=========================================================
Which one cmpatiple to apply on muslim women's maintanace Isuue
CRPC 125 Act? or The Muslim women (Protection of Rights on Divorce) Act 1986?
========================================================
ஒரு கணவர் மனைவியை விவாகரத்து செய்த பின் அவள் மறுமணம் செய்யும் வரை அல்லது மரணிக்கும்வரை ஜீவனாம்சம் தரச் சொல்கிறது சி.ஆர்.பி.சி. 125வது பிரிவு. இதை வைத்தே இந்திய நீதிமன்றங்கள் முஸ்லிம் பெண்களின் விவாகரத்து வழக்கிலும் தீர்ப்பளிக் கின்றன என்றாலும், முஸ்லிம் பெண்களின் விவாக ரத்து வழக்கில் வெவ்வேறு விதமான (செய்திக் கட்டுரையில் கண்ட மும்பை குடும்பநல நீதிமன்றத் தைப்போல) தீர்ப்புகளையும் பல்வேறு காலகட்டத் தில் அவை வழங்கியிருக்கின்றன.
1973ல் இயற்றப்பட்ட சி.ஆர்.பி.சி. 125 என்கிற ஜீவனாம்ச சட்டம் அனைத்து இந்தியக் குடிமக்க ளுக்குமான பொதுவான சட்டமாகும். இது எவர் மீதும் விதிக்கப்படும் சட்ட அந்தஸ்து கொண்ட தாக இருந்தாலும், முஸ்லிம் தனியார் சட்டத் தையும் இது விட்டு வைக்கவில்லை. முஸ்லிம் தனியார் சட்டத்தின் மீது மேலாண்மை செய்யும் வகையில் நீதிமன்றங்களில் இந் தச் சட்டம் பிரயோகிக்கப்படுகிறது.
இந்திய அரசியல் சாசனம் முஸ்லிம் தனியார் சட்டத்தை அங்கீகரித்துள்ளது. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, ஜீவ னாம்சம், திருமண மஹர் தொகை, காப்பாளராகுதல், வக்ஃபு செய் தல், அறக்கட்டளை, அன்பளிப்பு, பெண்களுக்கான சிறப்பு சொத்து உயிலில்லா உரிமையிறக்கம் மற் றும் குடும்ப பிரச்சினைகள் போன்றவற்றை தங்கள் மத வழக் கப்படி தீர்த்துக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.முஸ்லிம் தனியார் சட்டம் (Muslim Personal Law (shariat) Application ACT 1937ல் இயற்றப் பட்டு நாம் மேற்சொன்னவற்றை ஷரீயத் சட்டத்தின் அடிப்படை யில் தீர்த்துக் கொள்ள இந்திய முஸ்லிம்களுக்கு சட்ட ரீதியான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சட்டங்களைப் பாது காக்கும் வகையில் 1973ல் முஸ் லிம் தனியார் சட்ட வாரியம் என்ற அரசு சாரா நிறுவனம் உரு வாக்கப்பட்டது. முஸ்லிம்களின் பிரச் சினைகள் குறித்து அது அவ்வப்போது அரசுக்கு ஆலோ சனை சொல்லி வரு கிறது.
இது தவிர, இந் திய அரசியல் சாச னச் சட்டத்தின் பிரிவு 125 எந்த மதத் தினரும் தாங்கள் விரும்பிய மதத்தைப் பின்பற்ற உரிமை தரு கிறது என்ற வகையி லும் தனியார் சட் டங்களை முஸ்லிம் கள் பின்பற்றத் தகுந் தவர்கள் என்றாகிறது.
ஆயினும், இந்த சட்ட உரிமை கள் இருந்தும் இந்திய நீதிமன்றங் களில் அவ்வப்போது வழங்கப்ப டும் தீர்ப்புகள் ஷரீயத் சட்டங்க ளுக்கு முரணாக அமைந்து விடு கின்றன.
இதில் அடிக்கடி இந்திய நீதி மன்றங்களின் தீர்ப்புகளால் சர்ச்சைக்குள்ளாவது ஜீவனாம்ச விவகாரம்தான். ஜீவனாம்சம் கோரி சில முஸ்லிம் பெண்கள் அவ்வப்போது நீதிமன்றத்திற்கு செல்ல... நீதிமன்றம் சி.ஆர்.பி.சி. 125ன் கீழ் தீர்ப்பளிக்க... முஸ்லிம் அறிஞர்களோ முஸ்லிம் தனியார் சட்டத்தில் நீதிமன்றங்கள் தலை யிடுகின்றன என எதிர்ப்புகளை வெளிப்படுத்துகின்றனர். இது விவாதமாக்கப்படுகிறது.
உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் இந்துத்துவா சிந்தனை கொண்டவர்களாக அல்லது இஸ்லாமிய சட்டங்க ளுக்கு எதிரான சிந்தனை கொண்ட இயல்பினராக இருப்ப தாலும், பொது சிவில் சட்டம் தான் இந்தியாவில் இருக்க வேண் டும் என்ற பொதுவான (முஸ்லிம் களுக்கு எதிரான நோக்கமல் லாத) சிந்தனை கொண்டவர்க ளாக இருப்பதா லுமே முஸ்லிம் தனியார் சட்டம் அவ்வப்போது உர சிப் பார்க்கப்படுகி றது.
உயர் நீதிமன்றங் களும், உச்ச நீதி மன்றங்களும் முஸ் லிம் பெண்களின் ஜீவனாம்ச வழக்கு களில் சி.ஆர்.பி.சி. பிரிவு 125ன்படி தீர்ப்பு வழங்காமல் 1986ல் இயற்றப் பட்ட முஸ்லிம் பெண்கள் (விவாக ரத்து உரிமை பாது காப்பு) சட்டத்தின் படி தீர்ப்பளித்தால் சர்ச்சைக்கு இடமிருக்காது. ஆனால் இந்த நீதிமன்றங்கள் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதுதான் வாய்ப்புக் கேடானது.
1980களின் மத்தியில் ஷாபானு வழக்கு இந்திய முஸ்லிம் சமுதா யத்தில் பெரும் விவாத அலை களை உண்டு பண்ணிய பிறகு தான் தனியார் சட்டம் குறித்த விழிப்புணர்வு முஸ்லிம்கள் மத்தி யில் ஏற்பட்டது எனலாம்.70 வயது நிரம்பிய பேகம் ஷா பானுவை அவரது கணவர் விவா கரத்து செய்கிறார். இதனால் ஷா பானு குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.) 125ன் கீழ் ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) கேட்டு வழக்குத் தொடர, இதன்படி ஷா பானு மறுமணம் செய்யும்வரை அல் லது மரணிக்கும்வரை ஜீவனாம் சம் கொடுக்க வேண்டும் என கண வருக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். இது மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.
ஷா பானுவின் கணவர் இதை மறுத்து இத்தா (விவாகரத்துக் குப் பின் காத்திருப்பு காலம்) வரைதான் பராமரிப்புத் தொகை தர முடியும் என்றார். இதற்கு தனி யார் சட்டத்தை ஆதாரமாகக் காட்டினார் ஷா பானுவின் கணவர். பின்னர் உச்ச நீதிமன்றமும் ஷா பானுவிற்கு ஆதரவாக தீர்ப் பளித்தது. சி.ஆர்.பி.சி. 125ன்படி வாழ்க்கை முழுவதும் ஷா பானு விற்கு பராமரிப்புத் தொகை தர வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தீர்ப்பளித்தார்.
சி.ஆர்.பி.சி. 125 என்பது இந் திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான சட்டமாகும் என்ப தால் இதன் கீழ் ஷா பானு உரிமை கோரியிருந்தார். "சி.ஆர்.பி.சி. 125 பிரிவு எல்லோ ருக்கும் பொதுவானது என்கிற வகையில் இதன் கீழ் ஷாபானு உரிமை கோர முடியும். முஸ்லிம் தனியார் சட்டம் இந்த விஷயத் தில் பொருந்தாது' என நீதிபதி சந்திர சூட் தனது தீர்ப்பில் குறிப் பிட்டிருந்தார்.
இஸ்லாமிய உலமாக்கள் இந்த தீர்ப்பை எதிர்த்தனர். முஸ்லிம் தனியார் சட்டத்தில் நீதிமன்றம் தலையிடுகிறது என கொந்தளித் தனர். ஷரீயத் சட்டம் இறைச் சட்டம். அதில் நீதிமன்றம் தலை யிடக் கூடாது என்றனர். இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன் றம், அப்துல்லாஹ் யூசுஃப் அலி யின் ஆங்கில மொழி பெயர்ப்பு திருக்குர்ஆனிலிருந்து 2.41வது வசனத்தை எடுத்துக் காட்டி விளக்கம் அளித்திருந்தார் நீதிபதி!
"விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண் டும். இது இறையச்சமுடையோ ருக்கு கடமையாகும்' என்கிறது இந்த வசனம்.நீதிபதி சந்திர சூட், தொடர் ந்து ஜீவனாம்சம் தர வேண்டும் என தீர்ப்பெழுதிவிட்டு, மேற் கண்ட திருக்குர்ஆன் வசனத்தை அந்த தீர்ப்பிற்கு தவறாக பொருத்தியிருந்தார்.
இதனால், குர்ஆன் வசனத் திற்கு எப்படி நீதிபதி தவறான அர்த்தம் கொடுக்கலாம் என முஸ் லிம்கள் கொந்தளித்தனர்.
இந்த சர்ச்சை பெரும் அரசியலாக உருவெடுத்தது. தேசிய அளவில் விவாதமாக்கப்பட்டது இந்த தீர்ப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம்கள் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இறுதியில் நெருக்கடி யின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு பணிந்தது. பின்னர் சி.ஆர்.பி.சி. 125வது பிரிவிலிருந்து முஸ்லிம் பெண்க ளுக்கு விலக்களிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது ராஜீவ் அரசு. இது தான் முஸ்லிம் பெண்கள் (விவா கரத்து பாதுகாப்பு உரிமைச்) சட் டம் 1986.
1986லேயே இது அமுலுக்கு வந்தது. இந்தச் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு பின்னடைவு என்று, முற்போக்கு முஸ்லிம்கள் சிலர் கருத்துரைத்தனர். சி.பி. ஆர்.சி. 125 சட்டம் இஸ்லாத்திற்கு முரணானதல்ல என்றும் அவர் கள் கூறினர்.
புதிய சட்டம் ஒரே தடவை மொத்தமாக ஜீவனாம்சம் தரச் சொல்லி வலியுறுத்துகிறது. முஸ் லிம் அறிஞர்கள், திருக்குர்ஆனின் 2.41வது வசனம், விவாகரத்து செய்யும்போது போதுமான வச திகளுடன் ஒரே தடவை முழுமை யான ஜீவனாம்சம் தருவதை "நல்ல முறையில் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்' என்று கூறுவ தன் மூலம் இந்த வசனமும் தெளி வுபடுத்துகிறது என்கின்றனர்.
முஸ்லிம் பெண்கள் சட்டம் 1986, கணவர் முன்பு திருமணத் தின்போது மஹர் தராமல் இருந் திருந்தால் அந்த மஹர் தொகையை தர வேண்டும்; குர்ஆனில் சொல் லியிருப்பதுபோல் ஒரே தடவை முழுமையான ஜீவனாம்சம் தொகை தர வேண்டும்; அதோடு, மூன்று மாத காலம்வரை இத்தா கால பராமரிப்புத் தொகை தர வேண்டும் என்கிறது.
இந்த சட்டத்தின்படி, லக்னோ மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன் றம் முதன் முறையாக ரேகா தீட் சித் என்ற (முஸ்லிமாக மாறிய) பெண்ணுக்கு 80 ஆயிரம் ரூபாய் ஜீவ னாம்சம் ஒரே தடவை தர வேண்டும் என்றும், இதில் 60 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வும், 20 ஆயிரம் ரூபாய் மூன்று மாத இத்தாவிற்கான பராமரிப் புத் தொகையாகவும் தர வேண் டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
இருப்பினும் ஏராளமான வழக் குகள் சி.ஆர்.பி.சி. 125ன் கீழ் முஸ் லிம் பெண்களால் நீதிமன்றங்க ளில் தாக்கல் செய்யப்படுகின்றன. பல பெண்கள் அமைப்புகள் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 1986ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தி ருந்திருக்கின்றன. சில வருடங்களுக்கு முன் மும்பை உயர் நீதிமன்றம் இந்த புதிய சட்டத்தின்படி ஒரே தடவை ஜீவனாம்சம் வழங்கி தீர்ப்பளித் தது.
இதேபோல கொல்கத்தா உயர் நீதிமன்றமும் ஷகிலா பர்வீன் என்ற பெண்ணின் விவாகரத்து வழக்கில் அவள் வாழ்க்கை முழு வதற்கும் தேவையான பொருளா தாரத்தை ஒரே தடவையில் தர வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது.
கடந்த ஜூலை 11, 2000த்தில், இத்தா காலத்திற்குள் விவாக ரத்து செய்யப்பட்ட பெண்ணிற்கு முழு வாழ்க்கைக்குமான நியாய மான வசதிகளை செய்து கொடு க்க வேண்டும் அல்லது அப் பெண் மறுமணம் செய்யும்வரை அல்லது 1986 பெண்கள் பாது காப்பு சட்டத்தின் கூறுகளுக்கு ஒப்ப இவற்றை செய்து தர வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத் தின் முழு அமர்வு தீர்ப்பளித்தி ருந்தது.
நீதிமன்றங்கள் முஸ்லிம் பெண் கள் சட்டம் 1986ன் பிரிவு 3 (ஏ)விற்கு தவறான அர்த்தங்களும் அவ்வப்போது கொடுத்து இத்தா காலம் முடிந்த பின்பும் பெண் ணுக்கு பராமரிப்புத் தொகை தர வேண்டும் என்று தீர்ப்பளிக்கின் றன.
ஆனால் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3 (ஏ) A Reasonable and Fair Provision and Maintenance to be made and paid to her within the iddat period by her former husband என்கிறது.(நியாயமான முறையில் பொரு ளாதார வசதிகளும் பராமரிப்புத் தொகையும் முன்னாள் கணவரிட மிருந்து இத்தா காலத்திற்குள் பெண்ணுக்கு கொடுக்க வேண் டும்) இந்த அடிப்படையில் நீதிமன் றங்கள் செயல்பட்டாலும் பிரச் சினை இல்லை. ஆனால் இதற்கு தவறான அர்த்தம் தந்து சி.ஆர். பி.சி. 125ஐ அமல்படுத்தி தனியார் சட்டத்தை காலி செய்ய பார்க் கின்றன நீதிமன்றங்கள்.
இஸ்லாம் விவாகரத்தின் போதே போதுமான அளவிற்கு முன்னாள் மனைவியின் வாழ்க் கைக்கு உரிய வசதிகளை அழகிய முறையில் செய்து கொடுக்கச் சொல்லுகிறது. ஆனால் ஜமாஅத் துகள் இதைச் செய்வதில்லை. இத்தா காலம்வரை ஜீவனாம் சம் தர வேண்டும் என்று தவறான தீர்வுகளை தரும் சில ஜமாஅத்து கள், திருமணம் நடக்கும்போதும் அந்தப் பெண்ணுக்குரிய மஹரை முறையாக வாங்கித் தருவதில்லை. கடன் மஹர் என்று சொல்லி விட்டு பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகின்றன.
ஆணாதிக்கத்தனம் வெளிப்படும் இது போன்ற ஜமாஅத்துகளின் செயல்பாடுகள்தான் இஸ்லாமிய பெண்களுக்கு உரிமைகள் மறுக் கப்படுகின்றன என பெண்ணுரி மைவாதிகள் பேசவும், நீதிமன் றங்கள் தனியார் சட்டத்தில் தலையிடவும் காரணிகளாகின் றன. எப்படியிருப்பினும், ராஜீவ் காந்தி அரசு கொண்டு வந்த 1986 சட்டத்தின்படி நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தாலே ஜீவனாம்ச வழக்குகள் இலகுவாக தீர்க்கப்ப டும். ஆனால் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீதிமன்றங்கள் மீறுவ துதான் பிரச்சினையே!
No comments:
Post a Comment