வைத்துள்ளார். ஒவ்வோர் தொடரிலும் கட்டுரையாளரின் இஸ்லாம் குறித்த பார்வை மிசனரிகளின் வாந்திதான் என்பதை தோழுரித்து வருகிறோம். இவர் தன்னை நாத்திகராக காட்டி கொண்டாலும் இவரால் கூறப்படும் ஆதாரங்கள் யாவும் கிறித்தவ மிசனரிகளின் வளைத்தளங்களில் இருந்து பெறப்பட்டவைதான். அதே வரிசையில் இந்த கட்டுரையும் எதிர் கட்டுரையாளரால் முன்வைக்க பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்த தொடரில் குர் ஆன் குறித்த கட்டுரையாளரின் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதிலளிப்போம். மேலும் வாசிக்க


இஸ்லாம் இது இறைவனின் மார்க்கம்தான் என்பதை நிறுவ தன்னகத்தே எத்தனையோ ஆதாரங்களை கொண்டுள்ளது. அவற்றில் சில அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியவையாகவும் உள்ளன. நமது எதிர் தரப்பு கட்டுரையாளர் இந்த முறை, முஹம்மது(சல்) அவர்களுக்கு அன்றைய அரபிய குரைஷியர்களுக்கு தன்னை இறைவனின் தூதர் என்று நிறுவ ஏக இறைவன் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஓர் அற்புதமான, நிலவு பிளவுண்டது குறித்து சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார்(1)இந்த விமர்சனங்கள் யாவும் இஸ்லாமிய எதிர்ப்பு வளைதளங்களில் இருந்து என்றும் போல் திருடப்பட்டவைதான். மேலும் வாசிக்க

போர்க்களங்களில் வானவர்கள் இறக்கப்படுவதும், அவர்கள் போரிடுவதும் இறைவனின் விதிப்படிதான். இறைநம்பிக்கையாளரை எதிர்த்த எதிரிகள் யார்? அந்த கூட்டுபடையினரையும், அவர்களது நிலையையும், இறைநம்பிக்கையாளர்களின் நிலையையும் ஒப்பிட்டாலே வானவர்களை போர்க்களத்தில் இறக்கியதில் எந்த தவறும் இல்லை. இறைநம்பிகையை ஏற்றதால் மட்டும் ஒருவருக்கு எளிமையாக சொர்க்கம் கிடைக்கும் என்பதை இஸ்லாம் மறுக்கிறது. இந்த உலக வாழ்வை சோதனை களமாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். ஆக சோதனைக்கு பிறகு அல்லாஹ் தனது வல்லமையால் வெற்றியளிக்கிறான். அவ்வளவே. அல்லாஹ் நம்பிக்கை என்னும் கீற்றை இதன் மூலம் இறைநம்பிக்கையாளர்களுக்கு விதைக்கிறான். மேலும் வாசிக்க


நபி(ஸல்) அவர்களது விண்ணுலகப் பயனம் குறித்த விமர்சனத்தை இம்முறை கட்டுரையாளர் முன்வைத்துள்ளார்(1). நபி (சல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் ஒரு பகுதியாக பைத்துல் முக்கத்தஸ் பள்ளிக்கு சென்றதாக., அதாவது சுலைமான் அலை அவர்களால் கட்டியெழுப்பப்பட்டு பல முறை புணரமைக்கப்பட்ட ஆலயத்திற்கு சென்றதாக இஸ்லாமிய ஆவணங்கள் கூறுகின்றன. அதை மறுக்க புகுந்த கட்டுரையாளர். ஜெருசலேத்தில் அந்த ஆலயம் இல்லை அது இடிக்கப்பட்டுவிட்டது என்பதை நிறுவுவதன் மூலம் அந்த ஆலயத்திற்கு நபி(சல்) அவர்கள் சென்றதாக கூறப்படும் குர்ஆனின் வசனங்களும், ஹதீஸ்களும் இட்டுகட்டப்பட்ட கட்டுகதைகள் என்று நிறுவ கட்டுரையாளர் முற்பட்டுள்ளார். மேலும் வாசிக்க



எதிர் தொடர் 27 ,28 ,29: விண்ணுலகப் பயணமும், பரிந்துரையும்

ஒவ்வொருமுறை கட்டுரையாளருக்கு பதிலளிக்க துவங்கும் போதும் மிக கடினமான தளத்தில் இருந்து இந்த கட்டுரையாளரின் கேள்விகள் இருக்கும் என்ற எண்ணம் நமக்கு தோன்றவே செய்கிறது. தான் மிகப்பெரிய வித்தகன் என்ற பிரமாண்ட கற்பனை கோட்டையை மக்களின் உள்ளத்தில் ஏற்படுத்த எதிர்தரப்பின் கட்டுரையாளர் படாதபாடு படுகிறார். ஆனால் அவர் வைக்கும் ஒவ்வொரு விமர்சனமும் எவ்வளவு அற்பமானது. ஒரு சாமானியனின் புரிதல் கூட தன்னை ஆய்வாளன் என்று கூறிக்கொள்ளும் கட்டுரையாளரிடம் இல்லையே என எண்ணும் போது வியப்பாக இருக்கிறது. மேலும் வாசிக்க


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் எதிர்தொடரில் தன்னை முன்னாள் முஸ்லீம்?????? என கூறிகொள்ளும் ஒரு அரைவேக்காட்டு கட்டுரையாளரின் தொடர் கட்டுரைகளுக்கு பதில் அளித்து வருகிறோம். இம்முறை கட்டுரையாளர் எப்போதும் போல கிறித்தவ மிசனரிகளின் கட்டுரைகளை சுட்டு மொழியாக்கம் செய்து விட்டுள்ளார். இந்த முறை கட்டுரையாளர் எடுத்துக்கொண்ட பொருள் இஸ்லாம் கூறும் மறுமை வாழ்க்கை(1) என்பதாகும். கட்டுரையாளாரின் ஒவ்வொரு கருத்தியல்களின் மூடத்தனைத்தையும் இந்த கட்டுரையில் தோழுரிப்போம் இன்ஷா அல்லாஹ்.. மேலும் வாசிக்க