பக்கங்கள் செல்ல

Friday, June 29, 2018

சுவர்க்கத்தில் 72 கன்னியர்கள்: ஓர் ஆய்வு


ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..............................


       பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் 72 ஹூருல் ஈன்களை அல்லாஹ் தருவதாக போகிற போக்கில் இந்த குற்றச்சாட்டை தொடர்ச்சியாக பரப்பித்திரிந்து தங்களது அரிப்பை தீர்த்து வருகின்றனர். ஆகவே இந்த தொடரில் இந்த செய்திகளை பரப்பும் மிசனரி/ நாத்திக வேடதாரிகளின் தகவல் மூலமான விக்கி இஸ்லாம், ஆன்சரிங்க் இஸ்லாம் போன்ற மிசனரி தளங்களின் ஆங்கில கட்டுரைகளுக்கு(1) பதில் அளிப்போம் இன்ஷா அல்லாஹ். அவற்றில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு செய்தியின் மூலங்களை மூல நூல்களில் இருந்து எடுத்து பதிந்து அவற்றின் தரத்தை ஆய்வு செய்வோம் இன்ஷா அல்லாஹ்.


செய்தி 1:

 “For the Shahid in the Divine presence there will be six qualities: [1] he will be forgiven from the first moment his blood is spilled; [2] he shall see his seat in Paradise and be protected against the punishment of the grave; [3] he shall be safe from the Greatest Terror [the rising of the dead]; [4] he shall be crowned with the diadem of dignity, one ruby of which is worth more than the entire world and its contents; [5] he shall be coupled with seventy-two spouses from the wide-eyed maidens of Paradise; and [6] he shall be granted to intercede for seventy of his relatives.” 
(Tirmdhi/ musnad ahamed)

       இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் நுஐம் பின் ஹம்மாத் அதிகமாக தவறிழைப்பவர் என்று இப்னு ஹஜர்,தாரகுத்னி போன்றவர்கள் குறிபிட்டுள்ளார்கள்(2) மேலும் இதே அறிவிப்பானது நுஐம் பின் ஹமாத் அவர்கள் இடம் பெறாமல் இப்னு மாஜாவில் இடம்பெறுகிறது. அதில் 72 கன்னிகள் என இடம் பெறவில்லை. ஹூருள் ஈன்கள் திருமணம் செய்விக்கப்படுவார்கள் என்றே இடம் பெறுகிறது

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِصَالٍ يُغْفَرُ لَهُ فِي أَوَّلِ دَفْعَةٍ مِنْ دَمِهِ وَيُرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَيَأْمَنُ مِنَ الْفَزَعِ الأَكْبَرِ وَيُحَلَّى حُلَّةَ الإِيمَانِ وَيُزَوَّجُ مِنَ الْحُورِ الْعِينِ وَيُشَفَّعُ 
فِي سَبْعِينَ إِنْسَانًا مِنْ أَقَارِبِهِ ‏"‏

        It was narrated from miqdam bin Ma’dikarib that the Messenger of Allah (ﷺ) said: “The martyr has six things (in store) with Allah: He is forgiven from the first drop of his blood that is shed; he is shown his place in Paradise; he is spared the torment of the grave; he is kept safe from the Great Fright; he is adorned with a garment of faith; he is married to (wives) from among the wide-eyed houris; and he is permitted to intercede for seventy of his relatives.”(ibn majah 2799)
     
    ஆக இந்த விக்கிஇஸ்லாம் கூறும் செய்தி பலவீனமான நிராகரிக்கப்பட வேண்டிய செய்திதான்.
செய்தி 2: 
- 11741 وبهذا الإسناد أن رسول الله صلى الله عليه وسلم قال : ان أدنى أهل الجنة منزلة الذي له ثمانون ألف خادم واثنان وسبعون زوجة وينصب له قبة من لؤلؤ وياقوت وزبرجد كما بين الجابية وصنعاء
تعليق شعيب الأرنؤوط : إسناده ضعيف
11723- وَبِهَذَا الْإِسْنَادِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً، الَّذِي لَهُ ثَمَانُونَ أَلْفَ خَادِمٍ، وَاثْنَانِ وَسَبْعُونَ زَوْجَةً، وَيُنْصَبُ لَهُ قُبَّةٌ مِنْ لُؤْلُؤٍ، وَيَاقُوتٍ وَزَبَرْجَدٍ كَمَا بَيْنَ الْجَابِيَةِ وَصَنْعَاءَ " (1)
__________
(1) إسناده ضعيف، وهو إسناد الحديث رقم (11717)

        Abu Sa`id al-Khudri said, Allah be well-pleased with him: The Messenger of Allah said, upon him blessings and peace: “The humblest of the People of Paradise shall have eighty thousand servants and seventy-two wives. A palace of pearl and peridot (a pale green variety of chrysolite; used as a gemstone) and sapphire shall be erected for him as wide as the distance between al-Jabiya [a valley about 70 kms. East of Makka] and San`a’ [in Yemen].” (Musnad Ahamed: 11741/11723 al mawsoaath)

     
    இந்த செய்தி முஸ்னத் அஹ்மதில் இடம் பெறுகிறது.  இந்த செய்தியில் இடம் பெறும் இப்னு லஹீஆ(3)(அல் துஆஃபா அறிவிப்பாளர் எண்: 1436) என்பவர் பலவீனமானவர். அது போல் இந்த செய்தி அல் திர்மிதியிலும் இடம் பெறுகிறது. இந்த செய்தியில் இடம் பெறும் ரசீதைன் இப்னு சஃத்(6) என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். ஆக இந்த செய்தி பலவீனமானது. மேலும் இது குறித்து ஷேக் அர்னாவுத் அவர்கள் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என குறிப்பிடுகிறார்.

செய்தி 3

حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الأَزْرَقُ أَبُو مَرْوَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مِنْ أَحَدٍ يُدْخِلُهُ اللَّهُ الْجَنَّةَ إِلاَّ زَوَّجَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ ثِنْتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً ثِنْتَيْنِ مِنَ الْحُورِ الْعِينِ وَسَبْعِينَ مِنْ مِيرَاثِهِ مِنْ أَهْلِ النَّارِ مَا مِنْهُنَّ وَاحِدَةٌ إِلاَّ وَلَهَا قُبُلٌ شَهِيٌّ وَلَهُ ذَكَرٌ لاَ يَنْثَنِي ‏"‏ ‏.‏ قَالَ هِشَامُ بْنُ خَالِدٍ مِنْ مِيرَاثِهِ مِنْ أَهْلِ النَّارِ يَعْنِي رِجَالاً دَخَلُوا النَّارَ فَوَرِثَ أَهْلُ الْجَنَّةِ نِسَاءَهُمْ كَمَا وُرِثَتِ امْرَأَةُ فِرْعَوْنَ
    Abu Umama said, Allah be well-pleased with him: The Messenger of Allah said, upon him blessings and peace: “None is made to enter Paradise by Allah Most High except Allah Most High shall marry him to seventy-two wives, two of them from the wide-eyed maidens of Paradise and seventy of them his inheritance from the People of Hellfire, not one of them but her attraction never lags nor his arousal ever wanes.”(Ibn majah 4481)
   
இந்த செய்தியில் இடம் பெறும் ஹாலித் இப்னு யஸீத்(4) பலவீனமானவர் என ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் கூறுகிறார்கள்.

செய்தி 4:

7123- حَدَّثنا محمد بن هاشم، حَدَّثنا موسى بن عبد الله، حَدَّثنا عُمَر بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبة , عَنْ قَتَادَةَ، عَن أَنَس، عَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَالَ: يُزَوَّجُ الْعَبْدُ في الجنة سبعين زوجة فقيل: يارسول الله أيطيقها؟ قال: يعطى قوة مِئَة.

      Anas said, Allah be well-pleased with him: The Messenger of Allah said, upon him blessings and peace: “The servant in Paradise shall be married with seventy wives.” Someone said, “Messenger of Allah, can he bear it?” He said: “He will be given strength for a hundred.”(musnad al bazzar 7123)

  இந்த செய்தியில் இடம் பெறும் உமர் இப்னு சயீத்(5) யார் என்று அறியப்படாதவர் ஆவார் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்கள். மேலும் இந்த செய்தியை  அல் துஆஃபா வில் பதிவு செய்த அல் உகைலி அவர்கள் உமர் இப்னு சயீத் எனற ஹதீஸில் விடப்பட்டவர்( அல் துஆஃபா அறிவிப்பாளர் எண்: 1156)  என்ற தலைப்பின் கீழ் இந்த செதியை பதிவு செய்கிறார். ஆக இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.அதே போல் சிஃபத் அல் ஜன்னாவில்(ஹதீஸ் எண்: 372) இடம் பெறும் செய்தியில் ஹஜ்ஜாஜ் இப்னு அர்தா(8) என்ற இருட்டடிப்பு செய்யும் அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். ஆக இந்த செய்தியும் பலவீனமான செய்தியாகும்.


செய்தி 5:
10945- حدثنا عبد الله حدثني أبي ثنا حسن ثنا سكين بن عبد العزيز ثنا الأشعث الضرير عن شهر بن حوشب عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم : ان أدنى أهل الجنة منزلة ان له لسبع درجات وهو على السادسة وفوقه السابعة وان له لثلاثمائة خادم ويغدي عليه ويراح كل يوم ثلاث مائة صحفة ولا أعلمه الا قال من ذهب في كل صحفة لون ليس في الأخرى وانه ليلذ أوله كما يلذ آخره وانه ليقول يا رب لو أذنت لي لأطعمت أهل الجنة وسقيتهم لم ينقص مما عندي شيء وان له من الحور العين لاثنين وسبعين زوجة سوى أزواجه من الدنيا وان الواحدة منهن ليأخذ مقعدها قدر ميل من الأرض
تعليق شعيب الأرنؤوط : إسناده ضعيف لضعف شهر بن حوشب
     Abu Hurayra said, Allah be well-pleased with him: The Messenger of Allah said, upon him blessings and peace: “The humblest of the People of Paradise in rank shall have seven levels and as he will be on the sixth, below the seventh, he will have three hundred servants, every morning and evening three hundred dishes of gold shall be brought before him, every dish carrying something the other does not. He will taste pleasure as sharply with the first dish as he will with the last. He shall say, ‘My Lord! If you gave me permission, I would feed all the people of Paradise and water them from what I have and nothing should go missing from it.’ He will most certainly have seventy-two wives from the wide-eyed maidens of Paradise, the couch of only one of whom is as wide as a square mile on earth.”(musnad ahamed 10945 / 10932 al mawsoaath)

  இந்த செய்தியில் இடம் பெறும் இரு அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள்:1சுகைன் இப்னு அப்துல் அஜீஸ், இவர் குறித்து அல் மவ்சுஅத் விளக்குகிறது. 2: சஹ்ர் இப்னு ஹவ்சப். இவர் குறித்து சேக் அர்னாவுத் இவ்வாறு கூறுகிறார். ஆக இது ஆக பலவீனமான செய்தியாகும்.

செய்தி 6:       Ibn Abi Awfa said, Allah be well-pleased with him: The Messenger of Allah said, upon him blessings and peace: “Every man from the People of Paradise shall be married off to four thousand virgins, eight thousand slave-girls, and one hundred wide-eyed maidens of Paradise. They shall all meet him within every seven days. They shall say with their exquisite voices no creature has ever heard the like before: ‘We are the everlasting women, we never grow old, we are the refined women, we never grow sour, we are the ever-pleased women, we never anger, we are the sedentary ones, we never travel away, blessings to him who is for us and we are for him!’”( al azama 603)


இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு:

Ibn abi awfa --> abdur rahman ibn sabit(tabi) --> S'ad al-Ta'iy Abu Mjahd [Abu Mjahd(أبو مجاهد)] --> al-Walid bin 'Abdullah (taba tabi) (munkar al hadith) -->Yonus bin Muhammad bin Muslim(taba tabi) -->Hamd bin Yahya bin Han'i [Abu 'Abdullah](3rd century) --> Musa ibn sa’id al bazzar
       
       இந்த செய்தியில் இடம் பெறும் அல் வலித் பின் அப்துல்லாஹ் அல் சவ்ர்(7) என்பவர் ஹதீஸில் விடப்பட்டவர். ஆக இதுவும் பலவீனமான ஹதீஸ் ஆகும்.

செய்தி 7:


      Hatib ibn Abi Balta`a said, Allah be well-pleased with him: I heard the Messenger of Allah say, upon him blessings and peace: “The believer in Paradise shall be married off to seventy-two women, seventy women of the hereafter and two women of the women of this world.” (al-Ba`th wal-Nushur 367)

   இந்த செய்தியில் இடம் பெறும் ஹாலித் இப்னு யஸீத்(4) பலவீனமானவர் என அந்த ஹதீஸின் இறுதியிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதை காணமுடிகிறது. ஆக இந்த செய்தியும் பலவீனமானதுதான். மேலும் இந்த செய்தியை அறிவிப்பது அபூ உமாமா(ரலி) என்று அல் பாஃத் வல் நுஸூரில் இடம் பெற்றிருக்கிறது. இது முன்பே இப்னு மாஜாவில் நாம் சுட்டிகாட்டிய செய்திதான்.(செய்தி 3)
செய்தி 8:
حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا أَبُو هَمَّامٍ الْوَلِيدُ بْنُ شُجَاعٍ قَالَ: نا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، نُفْضِي إِلَى نِسَائِنَا فِي الْجَنَّةِ؟ فَقَالَ: «إِي وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّ الرَّجُلَ لَيُفْضِي فِي الْغَدَاةِ الْوَاحِدَةِ إِلَى مِائَةِ عَذْرَاءَ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثِ عَنْ هِشَامٍ إِلَّا زَائِدَةُ

Abu Hurayra said, Allah be well-pleased with him: It was asked, “Messenger of Allah, do we reach our women in Paradise?” He replied, “A man will reach in a single day one hundred virgins.” (Al majmu al awsat thabraani #718)

    இதை பதிவுசெய்த தப்ரானி அவர்கள் இது ஹிஷாம் அவர்களிடம் இருந்து ஜாயிதா அவர்கள் வழியாக வந்த தனித்த செய்தி என விமர்சனம் செய்துள்ளார். அதாவது முஸ்னத் அஹம்தில் இடம் பெறும்  ஜைத் பின் அர்காம் அவர்களால் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வ செய்தியில்(முஸ்னத் அஹ்மத் 18509) இருந்து மேற்கண்ட செய்தி கருத்தியல் ரீதியாகவும் புகாரி ( ஹதீஸ்: 3246) ,முஸ்லிம் போன்ற நூல்களில்  காணப்படும் ஒவ்வொரு சுவர்க்கவாசிக்கும் 2 துணைகள் என்ற கருத்திற்கும் நேர் முரணாக இருக்கிறது, மேலும் இந்த செய்தி குறித்து இப்னு அபி ஹாத்தம் தனது அல் இலல் ஹதீஸ் என்ற நூலில் (ஹதீஸ் 2129) இந்த செய்தியை பதிவிட்டு இந்த செய்தியில்  حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيّ - என்ற அறிவிப்பாளர் தவறிழைத்திருப்பதாக குறிப்பிடுகிறார். ஆக இந்த செய்தியும் தள்ளப்படுகிறது.
     மேலும் இந்த கட்டுரையாளர் கையாண்டிருக்கும் பல செய்திகள் பலவீனமான செய்திகளுக்கான தரப்படுத்தல் நூல்களில் இடம் பெறிருப்பவை. அல் உகைலியின் துஆஃபா போன்ற நூல்களில் இருந்தும் ஹதீஸ்களை பதிந்துள்ளார். அல் துஆஃபா அல் உகைலி அவர்களால் பலவீனமான ஹதீஸ்கள் எவை எவை என தரப்படுத்தும் வகையிலான நூல். அந்த நூலில் இருந்தே கட்டுரையாளர் பதிந்திருப்பது, கட்டுரையாளருக்கு ஹதீஸ்கள் குறித்தோ, அதன் தொகுப்புக்கள் குறித்தோ எந்த புரிதலும் இல்லை எனபதற்கு போதிய சான்று. மேலும் இந்த செய்திகள் குறித்து ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் கருத்தை இங்கு பதிவது ஏற்றதாக இருக்கும்.

ولكل واحد منهم زوجتان أي من نساء الدنيا فقد روى أحمد من وجه آخر عن أبي هريرة مرفوعا في صفة أدنى أهل الجنة منزلة وأن له من الحور العين لاثنتين وسبعين زوجة سوى أزواجه من الدنيا وفي سنده شهر بن حوشب
 وفيه مقال ولأبي يعلى في حديث الصور الطويل من وجه آخر عن أبي هريرة في حديث مرفوع فيدخل الرجل على ثنتين
 وسبعين زوجة مما ينشئ الله وزوجتين من ولد آدم وأخرجه الترمذي من حديث أبي سعيد رفعه أن أدنى أهل الجنة الذي له ثمانون ألف خادم وثنتان وسبعون زوجة وقال غريب
 ومن حديث المقدام بن معد يكرب عنده للشهيد ست خصال الحديث وفيه ويتزوج ثنتين وسبعين زوجة من الحور العين
وفي حديث أبي أمامة عند بن ماجة والدارمي رفعه ما أحد يدخل الجنة الا زوجه الله ثنتين وسبعين من الحور العين وسبعين وثنتين من أهل الدنيا وسنده ضعيف
 جدا وأكثر ما وقفت عليه من ذلك ما أخرج أبو الشيخ في العظمة والبيهقي في البعث من حديث عبد الله بن أبي أوفى رفعه أن الرجل من أهل الجنة ليزوج خمسمائة حوراء أو أنه ليفضى إلى أربعة آلاف بكر وثمانية آلاف ثيب وفيه راو لم يسم
 وفي الطبراني من حديث بن عباس أن الرجل من أهل الجنة ليفضى إلى مائة عذراء
 وقال بن القيم ليس في الأحاديث الصحيحة زيادة على زوجتين سوى ما في حديث أبي موسى أن في الجنة للمؤمن لخيمة من لؤلؤة له فيها أهلون يطوف عليهم قلت الحديث الأخير صححه الضياء

ஃபத்ஹுல் பாரியில் சுவனத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமா?? என்ற தலைப்பில் இது குறித்து ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இமாம் இப்னுல் கைய்யும் அவர்களது கருத்தை தனது ஃப்த்ஹுல் பாரியில் பதிவு செய்கிறார். மேலே இடம் பெறும் ஹதீஸ்களை குறிப்பிட்டு அவற்றில் இருக்கும் குறைகளையும் குறிபிட்டுவிட்டு, அபூ மூஸா அவர்கள் அறிவிக்கும் செய்தியான ஒவ்வொரு இறைநம்பிக்கையாளருக்கும் ஒரே போலான(காலியான) முத்தாலான மாளிகை இருக்கும் என்றும் அதில் அவர்களது மனைவிமார்களோடு இருப்பார்கள் என்ற ஹதீஸை தவிர இரண்டு மனைவிகளுக்கு மேல் சுவர்க்கத்தில் துணைகள் கிடைக்கும் என்ற கருத்து எந்த ஆதாரப்பூர்வ ஹதீஸிலும் இல்லை  என்ற இப்னுல் கைய்யுமின் கருத்தை பதிவு செய்கிறார் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள். (ஃபத்ஹூல் பாரி 6/325)

<< புஹாரி : 4879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறைநம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.>>
      இந்த ஹதீஸில் பொதுவான வார்த்தை இடம் பெறுவதை காணமுடிகிறதே ஒழிய இரணடிற்கு மேற்பட்ட மனைவிமார்கள் என்பதற்கு எந்த குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொஞ்சம் ஆழ்ந்து வாசக அமைப்பை கவனித்தோமானால் இந்த ஹதீஸும் இரு மனைவி என்ற கருத்தைத்தான் தரும். 
 ________________________________________________________________________________
Reference:
1.https://wikiislam.net/wiki/Authenticity_of_72_Virgins_Hadith
2.Hadith Narrator,Id:7166 - pg:564 Taqrib al-Tahdheeb Ibn Hajr
3.Hadith Narrator, Id:6600 - pg:Vol:3 Mezan al-A'tadal al-Dhahbi
4.Hadith Narrator, Id:1688 - pg:191 Taqrib al-Tahdheeb Ibn Hajr
5.Hadith Narrator, Id:4907 -pg:413 Taqrib al-Tahdheeb Ibn Hajr
6.Hadith Narrator, Id:1942 -pg:209 Taqrib al-Tahdheeb Ibn Hajr
7.Hadith Narrator, Id: 7431 -pg:582 Taqrib al-Tahdheeb Ibn Hajr
8.Hadith Narrator, Id: 1119 - pg:152 Taqrib al-Tahdheeb Ibn Hajr

3 comments:

 1. மாஷா அல்லாஹ்

  ReplyDelete
 2. தீர்மீதி 1663 ல் 72பேர் மனைவிகளாக வருகிதே இதை எப்படி அனுகுவது

  ReplyDelete
  Replies
  1. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் நுஐம் பின் ஹம்மாத் அதிகமாக தவறிழைப்பவர் என்று இப்னு ஹஜர்,தாரகுத்னி போன்றவர்கள் குறிபிட்டுள்ளார்கள்....

   Delete