பக்கங்கள் செல்ல

Friday, October 8, 2021

அல் குர்ஆனில் எழுத்தர் பிழைகளா?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
குர்ஆனில் பிழைகள் - எழுத்தர்


       நாம் சென்ற தொடரில் நபித்தோழர்கள் எப்படி அல்குர்ஆனின் ஆயத்துக்களுடன் அதன் பொருளாக்கத்தையும் இணைத்து ஓதுவார்கள் என்பதை இஸ்லாமோஃபோபுகளின் விளங்காத விமர்சனத்தின் வாயிலாகவே விளக்கி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த தொடரில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது அறிவிப்பு ஒன்றை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் இந்த செய்தி எப்படி முன் சென்ற தொடரிற்கு மேலதிக விளக்கமாகவும் சான்றாகவும் உள்ளது என்பதை காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். முதலில் அவர்கள் முன்வைக்கும் ஆதாரத்தையும் அதில் இருந்து அவர்கள் வைக்கும் விமர்சனத்தையும் காண்போம்.

حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَافِظُ، أَنْبَأَ عَبْدَانُ الْأَهْوَازِيُّ، ثنا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، ثنا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، ثنا سُفْيَانُ، عَنْ شُعْبَةَ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي قَوْلِهِ تَعَالَى: {لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا} [النور: 27] قَالَ: «أَخْطَأَ الْكَاتِبُ حَتَّى تَسْتَأْذِنُوا»
      இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்: லா தத்ஹுலு புயூதன் ஃகைர புயூதிக்கும் ஹத்தா தஸ்தஃனிஸூ என்ற வசனத்தில் (ஹத்தா தஸ்தஃனிஸூ) இது எழுத்தர் பிழையாகும். ஹத்தா தஸ்தஃதனூ (என்பதுதான் சரியானதாகும்) என்று கூறினார்கள்.(அறிவிப்பாளர்: முஜாஹித்(ரஹ்), நூல்:  முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் 3496
மேலும் மேற்குறிபிட்ட ஹதீஸை போன்று சயீத் இப்னு ஜுபைர் அவர்களும் அறிவிக்கிறார்கள். இது போன்று பல அறிவிப்புக்கள் தஃப்ஸீர் கிரந்தங்களில் இடம் பெறுகிறது.

மேற்குறிபிட்ட ஹதீஸை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் 
 இன்றைய குர்ஆனில் அந்நூர் அத்தியாத்தின் 27 ம் வசனம் " லா தத்ஹுலு புயூதன் ஃகைர புயூதிக்கும் ஹத்தா தஸ்தஃனிஸூ" என்று இடம்பெறுவதாலும், அதனை எழுத்தர் பிழை என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களே கூறுவதாலும் அல் குர்ஆனில் எழுத்தர் பிழைகள் இருக்கிறது ஆகவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை " 

 என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். 

        ஆனால் மேற்குறிபிட்ட இவர்களது இந்த வாதம் நபித்தொழர்கள் வேதத்தை மட்டுமே கற்றனர், கற்பித்தனர் என்ற அறியாமையினாலும், நபித்தோழர்கள் குர்ஆன் வசனத்தின் பொருளாக்கத்தையும் சில நேரம் இணைத்து ஓதக்கூடியவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறியாததாலும் ஏற்பட்டதாகும். முன்சென்ற தொடரில் இது குறித்து நாம் விளக்கியிருந்தோம். மீண்டும் இது குறித்த இந்த விஷயத்தில் நிபுனத்துவம் பெற்ற இரு அறிஞர்களின் கருத்தை நினைவூட்டுகிறொம்.

அபூ பகர் அல் பாக்கீலானி (ஹிஜ்ரி 340 - 403) அவர்களது கருத்து:
ﻭﻛﺎﻥ ﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﻘﺮﺃ اﻝﺗﺄﻭﻳﻞ ﻣﻊ اﻝﺗﻨﺰﻳﻞ ﻧﺤﻮ ﻗﻮﻟﻪ: ﻭاﻟﺼﻼﺓ اﻟﻮﺳﻄﻰ، (ﻭﻫﻲ ﺻﻼﺓ اﻟﻌﺼﺮ) .
         அவர்களில் ( சஹாபாக்களில்) சிலர் பொருளாக்கத்தையும் இறக்கப்பட்ட வசனங்களுடன் ஓதுபவர்களாக இருந்துள்ளனர் . உதாரணமாக நடுத்தொழுகை (அதுதான் அஸர் தொழுகை). (அபூபக்ர் அல் பாக்கீலானி அவர்களது அல் இன்திஸார் லில் குர்ஆன் 1/351)

இப்னு அல் ஜஸரீ (ஹிஜ்ரி 751- 833) அவர்களது கருத்து

نَعَمْ كَانُوا رُبَّمَا يُدْخِلُونَ التَّفْسِيرَ فِي الْقِرَاءَةِ إِيضَاحًا وَبَيَانًا لِأَنَّهُمْ مُحَقِّقُونَ لِمَا تَلَقَّوْهُ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قُرْآنًا فَهُمْ آمِنُونَ مِنَ الِالْتِبَاسِ وَرُبَّمَا كَانَ بَعْضُهُمْ يَكْتُبُهُ مَعَهُ

  சிலநேரங்களில் அவர்கள் (நபித்தோழர்கள்) கிராஆத்தில் தஃப்ஸீரையும் இணைத்தது விளக்கத்திற்காவும் தெளிவுபடுத்துவதற்காகவும் தான். ஏனென்றால் அவர்கள் நபி(சல்) அவர்களிடம் இருந்து நேரடியாக கற்ற குர்ஆனில் வல்லவர்களாய் இருந்தனர். அதனால் அவர்களுக்கு இடையே குழப்பம் ஏற்படாமல் பாதுக்காக்கப்பட்டனர். மேலும் சிலநேரங்களில் அவர்களில் சிலர் அவற்றை (தஃப்ஸீரை) அதனுடன் (குர்ஆனுடன்) எழுதவும் செய்தனர். (இப்னு ஜஸரீ அவர்களது நஸர் பீ கிராத் அல் அஸர் 1/32)
      இவர்கள் குறிப்பிடும் இப்னு அப்பாஸ் அவர்களது அறிவிப்பானது பொதுவான வார்த்தைகளிலேயே இடம் பெறுகிறது. அதாவது أَخْطَأَ الْكَاتِبُ - என்பதின் பொருள் எழுத்தர் பிழை என்பதாகும். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் எதன் எழுத்தர் குறித்து பேசுகிறார் என்பதற்கு எந்த குறிப்பும் இல்லை. இப்னு அப்பாஸ்(ரலி) போன்ற நபிதோழர்கள் பொருளாக்கத்தை (தாவில்) குர்ஆன் வசனங்களுடன் ஓதக்கூடியவர்களாகவும், அத்தகைய தாவில் கிதாப்களை எழுத்தாக்கம் செய்ய பணிப்பவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்து பின்வரும் செய்திகள் தெளிவாக உணர்த்துகின்றன.

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﻴﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ: ﻭﺣﺪﺛﻨﻲ ﺃﺑﻲ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ اﻟﻬﺬﻳﻞ ﻋﻦ اﻟﻤﺴﻴﺐ ﻋﻦ اﻷﻋﻤﺶ ﻋﻦ اﺑﻦ ﺟﺒﻴﺮ ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ- ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ- ﻗﺎﻝ: ﺗﻌﻠﻤﻮا اﻟﺘﺄﻭﻳﻞ ﻗﺒﻞ ﺃﻥ ﻳﺠﻲء ﺃﻗﻮاﻡ ﻳﺘﺄﻭﻟﻮﻧﻪ ﻋﻠﻰ ﻏﻴﺮ ﺗﺄﻭﻳﻠﻪ

   இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது: தவறான பொருளின் அடிப்படையில் (குர்ஆனை)விளக்கும் மக்கள் வருவதற்கு முன் பொருளாக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள். (தஃப்ஸீர் முகாத்தில் இப்னு சுலைமான் 1/26)

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻛﺮﻳﺐ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻃﻠﻖ ﺑﻦ ﻏﻨﺎﻡ، ﻋﻦ ﻋﺜﻤﺎﻥ اﻟﻤﻜﻲ، ﻋﻦ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﻠﻴﻜﺔ ﻗﺎﻝ: ﺭﺃﻳﺖ ﻣﺠﺎﻫﺪا ﻳﺴﺄﻝ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻋﻦ ﺗﻔﺴﻴﺮ اﻟﻘﺮﺁﻥ، ﻭﻣﻌﻪ ﺃﻟﻮاﺣﻪ، ﻓﻴﻘﻮﻝ ﻟﻪ اﺑﻦ ﻋﺒﺎﺱ: "اﻛﺘﺐ"، ﻗﺎﻝ: ﺣﺘﻰ ﺳﺄﻟﻪ ﻋﻦ اﻟﺘﻔﺴﻴﺮ ﻛﻠﻪ

          இப்னு அபீ மாலிக்கா கூறியதாவது:" முஜாஹித் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் குர்ஆனின் விளக்கம் குறித்து கேட்பார்கள். அவர்களிடம் அவரது குறிப்பேடுகள் இருக்கும். இப்னு அப்பாஸ்(ரலி) அவரிடம் "எழுதுக" என்று கூறுவார்கள்.   மேலும் (இப்னு அபீ மாலிக்கா )கூறினார்கள் :அவர் அவரிடம் முழு விளக்கத்தை பெறும் வரை கேட்டுகொண்டே இருப்பார். (தஃப்ஸீர் தபரீ 1/90 ஹதீஸ் எண்: 107)
    இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் பொருளாக்கத்தை(தாவில்) கற்றுக்கொடுப்பவராகவும் அதனை எழுத கட்டளையிடுபவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதை மேற்குறிபிட்ட செய்தி விளக்குகிறது. மேலும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களே தஸ்தஃனிஸூ என்பதின் பொருள் தஸ்தஃதனூ என்று விளக்கிய செய்தியும் இந்த வசனம் குறித்த விளக்கத்தில் நாம் காண முடிகிறது, இதோ
حدثنا محمد بن سعد، قال: ثني أبي، قال: ثني عمي، قال: ثني أبي، عن أبيه، عن ابن عباس، قوله:( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ) قال: الاستئناس: الاستئذان.
     இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், லா தத்ஹுலு புயூதன் ஃகைர புயூதிக்கும் ஹத்தா தஸ்தஃனிஸூ வ துஸல்லிமூ அலா அஹ்லிஹிம் என்பதில் தஸ்தஃனிஸூ என்பதின் பொருள் தஸ்தஃதனூ என்பதாகும் என்று கூறினார்கள்.(தப்ஸீர் தபரி அந்நூர் சூராவின் 27ம் வசனத்தின் விளக்கம்).
மேலும் இந்த வசனத்தின் இந்த தஸ்தஃனிஸூ என்ற சொல் குறித்து மாலிக் இப்னு அனஸ்(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது:
اﺑﻦ ﻭﻫﺐ، ﻭاﺑﻦ اﻟﻘﺎﺳﻢ ﻋﻦ ﻣﺎﻟﻚ ﺃﻥ اﻻﺳﺘﺌﻨﺎﺱ ﻫﻮ اﻻﺳﺘﺌﺬاﻥ ﻋﻠﻰ اﻟﺘﺄﻭﻳﻞ اﻷﻭﻝ
மாலிக் (ரஹ்) கூறியதாவது: நிச்சயமாக தஸ்தஃனிஸூ என்பதின் முதன்மை பொருளாக்கம் தஸ்தஃதனூ என்பதாகும்.(அல் அஹ்காம் அல் குர்ஆன் 3/371)
ﺳﻔﻴﺎﻥ ﻋﻦ ﺟﺎﺑﺮ ﻋﻦ ﻣﺠﺎﻫﺪ ﻓﻲ ﻗﻮﻟﻪ ﻻ ﺗﺪﺧﻠﻮا ﺑﻴﻮﺗﺎ ﻏﻴﺮ ﺑﻴﻮﺗﻜﻢ ﺣﺘﻰ ﺗﺴﺘﺄﻧﺴﻮا ﻗﺎﻝ ﻫﻮ اﻟﺘﻨﺤﻨﺢ
    முஜாஹித்(ரஹ்) அவர்கள் "லா தத்ஹுலு புயூதன் ஃகைர புயூதிக்கும் ஹத்தா தஸ்தஃனிஸூ (உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெறாமல் நுழைய வேண்டாம்.) " இது நிபந்தனை ஆகும் என்று கூறினார்கள்.(தஃப்ஸீர் சுஃப்யான் அல் ஸவ்ரி 1/224)


 1.  இப்னு அப்பாஸ் அவர்களது வழியாக வரும் முத்தவாதீரான ஓதலில் "ஹத்தா தஸ்தஃனிஸூ" என்றே இடம் பெறுகிறது.
2. இந்த வசனத்தை ஓதி விளக்கும் போது இந்த ஹதீஸை அறிவிக்கும் முஜாஹித்(ரஹ்) அவர்கள் "ஹத்தா தஸ்தஃனிஸூ" என்றே ஓதி விளக்கியுள்ளார்கள்.

3.   தஸ்தஃனிஸூ என்ற  வார்த்தையின் முதன்மை பொருளாக்கம் 
"தஸ்தஃதனூ" என்று மாலிக் இப்னு அனஸ்(ரஹ்) அவர்கள் விளக்குகிறார்கள்.

4. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களே தஸ்தஃனிஸூ என்ற வார்த்தையின் பொருளாக்கம் "தஸ்தஃதனூ" என்று விளக்கிவிட்டார்கள். 
       ஆகவே இஸ்லாமோஃபோபுகள் விமர்சனத்திற்காக முன்வைத்த செய்தியில் இப்னு அப்பாஸ்(ரலி) பேசுவது தாவில் கிதாப்பின் எழுத்தர் பிழை பற்றித்தான் என்பது தெள்ளத்தெளிவாக நிறுவப்படுகிறது.

Saturday, August 21, 2021

நபித்தோழர்கள் இன்றைய குர்ஆனிற்கு மாற்றமாக ஓதினார்களா??

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

நபித்தோழர்கள் குர்ஆனுக்கு மாற்றமாக ஓதினார்களா


       குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் கேள்விகளுக்கு தொடர்களாக நாம் பதிலளித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் குர்ஆனில் இடம் பெறும் வசனங்கள் சில ஹதீஸ்களில் கூறப்பட்ட அதே வசனங்களுக்கு மாறுபட்டு சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறி, அதனால் அல்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களுக்கு பதிலை காணவுள்ளோம், இன் ஷா அல்லாஹ்.



1. ஸஹீஹுல் புகாரி 4971, முஸ்லீம் 355
حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ ‏‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ‏ وَرَهْطَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ، خَرَجَ رَسُولُ
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

'(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!' (அதாவது,) 'தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!') எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டுச்......
2.ஸஹீஹுல் புகாரி  4727

ابْنُ عَبَّاسٍ يَقْرَأُ وَكَانَ أَمَامَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ صَالِحَةٍ غَصْبًا، وَأَمَّا الْغُلاَمُ فَكَانَ كَافِرًا‏.

           இப்னு அப்பாஸ்(ரலி), (திருக்குர்ஆன் 18:79 வது வசனத்தின் மூலத்தில் வகான அமாமகும் மலிக்குன் யஃகுது குல்ல சஃபீனத்தின் ஸாலிஹத்தின் ஃகஸ்பா’ என்று ஓதுவார்கள். (பொருள்: அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது.  அவன் பழுதில்லா நல்ல மரக்கலங்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக்கொண்டிருந்தான்.) மேலும், (திருக்குர்ஆன் 18:80 வது வசனத்தின் மூலத்தில்)வ அம்மல் ஃகுலாமு ஃபகான காஃபிரன் என்று ஓதுவார்கள். (பொருள்: அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான்.)  
3.ஸஹீஹுல் புகாரி 1770
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ كَانَ ذُو الْمَجَازِ وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ حَتَّى نَزَلَتْ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلاً مِنْ رَبِّكُمْ‏‏ فِي مَوَاسِمِ الْحَجِّ‏.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
        துல்மஜாஸ், உக்காழ் ஆகியவை அறியாமைக்கால வியாபாரத் தலங்களாகும். அவ்வியாபாரத்தலங்களை வெறுக்கலானார்கள். அப்போது 'ஹஜ்ஜின் போது உங்களுடைய இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்களின் மீது குற்றமாகாது" என்ற02:198வது வசனம் அருளப்பட்டது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கிறது.
4. ஸஹீஹ் முஸ்லீம் 2931
وَحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَيْمَنَ، مَوْلَى عَزَّةَ يَسْأَلُ ابْنَ عُمَرَ وَأَبُو الزُّبَيْرِ يَسْمَعُ ذَلِكَ كَيْفَ تَرَى فِي رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ حَائِضًا فَقَالَ طَلَّقَ ابْنُ عُمَرَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَ عُمَرُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ طَلَّقَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ ‏.‏ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ لِيُرَاجِعْهَا ‏”‏ ‏.‏ فَرَدَّهَا وَقَالَ ‏”‏ إِذَا طَهَرَتْ فَلْيُطَلِّقْ أَوْ لِيُمْسِكْ ‏”‏ ‏.‏ قَالَ ابْنُ عُمَرَ وَقَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ فِي قُبُلِ عِدَّتِهِنَّ
அபுஸ் ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 
"அஸ்ஸா" என்பாரின் முன்னாள் அடிமையாயிருந்த அப்துர் ரஹ்மான் பின் அய்மன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "ஒருவர் தம் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டார். இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார். -அப்போது (அங்கிருந்த) நான் அதைச் செவியுற்றுக் கொண்டிருந்தேன்.- அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அப்துல்லாஹ் பின் உமர்,மாதவிடாயிலிருந்த தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார்" என்று கூறி, அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்!" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவளைத் திரும்ப அழைத்துக்கொண்டேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், "மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் அவர் மணவிலக்குச் செய்து கொள்ளட்டும்; அல்லது தம்மிடமே (மனைவியாக) வைத்துக்கொள்ளட்டும்!" என்றார்கள். மேலும், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "நபி (ஸல்) அவர்கள் "நபியே! பெண்களை நீங்கள் மணவிலக்குச் செய்தால், அவர்கள் "இத்தா"வைக் கடைப்பிடிப்பதற்கேற்ப அதன் ஆரம்பப் பகுதியில் மணவிலக்குச் செய்யுங்கள்" (65:1)என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்" என்று கூறினார்கள்.

5.முஸ்லீம் 1109 

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي يُونُسَ، مَوْلَى عَائِشَةَ أَنَّهُ قَالَ أَمَرَتْنِي عَائِشَةُ أَنْ أَكْتُبَ لَهَا مُصْحَفًا وَقَالَتْ إِذَا بَلَغْتَ هَذِهِ الآيَةَ فَآذِنِّي ‏{‏ حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاَةِ الْوُسْطَى‏}‏ فَلَمَّا بَلَغْتُهَا آذَنْتُهَا فَأَمْلَتْ عَلَىَّ حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاَةِ الْوُسْطَى وَصَلاَةِ الْعَصْرِ ‏.‏ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ ‏.‏ قَالَتْ عَائِشَةُ سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
ஆயிஷா (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த அபூயூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆன் பிரதியொன்றைத் தமக்காகப் படியெடுத்துத் தருமாறு என்னிடம் கூறினார்கள். மேலும் "அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்" எனும் இந்த (2:238ஆவது) வசனத்தை நீ எட்டும்போது என்னிடம் தெரிவிப்பாயாக! என்றும் கூறினார்கள். அவ்வாறே நான் (அதைப் படியெடுத்துக்கொண்டிருந்தபோது) அந்த வசனம் வந்ததும் அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள் "அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் (அதாவது) அஸ்ர் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள். நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள்" என்று எழுதுமாறு என்னிடம் கூறினார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், "இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன்" என்றும் கூறினார்கள்.
     மேற்குறிபிட்ட இன்னும் இது போன்ற செய்திகளை பதிவிட்டு இஸ்லாமோஃபோபுகள் " " நபித்தோழர்களே இன்றிருக்கும் குர்ஆனில் இருந்து மாறுபட்ட சில சொற்களை இணைத்து ஓதியுள்ளனர். இன்றிருக்கும் குர்ஆன் பிரதிகளில் அது இல்லை. ஆக குர்ஆனில் சில பகுதிகள் நீக்கப்பட்டுவிட்டது என்பதால் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை" என்று விமர்சித்து வருகின்றனர். 
          
          ஆனால் இந்த வாதமானது இஸ்லாம் குறித்த போதிய அறிவில்லாததாலும், அரபு மொழியின் சொற்றொடர்கள் குறித்து போதிய புரிதல் இல்லாததாலும் ஏற்பட்டதாகும்.

    ஆங்கிலத்தில் சொற்றொடர்களில், விளக்கமளிக்கும் சொற்றொடர்(Explanatory Phrase) என்றொரு வகை உண்டு. அது போல அரபு மொழியிலும் இத்தகைய சொற்றொடர்கள் உண்டு. அவற்றை عطف البيان என்பார்கள். இது இரு வகையானது

1. ஒரு சொற்றொடரில் அதனை விளக்கும் சொற்றொடர் தொடர்ச்சியாக அமைவது. உதாரணாமாக أبو موسى جابر بن حيّان - அபூ மூஸா ஜாபிர் இப்னு ஹய்யான் என்ற பெயரில் அபூ மூஸா என்பது மூஸாவின் தந்தை என்று பொருள் படும். அது போல் இப்னு ஹய்யான் என்பது ஹய்யானின் மகன் என்று பொருள் படும். குறித்த நபரின் பெயர் ஜாபிர் என்பது. மேற்குறிபிட்ட ஹதீஸ்களில் வ.எண்: 2,3,4 ஆகியவை இந்த அடிப்படையில் குர்ஆனின் வசனங்களுக்கு மேலதிக விளக்கம் கொடுக்கும்படி அமைந்தவை ஆகும்.
2. ஒரு சொற்றொடரில் அதனை மேலதிகமாக விளக்கும் சொற்றொடர் واو - வாவ் என்ற இணைப்புச் சொல்லினால் பிரிக்கப்பட்டிருக்கும். இதனை واو الحالو  என்று அழைப்பார்கள். மேற்குறிபிட்ட ஹதீஸ்களில் வ.எண்: 1,5, ஆகியவை இந்த அடிப்படையில் குர்ஆனின் வசனங்களுக்கு மேலதிக விளக்கம் கொடுக்கும்படி அமைந்தவை ஆகும்.
         இந்த விஷயத்தில் விளக்கம் மேற்குறிபிட்ட படி இருந்ததால் தான் எத்துனை ஸஹீஸான ஹதீஸ்கள் கிராத்களில் அதிகப்படுத்தல் இருப்பதாக கூறினாலும் அவை குர்ஆனின் கிராத்களில் இன்றுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. காலம் காலமாக இஸ்லாமிய சமூகம் இந்த விசயத்தை தெளிவாக புரிந்து வந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. இது குறித்த இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தை காண்போம்.

அபூ ஜாஃபர் அந்நகாஸ் (மரணம் ஹிஜ்ரி 338) அவர்களது கருத்து

ﻭﺭﻭﻱ ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻭاﻟﺼﻼﺓ اﻟﻮﺳﻄﻰ ﺻﻼﺓ اﻟﻌﺼﺮ . ﻭﻫﺬﻩ اﻟﻘﺮاءﺓ ﻋﻠﻰ اﻟﺘﻔﺴﻴﺮ ﻷﻧﻬﺎ ﺯﻳﺎﺩﺓ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ،
    இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது அறிவிப்பில் "நடுத்தொழுகையையும் அசர் தொழுகையையும் " என்பது விளக்கத்தின் அடிப்படையிலான ஓதலாகும். ஏனென்றால் இது முஸ்ஹஃபில் இருப்பதற்கு மேலதிகமாக இடம் பெறுவதாகும்         ( அந்நகாஸ் அவர்களது அல் இஹ்ரப் அல் குர்ஆன் 1/119. குர்ஆன் 2:238ந் விளக்கம்)

ﻭﻛﺎﻥ ﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﻘﺮﺃ اﻝﺗﺄﻭﻳﻞ ﻣﻊ اﻝﺗﻨﺰﻳﻞ ﻧﺤﻮ ﻗﻮﻟﻪ: ﻭاﻟﺼﻼﺓ اﻟﻮﺳﻄﻰ، (ﻭﻫﻲ ﺻﻼﺓ اﻟﻌﺼﺮ)
   அவர்களில் ( சஹாபாக்களில்) சிலர் பொருளாக்கத்தையும் இறக்கப்பட்ட வசனங்களுடன் ஓதுபவர்களாக இருந்துள்ளனர் . உதாரணமாக நடுத்தொழுகை( அதுதான் அஸர் தொழுகை). (அபூபக்ர் அல் பாக்கீலானி அவர்களது அல் இன்திஸார் லில் குர்ஆன் 1/351)

ﻭﻫﺬﻩ اﻟﻘﺮاءﺓ ﻣﺨﺎﻟﻔﺔ ﻟﺴﻮاﺩ اﻟﻤﺼﺤﻒ اﻟﻤﺠﻤﻊ ﻋﻠﻴﻪ، ﻓﻴﻨﺒﻐﻲ ﺃﻥ ﻳﺠﻌﻞ ﺗﻔﺴﻴﺮا، ﻭﻛﺬا ﻣﺎ ﻭﺭﺩ ﻋﻨﻪ ﻭﻋﻦ ﻏﻴﺮﻩ ﻣﻤﺎ ﺧﺎﻟﻒ ﺳﻮاﺩ اﻟﻤﺼﺤﻒ
     இந்த ஓதலானது அல் முஸ்ஹஃப்பின் எழுத்தாக்கத்திற்கு மாற்றமாக இருக்கிறது, ஆகவே இது ஒரு விளக்கமாக இருக்கும். அவராலும் ( இப்னு மஸ்வூத் (ரலி)) ஏனையோராலும் அல் முஸ்ஹஃபின் எழுத்தாக்கத்திற்கு மாற்றமாக அறிவிக்கப்படும் அறிவிப்புகள் அனைத்திற்கும் இதுவே பொருந்தும்.                               ( அபூ ஹய்யான் அவர்களது பஹ்ர் உல் முஹீத் 1/260)
இப்னு அல் ஜஸரீ (ஹிஜ்ரி 751- 833) அவர்களது கருத்து

نَعَمْ كَانُوا رُبَّمَا يُدْخِلُونَ التَّفْسِيرَ فِي الْقِرَاءَةِ إِيضَاحًا وَبَيَانًا لِأَنَّهُمْ مُحَقِّقُونَ لِمَا تَلَقَّوْهُ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قُرْآنًا فَهُمْ آمِنُونَ مِنَ الِالْتِبَاسِ وَرُبَّمَا كَانَ بَعْضُهُمْ يَكْتُبُهُ مَعَهُ
    சிலநேரஙளில் அவர்கள் (நபித்தோழர்கள்) கிராஆத்தில் தஃப்ஸீரையும் இணைத்தது விளக்கத்திற்காவும் தெளிவுபடுத்துவதற்காகவும் தான். ஏனென்றால் அவர்கள் நபி(சல்) அவர்களிடம் இருந்து நேரடியாக கற்ற குர்ஆனில் வல்லவர்களாய் இருந்தனர். அதனால் அவர்களுக்கு இடையே குழப்பம் ஏற்படாமல் பாதுக்காக்கப்பட்டனர். மேலும் சிலநேரங்களில் அவர்களில் சிலர் அவற்றை (தஃப்ஸீரை) அதனுடன் (குர்ஆனுடன்) எழுதவும் செய்தனர். (இப்னு ஜஸரீ அவர்களது நஸர் பீ கிராத் அல் அஸர் 1/32)
        மேற்குறிபிட்ட இப்னு ஜஸரீ மற்றும் அபூ ஜாஃபர் அந்நகாஸ் ஆகியோர் இந்த கிராத் துறையில் வல்லுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


      மேற்குறிபிட்ட இந்த கருத்தை அல் குர்ஆனும் உண்மை படுத்துகிறது அல்லாஹ் அல் குர்ஆனில் பல இடங்களில் தான் வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதாக குறிப்பிடுகிறான். உதாரணமாக
وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ ۚ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا ۚ وَمَنْ يَفْعَلْ ذَٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ ۚ وَلَا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُوًا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنْزَلَ عَلَيْكُمْ مِنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهِ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால்⁶⁶ அவர்கள் தமக்குரிய காலக்கெடுவை⁶⁹ நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதை எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்!(அல் குர்ஆன் 2:231)
          இவ்வாறு அல் குர்ஆனில் இடம் பெறும் الْكِتَابِ وَالْحِكْمَةِ - வேதமும் ஞானமும் என்ற பதத்திற்கு வேதமும் அதன் விளக்கமும் என்று முற்கால அறிஞர்கள் பொருள் கொள்கிறார்கள்.
اﻝﺣﻜﻤﺔ : اﻟﺴﻨﺔ ﻭﻓﻬﻢ اﻟﻘﺮﺁﻥ

அல்ஹிக்மா- சுன்னாவும் குர்ஆனின் விளக்கமும் (தஃப்ஸீர் அன் நஸஃபீ - 1/131)
ﻭﻗﺎﻝ ﻣﺠﺎﻫﺪ: اﻟﺤﻜﻤﺔ: ﻓﻬﻢ اﻟﻘﺮﺁﻥ.

முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறியதாவது                                                  அல் ஹிக்மா : குர்ஆனின் விளக்கம் (தஃப்ஸீர் அல் வஸீத் , பஹ்ர் அல் முஹீத் 1/626)

        மேலும் அல் ஹிக்மா என்றால் விளக்கம் என்று பொருள் என்று இப்னு வஹ்ப் அவர்களது தஃப்ஸீர் அல் குர்ஆன் மின் ஜாமி லி இப்னு வஹ்ப் 1/8 இடம்பெறுகிறது. இதில் முஜாஹித்(ரஹ்) அவர்கள் நபித்தோழர்களை கண்ட தாபியீ(பிறப்பு - ஹிஜ்ரி 21) . அரம்பகால தஃப்ஸீர் அறிஞரில் ஒருவர். இப்னு வஹ்ப் இமாம் மாலிக் அவர்களின் மாணவர் ஆவார்.( பிறப்பு - ஹிஜ்ரி 125)

       ஆகவே அல்லாஹ்வே தனது குர்ஆனில், வேதம் அதன் ஞானம் என்று இரண்டையும் இறக்கியிருப்பதாக கூறுகிறான். மேலும் அந்த ஞானம் என்பது சுன்னாஹ் மற்றும் வேத விளக்கம் என்பதே என்பதை ஆரம்பகால அறிஞர்களின் கூற்றை கொண்டு விளக்கியிருக்கிறோம். இதற்கு மேல் சென்று அல்லாஹ் பின்வரும் செய்தியையும் குறிப்பிடுகிறான்.
وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான் . (அல் குர்ஆன்33:34)
       மேற்குறிபிட்டபடி அல்லாஹ் கூறுவது போல நபித்தோழர்கள் குர்ஆனை அதன் விளக்கத்தையும் மனனமிட்டு ஓதிக்கொண்டிருந்தனர் என்பதை பின்வரும் செய்தி நமக்கு உறுதி படுத்துகிறது.
     'நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களைத் தவிர. அவர்களிடம் கொஞ்சம் நபிமொழிகள் இருந்தன. காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்ளேன்) எழுதி வைத்ததில்லை" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி 113 )
     நபித்தோழர்கள் நபி(சல்) அவர்களிடம் வேதத்தையும் ஞானத்தையும் மனனமிட்டு அதனை நினைவு கூர்ந்தும் வந்துள்ளனர். அதனால் தான் நபித்தோழர்கள் வழியாக பெறப்பட்ட இந்த இஸ்லாமிய சமூகத்தின் கிராத்கள் எந்த ஒன்றிலும் மேற்குறிபிட்ட இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஹதீஸ்களில் இடம் பெறும் அதிகப்படுத்துதல் எதுவும் இடம் பெற்வில்லை. அதாவது மேற்குறிபிட்ட செய்திகளை அறிவிக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது கிராத்களான கிராத் அன் நாஃபீ, கிராத் அன் அபூ அம்ரூ ஆகியவற்றில் இந்த அதிகப்படுத்துதல்கள் இடம் பெறவில்லை. நபித்தோழர்கள் குர்ஆன் ஆயத் எது அதன் விளக்கம் எது( தஃப்ஸீர்) என்பதை விளக்கியிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

        வேதத்தையும் ஞானத்தையும்(விளக்கத்தையும்) ஒரு சேர நபித்தோழர்கள் கற்பிக்கும் செய்திகளைத்தான் அது குறித்த எந்த அறிவுமின்றி இஸ்லாமோஃபோபுகள் கூறி அல்குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்று உளறித்திரிகின்றனர் என்பதை மேற்குறிபிட்ட விளக்கத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம். அல்லாஹு அஃலம்...

Thursday, May 13, 2021

அபூதர்தா(ரலி) அல் லைல் சூராவை (அல் குர்ஆன் 92:3) மாற்றி ஓதினார்களா???

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
textual variants in the quran,அபூதர்தா(ரலி) அல் லைல் சூராவை -அல் குர்ஆன் 92:3-  மாற்றி ஓதினார்களா??


            குர்ஆனின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்படும் குற்றச்சாட்டில் அடுத்து இடம் பெறுவது அபூதர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கும் அல் குர்ஆன் 92 வது அத்தியாயம் குறித்த ஹதீஸ் ஆகும். இந்த செய்தி பல கிரந்ததங்களில் அபூதர்தா(ரலி) அவர்களிடம் இருந்து அல்கமா(ரஹ்) அவர்கள் வழியாக ஒற்றை அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி புகாரியில் 4944 ஆவது செய்தியாக இடம் பெறுகிறது. இன் ஷா அல்லாஹ் அதன் விளக்கத்தை காண்போம்.

 இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார்
    அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்து அபுத்தர்தா(ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா(ரலி) தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள்.
       பிறகு, 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்?' என்று அபுத்தர்தா(ரலி) கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'நாங்கள் அனைவரும் தாம்' என்று பதிலளித்தோம். அபுத்தர்தா(ரலி), '(இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்?' என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா(ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். 'வல்லைலி இஃதா யஃக்ஷா' எனும் வசனத்தில் இப்னு மஸ்வூத்(ரலி) எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்கமா(ரஹ்), 'வஃத்தகரி வல் உன்ஸா' என்றே ஓதினார்கள்' என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா(ரலி), 'நான் சாட்சியம் கூறுகிறேன்: நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) 'வமா கலக்கஃத் தக்கர வல் உன்ஸா' என்றே நான் ஓதவேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களைப் பின்பற்றமாட்டேன்' என்று கூறினார்கள்.

மேற்குறிபிட்ட செய்தியை முன்வைத்து இஸ்லாமோஃபோபுகள் பின்வரும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
       அபூதர்தா, இப்னு மஸ்வூத்(ரலி) ஆகியோர், மற்றும் ஈராக்வாசிகளும் இன்று குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் 92 சூராவான அல்லைல் சூராவிற்கு மாற்றமாக ஓதியுள்ளனர். இன்று இருக்கும் குர்ஆனில் அல் லைல் சூராவின் மூன்றாம் ஆயத் வமா ஹலக்க தக்கர வல் உன்ஸா என்று இடம் பெறுகிறது. ஆனால் அபூதர்தா(ரலி) அவர்களும் , இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் மற்றும் ஈராக்வாசிகளும் இதற்கு மாற்றமாக "வத்தக்கர வல் உன்ஸா" என்று ஓதியுள்ளனர். நபித்தோழர்களே இப்படி மாறுபட்டு அறிவிப்பதால் குர்ஆனில் பின்னாளில் வார்த்தைகள் சேர்க்கப்பட்டு கறைபடுத்தப்பட்டுள்ளது என்று வாதிக்கின்றனர்.
        மேற்குறிபிட்ட செய்தியானது முதலில் ஒற்றை அறிவிப்பாளர் தொடரை கொண்டிருக்கிறது. நாம் முன்பே அல் குர்ஆன் பலர் ஓதி பலர் கேட்கும் முறையினால் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளோம். அதற்கு மாற்றமாக ஒற்றை அறிவிப்பாளர் வழியாக வரும் செய்தி பலவீனமானதாகவே எடுத்துக்கொள்ளப்படும். ஒரு தலைமுறையே கடத்திய ஒரு செய்திக்கு மாற்றமாக ஒருவர், இருவர் அறிவிக்கும் செய்தி எந்த மதிப்பும் அற்றது என்பதுதான் சரியானதாகும் அதனால் தான் இமாம் குர்துபி அவர்கள் தனது தஃப்சிரில் 92 அத்தியாயத்தின் விளக்கவுரையில் பின்வரும் அபூபக்கர் அல்அன்பாரி அவர்களது கருத்தை முன்வைக்கிறார்கள்:

قَالَ أَبُو بَكْر : كُلّ مِنْ هَذَيْنَ الْحَدِيثَيْنِ مَرْدُود بِخِلَافِ الْإِجْمَاع لَهُ , وَأَنَّ حَمْزَة وَعَاصِمًا يَرْوِيَانِ عَنْ عَبْد اللَّه بْن مَسْعُود مَا عَلَيْهِ جَمَاعَة الْمُسْلِمِينَ , وَالْبِنَاء عَلَى سَنَدَيْنِ يُوَافِقَانِ الْإِجْمَاع أَوْلَى مِنْ الْأَخْذ بِوَاحِدٍ يُخَالِفُهُ الْإِجْمَاع وَالْأُمَّة , وَمَا يُبْنَى عَلَى رِوَايَة وَاحِد إِذَا حَاذَاهُ رِوَايَة جَمَاعَة تُخَالِفهُ , أُخِذَ بِرِوَايَةِ الْجَمَاعَة , وَأُبْطِلَ نَقْل الْوَاحِد لِمَا يَجُوز عَلَيْهِ مِنْ النِّسْيَان وَالْإِغْفَال . وَلَوْ صَحَّ الْحَدِيث عَنْ أَبِي الدَّرْدَاء وَكَانَ إِسْنَاده مَقْبُولًا مَعْرُوفًا , ثُمَّ كَانَ أَبُو بَكْر وَعُمَر وَعُثْمَان وَعَلِيّ وَسَائِر الصَّحَابَة - رَضِيَ اللَّه عَنْهُمْ يُخَالِفُونَهُ , لَكَانَ الْحُكْم الْعَمَل بِمَا رَوَتْهُ الْجَمَاعَة , وَرَفْض مَا يَحْكِيهِ الْوَاحِد الْمُنْفَرِد , الَّذِي يُسْرِع إِلَيْهِ مِنْ النِّسْيَان مَا لَا يُسْرِع إِلَى الْجَمَاعَة , وَجَمِيع أَهْل الْمِلَّة
   அபூபக்ர் கூறியதாவது: இந்த இரண்டு ஹதீஸ்களுமே நிராகரிக்கத்தக்கவை ஏனென்றால் பெரும்பான்மையினரிடம் இருந்து முரண்படுகிறது.. ஹம்ஸாவும், ஆஸிமும் பெரும்பான்மையினரின் ஓதலைத்தான் இப்னு மஸ்வூத் அவர்களிடம் இருந்து அறிவிக்கிறார்கள். மேலும் எந்த அறிவிப்பு ஒருமித்த கருத்துடன் ஒத்தமைகிறதோ அதுவே சமூகத்தின் ஒருமித்த கருத்துடன் முரண்படும் அறிவிப்பை காட்டிலும் ஏற்பதற்கு முதன்மையானது. ஒற்றை அறிவிப்பாளரின் அறிவிப்பானது பெரும்பான்மையினரால் அறிவிக்கப்பட்டதற்கு முரணாக அமையும் போது பெரும்பாமையினரின் அறிவிப்பைத்தான் ஏற்கவேண்டும் என்ற அடிப்படையில் அது அமைந்ததாகும். அந்த ஒற்றை அறிவிப்பானது மறதியினாலும், அறியாமையாலும் பாதிக்கப்பட்டிருக்கும். அபூதர்தாவின் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாகவும், அதன் அறிவிப்பாளர்கள் ஏற்கப்பட்டவர்களாக இருந்தாலும், அபூபக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி) மற்றும் பெரும்பான்மை நபித்தோழர்களிடம்(ரலி) இருந்து முரண்படுகிறது. அதனால் பெரும்பான்மையினரின் அறிவிப்பையே நாம் ஏற்க வேண்டும். தனி நபரால் அறிவிக்கப்படும் செய்தி மறதியினால் பாதிக்கப்பட்டிருப்பதால் அதனை ஏற்கக்கூடாது. அது ஏனைய பெரும்பான்மையினரையும், ஏனைய இந்த மார்க்க நம்பிக்கையாளர்களையும் பாதிக்காது. (தஃப்ஸீர் அல் குர்துபி சூரா அல் லைலின் விளக்கம்)

هَذِهِ الْقِرَاءَةُ لَمْ تُنْقَلْ إِلَّا عَمَّنْ ذكر هُنَا وَمن عداهم قرؤوا وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَى وَعَلَيْهَا اسْتَقَرَّ الْأَمْرُ مَعَ قُوَّةِ إِسْنَادِ ذَلِكَ إِلَى أَبِي الدَّرْدَاءِ وَمَنْ ذُكِرَ مَعَهُ وَلَعَلَّ هَذَا مِمَّا نُسِخَتْ تِلَاوَتُهُ وَلَمْ يَبْلُغِ النَّسْخُ أَبَا الدَّرْدَاءِ وَمَنْ ذُكِرَ مَعَهُ وَالْعَجَبُ مِنْ نَقْلِ الْحُفَّاظِ مِنْ الْكُوفِيّين هَذِه الْقِرَاءَة عَن عَلْقَمَة وَعَن بن مَسْعُودٍ وَإِلَيْهِمَا تَنْتَهِي الْقِرَاءَةُ بِالْكُوفَةِ ثُمَّ لَمْ يَقْرَأْ بِهَا أَحَدٌ مِنْهُمْ وَكَذَا أَهْلُ الشَّامِ حَمَلُوا الْقِرَاءَةَ عَنْ أَبِي الدَّرْدَاءِ وَلَمْ يَقْرَأْ أَحَدٌ مِنْهُمْ بِهَذَا فَهَذَا مِمَّا يُقَوِّي أَنَّ التِّلَاوَة بهَا نسخت
      இந்த ஓதலை மேலே குறிப்பிடப்பட்டவர்கள் தவிர யாரும் அறிவிக்கவில்லை. மேலும் ஏனையோர் "வமா ஹலக்க தகர வல் உன்ஸா என்றே ஓதினர். மேலும் அபூதர்தா மற்றும் அவருடன் இணைத்துக்கூறப்படுவோர் வழியாக வலிமையான அறிவிப்பாளர் வரிசையை மற்ற ஓதல் பெற்றிருந்தாலும் இதுதான் நிறுவப்பட்ட ஓதலாகும். அது மாற்றம் செய்யப்பட்ட ஓதலில் ஒன்றாகவும், இதனை அபூதர்தா(ரலி) அவர்களும் அவருடன் இணைத்துக்கூறப்படுவோரும் ஏற்காமல் இருந்ததாகத்தான் இதை கூறமுடியும். இதில் வினோதம் என்னவென்றால் கூஃபாவின் ஹுஃப்பாஸ்கள் அறிவிக்கும் இந்த ஓதல், இப்னு மஸ்வூத் மற்றும் அல்கமா அவர்களுடன் கூஃபாவில் முடிந்துவிடுகிறது. ஏனையோர் இந்த முறையில் ஓதவில்லை. அதுபோல அபுதர்தாவின் ஓதலை அறிவித்த ஸாம் வாசிகளும் இதனை அறிவிக்கவில்லை. இது அந்த ஓதல் மாற்றப்பட்டுவிட்டது என்பதை உறுதிபடுத்துகிறது.(ஹாபிழ் இப்னு ஹஜரின் ஸஹீஹ் புகாரியின் விளக்கமான பத்ஹுல் பாரி ஹதீஸ் எண்: 4944)
        ஹாபிழ் இப்னு ஹஜரின் கூற்றின் படி ஏனைய கிராத் அறிவிப்புக்களில் இந்த வசனம் இவ்வாறு இடம் பெறவில்லை. மேலும் இப்னு மஸ்வூத்(ரலி), அவர்களது ஓதல் முறையை பின்பற்றி இடம் பெறும் ஹஃப்ஸின் கிராத்திலும் சரி, அபூதர்தா(ரலி) அவர்களது ஓதல் முறையை பின்பற்றும் ஹிஷாம் மற்றும் இப்னு தக்வானின் ஓதல் முறையிலும் சரி, ஏனைய இராக்வாசிகளின் கிராத்கள் ஆன அல் கிஸாய், அல் ஹம்ஸாவின் ஓதல்முறைகளிலும் சரி, இன்று இருக்கும் குர்ஆனில் போன்றே அமைந்திருப்பது, மேற்குறிபிட்ட அபூதர்தா(ரலி) அவர்களது அறிவிப்பு ஒற்றை அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் சாத் வகை ஹதீஸ் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதாவது பெரும்பான்மை அறிவிப்பிற்கு மாற்றமாக இடம் பெறும் ஒற்றை அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் செய்தியாகும்.




மேலும் இதே செய்தி சுனன் அல் குப்ராவில் பின்வருமாறு இடம் பெறுகிறது:
ﺃﺧﺒﺮﻧﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺳﻠﻴﻤﺎﻥ ﻗﺎﻝ ﺃﻧﺎ ﻣﺴﻜﻴﻦ ﺑﻦ ﺑﻜﻴﺮ ﻋﻦ ﺷﻌﺒﺔ ﻋﻦ ﻣﻐﻴﺮﺓ ﻋﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ ﻋﻦ ﻋﻠﻘﻤﺔ ﻗﺎﻝ ﻗﺪﻣﺖ اﻟﺸﺎﻡ ﻓﺪﺧﻠﺖ ﻣﺴﺠﺪ ﺩﻣﺸﻖ ﻓﺼﻠﻴﺖ ﺭﻛﻌﺘﻴﻦ ﺛﻢ ﻗﻠﺖ اﻟﻠﻬﻢ اﺭﺯﻗﻨﻲ ﺟﻠﻴﺴﺎ ﺻﺎﻟﺤﺎ ﻓﺠﻠﺴﺖ ﺇﻟﻰ ﺃﺑﻲ اﻟﺪﺭﺩاء ﻓﻘﺎﻝ ﻣﻤﻦ ﺃﻧﺖ ﻗﻠﺖ ﻣﻦ ﺃﻫﻞ اﻟﻌﺮاﻕ ﻗﺎﻝ ﻓﻜﻴﻒ ﻛﺎﻥ ﻳﻘﺮﺃ ﻋﺒﺪ اﻟﻠﻪ {ﻭاﻟﻠﻴﻞ ﺇﺫا ﻳﻐﺸﻰ ﻭاﻟﻨﻬﺎﺭ ﺇﺫا ﺗﺠﻠﻰ ﻭﻣﺎ ﺧﻠﻖ اﻟﺬﻛﺮ ﻭاﻷﻧﺜﻰ} ﻗﻠﺖ ﻫﻜﺬا ﻛﺎﻥ ﻳﻘﺮﺅﻫﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻓﻘﺎﻝ ﺃﺑﻮ اﻟﺪﺭﺩاء ﻫﻜﺬا ﺳﻤﻌﺘﻬﺎ ﻣﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺛﻢ ﻗﺎﻝ ﻓﻴﻜﻢ اﻟﺬﻱ ﺃﺟﻴﺮ ﻣﻦ اﻟﺸﻴﻄﺎﻥ ﻋﻤﺎﺭ ﺑﻦ ﻳﺎﺳﺮ ﻭﻓﻴﻜﻢ اﻟﺬﻱ ﻳﻌﻠﻢ اﻟﺴﺮ ﻻ ﻳﻌﻠﻤﻪ ﻏﻴﺮﻩ ﻳﻌﻨﻲ ﺣﺬﻳﻔﺔ اﺑﻦ اﻟﻴﻤﺎﻥ

அல்கமா (ரஹ்) கூறினார்.நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அங்கு டமாஸ்கஸ் பள்ளி வாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்துக்கள் தொழுதேன். பிறகு, 'இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரைக் கொடு" என்று பிரார்த்தித்தேன். பிறகு, அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் அமர்ந்தேன். அவர்கள் " உங்களில் யார் இராக் வாசி என்று கூறுங்கள் " என்று கூறினார்கள். பிறகு, 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், 'வல்லய்லி இதாயஃக்ஷா வன்னஹாரி இதா தஜல்லா வமா ஹலக்க தகர வல் உன்ஸா' ஆகிய இறைவசனங்களை எப்படி ஓதுகிறார்" என்று கேட்டார்கள். அதற்கு நான் "இப்படித்தான் ஓதுகிறார்கள்" என்று கூறினேன்.அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அதை எனக்கு நபி(ஸல்) அவர்கள் தம் வாயால் (இவ்வாறே) ஓதிக்காட்டினார்கள். மேலும் ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப்பட்ட அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களும் , வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவரான ஹுதைஃபா இப்னு யாமான் (ரலி) அவர்களும் உங்களிடையே உள்ளார்களே" என்று கூறினார்கள் (அந்நஸயீ அவர்களது சுனன் அல் குப்ரா 8299)
  ஆக ஹதீஸ்களும் முன்னுக்குபின் முரணாக இந்த விசயத்தில் இடம் பெறுவதை காண முடிகிறது. ஆக பெரும்பான்மை ஓதலுடன் எந்த செய்தி பொருந்துகிறதோ அதுவே ஆதாரப்பூர்வமான செய்தி என்பதை விளங்கலாம். ஆக மறுக்கப்படும் ஹதீஸின் மீது எழுப்பப்படும் இஸ்லாமோஃபோபுகளின் வாதங்கள் எந்த மதிப்பும் அற்றவை...

Sunday, May 2, 2021

ஆதரவற்ற குழந்தைகளின் பராமரிப்பில் மிகுந்த கவனம் தேவை!!

இஸ்ளாம்-  ஆதரவற்ற குழந்தைகள்-  பராமரிப்பு- மிகுந்த கவனம் தேவை!!

யுனிசெப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 10,000 குழந்தைகள் அனாதைகளாகிறார்கள். சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, உலகில் குறைந்தது 140 மில்லியன் அனாதைகள் உள்ளனர்.

ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதில் இஸ்லாம் சொல்லும் வழிமுறையை விட வேறு சிறந்த ஒன்றை இன்று வரை கூட எந்த சட்டமும் சொல்வதில்லை.


"நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்" [4:2]


"நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்." [4:10]


"அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; " [6:152]


"(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்." [4:5]


"அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்." [4:6]

Sunday, April 18, 2021

அல் பராஅத் சூராவிற்கு நிகரான சூரா குர்ஆனில் காணவில்லையா?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
lost verses of the quran,அபூ மூஸா(ரலி),அல் பராஅத்,முஸப்பிஹாத்,அத்தவ்பா,அல் பராஅத் சூராவிற்கு நிகரான சூரா குர்ஆனில் காணவில்லையா?

        குர்ஆனின் கிராத்கள் குறித்தும் அது எப்படி நபி(சல்) அவர்களிடம் தொடர்புடையது என்பதையம் சென்ற தொடரில் கண்டோம். குர் ஆனின் கிராத் பாதுகாப்பு குறித்து நாம் விளக்கும் போது சில ஹதீஸ்களில் காணப்படும் மாறுபட்ட அல்லது இன்றில்லாத ஓதல் முறை குறித்து இன்றைய இஸ்லாமோஃபோபுகள் கேள்வி எழுப்பி இதனால் குர்ஆனின் ஓதல் பாதுகாக்கப்படவில்லை என்று உளறித்திரிகின்றனர். அவர்களது விமர்சனங்களில் காணப்படும் சில ஹதீஸ்களையும் அதன் மூலம் அவர்கள் முன்வைக்கும் விமர்சங்களையும், அதற்கான விளக்கத்தையும் காண்போம்.

அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
        அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் பஸ்ரா (இராக்) நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர்ஆனைக் கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள்.
             அப்போது அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:பஸ்ராவாசிகளிலேயே நீங்கள்தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள்; அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே, (தொடர்ந்து) குர்ஆனை ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்ட போது உங்களுக்கு முன் வாழ்ந்த (வேதம் அருளப்பெற்ற சமுதாயத்த)வர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதிவந்தோம்; நீளத்திலும் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் "பராஅத்" எனப்படும் (9ஆவது) அத்தியாயத்திற்கு நிகராக அதை நாங்கள் கருதினோம். ஆனால், அந்த அத்தியாயத்தை நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் "ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன்.
    மேலும், மற்றோர் அத்தியாயத்தையும் நாங்கள் ஓதிவந்தோம். அதை (சப்பஹ, யுசப்பிஹு, சப்பிஹ் என) இறைத்துதியில் தொடங்கும் அத்தியாயங்களில் ஒன்றுக்கு நிகராகவே நாங்கள் கருதினோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச்செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும்,அதில் "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அவ்வாறு நீங்கள் செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர் மறுமை நாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.) (முஸ்லீம் 1897)
மேற்குறிபிட்ட ஹதீஸில் இருந்து இஸ்லாமோஃபோபுகள் இரண்டு வாதங்களை முன்வைக்கின்றனர்.
1.குர்ஆனில் அல்பராத் என்ற அத்தவ்பா சூராவிற்கு நிகரான ஒரு சூரா இருந்தது து இன்று இல்லை. இன்றிருக்கும் குர்ஆன் இவ்வாறு மறக்கடிக்கப்பட்ட நபித்தோழர்கள் வழியாகத்தான் வருகிறது ஆகவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை

2.அது போல் முஸப்பிஹாத் என்ற இறைதுதியில் ஆரம்பிக்கும் சூராவிற்கு நிகரான ஒரு அத்தியாயம் இருந்தது அதனையும் நபிதோழரான அபூமூஸா அல் அஸ்அரீ(ரலி) மறந்துவிட்டார்.இன்றிருக்கும் குர்ஆன் இவ்வாறு மறக்கடிக்கப்பட்ட நபித்தோழர்கள் வழியாகத்தான் வருகிறது ஆகவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை.
நமது பதில்
    
    மேற்குறிபிட்ட விமர்சனம் ஒன்றில் அல் பராத் சூராவிற்கு நிகரான சூரா மறக்கடிக்கப்பட்டுவிட்டது என்பதின் பொருளை விளங்க பின்வரும் இதே பொருளுடைய ஹதீஸை காண்பது அவசியமாகும்:

حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ: " نَزَلَتْ سُورَةٌ نَحْوَ بَرَاءَةَ، ثُمَّ رُفِعَتْ، وَحُفِظَ مِنْهَا (إِنَّ اللَّهَ سَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِأَقْوَامٍ لَا خَلَاقَ لَهُمْ. وَلَوْ أَنَّ لِابنِ آدَمَ وَادِيَيْنِ مِنْ مَالٍ لَتَمَنَّى وَادِيًا ثَالِثًا. وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ. وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ)

    அபூமூஸா அல் அஸ்அரீ(ரலி) கூறியதாவது : அல் பராத்திற்கு நிகரான சூரா இறங்கியது , பின் அது உயர்த்தப்பட்டுவிட்டது. அதில் "ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (அபூ உபைத் அவர்களது கிதாப் அல் ஃதாயில் அல் குர் ஆன் 1/323)
حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا دَاوُدَ , يَعْنِي ابْنَ أَبِي هِنْدٍ , عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: " نَزَلَتْ سُورَةٌ فَرُفِعَتْ , وَحُفِظَ مِنْهَا: " لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيَيْنِ مِنْ مَالٍ لَابْتَغَى إِلَيْهِمَا ثَالِثًا , وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ , وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ "
        அபூமூஸா அல் அஸ்அரீ(ரலி) கூறியதாவது : ஒரு சூரா இறங்கியது ,பின் அது உயர்த்தப்பட்டுவிட்டது. அதில் "ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (ஸரஹ் முஸ்கில் அஸார் 5/274, ஹதீஸ் எண்:2035)
மேலும் அல்லாஹ் தனது வேதத்தில்

مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا ۗ أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
    ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?(அல் குர்ஆன் 2:106)
    மேலே குறிப்பிடும் வார்த்தையாலேயே அபூமூஸா அல் அஸ்அரீ(ரலி) அவர்களும் அந்த ஹதீஸில்(முஸ்லீம்1897) “மறக்கடிக்கப்பட்டுவிட்டேன்" என்று கூறுவதிலிருந்தும் மற்ற அறிவிப்புகளில் உயர்த்தப்பட்டுவிட்டது என்று அபூமூஸா(ரலி) அவர்களே கூறுவதாலும் அல்லாஹ் இந்த அத்தியாங்களை உயர்த்தி கொண்டான் என்பது தெளிவாகிறது. 
    
     மேலும் ஹதீஸின் இரண்டாம் பகுதியில் அவர் கூறும் வசனங்கள் முஸப்பிஹாத் அத்தியாங்களான அல் சஃப் மற்றும் அல் இஸ்ரா சூராக்களில் இடம் பெறுகிறது. அல்லாஹ்வால் உயர்த்தப்பட்ட சூராக்களுக்கு நிகராக அல் பராஅத் மற்றும் முஸப்பிஹாத் சூராக்களான அஸ் ஸஃப் மற்றும் அல் இஸ்ரா இடம் பெற்றிருப்பது நபி(சல்) அவர்களது இறுதி ஓதலில் இருப்பவை எதுவும் இன்றிருக்கும் குர்ஆனில் விடுபடவில்லை என்பதை உறுதிபடுத்துகிறது.

      மேலும் முன்சென்ற தொடரில் எப்படி முத்தவாதீரான கிராத்கள் இன்றிருக்கும் சமூகத்திற்கு கிடைத்திருக்கிறது என்பதை அறிவிப்பாளர் தொடர் கொண்டு விளக்கியுள்ளோம். அபூ மூஸா (ரலி) அவர்களது வழியாக வரும் கிராத் ஆன தூரியின் கிராத்தில் எவ்வாறு குர்ஆன் அத்தியாயஙள் உள்ளனவோ அதே போன்று தான் ஏனைய கிராத்களிலும் இடம் பெறுகிறது. ஆக அபூ மூஸா(ரலி) மட்டும் தானாக மறந்திருந்தால் ஏனைய நபிதொழர்கள் வழியாக வரும் கிராத்களில் அதிகப்படியான அத்தியாங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக அனைத்தும் ஒரே அத்தியாய எண்ணிக்கையை கொண்டிருப்பது குர்ஆனின் எந்த பகுதியும் தொலைய வில்லை. அல்லாஹ் கூறியது போலவே அல்லாஹ்வே குர்ஆனை பாதுகாத்துள்ளான் என்பது நிரூபனமாகிறது.



Friday, January 29, 2021

நபி(சல்) அவர்களிடமிருந்து வந்த கிராத்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

variant readings of the quran,நபி(சல்) அவர்களிடம் இருந்து-கிராத்கள்,ஏழு கிராத்கள், ஹப்ஸ்,வர்ஸ்,தூரி,காலுன்,

       நாம் சென்ற தொடரில் ஏழு அஃரூஃபும் இன்றிருக்கும் கிராத்களும் தொடர்புடையவை என்பதை விளக்கியிருந்தோம். கிராத்கள் என்பது நபி(சல்) அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட மாறுபாட்டுடன் குர்ஆனை ஓதுவதாகும். இந்த கிராத்கள் ஒவ்வொன்றும் நபி(சல்) அவர்களிடம், வெகுஜன ஓதலினால் ஒவ்வொரு தலைமுறைகளிலும் கடத்தப்பட்டு இறுதியாக இன்று நம்மிடம் வந்தடைந்திருக்கிறது. அதன் அறிவிப்பாளர் தொடர் குறித்து சிறிய விளக்கத்தை இங்கு காண்போம் இன் ஷா அல்லாஹ்.

வெகுஜன ஓதல் கேட்டலால் கடத்தப்பட்டால் ஏன் ஹஃப்ஸ் கிராத், வர்ஸ் கிராத் என்று பெயரிடப்பட்டிருக்கிறது?

     வெகுஜன ஓதல் கேட்டலால் குர்ஆனின் மாறுபட்ட கிராத்கள் கடதப்பட்டாலும் அந்த கிராத்தினை தற்காலத்தில் ஹஃப்ஸ் அன் ஆஸிம் கிராத். வர்ஸ் அன் நாஃபியின் கிராத் என்று அழைக்கப்பட்டுகிறது. அவர்களது பெயர்களால் அழைக்கப்பட்டதால் அந்த கிராத்களை அவர்கள் தோற்றுவித்தார்கள் என்று பொருள் படாது. உதாரணமாக நாஃபீயின் கிராத்தை எடுத்துக்கொண்டோம் என்றால் அது மதீனாவில் ஓதப்பட்ட வெகுஜன கிராத் ஆகும். அதனை இமாம் நாஃபீ அவர்கள் திறம்பட கற்று அதனை சரியாக கற்று கொடுத்ததால் அது நாஃபீயின் கிராத் என்று அழைக்கபடலாயிற்று. அது போல் இன்று ஹஃப்ஸின் கிராத் என்று அழைக்கப்படுவது ஹஃப்ஸின் சமகாலத்தில், கிராத் அல் ஆம்மா- பெரும்பான்மை ஓதல் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டது. உதாரணமாக ஹஃப்ஸின்( ஹி: 90-180 ) சமகாலத்தவரான அல் ஃபர்ரா (ஹி 140-207) தனது அல் மஆனீ அல் குர்ஆன் என்ற நூலில் பாகம் 1 பக்கம் 38ல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்

وقوله: وَالَّذِي خَبُثَ لا يَخْرُجُ إِلَّا نَكِداً (58) قراءة العامة وقرأ بعضُ أهل المدينة: نَكَدا.

                 அதாவது அல்குர்ஆன் 7:58 இல் இடம் பெறும் -  وَالَّذِي خَبُثَ لا يَخْرُجُ إِلَّا نَكِداً என்பது பெரும்பான்மை ஓதல் மதீனாவாசிகளில் சிலர் - نَكَدا என்று  ஓதுகிறார்கள்.

        மேற்குறிபிட்ட ஓதலில் பெரும்பான்மை ஓதல் என்பது ஹஃப்ஸ் அன் ஆஸிமின் ஓதல் என்று இன்று அழைக்கப்படுகிறது. அதுபோல சில மதீனாவாசிகளின் ஓதல் என்பது இன்று அபூஜாஃபரின் ஓதல் என்று அழைக்கப்படுகிறது.( கிராத் அபூஜாஃபர் என்பது 7 முத்தவாதீரான கிராத் அல்லாத முன்று மஸ்ஹூர் கிராத்களில் ஒன்றாகும் ஆகும். ) மேலும் இது போன்ற பெரும்பான்மை ஓதல் குறித்து முன்சென்ற தொடரில் இது குறித்து விரிவாக விளக்கியுள்ளோம்.

          இந்த கிராத்களின் பெயரால் அறியப்படும் இமாம்கள் தங்களது பகுதியில் குறிபிட்ட நபித்தோழர் அல்லது நபித்தோழர்கள் வழியாக பெறப்பட்ட ஓதலை திறம்பட கற்று அதனை பயிற்றுவித்தனர். குறிபிட்ட இந்த இமாம்கள் எந்த வழியாக இந்த ஓதலை நபி(சல்) அவர்களிடம் இருந்து பெற்றார்கள் என்பது இஸ்லாமிய வரலாற்றில் தெளிவாக பதிவிடப்பட்டுள்ளது. அந்த ஏழு கிராத்களில் இன்று மக்களிடம் பெரும்பான்மையாக காணப்படும் நான்கு கிராத்களும் அது எவ்வாறு நபித்தோழர்கள் வழியாக நபி(சல்) அவர்களது ஓதலுடன், நபி(சல்) அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட ஓதலுடன் தொடர்புடையது என்பதை காண்போம்.

          இதுதான் கிராத் அல் ஆம்மா அல்லது பெரும்பான்மையினரின் ஓதல் ஆகும். நபி(சல்) அவர்களிடம் இருந்து உபை இப்னு கஅப்(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அலி(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகிய நபித்தோழர்கள் குர்ஆன் ஓதலை பெறுகின்றனர். மேற்குறிபிட்ட நபித்தோழர்களின் கிராத்தை அபூஅப்துர் ரஹ்மான் அல் ஸுலாமி மற்றும் ஜிர் இப்னு ஹபீஸ் வழியாக ஆஸிம் அவர்கள் பெறுகிறார்கள். ஹஃப்ஸ், சுஅபா ஆகியோர் ஆஸிம் அவர்களது நேரடி மாணவர்கள் ஆவார்கள். இதில் ஹஃப்ஸின் ஓதல்தான் பெரும்பான்மையினரின் ஓதலாகும். அந்த அறிவிப்பாளர் தொடரை காண்போம்.


      இங்கு ஹஃப்ஸின் ஓதல் குறித்து பேசும் போது ஹஃப்ஸ் அவர்கள் ஹதீஸ்களில் பலவீனமானவர் என்ற குற்றச்சாட்டை இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கின்றனர். இவர்களின் இந்த விமர்சனம் முழுமையானது அல்ல. ஹஃப்ஸின் ஹதீஸ்கள் விடப்பட்டவை என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆனால் குர்ஆன் ஓதலை பொறுத்தவரை அவரது ஓதல் துல்லியமானது என்பதுதான் சரியானது. பெரும்பான்மை மக்களின் ஓதலுக்கு மாற்றமாக ஓதி இருந்தால் அவரது ஓதல் குர்ஆனின் வெகுஜன ஓதல் கேட்டல் கற்றல் முறைமையினால் காணாமல் போயிருக்கும். மாறாக அது பெரும்பான்மை மக்களின் ஓதலாகவே அது வரலாற்றில் காணப்பட்டது போல இன்றும் காணப்படுகிறது. அதனால்தான் அத்தஹபி இது குறித்து பேசும் போது. ஹஃப்ஸ், ஓதலில் துல்லியமானவர், ஹதீஸ்களில் பலவீனமானவர் ஏனென்றால் ஹதீஸ் துறையில் அவர் குர்ஆன் துறையை போன்று விற்பன்னர் அல்ல. மற்றபடி அவர் உண்மையாளரும், நேர்மையாளரும் ஆவார். (அல் மீஸான்)

           மேலும் ஹஃப்ஸ் நினைவாற்றல் குறைபாடு போன்றவற்றால் குறை கூறப்பட்டவர் அல்ல. ஆக ஹதீஸில் போதிய கவனமற்றவர் என்பதைத்தான் மேற்குறிபிட்ட தஹபி அவர்களது விளக்கம் நமக்கு எடுத்துரைக்கிறது. அது அவரது குர்ஆன் ஓதலில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது.

              உபை இப்னு கஅப்(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் கிராத்தை இப்னு அப்பாஸ்(ரலி) மற்றும் அபூஹுரைரா(ரலி) வழியாக யஸீத் இப்னு காஃகா, அப்துர் ரஹ்மான் இப்னு ஹுர்முஸ் மற்றும் ஸாலிக் இப்னு ஹவாத் ஆகியோர் பெறுகிறார்கள். இவர்களது மாணவர் நாஃபீ ஆவார். வர்ஸ், காலுன் ஆகியோர் நாஃபீயின் நேரடி மாணவர்கள் ஆவர்.


           உபை இப்னு கஅப்(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி),உஸ்மான்(ரலி), அலி(ரலி), உமர்(ரலி), அபூமூஸா அல் அஷ்அரீ(ரலி) ஆகியோர் கிராத்தை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி), அபூ ஹுரைரா(ரலி), மூலம் இப்னு அம்ர் அபூ அஸ்வதி அல் தூஃலி , ரபிஃ இப்னு மஹ்ரான் , ஹத்தான் இப்னு அப்துர் ரக்காஸ் ஆகியோர் பெறுகிறார்கள்.  அதாஃ இப்னு அபி ரபியா அல் குர்ஸி, இக்ரிமா இப்னு ஹாலித் அல் மக்ஸூமி , இக்ரிமா மவ்லா இப்னு அப்பாஸ், ஸயீத் இப்னு ஜபீர் அல் அஸதீ, முஜாஹித் இப்னு ஜப்ர், அல் ஹஸன் அல் பஸரீ, யஹ்யா இப்னு யஃமூர் ஆகியோர் மேற்குறிபிட்டவர்களிடம் இருந்து பெற்று அபூ அம்ரூ அவர்களுக்கு அறிவிக்கிறார்கள். அல் தூரி மற்றும் அல் ஸூஸி ஆகியோர் அவர்களிடம் இருந்து பெறுகிறார்கள். 


              நபிதோழர் அபூதர்தா(ரலி) அவர்களது ஓதலை இப்னு ஆமிர் வழியாக ஹிஸாம் இப்னு ஆமிர் அஸ்ஸலாமி மற்றும் இப்னு தக்வான் ஆகியோர் அறிவிக்கிறார்கள்.


         மேற்குறிபிட்ட அனைத்து அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் இமாம்கள் யாவரும் முன்சென்ற இமாம்களிடம் பயின்ற பல மாணவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர். உதாரணமாக நாஃபி அவர்கள் 70க்கும் மேற்பட்ட தாபியீக்களிடம் கல்வி பயின்றுள்ளார்கள். அது அனைத்தையும் நாம் குறிப்பிடவில்லை. அதில் முக்கியமான ஆசிரியர்கள் மட்டுமே மேற்குறிபிட்ட தொடரில் குறிப்பிட்டுள்ளோம்.  இவ்வாறான வெகுஜன ஓதல்களான ஏழு கிராத்களையும் , மூன்று மஸ்ஹூர் கிராத்களையும் மனனமிட்ட காரிகள் இன்றும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இஸ்லாமிய உலகில் குர்ஆனின் கிராத்கள் பின்வருமாறு பரவியுள்ளது.

1. ஹஃப்ஸின் ஓதல் இஸ்லாமிய உலகில் 95% மக்களின் பயன்பாட்டில் இருப்பதாகும்.

2.நாஃபீயின் ஓதல் இன்றைய இஸ்லாமிய உலகின் 3.7% பயன்பாட்டில் உள்ளது.

3.அல் தூரியின் ஓதல் இன்றைய இஸ்லாமிய உலகில் இன்று 0.3% பயன்பாட்டில் உள்ளது.

4. இப்னு ஆமிரின் ஓதல் இன்றைய இஸ்லாமிய உலகின் 1% பயன்பாட்டில் இருப்பது ஆகும்.


              அதுபோல இன்றைக்கு இவை அனைத்தும் எழுத்து வடிவிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக வேறுபட்ட ஓதல்கள் இருப்பதால் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பது குருட்டுத்தனமான வாதமாகும். குர்ஆனின் பெரும்பான்மை ஓதலும், மக்களின் ஓதலில் ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு ,அல்லாஹ்வின் மகத்தான் கருணையினால் நபி(சல்) அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட ஏனைய அஃரூஃப்களும் இன்றும் பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பது நிறுவப்பட்டுள்ளது .அதனால்தான் குர்ஆன் குறித்து ஆட்ரியன் புரோகெட் என்ற ஆங்கில அறிஞர் பின்வருமாறு கூறுகிறார்
   குர்ஆன் வாய்வழியாக மட்டுமே முதன் நூற்றாண்டில் கடத்தப்பட்டிருந்தால், ஹதீஸ்களிலும், இஸ்லாமிற்கு முந்தைய அரேபிய பாடல்களிலும் காணப்படும் கணிசமான உரைமாறுபாடுகள் போன்று காணப்பட்டிருக்கும். அதேபோல் எழுத்து வடிவில் மட்டுமே கடத்தப்பட்டிருந்தால் மதீனா சாசனத்தின் வேறுபட்ட வழிகளில் பெறும் மூல பிரதிகளில் காணப்படும் கணிசமான மாறுபாடுகள் போன்று காணப்பட்டிருக்கும். இவை இரண்டுமே குர்ஆனின் விஷயத்தில் பொறுந்தாது. அன்று நிச்சயமாக குர்ஆனின் வாய்வழி பரவலில் தோன்றும் மாறுபாடுகளை கட்டுப்படுத்தும் அதற்கு இணையான எழுத்து வடிவிலான பரவல் இருந்திருக்க வேண்டும். அதேபோன்று எழுத்து வடிவிலான பரவலை பாதுக்காக்கும் வாய்வழி பரவல் இருந்திருக்க வேண்டும். முஹம்மதின் மரணத்திற்கு பிறகான குர்ஆன் பரவல் அடிப்படையில் மாறக்கூடியதாய் இல்லாமல் நிலைத்தன்மை உடையதாய் இருந்தது.   ( P.No:44,Adrian Brockett, “The Value of the Hafs and Warsh Transmissions for the Textual History of the Qur’ an,” in Approaches to the History of the Interpretation of the Qur’ an, ed. Andrew Rippin (Oxford: Clarendon Press,
1988),  & P.No: 99 Story of the Qur'an_ Its History and Place in Muslim Life by Ingrid Mattson)
ஹதீஸ்களில் காணப்படும் நபிதோழர்களின் மாறுபட்ட ஓதல்கள்:
          குர்ஆனின் பெரும்பான்மை ஓதல் குறித்தும் குர்ஆன் எப்படி ஓதலினால் பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பதையும் சென்ற கட்டுரைகளில் விரிவாக கண்டோம். குர்ஆனின் முத்தவாதிரான ஓதல்கள் எப்படி நபி(சல்) அவர்களோடு தொடர்புடையது என்பதை விளக்கி உள்ளோம். முன் சென்ற தொடர்களை விரிவான ஆதாரங்களுடன் கண்டதின் நோக்கம், இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களுக்கான பதில்களை எளிமையாக விளங்கிக்கொள்வதற்கே. இனி வரும் தொடர்களில் சில ஹதீஸ்களில் காணப்படும் நபித்தோழர்களின் மாறுபட்ட ஓதல்கள் குறித்து இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் விமர்சனத்தையும் விளக்கத்தையும் காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். அதற்கு முன்பாக நாம் முன்சென்ற கட்டுரைகளின் சில பகுதிகளை நாம் நினைவு கூறுவோம்,

1. குர்ஆன் என்னும் வெகுஜன ஓதல்:
இமாம் சுயூத்தி அவர்கள் குர்ஆன் குறித்த தனது இத்கான் ஃபீ உளூம் அல் குர் ஆன் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்:

الْأَوَّلُ: لَا خِلَافَ أَنَّ كُلَّ مَا هُوَ مِنَ الْقُرْآنِ يَجِبُ أَنْ يَكُونَ مُتَوَاتِرًا فِي أَصْلِهِ وَأَجْزَائِهِ وَأَمَّا فِي مَحَلِّهِ وَوَضْعِهِ وَتَرْتِيبِهِ فَكَذَلِكَ عِنْدَ مُحَقِّقِي أَهْلِ السُّنَّةِ لِلْقَطْعِ بِأَنَّ الْعَادَةَ تَقْضِي بِالتَّوَاتُرِ فِي تَفَاصِيلِ مِثْلِهِ لِأَنَّ هَذَا الْمُعْجِزَ الْعَظِيمَ الَّذِي هُوَ أَصْلُ الدِّينِ الْقَوِيمِ وَالصِّرَاطِ الْمُسْتَقِيمِ مِمَّا تَتَوَفَّرُ الدَّوَاعِي عَلَى نَقْلِ جُمَلِهِ وَتَفَاصِيلِهِ فَمَا نُقِلَ آحَادًا وَلَمْ يَتَوَاتَرْ يُقْطَعُ بِأَنَّهُ لَيْسَ مِنَ الْقُرْآنِ قَطْعًا.
     குர்ஆன் முழுமையாகவும், பகுதியாகவும் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அஹ்லுஸ் சுன்னாவை பொருத்தவரை அதன் அமைப்பும், அதன் வரிசை முறையும் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது , அதனால் அது எந்த சர்ச்சைக்கும் அப்பார்பட்டது.  ஏனென்றால் இந்த மகத்தான அற்புதம்,  உண்மையான மார்க்கத்தின் அடிப்படையாகவும், நேரான பாதையுமாக இருக்கிறது. அது அமோதிக்கப்பட்ட உண்மையாகும். அதன் விளைவாக எண்ணிலடங்கா அறிவிப்பாளர் இன்றி ஒற்றை அறிவிப்பாளர் வழியாக வந்த எதுவும் குர்ஆன் ஆகாது (இத்கான் ஃபீ உளூம் அல் குர்ஆன் 1/266)

             இந்த கூற்றின் விளக்கத்தை இங்கு விளக்குவது இன்றியமையாத ஒன்றாக இருப்பதனால் இந்த கூற்றை சற்று விரிவாக காண இருக்கிறோம். 

மேற்குறிபிட்ட கூற்றான குர்ஆன் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது என்பதின் பொருள்:

     குர்ஆன் என்பது ஒரே நேரத்தில் பலர் ஓதி, பலர் கேட்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டது ஆகும். இதை நாம் முன்சென்ற தொடரில் கண்டோம். அபூதர்தா(ரலி) அவர்கள் குர்ஆனை எப்படி கற்பிப்பார்கள் என்ற முறையை நாம் பதிவிட்டிருந்தோம். சிறுவயதிலான பாலர் பாடம் போல  குர்ஆனை ஒரு தருணத்தில் பலர் ஓத அதை பலர் கேட்டு வெகுஜன ஓதல் கேட்டலால் கடத்தப்பட்டது. ஆக ஒரு சில அறிவிப்பாளர் வழியாக வரும் ஹதீஸ்களில் இடம்பெறும் குர்ஆன் குறித்த குறிப்புகள் , இன்றிருக்கும் முத்தவாதீரான குர்ஆனில் இருந்து முரண்பட்டால் அது ஏற்கப்படாது. இது வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட உண்மை. ஒரே நேரத்தில் பலர் ஓதியும் பலர் கேட்டும் வெகுஜன ஓதல் கேட்டல் முறையில் கிடைத்த ஒரு விசயம் ஒரு சிலரால மறுக்கப்பட்டால் அது ஏற்புடையாதாக இருக்காது என்பது நாம் அறிந்ததே.

2.நாஸிக் மன்ஷுக்:
         நபி(ஸல்) அவர்களது இறுதி ஓதலின் சாட்சியாக இருந்தவர் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆவார்கள். அது தலைசிறந்த நபிதோழர்களால் ஒத்த கருத்தில் ஏற்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் முன் சென்ற தொடரில் கண்டோம். இதற்கு மாற்றமாக இடம் பெறும் செய்திகள் எந்த மதிப்பும் அற்றது. நபி(சல்) அவர்களது இறுதி ஓதலுக்கு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) சாட்சியாக இருந்தார்கள் என்பதையும், அவர்கள் அபூபகர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), உபை இப்னு காஃப்(ரலி) போன்றோர்களாலும் இந்த விசயத்தில் முன்னிறுத்தப்பட்டவர் என்பதை நாம் முன்பே கண்டிருக்கிறோம். ஆக இறுதி ஓதலில் இருந்த நபி(சல்) அவர்களது சேர்த்தல், விலக்கலுக்கு மாற்றமாக இடம்பெறும் செய்திகள் எந்த மதிப்பும் அற்றது.

        மேற்குறிபிட்ட இரண்டு அடிப்படைகளில் குர்ஆன் மாறுபாடுகள் குறித்த அனைத்து ஹதீஸ்களையும் வகைபடுத்தி விடலாம். குர்ஆனின் இத்தகைய மாறுபாடுகள் குறித்த ஹதீஸ்களை நாம் எளிமையாக தேடி எடுக்க வசதியாக பல இஸ்லாமிய எதிர்ப்பு வலைத்தளங்கள் இத்தகைய ஹதீஸ்களை வரிசைபடுத்தி அளித்துள்ளன. அல்லாஹ் எதிரிகளின் மூலமாகவும் இஸ்லத்தை எளிமையாக்குகிறான் என்பதுதான் உண்மை. அல்ஹம்துலில்லாஹ்….இந்த வரிசையில் சில ஹதீஸ்களையும், அதன் விளக்கத்தையும் இனி வரும் கட்டுரைகளில் காண இருக்கிறோம். இன் ஷா அல்லாஹ்.