பக்கங்கள் செல்ல

Sunday, July 17, 2016

எதிர்தொடர் 19: உடைந்த சிலுவை-பாகம் 1-அறிமுகம்


ஏக இறைவனின் திருப்பெயரால்......

      இந்த தொடரில் கட்டுரையாளர் கிறித்தவ நம்பிக்கை உருவாக யார் காரணம் என்றொரு தலைப்பிட்டு சில கருத்துகளை answeringIslam.com என்ற கிறித்தவர்களால் நடத்தப்படும்  இணையத்தின் கட்டுரையை மொழிபெயர்த்துள்ளார்[refer:Source] இதற்கு முன்பும் பல கட்டுரைகள் கிறித்தவ மிசனரிகளின் வாந்திதான் என்பதை நிறுவியுள்ளோம். ஆனால் இம்முறை ஒரு சிறிய மாற்றம் கட்டுரையாளரே அதை ஏற்றுகொண்டது. ஆக இந்த கட்டுரையில் பதியப்பட்ட கேள்விகள் அனைத்தும் கிறித்தவ நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான். அதுவும் குறிப்பட்ட கிறித்தவ பிரிவினரின் நம்பிக்கைகை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த தலைப்பிற்கு பதிலான அல்லாவின் நாட்டத்தால்தான் கிறித்தவ நம்பிக்கை உருவானதுஎன்பதே கட்டுரையாளரின் ஒவ்வொரு கேள்விக்கும் போதுமான பதிலாகும். ஆனால் இந்த தொடரானது கிறித்தவம் குறித்த மற்றோரு பரிமாணத்தை விளக்க எனக்கொரு சிறந்த சந்தர்ப்பமாக கருதுகிறேன். இன்ஷா அல்லாஹ் இந்த தொடர் பல பாகங்களாக வர உள்ளதால் ஒவ்வொரு தொடரையும் வாசகர்கள் கவனித்து வாசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இஸ்லாம் vs  கிறித்தவம்:
*அல்லாஹ் ஒருவனே இறைவன். அவனையன்றி வணக்கத்திற்குரியது ஏதும் இல்லை எனும் ஏகத்துவத்தை இஸ்லாம் முன்வைக்கிறது.
*அல்லாஹ்விற்கு இணை, துணை மற்றும் பிள்ளை கிடையாது
*அல்லாஹ் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல நபிமார்களை உலகில் உள்ள ஒவ்வோரு சமுதாயத்திற்கும் அனுப்பியுள்ளான்.
*ஒவ்வொரு நபிக்கும் வேதத்தை வழங்கியுள்ளான்.
*முன்சென்ற இயேசுவிற்கு வழங்கப்பட்ட இன்ஜில் உட்பட அனைத்து வேதங்களும் முன்சென்றவர்களால் மாற்றப்பட்டது. இறுதி வேதமான அல்குர்ஆன் மட்டுமே கல்வியாளர்களின் உள்ளங்களின் வழியாக ஓசைவடிவமாக பாதுக்காக்கப்பட்டுள்ளது. அது இறுதிநாள் வரை தொடரும்.
*இறுதி தூதராக முஹம்மத்(ஸல்) அவர்கள் நம்பப்படுகிறார். அவருக்கு பிறகு எந்த நபியும் கிடையாது.
*ஏசு சிலுவையில் மரணிக்க வில்லை. அவருக்கு வேறு ஒருவர் நிகராக்கப்பட்டார். ஏசு முழுவடிவத்துடன் மேலே உயர்த்தப்பட்டார்.
*ஏசுவின் சீடர்கள் அவருக்கும் எந்த துரோகமும் இழைக்கவில்லை.
மேலே குறிபிட்ட சில இஸ்லாத்தை கிறித்தவத்தில் இருந்து பெரிதும் பிரித்துகாட்டுகிறது.

*இஸ்லாத்திற்கு எதிர்மாறாக கிறித்துவம் பிதா, சுதன் பரிசுத்த ஆவி எனும் திரித்துவத்தை முன்வைக்கிறது.
*ஏசு கர்த்தரின் குழந்தையாக காட்டப்படுகிறார்.
*ஏசு திரித்துவத்தில் ஒரு கடவுளாக கருதப்படுகிறார். ஏசுவும் வேண்டுதல் உட்பட வணக்கத்திற்கு உரியவர்.
*ஏசுவிற்கு பிறகு எந்த தீர்கதரசியும் கிடையாது.
*ஏசுவிற்கு வழங்கப்பட்டது தூய்மையான வடிவில் இன்றும் பைபிலின் புதிய ஏற்பாடு என்ற பெயரில் எந்த மாற்றங்களும் இன்றி பாதுகாக்கப்பட்டுள்ளது உள்ளது.
*ஏசுவின் சீடரான யூதாஸ் இஸ்காரியட்தான் ஏசுவை காட்டி கொடுத்தார்.
*ஏசு உலக மக்களுக்காக அவர்களின் பிறவி பாவத்தை கழுவ சிலுவையில் மரித்தார். மூன்று நாட்களுக்கு பிறகு உயிர்தெழுந்தார். பிறகு விண்ணேற்றம் அடைந்தார்.
இவைதான் இரண்டு இறையியல் கோட்பாடுகளையும் பிரிக்கக்கூடியதாய் உள்ளது.
இந்நிலையில் பல கிறித்தவ வலைதளங்கள் இஸ்லாத்தை தாக்கி பல கட்டுரைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. அத்தகைய குற்றச்சாட்டுகளைத்தான் நமது கட்டிரையாளர் பலதொடர்களாக ஒரு நாத்திகனாக வேடம் தரித்து வரைந்துள்ளார். அவற்றிற்கு சென்ற தொடர்களில் பதிலளித்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் இனியும் தொடரும். இந்த முறை கட்டுரையாளர் கிறித்தவ நம்பிக்கையின் ஊடாகவே இஸ்லாம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதால் நாம் கிறித்தவ நம்பிக்கையின் மூலகங்களைத்தான் இனிவரும் தொடர்களில் தட்டி பார்க்கவுள்ளோம், இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.



No comments:

Post a Comment