- அந்நூர் அத்தியாத்தின் 27 ம் வசனத்தில் எழுத்தர் பிழை இப்னு அப்பாஸ்(ரலி) கூற்று - ஆதாரமும் வாதமும்
- நபித்தோழர்கள் குர்ஆன் வசனத்துடன் விளக்கத்தியும் ஓதும் வழக்கமுடையவர்கள்- ஆய்வாளர்களின் கருத்து
- தஸ்தஃனிஸூ என்பதின் பொருள் தஸ்தஃதனூ- இப்னு அப்பாஸ்(ரலி) விளக்கம்
- இப்னு அப்பாஸ்(ரலி)யின் ஒதலை கற்றுக்கொடுத்த முஜாஹித்(ரஹ்) அவர்கள் இன்றிருப்பது போல் ஓதுதல்
- இப்னு அப்பாஸ்(ரலி) --> முஜாஹித்(ரஹ்) மற்றும் ஸயீத் இப்னு ஜுபைர்-->அல் தூரியின் ஓதல்
- ஆய்வினால் பெறப்படும் முடிவுகள்
حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَافِظُ، أَنْبَأَ عَبْدَانُ الْأَهْوَازِيُّ، ثنا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، ثنا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، ثنا سُفْيَانُ، عَنْ شُعْبَةَ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي قَوْلِهِ تَعَالَى: {لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا} [النور: 27] قَالَ: «أَخْطَأَ الْكَاتِبُ حَتَّى تَسْتَأْذِنُوا»
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்: லா தத்ஹுலு புயூதன் ஃகைர புயூதிக்கும் ஹத்தா தஸ்தஃனிஸூ என்ற வசனத்தில் (ஹத்தா தஸ்தஃனிஸூ) இது எழுத்தர் பிழையாகும். ஹத்தா தஸ்தஃதனூ (என்பதுதான் சரியானதாகும்) என்று கூறினார்கள்.(அறிவிப்பாளர்: முஜாஹித்(ரஹ்), நூல்: முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் 3496
" இன்றைய குர்ஆனில் அந்நூர் அத்தியாத்தின் 27 ம் வசனம் " லா தத்ஹுலு புயூதன் ஃகைர புயூதிக்கும் ஹத்தா தஸ்தஃனிஸூ" என்று இடம்பெறுவதாலும், அதனை எழுத்தர் பிழை என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களே கூறுவதாலும் அல் குர்ஆனில் எழுத்தர் பிழைகள் இருக்கிறது ஆகவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை "
என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.
ஆனால் மேற்குறிபிட்ட இவர்களது இந்த வாதம் நபித்தொழர்கள் வேதத்தை மட்டுமே கற்றனர், கற்பித்தனர் என்ற அறியாமையினாலும், நபித்தோழர்கள் குர்ஆன் வசனத்தின் பொருளாக்கத்தையும் சில நேரம் இணைத்து ஓதக்கூடியவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறியாததாலும் ஏற்பட்டதாகும். முன்சென்ற தொடரில் இது குறித்து நாம் விளக்கியிருந்தோம். மீண்டும் இது குறித்த இந்த விஷயத்தில் நிபுனத்துவம் பெற்ற இரு அறிஞர்களின் கருத்தை நினைவூட்டுகிறொம்.
அபூ பகர் அல் பாக்கீலானி (ஹிஜ்ரி 340 - 403) அவர்களது கருத்து:ﻭﻛﺎﻥ ﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﻘﺮﺃ اﻝﺗﺄﻭﻳﻞ ﻣﻊ اﻝﺗﻨﺰﻳﻞ ﻧﺤﻮ ﻗﻮﻟﻪ: ﻭاﻟﺼﻼﺓ اﻟﻮﺳﻄﻰ، (ﻭﻫﻲ ﺻﻼﺓ اﻟﻌﺼﺮ) .
அவர்களில் ( சஹாபாக்களில்) சிலர் பொருளாக்கத்தையும் இறக்கப்பட்ட வசனங்களுடன் ஓதுபவர்களாக இருந்துள்ளனர் . உதாரணமாக நடுத்தொழுகை (அதுதான் அஸர் தொழுகை). (அபூபக்ர் அல் பாக்கீலானி அவர்களது அல் இன்திஸார் லில் குர்ஆன் 1/351)
இப்னு அல் ஜஸரீ (ஹிஜ்ரி 751- 833) அவர்களது கருத்து
نَعَمْ كَانُوا رُبَّمَا يُدْخِلُونَ التَّفْسِيرَ فِي الْقِرَاءَةِ إِيضَاحًا وَبَيَانًا لِأَنَّهُمْ مُحَقِّقُونَ لِمَا تَلَقَّوْهُ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قُرْآنًا فَهُمْ آمِنُونَ مِنَ الِالْتِبَاسِ وَرُبَّمَا كَانَ بَعْضُهُمْ يَكْتُبُهُ مَعَهُ
சிலநேரங்களில் அவர்கள் (நபித்தோழர்கள்) கிராஆத்தில் தஃப்ஸீரையும் இணைத்தது விளக்கத்திற்காவும் தெளிவுபடுத்துவதற்காகவும் தான். ஏனென்றால் அவர்கள் நபி(சல்) அவர்களிடம் இருந்து நேரடியாக கற்ற குர்ஆனில் வல்லவர்களாய் இருந்தனர். அதனால் அவர்களுக்கு இடையே குழப்பம் ஏற்படாமல் பாதுக்காக்கப்பட்டனர். மேலும் சிலநேரங்களில் அவர்களில் சிலர் அவற்றை (தஃப்ஸீரை) அதனுடன் (குர்ஆனுடன்) எழுதவும் செய்தனர். (இப்னு ஜஸரீ அவர்களது நஸர் பீ கிராத் அல் அஸர் 1/32)
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﻴﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ: ﻭﺣﺪﺛﻨﻲ ﺃﺑﻲ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ اﻟﻬﺬﻳﻞ ﻋﻦ اﻟﻤﺴﻴﺐ ﻋﻦ اﻷﻋﻤﺶ ﻋﻦ اﺑﻦ ﺟﺒﻴﺮ ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ- ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ- ﻗﺎﻝ: ﺗﻌﻠﻤﻮا اﻟﺘﺄﻭﻳﻞ ﻗﺒﻞ ﺃﻥ ﻳﺠﻲء ﺃﻗﻮاﻡ ﻳﺘﺄﻭﻟﻮﻧﻪ ﻋﻠﻰ ﻏﻴﺮ ﺗﺄﻭﻳﻠﻪ
இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது: தவறான பொருளின் அடிப்படையில் (குர்ஆனை)விளக்கும் மக்கள் வருவதற்கு முன் பொருளாக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள். (தஃப்ஸீர் முகாத்தில் இப்னு சுலைமான் 1/26)
ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻛﺮﻳﺐ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻃﻠﻖ ﺑﻦ ﻏﻨﺎﻡ، ﻋﻦ ﻋﺜﻤﺎﻥ اﻟﻤﻜﻲ، ﻋﻦ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﻠﻴﻜﺔ ﻗﺎﻝ: ﺭﺃﻳﺖ ﻣﺠﺎﻫﺪا ﻳﺴﺄﻝ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻋﻦ ﺗﻔﺴﻴﺮ اﻟﻘﺮﺁﻥ، ﻭﻣﻌﻪ ﺃﻟﻮاﺣﻪ، ﻓﻴﻘﻮﻝ ﻟﻪ اﺑﻦ ﻋﺒﺎﺱ: "اﻛﺘﺐ"، ﻗﺎﻝ: ﺣﺘﻰ ﺳﺄﻟﻪ ﻋﻦ اﻟﺘﻔﺴﻴﺮ ﻛﻠﻪ
இப்னு அபீ மாலிக்கா கூறியதாவது:" முஜாஹித் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் குர்ஆனின் விளக்கம் குறித்து கேட்பார்கள். அவர்களிடம் அவரது குறிப்பேடுகள் இருக்கும். இப்னு அப்பாஸ்(ரலி) அவரிடம் "எழுதுக" என்று கூறுவார்கள். மேலும் (இப்னு அபீ மாலிக்கா )கூறினார்கள் :அவர் அவரிடம் முழு விளக்கத்தை பெறும் வரை கேட்டுகொண்டே இருப்பார். (தஃப்ஸீர் தபரீ 1/90 ஹதீஸ் எண்: 107)
حدثنا محمد بن سعد، قال: ثني أبي، قال: ثني عمي، قال: ثني أبي، عن أبيه، عن ابن عباس، قوله:( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ) قال: الاستئناس: الاستئذان.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், லா தத்ஹுலு புயூதன் ஃகைர புயூதிக்கும் ஹத்தா தஸ்தஃனிஸூ வ துஸல்லிமூ அலா அஹ்லிஹிம் என்பதில் தஸ்தஃனிஸூ என்பதின் பொருள் தஸ்தஃதனூ என்பதாகும் என்று கூறினார்கள்.(தப்ஸீர் தபரி அந்நூர் சூராவின் 27ம் வசனத்தின் விளக்கம்).
اﺑﻦ ﻭﻫﺐ، ﻭاﺑﻦ اﻟﻘﺎﺳﻢ ﻋﻦ ﻣﺎﻟﻚ ﺃﻥ اﻻﺳﺘﺌﻨﺎﺱ ﻫﻮ اﻻﺳﺘﺌﺬاﻥ ﻋﻠﻰ اﻟﺘﺄﻭﻳﻞ اﻷﻭﻝ
மாலிக் (ரஹ்) கூறியதாவது: நிச்சயமாக தஸ்தஃனிஸூ என்பதின் முதன்மை பொருளாக்கம் தஸ்தஃதனூ என்பதாகும்.(அல் அஹ்காம் அல் குர்ஆன் 3/371)
ﺳﻔﻴﺎﻥ ﻋﻦ ﺟﺎﺑﺮ ﻋﻦ ﻣﺠﺎﻫﺪ ﻓﻲ ﻗﻮﻟﻪ ﻻ ﺗﺪﺧﻠﻮا ﺑﻴﻮﺗﺎ ﻏﻴﺮ ﺑﻴﻮﺗﻜﻢ ﺣﺘﻰ ﺗﺴﺘﺄﻧﺴﻮا ﻗﺎﻝ ﻫﻮ اﻟﺘﻨﺤﻨﺢ
முஜாஹித்(ரஹ்) அவர்கள் "லா தத்ஹுலு புயூதன் ஃகைர புயூதிக்கும் ஹத்தா தஸ்தஃனிஸூ (உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெறாமல் நுழைய வேண்டாம்.) " இது நிபந்தனை ஆகும் என்று கூறினார்கள்.(தஃப்ஸீர் சுஃப்யான் அல் ஸவ்ரி 1/224)
1. இப்னு அப்பாஸ் அவர்களது வழியாக வரும் முத்தவாதீரான ஓதலில் "ஹத்தா தஸ்தஃனிஸூ" என்றே இடம் பெறுகிறது.
2. இந்த வசனத்தை ஓதி விளக்கும் போது இந்த ஹதீஸை அறிவிக்கும் முஜாஹித்(ரஹ்) அவர்கள் "ஹத்தா தஸ்தஃனிஸூ" என்றே ஓதி விளக்கியுள்ளார்கள்.3. தஸ்தஃனிஸூ என்ற வார்த்தையின் முதன்மை பொருளாக்கம்"தஸ்தஃதனூ" என்று மாலிக் இப்னு அனஸ்(ரஹ்) அவர்கள் விளக்குகிறார்கள்.4. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களே தஸ்தஃனிஸூ என்ற வார்த்தையின் பொருளாக்கம் "தஸ்தஃதனூ" என்று விளக்கிவிட்டார்கள்.