பக்கங்கள் செல்ல

Monday, November 14, 2016

எதிர்தொடர் 19: உடைந்த சிலுவை-பாகம்: 13- இஸ்லாம் கூறும் யூத கிறித்தவ வேதம்

ஏக இறைவனின் திருப்பெயரால்

      இன்றிருக்கும் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் மனித கரங்களால் கரைபடுத்தபட்ட ஒரு புத்தகமே. அது இஸ்லாம் கூறும் தவ்ராதோ இஞ்ஜீலோ இல்லை என்று நாம் கூறும் போது இன்றைய கிறித்தவர்கள் தொடர்ச்சியாக ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். அந்த வாதங்களை ஆய்வுக்கு உட்படுத்தி முன்சென்ற தொடர்களில் நாம் நிறுவியவற்றைத்தான் இஸ்லாம் கூறுகிறது என்பதைத்தான் இந்த தொடரில் காணவுள்ளோம் இன்ஷா அல்லாஹ்.

இஸ்லாம் கூறும் யூத கிறித்தவர்களின் வேதங்கள்:

    இன்றிருக்கும் கிறித்தவ மிசனரிகள் ஒரு வாதத்தை முன்வைத்து ஆள்சேர்க்கு வேலையில் ஈடுபட்டு வருகிறது. அதாவது இன்றிருக்கும் பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகம்தான் இஸ்லாம் கூறும் மோசேக்கு இறங்கிய தவ்ராத் என்னும் தோரா என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். ஆனால் நாம் உடைந்த சிலுவை தொடர் 4 ல் பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு புத்தகத்தையும் அந்த மொழியியல் மற்றும் வரலாற்றின் குறிப்புகளின் அடிப்படையில் அந்த 5 புத்தகமும் மோசேவின் பிற்காலத்தை சேர்ந்த் பெயர் அறியப்படாத ஒருவரால் இயற்றப்பட்டது என்பதை நிறுவியுள்ளோம். குர்ஆனும் நபிகளாரின் பொன்மொழிகளான ஹதீஸ்களும் என்ன கூறுகிறது என்பதை காண்போம்.

أَفَتَطْمَعُونَ أَنْ يُؤْمِنُوا لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌ مِنْهُمْ يَسْمَعُونَ كَلامَ اللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُ مِنْ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ (٧٥) وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُمْ بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُمْ بِهِ عِنْدَ رَبِّكُمْ أَفَل تَعْقِلُونَ (٧٦)أَوَلا يَعْلَمُونَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ (٧٧) وَمِنْهُمْ أُمِّيُّونَ لا يَعْلَمُونَ الْكِتَابَ إِلا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلا يَظُنُّونَ (٧٨) فَوَيْلٌ لِلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلا فَوَيْلٌ لَهُمْ مِمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَهُمْ مِمَّا يَكْسِبُونَ (٧٩

    (முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள். மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, "நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று சொல்கிறார்கள்; ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, "உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடு வதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று (யூதர்கள் சிலர்) கூறுகின்றனர். அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா? மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதி வைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (அல் குர்ஆன்2:75-79)

     யூதர்களில் ஒரு பிரிவினர் ஒரு நூலை தங்களது கைகளால் எழுதி வைத்துக்கொண்டு இது இறைவனிடம் இருந்து வந்த்தாக கூறி வருகின்றனர். இதை நாம் சென்ற தொடர்களில் தெளிவாக ஆதாரப்பூர்வமாக விளக்கியுள்ளோம். மேலும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியில் பின் வருமாறு காணப்படுகிறது.

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى الْبَلْخِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ مُجَالِدٌ أَخْبَرَنَا عَنْ عَامِرٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَتِ الْيَهُودُ بِرَجُلٍ وَامْرَأَةٍ مِنْهُمْ زَنَيَا فَقَالَ ائْتُونِي بِأَعْلَمِ رَجُلَيْنِ مِنْكُمْ فَأَتَوْهُ بِابْنَىْ صُورِيَا فَنَشَدَهُمَا ‏"‏ كَيْفَ تَجِدَانِ أَمْرَ هَذَيْنِ فِي التَّوْرَاةِ ‏"‏ ‏.‏ قَالاَ نَجِدُ فِي التَّوْرَاةِ إِذَا شَهِدَ أَرْبَعَةٌ أَنَّهُمْ رَأَوْا ذَكَرَهُ فِي فَرْجِهَا مِثْلَ الْمِيلِ فِي الْمُكْحُلَةِ رُجِمَا ‏.‏ قَالَ ‏"‏ فَمَا يَمْنَعُكُمَا أَنْ تَرْجُمُوهُمَا ‏"‏ ‏.‏ قَالاَ ذَهَبَ سُلْطَانُنَا فَكَرِهْنَا الْقَتْلَ فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالشُّهُودِ فَجَاءُوا بِأَرْبَعَةٍ فَشَهِدُوا أَنَّهُمْ رَأَوْا ذَكَرَهُ فِي فَرْجِهَا مِثْلَ الْمِيلِ فِي الْمُكْحُلَةِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِرَجْمِهِمَا ‏.‏

      யூதர்கள் அவர்களிடையே விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்துவந்தனர். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “உங்களில் அதிக ஞானமுடைய இருவரை அழைத்து வாருங்கள்” என்று அவர்களிடம் கூறினார்கள். யூதர்கள் சுரையாவின் இரு புதல்வர்களை அழைத்து வந்தனர். நபி(ஸல்) அவர்கள் அவர்களிடம் “தவ்ராத்தில் இதற்கு உரிய தண்டனையாக நீங்கள் அறிந்த்து என்ன? “ என்று கேட்டார்கள். அதற்கு “ ஆண் உறுப்பு பெண்ணுறுப்பினுள் கண் மை தூரிகை மை ஜாடியில் இருப்பதை போல் இருப்பதை கண்டு அதற்கு நான்கு சாட்சிகள் இருக்குமாயின் அவர்களுக்கு கல்லெறி தண்டைனை வழங்கப்படும் என்பதை நாங்கள் தவ்ராதில் காண்கிறோம்” என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “நீங்கள் ஏன் கல்லெறி தண்டனை நிறுத்தி விட்டீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “ எங்களிடம் இருந்து ஆட்சி பிடுங்க பட்டுவிட்டது. அதனால் நாங்கள் கொல்வதை வெறுத்துவிட்டோம்” என்று பதிலளித்தனர். என்வே நபி(ஸல்) அவர்கள் நான்கு சாட்சிகளை கொண்ட வருமாறு கூறினார்கள். நான்கு சாட்சிகளை அவர்கள் அழைத்து வந்தனர். அவர்கள் இந்த ஆணின் உறுப்பு இந்த பெண்ணின் உறுப்பில் கண் மை தூரிகை ஜாடியில் இருப்பதை போன்று இருந்தற்கு சாட்சி பகர்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் இந்த இருவருக்கும் கல்லெறி தண்டனைக்கு உத்தரவிட்டார்கள். (அபூதாவூத் 4452).

          அதாவது விபச்சார குற்றத்தை நிறுபணம் செய்ய நான்கு சாட்சிகள் தேவை என்ற குறிப்பு தவ்ராத்தில் இடம் பெறுவதாக அழைத்து வரப்பட்ட யூத அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இத்தகைய குறிப்புகள் இன்றை தவ்ராத் என்று கிறித்தவர்களும் யூதர்களும் வாதிடும் பழைய ஏற்பாட்டின் ஐந்து புத்தகங்களில் இல்லை. இதை நாம் கூறியவுடன் கிறித்தவர்கள் இது இஸ்லாமியர்களின் மோசடி என்று கூறுகின்றனர். மேலும் பழைய ஏற்பாட்டின் தவ்ராத்தை தவிர வேறு எந்த ஏடுகளும் இல்லை என்று வாதிடுகின்றனர். ஆனால் பழைய ஏற்பாட்டிலே இதற்கான சாட்சிகள் அமைந்துள்ளன.

பின் வரும் பழைய ஏற்பாட்டின் சில வசனங்கள் இதை விளக்க போதுமானது.

      கடந்த காலத்தில், கர்த்தருடைய வார்த்தையைப் பிரச்சாரம் செய்ய இன்னொரு மனிதன் இருந்தான். அவனது பெயர் உரியா. அவன் செமாயாவின் மகன். உரியா கீரியாத்யாரீம் என்ற ஊரைச் சேர்ந்தவன். எரேமியா செய்ததுபோன்றே அவனும் இந்நகரத்திற்கும் தேசத்திற்கும் எதிராக தீர்க்கதரிசனம் கூறினான். உரியா பிரச்சாரம் செய்வதை யோயாக்கீம் அரசனும் அவனது படை அதிகாரிகளும் யூதாவின் தலைவர்களும் கேட்டனர். அவர்கள் கோபம் கொண்டனர். யோயாக்கீம் அரசன் உரியாவைக் கொல்ல விரும்பினான். ஆனால் உரியா யோயாக்கீம் தன்னைக் கொல்ல விரும்புவதைப்பற்றி அறிந்தான். உரியா பயந்தான். எனவே எகிப்து நாட்டிற்குத் தப்பித்து ஓடினான். 

       அதாவது மேற்குறிபிட்ட வசனம் உரியா உயிருக்கு பயந்து எகிப்து தேசத்திற்கு சென்றதாக கூறுகிறது. ஆனால் யூதர்கள் எகிப்திற்கு செல்வது மோசே மீட்டு வந்ததற்கு பிறகு தடுக்கப்பட்டுவிட்ட்தாக உபாகமம் கூறுகிறது. 

             அந்த அரசன் தனக்காக அதிகமான குதிரைகளை வைத்துக்கொள்ளக் கூடாது. அதுமட்டுமின்றி அதிகமான குதிரைகளுக்காக ஜனங்களை எகிப்திற்கு அனுப்பக் கூடாது. ஏனென்றால், ‘நீங்கள் திரும்பவும் வந்த வழியாக போகவே வேண்டாம்’ என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லி உள்ளார். (உபாகமம் 17:16 )

          உரியா மேற்குறிபிட்ட சட்டத்தை மீறியது எதன் அடிப்படையில். வேறு சட்ட ஏடுகள் எதுவும் மோசேவிற்கு வழங்கப்பட்டனவா? அதில் இந்த சட்டம் இருந்திருக்குமா?????

       கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: ஓய்வுநாளில் சுமைகளைத் தூக்கிச் செல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். ஓய்வுநாளில் எருசலேமின் வாசல்கள் வழியாகச் சுமையைத் தூக்கிவராதீர்கள். ஓய்வுநாளில் உங்கள் வீட்டுக்கு வெளியே சுமையைத் தூக்கி வராதீர்கள். அந்த நாளில் எந்த வேலையும் செய்யாதீர்கள். நீங்கள் ஓய்வுநாளை ஒரு பரிசுத்த நாளாக்க வேண்டும். நான் இதே கட்டளையை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்தேன். (எரேமியா 17:21-22)

    ஓய்வு நாளில் சுமைகளை  தூக்கக்கூடாது என்ற கட்டளை பழைய ஏற்பாட்டின் தவ்ராத் என்று கிறித்தவம் கூறும் எந்த பகுதியிலும் இல்லை. ஆக முன்பு கர்த்தர் இட்ட கட்டளை யாத்திராகமத்தில் பின் வருமாறு காணப்படுகிறது ஆனால் சுமை தூக்குதல் குறித்து எந்த வசனத்தையும் காணமுடியவில்லை.

         உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள். ஆனால் ஏழாம் நாள் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தும்படி ஓய்வெடுக்க வேண்டிய நாள். எனவே அந்நாளில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் வேலை செய்யக்கூடாது. உங்கள் மிருகங்களையோ, உங்கள் நகரங்களில் வாழும் அந்நியர்களையோ வேலை வாங்கக்கூடாது. (யாத்திராகமம் 20:9-10)

      எந்த வேலையை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்ற பட்டியல் இருக்கும் நூல் எது? இது குறித்து கர்த்தர் விடுத்த கட்டளை எந்த வேதத்தில் உள்ளது என்பதை கிறித்தவ உலகம் விளக்குமா????

உபாகமம் 12:13-14 ல் பின்வருமாறு இடம் பெறுகிறது:

         நீங்கள் கண்ட இடங்களில் எல்லாம் உங்கள் விருப்பப்படி தகனபலிகளை செலுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். உங்கள் கோத்திரங்கள் நடுவில் அவரது விசேஷ இடத்தினை கர்த்தர் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார். அந்த இடத்தில் மட்டுமே நீங்கள் உங்கள் பலிகளைச் செலுத்தி, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் நீங்கள் அங்கேயே செய்யவேண்டும். (உபாகமம் 12:13-14).

       ஆனால் எலியா தீர்க்கதரிசியோ கர்மேல் மலையில் தனது விருப்பம் போல் தகன பலி செலுத்தியதாக இடம் பெறுகிறது. (1 ராஜாக்கள் 18: 20- 40). இத்தகைய சட்ட அனுமதி எந்த தோராவில் உள்ளது. இப்படி பல சட்டங்கள் மற்றும் அதற்கான விதிவிலக்குகளும் எதில் இடம் பெறுகிறது என்பதை கிறித்தவ உலகம் விளக்க கடமைபட்டுள்ளது. 

ஆனால் பழைய ஏற்பாடு பின்வருமாறு கூறுகிறது: 

    கர்த்தர் கூறிய எல்லா விதிகளையும், கட்டளைகளையும் மோசே ஜனங்களுக்குக் கூறினான். எல்லா ஜனங்களும், “கர்த்தர் கூறின எல்லா கட்டளைகளுக்கும் நாங்கள் கீழ்ப்படிவோம்” என்று ஏகமாய் பதிலுரைத்தனர். (யாத்திராகமம் 24:3) 

     ஆக மோசே மொத்தமாக மக்களிடம் கூறிய செய்திகளை கொண்ட எந்த சட்ட நூலில் இந்த விதிவிலக்கு இடம் பெற்றுள்ளது என்ற கேள்விக்கு எந்த பதிலும் கிறித்தவ உலகில் இல்லை. 

வாய்வழியாக பாதுகாக்கப்பட்ட உண்மை தோரா:

       யூதர்களில் ஒரு பிரிவினர் வாய்வழி தோரா என்று ஒன்று இருந்ததாக கூறுகின்றனர். “பிர்க்கே அவோட்” என்ற யூதர்களின் நூலில் பின்வருமாறு இடம் பெறுகிறது.

         “Moses received the Torah (4) from Sinai (5), and handed it down to Joshua, and Joshua to the elders (6),and the elders to the prophets, and the prophets delivered it to the men of the Great Synagogue (7). They saidthree things, “Be deliberate in judgment; raise up many disciples; and make a fence about the Torah” (8).(Avot 1:1)

          இந்த வசனத்தில் இடம்பெறும் தோராவை (The Sun, The Earth போல the Thorah என்பது சிறிது சிந்திக்க வேண்டிய வார்த்தை) யூத அறிஞர்கள் வாய்வழி தோரா என்றே விளக்கமளிக்கின்றனர். உண்மையில் யூத அறிஞர்களின் இந்த கூற்று சிந்திக்க வேண்டிய ஒன்று. அதாவது உண்மையில் கிறித்தவர்கள் கூறுவது போல பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகம்தான் தோரா என்றால் அதில் மோசேயின் மரணச் செய்தி இடம் பெற வாய்பில்லை. அது பின்னாளில் யாரோ ஒருவரால் இணைக்கப்பட்ட ஒன்று. மேற்கூறியவாறு சட்ட முரண்பாடுகள் இருக்காது. அதிக தகவல் இருக்க கூடாது. ஆனால் உபாகமம் பின் வருமாறு கூறுகிறது

        “இஸ்ரவேல் ஜனங்களே, இனி நான் போதிக்கும் கட்டளைகளையும், நியாயங்களையும் கவனியுங்கள். அவற்றைக் கடைபிடித்தால் நீங்கள் வாழலாம். பிறகு உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் நிலத்தை, சென்று எடுத்துக்கொள்ளுங்கள். நான் இடும் கட்டளைகளுடன் எதையும் நீங்கள் சேர்க்கவும் கூடாது. மேலும் எதையும் (நீங்கள்) நீக்கவும் கூடாது (உபாகமம் 4:2).

             எதுவும் சேர்க்கப்படாத அந்த தோரா எங்கே என்பதுதான் முக்கியமான கேள்வியாகும் அதற்கு இன்று வரை கிறித்தவ உலகில் பதில் இல்லை. யூதர்களிடம் இன்றிருக்கும் பழைய ஏற்பாடு அல்லாத வாய்வழி செய்திகள் இருந்தது என்றும் அவற்றை யூதர்கள் மனனமிட்டு பாதுகாத்தனர் என்று வரலாற்று நூலகள் குறிக்கின்றன,

ஜோசபஸ் பின்வருமாறு தனது நூலான “Antiquities of Jews”ல் குறிப்பிடுகிறார்.

            What I would now explain is this, that the Pharisees have delivered to the people a great many observances by succession from their fathers, which are not written in the laws of Moses;(Antiquities of Jews XIII :10.6)

         இப்படி வாய்வழியாக யூதர்கள் ஒரு நூலை இரண்டாம் ஆலயக் காலம் வரை பாதுகாத்து வந்தனர். அந்த நூல் கிபி 200களில் எழுத்துவடிவம் பெறத் துவங்கியது. அதன் விரிவாக்கமாகத்தான் தல்மூத போன்றவை இயற்றப்பட்டது. ஆனால் தல்மூதும் யூத அறிஞர்களின் கைவரிசையால் கரைபட்டு போனது என்று வரலாறு கூறுகிறது.

         While it is true that the Mishnah and the Talmud contain Sinaitic many sentences called "halakot Ie Moseh mi Sinai "(= "oral laws revealed to Moses on Sinai"), some of which may really be based on Mosaic tradition, yet there is no proof of the accuracy of this terminology. The phrase "halakah le-Mosheh mi Sinai" must not be taken literally, since many of the halakot thus designated are admittedly later rabbinical statutes. The expression merely indicates, as Asher b. Jehiel explains in "Hilkot Mikwa'ot," 1, that the halakot in question are as clear and as generally recognized as if they were derived from Moses on Sinai (comp. Jair Ilayyim Bacharach in his responsa "Hawwot Yair," No. 192). while, according to R. Samuel (Tem. 16a), many of the halakot which Moses had taught orally were forgotten, and were never transmitted to later generations. (Oral Law: Jewish Encyclopedia by Isidore Singer)

        இந்த கருத்தை நாம் முன்வைத்ததும் கிறித்தவர்கள் நபி(சல்) அவர்கள் காலத்தில் தோரா இருந்ததே என்று எதிர் வாதம் வைக்கின்றனர். மேலும் அந்த தோரா எங்கே என்றும் கேட்கின்றனர். நபிமொழியில் பின்வருமாறு காணப்படுகிறது.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

        வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'வேதக்காரர்கனை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூஸாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்' (திருக்குர்ஆன் 02:136) என்று கூறினார்கள்.(புகாரி 4485)

அதற்கான பதில் இதுதான்:

          எழுத்து வடிவம் பெற்ற வாய்வழி செய்தியின் நூல் இன்றளவும் இல்லை. ஆனால் அதன் விரிவுரைகள் மட்டும் இருக்கிறது. எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டதாக  கூறப்படும் பழைய ஏற்பாட்டையே சில பிரதிகள்தான் யூதர்கள் எடுத்தனர் எனும் போது, (அதிகாரப்பூர்வமாக மூன்று பிரதிகள்தான் ஆலயத்தில் இருந்ததாக பாபிலோனிய தல்மூத் கூறுகிறது) இந்த உண்மை தோராவின் நிலை.....உதாரணமாக மோசேயின் பல வாய்வழி செய்திகளை மனனமிட்டு பலருக்கு கற்று கொடுத்த ஹனானியாஹ் பின் தெராடியோன் என்ற ரப்பி, அவரால் உருவாக்கப்பட்ட தோராவின் சுருளுடன் சேர்த்து கிபி 2ம் நூற்றாண்டில் ரோமர்களால் எரிக்கப்பட்டார். இப்படி யூதர்கள் தொடர் தாக்குதலால் தங்களிடம் இருக்கும் பல ஏடுகளை இழந்தனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

     ஆனால் கிறித்தவர்கள் ரோம் அரசர்களின் அடிவருடிகளாக மாறி தங்களிடம் இருந்த பல நூற்களை பல தெய்வ வணங்கிகளான ரோமர்களின் கட்டளைக்கு இணங்க மாற்றி அமைத்தனர் என்று வரலாறு கைகாட்டுகிறது. கிபி 130ல் நடைபெற்ற யூதர்களின் கலகமும் அதன் விளைவுகள் குறித்த ஒரு சிறிய வரலாற்று பார்வை நமக்கு மேலும் தெளிவை தரும்.

கிபி 130-யூதர்களின் கலகம்

         By severe oppression under Trajan and Hadrian, the prohibition of circumcision, and the desecration of Jerusalem by the idolatry of the pagans, the Jews were provoked to a new and powerful insurrection (a.d. 132–135). A pseudo-Messiah, Bar-Cochba (son of the stars, Num. 24:17), afterwards called Bar-Cosiba (son of falsehood), put himself at the head of the rebels, and caused all the Christians who would not join him to be most cruelly murdered (P.No: 41,History of Christian Church Vol.2,Ante- Nicene christianityA.D 100- 325, by Philip Schaff)

            The emperor founded under the name of Aelia Capitolina, a new city on mount Sion, to which he gave the privileges of a colony; and denouncing the severest penalties against any of the Jewish people who should dare to approach its precincts, he fixed a vigilant garrison of a Roman cohort to enforce the execution of his orders. The Nazarenes had only one way left to escape the common proscription, and the force of truth was on this occasion assisted by the influence of temporal advantages. They elected Marcus for their bishop, a prelate of the race of Gentiles and most probably a native either of Italy or of some of the Latin Provinces. At his persuasion the most considerable part of the congregation renounced the Mosaic Law, in the practice of which they had preserved above a century. By this sacrifice of their habits and prejudices they purchased a free admission into the colony of Hadrian, and more firmly cemented their union with the Catholic church. (History of Christianity by Gibbon p.no:117)

1. As the rebellion of the Jews at this time grew much more serious, Rufus, governor of Judea, after an auxiliary force had been sent him by the emperor, using their madness as a pretext, proceeded against them without mercy, and destroyed indiscriminately thousands of men and women and children, and in accordance with the laws of war reduced their country to a state of complete subjection.

2. The leader of the Jews at this time was a man by the name of Barcocheba1010 (which signifies a star), who possessed the character of a robber and a murderer, but nevertheless, relying upon his name, boasted to them, as if they were slaves, that he possessed wonderful powers; and he pretended that he was a star that had come down to them out of heaven to bring them light in the midst of their misfortunes.

3. The war raged most fiercely in the eighteenth year of Adrian, at the city of Bithara,1012 which was a very secure fortress, situated not far from Jerusalem. When the siege had lasted a long time, and the rebels had been driven to the last extremity by hunger and thirst, and the instigator of the rebellion had suffered his just punishment, the whole nation was prohibited from this time on by a decree, and by the commands of Adrian, from ever going up to the country about Jerusalem. For the emperor gave orders that they should not even see from a distance the land of their fathers. Such is the account of Aristo of Pella

4. And thus, when the city had been emptied of the Jewish nation and had suffered the total destruction of its ancient inhabitants, it was colonized by a different race, and the Roman city which subsequently arose changed its name and was called Ælia, in honor of the emperor Ælius Adrian. And as the church there was now composed of Gentiles, the first one to assume the government of it after the bishops of the circumcision was Marcus. (Book IV, Chapter VI —The Last Siege of the Jews under Adrian, THE CHURCH HISTORY OF EUSEBIUS.)

             Bar-Cochba and his followers shut themselves up in Bethar, a strong fortification, and after a long siege the place was taken in 135 a.d., in the fourth year of the war, and Bar-Cochba was put to death. The Romans took severe revenge upon the Jews. Hadrian built upon the site of Jerusalem a new city, which he named Ælia Capitolina, and upon the site of the temple a new temple to the Capitoline Jupiter, and passed a law that no Jew should henceforth enter the place. Under Bar-Cochba the Christians, who refused to join him in his rebellion, were very cruelly treated (cf. Justin Martyr, Apol. I. 31, quoted in chap. 8, below). Upon this last war of the Jews, see Dion Cassius, LXIX. 12–14, and compare Jost’s Gesch. der Israeliten, III. p. 227 sq., and Münter’s Jüdischer Krieg.
(Quote No:1009, book iv, Chapter VI.—The Last Siege of the Jews under Adrian, THE CHURCH HISTORY OF EUSEBIUS, Nicene and Post Nicene Father series II, Vol-1 by Philip Schaff)

             மேற்கூறப்பட்ட குறிப்புகளின் சாரம் இதுதான். கி.பி 130 களில் யூதர்கள் விருத்தசெதனம் உட்பட்ட காரியங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோச்பா என்ற யூத தலைவரால் ரோம் பேரரசுக்கு எதிராக புரட்சி என்ற வெறியாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த புரட்சியில் கோச்பாவினால் ஏசுவை மறுதளிக்காதவர்களும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த புரட்சி ரோம் அரசர் ஏட்ரியனால் கிபி 135ல் கட்டுபடுத்தபட்ட பிறகு ஜெருசலம் நகரில் யூதர்கள் கருவருக்கப்பட்டனர். சுற்று புறத்தில் இருந்த யூதர்கள் நாடு கடத்தப்பட்டனர். ஜெருசலம் என்ற நகரின் பெயர் கூட எலியா கேப்பிடொலினா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. யூதர்கள் ஜெருசலம் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. ஆக இந்த கோச்பாவின் யூதர்கள் மற்றும் ரோம பல தெய்வ அரசு இருபுற தாக்குதலில் இருந்து தப்ப கிறித்தவர்களுக்கு இருந்த ஓரே வழி ரோம் பேரரசுக்கு வழிபடுவதுதான். ஆகவே கிறித்தவர்க யூதர் அல்லாத இலத்தின் பகுதியை சேர்ந்த விருத்தசேதனம் செய்யப்படாத மார்கஸ் என்பவரை திருச்சபை தலைவராக தேர்வு செய்தனர். எந்த காரணத்தை முன்னிட்டு யூதர்கள் நசுக்கப்பட்டனரோ, எதற்காக யூத புரட்சி வெடித்ததோ, அந்த தடை உத்தரவிற்கு யூதர்களில் இருந்து பிரிந்த கிறித்தவர்கள் அடிபணிந்தனர். தங்கள் தலைவ்ராக யுதரல்லாத விருத்தசெதனம் செய்யப்படாத ஒருவர் தலைவராக்கப்பட்டதே எப்படி மோசேயின் சட்டங்கள் வளைக்கப்பட்டது என்பதற்கு போதிய சான்று.

   அதன் பிறகு பல மோசேயின் சட்டங்கள் மறுக்கப்பட்டு ரோம் அரசாங்கத்தின் பல தெய்வ கொட்பாட்டிற்கு ஏற்றார் போல் வளைக்கப்பட்டது. இதை இன்னும் விளக்கமாக சுலோமோ பைன்ஸ் என்ற அறிஞர் தனது , The jewish christians according to new source என்ற தனது நூலில் அரபிய வரலாற்று ஆசிரியரான அப்துல் ஜப்பார் அல் ஹம்தானியின் குறிப்புகளை ஆய்வு செய்து குறிப்பிடுகிறார். மேலும் அந்த புத்தகத்தில் எப்படி ஒரிறை கொள்கையை ஏந்தி வந்த ஏசுவிற்கு வழங்க பட்ட உண்மை வேதம் அற்ப உலக லாபத்திற்கு மாற்றப்பட்டது என்பதும், எப்படி வேத்தின் உண்மை மொழியான ஹீப்ரு குழி தோண்டி புதைக்கப்பட்ட்து என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

The first section is here translated in full:

          (71a) ‘After him, his disciples (ashab) were with the Jews and the Children of Israel in the latter’s synagogues and observed the prayers and the feasts of (the Jews) in the same place as the latter.

            (However) there was a disagreement between them and the Jews with regard to Christ. The Romans (al-Rum) reigned over them. The Christians (used to) complain to the Romans about the Jews, showed them their own weakness and appealed to their pity. And the Romans did pity them. This (used) to happen frequently. And the Romans said to the Christians: “Between us and the Jews there is a pact which (obliges us) not to change their religious laws (adyan). But if you would abandon their laws and separate yourselves from them, praying as we do (while facing) the East, eating (the things) we eat, and regarding as permissible that which we consider as such, we should help you and make you powerful, and the Jews would find no way (to harm you). On the contrary, you would be more powerful than they.”

       The Christians answered : “We will do this.” (And the Romans) said: “Go, fetch your companions, and bring your Book (kitdb).” (The Christians) went to their companions, informed them of (what had taken place) between them and the Romans and said to them: “Bring the Gospel (al-injil), and stand up so that we should go to them.” But these (companions) said to them: “You have done ill. We are not permitted (to let) the Romans pollute the Gospel. (71b) In giving a favourable answer to the Romans, you have accordingly departed from the religion. We are (therefore) no longer permitted to associate with you; on the contrary, we are obliged to declare that there is nothing in common between us and you;” and they prevented their (taking possession of) the Gospel or gaining access to it. In consequence a violent quarrel (broke out) between (the two groups).

           Those (mentioned in the first place) went back to the Romans and said to them: “Help us against these companions of ours before (helping us) against the Jews, and take away from them on our behalf our Book (kitdb).” Thereupon (the companions of whom they had spoken) fled the country. And the Romans wrote concerning them to their governors in the districts of Mosul and in the Jazirat al-Arab. Accordingly, a search was made for them; some (qawm) were caught and burned, others (qawm) were killed.(As for) those who had given a favourable answer to the Romans they came together and took counsel as to how to replace the Gospel, seeing that it was lost to them. (Thus) the opinion that a Gospel should be composed {yunshVu) was established among them. They said: “the Torah (consists) only of (narratives concerning) the births of the prophets and of the histories (tawarikh) of their lives. We are going to construct (nabni) a Gospel according to this (pattern). Everyone among us is going to call to mind that which he remembers of the words (alfaz) of the Gospel and of (the things) about which the Christians talked among themselves (when speaking) of Christ.” Accordingly, some people (qawm46) wrote a Gospel. After (them) came others (qawm) (who) wrote (another) Gospel. (In this manner) a certain number of Gospels were written. (However) a great p a rt47 of what was (contained) in the original was missing 48 in them. There were among them (men), one after another, who knew many things that were contained in the true Gospel (al-injil al-sahlh), but with a view to establishing their dominion (ri'asa), they refrained from communicating them. In all this there was no mention of the cross or of the crucifix. According to them there were eighty Gospels. However, their (number) constantly diminished and became less, until (only) four Gospels were left which are due to four individuals (nafar). Every one of them composed in his time a Gospel. Then another came after him, saw that (the Gospel composed by his predecessor) was imperfect, and composed another which according to him was more correct (a$ahh), nearer to correction (al-sihha) than the Gospel of the others. Then there is not among these a Gospel (written) in the language of Christ, which was spoken by him and his companions (ashab), namely the Hebrew (al-ibraniyya) language, which is that of Abraham (Ibrahim), the Friend (khalil) of God and of the other prophets, (the language) which was spoken by them and in which the Books of God were revealed to them53 and to the other Children of Israel, and in which God addressed them. (For) they54 have abandoned (taraka) (this language). Learned men (al-ulama') said to them: “Community of Christians, give up the Hebrew language, which is the language of Christ and the prophets (Shlomo Pines, The jewish christians according to new source, P.No:15)

        மேலும் கிறித்தவர்கள் ஒட்டுமோத்தமாக பல நூல்களை கூண்டோடு அழித்துவிட்டனர். பல நூல்களை நிராகரித்தும் விட்டனர். உதாரணமாக ஏரியனிசம் குறித்து பார்ப்போம். கால போக்கில் நிராகரித்த பல நூல்களையும், நூலகங்களையும் தீக்கிரையாக்கிவிட்டனர்.

               It ought to be known that the following points were settled by the synod ; that the Son is con-substantial with the Father ; and that those are to be excommunicated who assert that there was a time in which the Son existed not, and before which he was not, and that he was made from what had no existence, and that he is of another hypostasis and substance from the Father, and that he is subject to change and mutation. This decision was sanctioned by Eusebius, bishop of Nicomedia ; by Theognis, bishop of Nicsea ; by Maris, bishop of Chalcedonia ; by Patrophilus, bishop of Scythopolis ; and by Secundus, bishop of Ptolemais in Egypt. 2 Eusebius Pamphilus, however, at first withheld his assent, but on further examination admitted the justice of the decree. The Council excommunicated Arius and his adherents, and prohibited his entering Alexandria. 3 The words in which his opinions were couched were likewise condemned, as also a work entitled “Thalia” which he had written on the subject. I have not read this book, but have been told it is of a loose character, similar to the odes of Sotades. It ought to be known that although Eusebius, bishop of Nicomedia, and Theognis, bishop of Nicaea, assented to the exposition of faith set forth by the Council, they neither agreed nor subscribed to the deposition of Arius. The emperor sent Arius into exile, and despatched edicts to the bishops and people of every country, denouncing him and his adherents as ungodly, and commanding that their books should be destroyed, in order that no remembrance of him or of the doctrine which he had broached might remain ; and the secretion of any of his writings was declared a capital crime. The emperor wrote letters to every city against Arius and those who had received his doctrines, and commanded Eusebius and Theognis to quit the cities whereof they were bishops ; he addressed himself in particular to the, churches of Nicomedia and Nicea, urging them to adhere to the faith which had been set forth by the Council, to elect orthodox bishops, and to let the past fall into oblivion ; and he threatened those who should venture to speak well of the exiled bishops, or to adopt their sentiments. In these and in other letters, he expressed resentment against Eusebius, for having sided with the tyrant against him. In accordance with the imperial edicts, Eusebius and Theognis were banished, and Amphion was elected bishop of Nicomedia, and Chrestus of Nicea. On the termination of the doctrinal controversy, the Council decided that the Paschal feast should be celebrated at the same time in every place.(Ecclesiastical history of sozomen by philostorigus p.no 46

        இந்த ஏரியனின் கொள்கையானது அலேக்ஸாண்டிரியாவின் சர்ச்சுகளில் கிட்டத்தட்ட 6ம் நூற்றாண்டுவரை கோலோச்சி இருந்தது. ஆயினும் ஏரியனின் “தாலியா” என்ற நூலை முழுவடிவத்தில் காணமுடியவில்லை. இத்தனைக்கும் ஏரியன் கிறித்தவ பிரிவுகளில் ஒன்றை தோற்றுவித்தவர். இது போல ஆரம்ப கால பல கிறித்தவ பிரிவினர் குறித்த தகவல்கள் மட்டுமே உள்ளது, ஆனால் அவர்களது ஏடுகள் கிடைக்கப்பெறவில்லை. ஏரியன் போன்ற பிதாக்களின் நூலிற்கே இந்த நிலை என்றால் யூதர்களிடம், அதுவும் வாய்வழியாக பெறப்பட்ட உண்மை தோராவின் நிலையை நாம் புரிந்து கொள்ளலாம். யூத கிறித்தவ வ்ரலாற்று ஏடுகளின் பல பக்கங்கள் ஏடுகள் மற்றும் நூலகங்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களினால் நிறைந்துள்ளதை காணமுடியும்.

         ஒவ்வொரு முறை ஜெருசலேம் ஆலயம் தாக்கப்படும் போதும் யூதர்களின் நூலக சேகரிப்பும், அறிஞர்களும் பெருமளவில் அழிக்கப்பட்டனர் என்று சிலுவை போர் ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த நிலையேதான் சிலுவை யுத்தங்களின் முடிவுவரையும் ஏன் ஹிட்லரின் முடிவு வரை கூட காணப்பட்டது என்று கூறலாம். ஆக இன்றிருக்கும் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகம் தோராவும் இல்லை, யூதர்கள் வாய்வழியாக பாதுகாத்த உண்மை தோராவும் 7ம் நூற்றாண்டில் இருந்து சில காலத்தில் தொடர் யூத்தங்களினாலும், தாக்குதலினாலும் காணமல் போய்விட்டது. இந்நிலையில் இஸ்லாம் குறிபிட்ட மோசேவிற்கு வழங்கப்பட்ட தோரா எங்கே என்ற கிறித்தவ மிசனரிகளின் கேள்வியே அர்த்தமற்றது.

      நாம் உடைந்த சிலுவையின் 13 தொடர்களில் கிறித்தவர்களின் வேதம் குறித்தும் அவர்களது அடிப்படை கொள்கைகள் குறித்தும் கண்டோம். இவை அனைத்தும் கடலில் நுழைத்த ஊசியில் ஒட்டும் நீரின் அளவே. மேலும் நாம் ஆய்வு செய்யும் பட்சத்தில் இன்னும் பல பதிலில்லாத கேள்விகளும், மர்மமும் கிறித்தவ வரலாற்று பக்கங்களை நிறைத்துள்ளதை காணமுடியும். நாம் எதிர் தொடரின் ஒரு பகுதியாக இந்த உடைந்த சிலுவை என்ற பாகத்தை கொண்டு வந்ததின் நோக்கத்தை வரும் தொடர்கள் இன்ஷா அல்லாஹ் விளக்கும்.

எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண                    உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண

No comments:

Post a Comment