பக்கங்கள் செல்ல

Friday, May 19, 2023

சமர்கண்ட் எழுத்துப்பிரதியும் இஸ்லாமோஃபோபுகளும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

        குர்ஆன் பாதுகாப்பு குறித்து அடுத்ததாக இஸ்லாமோஃபோபுகளும், கிறித்தவ மிசனரிகளும் முன்வைக்கும் வாதம் குர்ஆன் கையெழுத்து பிரதியான சமர்கண்ட் கையெழுத்து பிரதி அல்லது தாஸ்கண்ட் கையெழுத்து பிரதி குறித்ததாகும். இந்த சமர்கண்ட் மூலபிரதிகள் எப்படி இன்றைய குர்ஆனில் இருந்து மாறுபட்டுள்ளது என்பது குறித்த நீண்ட(???) பட்டியல் ஒன்றை ஆன்சரிங் இஸ்லாம் போன்ற வலைத்தளங்கள் வெளியிட்டு தங்களின் மே(ல்)தாவி தனத்தை காட்டியுள்ளனர். அதற்கான விளக்கத்தை இன் ஷா அல்லாஹ் காணவுள்ளோம்

 

சமர்கண்ட் எழுத்துப்பிரதி- ஒரு பார்வை

Ø  வரலாறு

            சமர்கண்ட் குர்ஆன் குறித்த ஆரம்பகால குறிப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மத்திய ஆசியாவில் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து வந்தவை. ஆசிய , ஆஃப்ரிக்கா நாடுகளின் பண்டைய தொல்பொருட்களையும், கையெழுத்து பிரதிகளையும், கலைபொருட்களையும் திருடியோ/ வாங்கியோ பெருஞ்செல்வத்திற்கு விற்பதில் ஐரோப்பாவில் பெரும் போட்டி நிகழ்ந்த காலம் அது. அன்றைய ஸார் ரஷ்யாவின் ஜெனரல் அலெக்சாண்டர் கே. அப்ரமோவ், தைமூரின் (1370-1405) நூலகத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடலின் போது, இந்த குர்ஆனைப் பற்றி அறிந்து கொண்டார், அந்த நேரத்தில் அது சமர்கண்டில் உள்ள கோட்ஜா-அஹ்ரார் மசூதியில் பாதுகாக்கப்பட்டிருந்தது. அது குறித்து பின்வரும் கருத்துக்கள் அந்த பகுதியில் அலெக்சாண்டர் ஜெனரல் கே. அப்ரமோவ்- அவர்களிடம் கூறப்படுகிறது.
 • உள்ளூர் வாசிகளின் கதையின் படி இது உஸ்மான்ரலி) அவர்களது சொந்த குர்ஆன் பிரதி. அவர் அதை ஓதிகொண்டிருக்கும் நிலையிலேயே கொல்லப்பட்டார். அதில் அவரது இரத்தம் படிந்துள்ளது என்று கூறப்படுகிறது.
 • இந்த கையெழுத்து பிரதி, உஸ்மானிய சுல்தான் பாயஸீத்-I அவர்களால் கோட்ஜா உபைதுல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று அந்த பள்ளிவாசலின் இஸ்லாமிய அறிஞர்களால் கூறப்படுகிறது.
 • இந்த கையெழுத்து பிரதி தைமூரினால் சமர்கண்டிற்கு கொண்டுவரப்பட்டது என்று புகாராவின் அமீரால் உறுதிப்பட ரஷ்யர்களிடம் கூறப்படவே, ரஷ்ய ஜெனரல் அலெக்சாண்டர் கே. அப்ரமோவ் அந்த கையெழுத்து பிரதியை கைபற்றிக்கொண்டார்.
         இது 1869 ஆண்டு பீட்டர்ஸ்பர்க் அரச நூலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. 1917 வரை அது அங்கிருந்தது. 1917ல் பாஷ்கொர்டொஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிறகு 1924ல் தாஸ்கண்டிற்கு வந்து சேர்ந்தது. ரஷ்யாவில் இருந்த காலப்பகுதியில் 1905ல் இது S. பிஸாரெவ் என்ற ரஷ்ய ஓரியண்டலிஸ்டால் பிரதி எடுக்கப்பட்டு சுமார் 50 பிரதிகள் உருவாக்கப்பட்டது. இன்று இந்த பிரதிகள்தான் சமர்கண்ட் குர்ஆனின் கையெழுத்து பிரதியாக காட்டப்படுகிறது.

Ø  உஸ்மான்(ரலி) அவர்கள் உருவாக்கிய மூலபிரதியா?????

         இந்த எழுத்துப்பிரதியின் காலக்கட்டத்தை ரேடியோ கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்ததில் இந்த எழுத்துப்பிரதியின் தோலானது கிபி 775 க்கும்- கிபி 995க்கும் இடைபட்ட காலத்தை சேர்ந்தது என்பதற்கு 95.4% வாய்ப்புள்ளது. எழுத்தின் வடிமானது எட்டாம் நூற்றாண்டின் இறுதி கால் பகுதிக்கு பிந்தையது. இது சரியாக ரேடியோ கார்பன் டேட்டிங் குறிப்பிடும் காலத்துடன் ஒத்தமைந்த காலமாகும்(1).

        எனவே சமர்கண்ட் எழுத்து பிரதி என்பது உஸ்மான்(ரலி) அவர்களது கையெழுத்து பிரதி அல்ல என்பது உறுதிபட தெரிகிறது. ஆனால் உஸ்மான்(ரலி) அவர்களது பிரதிகள் என்று கூறப்படுபவை அனைத்தும் ஒரே மூல பிரதியில் இருந்து பிரதி எடுக்கப்பட்டவை. உஸ்மான்(ரலி) அவர்களின் குர்ஆன் எழுத்துப்பிரதிகள் என்று கூறப்படும் ஆவணங்களின் வார்த்தை வடிவங்களை ஆய்வு செய்த மரிஜின் வான் பூட்டன் பின்வருமாறு கூறுகிறார்.


            அதாவது உஸ்மான்(ரலி) அவர்களது எழுத்துப்பிரதிகள் என்று கூறப்படும் குர்ஆன் எழுத்துப்பிரதிகளில், வார்த்தைகளின் நிலையான பிற்கால மறுஉருவாக்கம் எவ்வாறு சாத்தியமானது என்பதை “ ஒரே மூல எழுத்துப்பிரதியில் இருந்து பிரதி எடுக்கப்பட்டவை என்று அனுமானிப்பதின் மூலமே விளக்க முடியும்” என்று மரிஜின் வான் பூட்டன் கூறுகிறார்.

Ø  உண்மை பிரதியின் இன்றைய நிலை

        தற்காலத்தில் சமர்கண்ட் உண்மை எழுத்துப்பிரதியின் நிலை குறித்து அறிந்து கொள்வது நமது ஆய்விற்கு உதவியாக இருக்கும் என்பதால் அது குறித்து பார்ப்போம். சமர்கண்ட் உண்மை எழுத்துப்பிரதி இன்று தாஸ்கண்டின் ஹஜ்ரதி இமாம் பள்ளியின் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது குர்ஆன் 2ம் அத்தியாயத்தின் 7ம் வசனம் முதல் 43ம் அத்தியாயத்தின் 10ம் வசனம் வரை கொண்டுள்ளது. ஏனைய பகுதிகள் உலகின் பல பாகங்களில் உள்ளன. எங்கெங்கு இந்த மூலப்பைரதியின் பாகங்கள் உள்ளன என்ற பட்டியலை எலியோனூர் செல்லார்ட் என்ற அறிஞர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். கிட்டத்தட்ட 40 பகுதிகள் உலகின பல கலைபொருள் சந்தைகளிலும்,அதன் ஏலத்திலும் தனியார் தொகுப்புகளிலும் இருப்பதாக குறிபிட்டு பின்வரும் பட்டியலை தருகிறார்.


            பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் இவ்வாறு படையெடுப்பகளின் மூலமும், கொள்ளையிட்டு, கையாடல் செய்து கைபற்றிய குர்ஆன் பிரதிகளை ஏலம் விட்டு பெரும்வணிகத்தினை நடத்தி வருகின்றன. இதனை எகிப்து போன்ற நாடுகள் எதிர்த்து வருவது குறிப்பிடதக்கது.

Ø  ஓரியண்டலிஸ்ட் S. பிஸாரெவ் செய்த மோசடி

            ரஷ்யாவில் இந்த கையெழுத்துப்பிரதிகள் இருந்த காலப்பகுதியில், ஜார் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் 1905ல் S. பிஸாரெவ் என்ற ரஷ்ய ஓரியண்டலிஸ்டால் பிரதி எடுக்கப்பட்டு சுமார் 50 பிரதிகள் உருவாக்கப்பட்டது. இந்த பிஸாரெவ் குறித்து தெளிவான தகவல் ஏதும் இல்லை. இவர் குறித்து ரஷ்யாவின் அரசு நூலகத்தின் வலைத்தளம் பின்வருமாறு கூறுகிறது.
                From other documents we learn that the publication, one copy of which was valued at 500 rubles, was undertaken by "an assistant clerk of the Board of the People's Teachers' Pension Fund, who does not have a rank", "the head of the Museum of the Archaeological Institute" Vasily Uspensky and "St. Petersburg Merchant Semyon Pisarev". (Semyon Pisarev, contrary to some unknown opinion, was not an Arabist. The merchant of the second guild sold fabrics in his own shop on Staro-Nevsky Prospekt and at the same time took part in publishing activities under the auspices of the Archaeological Institute.)(3)
       இந்த கையெழுத்துப்பிரதிகளை பிரதி எடுப்பதற்கு முன்பு அரபு அறிஞர்???? அல்லாத பிஸாரெவ் ஒரு மோசடியான வேலையை மேற்கொண்டார். அதாவது மூலபிரதிகளில் தெளிவில்லாமல் இருக்கும் வார்த்தைகளை அவரே நிரப்பி எழுதினார். இதனால் பல பிழைகள் அவர் விரும்பியோ விரும்பாமலோ அதில் ஏற்பட்டது. வெளியில் சுழற்சியில் இருக்கும் எஞ்சிய பிரதிகளுடன் அதனை ஒப்பிட்டு பார்க்கையில் பின்வரும் வேறுபாடுகளை பிஸாரெவ்வினால் மாற்றப்பட்ட பிரதிகள் கொண்டிருப்பதாக எலியோனூர் செல்லார்ட் குறிப்பிடுகிறார்.
                These stylistic discrepancies between the dispersed leaves and Pisarev’s facsimile raise the possibility of an improvement during the writing process, as well as questions about the reliability of the facsimile. The degree to which the reinking of the leaves – which is not discernible in the facsimile – and the warping of the parchment may have affected the letters and causing fluctuations in the interlinear spacing. These questions can be answered only by physically inspecting the manuscript in Tashkent.( Elleonore Cellard,The Samarkhand Quran P.No.7)
                வெளிய பரவி இருக்கும் பிரதியின் பகுதிக்கும், பிஸாரெவின் பிரதிக்கும் இடையிலான இந்த ஸ்டைலிஸ்டிக் முரண்பாடுகள், எழுதும் போது ஏற்பட்ட மாற்றங்களுக்கான சாத்தியத்தையும், பிஸாரெவின் பிரதியின் உண்மை தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. எந்த அளவிற்கு இந்த பிரதி மறு மையிடப்பட்டுள்ளது என்றால்,- (அது (பிஸாரெவின்) பிரதியில் புலனாக வில்லை) பிரதிகளை மடிப்பதே அதிலுள்ள எழுத்துக்களை பாதித்து, இரண்டு வரிகளுக்கான இடைவெளியில் கூட மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேள்விகளுக்கான விடையை நிஜ மூலப்பிரதியை தாஸ்கண்டில் நேரிடையாக ஆய்வு செய்தே அறிய முடியும்.( Elleonore Cellard,The Samarkhand Quran P.No.7)
            அதாவது இரண்டு வரிகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை கூட பாதிக்கும் அளவிற்கு குருட்டுத்தனமாக மறு மையிட்டுளார் பிஸாரெவ். இப்படி மறு மையிட்டுவிட்டு அதனை பிரதி எடுத்துள்ளார் பிஸாரெவ் என்ற அட்ரஸ் இல்லாத நபர் அதுதான் இன்றைய மிஸனரிகளின் குர்ஆன் பிரதிகள் குறித்த ஆய்வின் மையம்???????
        Another Russian orientalist S. Pissareff, went over the illegible parts in the original copy with ink trying to make it more legible before the facsimile edition was made in 1905  However, numerous unintentional mistakes were made in this attempt."( Al Mushaf al Sharif Attributed to Ali b. Abi Talib P.No.83 by Tayyar Altikulac)
        மற்றொரு ரஷ்ய ஓரியண்டலிஸ்ட் எஸ்.பிஸாரெவ், 1905ல் பிரதிகளை உருவாக்கும் முன்னர், நிஜ மூலபிரதியில் உள்ள தெரியாத பகுதியை, மையை கொண்டு தெரியும் படி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும், இந்த முயற்சியில் எண்ணற்ற பிழைகள் ஏற்பட்டுள்ளன." ( Al Mushaf al Sharif Attributed to Ali b. Abi Talib P.No.83 by Tayyar Altikulac)

        இதே குற்றச்சாட்டை அன்றைய இஸ்லாமிய அறிஞர்களும் கூறியதாக ஆர்தர் ஜேஃப்ரீயும் குறிப்பிடுகிறார்.(THE ORTHOGRAPHY OF THE SAMARQAND CODEX by A. JEFFERY and I. MENDELSOHN P.No.3).

Ø  செபூனின் என்ற அறிஞரின் அறிக்கை

        1902 ஆம் ஆண்டு (அதாவது பிஸாரெவ் பிரதிகளில் கையாடல் செய்வதற்கு முன்பு) இந்த சமர்கண்ட் எழுத்துபிரதிகள், கெய்ரோவில் இருக்கும் பண்டைய எழுத்துப்பிரதியுடன் (Cairo, al-Maktaba al-Markaziyya li-l-Maḫṭūṭāt al-Islāmiyya: Great Qur'anic Codex) அனைத்து வகையிலும் ஒத்திருப்பதாக செபூனின் குறிப்பிடுகிறார். (14th volume of "Proceedings of the Eastern Branch of the Eastern Branch of the Imperial Russian Archaeological Society" )

        செபூனின் கூறியது போல நாம் பிஸாரெவின் பிரதிகளை , கெய்ரோவின் எழுத்து பிரதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதற்கு மாற்றமாக அமைந்திருப்பதை காண முடிகிறது. நாம் செய்த இந்த ஒப்பீடு 1902 செபூனின் ஆய்வு செய்த போது இருந்த சமர்கண்ட் பிரதி பிஸாரெவ் என்ற அரைகுறை ஓரியண்டலிஸ்டினால் 1905ல் மாற்றப்பட்டுள்ளதை உறுதி செய்கிறது. சில எடுத்துக்காட்டுகள்.


Ø  ஆன்சரிங்க் இஸ்லாம் வலைதளத்தின் கூச்சலும் நமது பதிலும்

        இவ்வாறு ரீ இன்கிங்க் செய்து மாற்றப்பட்ட மூல பிரதியில் இருந்து எடுக்கப்பட்ட பிரதிகளைத்தான் இன்றைய இஸ்லாமோஃபோபுகள் எடுத்து வந்து இன்றைய குர்ஆனுடன் ஒப்பிட்டுக்கொண்டுள்ளனர். இதில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் அனைத்தும் பிஸாரெவ் வின் எழுத்தர் பிழைகள்தாம் என்பதை உறுதி படுத்த சமர்கண்ட் பிரதியின் ஒத்த காலத்தை உடைய ஏனைய பிரதிகளை இங்கு ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.            இப்படி அறியப்படாத மாறுபாடுகள் உள்ளதாக உளறித்திரியும் ஜே ஸ்மித் போன்ற அறைவேக்காடுகளுக்கு ஹைதம் சித்கீ என்ற ஆய்வாளரின் ஆய்வு முடிவுகள் சம்மட்டி அடியை கொடுத்துள்ளது. அனைத்து எழுத்துப்பிரதிகளில் எத்துனை சதவீதம் ஓதல் முறைகளுடன் ஒத்தமைந்துள்ளது என்பதை தனது “ON THE REGIONALITY OF QURʾĀNIC CODICES” என்ற ஆய்வில் விளக்கி பின்வரும் ஒப்பீடு அட்டவனையை வழங்கியுள்ளார்.


        அதாவது சமர்கண்ட் எழுத்துப்பிரதியின் ஓதல் என்பது 92% கூஃபாவினரின் ஓதலாகவும் மீதம் 8% சிரியாவினரின் ஓதலை கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். அரைவேக்காடு மிசனரிகள் உளறுவதுபோல் இருக்குமானால் சமர்கண்ட் எழுத்துப்பிரதி தனித்த ஓதல் முறை என்று கூறியிருப்பார்.

Ø  மேற்குறிபிட்ட குர்ஆன் பிரதிகளின் ஒப்பிட்டில் கிறித்தவ மிஸனரிகள் பின்வரும் தங்களது அறியாமையை வெளிபடுத்தியுள்ளனர்.

1.  கிறித்தவ மிசனரிகள் இந்த ஆய்வில் தவற விட்ட முதல் விஷயம் குர்ஆன் என்பது எழுத்து வடிவம் பெற்று அந்த பிரதிகள் பரவலாக்கப்படுவதற்கு முன்பே ஓசை வடிவில் பெரும் பகுதி முஸ்லிம்களால் மனனமிடப்பட்டிருந்தது என்பதைத்தான். எழுத்துப்பிரதிகள் என்றும் குர்ஆனின் மூல ஆதாரமாக இருந்ததில்லை. அது ஒரு துணைச்சாதனமே. உஸ்மான்(ரலி) அவர்களால் எழுத்துவடிவில் கொடுக்கப்பட்ட குர்ஆன் பெரும்பான்மை மக்களின் ஓதல் வடிவத்துடன் ஓத்திருந்ததாலேயே அது இன்றுவரை பெரும்பான்மை மக்களின் முத்தவாத்திரான கிராத் ஆக நிலை பெற்றுவிட்டது என்ற அடிப்படை விஷயத்தை மறந்துவிட்டனர். மேலும் இது குறித்த ஆய்வை முன்பே நாம் வழங்கியுள்ளோம்.

2. மொழியியல், எழுத்து வடிவங்கள் மற்றும் ஓசை மாற்றங்கள் குறித்த அடிப்படை அறிவே சமர்கண்ட் பிரதி குறித்த விமர்சனத்தை முன்வைத்தவரிடம் இல்லை என்பதை நிறுவியுள்ளனர். 3:147, 6:11, 6:39, 6:54, 6:68, 7:3, 7:9, 7:38, 7:40, 7:51, 7:58, 18:57, 20:42, 20:76, 27:5, 42:21, 42:25, 37:106, 41:31 ஆகிய 19 ஆயத்துக்களில் இவர்களின் குறிப்புக்களில், இவர்களின் எழுத்து வடிவ மாற்றம் மற்றும் ஒலிக்குறியீடு குறித்த அறியாமை பல்லிளிக்கிறது. நாம் அரபு எழுத்து மற்றும் ஓசை மாற்றம் குறித்த வரலாற்று தகவல்களை கிபி 10ம் நூற்றாண்டை சார்ந்த அபூ அம்ரு அல் தானீ அவர்களது அல் முக்னீ ஃபீ ரஸ்ம் மஸாஹிஃப் அல் அம்ஸார் என்ற நூலை கொண்டு நிறுவியுள்ளோம்.

3. சாதரணமாக எழுத்துப்பிரதிகள் காலத்தால் பாதிப்படைந்து சிதைவடையும் என்ற அடிப்படை அறிவு இல்லை. 2:170, 37:103-105, 27:3-4, 36:18 ஆகிய இடங்களில் இந்த அறியாமை பல்லிளிக்கிறது

4.  எழுத்தர் பிழைகளா? அல்லது மாறுபடுகளா(Variants)? என்பதை ஏனைய சமகால பிரதிகளை ஒப்பிட்டு அறியும் அறிவு அறவே இல்லை. எனவே தான் தனித்தனி எழுத்துப்பிரதிகளை எடுத்துகொண்டு அவை மாறுபட்ட குர்ஆன் என்று மக்களை நம்பவைக்க பெரும் முயற்சி எடுப்பது பல்லிளிக்கிறது.

Ø  மேற்குறிப்பிட்ட ஆய்வின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளை நாம் அடைகிறோம் 

1. சமர்கணட் மூல பிரதி என்பது உஸ்மான்(ரலி) அவர்களால் எழுதப்பட்டது அல்ல. மாறாக அந்த பிரதியில் இருந்து பிரதி எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்பதை மாரிஜின் வான் பூட்டன் அவர்களது முடிவின் மூலம் விளக்கியுள்ளோம்.

2. சமர்கண்ட் பிரதி எஸ்.பிஸாரெவ் என்ற அட்ரஸில்லாத ஓரியண்டலிஸ்டினால் மறு மையிடப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது என்பதை செபூனின், எலியோனூர் செல்லார்ட், தய்யார் ஆல்டிகுலாக் போன்ற ஆய்வாளர்களின் கூற்றை கொண்டு நிருவியுள்ளோம்.

3. மாற்றம் செய்த பிறகு எடுக்கப்பட்ட பிரதிகளின் அடிப்படையிலேயே இன்றைய கிறித்தவ மிசனரிகள் தங்களது உளறலை முன்வைத்துள்ளனர். ஏனைய சமகால/அதற்கு முந்தைய பிரதிகளை ஒப்பிட்டு அதனை நிறுவியுள்ளோம்.

4. எழுத்துப்பிழைகள், மாறுபாடுகள் என்று எந்த கையாடல் செய்தாலும், எது சரியான பிரதி என்பதை இன்றிருக்கும் ஓதல் முறைகளை கொண்டு பிரித்து அறியக்கூடிய வகையில் இருப்பதை இந்த ஆய்வு உறுதிபடுத்துகிறது.

5. “Literary Critcism” என்று என்ன முயன்றாலும், உண்மை குர்ஆனின் ஓதல் இன்றும் பாதுக்கப்பட்டுதான் இருக்கிறது என்பதனை இன்றிருக்கும் குர்ஆனின் எழுத்து வடிவங்களை, பண்டைய எழுத்துப்பிரதிகளுடன் ஒப்பிட்டு அறிய முடிகிறது. Keith E.Small போன்ற ஓரியண்டலிஸ்ட்களே இந்த விஷயத்தில் பண்டைய எழுத்துபிரதிகளின் சூராக்களில் இருப்பவையே இன்றிருக்கும் குர்ஆனின் சூராக்களில் இருப்பதாக ஒத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also, while there may have been a longer period of flexibility of the order of surahs in collected Qur’āns, it appears that the basic content of the surahs that are represented in early manuscripts is the same as what is observed today. (Textual Criticism and Quran Manuscripts by Keith Small P.No.174)
எழுத்துபிரதிகள் பரவலாவதற்கு முன்பு குர்ஆன் வேறுபட்டிருந்தது என்று ஓரியண்டலிஸ்ட்கள் முன்வைக்கும் ஹதீஸ்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை, முன்சென்ற தொடர்களில் அந்த ஹதீஸ்கள் மற்றும் அந்த செய்திகளின் நிலையையும் விளக்கிவிட்டோம்.

    மேற்குறிபிட்ட ஆய்வின் மூலம் “நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.” என்ற அல்லாஹ்வின் வாக்கு உறுதியாகியுள்ளது. அல்லாஹூ அஃலம்

 Reference:

1. On the Dating of an “Uthmanic Quran” from St.Petersburg bt E.A.Rezvan
2. Van Putten “ ‘The Grace of God’ as Evidence for a Written’Uthmanic Archetype: The Importance of       Shared Orthographic Idiosncrasies” P.No.286

Monday, December 26, 2022

அல்குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று ஹதீஸ்கள் கூறுகிறதா??

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


     குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் கேள்விகளுக்கு தொடர்களாக நாம் பதிலளித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் குர்ஆனின் பகுதிகள் காணவில்லை என்று கூறும் சில ஹதீஸ்களை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் விமர்சனங்களையும் அதற்கான விளக்கங்களையும் வரிசைப்படுத்தி காணவுள்ளோம் இன்ஷா அல்லாஹ்.

ﻭﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﺮﻳﻢ ﻋﻦ اﺑﻦ ﻟﻬﻴﻌﺔ ﻋﻦ ﺃﺑﻲ اﻷﺳﻮﺩ ﻋﻦ ﻋﺮﻭﺓ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﻗﺎﻟﺖ ﻛﺎﻧﺖ ﺳﻮﺭﺓ اﻷﺣﺰاﺏ ﺗﻘﺮﺃ ﻓﻲ ﺯﻣﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﺎﺋﺘﻲ ﺁﻳﺔ ﻓﻠﻤﺎ ﻛﺘﺐ ﻋﺜﻤﺎﻥ اﻟﻤﺼﺎﺣﻒ ﻟﻢ ﻳﻘﺪﺭ ﻣﻨﻪا ﺇﻻ ﻋﻠﻰ ﻣﺎ ﻫﻮ اﻵﻥ.
ஆயிஷா(ரலி) கூறியதாவது:
            நபி(ஸல்) அவர்களது காலத்தில் அல் அஹ்ஸாப் சூரா இருநூறு வசனங்களாக ஓதப்பட்டு வந்தது.உஸ்மான்(ரலி) முஸ்ஹஃபை எழுதியபோது இப்போது இருப்பதை தவிர எதையும் பெற முடியவில்லை. (அறிவிப்பாளர்: உர்வா இப்னு ஜுபைர். நூல்: இத்கான் 3/82, அல் ஃபதாயில் அல் குர்ஆன் 1/320)
        மேற்குறிபிட்ட ஆதாரத்தின் அடிப்படையில் "அல் அஹ்ஸாப் ஸூராவில் 200 வசனங்கள் இருந்தன. ஆனால் தற்போது 73 வசனங்கள்தான் உள்ளன. எனவே உஸ்மான் அவர்கள் முழுமையாக அல் அஹ்ஸாப் ஸூராவை பெறவில்லை. எனவே அல்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை" என்ற வாதத்தை இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கின்றனர்.

நமது பதில்:
        மேற்குறிபிட்ட அறிவிப்பில் இடம் பெறும் இப்னு லஹீஆ பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். அல் ஸுயூத்தி அவர்கள் தனது அஸ்மா உல் முதல்லிஸீன் என்ற நூலில் பக்கம் எண்: 66ல் இருட்டடிப்பு செய்யும் பலவீனமானவர் என்று கூறுகிறார். இப்னு மயீன், "பலவீனமானவர்" என்று கூறுகிறார்.இப்னு மஹ்தி "இப்னு லஹீஆ அவரிடம் இருந்து எதையும் எடுத்துக்கொள்ள மாட்டேன்" என்று கூறுகிறார். பஸ்ர் இப்னு அல் ஸர்ஈ "இப்னு லஹீஆ-வை சந்தித்தால் அவரிடம் இருந்து எந்த வார்த்தையையும் எடுத்துக்கொள்ளாதே" என்று கூறுவதாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகிறார்( மீஸான் அல் இஃதிதால் 2/476)
    எனவே இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த செய்தி பலவீனமான நிராகரிக்கத்தக்க ஹதீஸ் ஆகும்.

ﻭﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﺮﻳﻢ ﻋﻦ اﺑﻦ ﻟﻬﻴﻌﺔ ﻋﻦ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﻋﻤﺮﻭ اﻟﻤﻌﺎﻓﺮﻱ ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻔﻴﺎﻥ اﻟﻜﻼﻋﻲ ﺃﻥ ﻣﺴﻠﻤﺔ ﺑﻦ ﻣﺨﻠﺪ اﻷﻧﺼﺎﺭﻱ ﻗﺎﻝ ﻟﻬﻢ ﺫاﺕ ﻳﻮﻡ: ﺃﺧﺒﺮﻭﻧﻲ ﺑﺂﻳﺘﻴﻦ ﻓﻲ اﻟﻘﺮﺁﻥ ﻟﻢ ﻳﻜﺘﺒﺎ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ ﻓﻠﻢ ﻳﺨﺒﺮﻭﻩ ﻭﻋﻨﺪﻫﻢ ﺃﺑﻮ اﻟﻜﻨﻮﺩ ﺳﻌﺪ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﻓﻘﺎﻝ ﻣﺴﻠﻤﺔ " ﺇﻥ اﻟﺬﻳﻦ ﺁﻣﻨﻮا ﻭﻫﺎﺟﺮﻭا ﻭﺟﺎﻫﺪﻭا ﻓﻲ ﺳﺒﻴﻞ اﻟﻠﻪ ﺑﺄﻣﻮاﻟﻬﻢ ﻭﺃﻧﻔﺴﻬﻢ ﺃﻻ ﺃﺑﺸﺮﻭا ﺃﻧﺘﻢ اﻟﻤﻔﻠﺤﻮﻥ ﻭاﻟﺬﻳﻦ ﺁﻭﻭﻫﻢ ﻭﻧﺼﺮﻭﻫﻢ ﻭﺟﺎﺩﻟﻮا ﻋﻨﻬﻢ اﻟﻘﻮﻡ اﻟﺬﻳﻦ ﻏﻀﺐ اﻟﻠﻪ ﻋﻠﻴﻬﻢ ﺃﻭﻟﺌﻚ ﻻ ﺗﻌﻠﻢ ﻧﻔﺲ ﻣﺎ ﺃﺧﻔﻲ ﻟﻬﻢ ﻣﻦ ﻗﺮﺓ ﺃﻋﻴﻦ ﺟﺰاء ﺑﻤﺎ ﻛﺎﻧﻮا ﻳﻌﻤﻠﻮﻥ "
    மஸ்லமா இப்னு முஹல்லத்(ரலி) ஒரு நாள் அவர்களுடன் இருந்தவர்களிடம் " முஸ்ஹஃப்பில் எழுதப்படாத இரண்டு வசனங்கள் குறித்து கூறுங்கள்" என்று கூறினார்கள். யாரும் பதிலளிக்கவில்லை. அவர்கள் மத்தியில் அபூ அல்கனூத் ஸஅத் இப்னு மாலிக் இருந்தார்கள். மஸ்லமா(ரலி) கூறியதாவது : நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர் நற்செய்தியை பெற்றுக்கொள்ளுங்கள்.நீங்கள் தாம் வெற்றி பெற்றோர். மேலும் அல்லாஹ் கோபம் கொண்டோருக்கு எதிராக அவர்களுக்கு உறையுள், உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கியோரும்( வெற்றி பெற்றோர்). யாரும் அவர்கள் செய்ததற்காக அவர்களுக்கு காத்திருக்கும் கூலியை அறியமாட்டார். (அறிவிப்பாளர்: அபீ ஸுஃப்யான் அல் கலாயீ, நூல்: அல் இத்கான் 3/84)
நமது பதில்:
    மேற்குறிபிட்ட அறிவிப்பில் இடம் பெறும் இப்னு லஹீஆ பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். அல் ஸுயூத்தி அவர்கள் தனது அஸ்மா உல் முதல்லிஸீன் என்ற நூலில் பக்கம் எண்: 66ல் இருட்டடிப்பு செய்யும் பலவீனமானவர் என்று கூறுகிறார். இப்னு மயீன், "பலவீனமானவர்" என்று கூறுகிறார்.இப்னு மஹ்தி "இப்னு லஹீஆ அவரிடம் இருந்து எதையும் எடுத்துக்கொள்ள மாட்டேன்" என்று கூறுகிறார். பஸ்ர் இப்னு அல் ஸர்ஈ "இப்னு லஹீஆ-வை சந்தித்தால் அவரிடம் இருந்து எந்த வார்த்தையையும் எடுத்துக்கொள்ளாதே" என்று கூறுவதாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகிறார்( மீஸான் அல் இஃதிதால் 2/476)
    எனவே இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த செய்தி பலவீனமான நிராகரிக்கத்தக்க ஹதீஸ் ஆகும்.

ﻭﻗﺪ ﺃﺧﺮﺝ اﺑﻦ ﺃﺷﺘﺔ ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﻋﻦ اﻟﻠﻴﺚ ﺑﻦ ﺳﻌﺪ ﻗﺎﻝ: ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻊ اﻟﻘﺮﺁﻥ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻭﻛﺘﺒﻪ ﺯﻳﺪ ﻭﻛﺎﻥ اﻟﻨﺎﺱ ﻳﺄﺗﻮﻥ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﻓﻜﺎﻥ ﻻ ﻳﻜﺘﺐ ﺁﻳﺔ ﺇﻻ ﺑﺸﺎﻫﺪﻱ ﻋﺪﻝ ﻭﺇﻥ ﺁﺧﺮ ﺳﻮﺭﺓ ﺑﺮاءﺓ ﻟﻢ ﺗﻮﺟﺪ ﺇﻻ ﻣﻊ ﺧﺰﻳﻤﺔ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﻓﻘﺎﻝ: اﻛﺘﺒﻮﻫﺎ ﻓﺈﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺟﻌﻞ ﺷﻬﺎﺩﺗﻪ ﺑﺸﻬﺎﺩﺓ ﺭﺟﻠﻴﻦ ﻓﻜﺘﺐ. ﻭﺇﻥ ﻋﻤﺮ ﺃﺗﻰ ﺑﺂﻳﺔ اﻝﺭﺟﻢ ﻓﻠﻢ ﻳﻜﺘﺒﻬﺎ ﻷﻧﻪ ﻛﺎﻥ ﻭﺣﺪﻩ.

     அபூ பகர் (ரலி) அவர்கள் தான் முதன்முதலில் குர்ஆனை ஒன்றாக தொகுத்தவர்கள். அதனை ஸைத்(ரலி) எழுதினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் மக்கள் வருவார்கள். இரண்டு சாட்சியம் இல்லாமல் எந்த வசனத்தையும் எழுத மாட்டார்கள். அல் பராஅத் ஸுராவின் இறுதி பகுதி, குஸைமா இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் இருந்தது. ஸைத் (ரலி) " அதனை எழுதிக்கொள்ளுங்கள்.ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குஸைமாவின் சாட்சியத்தை இரண்டு நபர்களின் சாட்சிக்கு நிகராக்கியுள்ளார் ", என்று கூறினார்கள். அதனால் எழுதி கொண்டார்கள். உமர்(ரலி) கல்லெறி குறித்த வசனத்துடன் வந்தார்கள். அவர் மட்டும் தனித்து வந்ததால் அது எழுதப்படவில்லை. (அறிவிப்பாளர்: லைஸ் இப்னு சஅத்           நூல்: அல் இத்கான் 1/206)
நமது பதில்:
        மேற்குறிபிட்ட ஹதீஸை அறிவிக்கும் அல் லைஸ் இப்னு சஅத் ஹிஜ்ரி 94ல் பிறந்து ஹிஜ்ரி 175ல் மரணித்த தபா தாபியீ ஆவார் (திக்காத் இப்னு ஹிப்பன் பாகம் 7). உமர்(ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ல் மறைந்துவிட்டார்கள். அப்படி இருக்கையில் இந்த செய்தி அறிவிப்பாளர் தொடர் முறிந்த செய்தியாகும். எனவே இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த மேற்குறிபிட்ட செய்தி பலவீனமான நிராகரிக்கத்தக்க ஹதீஸ் ஆகும்.

ﺣﺪﺛﻨﺎ ﺣﺠﺎﺝ ﻋﻦ اﺑﻦ ﺟﺮﻳﺞ ﺃﺧﺒﺮﻧﻲ اﺑﻦ ﺃﺑﻲ ﺣﻤﻴﺪ ﻋﻦ ﺣﻤﻴﺪﺓ ﺑﻨﺖ ﺃﺑﻲ ﻳﻮﻧﺲ ﻗﺎﻟﺖ ﻗﺮﺃ ﻋﻠﻲ ﺃﺑﻲ ﻭﻫﻮ اﺑﻦ ﺛﻤﺎﻧﻴﻦ ﺳﻨﺔ ﻓﻲ ﻣﺼﺤﻒ ﻋﺎﺋﺸﺔ " ﺇﻥ اﻟﻠﻪ ﻭﻣﻼﺋﻜﺘﻪ ﻳﺼﻠﻮﻥ ﻋﻠﻰ اﻟﻨﺒﻲ ﻳﺄﻳﻬﺎ اﻟﺬﻳﻦ ﺁﻣﻨﻮا ﺻﻠﻮا ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻤﻮا ﺗﺴﻠﻴﻤﺎ ﻭﻋﻠﻰ اﻟﺬﻳﻦ ﻳﺼﻠﻮﻥ اﻟﺼﻔﻮﻑ اﻷﻭﻝ " ﻗﺎﻟﺖ ﻗﺒﻞ: ﺃﻥ ﻳﻐﻴﺮ ﻋﺜﻤﺎﻥ اﻟﻤﺼﺎﺣﻒ. ﻗﺎﻝ: ﻗﺎﻝ اﺑﻦ ﺟﺮﻳﺞ: ﻭﺃﺧﺒﺮﻧﻲ اﺑﻦ ﺃﺑﻲ ﺣﻤﻴﺪ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻫﺮﻣﺰ ﻭﻏﻴﺮﻩ ﻣﺜﻞ ﺫﻟﻚ ﻓﻲ ﻣﺼﺤﻒ ﻋﺎﺋﺸﺔ

        ஹமீதா பின்த் அபீ யூனிஸ் கூறியதாவது: எனது தந்தை என்பது வயதாக இருக்கும் போது ஆயிஷா(ரலி) அவர்கள் முஸ்ஹஃப்பில் "இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அவனது வானவர்களும் (அவருக்காகப்) பிரார்த்திக்கின்றனர். இறைநம்பிக்கையாளர்களே! மேலும் அவர் மீதும், தொழுகையில் முதல் வரிசையில் நிற்ப்பவர்கள் மீதும் ஸலவாத் சொல்லுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! " என்று ஓதினார்கள். மேலும் அவர்கள்(ஹமீதா பின்த் அபீ யூனிஸ்) " அது உஸ்மான் முஸ்ஹஃபை மாற்றுவதற்கு முன்பாகும்" என்று கூறினார்கள். (நூல்: அல் இத்கான் 3/82, ஃபதாயில் அல் குர்ஆன் 1/324) 

நமது பதில்:
        மேற்குறிபிட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் இப்னு அபீ ஹமீதா ஹதீஸ்களில் "கைவிடப்பட்டவர்", என்று இமாம் புகாரி கூறுகிறார்கள். "இப்னு அபீ ஹமீதா ஒன்றுமில்லாதவர். அவரது செய்திகளை எழுதவேண்டாம்", என்று யஹ்யா இப்னு மயீன் கூறுகிறார் (அல் காமில் 2/241). எனவே மேற்குறிபிட்ட செய்தி பலவீனமான செய்தியாகும்.


ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﺮﻳﻢ ﻋﻦ ﻧﺎﻓﻊ ﺑﻦ ﻋﻤﺮ اﻟﺠﻤﺤﻲ ﻭﺣﺪﺛﻨﻲ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﻠﻴﻜﺔ ﻋﻦ اﻟﻤﺴﻮﺭ ﺑﻦ ﻣﺨﺮﻣﺔ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﻋﻤﺮ ﻟﻌﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻋﻮﻑ: ﺃﻟﻢ ﺗﺠﺪ ﻓﻴﻤﺎ ﺃﻥﺯﻝ ﻋﻠﻴﻨﺎ " ﺃﻥ ﺟﺎﻫﺪﻭا ﻛﻤﺎ ﺟﺎﻫﺪﺗﻢ ﺃﻭﻝ ﻗﺎﻝ: ﺃﺳﻘﻄﺖ ﻓﻴﻤﺎ ﺃﺳﻘﻂ ﻣﻦ اﻟﻘﺮﺁﻥ

    Umar said to ’Abdul-Rahman Ibn ’Oaf, ‘Didn’t you find among the verses that we received one saying, "Strive as you strove at the first?" We do not locate it (any more).’ ’Abdul-Rahman Ibn ’Oaf told him, ‘This verse has been removed among those others which were removed from the Qur’an."’ ( Al itqaan 3/84  - ஆன்சரிங்க் இஸ்லாம் தளத்தின் ஆங்கில மொழியாக்கம்) .
     உமர்(ரலி) அவர்கள்," 'நீங்கள் முதலில் போராடியது போல் போராடுங்கள்' என்று இறங்கியதை நீங்கள் அறிவீர்களா?அதை நாம் காணவில்லையே ?" என்று அப்துர் ரஹ்மான் இப்னு அஃப்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு, "குர்ஆனில் நீக்கப்பட்டவைகளுடன் அதுவும் நீக்கப்பட்டுவிட்டது" என்று அவர்கள் கூறினார்கள்.

நமது பதில்:
        மேற்குறிப்பிட்ட செய்தியில் ﺃﺳﻘﻂ- என்ற சொல்லை நீக்கப்படுதல் என்று அன்ஸரிங்க இஸ்லாம் வலைத்தளம் மொழியாக்கம் செய்துள்ளது. இது ﺳﻘﻂ என்ற வேர் சொல்லில் இருந்து வந்த சொல்லாகும். இந்த சொல்லானது சட்டவியல் சார்ந்த இடங்களில் பயப்படுத்தப்படும் போது திரும்பப்பெறுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்படும். இந்த சொல்லின் பொருள் குறித்து அல்மானி அரபி அகராதி விளக்கியுள்ளது.

       அதனால்தான் ஒரே மைய கருத்தை தரும் செய்திகளில் ﺃﺳﻘﻂ என்ற சொல்லுக்கு நிகராக கைப்பற்றப்படுதல் என்ற பொருளை கொண்ட ﻗﺒﺾ என்ற சொல் பயன்படுத்தப்படுவதை காணமுடிகிறது.

உதாரணம்: 1
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ فِيمَا أَنْزَلَ اللَّهُ مِنَ الْقُرْآنِ ثُمَّ سَقَطَ لاَ يُحَرِّمُ إِلاَّ عَشْرُ رَضَعَاتٍ أَوْ خَمْسٌ مَعْلُومَاتٌ ‏.‏"
    ஆயிஷா(ரலி) கூறியதாவது:அல்லாஹ்வால் அல் குர்ஆனில் இறக்கிவிட்டு பின்னர் நீக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று பத்து முறை அல்லது ஐந்து முறை பால் உறிஞ்சி குடிக்கப்பட்டிருந்தால் திருமண உறவு தடுக்கப்பட்டு விடும் என்பதாகும். (நூல்: இப்னு மாஜா 1942)
மேற்குறிபிட்ட இதே மைய கருத்தை கொண்ட செய்தி பின்வருமாறு
ﻗﺎﻝ: ﺯﻋﻤﻮا ﺃﻥ ﻋﺎﺋﺸﺔ ﻗﺎﻟﺖ: " ﻟﻘﺪ ﻛﺎﻥ ﻓﻲ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ: ﻋﺸﺮ ﺭﺿﻌﺎﺕ، ﺛﻢ ﺭﺩ ﺫﻟﻚ ﺇﻟﻰ ﺧﻤﺲ، ﻭﻟﻜﻦ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻣﺎ ﻗﺒﺾ ﻣﻊ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ "
ஆயிஷா(ரலி) கூறியதாவது " பத்து முறை உறிஞ்சி பாலருந்துதல் என்பது திடமாக குர்ஆனில் கூறப்பட்டிருந்தது. பின்னர் அது ஐந்து முறை என்று மாற்றப்பட்டது. அல்லாஹ்வின் வேதத்தில் அது இருந்தது. ஆனால் அது நபி(சல்) அவர்கள் இருக்கும் போதே எடுக்கப்பட்டுவிட்டது.(முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13928)
    அதே போல இஸ்லாமோஃபோபுகள் இதே ﺳﻘﻂ என்ற சொல்லின் அடிப்படையில் அமைந்த மாலிக்(ரஹ்) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் செய்தியையும் குர்ஆனின் பகுதிகள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறுவதற்கு ஆதாரமாக கொண்டுவருகின்றனர். அதிலும் ﺳﻘﻂ என்ற சொல்லிற்கு நிகராக ரத்து செய்யப்பட்டு எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற பொருளை தரும் نسخ ورفع என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணம்: 2
ﻭﻋﻦ ﻣﺎﻟﻚ ﺃﻥ ﺃﻭﻟﻬﺎ ﻟﻤﺎ ﺳﻘﻂ ﺳﻘﻂ ﻣﻌﻪ اﻟﺒﺴﻤﻠﺔ ﻓﻘﺪ ﺛﺒﺖ ﺃﻧﻬﺎ ﻛﺎﻧﺖ ﺗﻌﺪﻝ اﻟﺒﻘﺮﺓ ﻟﻄﻮﻟﻬﺎ.
    மாலிக் அவர்களது அறிவிப்பில் " அதில் (அத் தவ்பா ஸூரா) முதல் பகுதிகள் விடப்பட்ட போது, பிஸ்மில்லாஹ்வும் விடப்பட்டுவிட்டது. நீளத்தில் அது (அத் தவ்பா ஸூரா) அல்பகரா ஸூராவிற்கு இணையானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது",என்று இடம் பெற்றுள்ளது. (இத்கான் 1/226)
وروي عن مالك أنه قال: بلغنا أنها كانت نحو سورة البقرة ثم نسخ ورفع كثير منها وفيه البسملة

    மாலிக் அவர்களது அறிவிப்பில் "அது அல் பகரா ஸூராவிற்கு இணையானது. பிறகு அதில் கணிசமானது ரத்து செய்யப்பட்டு உயர்த்தப்பட்டுவிட்டது. அதில் பிஸ்மில்லாஹ்வும் அடக்கம் என்று கேள்விப்பட்டோம்" என்று இடம் பெறுகிறது.( தஃப்ஸீர் அல் அதிய்யா 3/4) 

    அதனால்தான் இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த உமர்(ரலி) குறித்த செய்தியை பதிவிட்ட அல் சுயூத்தி அவர்களாகட்டும், கன்ஸுல் உம்மாலின் ஆசிரியாரான அலி இப்னு அப்துல் மாலிக் அல் ஹிந்தி அவர்களாகட்டும் நஸ்ஹ் மன்ஸூஹ் பற்றிய பாடத்தில் கொண்டுவந்துள்ளனர். எனவே மேற்குறிபிட்ட அரபி அகராதி மற்றும் ஹதீஸ்களில் இடம் பெறும் சொல்லாடல் அடிப்படையில் இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த உமர்(ரலி) குறித்த செய்தியின் சரியான புரிதல் இதுவே.
உமர்(ரலி) அவர்கள்," 'நீங்கள் முதலில் போராடியது போல் போராடுங்கள்' என்று இறங்கியதை நீங்கள் அறிவீர்களா?அதை நாம் காணவில்லையே ?" என்று அப்துர் ரஹ்மான் இப்னு அஃப்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு, "குர்ஆனில் எடுத்துக்கொள்ளப்பட்டவையுடன் அதுவும் எடுத்து கொள்ளப்பட்டுவிட்டது" என்று (அப்துர் ரஹ்மான் இப்னு அஃப்(ரலி)) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: மிஸ்வர் இப்னு மஹ்ரமா, அல் இத்கான் 3/84)

    எனவே இஸ்லாமொஃபோபுகள் குர்ஆனின் பகுதிகள் காணவில்லை என்ற வாதம்,  ஆதாரங்களை தவறாக புரிந்து கொண்டதாலும், காழ்புணர்வினால் ஏற்பட்ட அறியாமையினாலுமே என்பதை மேற்குறிபிட்ட நமது பதில்களும், முன்சென்ற தொடர்களும் உறுதிபடுத்துகின்றன. அல்லாஹு அஃலம்.

Sunday, November 20, 2022

இப்னு உமர்(ரலி) குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று கூறினார்களா??

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ    குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் விமர்சனங்களில் அடுத்ததாக நாம் காணயிருப்பது இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றை அடிப்படியாக கொண்டது. அவர்கள் அதற்கு முன்வைக்கும் ஆதாரத்தையும் அதன் அடிப்படையில் எழுப்பப்படும் விமர்சனத்தை முதலில் பார்ப்போம்.

 

  இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும்
  ஆதாரம் 1:
  `Abdullah b. `Umar reportedly said, 'Let none of you say, "I have got the whole of the Qur'an." How does he know what all of it is? MUCH OF THE QUR'AN HAS GONE. Let him say instead, "I have got what has survived."' (Jalal al Din `Abdul Rahman b. Abi Bakr al Suyuti,al-Itqan fi `ulum al-Qur'an, Halabi, Cairo, 1935/1354, Volume 2, p. 25)

       இப்னு உமர்(ரலி) கூறியதாவது "உங்களில் ஒருவர் குர்ஆன் முழுவதையும் ஓதிவிட்டேன் என்று கூறவேண்டாம். அதை முழுவதுமாக அவர் அறிவாரா? குர்ஆனின் பெரும்பகுதி சென்றுவிட்டது. மாறாக அவர் " எது தப்பியதோ அதனை பெற்றுக்கொண்டேன்" என்று சொல்லட்டும். (அல் சுயூத்தி அவர்களது இத்கான் ஃபீ உளூம் அல் குர்ஆன், பாகம் 2 பக்கம் 25, ).

  ஆதாரம் 2:
  Isma’il b. Ibrahim related to us from Ayyub from Nafi‘ from Ibn ‘Umar who said – Let none of you say, “I have learned the whole of the Koran,” for how does he know what the whole of it is, WHEN MUCH OF IT HAS DISAPPEARED? Let him rather say, “I have learned what is extant thereof.” (Ibn Warraq, Origins of the Koran – Classic Essays on Islam’s Holy Book [Prometheus Books, Amherst, NY 1998], Part Two: The Collections and the Variants of the Koran, 9. Abu ‘Ubaid on the Verses Missing from the Koran, by Arthur Jeffery, p. 151: bold, capital and underline emphasis ours)
      இப்னு உமர்(ரலி) கூறியதாவது "உங்களில் ஒருவர் குர்ஆன் முழுவதையும் ஓதிவிட்டேன் என்று கூறவேண்டாம். அதை முழுவதுமாக அவர் அறிவாரா? குர்ஆனின் பெரும்பகுதி மறைந்து போய்விட்டது. மாறாக அவர் " அதில் எது இருக்கிறதோ அதை கற்றுக்கொண்டேன்" என்று சொல்லட்டும்.
  ஆதாரம் 3:
  حدثنا إسماعيل بن إبراهيم ، عن أيوب ، عن نافع ، عن ابن عمر ، قال : « لا يقولن أحدكم قد أخذت القرآن كله وما يدريه ما كله ؟ قد ذهب منه قرآن كثير ، ولكن ليقل : قد أخذت منه ما ظهر منه
  Ismail bin Ibrahim narrated from Ayub from Naf’ee from Ibn Umar who said: ‘Verily among you people one would say that he has found the Quran whilst he is unaware of what the total quantity of the Quran was, because most of the Quran has been lost. Rather one should say that verily he has found the Quran that has appeared.’(Fadhail al-Quran by Qasim bin Salam, Volume 2 p. 135)
  இப்னு உமர்(ரலி) கூறியதாவது "உங்களில் ஒருவர் குர்ஆன் முழுவதையும் ஓதிவிட்டேன் என்று கூறவேண்டாம். குர்ஆன் முழுவதும் என்ன என்று அவர் அறிவாரா? ஏனென்றால் குர்ஆனின் பெரும்பகுதி தொலைந்துவிட்டது. மாறாக அவர் " குர்ஆனில் எது இருக்கிறதோ அதை கண்டுகொண்டேன்" என்று சொல்லட்டும்.(காஸிம் இப்னு ஸல்லாம் அவர்களது ஃபதாயில் அல் குர்ஆன், பாகம் 2 பக்கம் 135)
  இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதம்:
         மேற்குறிபிட்ட ஆதாரங்களை அடிப்படையில் அல் குர்ஆனின் பெரும் பகுதி காணாமல் போய்விட்டதாக நபித்தோழரான இப்னு உமர்(ரலி) கூறுகிறார்கள். எனவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பது இஸ்லாமோஃபோபுகளின் வாதம்.

      மேற்குறிப்பிட்ட மூன்று ஆதாரங்களை பொறுத்தவரையில் இரண்டாவது ஆதாரம், இஸ்லாமோஃபோபியாவை பரப்புவதையே முழுநேர தொழிலாக கொண்ட இப்னு வராக்கின் புத்தகத்தில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அபூ உபைத் அவர்களின் நூலில் இருந்து மேற்கோள் காட்டி ஆர்தர் ஜெஃப்ரியின் நூலில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இப்னு வராக் மேற்கோள்காட்டும் ஆர்த்தர் ஜெஃப்ரியின் ஆதாரமும் அபூ உபைத்தின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதால் 1 மற்றும் 3ம் ஆதாரத்தை மட்டும் நாம் ஆய்வுக்கு உட்படுத்துவதே போதுமானது.

  மொழியாக்க பித்தலாட்டம்

          இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த ஆதாரங்களான அல் சுயூத்தி அவர்களது இத்கான் மற்றும் அபூ உபைத் காஸிம் இப்னு ஸல்லாம் அவர்களது ஃபதாயில் அல் குர்ஆன் ஆகிய இரண்டுமே ஒரே வாசகத்தையே கொண்டிருக்கிறது.


              அப்படி இருக்கையில் எப்படி ஒவ்வொரு ஆதாரமும் வேறு பட்ட பொருளை தரும். இவர்கள் மொழிபெயர்ப்பில் மொசடி செய்துள்ளனர். இரண்டு நூற்களிலும் " قد ذهب منه قرآن كثير " என்ற வாசகமே இடம் பெற்றிருக்கிறது. அதனை மொழியாக்கம் செய்த இஸ்லாமோஃபோபுகள் அல் சுயூத்தி அவர்களது இத்கானின் ஆதாரம் என்று குறிப்பிடுவதில் "குர்ஆனின் பெரும்பகுதி சென்றுவிட்டது" என்றும், அபூ உபைத் அவர்களது ஃபதாயில் அல் குர்ஆனின் ஆதாரம் என்று குறிப்பிடுவதில் "ஏனென்றால் குர்ஆனின் பெரும்பகுதி தொலைந்துவிட்டது" என்றும் மொழியாக்கம் செய்துள்ளனர். இவ்வாறு மொழியாக்கத்தில் தில்லு முல்லு செய்துவிட்டு இஸ்லாமோஃபோபியா பிடித்த இப்னு வராக்கின் மேற்கோளில் "குர்ஆனின் பெரும்பகுதி மறைந்து போய்விட்டது" என்று இடம்பெறுவதாக கூறுகின்றனர். இப்படி இடத்துக்கிடம் மொழியாக்கம் மாறுவதே இவர்கள் மொழியாக்கத்தில் பெரும் மோசடி செய்துள்ளனர் என்பதற்கு போதிய சான்று.

      மேற்குறிபிட்ட ஆதாரங்களில் இரண்டு சொற்களின் மொழியாக்கத்தில் மோசடி செய்துள்ளனர்.
  1. ذهب
  2. كثير

  ذهب  - என்ற சொல்லின் பொருள்:

      “ذهب " - என்ற சொல்லின் பொருள் மிகவும் பறந்து விரிந்த பொருளை கொண்டது. அல்மானி அரபிய அகராதி அல்குர்ஆனில் பின்வரும் பொருளில் இந்த சொல்  1.புறப்படுதல், 2.சென்று விடுதல் 3.தொலைதூரம் சென்று விடுதல் 4.எடுத்துக்கொள்ளுதல். ஆகிய பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது. இந்த நான்கு பொருளில் எது இவர்கள் குறிப்பிடும் செய்தியில் இடம் பெறும் என்பதை இரண்டு முறைகளில் அறிந்து கொள்ளலாம்.

  1.வேறு நூல்களில் இடம்பெறும் இப்னு உமர்(ரலி) அவர்களது அறிவிப்புகளின் அடிப்படையில்

  2. எந்த தலைப்பின் கீழ் இந்த ஆதாரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்ற அடிப்படையில்

  1.வேறு நூற்களில் இடம்பெறும் இப்னு உமர்(ரலி) அவர்களது அறிவிப்புகள்:

              வேறு எந்த நூற்களில் அல்லது அறிவிப்பாளர்கள் வழியாக இந்த செய்தி இடம்பெறுகிறது என்பதை அல் இத்கானின் ஆசிரியரான அல் சுயூத்தி அவர்கள் தனது துர்ருல் மன்சூரில் பதிவிட்டுள்ளார்.
  ﻭﺃﺧﺮﺝ ﺃﺑﻮ ﻋﺒﻴﺪ ﻭاﺑﻦ اﻟﻀﺮﻳﺲ ﻭاﺑﻦ اﻷﻧﺒﺎﺭﻱ ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ ﻗﺎﻝ: ﻻ ﻳﻘﻮﻟﻦ ﺃﺣﺪﻛﻢ ﻗﺪ ﺃﺧﺬﺕ اﻟﻘﺮﺁﻥ ﻛﻠﻪ ﻣﺎ ﻳﺪﺭﻳﻪ ﻣﺎ ﻛﻠﻪ ﻗﺪ ﺫﻫﺐ ﻣﻨﻪ ﻗﺮﺁﻥ ﻛﺜﻴﺮ ﻭﻟﻜﻦ ﻟﻴﻘﻞ: ﻗﺪ ﺃﺧﺬﺕ ﻣﺎ ﻇﻬﺮ ﻣﻨﻪ
      அபூ உபைத் , இப்னு தூரைஷ், இப்னு அன்பாரியின் முஸ்ஹஃப்பில் ஆகிய அறிவிப்புக்களில் இப்னு உமர் கூறுவதாக அமைந்த செய்தி என்று மேற்குறிப்பிட்ட செய்தியை துர்ருல் மன்சூர் 1/258ல் அல் சுயூத்தி அவர்கள் பதிவிட்டுள்ளார்கள்.

      அபூ உபைத் அவர்கள் மட்டும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை. இப்னு தூரைஷ் அவர்களும் இந்த செய்தியை அறிவித்துள்ளதாக அல் சுயூத்தி அவர்கள் கூறுகிறார்கள். இப்னு தூரைஷ் அவர்களது அறிவிப்பை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது ஃபத்ஹுல் பாரியில் பதிவிட்டுள்ளார்கள்.

  ﺃﺣﺎﺩﻳﺚ ﺻﺤﻴﺤﺔ ﻭﻗﺪ ﺃﺧﺮﺝ ﺑﻦ اﻟﻀﺮﻳﺲ ﻣﻦ ﺣﺪﻳﺚ ﺑﻦ ﻋﻤﺮ ﺃﻧﻪ ﻛﺎﻥ ﻳﻜﺮﻩ ﺃﻥ ﻳﻘﻮﻝ اﻟﺮﺟﻞ ﻗﺮﺃﺕ اﻟﻘﺮﺁﻥ ﻛﻠﻪ ﻭﻳﻘﻮﻝ ﺇﻥ ﻣﻨﻪ ﻗﺮﺁﻧﺎ ﻗﺪ ﺭﻓﻊ

      இப்னு தூரைஷ் ஸஹீஹான் அறிவிப்பாளர் வரிசையில் பின்வருமாறு அறிவிக்கிறார். இப்னு உமர்(ரலி) அவர்கள் ஒரு மனிதர் " நான் முழு குர்ஆனையும் ஓதிவிட்டேன் " என்று கூறுவதை வெறுப்பவர்களாக இருந்தார்கள். குர்ஆனின் ஒரு பகுதி உயர்த்தப்பட்டுவிட்டது (எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது) என்று கூறுவார்கள். ( ஃபத்ஹுல் பாரி 9/65)
  அதே போல் மேற்கொண்ட செய்தியை அதே அறிவிப்பாளர் வரிசையில் இப்னு வஹ்ப் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்கள்.
  ﻗﺎﻝ: ﻭﺣﺪﺛﻨﻲ ﺣﻤﺎﺩ ﺑﻦ ﺯﻳﺪ ﻋﻦ ﺃﻳﻮﺏ ﻋﻦ ﻧﺎﻓﻊ ﺃﻥ اﺑﻦ ﻋﻤﺮ ﻛﺎﻥ ﻳﻜﺮﻩ ﺃﻥ ﻳﻘﻮﻝ: ﻗﺮﺃﺕ اﻟﻘﺮﺁﻥ ﻛﻠﻪ، ﻭﻗﺎﻝ: ﺇﻥ ﻣﻨﻪ ﻣﺎ ﻗﺪ ﺭﻓﻊ، ﺃﻭ ﻧﺴﻲ.
      இப்னு உமர்(ரலி)  "நான் முழு குர்ஆனையும் ஓதிவிட்டேன்",என்று கூறப்படுவதை வெறுப்பார்கள். மேலும் அவர்கள், "அதில் சில உயர்த்தப்பட்டுவிட்டது (எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது) அல்லது மறக்கச் செய்யப்பட்டுவிட்டது", என்று கூறினார்கள்.(இப்னு வஹ்ப் அவர்களது தஃப்ஸீர் அல் குர்ஆன் மின் ஜாமீ 3/19 ஹதீஸ் 24)
  அல்லாஹ்வும் அல் குர்ஆனில் இதே அடிப்படையில் கூறுவதை நாம் காணலாம்
          ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததையோ, அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா? [அல்குர்ஆன் 2:106]
      எனவே இப்னு உமர்(ரலி) அவர்களது மேற்குறிபிட்ட ஹதீகளின் அடிப்படையில்,  "ذهب " என்ற சொல் "எடுத்துக்கொள்ளப்படுதல்" என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.


          மேற்குறிபிட்ட செய்தியை அல் சூயூத்தி அவர்கள் நாஸிஹ் மன்சூஹ் குறித்த பகுதியில் கொண்டுவந்துள்ளார். குர்ஆனை பொறுத்தவரை "நாஸிஹ் மன்சூஹ் " என்ற சொல்லாடல் எது குறித்தது என்பது அனைவரும் அறிந்தது.  இந்த தலைப்பானது 462 முதல் 475 வரை உள்ள பக்கங்களை உள்ளடக்கியது. மேற்குறிபிட்ட செய்தி 470ம் பக்கத்தில் இடம்பெறுகிறது.          மேலும் இந்த பகுதியில் இப்னு உமர்(ரலி) இது போன்று அறிவிக்கும் ஏனைய செய்திகளையும் பதிவிட்டுள்ளார். அதில் தப்ரானீ அவர்களது அல் கபீர் என்ற நூலில் 13141 ஹதீஸாக இடம் பெறும் இந்த செய்தியையும் கொண்டுவருகிறார்.

  இப்னு உமர்(ரலி) கூறியதாவது
          இருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிய ஒரு சூராவை மனனமிட்டிருந்தார்கள். ஒர் இரவு அவர்கள் தொழுகையில் நின்ற போது , ஒரு எழுத்தை கூட ஓத இயலவில்லை. காலையில் இருவரும் அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களிடம் வந்து இது குறித்து கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ," அது ரத்து செய்யபட்டுவிட்டது.( ரத்து செய்யப்பட்டு, மறக்க செய்யபட்டுவிட்டது என்று தப்ரானீயில் இடம்பெற்றுள்ளது) எனவே அதை விட்டுவிடுங்கள் " என்று கூறிவிட்டார்கள். (அல் இத்கான் பக்கம் எண்: 472)

          மேற்குறிபிட்ட செய்தி அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது. ஆனால் சூயுத்தி அவர்கள் "ذهب " என்ற சொல்லை "எடுத்துக்கொள்ளப்படுதல்" என்ற பொருளில்தான் பதிந்துள்ளார்கள் என்பதை உறுதிப்பட நிறுவவே இந்த செய்தியை இங்கு கொண்டுவந்துள்ளோம்.

  எந்த தலைப்பின் கீழ் அபூ உபைத் காஸிம் இப்னு ஸல்லாம் அவர்கள் தனது ஃபதாயில் அல் குர்ஆன் என்ற நூலில் இந்த செய்தியை கொண்டுவதுள்ளார்கள்.

         அதுபோல அபூ உபைத் காஸிம் இப்னு ஸல்லாம் அவர்களும் இந்த செய்தியை "அல் குர்ஆனில் இறங்கிய பிறகு எடுத்துக்கொள்ளப்பட்டவையும், அவை அல் மஸாஹிஃப்பில் இடம்பெறாமையும் குறித்த பாடம்" என்ற தலைப்பின் கீழ் கொண்டுவந்துள்ளார்கள்.

      மேலும் இப்னு உமர்(ரலி) அவர்களை பொறுத்தவரையில் குர்ஆனில் யாரும் எந்த மாற்றமும் செய்ய இயலாது, அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டது என்பதுதான் அவர்களது நிலைபாடு. அதனை பின்வரும்செய்தி விளக்குகிறது.
  ﺣﺪﺛﻨﻲ ﻳﻌﻘﻮﺏ ﺑﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ ﻗﺎﻝ، ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﻋﻠﻴﺔ، ﻋﻦ ﺃﻳﻮﺏ، ﻋﻦ ﻧﺎﻓﻊ ﻗﺎﻝ: ﺃﻃﺎﻝ اﻟﺤﺠﺎﺝ اﻟﺨﻄﺒﺔ، ﻓﻮﺿﻊ اﺑﻦ ﻋﻤﺮ ﺭﺃﺳﻪ ﻓﻲ ﺣﺠﺮﻱ، ﻓﻘﺎﻝ اﻟﺤﺠﺎﺝ: ﺇﻥ اﺑﻦ اﻟﺰﺑﻴﺮ ﺑﺪﻝ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ! ﻓﻘﻌﺪ اﺑﻦ ﻋﻤﺮ ﻓﻘﺎﻝ: ﻻ ﺗﺴﺘﻄﻴﻊ ﺃﻧﺖ ﺫاﻙ ﻭﻻ اﺑﻦ اﻟﺰﺑﻴﺮ! ﻻ ﺗﺒﺪﻳﻞ ﻟﻜﻠﻤﺎﺕ اﻟﻠﻪ!
         நாஃபீ கூறியதாவது, " அல் ஹஜ்ஜாஜ் குத்பாவை நீட்டிவிட்டார். இப்னு உமர்(ரலி) என் மடிமீது தலையை சாய்த்துக்கொண்டார்கள். அப்போது ஹஜ்ஜாஜ் " இப்னு ஜுபைர் அல்லாஹ்வின் வேதத்தை மாற்றிவிட்டார்" என்று கூறினார். உடனே நிமிர்ந்து அமர்ந்த இப்னு உமர்(ரலி) அவர்கள், "நீயோ , இப்னு ஜுபைரோ அதை செய்ய இயலாது. அல்லாஹ்வின் வாக்கிற்கு எவ்வித மாற்றமும் இல்லை", என்று கூறினார்கள். (தஃப்ஸீர் தபரி 15/141, முஸ்தத்ரக் அல் ஹாகிம் 3301)
              அல் குர்ஆன் அல்லாஹ்வால் பாதுக்காக்கப்பட்டது (அல் குர்ஆன் 15:9) என்பதை உறுதியாக நம்பும் ஒருவர், அல்லாஹ் அளித்த வாக்குறுதியை யாராலும் மாற்ற முடியாது என்பதை நம்பும் ஒருவர்,  குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று நிச்சயம் கூறமாட்டார், என்பதை மேற்குறிபிட்ட செய்தி ஆணித்தரமாக உணர்த்துகிறது.

  كثير -  என்ற சொல்லின் பொருள்

          அடுத்ததாக كثير என்ற சொல்லை இஸ்லாமோஃபோபுகள் பெரும்பகுதி என்று மொழியாக்கம் செய்து குர்ஆனின் பெரும்பான்மையான பகுதிகள் காணாமல் போய்விட்டதாக பொய் கூறி திரிகின்றனர். கஸீர் என்ற சொல் எப்படி பயன்படுத்தப்படும் என்பதற்கு இரண்டு உதாரணங்கள் இங்கு முன்வைக்கப்படுகிறது
  ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ اﻟﻨﻀﺮ اﻷﺯﺩﻱ، ﺛﻨﺎ ﺧﺎﻟﺪ ﺑﻦ ﺧﺪاﺵ، ﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻌﺰﻳﺰ ﺑﻦ ﻣﺤﻤﺪ اﻟﺪﺭاﻭﺭﺩﻱ، ﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻤﺮﻭ، ﻋﻦ اﻟﺰﻫﺮﻱ، ﻋﻦ ﺧﺎﺭﺟﺔ ﺑﻦ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ، ﻋﻦ ﺃﺑﻴﻪ ﻗﺎﻝ: §ﻟﻤﺎ ﻛﺎﻥ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ ﺃﺻﻴﺐ ﻣﻤﻦ ﻳﻘﺮﺃ اﻟﻘﺮﺁﻥ ﻧﺎﺱ ﻛﺜﻴﺮ
      ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறியதாவது: யமாமா யுத்த நாளில் குர்ஆன் காரிகள் உட்பட மக்களில் கணிசமானவர்கள் கொல்லப்பட்டனர்.(மஜ்மவுல் கபீர் 4843)
      மேற்குறிபிட்ட செய்தியில்  "كثير" - என்ற பதத்திற்கு மக்களில் பெரும்பான்மையினர் கொல்லப்பட்டுவிட்டார்கள், அதாவது மக்களில் 60% கொல்லப்பட்டுவிட்டார்கள், என்று பொருள் கொடுப்பார்களா??? அல்லது மக்களில் கணிசமானவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று பொருள் கொடுப்பார்களா???

  حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي وَأَنَا بِمَكَّةَ، وَهْوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالأَرْضِ الَّتِي هَاجَرَ مِنْهَا قَالَ "" يَرْحَمُ اللَّهُ ابْنَ عَفْرَاءَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ "" لاَ "". قُلْتُ فَالشَّطْرُ قَالَ "" لاَ "". قُلْتُ الثُّلُثُ. قَالَ "" فَالثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ.......
  ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
              மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜின் போது) நலம் விசாரித்து வந்தார்கள். நான் துறந்து வந்த பூமியில் (மக்காவில்) மரணிப்பதை நான் விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட மற்றொருவரான) 'அஃப்ராவின் புதல்(வர் ஸஅத்பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அவர்கள், 'வேண்டாம்' என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அதற்கும், 'வேண்டாம்' என்றே பதிலளித்தார்கள். நான், 'மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)' என்று கேட்டேன். அவர்கள், 'மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். ......   (ஸஹீஹ் புகாரி : 2742)
          மேற்குறிபிட்ட செய்தியில் மூன்றிலொரு பகுதியே அதிகம் தான் என்று கூறுவது சரியா அல்லது மூன்றில் ஒரு பகுதி பெரும் பகுதி அல்லது 60% பகுதி என்று கூறுவார்களா???

      எனவே கஸீர் என்ற சொல், "அதிகமான பகுதி” , "பல:”,  "கணிசமான" போன்ற பொருளில் பயன்படுத்தும் சொல். இதற்கு பெரும்பான்மை பகுதி என்று மொழியாக்கம் செய்துவிட்டு குர் ஆனின் பெரும்பான்மை பகுதி காணாமல் போய்விட்டது என்று பித்தலாட்டம் செய்துள்ளனர் அன்ஸரிங் இஸ்லாம் வளைதளத்தினர்.......

          மேற்குறிப்பிட்ட வாதங்கள், ஆதாரங்கள், அரபு அகராதிகளின் குறிப்புக்கள், குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் குறிபிட்ட பதங்களின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் சரியான மொழியாக்கம் இதுவே  
   இப்னு உமர்(ரலி) கூறியதாவது "உங்களில் ஒருவர் குர்ஆன் முழுவதையும் ஓதிவிட்டேன் என்று கூறவேண்டாம். அதை முழுவதுமாக அவர் அறிவாரா? குர்ஆனில் கணிசமானது எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது. மாறாக அவர் " அதிலிருந்து தெரியவந்ததை எடுத்துக்கொண்டேன்" என்று சொல்லட்டும். (ஃபாதாயில் அல் குர்ஆன் 1/320).
              குர்ஆனின் பாதுகாப்பு குறித்து மோசடியாக மொழியாக்கம் செய்துதான் கேள்வி எழுப்ப வேண்டிய அவலநிலையே இஸ்லாமோஃபோபுகளுக்கு உள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும் இவர்களது இருட்டடிப்பு வேலைகளே குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை பறைசாட்ட போதிய சான்று.. அல்ஹம்துலில்லாஹ்....