பக்கங்கள் செல்ல

நபி(ஸல்) வாழ்க்கை குறித்த விமர்சனங்களும் - பதில்களும்

1.ஆண்மை பலத்திற்கு லேகியம் தந்த ஜிப்ரீல்(அலை): ஓர் ஆய்வு


இஸ்லாமிய ஆய்வாளர்களாக தங்களை காட்டி கொள்ளும் பல மிசனரிகளும் நாத்தீக கோமாளிகளும் தொடர்ச்சியாக ஒரு குற்றச்சாட்டை நபி(சல்) அவர்கள் மீது கூறிவருகின்றனர். அதாவது ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(சல்) அவர்களின் ஆண்மை விருத்திக்கு லேகியம் கொடுத்ததாக தொடர்ந்து உளறி வருகின்றனர். அவர்கள் இது குறித்த எந்த விரிவான ஆதாரங்களையும் பதிவதில்லை. ஆயினும் ஆங்கில வளைத்தளங்களும் இது குறித்து தொடர்ந்து பரப்பி வருவதால் இந்த செய்தியின் நிலையை சற்று விரிவாகவே கண்டு விடுவோம் இன்ஷா அல்லாஹ். மேலும் வாசிக்க.....மிசனரிகள் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து நபி(சல்) அவர்கள் மீது பரப்பப்படும் அவதூறுகளில் இதுவும் ஒன்று. அதாவது நபி(சல்) அவர்கள் அலி(ரலி) யின் தாயார் ஃபாத்திமா பின்த் அசத்(ரலி) அவர்கள் மரணித்த போது அவரது பிரேதத்துடன் உறவு கொண்டார்கள் என்பதுதான். ஃபாத்திமா பின்த் அசத்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது பெரிய தந்தையான அபூதாலிப் அவர்களது மனைவியும், நபி(சல்) அவர்களது பெரியன்னையும் ஆவார்கள், மேலும் நபி(சல்) அவர்களது தாயாரான ஆமினா அவர்கள் மரணித்த, பிறகு நபி(ஸல்) அவர்களை வளர்த்த அன்னை ஆவார்கள். இவர்களது பிரேத்துடந்தான் நபி(சல்) அவர்கள் உறவுகொண்டார்கள் என்ற அவதூறை பரப்பி திரிகின்றனர். மேலும் வாசிக்கஇவர்கள் நபி(சல்) அவர்களின் சொந்த பேரன்களான ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி) அவர்களிடம் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், அதன் அடிப்படையில் உறவு முறைகளை துஷ்பிரயோகம் செய்தவர்,ஓரிணச்சேர்க்கையில் ஈடுபடுபவர், சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்தவர் என்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த படாதபாடு படுகின்றனர் மிசனரிகள். ஆனால் இவர்கள் என்றும் போல் தங்களது வாதத்திற்கு அறியப்பட்ட பொய்களை ஆதாரமாக கொண்டிருக்கின்றனர்.மேலும் வாசிக்கநபி(ஸல்) - ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் மற்றும் இஸ்லாமின் திருமண வயது ஆகிவற்றை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பித்திரியும் வலைத்தளங்களின் விமர்சனங்களும் அதற்கான தக்க பதில்களும். பாகம் 1.நபி(ஸல்), ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் ..பாகம் 2.நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) யை மணந்ததால் அவர் ஒரு குழந்தை புணர்வாளர்: விமர்சனமும் பதிலும்.. அனைத்து பாகங்களையும் வாசிக்க
No comments:

Post a Comment