பக்கங்கள் செல்ல

Sunday, June 30, 2024

நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

        நாம் புதிய ஏற்பாட்டின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடராக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் சென்ற தொடரில் ஒத்தமை நற்செய்தி நூல்களின் ஒத்தமை சிக்கல் குறித்தும், அந்த சிக்கலை தீர்க்க கிறித்தவ உலகம் எப்படியெல்லாம் கதையளந்து வருகிறது என்பதையும், அவர்கள் அளந்த அந்த அனுமானக் கதைகளே எப்படி ஒத்தமை நற்செய்தி நூலின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது என்பதையும் அவர்களது வாய்களினாலே ஆதாரப்பூர்வமான வாத பிரதி வாதங்கள் அடிப்படையில் விளக்கி இருந்தோம். இந்த கட்டுரை அதனுடைய தொடர்ச்சி என்று கூட கூறலாம். இந்த கட்டுரையில் இன் ஷா அல்லாஹ், புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களின் எழுத்தாளர்கள் குறித்த வரலாற்று தரவுகளை காணவிருக்கிறோம். அந்த தரவுகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் ஆய்வுக்கு உடப்டுத்துவதன் மூலம் நற்செய்தி நூல்களின் வரலாற்று தரவுகளின் நிலையையும், அது ஏற்படுத்தும் குழப்பமே ஒத்தமை சிக்கலுக்கு தீர்வில்லாத அனுமானங்களை உருவாக்க கிறித்தவ அறிஞர்களை தள்ளியுள்ளது என்பதையும் தோழுரிக்கவுள்ளோம்.

        புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூலாசிரியர்கள் யார்? என்பதற்கு கிறித்தவ உலகம் மத்தேயூ, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்று கூறிவருகின்றது. இதற்கான வரலாற்று தரவுகளையும், அதனை தரும் கிறித்தவ திருச்சபைத் தந்தையர்கள் குறித்தும் சிறிது காணவுள்ளோம். அதற்கு முன்பாக புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள் என்று இன்று கூறப்படுபவற்றின் தலைப்பும், இன்றைய கிறித்தவ உலகமும் என்ன கூறி வருகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

        Raymond E. Brown, S.S.
        Kurt Aland
        Catholic Encyclopedia

              கிறித்தவர்களின் கைகளில் இருக்கும் நற்செய்தி நூல்கள் மற்றும் அதன் மூல கையெழுத்துப்பிரதிகள் என்ன கூறுகிறது என்பதை நாம் முதலில் பார்ப்போம். உதாரணமாக இன்று சுருக்கமாக மத்தேயூவின் நற்செய்தி நூலின் தலைப்பு தாங்கிய கிரேக்க மூல கையெழுத்துப்பிரதி பின்வருமாறு கூறுகிறது.


            மேற்குறிபிட்ட கையெழுத்துப்பிரதி மத்தேயூவின் படியான நற்செய்தி நூல் என்று கூறுகிறது. இதன் பொருளை விளங்க வேண்டும் என்றால், ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம், வெங்கடேஷனின் படி என்று கூறப்பட்டால், அதன் கருத்து, வெங்கடெஷனின் கூற்றின் படி என்பதாகும். வெங்கடேசன் ஒரு நூலை எழுதுகிறார் என்றால், எந்த இடத்திலும் இப்படி ஒரு சொல்பிரயோகத்தை கைகொள்ள மாட்டார். வெங்கடேஷனின் கருத்தை ஒருவர் மேற்கொள் காட்டும் போதுதான் வெங்கடேஷனின் படி, வெங்கடேஷனின் கூற்றின் படி என்ற சொல்லாடலை கைகொள்வார். ஆக அடிப்படையில் நற்செய்தி நூல்களாக இன்றிருக்கும் பைபிளில் எதுவும் அதன் நூலாசிரியர்கள் எழுதியது அல்ல. மாறாக மத்தேயூ கூறுகிறார், மாற்கு கூறுகிறார், லூக்கா கூறுகிறார், யோவான் கூறுகிறார் என்று யாரோ ஒருவரால் மேற்கொள்காட்டி எழுதப்பட்ட நூல்கள்தான் இன்றைய பைபிளின் நற்செய்தி நூல்கள் என்பதற்கு அதன் தலைப்பும், கிடைத்திருக்கும் இரண்டாம் நூற்றாண்டின் கையெழுத்துப்பிரதியுமே சான்று. அந்த “யாரோ” மத்தேயூ, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோரின் நேரடி மாணவரா, அதற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. அதனால்தான் கிறித்தவ அறிஞர்களில் பலரும்,, நற்செய்தி நூல்கள் அனைத்தும் முகவரி இல்லாதவர்களால் எழுதப்பட்டது என்கிறார்கள். கிறித்தவ உலகத்தால் நற்செய்தி நூல்களில் மத்தேயூ மற்றும் யோவான் ஆகிய இரண்டு மட்டுமே இயேசுவின் நேரடி சீடர்களால் எழுதப்பட்டதாக கோரப்படுகிறது. ஆனால் தற்காலத்தில் வெளிவரும் சில  பைபிள் ஆங்கில மொழியாக்கங்கள் தங்களது முன்னுரைகளில் நற்செய்தி நூல்கள் குறித்து பின்வருமாறு பதிவிட்டு வருகின்றன. அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம். 


                    Some scholars have seen the Gospel’s replacement of Mark’s tax-collector Levi (Mk 2.13–17) with Matthew (9.9–13) as a sort of authorial signature. Yet, the fact that the Evangelist was so reliant upon Mark and a collection of Jesus’ sayings (“Q”) seems to point to a later, unknown, author. The Gospel’s time of writing is likewise unknown. 
    சில அறிஞர்கள், லேவி என்ற மாற்கின் வரி வசூலிப்பவர்(மாற்கு 2.13-17) இந்த நற்செய்தியில்(மத்தேயூ), மத்தேயூ (மத்தேயூ 9.9-13) என்று மாற்றப்பட்டுள்ளதை, அதிகாரப்பூர்வ கையொப்பமாக பார்க்கிறார்கள். ஆனால், இந்த சுவிஷேசக்காரர் மாற்கின் மீதும், இயேசுவின் கூற்றுக்களின் தொகுப்பு (“Q”) வின் மீதும் சார்ந்திருப்பது, இது பிற்கால அறியப்படாத எழுத்தரையே சுட்டிக்காட்டுகிறது. அதேபோல் இந்த நற்செய்தி எழுதப்பட்ட காலமும் அறியப்படவில்லை.( (The New Oxford Annotated Bible with Apocrypha- NRSV(2018), P.No.1746)
The Fourth Gospel is named for John, the son of Zebedee, one of the Twelve (see Mk 1.19; 3.17; etc.), traditionally thought to be its author and identified as the “beloved disciple” repeatedly mentioned in the Gospel. Modern scholars think it was more likely written by a disciple of John. It may have been the “beloved disciple,” who is never called John in the Gospel, or someone to whom he dictated it (see Jn 21.24n.). Most scholars date the Gospel to about 90 ce, although some have proposed an earlier date for it, or for an earlier version of it. 
நான்காவது நற்செய்தி நூல், யோவானுக்கானதாக குறிப்பிடப்படுகிறது, இவர் பன்னிருவரில் ஒருவரான செபதேயுவின் மகன் (பார்க்க Mk 1.19; 3.17; முதலியன), இவர் பாரம்பரியமாக இதன் ஆசிரியராகக் கருதப்படுகிறார். மேலும் நற்செய்தி மீண்டும் மீண்டும் குறிப்பிடும் “அன்பான சீடர்” என்ற அடையாளத்திற்கு உரியவர். தற்கால அறிஞர்கள் இது ஜானின் சீடரால் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள். நற்செய்தியில் ஜான் என்று அழைக்கப்படாத "அன்பான சீடர்" ஆகவும் அவர் இருக்கலாம் அல்லது அவர் அதைக் கட்டளையிட்ட ஒருவராகவும் இருக்கலாம்.(யோவான் 21:24). பெரும்பாலான அறிஞர்கள் சுவிசேஷத்தை சுமார் கிபி 90 ஐ சார்ந்தது என்று குறிப்பிடுகிறார்கள், இருப்பினும் சிலர் அதற்கோ அல்லது அதன் முந்தைய வடிவத்திற்கோ, முந்தைய காலத்தை முன்மொழிந்துள்ளனர். (The New Oxford Annotated Bible with Apocrypha- NRSV(2018), P.No.1879) 

✅ Brooke Foss Westcott, D. D. And Fenton John Anthony Hort. D.D.

The original autographs* of the apostolic writings are lost beyond all reasonable hope of discovery, and are not even mentioned by the post-apostolic  authors as being extant anywhere, or as having been seen by them. 
அப்போஸ்தலிக்க எழுத்துக்களின் அசல் ஆட்டோகிராஃப்கள் கண்டுபிடிப்பு பற்றிய நியாயமான நம்பிக்கைக்கு அப்பால் தொலைந்துவிட்டன, மேலும் அப்போஸ்தலிக்கத்திற்குப் பிந்தைய ஆசிரியர்களால் எங்கும் இருப்பதாகவோ அல்லது அவர்களால் பார்க்கப்பட்டதாகவோ கூட குறிப்பிடப்படவில்லை. (The New Testament In The Original Greek, The Text Revised By Brooke Foss Westcott, D. D. And Fenton John Anthony Hort. D.D. P.No.xii) 

✅ D. A. Carson & Douglas J. Moo

Unlike most other ancient biographies, the gospels are anonymous; they lack the literary pretensions characteristic of most biographies; and, most of all, they combine teaching and action in a preaching-oriented work that stands apart from anything else in the ancient world 
    மற்ற பண்டைய சுயசரிதைகளைப் போலல்லாமல், நற்செய்திகள் அநாமதேயமாக உள்ளன; பெரும்பாலான சுயசரிதைகளின் சிறப்பியல்பு இலக்கிய பாசாங்குகள் அவற்றில் இல்லை; மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் கற்பித்தலையும் செயலையும் ஒரு பிரசங்கம் சார்ந்த வேலையில் இணைக்கிறார்கள், இது பண்டைய உலகில் வேறு எதிலும் இருந்து தனித்து நிற்கிறது.(An Introduction To The New Testament – Second Edition, Zondervan Press,  By D. A. Carson & Douglas J. Moo,  P.No.115)

✅ Raymond E. Brown, S.S.

The Gospels, for instance, are anonymous; they do not identify their authors (see, however, John 21:24); the attributions to Matthew, Mark, Luke, and John that appear in titles stem from the (late?) 2d century and are not part of the original works. 
உதாரணமாக, சுவிசேஷங்கள் அநாமதேயமானவை; அவை தங்கள் ஆசிரியர்களை அடையாளம் காட்டவில்லை (எவ்வாறாயினும், ஜான் 21:24 ஐப் பார்க்கவும்); தலைப்புகளில் மத்தேயு, மார்க், லூக் மற்றும் ஜான் என்று இணைத்து கூறப்படுவது, (பிற்பகுதி?) இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தோன்றியதாகும், அது அசல் உருவாக்கத்தில் இல்லை. (AN INTRODUCTION TO THE NEW TESTAMENT BY Raymond E. Brown, S.S., Footnote, P.No.585) 

✅ Kurt Aland

‘In my opinion it is beyond doubt that all the gospels were published anonymously. Our present opinion about their authors dates from information which derives from the time of Papias or later’ (K. Aland, ‘The Problem of Anonymity and Pseudonymity in Christian Literature of the First Two Centuries’ P.No.41) 
    'எனது கருத்துப்படி, அனைத்து நற்செய்திகளும் பெயர் குறிப்பிடாமல் வெளியிடப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. அவற்றின் ஆசிரியர்களைப் பற்றிய நமது தற்போதைய கருத்து பாபியஸ் அல்லது அதற்குப் பிறகான காலத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களில் இருந்தே வருகிறது. (K. Aland, ‘The Problem of Anonymity and Pseudonymity in Christian Literature of the First Two Centuries’ P.No.41)

✅ Catholic Encyclopedia

“The first four historical books of the New Testament are supplied with titles (Euangelion kata Matthaion, Euangelion kata Markon, etc.), which, however ancient, do not go back to the respective authors of those sacred writings. […] It thus appears that the present titles of the Gospels are not traceable to the evangelists themselves.”
    "புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு வரலாற்றுப் புத்தகங்கள் தலைப்புகளுடன் வழங்கப்பட்டுள்ளன (யுவாஞ்செலியன் கடா மத்தாயோன், யூவாஞ்செலியன் கடா மார்கோன், முதலியன), அவை எவ்வளவு பழமையானதாக இருந்தாலும், அந்த புனித எழுத்தாக்கங்களுடன் தொடர்புடைய ஆசிரியர்களை சென்றடையாது.[…] சுவிசேஷங்களின் தற்போதைய தலைப்புகள், அந்த சுவிஷேசக்கார்ரகள் வரை செல்வதை கண்டறிய இயலாது என்று தோன்றுகிறது.( Catholic Encyclopedia, “Gospel and  Gospels”,   Vol.VI , P.No.1673)

✅ The New Testament with the Apocryphal/Deuterocanonical Books (NRSV)

Scholars generally agree that the Gospels were written forty to sixty years after the death of Jesus. They thus do not present an eyewitness or contemporary account of Jesus' life and teaching. Even the language has changed. 
சுவிசேஷங்கள் இயேசு இறந்து நாற்பது முதல் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டதாக அறிஞர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள். இவ்வாறு இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளின் நேரடி சாட்சியத்தையோ அல்லது சமகால குறிப்புக்களையோ அவை முன்வைக்காது . மொழி கூட மாறிவிட்டது. (The New Testament with the Apocryphal/ Deuterocanonical Books, Division of Christian Education of the National Council of the Churches of Christ in the United States of America, P.No. 4-5) 

✅ The Blackwell Companion to the New Testament

(to call attention to the problem of “ authorship, ” i.e., while all of the canonical gospels were originally anonymous, if the names of authors later affixed to the text are incorrect, they are examples of secondary pseudepigraphy; if correct, however, they are instances of secondary orthonymity) 
எழுத்தாக்கம் என்ற சிக்கலில் கவனம் செலுத்துதல்:  அனைத்து நியமன நற்செய்தி நூல்களும் முதலில் அநாமதேயமாக இருந்தபோது, உரையுடன் பிந்நாட்களில் இணைக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர்கள் தவறாக இருந்தால், அவை இரண்டாம் நிலை சூடிபிகிராஃபிக்கு எடுத்துக்காட்டுகளாகும் (அதாவது ஒரு எழுத்தாக்கத்திற்கு இரண்டாம் நிலை பொய் எழுத்தர் பெயர் சூட்டல்;) மாறாக சரியாக இருந்தால், அவை இரண்டாம் நிலை ஆர்த்தோனிமிட்டி (அதாவது வேறு ஒருவர் அந்த ஆசிரியர் எழுதியதாக கூறுவது) (The Blackwell Companion to the New Testament P.No.5)

✅ Introduction To The New Testament, Completely Re-edited by Werner Georg Kummel

The author of Matthew, whose name is unknown to us, was a Greek-speaking Jewish Christian, who possibly had rabbinic knowledge, and in any case was bound to a form of the Jesus tradition which had strongly assimilated the sayings of Jesus to Jewish views.
மத்தேயுவின் ஆசிரியர், அவருடைய பெயர் நமக்குத் தெரியவில்லை, அவர் ஒரு கிரேக்க மொழி பேசும் யூத கிறிஸ்தவர், அவர் யூதக் குருசார் அறிவு பெற்றவராக இருந்ததற்கான வாய்ப்புகள் உள்ளன, எப்படியிருந்தாலும், இயேசுவின் வாசகங்களை யூதக் கருத்துக்களுடன் வலுவாக ஒருங்கிணைக்கும் இயேசுவின் மரபின் ஒரு வடிவத்திற்குக் உட்பட்டவர். ( Introduction To The New Testament, Completely. Re-edited by Werner Georg Kummel,  Professor of New Testament at Marburg University 14th Revised Edition, P.No.86)
That is to say, the author of John is unknown to us. It has often been maintained that he must have been a born Jew (lately, e.g.. Smith, Schnackenburg, Grundmann). But this supposition is not convincing at all, (..) We do not know more about the author of John, and all additional conjectures about the origin of the later tradition about John, the son of Zebedee, as the author of John, contribute nothing to its understanding.  
அதாவது யோவானின் ஆசிரியர் யார் எனறு நமக்குத் தெரியவில்லை. அவர் பிறப்பால் ஒரு யூதராக இருக்க வேண்டும் என்று அடிக்கடி தக்கவைக்கப்படுகிறது (சமீபத்தில், எ.கா. ஸ்மித், ஷ்னாக்கன்பர்க், கிரண்ட்மேன்). ஆனால் இந்த அனுமானம் நம்பத்தகுந்ததாக இல்லை, (..)யோவானின்(நற்செய்தி) ஆசிரியரைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது, யோவான் (நற்செய்தி) பற்றிய பிற்கால பாரம்பரியத்தின் தோற்றம் பற்றிய அனைத்து கூடுதல் அனுமானங்களும், யோவான் (நற்செய்தி)யின் ஆசிரியர் செபதேயுவின் மகன், என்ற புரிதலுக்கு எதுவும் பங்களிக்கவில்லை….( Introduction To The New Testament, Completely. reedited by Werner Georg Kummel,  Professor of New Testament at Marburg University 14th Revised Edition, P.No.174)
        நாம் மேற்குறிபிட்ட அறிஞர்கள், பைபில் மற்றும் நூற்களின் கருத்துக்களை முன்வைத்ததற்கு காரணம், நாம் மட்டும், நற்செய்தி நூல்கள் அட்ரஸ் இல்லாத நூல் என்ற கருத்தை முன்வைக்கவில்லை, மாறாக கிறித்தவ அறிஞர்களும் இந்த கருத்தை கொண்டுள்ளார்கள் என்பதை நிறுவத்தான். இனி நாம் இந்த கருத்தை உறுதி படுத்தும் நமது ஆய்வுகளையும், நற்செய்தி நூல்கள் குறித்த ஆசிரியர்கள் குறித்து இருக்கும் ஆதாரங்களின் அவலங்களையும் தோழுரிக்கவுள்ளோம்.


புதிய ஏற்பாட்டின் நூல்களின் வரலாற்று சான்றுகளை ஆய்வு செய்வதற்கு முன்பு அந்த சான்றுகள் யார் வழியாக நமக்கு கிடைக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும். அந்த வகையில் புதிய ஏற்பாட்டின் வரலாற்று குறிப்புக்களை தாங்கி நிற்பது திருச்சபை தந்தையர்களின் எழுத்தாக்கங்களே. எனவே அவர்கள் குறித்த கால பாகுபாட்டினையும், அதில் இடம் பெறும் முக்கிய பிதாக்கள் யார் யார் என்பதையும் அறிந்து கொள்வது அவசியமாகும். அதனை விளக்கும் படம் கீழே தரப்பட்டுள்ளது. 


    தற்கால மிசனரிகள் திருச்சபை பிதாக்களின் குறிப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறும் பட்சத்தில், புதிய ஏற்பாடு வரலாறு அற்ற நூல் என்பதை அவர்கள் ஏற்கும் சூழல் ஏற்படும். அவர்கள் நாங்கள் நம்புகிறோம், அதனால் வரலாற்று ஆவணங்கள் எங்களுக்கு தேவை இல்லை என்று கூறினால், அவர்கள், எந்த மத நூலின் வரலாற்று குறிப்பு விமர்சனத்திற்குள்ளும் நுழையும் அருகதை அற்று போவார்கள் என்பதை நாம் தெரிவித்துக்கொண்டு உள்ளடக்கத்தில் நுழைவோம்.


புதிய ஏற்பாட்டில் இடம்பெறும் நற்செய்தி நூல்களின் ஆசிரியர்கள் மத்தேயூ, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்று பாரம்பரியமாக கிறித்தவர்களால் கூறப்பட்டு வருகிறது.  பின்வரும் வரலாற்று குறிப்புக்கள் அது குறித்து பேசுகின்றன. அந்த வரலாற்று குறிப்புகளின் நம்பகத்தன்மை என்ன என்பதையும் இங்கு ஆய்வு செய்வோம்.

        And the presbyter said this. Mark having become the interpreter of Peter, wrote down accurately whatsoever he remembered. It was not, however, in exact order that he related the sayings or deeds of Christ. For he neither heard the Lord nor accompanied Him. But afterwards, as I said, he accompanied Peter, who accommodated his instructions to the necessities [of his hearers], but with no intention of giving a regular narrative of the Lord’s sayings. Wherefore Mark made no mistake in thus writing some things as he remembered them. For of one thing he took especial care, not to omit anything he had heard, and not to put anything fictitious into the statements. [This is what is related by Papias regarding Mark; but with regard to Matthew he has made the following statements]: Matthew put together the oracles [of the Lord] in the Hebrew language, and each one interpreted them as best he could. [The same person uses proofs from the First Epistle of John, and from the Epistle of Peter in like manner. And he also gives another story of a woman who was accused of many sins before the Lord, which is to be found in the Gospel according to the Hebrews.] 
    மேலும் அந்த பிரசங்கி இவ்வாறு கூறினார். பீட்டரின் மொழிபெயர்ப்பாளராக மாறிய மார்க், அவர் நினைவில் வைத்திருந்த அனைத்தையும் துல்லியமாக எழுதினார். இருப்பினும், அவர் கிறிஸ்துவின் சொற்கள் அல்லது செயல்களை சரியான வரிசையில் குறிப்பிடவில்லை. ஏனென்றால், அவர் கர்த்தரிடம் செவியுறவுமில்லை, அவருடன் இருக்கவுமில்லை. ஆனால் பின்னர், நான் சொன்னது போல், அவர் பீட்டருடன் சென்றார், அவர் தனது அறிவுறுத்தல்களை [கேட்பவர்களிடம்] தேவைப்படும் போது [கேட்பவர்களிடம் கொடுத்தார், ஆனால் இறைவனின் வார்த்தைகளை வழக்கமான விவரிப்பைக் கொடுக்க எந்த நோக்கமும் அவரிடம் இல்லை. எனவே மார்க் சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொண்டு இவ்வாறு எழுதுவதில் எந்த தவறும் இழைக்கவில்லை.. அவர் ஒரு விஷயத்தில் குறிப்பாக கவனமாக இருந்தார், அவை அவர் கேள்விப்பட்ட எதையும் விட்டுவிடக்கூடாது, மேலும் கற்பனையான எதையும் அறிக்கைகளில் போடக்கூடாது என்பதில். [மார்க்கைப் பற்றி பாபியாஸ் கூறியது இதுதான்; ஆனால் மத்தேயுவைப் பொறுத்தவரை அவர் பின்வரும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்]: மத்தேயு எபிரேய மொழியில் [கர்த்தரின்] அற்புதங்களை ஒன்றாக தொகுத்தார், மேலும் ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்தவரை அவற்றை விளக்கினர். (Eusebius, Hist. Eccl. iii. Chapter 39)
    He said “I considered what Andrew and Peter said, what Philip, what Thomas, what James, what John, what Matthew or anyone else among the disciples of our Lord, what also Aristion and the elder John, disciples of the Lord had said, not so much that I have their books to read, as that their living voice is heard until the present day in the authors themselves.”
    அவர் (பாப்பியஸ்) கூறினார், “நான், ஆண்ட்ரூவும் பேதுருவும் கூறியதையும், எதை பிலிப்பும், தாமஸும், ஜேம்ஸும், ஜானும், மத்தேயுவும், நம்முடைய கர்த்தருடைய சீஷர்களில் வேறு யாரேனும், அரிஸ்ஷனும், மூத்த ஜானும், கர்த்தருடைய சீஷர்களும் கூறியதையும் கருத்தில் கொண்டேன். அவர்களின் புத்தகங்களை வாசிப்பதற்கு என்னிடம் அதிகம் இல்லை, அவர்களின் உயிருள்ள குரல் இன்றைய நாள் வரை எழுத்தர்களிடமே கேட்கப்படுகிறது.” (Jerome Lives of Illustrious Men, Chapter XVIII. Papias the bishop)

ஐரீனியஸின் குறிப்பு (காலம் கி.பி.130 - 200 )

            For, after our Lord rose from the dead, [the apostles] were invested with power from on high when the Holy Spirit came down [upon them], were filled from all [His gifts], and had perfect knowledge: they departed to the ends of the earth, preaching the glad tidings of the good things [sent] from God to us, and proclaiming the peace of heaven to men, who indeed do all equally and individually possess the Gospel of God. Matthew also issued a written Gospel among the Hebrews in their own dialect, while Peter and Paul were preaching at Rome, and laying the foundations of the Church. After their departure, Mark, the disciple and interpreter of Peter, did also hand down to us in writing what had been preached by Peter. Luke also, the companion of Paul, recorded in a book the Gospel preached by him. Afterwards, John, the disciple of the Lord, who also had leaned upon His breast, did himself publish a Gospel during his residence at Ephesus in Asia. 

        ஏனெனில், நம் ஆண்டவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, பரிசுத்த ஆவியானவர் [அவர்கள் மீது] இறங்கியபோது, [அப்போஸ்தலர்கள்] மேலிருந்து வல்லமை பெற்றனர், எல்லாவற்றிலும் [அவருடைய வரங்களிலிருந்து] நிரப்பப்பட்டு, பரிபூரண அறிவைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் பூமியின் எல்லைகள் வரை புறப்பட்டு, கடவுளிடமிருந்து நமக்கு அனுப்பப்பட்ட நற்செய்திகளைப் பிரசங்கித்து, பரலோக அமைதியை மனிதர்களுக்கு அறிவித்தார்கள். உண்மையில் அவர்கள் அனைவரும் சமமாகவும், தனித்தனியாகவும் கடவுளின் நற்செய்தியை பெற்றிருந்தனர். மத்தேயு எபிரேயர்களிடையே எழுதப்பட்ட நற்செய்தியை அவர்களின் சொந்த பேச்சுவழக்கில் வெளியிட்டார், அதே நேரத்தில் பேதுருவும் பவுலும் ரோமில் பிரசங்கித்து, தேவாலயத்தின் அடித்தளத்தை அமைத்தனர். அவர்கள் இறந்த பிறகு, பேதுருவின் சீடரும் மொழிபெயர்ப்பாளருமான மார்க், பேதுருவால் பிரசங்கிக்கப்பட்டதை எழுத்துப்பூர்வமாக நம்மிடம் ஒப்படைத்தார். அதன்பிறகு, இறைவனின் சீடரான, அவருடைய மார்பில் சாய்ந்திருந்த யோவான், ஆசியாவிலுள்ள எபேசஸ் என்ற இடத்தில் தாம் தங்கியிருந்தபோது ஒரு நற்செய்தியை அவரும் வெளியிட்டார். ( Against Heresies:Book III, Chapter I)

அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் (காலம் கி.பி. 150 – 215): 

        And in the Gospel according to Matthew, the genealogy which begins with Abraham is continued down to Mary the mother of the Lord. (Stromata, Chapter XXI.—The Jewish Institutions and Laws of Far Higher Antiquity Than the Philosophy of the Greeks.)

    மேலும் மத்தேயுவின் நற்செய்தியில், ஆபிரகாமுடன் தொடங்கும் வம்சாவளியானது கர்த்தருடைய தாயான மரியா வரை தொடர்கிறது. (Stromata, Chapter XXI.—The Jewish Institutions and Laws of Far Higher Antiquity Than the Philosophy of the Greeks.)

        Mark, the follower of Peter, while Peter publicly preached the Gospel at Rome before some of Cæsar’s equites, and adduced many testimonies to Christ, in order that thereby they might be able to commit to memory what was spoken, of what was spoken by Peter, wrote entirely what is called the Gospel according to Mark. As Luke also may be recognised by the style, both to have composed the Acts of the Apostles, and to have translated Paul’s Epistle to the Hebrews. (Fragments of Clemens Alexandrinus.—From the Latin Translation of Cassiodorus Chapter.I)

        பேதுரு ரோமில் சீசரின் சில சமயங்களுக்கு முன்பாக நற்செய்தியைப் பகிரங்கமாகப் பிரசங்கித்தபோது, கிறிஸ்துவுக்குப் பல சாட்சியங்களைச் சொன்னார்கள், இதன்மூலம் பேதுரு பேசியதையும், (பேதுருவால்) பேசப்பட்டதையும் பீட்டரின் சீடரான மார்க்,  நினைவில் வைத்துக் கொண்டு, மார்க் படியான நற்செய்தி என்று அழைக்கப்படுவதை முழுமையாக எழுதினார். அதேபோல, அப்போஸ்தல நடபடிகளை தொகுத்ததையும், எபிரேயருக்கு பவுல் எழுதிய நிருபத்தை மொழிபெயர்த்த்தையும், அவ்விரண்டின் பாணியால் லூக்கா எழுதியதை அறிந்து கொள்ள முடியும். 

Again, in the same books, Clement gives the tradition of the earliest presbyters, as to the order of the Gospels, in the following manner:

6. The Gospels containing the genealogies, he says, were written first. The Gospel according to Mark had this occasion. As Peter had preached the Word publicly at Rome, and declared the Gospel by the Spirit, many who were present requested that Mark, who had followed him for a long time and remembered his sayings, should write them out. And having composed the Gospel he gave it to those who had requested it.

7. When Peter learned of this, he neither directly forbade nor encouraged it. But, last of all, John, perceiving that the external facts had been made plain in the Gospel, being urged by his friends, and inspired by the Spirit, composed a spiritual Gospel.”1876 This is the account of Clement.  

(Eusebius, Historia Ecclesiastica, Book VI, Chapter XIV.—The Scriptures mentioned by Him (Clement of Alexandria))

மீண்டும், அதே புத்தகங்களில், சுவிசேஷங்களின் வரிசை பற்றி, ஆரம்பகால பிரஸ்பைட்டர்களின் பாரம்பரியத்தை கிளெமென்ட் பின்வருமாறு கொடுக்கிறார்:

6. வம்சாவளியைக் கொண்ட சுவிசேஷங்கள் முதலில் எழுதப்பட்டவை என்று அவர் கூறுகிறார். மார்க்கின் படியான சுவிசேஷம் இந்த (பின்வரும்) விஷயத்தை கொண்டது. பேதுரு ரோமில் பகிரங்கமாக வார்த்தையைப் பிரசங்கித்து, ஆவியின் மூலம் சுவிசேஷத்தை அறிவித்தபோது, அங்கு இருந்த பலர், அவரை நீண்ட காலமாக பின்பற்றி, அவருடைய வார்த்தைகளை நினைவில் வைத்திருந்த மாற்கு அவற்றை எழுதும்படியாக கேட்டுக் கொண்டனர். மேலும் அவர் நற்செய்தியை இயற்றி, அதைக் கேட்டவர்களுக்குக் கொடுத்தார்.

7. பீட்டர் இதைப் பற்றி அறிந்தபோது, அவர் அதை நேரடியாகத் தடுக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ இல்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் கடைசியாக, ஜான், சுவிசேஷத்தில் வெளிப்புற உண்மைகள் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதை உணர்ந்து, அவரது நண்பர்களால் உந்தப்பட்டு, ஆவியின் தூண்டுதலால், ஒரு ஆன்மீக நற்செய்தியை இயற்றினார். (Eusebius, Historia Ecclesiastica, Book VI, Chapter XIV.—The Scriptures mentioned by Him (Clement of Alexandria))

டெர்டுள்ளியன் (காலம் கி.பி.160 – 225):

        Even wasps make combs; so also these Marcionites make churches. The same authority of the apostolic churches will afford evidence to the other Gospels also, which we possess equally through their means, and according to their usage—I mean the Gospels of John and Matthew—whilst that which Mark published may be affirmed to be Peter’s whose interpreter Mark was. For even Luke’s form of the Gospel men usually ascribe to Paul. And it may well seem that the works which disciples publish belong to their masters. Well, then, Marcion ought to be called to a strict account concerning these (other Gospels) also, for having omitted them, and insisted in preference on Luke; as if they, too, had not had free course in the churches, as well as Luke’s Gospel, from the beginning. Nay, it is even more credible that they existed from the very beginning; for, being the work of apostles, they were prior, and coeval in origin with the churches themselves. (Anti-Marcion, Book IV.Chapter V.—By the Rule of Antiquity, the Catholic Gospels are Found to Be True, Including the Real St. Luke’s. Marcion’s Only a Mutilated Edition. The Heretic’s Weakness and Inconsistency in Ignoring the Other Gospels)

    குளவிகள் கூட கூட்டினை உருவாக்குகின்றன; இந்த மார்சியோனைட்டுகளும் தேவாலயங்களை உருவாக்குகிறார்கள். அப்போஸ்தலிக்க தேவாலயங்களின் அதே அதிகாரம் மற்ற சுவிசேஷங்களுக்கும் ஆதாரங்களை வழங்கும், அவை அவற்றின் வழிகளிலும், அவற்றின் பயன்பாட்டிலும் சமமாக நம்மிடம் உள்ளன. ஜான் மற்றும் மத்தேயுவின் சுவிசேஷங்களை நான் சொல்கிறேன் - அதே நேரத்தில் மார்க் வெளியிட்டது, பீட்டரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த மார்க்கினது என்று உறுதிபடுத்தலாம். லூக்காவின் நற்செய்தியின் வடிவம் கூட பொதுவாக பவுலைடையது என்று கூறுகிறார்கள். மேலும் சீடர்கள் வெளியிடும் படைப்புகள் அவர்களின் குருக்களுக்குரியதாகத் தோன்றலாம். சரி அப்படியானால் இவற்றை (மற்ற நற்செய்திகளை) தவிர்த்துவிட்டு, அவை லூக்காவை போன்று தேவாலயங்களில் பெரும் புலக்கத்தில் இல்லாதவை போன்று, லூக்காவை மட்டும் முன்னுரிமைப்படுத்துமாறு வலியுறுத்தியதற்காக, மார்சியன் கடுமையான கணக்கிற்கு அழைக்கப்பட வேண்டும். மாறாக, அவை (மற்ற நற்செய்திகள்) ஆரம்பத்திலிருந்தே இருந்தன என்பது இன்னும் நம்பகமானது; ஏனெனில், அப்போஸ்தலருடைய வேலையாக இருந்ததால், அவை தேவாலயங்களுக்கு முந்தியவையாகவும், சமகாலத்தவையாகவும் இருந்தன. (Anti-Marcion, Book IV.Chapter V.—By the Rule of Antiquity, the Catholic Gospels are Found to Be True, Including the Real St. Luke’s. Marcion’s Only a Mutilated Edition. The Heretic’s Weakness and Inconsistency in Ignoring the Other Gospels)

ஓரிகன் (காலம் கி.பி.185 – 253):

1)….Matthew, Mark, John, and Luke did not "try" to write; they wrote their Gospels when they were filled with the Holy Spirit. Hence, "Many have tried to compose an account of the events that are clearly known among US."  

2). The Church has four Gospels. Heretics have very many. One of them is entitled According to the Egyptians, another According to the Twelve Apostles. Basilides, too, dared to write a gospel and give it his own name." "Many have tried" to write, but only four Gospels have been approved. Our doctrines about the Person of our Lord and Savior should be drawn from these approved Gospels. (ORIGEN HOMILIES ON LUKE FRAGMENTS ON LUKE P.No.6)

1)…… மத்தேயு, மார்க், ஜான், லூக்கா ஆகியோர் எழுத "முயற்சி" செய்யவில்லை; அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டபோது அவர்கள் தங்கள் சுவிசேஷங்களை எழுதினார்கள். எனவே, "நம்மிடையே தெளிவாகத் தெரிந்த நிகழ்வுகளின் குறிப்பை எழுத பலர் முயன்றனர்."

2) தேவாலயம் நான்கு நற்செய்திகளைக் கொண்டுள்ளது. பேதக்காரர்கள் மிக அதிகமாக கொண்டுள்ளனர்.. இந்த அங்கீகரிக்கப்பட்ட நற்செய்திகளிலிருந்து நமது இறைவன் மற்றும் இரட்சகரின் நபர் பற்றிய நமது கோட்பாடுகள் எடுக்கப்பட வேண்டும். அவற்றில் ஒன்று எகிப்தியர்களின் படியானது என்றும், மற்றது பன்னிரு அப்போஸ்தலர்களின் படியானது என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது. பேசிலிடிஸ் கூட, ஒரு நற்செய்தியை எழுதி அதற்குத் தன் பெயரைச் சூட்டத் துணிந்தார். "பலர் எழுத முயற்சி செய்துள்ளனர்" ஆனால் நான்கு சுவிசேஷங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நமது இறைவன் மற்றும் இரட்சகரின் நபரைப் பற்றிய நமது கோட்பாடுகள் இந்த அங்கீகரிக்கப்பட்ட நற்செய்திகளிலிருந்தே பெறப்பட வேண்டும். (ORIGEN HOMILIES ON LUKE FRAGMENTS ON LUKE P.No.6)

குறிப்பு: லூக்காவின் 1:2ம் வசனத்தின் விளக்கம்தான் சுட்டிக்காட்டப்பட்ட பகுதி. ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்(லூக்கா 1:2)

யூசிபியஸ் (காலம் கி.பி. 260-339)
7. But Luke, who was of Antiochian parentage and a physician by profession, and who was especially intimate with Paul and well acquainted with the rest of the apostles, has left us, in two inspired books, proofs of that spiritual healing art which he learned from them. One of these books is the Gospel, which he testifies that he wrote as those who were from the beginning eye witnesses and ministers of the word delivered unto him, all of whom, as he says, he followed accurately from the first. The other book is the Acts of the Apostles which he composed not from the accounts of others, but from what he had see himself.

8. And they say that Paul meant to refer to Luke’s Gospel wherever, as if speaking of some gospel of his own, he used the words, “according to my Gospel.” (Rom. ii. 16, xvi. 25; 2 Tim. ii. 8.) ( Eusebius, Historia Ecclesiastica, Book III. Chapter IV.—The First Successors of the Apostles).

7.ஆனால், அந்தியோக்கியாவின் வம்சாவழியை சார்ந்தவராகவும், தொழிலில் மருத்துவராகவும், குறிப்பாக பவுலுடன் நெருக்கமாகவும், மற்ற அப்போஸ்தலர்களுடன் நன்கு பழகியவராகவும் இருந்த லூக்கா, அவர்களிடமிருந்து அவர் கற்றுக்கொண்ட அந்த ஆன்மீக குணப்படுத்தும் கலையின் சான்றுகளை இரண்டு உந்தப்பட்ட புத்தகங்களில் நமக்கு விட்டுச்சென்றுள்ளார். இந்த புத்தகங்களில் ஒன்று சுவிசேஷம், அதில் முதலில் இருந்து கண்ணார கண்ட சாட்சிகளினாலும், ஊழியக்கார்ரகளினாலும் அவருக்கு தெரிவிக்கப்பட்ட வார்த்தைகளை, அவர் சொல்வது போலவே முதலில் இருந்து சரியாக பின்பற்றியுள்ளார், என்று அவர் சாட்சி பகர்கிறார். மற்ற புத்தகம் அப்போஸ்தலர்களின் நடபடிகள் ஆகும், இது மற்றவர்களின் சொற்களிலிருந்து அல்ல, அவரே தான் கண்டவற்றிலிருந்து இயற்றினார்.

8.மேலும், பவுல் லூக்காவின் நற்செய்தியை எங்கு குறிப்பிட்டாலும் அவர் தனது சொந்த நற்செய்தியைப் பற்றி பேசுவது போல் குறிப்பிடுகிறார், என்று அவர்கள் கூறுகிறார்கள், "என் சுவிசேஷத்தின்படி" என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். (ரோமர் 2:16, 16:26, 2தீமோத்தேயு 2:8) ( Eusebius, Historia Ecclesiastica, Book III. Chapter IV.—The First Successors of the Apostles).

ஸலாமிஸின் எபிஃபேனியஸ் (காலம் கி.பி.310 – 403)

Matthew himself wrote and issued the Gospel in the Hebrew alphabet, and did not begin at the beginning, but traced Christ’s pedigree from Abraham. 

மத்தேயு தானே எபிரேய எழுத்துக்களில் நற்செய்தியை எழுதி வெளியிட்டார், ஆரம்பத்தில் இருந்து தொடங்கவில்லை, ஆனால் ஆபிரகாமில் இருந்து கிறிஸ்துவின் பரம்பரையைக் பட்டியலிட்டார். (The Panarion of Epiphanius of Salamis Books II and III. De Fide, 6.1, 5,3)

Mark, who came directly after Matthew, was ordered by St. Peter at Rome to issue the Gospel, and after writing it was sent by St. Peter to Egypt. (The Panarion of Epiphanius of Salamis Books II and III. De Fide, 6.1, 6,10)

மத்தேயுவுக்குப் பிறகு நேரடியாக வந்த மார்க், நற்செய்தியை வெளியிடுமாறு ரோமில் புனித பீட்டரால் கட்டளையிடப்பட்டார், அதை எழுதிய பிறகு புனித பீட்டரால் எகிப்துக்கு அனுப்பப்பட்டார். (The Panarion of Epiphanius of Salamis Books II and III. De Fide, 6.1, 6,10)
4,3 And he sent seventy-two others as well to preach, among whom were the seven who were put in charge of the widows, Stephen, Philip, Prochorus, Nicanor, Timon, Parmenas and Nicolaus—(4) but before them was Matthias, who was included among the apostles in place of Judas. After these seven, and Matthias who preceded them, he sent Mark and Luke, Justus, Barnabas and Apelles, Rufus, Niger and < the > rest of the seventy-two. (5) After them all, and along with them, he chose the holy apostle Paul with his own voice from heaven to be at once apostle and herald of the gentiles and the one to complete the apostolic doctrine. (6) It was Paul who found St. Luke, one of the seventy-two who had been scattered, brought him to repentance, and < made him > his own follower, both a co-worker in the Gospel and an apostle. And in this way all of the work of preaching the Gospel has been done, down to this time.( Epiphanius of Salamis, ANACEPHALAEOSIS I, de incarnatione, section I)
மேலும் அவர் மற்ற எழுபத்திரண்டு பேரையும் பிரசங்கிக்க அனுப்பினார், அவர்களில் ஏழு பேர்- ஸ்டீபன், பிலிப், புரோகோரஸ், நிக்கானோர், டிமோன், பர்மெனாஸ் மற்றும் நிக்கோலஸ் ஆகியோர் விதவைகளுக்கு பொறுப்பாளியாக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு முன் மத்தியாஸ் இருந்தார், அவர் யூதாஸுக்குப் பதிலாக அப்போஸ்தலரில் சேர்க்கப்பட்டார். இந்த ஏழு பேருக்கும், அவர்களுக்கு முந்திய மத்தியாஸுக்கும் பிறகு, அவர் மாற்கு மற்றும் லூக்கா, ஜஸ்டஸ், பர்னபாஸ் மற்றும் அப்பல்லெஸ், ரூஃபஸ், நைஜர் மற்றும் எழுபத்து இரண்டு பேரை அனுப்பினார். அவர்களுக்குப் பிறகு, அவர்களுடன் சேர்ந்து, அவர் பரலோகத்திலிருந்து தனது சொந்தக் குரலால் பரிசுத்த அப்போஸ்தலனாகிய பவுலை ஒரே நேரத்தில் அப்போஸ்தலராகவும், புறஜாதிகளின் அறிவிப்பாளராகவும், அப்போஸ்தலிக்கக் கோட்பாட்டை நிறைவுசெய்யவும் தேர்ந்தெடுத்தார். எழுபத்திரண்டு பேரில் ஒருவரான விலகிச்சென்ற புனித லூக்காவைக் கண்டுபிடித்தவர் பவுல், அவரை மனந்திரும்புதலுக்கு கொண்டுவந்தார், மேலும் அவரைத் தனது சொந்தப் பின்பற்றுபவராகவும், நற்செய்தியில் சக ஊழியராகவும், அப்போஸ்தலராகவும் உருவாக்கினார். . இந்த வழியில், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் அனைத்து வேலைகளும் இந்த காலம் வரை செய்யப்பட்டுள்ளன.( Epiphanius of Salamis, ANACEPHALAEOSIS I, de incarnatione, section I)

    Matthew, also called Levi, apostle and a foretimes publican, composed a gospel of Christ at first published in Judea in Hebrew  for the sake of those of the circumcision who believed, but this was afterwards translated into Greek though by what author is uncertain. The Hebrew itself has been preserved until the present day in the library at Cæsarea which Pamphilus so diligently gathered. I have also had the opportunity of having the volume described to me by the Nazarenes of Beroea, a city of Syria, who use it.( Jerome, Lives of Illustrious Men. Chapter III. Matthew, surnamed Levi) 
லெவி, அப்போஸ்தலன் மற்றும் முன்னொரு காலத்தில் வரிவசூலிப்பவர் என்றும் அழைக்கப்படும் மத்தேயு, முதலில் கிறிஸ்துவின் நற்செய்தியை யூதேயாவில் ஹீப்ருவில், நம்பிக்கைக்கொண்ட விருத்தசேதனம் செய்தவர்களுக்காக வெளியிட்டார். ஆனால் இது பின்னர் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது, ஆனால் யாரால் என்பது அறியப்படவில்லை. பாம்பிலஸ் மிகவும் விடாமுயற்சியுடன் சேகரித்த Cæsarea நூலகத்தில் இன்று வரை எபிரேயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிரியாவின் நகரமான பெரோயாவின் நாசரேன்கள் என்னிடம் விவரித்த அந்த தொகுப்பினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது, அவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள்.( Jerome, Lives of Illustrious Men. Chapter III. Matthew, surnamed Levi)

யோவான் கிறிசோஸ்தோம் (காலம் கி.பி.347 – 407):

        Of Matthew again it is said, that when those who from amongst the Jews had believed came to him, and besought him to leave to them in writing those same things, which he had spoken to them by word, he also composed his Gospel in the language of the Hebrews. And Mark too, in Egypt is said to have done this self-same thing at the entreaty of the disciples. (Homilies of St. John Chrysostom, archbishop of constantinople, on the gospel according to st. matthew. Homily 1)

மத்தேயுவைப் பற்றி மீண்டும் சொல்லப்படுகிறது, யூதர்களில் இருந்து விசுவாசித்தவர்கள் அவரிடம் வந்து, அவர் தங்களுக்கு வார்த்தையாகப் பேசியதையே தங்களுக்கு எழுதித் தரும்படி வேண்டிக்கொண்டபோது, அவர் தனது நற்செய்தியை எபிரேயர்களின் மொழியில் இயற்றினார். மேலும், மாற்குவும், எகிப்தில், சீடர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இதையே செய்ததாகக் கூறப்படுகிறது. (Homilies of St. John Chrysostom, archbishop of constantinople, on the gospel according to st. matthew. Homily 1)

    மேற்குறிபிட்ட வரலாற்று கூற்றுக்களின் அடிப்படையில், நற்செய்தி நூல்களின் உள்ளடக்கத்தையும், வெளிப்புற வரலாற்று ஆதாரங்களுடன், இருக்கும் முரண்களையும், அந்த முரண்கள் எப்படி கிறித்தவ உலகின் நெடுநாள் நம்பிக்கையை ஆட்டுவிக்கிறது என்பதையும், இஸ்லாமிய அறிஞர்கள் இந்த நற்செய்தி நூல் குறித்து என்ன நிலைபாட்டை கொண்டுள்ளனர் என்பதையும் வரும் தொடர்களில் காணவிருக்கிறோம், இன் ஷா அல்லாஹ்……..

No comments:

Post a Comment