ஏக இறைவனின் திருப்பெயரால்
நாம் கிறித்தவ நம்பிக்கைக்கு யார் காரணம் என்ற தலைபிட்ட கட்டுரைக்கு மறுப்பாக இந்த எதிர்தொடர் கட்டுரையை தொடராக தந்து கொண்டிருக்கிறோம்.[refer:Source] சென்ற தொடர்களில் பழைய ஏற்பாடு குறித்து பதிவு செய்தோம். இந்த தொடரில் புதிய ஏற்பாடு குறித்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ். நாம் சென்ற பழைய ஏற்பாடு குறித்த ஆய்வு தொடரில் கையாண்ட அதே முறையையே இந்த தொடருக்கும் பயன்படுத்த வுள்ளோம். அதாவது புதிய ஏற்பாடின் மூலங்களின் ஆசிரியர் குறித்து ஆய்வு செய்ய வெளிப்புற ஆதாரங்கள் மற்றும் உள் ஆதாரங்களை ஒப்பீடாக வழங்க உள்ளோம். இன்ஷா அல்லாஹ்.
இன்று கிறித்தவர்கள் கைகளில் இருக்கும் புதிய ஏற்பாடானது ஏற்று கொள்ளப்பட்ட 27 ஆகமங்களை கொண்டுள்ளது. ஏசுவின் மொழி அரமாயிக்காக இருந்தாலும் புதிய ஏற்பாடின் மூல ஏடுகள் யாவும் கிரேக்க ஏடுகள்தான். அவற்றில் மிக பழமையான சில சுருள்கள் கிழே தரப்பட்டுள்ளது. மேலும் புதிய ஏற்பாட்டின் ஆகமங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக பாப்பிரேய சுருள்களில் காணப்பட்டாலும் புதிய ஏற்பாடு வடிவம் பெற தொடங்கிய காலம் மூன்றாம் நூற்றாண்டின் மத்திய பகுதிதான். மேலும் ஏசுவின் மூல மொழியான அரமேய சுருள்கள் இன்றளவும் நமக்கு கிடைக்கப்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்த மூல ஏடுகளில் சிலவற்றை காண்போம்.
ஜான் ரேலண்ட் பாப்பிரஸ்
|
ஜான் ரேலண்ட் பாப்பிரஸ்
இது மிக பழமையான புதிய ஏற்பாட்டின்
துண்டுகளாகும். இது கிபி 117-138 காலத்தை சேர்ந்தது. இது யோவான் 18:31 -33,37-38
ஆகிய வசன்ங்க்ளை கொண்டுள்ளது. இது கிரேக்க மொழியில் அமைந்த சுருள்களாகும்.
|
ஜெஸ்டர் பீட்டி பாப்பிரஸ்
|
ஜெஸ்டர் பீட்டி பாப்பிரஸ்
இது
கிபி 250 காலத்தை சேர்ந்த பாப்பிரஸ் ஆகும். இந்த காலகட்டத்தை சேர்ந்த பாப்பிரேய
பகுதிகளில் ரோமர் 5:17-6:3, 5-14;8:15-25,27-35;16:1-23,25-27; எபிரேயர்;
1&2 கொரிந்தியர்; எபேசியர்; கலாத்தியர்;பிலிப்பியர்; கொலோசெயர்; 1தெசலோனியர்
1:1,9-10;2:1-3; 5:5-9,23-28 ஆகிய ஆகமங்களை கொண்டுள்ளது. இது கிரேக்க மொழியில் அமைந்த சுருள்களாகும்.
|
ஆக்ஸிரின்கஸ் பாப்பிரஸ்
|
ஆக்ஸிரின்கஸ் பாப்பிரஸ்
இது 1 முதல் 6ம் நூற்றாண்டுவரை உள்ள
பாப்பிரேய ஏடுகளின் தொகுப்பாகும். இதில் குறிபிட்ட 3ம் நூற்றாண்டுகள் வரை உள்ள
ஏடுகள் புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியை கொண்டுள்ளது. அதுவல்லாமல் 2 முதல் 3 நூற்றாண்டுகளை
சேர்ந்த கினாஸ்டிக் பைபில்களின் பல பகுதிகளும் இதில் உள்ளது. (கினாஸ்டிக்கள்
குறித்தும் ஏனைய பிரிவுகள் குறித்தும் அவர்களது கொள்கைகள் குறித்தும் பல
பகுதிகள் வரும் தொடர்களில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்) இது கிரேக்க மொழியில் அமைந்த சுருள்களாகும்
|
போட்மர் பாப்பிரஸ்
|
போட்மர் பாப்பிரஸ்
இது 2-3ம் நூற்றாண்டை சேர்ந்த பல
ஏடுகளை கொண்டுள்ளது. யோவான், லூக்கா, 1&2 பேதுரு, போன்றவற்றின் மிக பழைய (கிபி
175-250 வரை) ஏடுகளை கொண்டுள்ளது. லூக்காவின் பகுதிகள் வாடிகானஸ் சுருள்களுடன் ஒத்ததாக
இருப்பது குறிப்பிட தக்கது. இது கிரேக்க மொழியில் அமைந்த சுருள்களாகும்
|
சினாய்டிகஸ் சுருள்கள்
|
சினாய்டிகஸ் சுருள்கள்
நான்காம் நூற்றாண்டின் மத்திய காலத்தை
சேர்ந்த சுருள்கள். இது கிரேக்க மொழியில் அமைந்த சுருள்கள்தாம். ஆனால் பைபிலின்
வடிவம் பெறத்தொடங்கியதை பறைசாட்டுவதாக ஒரே புத்தகமாக பல ஆகமங்களை உடையதாய்
இருந்தாலும் பல பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டின் வசனங்கள் இல்லை.
|
இவை அல்லாது பண்டைய சுருள்களும் இருக்கின்றன. மேற்கூறியவற்றில் ஜான் ரேலண்ட் பாப்பிரஸ் தான இன்று நம் கைகளில் இருக்கும் சுருளகளில் மிகப்பழையது. ஆனால் அது புதிய ஏற்பாட்டின் சிறு பகுதியை மட்டுமே கொண்டுள்ளது. இது வல்லாத நாக் ஹமீதி பாப்பிரேய சுருள்கள் போன்றவையும் இன்று கைகளில் இருந்த போதும் அவற்றை கினாஸ்டிக் ஏடுகள் என்று இன்றைய கிறித்தவ உலகம் தூக்கி எறிந்து விட்டது.
நாம் மேலே குறிப்பிட்ட பாப்பிரஸ் சுருள்களை ஆய்வு செய்தால ஒன்று தெளிவாக புலப்படுகிறது.
1. இந்த சுருள்கள் எதுவும் ஏசுவின் காலத்தையோ அல்லது ஏசுவை கண்டவர்களின் காலத்தையோ சேர்ந்தது இல்லை.
2. ஏசுவை அறியாதவர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
3. ஏசுவின் சமகாலத்தவர்களால் சரிபார்க்கப்பாடாதது.
மேற்குறிபிட்ட இந்த மூன்று முடிவுகளும் ஏசுவிற்கு வேதம் வழங்கப்பட்டதா ? அதன் நிலை என்ன? என்ற கேள்வியை நம்மிடம் எழுப்புகின்றன. ஏசுவிற்கு நிச்சயமாக வேதம் வழங்கப்பட்டதாகவும் அவற்றை அவர் பிரசங்கித்ததாகவும் புதிய ஏற்பாடு பல இடங்களில் கூறுகிறது.
யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து; காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். (மாற்கு 1:14,15).
ஆனால் மேலே குறிபிட்ட வசனத்தின் அடிப்படையில் புதிய ஏற்பாட்டை அணுகினால் அதில் இருக்கும் செய்திகள் இறை கட்டளைகளை விளக்கும் ஒரு வேதமாக இல்லை. அது ஏசுவின் வாழ்க்கையை கூறும் மூன்றாம் நபரின் சித்தரிப்பாகத்தான் உள்ளது. அந்த மூன்றாம் நபர்கள் உன்மையில் ஏசுவை கண்டவர்களா? அவர்கள் ஏசுவின் நேரடி சாட்சிகளா? இவை குறித்து வரும் தொடர்களில் இன்ஷா அல்லாஹ் காணலாம்.....
எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண
எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண