பக்கங்கள் செல்ல

Monday, May 30, 2022

பால்குடி வசனம் குர்ஆனில் காணவில்லையா???

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


        குர்ஆனின் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களில் அடுத்தாக இஸ்லாமோஃபோபுகள் முன்வைப்பது ஐந்து முறை பால் அருந்துவதால் தாய் சேய் உறவு ஏற்படும் என்ற வசனம் குர்ஆனில் காணவில்லை என்பதாகும். இது சென்ற கட்டுரையின் தொடர்ச்சி எனவும் கூறலாம். இந்த விமர்சனத்திற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும் அதன் விளக்கத்தையும் காண்போம் இன் ஷா அல்லாஹ்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2876,முவத்தா மாலிக் பாடம் 30/ ஹதீஸ் 18,அபூதாவுத் 2062, சுனன் நசயீ 3307.)
ஆதாரம் 2:
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، ‏.‏ وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ نَزَلَتْ آيَةُ الرَّجْمِ وَرَضَاعَةُ الْكَبِيرِ عَشْرًا وَلَقَدْ كَانَ فِي صَحِيفَةٍ تَحْتَ سَرِيرِي فَلَمَّا مَاتَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَتَشَاغَلْنَا بِمَوْتِهِ دَخَلَ دَاجِنٌ فَأَكَلَهَا ‏.‏
ஆயிஷா(ரலி) கூறியதாவது:
           கல்லெறி குறித்த ஆயத்தும், பருவமடைந்தவருக்கு பாலுட்டுவது குறித்த ஆயத்தும் இறங்கியிருந்தது. அது எழுதப்பட்ட காகிதம் எனது தலயணைக்கு கீழ் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் இறந்த போது ,நாங்கள் கவலையில் இருந்தோம். அப்போது வளர்ப்பு ஆடு ஒன்று அதை தின்றுவிட்டது (இப்னு மாஜா 2020)
மேற்கூறிய இவ்விரண்டு ஆதாரங்களை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள்,
1)நபி(சல்) அவர்கள் காலத்தில் ஓதப்பட்ட இந்த பால்குடி தொடர்பான வசனம் இன்றிருக்கும் குர்ஆனில் இல்லை.

2)இந்த வசனம் எழுதப்பட்ட காகிதத்தை ஆடு தின்றுவிட்டது எனவே குர்ஆனை தொகுக்கும் போது இணைக்க முடியவில்லை.

எனவே நபி(சல்) அவர்களது காலத்தில் இருந்த குர்ஆன் இன்றிருக்கும் குர்ஆன் அல்ல என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.

      மேற்குறிபிட்ட ஆதாரங்களுக்கும் அதன் அடிப்படையில் எழுப்பப்படும் வாதத்திற்கான பதிலை காண்போம் இன் ஷா அல்லாஹ்.

ஆதாரம் 1-ன் பொருள் விளக்கம் :-
عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ فِيمَا أُنْزِلَ مِنَ الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ ‏.‏ ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُنَّ فِيمَا  يُقْرَأُ مِنَ الْقُرْآنِ ‏.‏"
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்2876, முவத்தா மாலிக் பாடம் 30 ஹதீஸ் எண் 18, அபூதாவுத் 2062, சுனன் நசயீ 3307
        ஸரஹ் ஸஹீஹ் முஸ்லிம் என்ற ஸஹீஹ் முஸ்லீமின் விளக்க நூலில் மேற்குறிபிட்ட ஹதீஸை பதிந்து விட்டு இமாம் நவவீ அவர்கள் பின்வருமாறு அதன் பொருளை விளக்குகிறார்கள்.
هو بضم الياء من ( يقرأ ) ومعناه أن النسخ بخمس رضعات تأخر إنزاله جدا حتى أنه صلى الله عليه وسلم توفي وبعض الناس يقرأ خمس رضعات ويجعلها قرآنا متلوا لكونه لم يبلغه النسخ لقرب عهده فلما بلغهم النسخ بعد ذلك رجعوا عن ذلك وأجمعوا على أن هذا لا يتلى
            "யுக்ராஉ - يُقْرَأُ " என்ற வார்த்தையில் இடம் பெறும் "யா -ي " என்ற எழுத்தில் "உகர குறியீடு- ◌ُ " இடம் பெறுகிறது. இதன் பொருள் ஐந்து முறை பால் அருந்துவது என்பது மிக தாமதமாக, நபி(சல்) அவர்கள் இறக்கும் தருவாயில் தான் மாற்றப்பட்டது, அதை அறியாமல் சில மக்கள் குர்ஆனின் பகுதியாக எண்ணி ஓதினார்கள் என்பதே ஆகும்.  அதனால் அவர்கள் (நபி(சல்)) அதனை தெரிவித்த பிறகு அதை ஓதுவதை நிறுத்தி விட்டார்கள். அதன் பிறகு அதை ஓதக்கூடாது என்ற ஒருமித்த கருத்து ஏற்பட்டு விட்டது.
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ فِيمَا أَنْزَلَ اللَّهُ مِنَ الْقُرْآنِ ثُمَّ سَقَطَ لاَ يُحَرِّمُ إِلاَّ عَشْرُ رَضَعَاتٍ أَوْ خَمْسٌ مَعْلُومَاتٌ ‏.‏"

     ஆயிஷா(ரலி) கூறியதாவது:அல்லாஹ்வால் அல் குர்ஆனில்        இறக்கிவிட்டு பின்னர் நீக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று பத்து முறை அல்லது ஐந்து முறை பால் உறிஞ்சி குடிக்கப்பட்டிருந்தால் திருமண உறவு தடுக்கப்பட்டு விடும் என்பதாகும்.                         (நூல்: இப்னு மாஜா 1942)

              மேற்குறிபிட்ட செய்தியை மேலும் உறுதி படுத்தும் விதமாக முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூலில் பின்வருமாறு ஹதீஸ் இடம் பெறுகிறது.
ﻗﺎﻝ: ﺯﻋﻤﻮا ﺃﻥ ﻋﺎﺋﺸﺔ ﻗﺎﻟﺖ: " ﻟﻘﺪ ﻛﺎﻥ ﻓﻲ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ: ﻋﺸﺮ ﺭﺿﻌﺎﺕ، ﺛﻢ ﺭﺩ ﺫﻟﻚ ﺇﻟﻰ ﺧﻤﺲ، ﻭﻟﻜﻦ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻣﺎ ﻗﺒﺾ ﻣﻊ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ "
       ஆயிஷா(ரலி) கூறியதாவது " பத்து முறை உறிஞ்சி பாலருந்துதல் என்பது திடமாக குர்ஆனில் கூறப்பட்டிருந்தது. பின்னர் அது ஐந்து முறை என்று மாற்றப்பட்டது. அல்லாஹ்வின் வேதத்தில் அது இருந்தது. ஆனால் அது நபி(சல்) அவர்கள் இருக்கும் போதே எடுக்கப்பட்டுவிட்டது.(முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13928)
    மேற்குறிபிட்ட ஹதீஸ்கள்  இந்த வசனம் அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் உயிருடன் இருக்கும் காலத்தில், அதாவது அவர்களின் இறுதிகாலத்தில் அது நீக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதிபடுத்துகின்றன. எனவே அல்குர்ஆனில் இந்த வசனம் இடம் பெறவில்லை என்பது தெளிவாகிறது.

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، ‏.‏ وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ نَزَلَتْ آيَةُ الرَّجْمِ وَرَضَاعَةُ الْكَبِيرِ عَشْرًا وَلَقَدْ كَانَ فِي صَحِيفَةٍ تَحْتَ سَرِيرِي فَلَمَّا مَاتَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَتَشَاغَلْنَا بِمَوْتِهِ دَخَلَ دَاجِنٌ فَأَكَلَهَا ‏.‏
ஆயிஷா(ரலி) கூறியதாவது:
                    கல்லெறி குறித்த ஆயத்தும், பருவமடைந்தவருக்கு பாலுட்டுவது குறித்த ஆயத்தும் இறங்கியிருந்தது. அது எழுதப்பட்ட காகிதம் எனது தலயணைக்கு கீழ் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் இறந்த போது ,நாங்கள் கவலையில் இருந்தோம். அப்போது வளர்ப்பு ஆடு ஒன்று அதை தின்றுவிட்டது (இப்னு மாஜா 2020, முஸ்னத் அஹ்மத் 26316)
            மேற்குறிப்பிட்ட இந்த செய்தியில் இடம் பெறும் முஹ்ம்மது இப்னு இஸ்ஹாக் குறித்து சுஃப்யான் அஸ்ஸவ்ரி, சுஅபா இப்னு ஹஜ்ஜாஜ் போன்றவர்கள் போற்றியுள்ளனர். ஆயினும் இவர் குறித்து பலரும் விமர்சித்தும் உள்ளனர். அபூ பகர் அல் பைஹக்கி இவர் குறித்து கூறுகையில் இவர் பலவீனமானவர் என்கிறார். இவரை குறித்து அபூபக்ர் அல் பைஹக்கி கூறுகையில் இவர் நேரிடையாக செவியுற்றதற்கான வார்த்தைகள் இன்றி அறிவிக்கும் போது இவரது செய்திகள் பலவீனமானது என்கிறார். மேலும் இவரது செய்திகள் வழுவான அறிவிப்பாளரின் செய்திக்கு ஒத்தமைந்தால் ஏற்கப்படும் என்று கூறுகிறார், இவர் குறித்து இருட்டடிப்பு செய்பவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்.(தஹ்ரீப் அல் தஃதீப் 2/54 ). இவர் குறித்து அபூஹாத்தம் கூறுகையில் இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்றும், இவரது செய்திகளை மற்றவர் ஒத்துபார்த்து ஏற்க வேண்டும் என்கிறார். நஸ்யீ கூறுகையில் இவர் பலமானவர் அல்ல என்று கூறுகிறார். இதில் இவர் குறித்து உகைலீ கூறுகையில்:  அபூ அப்தில்லாஹ் "அவர் அதிகமாக இருட்டடிப்பு செய்பவர். அவர் இன்னாரிடம் கேட்டேன், அல்லது இன்னார் கூறினார் என்று கூறினாலும் அவர் அதில் இருட்டடிப்பு செய்வார்.  (அதாவது நான் இன்னாரிடம் கேட்டேன் என்று அவர் கூறும் போதும் கூட அவர் யாரிடம் கேட்டார் என்பது இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் என்று கூறுகிறார்)  

        இவ்வாறு முஹம்மத் இப்னு இஸ்ஹாக் குறித்த முரண்பட்ட விமர்சனங்களை ஓப்பிட்டு பின்வருமாறு அத்தஹபீ முடிவை முன்வைக்கிறார்.  இஸ்லாமிய சட்டவியல் குறித்த செய்திகளில் இவரது ஹதீஸ்கள் ஸஹீஹ் என்ற தரத்தில் இருந்து ஹஸன் என்ற தரத்திற்கு இறங்கிவிடும். இவர் மட்டும் தனித்து அறிவிக்கும் நிலையில் அந்த செய்தி நிராகரிக்கவே பட்டுவிடும். (சியார் 7/33-35) 

      இதுதான் இந்த செய்தியை பொருத்தவரை நமது நிலைபாடும். மேற்குறிபிட்டவாறு குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட ஏடுகளை ஆடு தின்றதாக அறிவிக்கும் செய்தி இவர் மட்டுமே தணித்து அறிவிக்கும் செய்தி. எனவேதான் முஸ்னத் அஹ்மதின் இந்த செய்தியை பதிவிட்டு இது ளயீபானது என்று ஷேக் சுஐப் அர்னாவுத் அவர்கள் தனது முஸ்னத் அஹ்மதின் விளக்கவுரை(43/343)-ல் குறிப்பிடுகிறார்.
               
                    அப்படியே இந்த செய்தியில் இருப்பது போல பாலகுடித்தல் குறித்த ஆயத் எழுதப்பட்ட காகித்தை ஆடு தின்றிருந்தாலும் அந்த வசனம் மக்கள் நினைவில் இருந்ததை மேற்குறிபிட்ட  ஹதீஸ்ளில் காணலாம். ஆக அது குர்ஆனின் வசனமாக இடம்பெறவில்லை என்பதற்கு ஆடு திண்றது காரணம் அல்ல. அது குர்ஆனின் வசனமாக இல்லை என்பதுதான் காரணம். எனவே தான் இந்த செய்தி குறித்து விளக்கயில் இப்னு ஹஸம் மேலே நாம் கூறும் இதே கருத்தை முன்வைக்கிறார்.(அல்முஹல்லாஹ் 12/ 177)

            எனவே ஐந்து முறை பாலகுடித்தால் தாய் சேய் உறவு ஏற்படும் என்ற வசனம் அல்லாஹ்வால் நபி(சல்) அவர்கள் உயிருடன இருக்கும் காலத்திலேயே  உயர்த்தப்பட்டுவிட்டது.  அந்த வசனம் இன்றிருக்கும் அல்குர்ஆனில் இடம் பெறவில்லை என்ற இஸ்லாமோஃபோபுகளின் வாதம் அர்த்தமற்றது என்பது இதன் மூலம் நிறுவப்பட்டுள்ளது.