பக்கங்கள் செல்ல

Thursday, November 7, 2019

"பிள்ளைகள், தங்களுடைய தாயின் முன்னாள் கணவர்களின் பண்புகளைப் பெறுகின்றன" -

பெண்ணோடு  உறவு கொள்ளும் ஒவ்வொரு ஆணின் விந்தும், அவள் உடலில் சில அடையாளங்களை விட்டுச் செல்கின்றது என்பததாக உயிரியலாளர்கள் கூறி  வந்தனர். நவீன மரபணு பற்றிய ஆய்வுகள் (1979) இது அறிவியல் ரீதியான எந்தவித ஆதாரமும்  இல்லாத கட்டுக்கதை என்று மறுத்து வந்தது ஆனால் தற்போதைய ஆய்வுகள்(2010 & 2013) முந்தைய நம்பிக்கையை உறுதி செய்யும் வண்ணம் ஒவ்வொரு ஆணின் விந்தும்  மூலக்கூறு மற்றும்
உடலியல் தடங்களை விட்டுச் செல்வதாக நிரூபணமாகிவுள்ளன மேலும் பிள்ளைகள், தங்களுடைய  தாயின் முன்னாள் கணவர்/துணைவர்களின் பண்புகளைப்  பெறுவதாகவும் நிரூபணமாகியுள்ளது.

விவாகரத்து பெற்ற பெண்கள் 3 மாதவிடாய் தவணைகளும், விதவைகள் 4 மாதம் 10 நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் மேலும் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிறக்கும் வரை காத்திருக்கவேண்டும்  என்ற இறைக்கட்டளை  முந்தைய கணவனால்  பெண்ணின் கருவறையில்  ஏற்படும் மாற்றங்களை முற்றிலுமாக நீக்கியப்  பின்பு தான் வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம்.

வரும் காலங்களில் இது தொடர்பான அறிவியல் ஆய்வுகள்  இன்னும் அதிகப்படியான விளக்கங்களை  நிச்சயம் கொடுக்கும் .

அல்லாஹ்வே அறிந்தவன்.


Ref:

1. https://www.telegraph.co.uk/news/science/science-news/11133203/Could-previous-lovers-influence-appearance-of-future-children.html

2. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4282758/

3. https://www.dailymail.co.uk/sciencetech/article-2776723/Children-look-like-mother-s-EX-partner-flies-Previous-sexual-partner-influence-male-s-offspring-study-claims.html

Monday, October 14, 2019

பசுமைப் புரட்சியைப் பறைசாற்றும் 10 நபிமொழிகள்!

1. மரம் நடுதலின் சிறப்பு:

மரம் வளர்ப்பது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? குறிப்பாக முஸ்லிம்கள் ஏன் இதில் அதிகம் ஈடுபடவேண்டும்?
-------------------------------
"ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை.
அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்;
அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்.
அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்;
அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்" (நபிமொழி)

2.

Sunday, September 15, 2019

நபி(சல்) அவர்கள் ஹசன்(ரலி) ஹுசைன்(ரலி) யை துஷ்பிரயோகம் செய்தார்களா??

﷽‎

     
  நபி(சல்) அவர்களின் வாழ்க்கையை விமர்சனம் செய்ய புகுந்த மிசனரிகளும், இஸ்லாமிய எதிர்பாளர்களும் அவர்களது குணத்திற்கு களங்கம் ஏற்படுத்த எடுத்த ஆயுதம் தான் அவர்களது இரத்த உறவுகளுடனேயே கீழான செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற விமர்சனம். முன்சென்ற தொடரில் இவர்களது கீழ்த்தரமான விமர்சனமான தனது பெரிய அன்னையின் பிணத்துடனேயே உறவு கொண்டார்கள் என்ற உளரலுக்கு பதிலளித்தோம். அதே போல இவர்கள் நபி(சல்) அவர்களின் சொந்த பேரன்களான ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி) அவர்களிடம் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், அதன் அடிப்படையில் உறவு முறைகளை துஷ்பிரயோகம் செய்தவர்,ஓரிணச்சேர்க்கையில் ஈடுபடுபவர், சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்தவர் என்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த படாதபாடு படுகின்றனர் மிசனரிகள். ஆனால் இவர்கள் என்றும் போல் தங்களது வாதத்திற்கு அறியப்பட்ட பொய்களை ஆதாரமாக கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நபி(சல்) அவர்கள் தனது பேரன்களின் மறைவுறுப்பை முத்தமிட்டதாக கூறும் பலவீனமான செய்திகளை முன்வைத்து விமர்சனத்தை முன்வைத்துள்ளனர் danielpipes.org போன்ற இணையத்தளங்கள் . ஆக இந்த ஹதீஸ்களை வரிசையாக பதிவிட்டு அதன் நிலை என்ன என்பதை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 

          மேற்குறிபிட்ட கருத்து பட இருக்கும் ஹதீஸ்கள் பின்வரும் கிரந்தங்களில் பின் வரும் அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படுகிறது. இந்த ஹதீஸ்களை ஒவ்வொன்றாக பதிந்து அவற்றை இன் ஷா அல்லாஹ் ஆய்விற்கு உட்படுத்துவோம்.

.எண்
கிதாப்
அறிவிப்பாளர்
1.
தப்ரானி அவர்களின்  
அல் முஹ்ஜம் உல் கபீர்ஹதீஸ் எண்:2658
இப்னு அப்பாஸ்(ரலி)
2.
அல் ஹைதமி அவர்களின் அல் மஜ்ம உல் ஜவாயித்
ஹதீஸ் எண்: 15108
இப்னு அப்பாஸ்(ரலி)
3.
இப்னு அஸாகிர் அவர்களின் தாரிக் திமிஸ்க்-
பாகம் 14: .எண்:224
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
4.
இப்னு அஸாகிர் அவர்களின் தாரிக் திமிஸ்க்-
பாகம் 13: .எண்:222
அனஸ்(ரலி)
5.
இப்னு அபி துன்யா அவரகளின் அல் இயால்-
ஹதீஸ் எண்:211
அபி தப்யான்
6.
பைஹகீ அவர்களின்    சுனன் அல் குப்ரா-
ஹதீஸ் எண்:651
அப்துர் ரஹ்மான் இப்னு அபி லைலா

ஹதீஸ் 1: தப்ரானி அவர்களின் அல் முஹ்ஜம் உல் கபீர் – ஹதீஸ் எண்:2658
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْفَسَوِيُّ، ثنا خَالِدُ بْنُ يَزِيدَ الْعُرَنِيُّ، ثنا جَرِيرٌ، عَنْ قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَّجَ مَا بَيْنَ فَخِذَيِ الْحُسَيْنِ وَقَبَّلَ زَبِيبَتَهُ
இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

         நபி(சல்) அவர்கள் ஹூசைன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிட்டதை நான் கண்டேன்.
ஹதீஸ் 2: அல் ஹைதமி அவர்களின் அல்மஜ்மு அல்ஜவாயித் ஹதீஸ் எண்: 15108

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَرَّجَ مَا بَيْنَ فَخِذَيِ الْحُسَيْنِ، وَقَبَّلَ زَبِيبَتَهُ » رَوَاهُ الطَّبَرَانِيُّ
இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:
             நபி(சல்) அவர்கள் ஹூசைன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிட்டதை நான் கண்டேன். (தப்ரானியின் அறிவிப்பு.)
             மேற்குறிபிட்ட இரண்டு செய்திகளிலும் قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ - காபூஸ் இப்னு அபி தப்யான் என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் குறித்து இப்னு சாஃத் குறிப்பிடும் போது இவர் பலவீனமானவர். இவரது அறிவிப்பு ஏற்கப்படாது.(தபகத் இப்னு சாஃத் பாகம் 6) இப்னு மயின் குறிப்பிடும் போது இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என்று குறிப்பிடுகிறார், அபு ஹாத்தம் அர்ராஸி குறிப்பிடுகையில் பல்வீனமானவர். பலவீனமான ஹதீஸ்களை அறிவிப்பவர். இவரது ஹதீஸ்கள் ஏற்கப்படாது என்று கூறுகிறார். இப்னு ஹிப்பான் குறிப்பிடுகையி இவர் பலவீனமான நினைவாற்றல் உடையவர். இவர் தனது தந்தை வழியாக ஏனையோர் அறிவிக்காதவற்றை அறிவிப்பர் என்று குறிப்பிடுகிறார், நஸயீ குறிப்பிடும் போது இவர் பலவீனமானர் என்று குறிப்பிடுகிறார். (தஹ்தீப் அல் தஹ்தீப் பாகம்: 8) இப்னு அதீ குறிப்பிடுகையில் இவரது ஹதீஸ்கள் மறுக்கப்பட்டவை எங்கிறார்( மீசான் அல் இஃதிதால்: பாகம் 3). இப்னு ஹஜர் குறிப்பிடும் போது இவர் பலவீனமானவர் என்று கூறுகிறார்(தக்ரீப் அல் தஹ்தீப் 449) ஆக மேற்குறிபிட்ட செய்தி பலவீனமானது, ஏற்க முடியாதது.


ஹதீஸ் 3: இப்னு அஸாகிர் அவர்களின் தாரிக் திமிஸ்க்- பாகம் 14: ப.எண்:224
أخبرنا أبو القاسم علي بن إبراهيم، و أبو الحسن علي بن أحمد، قالا: نا و أبو منصور بن زريق، أنا أبو بكر أحمد بن علي الخطيب‏ (3)، أخبرني الأزهري، أنا المعافى بن زكريا، نا محمّد بن مزيد بن أبي الأزهر، نا علي بن مسلم‏ (5) الطوسي، نا سعيد بن عامر، عن قابوس بن أبي ظبيان، عن أبيه، عن جده، عن جابر بن عبد اللّه- قال: و حدّثنا مرة أخرى عن أبيه‏ (6) عن جابر- قال: رأيت رسول اللّه (صلىّهصَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ) و هو يفحج بين فخذي الحسين و يقبل زبيبته و يقول: لعن اللّه قاتلك
ஜாபிர் (ரலி) கூறியதாவது:
              நபி(சல்) அவர்கள் ஹூசைன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிட்டவாறு உன்னை கொல்பவனின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டுமாக என்று கூறியதை நான் கண்டேன்.
             மேற்குறிபிட்ட அறிவிப்பில் இடம்பெறும் محمّد بن مزيد بن أبي الأزهر - முஹம்மத் இப்னு மசீத் இப்னு அல் அஸ்ஹர் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இவர் குறித்து அல் கதீப் அல் பக்தாதீ கூறுகையில் இவர் ஹதீஸ்களில் நம்பத்தன்மையற்றவர். இவர் மிகவும் பலவீனமானவர் இவரிடம் இருந்து அறிவிக்கப்படும் செய்திகள் மறுக்கத்தக்கவை என்று கூறுகிறார். இவர் குறித்து தாரகுத்னி குறிப்பிடுகையில் இவர் பலவீனமானவர் இவரிடம் இருந்து அறிவிக்கப்படும் செய்திகள் மறுக்கத்தக்கவை என்று கூறுகிறார். (லீசான் அல் மீஸான் பாகம் 7). மேலும் அபுல் அபு அல் ஃப்த்ஹி உபைதுல்லாஹ் இப்னு அஹ்மத நஹ்வி அவர்கள் கூறுகையில் அபு குரைபாவிடமும் மற்றவர்களிடமும் கேட்காதவற்றை கேட்டதாக பொய்யுரைப்பவர் என்று கூறுகிறார். நம்பிக்கையானவர்கள் பேரில் இட்டுக்கட்டுபவர் என்று அல் கதீப் கூறுகிறார். தஹபீ குறிப்பிடுகையில் இவர் பொய்யர் என்று குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறுகிறார்.(ஸியார் அஃலம் அல் நுபூலா ) 
         அடுத்ததாக இந்த செய்தியிலும் முன் சென்ற செய்தியில் இடம் பெற்ற قابوس بن أبي ظبيانகாபூஸ் இப்னு அபி தப்யான் என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். ஆக மேற்குறிபிட்ட செய்தி இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்களை கொண்ட இட்டுக்கட்டபட்ட செய்தியாகும்.

            மேலும் இந்த ஹதீஸ் குறித்து இப்னு ஜவ்ஸி தனது மவ்ளூவுல் குறிப்பிடும் போது இது இட்டுக்கட்டபட்ட செய்தி என்று கூறுகிறார். (2/207). தஹபி அவர்களும் இதை இட்டுக்கட்டபட்ட செய்தி என்று மீசான் அல் இஃதிதாலில் குறிப்பிடுகிறார்(4/35). மேலும் கதீப் அல் பக்தாதீ கூறுகையில் இந்த செய்தியும் அறிவிப்பாளர் தொடரும் இட்டுக்கட்டபட்டவை என்று கூறுகிறார்.(தாரிக் அல் பக்தாதீ 4/58). மேலும் இந்த செய்தியை பதிவிட்ட அஸாகிர் அவர்கள் இந்த ஹதீஸ் இடம்பெறும் அடுத்த பக்கத்தில் கதீப் அல் பக்தாதீ அவர்களது விமர்சனத்தை பதிவிட்டு இந்த ஹதீஸை தனது தந்தையிடம் இருந்து அபி திப்யான் அறிவிக்கிறார். ஆனால் இவரது தந்தை யார் என்று அறியப்படாதவர் என்ற விமர்சனத்தையும் முன்வைத்து மேற்குறிபிட்ட ஹதீஸை மறுக்கிறார் அஸாகிர் அவர்கள். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் நிராகரிக்கப்படுகிறது.

ஹதீஸ் 4: இப்னு அஸாகிர் அவர்களின் தாரிக் திமிஸ்க்- பாகம் 13: ப.எண்:222
و أخبرناه عاليا أبو محمّد إسماعيل بن أبي القاسم القارئ، أنا أبو حفص عمر بن أحمد بن مسرور، نا الحاكم أبو أحمد محمّد بن محمّد بن أحمد الحافظ، أنا أبو يوسف محمّد بن سفيان الصّفار- بالمصّيصة-، نا اليمان بن سعيد، نا الحارث بن عطية، عن شعبة، عن الحكم، عن إبراهيم، عن أنس قال: رأيت رسول اللّه(صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ)  يفرّج بين رجلي الحسن و يقبّل ذكره.
அனஸ் (ரலி) கூறியதாவது:
நபி(சல்) அவர்கள் ஹசன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிட்டதை நான் கண்டேன்.
       மேற்குறிபிட்ட ஹதீஸில் இடம் பெறும் أبو يوسف محمّد بن سفيان الصّفار - அபூயூஸூப் முஹம்மத் இப்னு சுஃப்யான் அல் சஃபர் யார் என்று அறியப்படாதவர். அடுத்ததாக அவர் செவியுறும் اليمان بن سعيد - அல் யாமான் இப்னு சயீத் குறித்து தாரகுத்னீ இவர் விடப்பட்டவர் என்று கூறுவதாக தஹபீ தனது முஃனீ, மீசான் ஆகியவற்றில் குறிப்பிடுகிறார். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் ஏற்கத்தக்க செய்தியல்ல. 

ஹதீஸ் 5: இப்னு அபி துன்யா அவரகளின் அல் இயால்- ஹதீஸ் எண்:211
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفَرِّجُ بَيْنَ رِجْلَيِ الْحُسَيْنِ وَيُقَبِّلُ زَبِيبَتَهُ
       காபூஸ் இப்னு அபி தப்யான் தனது தந்தை கூறியதாக கூறினார்கள்:        நபி(சல்) அவர்கள் ஹூசைன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிடுவார்கள்
          இந்த செய்தியிலும் முன் சென்ற செய்தியில் இடம் பெற்ற காபூஸ் இப்னு அபி தப்யான் என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். மேலும் இந்த செய்தியை அறிவிக்கும் அபி திப்யானின் தந்தை சஹாபா அல்ல. ஆக இந்த செய்தி பலவீன்மான நிராகரிக்கத்தக்க செய்தியாகும்.

ஹதீஸ் 6: பைஹகீ அவர்களின் சுனன் அல் குப்ரா- ஹதீஸ் எண்:651

أنبأ أَبُو بَكْرٍ الْقَاضِي، وَأَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرٍو، قَالَا: نا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، ثنا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي ابْنُ أَبِي لَيْلَى، عَنْ عِيسَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: " كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ الْحَسَنُ فَأَقْبَلَ يَتَمَرَّغُ عَلَيْهِ، فَرَفَعَ عَنْ قَمِيصِهِ، وَقَبَّلَ زَبِيبَتَهُ ". [ص:216] فَهَذَا إِسْنَادُهُ غَيْرُ قَوِيٍّ،
அப்துர் ரஹ்மான் இப்னு அபி லைலா அவர்கள் கூறியதாவது:        நாங்கள் நபி(சல்) அவர்களது சபையில் இருக்கும் போது ஹசன்(ரலி) அவர்கள் வந்தார்கள், அவரது சட்டையை தூக்கி அவரது  மறைவுறுப்பை நபி(சல்) அவர்கள் முத்தமிட்டார்கள்.

     இந்த செய்தியை பைஹகீ பதிவிட்டு இதன் அறிவிப்பாளர் தொடர் பலமானது அல்ல என்று கூறுகிறார். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ابْنُ أَبِي لَيْلَى - இப்னு அபி லைலா என்பவர் பலவீனமானவர். நினைவாற்றல் குறைபாடு உடையவர் ஆவார்.இவரை பற்றி நஸ்யீ குறிப்பிடுகையில் பலவீனமானவர் என்று கூறுகிறார். தாரகுத்னி குறிப்பிடுகையில் இவர் நினைவாற்றல் குறையுடையவர் என்று கூறுகிறார்.(மீஸான் அல் இஹ்திதால்)

   இவ்வாறு நபி(சல்) குறித்து கூறப்படும் செய்திகள்யாவும் இட்டுக்கட்டபட்டவை கள் பலவீனமானவை. ஆனால் இத்தகைய அவதூறுகளை பரப்பும் யூத கிறித்தவ மிசனரிகள் ஒன்றை மறந்துவிட்டனர். அதாவது உண்மையில் இந்த பழக்கத்தையுடையவர்கள் யூதர்கள்தாம். ஆம் அவர்கள்தான் விருத்த சேதனம் நிகழத்தும் போது பெரியவரோ சிறியவரோ அவர்களது மறைவுறுப்பில் இருந்து சிந்தும் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் பழக்கமுடையவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இந்த முறையை “metzitzah” என்று அழைப்பார்கள். இந்த பழக்கம் பைபிலின் பழைய ஏற்பாட்டின் காலம் தொட்டே இருந்து வருவதாக கூறப்படுகிறது(1). ஆக பவுலும் கூட இளவயதுடைய தீமோதி என்பவருக்கு விருத்தசேதனம் செய்ததாக ஒரு தகவல் இடம் பெறுகிறது(2). (அப்போஸ்தல் நடபடிகள் 16:3). ஆக பவுலும் அதைதான் செய்திருப்பர் போலும்.......


Sunday, August 11, 2019

இஸ்லாம் கூறும் பலதார மணத்தில் பெண்ணின் உரிமை

ஏக இறைவன் அல்லாஹ்வின்  திருப்பெயரால்

             இந்த பதிவானது பலதார மணம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன என்பதை தெளிவாக இஸ்லாமிய சகோதர்ரகளுக்கும் இஸ்லாமிய எதிர்பாளர்களுக்கும் விளக்கவே. பொதுவாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் பலதார மணம் குறித்து பேசும் போது பெண்ணின் உரிமை பாதிப்பதாகவே வாதிடுவார்கள். மேலும் இதனால் முதல்தாரத்தின் உரிமை பறிக்கப்படுவதாகும் வாதிடுவார்கள். உண்மையில் இஸ்லாமின் பலதார மணம் குறித்த பார்வையை தெளிவு படுத்தினாலே பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எப்படி இஸ்லாம் வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் கடமைகளையும் வழங்கியுள்ளது என்பது தெளிவாக விளங்கும் இன் ஷா அல்லாஹ்.

இஸ்லாம் கூறும் பலதாரமணம்:

وَإِنْ خِفْتُمْ أَلا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلا تَعُولُوا (٣)

   அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.(அல் குர்ஆன் 4:3)
        இந்த வசனம்தான் ஆண்களுக்கு பலதார மணம் செய்யும் உரிமையை தருகிறது. ஆனால் இந்த வசனம் பலதார திருமணத்தை கட்டாயம் ஆக்கவில்லை. மேலும் பெண்களை திருமணம் செய்ததோடு அவர்களை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற கட்டளையும் சேர்த்து சொல்கிறது.

              இஸ்லாத்தின் அடிப்படை சட்டவாக்கம், சில உரிமைகளை வழங்கும் முன்னர் அதன் தொடர்பாக சில கடமைகளையும் விதிக்கும். அந்த அடிப்படையில் பலதாரமண உரிமையும் அத்தகையதே என்பதை இஸ்லாம் குறித்து தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் கற்கும் யாரும் புரிந்து கொள்வார்கள்.

    இது தொடர்பாக இஸ்லாமிய எதிர்பாளர்கள் எடுத்து வைக்கும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது " இதனால் முதல் திருமணம் செய்த பெண்ணின் உரிமை பாதிக்கப்படுகிறது" என்பதேயாகும்.

    ஆம் இதனால் முதல் திருமணம் செய்த பெண்ணின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது. ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும் கணவனோடு பகிர்துகொள்வதையும் இழக்கிறாள். ஆனால் இஸ்லாம் இது குறித்த தெளிவான பார்வை கொண்டுள்ளது. பலதார திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்கள் தொடர்புடையது. 

    இதுதொடர்பாக இரண்டாவதாக மணம் முடிக்க தயராக இருப்பவளும் பெண்தான் என்பதை நாம் சிந்திக்க கடமை பட்டுள்ளோம். வரதட்சனை, விதவை மறுதிருமண மறுப்பு போன்ற சமுக அவலம் காரணமாகவும், ஆண் விகிதாசார சரிவு போன்ற நிலையினாலும் இரண்டாம் தாரமாகவாவது வாழ ஒரு  பெண் தள்ளப்படுகிறாள் என்பது நிதர்சனம். ஆக இத்தகைய சுழலில் பலதாரமணம் அனுமதிக்கப்படாமல் போகும் போது விபச்சாரம்,ஓரினச் சேர்க்கை போன்ற சமுக கேடுகள் தலைதூக்கும், ஆக இதை எதிர் கொள்ள பலதாரமணம் ஒன்றுதான் தீர்வாக அமையும். ஒரு பெண்ணின் உரிமையை காட்டிலும் சமூக நன்மை முன்னிறுத்தப்படுகிறது.

இந்த விஷயங்களை இஸ்லாம் கருத்தில் கொண்டும் பெண்களின் மனநிலையை கருத்தில் கொண்டும் இஸ்லாம் சில நிபந்தனைகளை கூறுகிறது. இது தொடர்பாக இஸ்லாமியர்கள் மத்தியிலும் கூட தவறான புரிதல் உள்ளது என்பது உண்மைதான்.   இஸ்லாம் கூறும் நிபந்தனைகள் இவ்விஷயத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் முதல் மற்றும் மற்ற மனைவியின் உரிமைகள் பாதுக்காக்கப்படும். அதனால்தான் நபி(சல்) அவர்கள் திருமண ஒப்பந்தம் குறித்து கூறுகையில் பின்வருமாரு கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்.இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்: முஸ்லிம் 2772)
   ஆக திருமண நிபந்தனைகளில் பேசப்பட வேண்டிய முக்கியமான சரத்துகளில் இதுவும் ஒன்று. 

மறுதிருமணம் குறித்த நிலைபாடை திருமணத்திற்கு முன்பே இருவரும் முடிவு செய்வது.

        இஸ்லாம் ஒரு ஆண் மறுதிருமணம் செய்வது குறித்த நிபந்தனை பற்றி திருமண ஒப்பந்ததில் முன்பே பேசி தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆண் மற்றும் பெண்ணில் முழு உரிமையும், சமூக நன்மையும் இதனால் காக்கப்படுகிறது. இதை பின் வரும் சம்பவம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

இதற்கான் செயல் வடிவத்தை நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இருந்து பெறலாம்.
அலீ பின் அல்ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:
          நாங்கள் (எங்கள் தந்தை) ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட காலத்தில் யஸீத் பின் முஆவியாவைச் சந்தித்துவிட்டு, மதீனாவுக்கு வந்தோம். அங்கு என்னை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் சந்தித்தார்கள்.
        அப்போது அவர்கள், "என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித்தர ஆயத்தமாயிருக்கிறேன்)" என்று கேட்டார்கள். நான் அவர்களிடம், "அப்படி ஏதுமில்லை" என்று பதிலளித்தேன்.
மிஸ்வர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாளை என்னிடம் கொடுக்கிறீர்களா? ஏனெனில்,அந்த (பனூ உமய்யா) கூட்டத்தார் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடமிருந்து அந்த வாளைப் பறித்துக்கொள்வார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை என்னிடம் கொடுத்தால் என் உயிர் போகும்வரை ஒருபோதும் அது அவர்களிடம் போய்ச் சேராது" என்று கூறினார்கள். (பிறகு பின்வரும் சம்பவத்தை விவரிக்கலானார்கள்:)
     ஃபாத்திமா (ரலி) அவர்கள் (தம் துணைவியாக) இருக்கும்போதே, அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அபூஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காதுக்கு எட்டிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது குறித்து மக்களிடம் தமது இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை நான் செவியுற்றேன். -அப்போது நான் பருவவயதை அடைந்து விட்டிருந்தேன்.-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் மகள்) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தனது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம்முடைய மருமகன் ஒருவரை ("அபுல்ஆஸ் பின் ரபீஆ") பற்றிக் குறிப்பிட்டார்கள்; அவர் (அவருடைய மாமனாரான) தம்முடன் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைப் பாராட்டினார்கள்: அப்போது அவர்கள், "அவர் என்னிடம் பேசினார். (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார்; அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்.
   மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றை தடை செய்யக்கூடியவன் அல்லன்; தடை செய்யப் பட்ட ஒன்றை அனுமதிக்கக்கூடியவனும் அல்லன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதரின் மகளும் இறை விரோதியின் (அபூ ஜஹ்லின்) மகளும் ஒரே இடத்தில் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒருபோதும் ஒன்றுசேர முடியாது" என்று கூறினார்கள். (நூல்: புஹாரி 4841.)
மேலும் ஒரு நபிமொழி பின்வருமாறு கூறுகிறது
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்
                இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, 'ஹிஷாம் இப்னு முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூ ஜஹ்லுடைய) மகளை அலீ இப்னு அபீ தாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்கமாட்டேன். அலீ இப்னு தாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களின் மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை  வேதனைப்படுவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும்'' என்று கூறினார்கள்.
நூல்: புஹாரி 5230
        ஆம் ஃபாத்திமா(ரலி) அவர்களின் திருமணத்தின் போது அலி(ரலி) அவர்கள் வழங்கிய வாக்குறுதியை நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய மற்றொரு மகளின் கணவரை சுட்டிகாட்டி நினைவுகூறுகிறார்கள். திருமணத்திற்கு முன்பே நிபந்தனைகள் பேசப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதிஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன. மேலும் பலதார மணம் புரிய நிபந்தனை அற்ற அனுமதி இருக்குமானால், நபி(சல்) அவர்களிடமோ, அல்லது பாத்திமா(ரலி) அவர்களிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியம் அலி(ரலி) அவர்களுக்கு இல்லை. அவர்களது அனுமதி கோரல் என்பது திருமணம் ஒப்பந்தத்தில் போடப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில்தான் என்பதை புரிய முடிகிறது.

        இந்த கருத்தை நாம் கூறியதும் “தற்கால் அறிஞர்கள் யாரும் இதை கூறவில்லை என்று கூறி இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் தைய தக்கா என குதிக்கலாம். ஆனால் இதே கருத்தில் முன்சென்ற அறிஞர்கள் இருந்துள்ளனர்.

   ஒரு மனிதன் மறுதிருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற நிபந்தனையை ஏற்று இருந்தால் அதை நிறைவேற்றுவது ஆணின் மீது கடமையாகும். அந்த நிபந்தனயை அவர் மீறும் போது அந்த பெண் திருமண ஒப்பதத்தை முறிக்கலாம்.( இப்னு கைய்யிம் ஜாத் அல் மாத்(5/117-118))

      “அப்போது அவர்கள், "அவர் என்னிடம் பேசினார். (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார்; அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்” என்பது அவர் ஜைனப்(ரலி) (நபி(ஸல்) அவர்களின் மகள்) அவர்களை தவிர வேறு பெண் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று அவர் உறுதி மொழி அளித்து இருப்பார். அதையே அலி(ரலி) அவர்களும் செய்திருப்பார். ..(-இப்னு ஹஜரின் ஃபத்ஹுல் பாரி(7/86))

இந்த நிபந்தனையை ஒரு பெண் ஏற்றுகொள்வாளா?

        இது ஒவ்வொரு பெண்ணின் மனநிலை பொறுத்தது. இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டியுள்ளது. அதாவது இரண்டாம் திருமணத்தை ஏற்று கொள்பவளும் பெண்தான். வரலாற்றில் பெண்களின் மனநிலை சர்வாதிகாரி போன்றது அல்ல. அதிக கருணையுடையவர்கள்தான் பெண்கள் என்பது வரலாறு நெடுக காணக்கிடக்கிறது. இன்றைய பெண்ணியவாதிகளில் சிலர் கூறுவது போல் தன் சகோதரியின் தேவை புரியாத கல்லாலான இதயம் படைத்தவர்கள் அல்ல பெண்கள். வரலாறில் ஆண்களின் விகிதத்தில் சரிவு ஏற்படும் காலங்களில் சமுக கேடுகளை தடுக்கும் எண்ணத்தில் பெண்களே முன்வந்து பலதார மணத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள். உதரணமாக ஹம்ப்ரீ என்ற மானுடவியல் வல்லுனர் இது குறித்து ரஸ்யாவில் இஸ்லாமியர் அல்லாத பகுதியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவை கூறுகிறார். அங்கு இருக்கும் படித்த பெண்களும் கிராம்ப்புறங்களில் இருக்கும் பெண்களும் ஆண்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவினால் ஏற்படும் சிக்கலை சரி செய்ய பலதாரமணத்தை அனுமத்திக்க வேண்டும் எங்கின்றனர். என்று ஹம்ப்ரீ ஆச்சரியம் கொள்கிறார்.[1] 

    அரேபியா போன்ற நாடுகளிலும் மேற்குரிய நிலையே காணப்படுகிறது.மேலும் கென்யா போன்ற நாடுகளில் பால்வினை நோயின் பரவலைத் தடுக்க இது ஒரு வழிமுறையாக அங்கிருக்கும் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர். எலிசபெத் ஜோசப் போன்ற பெண்ணியலாளர்களும் பலதார மணத்தால் தங்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைப்பதால் ஆதரிக்கின்றனர். இப்படி பல வகையான சமுக சுழலை எதிர் கொள்ள பெண்கள் இத்தகைய பலதாரமணத்தை ஆதரிக்கின்றனர். இரண்டாம் தாரமாக வரும் பெண்ணை வேசியாக்கும் சில முதல் மனைவியின் காழ்புணர்ச்சிதான் பெண்ணியவாதிகள் சிலரின் எண்ணமாகவும் இருக்கிறது. ஆனால் பெண்களை சமுக சிந்தனையற்ற சுயநலமிகள் என்ற பெண்ணியவாதிகளின் எண்ணத்தை பெண்கள் தவிடு பொடியாக்கியுள்ளனர் வரலாறு நெடுகிலும் என்பதுதான் உண்மை.

இயற்கையில் பலதாரமணம் சரியானதா:
                   மனித பால் ஈருருமை (Sexual dimorphism =XM/XF) குறியீடு 1.15. அதாவது ஆண் மற்றும் பெண்ணின் உடலில் இருக்கும் வேறுபாடு. எடுத்துக்காட்டாக ஒத்த வயதுடைய ஆண் மற்றும் பெண்ணின் உடல் எடை வளர்ச்சி போன்றவற்றின் விகிதாச்சார குறியீட்டு எண். இந்த எண் அதிகரிக்கும் போது அந்த உயிரினத்தின் ஆண் பாலினம் பலதார தன்மை உடையதாய் இருக்கும்(2)(3). மேலும் ஒரு உயிரினத்தில் சந்ததியின் உருவாக்கத்தில் அதிகம் செலவு செய்பவை ஒருதார குணமுடையதாய் இருக்கும் என்று “EVOLUTIONARY PSYCHOLOGY” கூறுகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது ஆண்கள் பலதார மணம் புரிவதற்கு தகுதி உடையவராகதான் இருப்பார்கள்.(4) 

                மேலும் கத்தொலிக்க மதம் இவ்வுலகில் பரவிய பிறகே பலதார மணம் குற்றமாக கருதும் நிலை ஏற்பட்டது. ஆனால் மனித பால் ஈருருமை குறியீடு 1.15 என்பதால் SLIGHTLY POLYGAMOUS என்று அறிவியல் கூறுகிறது. இதை அடிப்படையாக கொண்டு சிந்திக்கும் போது ஆண்களின் பலதார மணத்தை 4 என்ற அளவிற்கு இஸ்லாம் சுருக்கி இருப்பது அர்த்தமுடையதுதான். சொல்லப்போனால் பலதார மணத்தை இயற்கையாளர் அல்லது நாத்திகர்கள்தான் அதிகம் ஆதரிக்க வேண்டும். ஆனால் இங்கு நிலை தலைகீழாக உள்ளது. பலதாரமணத்திற்கு தடை என்றும் குற்றம் என்றும் அறிவித்த பல நாடுகளில் இது கள்ளத்தொடர்புகளாகவும் விபச்சாரமாகவும் நடைபெறுகிறது. இதில் பில் கிளின்டன் போன்ற அதிபர்களும் அடக்கம். 

ஏன் பெண்களுக்கு பலதார அனுமதியில்லை:

               மனித வரலாற்றில் அதற்கான் தேவை என்றுமே இருந்ததில்லை. என்றும் அதற்கான் தேவை வரப்போவதும் இல்லை.மனித பால் ஈருருமை (Sexual dimorphism =XM/XF) குறியீடு அதைத்தான் உணர்த்துகிறது. மேலும் ஆண் மற்றும் பெண்ணின் விந்து மற்றும் கரு உற்பத்தியின் எண்ணிக்கை வேறுபாடு இந்த கருத்தை வலுவூட்டுவதாய் உள்ளது. (கரு உற்பத்தியில் இருந்தே சந்ததி உருவாக்கத்தின் செலவு பெண்ணுக்கு தொடங்குகிறது. சராசரியாக ஒரு பெண் தனது வாழ்நாளில் 30 சந்ததிகளைத்தான் உருவாக்க முடியும். ஆனால் ஒரு ஆண் 3000 மேற்பட்ட சந்த்திகளை ஏற்படுத்த முடியும். வேறுபாடு இதில் இருந்தே ஆரம்பம் ஆகிறது. இதனால்தான் ஆண்கள் வரலாறு நெடுக பலதார மணம் உடையவராய் இருந்துள்ளனர் என்று அறிவிலாளர்கள் விவரிக்கின்றனர்.

Citations:
1.http://www.theguardian.com/education/2009/oct/27/polygamy-study-russia-central-asia
2.http://web.missouri.edu/~flinnm/courses/mah/lectures/sexdim.htm
3.https://www.irishtimes.com/news/science/are-humans-naturally-monogamous-or-polygamous-1.3643373
4.https://en.wikipedia.org/wiki/Parental_investment
5.https://carta.anthropogeny.org/moca/topics/sexual-body-size-dimorphism?fbclid=IwAR1B2ncomsdLQeOhSU-es-EXV3__nwr_nlVElkyuxZUkHB_VuHDsjHHvpCw
6.https://academic.oup.com/beheco/article/14/6/818/269169?fbclid=IwAR3AiBG7iTuZy6cRzxALqQplEk10POIyh7yaGbNm56U60_v1IkYo6ZDNo6s
7.https://www.nature.com/scitable/knowledge/library/mating-systems-in-sexual-animals-83033427/

Thursday, August 8, 2019

தும்மலின் போது இறைவனைப் புகழ்வது ஏன்?





முஸ்லிம்கள்  உலகின் எந்தப்பகுதியிலிருந்தாலும், எந்த மொழி பேசினாலும் தும்மலின்  போது இதைத் தான் கடைபிடிக்கின்றனர்.


தும்மியவர்  "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லாப்புகழும் இறைவனுக்கே) என்று கூறுவார். அதைக் கேட்கும்  மற்றொருவர், "உங்களின் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்" (யர்ஹமுகல்லாஹ்) என்று கூறுவார். இறுதியாக தும்மியவர், "இறைவன் உங்களுக்கு  நேர் வழி 
 காட்டட்டும்" (யஹ்தீக்குமுல்லாஹ்) என்று கூறுவார்.

தும்மியவர் எதற்கு இறைவனைப் புகழவேண்டும்? நவீன் அறிவியல் கூறும் காரணங்கள் இதோ:
  • மனித தும்மிலிருந்து வரும் காற்று மணிக்கு 100 மைல் வேகத்தில் பயணிக்க முடியும்
  • கடுமையான தும்மலால் விலா எலும்பு உடையக்கூடும்
  • தும்மலின் போது மூக்கு மற்றும் வாயை மூடிக்கொண்டு தும்மினால், நுரையீரலிலிருந்து காற்று வெளியாக முடியாமல் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும். மரணம் கூட ஏற்படலாம்.
  • தும்மலின் போது, இருதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகின்றது..அந்த ஒரு நொடியில் இருதயம் நின்று போகலாம்


        எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Ref:
https://health.howstuffworks.com/human-body/parts/16-unusual-facts-about-the-human-body9.htm

https://www.summitmedicalgroup.com/library/adult_health/sma_rib_injury/
https://www.sciencedirect.com/science/article/pii/S1879729611000238
https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/warning-a-sneeze-can-kill-you-if-you-stop-it-1146839-2018-01-16
https://uamshealth.com/healthlibrary2/medicalmyths/heartmyth/




Saturday, August 3, 2019

நபி(சல்) அவர்கள் பிணத்துடன் உறவு கொண்டார்களா????


ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

                            மிசனரிகள் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து நபி(சல்) அவர்கள் மீது பரப்பப்படும் அவதூறுகளில் இதுவும் ஒன்று. அதாவது நபி(சல்) அவர்கள் அலி(ரலி) யின் தாயார் ஃபாத்திமா பின்த் அசத்(ரலி) அவர்கள் மரணித்த போது அவரது பிரேதத்துடன் உறவு கொண்டார்கள் என்பதுதான். ஃபாத்திமா பின்த் அசத்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது பெரிய தந்தையான அபூதாலிப் அவர்களது மனைவியும், நபி(சல்) அவர்களது பெரியன்னையும் ஆவார்கள், மேலும் நபி(சல்) அவர்களது தாயாரான ஆமினா அவர்கள் மரணித்த,  பிறகு நபி(ஸல்) அவர்களை வளர்த்த அன்னை ஆவார்கள். இவர்களது பிரேத்துடந்தான் நபி(சல்) அவர்கள் உறவுகொண்டார்கள் என்ற அவதூறை பரப்பி திரிகின்றனர். அது குறித்து இஸ்லாமிய ஆதாரங்களான ஹதீஸ்களில் என்ன காணப்படுகிறது என்பதை காண்போம். இது குறித்து இரண்டு செய்திகள் காணப்படுகிறது: 


செய்தி 1: 

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ، ثَنَا مُحَمَّدُ بْنُ غَالِبِ بْنِ حَرْبٍ َحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْبُسْتِنْبَانِ بِسُرَّ مَنْ رَأَى، قَالَا: ثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ الْبَجَلِيُّ، ثَنَا سَعْدَانُ بْنُ الْوَلِيدِ، بَيَّاعُ السَّابِرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمَّا مَاتَتْ فَاطِمَةُ أُمُّ عَلِيٍّ خَلَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَهُ وَأَلْبَسَهَا إِيَّاهُ وَاضْطَجَعَ فِي قَبْرِهَا فَلَمَّا سَوَّى عَلَيْهَا التُّرَابَ، قَالَ بَعْضُهُمْ: يَا رَسُولَ اللهِ رَأَيْنَاكَ صَنَعْتَ شَيْئًا لَمْ تَصْنَعْهُ بِأَحَدٍ، قَالَ: «إِنِّي أَلْبَسْتُهَا قَمِيصِي لِتَلْبِسَ مِنْ ثِيَابِ الْجَنَّةِ وَاضْطَجَعْتُ مَعَهَا فِي قَبْرِهَا لِأُخَفِّفَ عَنْهَا مِنْ ضَغْطَةِ الْقَبْرِ، إِنَّهَا كَانَتْ أَحْسَنَ خَلْقِ اللهِ صَنِيعًا إِلَيَّ بَعْدَ أَبِي طَالِبٍ» لَفْظُ سُلَيْمَانَ يُكْنَى أَبَا الْحَسَنِ وَكَنَّاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا تُرَابٍ وَيُكْنَى أَبَا قَضْمٍ  
معرفة الصحابة لأبي نعيم 289

           இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது: அலி(ரலி) யின் தாயார் ஃபாத்திமா அவர்கள் இறந்த போது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு தனது மேலாடையை கழட்டி அனிவித்து, பின்னர் அவரது கப்ரில் படுத்தார்கள். அப்போது சிலர் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே நீங்கள் யாருக்கும் இதுவரை செய்திராத ஒன்றை செய்தீர்களே?? என்று கூறினர். அதற்கு நபி(சல்) அவர்கள் “:அவர், அல்-ஜன்னத்தின் ஆடையை அணியவேண்டும் என்பதற்காக என்னுடைய ஆடையை அவருக்கு அணிவித்தேன்,. மேலும் அவரின் கப்ர் வேதனை குறைக்கப்படும் என்பதற்காக நான் அவரது கப்ரில் அவருடன் படுத்தேன். அபூதாலிப்பிற்கு பிறகு அல்லாஹ்வின் படைப்புகளில் எனக்கு மிக சிறந்தவர் அவரே" என்றார்கள் (கிதாப்: மாஃரிஃபத்தில் சஹாபா 289/271/273)
              மேற்குறிபிட்ட செய்தி மாரிஃபத்துல் சஹாபா என்ற நூலில் இருந்து கன்சுல் உம்மாலின் நூல் ஆசிரியர் பதிந்துள்ளார். மேற்குறிபிட்ட இந்த செய்தியில் இரண்டு பலவீனம் காணப்படுகிறது.

1. سَعْدَانُ بْنُ الْوَلِيدِ என்ற அறிவிப்பாளர் ஹதீஸில் யார் என்று அறியப்படாதவர். இவரை பற்றி அல் ஹாக்கிம் அவர்கள் இவர் ஹதீஸில் மதிப்பில்லாதவர் என்று கூறுகிறார். மேலும் அல் ஹைதமி குறிப்பிடும் போது இவர் அறியப்படாதவர் என்கிறார்.

2.அவரிடமிருந்து செவியுரும் الْحَسَنُ بْنُ بِشْرٍ الْبَجَلِيُّ என்பவர் பலவீனமானவர் என்று நஸயீ குறிப்பிடுகிறார். அப்துர் ரஹ்மான் இப்னு யூஸூஃப் அல் ஹராஸ் இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று கூறுகிறார். நினைவாற்றல் குறைபாடு உடையவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜரால் தரப்படுத்தப்பட்டவர் (அல்தக்ரீப் அல்தஹ்தீப்:158). ஆக மேற்குறிபிட்ட செய்தி பலவீனமானது.

செய்தி 2:
)حديث مرفوع(  حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَمَّادِ بْنِ زُغْبَةَ ، قَالَ : نا رَوْحُ بْنُ صَلاحٍ ، قَالَ : نا سُفْيَانُ الثَّوْرِيُّ ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : لَمَّا مَاتَتْ فَاطِمَةُ بِنْتُ أَسَدِ بْنِ هَاشِمٍ أُمُّ عَلِيٍّ ، دَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَجَلَسَ عِنْدَ رَأْسِهَا ، فَقَالَ : " رَحِمَكِ اللَّهُ يَا أُمِّي ، كُنْتِ أُمِّي بَعْدَ أُمِّي ، تَجُوعِينَ وتُشْبِعِينِي ، وتَعْرَيْنَ وتَكْسُونَنِي ، وتَمْنَعِينَ نَفْسَكِ طَيِّبَ الطَّعَامِ وتُطْعِمِينِي ، تُرِيدِينَ بِذَلِكَ وَجْهَ اللَّهِ وَالدَّارَ الآخِرَةَ " ، ثُمَّ أَمَرَ أَنْ تُغْسَلَ ثَلاثًا وَثَلاثًا ، فَلَمَّا بَلَغَ الْمَاءَ الَّذِي فِيهِ الْكَافُورُ ، سَكَبَهُ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ ، ثُمَّ خَلَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَهُ فَأَلْبَسَهَا إِيَّاهُ ، وكُفِّنَتْ فَوْقَهُ ، ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسَامَةَ بْنَ زَيْدٍ ، وَأَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ ، وَعُمَرَ بْنَ الْخَطَّابِ ، وَغُلامًا أَسْوَدَ يَحْفِرُوا ، فَحَفَرُوا قَبْرَهَا ، فَلَمَّا بَلَغُوا اللَّحْدَ حَفَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ ، وَأَخْرَجَ تُرَابَهُ بِيَدِهِ ، فَلَمَّا فَرَغَ ، دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فاضْطَجَعَ فِيهِ ، وَقَالَ : " اللَّهُ الَّذِي يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لا يَمُوتُ ، اغْفِرْ لأُمِّي فَاطِمَةَ بِنْتِ أَسَدٍ ، ولَقِّنْهَا حُجَّتَهَا ، وَوَسِّعْ عَلَيْهَا مُدْخَلَهَا ، بِحَقِّ نَبِيِّكَ وَالأَنْبِيَاءِ الَّذِينَ مِنْ قَبْلِي ، فَإِنَّكَ أَرْحَمُ الرَّاحِمِينَ " ، ثُمَّ كَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا ، ثُمَّ أدْخَلُوهَا الْقَبْرَ ، هُوَ وَالْعَبَّاسُ ، وَأَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُمْ . لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَاصِمٍ الأَحْوَلِ ، إِلا سُفْيَانُ الثَّوْرِيُّ ، تَفَرَّدَ بِهِ : رَوْحُ بْنُ صَلاحٍ .


           அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்ததாவது: அலி(ரலி)யின் தாயார் ஃபாத்திமா பின்த் அசத் அவர்கள் இறந்த போது நபி(சல்) அவர்கள் அவர்களது தலைக்கருகில் அமர்ந்து” என் அன்னையே! அல்லாஹ் உங்களுக்கு கருணை புரிவானாக. எனது அன்னைக்கு பிறகு உங்களையே எனது அன்னையாக அழைத்தேன். நீங்கள் பசித்திருந்தும் எனக்கு வயிறு நிரம்ப உணவளித்தீர்கள்.. உங்களுக்கு இல்லாதபோதும் எனக்கு நல்ல உணவும் உடையும் கொடுத்தீர்கள். அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவும் மறுமை வெற்றிக்காகவும் தாங்கள் இவற்றை செய்தீர்கள்”,என்று கூறினார்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் அவர்களை மூன்று முறை குளிப்பாட்ட உத்தரவிட்டார்கள். கற்பூரம் கலந்த நீர் கொண்டுவரப்பட்டதும், நபி(சல்) அவர்கள் தனது கைகளில் சிறிதளவு ஊற்றிக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் தனது மேலாடையை கழற்றி அவர்களுக்கு அணிவித்து தனது ஆடையினால் அவர்களுக்கு கஃபனிட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் உசாமா பின் ஜைத்(ரலி), அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி), உமர் இப்னு அல் கத்தாப்(ரலி) மற்றும் ஒரு கருப்புநிற அடிமை ஆகியோரை அழைத்து கப்றினை தோண்ட கட்டளையிட்டார்கள். அவர்கள் கப்றினை தோண்டி( பிரேதம் வைக்கும் பகுதியை அடைந்ததும்) “லஃஹ்த்” என்ற பிரதேம் வைக்கும் பகுதியை நபி(சல்) அவர்கள் தனது கைகளினாலே தோண்டினார்கள். (“லஃஹ்த்” என்பது குழியின் பக்கவாட்டில் அறை போன்று தோண்டுவதாகும்). அனைத்தும் முடிந்ததும் நபி(சல்) அவர்களே அதில் படுத்தார்கள் பிறகு “அல்லாஹ்வே பிறப்பையும் இறப்பையும் கட்டுபடுத்துபவன்.அவனே என்றும் வாழ்பவன். என்றும் மரணிக்காதவன் .(யா அல்லாஹ்) எனது அன்னை ஃபாத்திமா பின்த் அஸத் அவர்களை மன்னிப்பாயாக. கேள்வி கேடகப்படும் போது அவர்களை சரியாக பதிலளிக்கச் செய்வாயாக. உனது தூதரின் பொருட்டும், முன் சென்ற தூதர்களின் பொருட்டும் அவர்களது கப்றை விரிவுபடுத்துவாயாக. நிச்சயமாக நீ அளவில்லா கருணையாளன்” என்றார்கள்.மீண்டும் “அல்லாஹ் மிகப்பெரியவன்” என்று நான்கு முறை கூறினார்கள். பிறகு நபி(சல்) அவர்கள், அப்பாஸ்(ரலி) மற்றும் அபுபக்கர் (ரலி) ஆகியோர் அவர்களை(ஃபாத்திமா பின்த் அசத்) கபறினில் இறக்கினார்கள்.
(நூல்: தப்ரானி அல் அவ்ஸத் பக்கம் 67 ஹதீஸ் எண்:189)
     மேற்குறிபிட்ட ஹதீஸை காணும் போது முதல் செய்தியை விட விளக்கமானதாக தோன்றினாலும் இந்த ஹதீஸும் பலவீனமானதுதான். ஹதீஸின அறிவிப்பாளர் தொடரில் ரவ்ஹ் இப்னு ஸலாஹ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களில் தவறிழைகக்கூடியவர் என்று ஹைதமீ குறிப்பிடுகிறார் (மஜ்ம உல் ஜாவாயித்). இவரது ஹதீஸ்கள் மறுக்கப்பட வேண்டியவை என்று இப்னு அதீ அவர்கள் கூறுகிறார்கள் (அல் காமில் இப்னு அதீ) தாரக்குத்தினீ இவர் பலவீனமானவர் என்று குறிப்பிடுகிறார்கள் (லீசான் அல் மீசான்).


      கிறித்தவ மிசனரிகள் மேற்குறிபிட்ட இரண்டு செய்திகளையும் சுட்டிகாட்டி நபி(ஸல்) அவர்கள் பிணத்துடன் உறவு கொண்டதாக கூறுகின்றன. ஆனால் அவை இரண்டும் பலவீனமான செய்திகள். இவை பலவீனமான செய்திகள் என்பதை ஒருபுறம் ஒதுக்கிவைத்து விட்டாலும். இந்த ஹதீஸின் கருத்தை மிக மோசமாக தங்களது இச்சைக்கு ஏற்றவாரு திரித்தும் உள்ளனர். முதலில் இவர்களுக்கு இஸ்லாமியர்கள் குறிப்பாக அரபியர்களின் கப்றுகள் குறித்த அறிவு சிறிதும் இல்லை. லஃஹ்த் இருக்கும் கப்ருகள் எப்படி இருக்கும் என்பதை கண்டாலே இவர்களது கருத்து எவ்வளவு அரைவேக்காட்டுத்தனமானது என்பது விளங்கும்


  
          மேற்குறிபிட்ட வகையிலான கப்ருகள்தாம் நபி(சல்) அவர்களது காலத்தில் பயன்பாட்டில் இருந்தன என ஹதீஸ்கள் கூறுகின்றன. நபி(சல்) அவர்களுக்கே இந்தவகை கபர்தான் பயன்படுத்தப்பட்டது. 

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الْمِسْوَرِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ، مُحَمَّدِ بْنِ سَعْدٍ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، قَالَ فِي مَرَضِهِ الَّذِي هَلَكَ فِيهِ الْحَدُوا لِي لَحْدًا وَانْصِبُوا عَلَىَّ اللَّبِنَ نَصْبًا كَمَا صُنِعَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
முஸ்லீம் 1761. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயில் இருந்தபோது, "(நான் இறந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகச் செய்யப்பட்டதைப் போன்று, (குழியினுள்) எனக்காக உட்குழியொன்றை வெட்டுங்கள்; என்மீது நன்கு செங்கற்களை அடுக்கிவையுங்கள்!" என்று சொன்னார்கள்.
                இன்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் இத்தகைய கப்றுகள் பயன்பாட்டில் உள்ளது. ஆக இந்த கபரில் படுத்து உறவு கொண்டார்கள் என்பது எவ்வளவு முட்டாளதனமானது.
                          
                  அது போக இந்த ஹதீஸில் இடம் பெறும் வார்த்தையான் اضْطَجَعَ -  என்ற சொல் உடலுறவை குறிப்பதாக டெமிட்ரிகஸ் கூறுவதாக கதை வேறு.அந்த கிரேக்க அரேபிய அறிஞரின் பெயர் கூட தெரியாத கூமுட்டைகள்தான் அவரது குறிப்பை முன்னிறுத்துகின்றன. அவரது பெயர் டெமிட்ரி கூடஸ் என்பதாகும். அமெரிக்காவின் யேல் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர். அவர் கிரேக்க அரபியே மொழியின் நமது சமகால அறிஞர். இவரது எந்த குறிப்பில் இருந்து இதை எடுத்தார்கள் எனபதை பாதிரி ஜக்கரியா எதிலும் குறிப்பிடவில்லை என்பது குறிபிடத்தக்கது.  ஆக اضْطَجَعَ என்பதின் பொருளை நாம் லேன்ஸ் லெக்ஸிகனில் பார்த்தோம் என்றால் பின் வருமாறு இடம் பெறுகிறது. 
      ஆக اضْطَجَعَ எனபதற்கு ஒருபக்கமாக சாய்ந்து படுப்பது என்பதுதான் பொருளாகும். மேலும் இந்த வார்த்தை இடம்பெறும் சில ஹதீஸ்களை கண்டோம் என்றால் ஒருபக்கமாக சாய்ந்து படுப்பதுதான் பொருள் என்பதை விளங்க முடியும். 
حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى ‏{‏سُنَّةَ الْفَجْرِ‏}‏ فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي وَإِلاَّ اضْطَجَعَ حَتَّى يُؤْذَنَ بِالصَّلاَةِ‏.‏

1160. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 19. தஹஜ்ஜுத்
          லஹ்த் வகை கப்ருகளில் ஒருபக்கமாய் அதாவது கிப்லா திசையை நோக்கி சாய்த்துதான் பிரேத்தை கிடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதை படத்தில் சுட்டிகாட்டியுள்ளோம்.

மேலும் மேற்கண்ட ஹதீஸிக்கு ஜகாரியா என்பவர் கூறுவதாவது: 

" முஹம்மது நபியவர்கள் அவருடன் படுத்ததால் அவள் அவனுக்கு மனைவியாகி விட்டாள். அதனால் அவள் மூமின்களுக்கு தாய் எனும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விட்டார் என்று குறிப்பிடுகிறார். "
நமது பதில்:

1.முதலாவது இது ஒரு பொருந்தாத வாதம் ஆகும். ஏனெனில் திருமணம் என்பதற்கு இரு தரப்பு உடன்படிக்கையையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதனால் இறந்து போன ஒருவர் உடன் படுப்பதன் மூலம் மனைவி என்ற அந்தஸ்தை ஒருவருக்கு கொடுத்து விட முடியாது.

2.இரண்டாவது இஸ்லாத்தில் ஒருவருக்கு திருமணம் செய்ய முடியாத உறவு முறைகள் என்று சில உறவு முறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளது. அத்தகையை உறவுமுறைகளில் அம்மா சித்தி பெரியம்மா அத்தை போன்ற உறவு முறைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இஸ்லாம் தடுத்திருக்கும் ஒரு உறவுடன் திருமணத்தை முஹம்மது நபியவர்கள் செய்தார் என்பது பொய்யானது.

3.மூன்றாவது நபியின் மனைவி என்ற சிறப்பு அந்தஸ்தை காட்டிலும் நபியின் வளர்ப்பு தாய் என்ற மிக உயர்ந்த அந்தஸ்தை அவர் பெற்றிருந்தார். அதனால் பாத்திமா அவர்கள் சிறப்பு அந்தஸ்தை பெற வேண்டும் என்பதற்காக முஹம்மது நபியவர்கள் அவரை திருமணம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இதன் மூலம் சக்கரியாவின் வாதம் இங்கு உடைந்துவிடுகிறது.




             ஆக இவர்களின் இந்த குற்றச்சாட்டு அரைவேக்காட்டு தனத்தினாலும் காழ்புணர்ச்சியாலும் தோன்றியது என்பது தெள்ளத்தெளிவாக நிருபனமாகிறது