பக்கங்கள் செல்ல

Monday, December 14, 2020

ஏழு அஹ்ரூஃபும் ஏழு கிராத்தும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

variant readings of the quran,ஏழு ஹர்ஃபுக்கள்  ஏழு கிராஅத்துகள்


      குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் வைக்கும் அறைவேக்காட்டு வாதங்களுக்கு , ஆதாரப்பூர்வமான வரலாற்று தரவுகளை முன்வைத்து விரிவான பதில்களை கண்டுவருகிறோம். அல்ஹம்துலில்லாஹ். இந்த வரிசையில் குர்ஆன் வரலாறு குறித்த விமர்சனங்களில் ஏழு அஹ்ரூஃப் குறித்த இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கான விளக்கம் எளிமையாக புரிந்து கொள்ளும் படியாக இருந்தாலும், முன் சென்ற அறிஞர்களின் ஆய்வை முன்னிறுத்தி சில வாதங்களை கிறித்துவ மிசனரிகளும், Ex- முஸ்லிம் என்று கூறித்திரிவோரும் முன்வைத்து வருகின்றனர். அதற்கான பதிலை இந்த பாகத்தில் காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதங்களை முதலில் பார்ப்போம்.


1. குர்ஆன் ஏழு வட்டார வழக்கில் இறங்கியது. ஆனால் இன்றிருப்பது ஓரே வழக்குதான். அதனால் குர்ஆனின் முழு பகுதியும் பாதுக்காக்கப்பட வில்லை.

2. உஸ்மான்(ரலி) அவர்கள் குர்ஆனை தொகுக்கும் போது குரைஷியரின் வட்டார வழக்கில் தொகுக்க கட்டளை இட்டுவிட்டார். அதனால் அவர் நபி(சல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்து விட்டார்.

3. இன்று பல ஓதல்கள் உள்ளன. அதில் எது நபி(சல்) அவர்களின் ஓதல் என்பதை அறிய இயலாது.
    மேற்குறிபிட்ட மூன்று வாதங்களை முன்னிறுத்தி குர்ஆன் என்பது பாதுகாக்கப்படவில்லை என்றும், உஸ்மான்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார் என்றும் கூறுகின்றனர். இந்த குருட்டு வாதங்களை இஸ்லாமோஃபோபுகள் முன்வைப்பதற்கான நோக்கம் இவையே

1.நபித்தோழர்கள் நம்பகத்தன்மை அற்றவர்கள். அல்லாஹ்வின் வேதத்தின் ஒரு பகுதியையே அழிக்கத்துணித்தவர்கள்.
2.அல்லாஹ்வின் குர்ஆன் ஓதலிலும் பாதுக்காக்கப்படவில்லை
  மேற்குறிபிட்ட தங்களது துவேச நோக்கத்தை நிறைவேற்ற இந்த அரைவேக்காடுகள் குர்ஆன் ஏழு அஹ்ரூஃபில் இறங்கியது என்ற ஹதீஸை தங்களது முதன்மை ஆதாரமாக முன்வைக்கின்றனர். 

 குருட்டு வாதங்களும் நமது விளக்கமும்

      இஸ்லாமோஃபோபுகளின் வாதங்களுக்கான பதில்களை ஏழு அஹ்ரூஃப்  குறித்த இஸ்லாமிய அறிஞர்களின் மாறுபட்ட கருத்தியல்களை விளக்குவதில் இருந்து ஆரம்பிப்போம். ஏழு அஹ்ரூஃப் குறித்த தெளிந்த பார்வையே மேற்குறிபிட்ட வாதங்களுக்கு தக்க பதிலாக அமையும்.


ஏழு அஃரூஃப் குறித்து இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் நிழவுகின்றன. அவை

கருத்து 1: 
         அன்றிருந்த ஏழு அரபு கோத்திரத்தாரின் வட்டார வழக்கு என்று ஓரு சாரார் கூறுகின்றனர். இந்த கருத்தை அபூ உபைத், அல் பைஹக்கி உள்ளிட்ட அறிஞர்கள் இந்த கருத்தை முன்வைக்கின்றனர்.

கருத்து 2:

    குர்ஆன் வார்த்தைகளில் மற்றும், வாக்கிய அமைப்பில் இருக்கும் ஏழு வகையான மாறுபாடுகள் என்றும் கூறுகின்றனர். அவை ஒருமை பன்மை மாறுபாடு, செய்வினை, செய்யப்படுவினை மாறுபாடு, ஆண்பால் பெண்பால் உருபுகளில் இருக்கும் மாறுபாடு உள்ளிட்ட இலக்கண ரீதியான மாறுபாடுகள் , உயிர் குறியீடு மாறுபாடுகள் உச்சரிப்புகளில் தோன்றும் மாறுபாடுகள் உள்ளிட்ட மாறுபாடுகள் ஆகும். இந்த கருத்தை மாலிக் பின் அனஸ், இப்னு ஹுதைபா, அபூ ஃபதல் அல் ராஸி, அபூபகர் அல் பாக்கிலானி, இப்னு ஜஸரி போன்ற அறிஞர்கள் முன்வைக்கின்றனர். ஆனால் எந்த ஏழு மாறுபாடுகள் என்பதில் அறிஞர்கள் மாறுபடுகின்றனர். 

        இவ்விரு கருத்துக்கல்தான் இஸ்லாமிய அறிஞர்களின் பெரும்பாலோரின் கருத்தாக இருக்கிறது. அஹ்ரூஃப் குறித்த சரியான கருத்து எது என்பதை இறுதியில் காண்போம்.


       மேற்குறிபிட்ட இந்த இரண்டு கருத்துக்களையும் தரும் ஹதீஸை முதலில் காண்போம்.
عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَقْرَأَنِي جِبْرِيلُ عَلَى حَرْفٍ، فَلَمْ أَزَلْ أَسْتَزِيدُهُ حَتَّى انْتَهَى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

         ஒரேயொரு அஹ்ரூஃபின் படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல அஹ்ரூஃபின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு அஹ்ரூஃப் அளவிற்கு வந்து நின்றது. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 3219)

          மேற்குறிபிட்டஹதீஸில் இடம் பெறும் أَحْرُفٍ என்ற சொல்லிற்கு “எல்லைகள், முனைகள், எழுத்துக்கள் “ என்ற பொருளாகும். அதற்கு வட்டார வழக்கு என்பது நேரடி பொருள் அன்று. أَحْرُفٍ என்பது حرف என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததாகும். அது குறித்து லேன்ஸ் லெக்ஸிகான் பின்வருமாறு கூறுகிறது.

حَرْفُ √) حرف) The extremity, verge, border, margin, brink, brow, side, or edge of anything.

          லேன்ஸ் லெக்ஸிகான் குறிப்பிடுவது போன்ற பொருளில் அல் குர்ஆனிலும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.

وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَىٰ حَرْفٍ ۖ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ ۖ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انْقَلَبَ عَلَىٰ وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ۚ ذَٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ

இன்னும்; மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.(அல் குர்ஆன் 22:11)

حرف என்ற வேர்ச்சொல்லில் இருந்து தோன்றும் أَحْرُف என்ற சொல்லின் பொருளையும் லேன்ஸ் லெக்ஸிகான் தெளிவு படுத்துகிறது.

آحْرُفُ : so in the saying (of Mohammad, TA) نَزَلَ القُرْأٓنُ عَلَى سَبْعَةِ آحْرُفٍ The Kur-án has been revealed according to seven dialects, of the dialects of the Arabs: (A'Obeyd, Az, IAth, K:) or this means, according to seven modes, or manners, (Mgh, Msb,) of reading

        மேற்குறிபிட்ட பொருள்களான வட்டார வழக்கு அல்லது முறைகள் என்பதில் எது மிகச்சரியானது என்பதை தெளிவு படுத்துவதுதான் அரைவேக்காடுகளின் வாதங்களிற்கு தக்க பதிலைதரும்.

அஹ்ரூஃப் என்றால் வட்டார வழக்கா???

           குர்ஆன் ஏழு வட்டார மொழிகளில் இறங்கியதா அல்லது நபி(சல்) அவர்களது மொழியில் இறங்கியதா என்பது அல் குர்அனில் குறிப்பிடப்பட்டுள்ளது:
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِينَ وَتُنْذِرَ بِهِ قَوْمًا لُدًّا

(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும். ( அல்குர்ஆன் 19:97)
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.(அல் குர்ஆன் 44:58) 
         மேற்குறிபிட்ட வசனங்கள் ஒன்றை தெளிவாக உணர்த்துகின்றன குர்ஆன் நபி(சல்) அவர்களது மொழியில் அதுவும் بِلِسَانِكَ என்பது உம்முடைய பேச்சு வழக்கில் என்றே பொருளை குறிக்கும் சொல்லாகும். ஆக நபி(சல்) அவர்களது பேச்சு வழக்கு அல்லாது வழக்குகளில் குர்ஆன் இறங்கவில்லை என்று குர்ஆனே கூறிப்பிடுகிறது. மேலும் இதை உறுதி படுத்தும் விதமாக நபிதோழர்களும் இந்த கருத்தை முன்வைத்துள்ளனர்.

وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ الْقُرَشِيِّينَ الثَّلاَثَةِ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَىْءٍ مِنَ الْقُرْآنِ فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ فَفَعَلُوا

       மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷியரின் மொழிவழக்குப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள்.(புகாரி 4987)
      மேலும் உமர்(ரலி) அவர்களும் அவரது குரைஷி கோத்திரத்தை சேர்ந்த ஹிஸாம் இப்னு ஹகீம்(ரலி) அவர்களோடே ஓதலில் மாறுபட்டதாக ஹதீஸ் கூறுகிறது. 

உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்

         இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அவர் அதை ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே அவரை நான் தண்டிக்க முனைந்தேன். (சற்று நிதானித்து) அவர் தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும் வரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

       (அவர் தொழுகையை முடித்ததும் அவரின் மேல் துண்டை) அவரின் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'இந்த அத்தியாயத்தை நான் (உம்மிடமிருந்து) செவியேற்றபடி உமக்கு ஓதிக்கொடுத்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஓதிக் கொடுத்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம்மிடம் நான் செவியேற்ற இந்த அத்தியாயத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களே எனக்கு (நீர் ஓதியதற்கு மாற்றமாக) ஓதிக் கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக்கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக் கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன். இந்த அத்தியாயத்தை நீங்கள் எனக்கு (வேறு முறையில்) ஓதிக் கொடுத்துள்ளீர்கள்' என்று சொன்னேன். அப்போது, நபி(ஸல்) அவர்கள், 'ஹிஷாமே, அதை ஓதுங்கள்!' என்றார்கள். உடனே அவர் நான் அவரிடமிருந்து செவியேற்றபடியே (நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும்) ஓதிக் காட்டினார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் 'இப்படித்தான் (இந்த ) அருளப்பெற்றது' என்று கூறினார்கள்.

     பிறகு (என்னைப் பார்த்து), 'நீங்கள் ஓதுங்கள், உமரே!' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக் கொடுத்தபடி நான் ஓதினேன். (அதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த ) அருளப்பெற்றது' என்று கூறிவிட்டு, இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டுள்ளது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். (புகாரி 5401)
           ஒரே கோத்திரத்தார் மத்தியில் ஓதலில் மாறுபாடு இருக்கிறது எனும் போது நிச்சயம் அஹ்ரூஃப் என்பது வாட்டார மொழியிலான மாறுபாடு அல்ல என்பது தெளிவாகிறது. மேலும் நபி(சல்) அவர்கள் இந்த ஏழு அஹ்ரூஃபை அல்லாஹ்விடம் வேண்டி பெற்றதின் நோக்கம் தனது சமூகத்தின் மாறுபட்ட கோத்திரத்தாரின் சிரமத்தை கருத்தில் கொண்டு அல்ல மாறாக தனது சமூகத்தில் இருக்கும் புத்தகத்தை வாசிக்க முடியாத மக்களுக்காக என்பது தெளிவாக பின்வரும் செய்தி கூறுகிறது. 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ لَقِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جِبْرِيلَ فَقَالَ يَا جِبْرِيلُ إِنِّي بُعِثْتُ إِلَى أُمَّةٍ أُمِّيِّينَ مِنْهُمُ الْعَجُوزُ وَالشَّيْخُ الْكَبِيرُ وَالْغُلاَمُ وَالْجَارِيَةُ وَالرَّجُلُ الَّذِي لَمْ يَقْرَأْ كِتَابًا قَطُّ قَالَ يَا مُحَمَّدُ إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ
    அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்கள் ஜிப்ரீலை சந்தித்து கூறினார்கள்; ஜிப்ரீலே! நான் எழுத படிக்க தெரியாத சமூகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளேன். அதில் புத்தகத்தை ஓத முடியாத வயதான பெண்களும், ஆண்களும், சிறுவர்களும் சிறுமிகளும் இருக்கிறார்கள். அதற்கு “முஹம்மதே: நிச்சயமாக இந்த குர்ஆன் ஏழு அஃரூஃப்களில் அருளப்பட்டுள்ளது என்று (ஜிப்ரீல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: உபை இப்னு காஃப் நூல்:திர்மிதி 2944)
மேற்குறிபிட்ட செய்தி தெளிவாக உணர்த்துகிறது குர்ஆன் ஏழு அஃரூஃபில் வழங்கப்பட்டது மக்களின் ஓதலை எளிமையாகத்தான்.
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

        (ஒரு முறை) நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) வந்து தொழலானார்; (தொழுகையில் குர்ஆன் வசனங்களை) ஒரு விதமாக ஓதினார். அதை நான் அறிந்திருக்கவில்லை. பிறகு மற்றொருவர் வந்து (அதே வசனங்களை) முதலாமவர் ஓதியதற்கு மாற்றமாக ஓதித் தொழலானார். தொழுகை முடிந்ததும் நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் "இவர் குர்ஆனை நான் அறிந்திராத (ஓதல்) முறையில் ஓதினார். பின்னர் மற்றவர் வந்து முதலாமவர் ஓதியதற்கு மாறாக (அதையே) வேறு முறையில் ஓதினார்" என்றேன். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் ஓதிக் காட்டும்படி பணித்தார்கள். அவ்விருவரும் ஓதினர். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் சரியாகவே ஓதினர் எனக் கூறினார்கள். (இதைக் கேட்டவுடன்) என் உள்ளத்தில் நபியவர்கள் பொய்யுரைக்கிறார்கள் என்ற எண்ணம் விழுந்தது. அறியாமைக் காலத்தில்கூட இத்தகைய எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. என்னை ஆட்கொண்டிருந்த (அந்த எண்ணத்)தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது என் நெஞ்சில் ஓர் அடி அடித்தார்கள். (அடி விழுந்ததும்) எனக்கு வியர்த்துக் கொட்டியது. அச்சத்தால் எனக்கு அல்லாஹ்வே காட்சியளிப்பதைப் போன்றிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "உபை, "குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக" என எனக்கு (இறைவனிடமிருந்து) செய்தியறிவிக்கப்பட்டது. உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் சுலபமாக்கும்படி (இறைவனிடம்) கோரினேன். அப்போது "குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக!" என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான். உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு சுலபமாக்கும்படி கோரினேன். மூன்றாவது முறையில் குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின் படி ஓதும்படி எனக்கு இறைவன் அறிவித்தான். மேலும், "நீர் கோரிய (மூன்று கோரிக்கைகளில்) ஒவ்வொரு கோரிக்கைக்கும் பகரமாக என்னிடம் உமக்கு ஓர் (அங்கீகரிக்கப்பட்ட) பிரார்த்தனை உண்டு" என்றும் (இறைவன்) கூறினான். எனவே நான் "இறைவா! என் சமுதாயத்தாரை மன்னிப்பாயாக! இறைவா! என் சமுதாயத்தாரின் குற்றங்குறைகளை மறைப்பாயாக!" என (இரண்டு) பிரார்த்தனை செய்தேன். (இவ்விரு பிரார்த்தனைகள் அல்லாமல்) மூன்றாவது பிரார்த்தனையை நான் ஒரு நாளைக்காகத் தாமதப்படுத்தி (பத்திரப்படுத்தி) வைத்துள்ளேன். அந்நாளில் படைப்பினங்கள் அனைத்தும் என்னிடம் (பரிந்துரைக்கும்படி) ஆவலுடன் வருவார்கள்; இப்ராஹீம் (அலை) அவர்கள் உட்பட" எனக் கூறினார்கள்.(முஸ்லிம் 1491)
   மேற்குறிபிட்ட செய்திகளை காணும் போது மக்களுக்கு எளிமையாக்கவும்,ஓதுவதில் ஏற்படும் சிக்கலினால் , அல்லாஹ் அருளியதற்கு மாற்றமாக மக்கள் ஓதுவதற்கு அவர்களுக்கான சலுகையாகத்தான் ஏழு அஹ்ரூஃப் வழங்கப்பட்டது என்பதை மேற்குறிபிட்ட ஹதீஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன.மேலும் அந்த ஏழு அஹ்ரூஃப்பும் ஒரே பொருளைத்தான் கொண்டிருக்கின்றன என்பதை பின்வரும் செய்தியும் உறுதி படுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

        ஒரேயொரு அஹ்ரூஃபின்படி (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல அஃரூஃப்களின்படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்கக் கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு அஹ்ரூஃப்கள் அளவிற்கு வந்து நின்றது.

         இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

        அந்த ஏழு அஃரூஃப்கள் ஒரே கருத்தை பிரதிபலிப்பவையே ஆகும்; அனுமதிக்கப் பெற்றவை (ஹலால்) தடை செய்யப்பெற்றவை (ஹராம்) விஷயத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்தைத் தருபவை அல்ல. 

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.(முஸ்லிம் 1490)

மேற்குறிபிட்ட செய்திகளில் இருந்து பார்க்கும் போது பின்வரும் முடிவுகளை பெற முடியும்

1. ஏழு அஹ்ரூஃப் என்பது மக்களுக்கு ஓதலில் இருக்கும் சிரமத்தை குறைக்க அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சலுகை. ஓதலுக்கான பிரத்தியேக சலுகை மட்டுமே. 

2. ஏழு அஹ்ரூஃப் இடையே கருத்து முரண்பாடு இல்லை.
       மக்களின் சிரமத்தால் ஓதலில் மட்டுமே ஏற்படும் மாறுபாடு என்பதை மேலே கூறும் செய்திகள் தெளிவு படுத்துகிறது. இந்த அஹ்ரூஃப் நிச்சயம் வட்டார வழக்கு இல்லை என்பது தெளிவாகிறது. மேலும் இவ்வாறு ஏற்படும் மாறுபாடு செயல்வடிவத்தில் எந்த முரணையும் ஏற்படுத்தாது. நாம் முன் சென்ற தொடரில் மக்களின் பெரும்பான்மை ஓதல் குறித்து விளக்கியிருந்தோம். அதுவே செயல் வடிவத்திற்கான நபி(சல்) அவர்களது இறுதி ஓதல். மக்கள் சிரமத்தினால் மாற்றி ஓதினாலும் கிராத் அல் ஆம்மாவின் அடிப்படையிலேயே செயல் வடிவம் இருக்கும். அதுதான் நபி(ஸல்) அவர்களது இறுதி ஓதலான் அர்தா அல் ஆகீரா ஆகும்.

       உதாரணமாக அல் குர்ஆன் 5:6 எடுத்து கொண்டோமென்றால்,  أَرْجُلَكُمْ - உங்கள் கால்களை இரு கணுக்கால் வரைக் கழுவிக் கொள்ளுங்கள் என்பது பெரும்பான்மை ஓதல். தூரியின் ஓதல் أَرْجُلِكُمْ - உங்கள் கால்களை இரு கணுக்கால் வரைக் தடவிக் கொள்ளுங்கள் என்பதாகும். ஆனால் தூரியின் ஓதலை பின்பற்றும் சூடான் போன்ற நாட்டில் கூட மக்கள் ஓழு செய்யும் போது கால்களை கழுவுவதையே காண முடியும். அதே போல் அல் குர்ஆன் 2:184 مِسْكِينٍ - அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் என்பது பெரும்பான்மை ஓதல். مَسَاكِين - அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக -  மிஸ்கீன்களுக்கு (ஏழைகளுக்கு) உணவளிக்க வேண்டும் என்பது வர்ஸ் மற்றும் காலுனின் ஓதல். ஆனால் வர்ஸ் கிராததை ஓதும் மக்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பதையே பின்பற்றுகிறார்கள். இதில் கருத்து வேறுபாடு கொள்வதில்லை. ஆக ஜுஹ்ரி அவர்கள் கூறுவதை போன்று, மக்கள் எது செயல்பாட்டிற்கான பெரும்பான்மையினர் ஓதல் என்பதையும் எது ஓதுவதற்கான் சலுகை என்பதையும் அறிந்துவைத்திருக்கிறார்கள்.

        இந்த அடிப்படை விசயம் தெரியாமல் தான் தங்களை முன்னால் முஸ்லீம் என்று கூறிக்கொள்ளும் சிலரும், மிசனரிகளும் இதை கேள்வியாக கேட்டு தங்களை அறிவு ஜீவிகள் போன்று படம் காட்டித்திரிகின்றனர்.

ஏழு அஹ்ரூஃப் என்பது இலக்கண மாறுபாடுகள் மட்டுமா????

   ஏழு அஃரூஃப் என்பது குறித்து மிக நீண்ட கருத்துரையாடல்கள் இஸ்லாவரலாற்றில் காணமுடியும். அவற்றுள் ஒரு சாரார் இது ஏழு வட்டார வழக்கு என்று வாதிடுகின்றனர். அந்த கருத்தின் பலவீனத்தை அறிந்தோம். இது அல்லாமல் மற்றொரு முக்கியமான கருத்து சொல்லின் இலக்கண அடிப்படையில் ஆனது. ஒருமை, பன்மை , ஆண்பால், பெண்பால், செய்வினை, செய்யப்பாட்டுவினை, என்று இலக்கண அடிப்படையிலான மாறுதல்கள், உயிர் குறியீட்டில் ஏற்படும் மாற்றம் என்று பல அறிஞர்கள் பல இலக்கண அடிப்படியிலான மாறுபாடுகளை இதுதான் ஏழு மாறுபாடுகள் என்று வாதிக்கின்றனர். எந்த ஏழு இலக்கண அலகுகள் என்பதில் இந்த அறிஞர்களிடம் ஒத்த கருத்து இல்லை. ஆக இந்த கருத்தும் முழுமையானது அல்ல.


     இவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருக்கும் ஒரு விசயம் அன்றைய சமூகத்திற்கு எந்த குழப்பத்தையும் தோற்றுவிக்கவில்லை என்றால், அது குறித்து எந்த நபித்தொழர்களும் எந்த கேள்வியையும் எழுப்பவில்லை என்றால் அதன் பொருள் நிச்சயம் அவர்கள் புரிந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

            மேற்குறிபிட்ட இரண்டு கருத்துக்கள் அல்லாமல்  தற்கால அறிஞர்களிடம் வேறு ஒரு கருத்தும் உள்ளது.  ஏழு அஃரூஃப் என்பது ஒரு வசனத்தை ஓதுவதில் இருக்கும் உட்சபட்ச மாறுபாட்ட முறைகள் ஏழு ஆகும். அதாவது ஒரு வசனத்தை அதிகபட்சமாக ஏழு மாறுபட்ட முறைகளில் ஓத முடியும். நபி(சல்) அவர்களது அங்கீகாரத்தின் அடிப்படையிலும், அரபு இலக்கணத்தின் அடிப்படையிலும் அதற்கு மேல் மாற்றி ஓத இயலாது . இதை தற்கால அறிஞரான அப்துல் அஜீஸ் அல் காரி தனது நூலான “ ஹதீஸ் அல் அஃரூஃப் அல் ஸபாஹ்”ல் விரிவாக விளக்கியுள்ளார். இதுதான் இந்த விசயத்தில் நமது கருத்தும் ஆகும். 


    அஹ்ரூஃப் என்பது குர்ஆன் வசனங்களை, நபி(சல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட மாறுபாட்டுடன் ஓதுவதாகும். கிராத் என்பது ஓதல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. மேற்குறிபிட்டபடி ஒரு காரி, சில வசனங்களை நபி(சல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட மாறுதலுடன் பெரும்பான்மை ஓதலில் இருந்து மாறுபட்டு ஓதுகிறார் என்றால் அது ஒரு கிராத் என்றழைக்கப்படும்.

     குர்ஆனை பொருத்தவரை குர்ஆனின் கிராத்தும்- ஓதலும் வஹியால் கட்டுப்படுத்தப்பட்டது ஆகும். அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
குர்ஆனை திருத்தமாக ஓதூவீராக.(அல்குர்ஆன் 73:4)
         மேற்குறிபிட்ட வசனத்தில் تَرْتِيلًا என்பதின் பொருள் சரியான அளவீட்டின் படி என்பது பொருளாகும். ஆக ஓதுவதும் வஹியால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் நபித்தொழர்கள் குர்ஆனின் கிராத் குறித்து பின்வருமாறு கூறுகின்றனர்.
حَدثنِي مُحَمَّد بن الجهم قَالَ حَدثنَا عبد الله بن عَمْرو بن أبي أُميَّة الْبَصْرِيّ قَالَ أخبرنَا عبد الرَّحْمَن بن أبي الزِّنَاد عَن أَبِيه عَن خَارِجَة بن زيد بن ثَابت عَن أَبِيه قَالَ الْقِرَاءَة سنة فَاقْرَءُوهُ كَمَا تجدونه
    ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறியதாவது ஓதல் என்பது நபிவழியாகும். ஆகவே அதை உங்களிடம் வந்தவாறே ஓதுங்கள்.(கிதாப் அல் ஸபாஹ் ஃபீ கிராத் 1/50) 
حَدثنِي عبد الله بن سُلَيْمَان قَالَ حَدثنَا عَمْرو بن عُثْمَان الْحِمصِي قَالَ حَدثنَا إِسْمَاعِيل بن عَيَّاش عَن شُعَيْب بن أبي حَمْزَة عَن مُحَمَّد بن الْمُنْكَدر قَالَ سمعته يَقُول قِرَاءَة الْقُرْآن سنة يَأْخُذهَا الآخر عَن الأول قَالَ وَسمعت أَيْضا بعض أشياخنا يَقُول عَن عمر بن الْخطاب وَعمر بن عبد الْعَزِيز مثل ذَلِك 
       உமர் அல் கத்தாப்(ரலி) கூறியதாவது: குர்ஆனின் கிராத் என்பது நபிவழியாகும். அதை முன்னவரிடம் இருந்து பின்னவர் எடுத்துக்கொள்வதாகும்.(கிதாப் அல் ஸபாஹ் ஃபீ கிராத் 1/51) 
     கேட்டவாறு ஓதுவதுதான் நபிவழி என்பதால், கிராத் என்பது நபி(சல்) அவர்களிடம் இருந்து எவ்வாறு நபிதோழர்கள் பெற்றார்களோ , அவ்வாறே அவர்களிடம் இருந்து தாபீயீன்கள் பெற்றார்கள். அவர்களிடம் இருந்து ஏனையோர் பெற்றார்கள். ஏழு அஹ்ரூஃபிற்கு அனுமதி இருப்பதால் மனம் போன போக்கில் வசனத்தில் இருக்கும் வார்த்தைகளை மாற்ற முடியாது. 

அதனால்தான் இப்னு அத்தியா பின்வருமாறு கூறுகிறார்கள்; 
       அல்லாஹ் ஏழு அஹ்ரூஃபை நபி(சல்) அவர்களுக்கு அனுமத்தித்ததும், அதன்படி ஜிப்ரீல் கொண்டுவந்ததும், உருவாக்க இயலாமை மற்றும் துள்ளிய ஓத்திசைவு ஆகியவற்றை உறுதி படுத்துவதாகவே இருந்தது. நபி(சல்) அவர்களது சொல்லான “உங்களுக்கு எது எளியதோ அவ்வாறு ஓதுங்கள் “ என்பது நபித்தோழர்கள் தாங்கள் விரும்பிய எதாவது ஒரு ஹர்ஃபில் சொற்றொடரை மாற்றியமைப்பதற்கான அனுமதியன்று. அப்படி இருக்குமாயின் குர்ஆன் உருவாக்க முடியாததாக இருக்காது, மக்கள் அதையும் இதையும் மாற்றி, அது அல்லாஹ் அருளாத வேறொன்றாக மாறியிருக்கும். நபி(சல்) அவர்களுக்கு ஏழு அஹ்ரூஃபின் அனுமதியானது அவர்களது சமூகத்திற்கு எளிமை படுத்ததான் அல்லாஹ்வால் வழங்கப்பட்டது. உபை அவர்களக்கு ஜிப்ரீல் கொண்டு வந்ததும் நபி(சல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். இப்னு மஸுத் அவர்களுக்கும், அவர்களுக்கு (நபி(சல்) வழங்கப்பட்டதை ஓதிக்காட்டினார்கள்.(தஃப்ஸீர் குர்துபி 1/48)
       மேலும் கிராத் என்பது அரபு இலக்கணத்திற்கு பொருந்த வேண்டும் எனும் சரத்திற்கு குர்ஆனில் இடம் பெறும் இந்த வசனம் அடிப்படையாக அமைந்துள்ளது.
எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார். (அல்குர் ஆன் 26:193-195)
அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை அருளினோம்.(அல் குர்ஆன் 39:28).
             நபி(ஸல்) அவர்களது அங்கீகாரம் மற்றும் அரபு இலக்கணம் ஆகிய இரண்டு சரத்துக்களும் எண்ணிலடங்கா ஓதலாக குர்ஆன் இருப்பதை கட்டுக்குள் வைக்கிறது. அதனால்தான் கிபி 150ல் வாழ்ந்த அபூ உபைத் அவர்களால் 25 கிராத்களை மட்டுமே ஆதாரப்பூர்வமானதாக காண முடிந்தது. ஏழு அஹ்ரூஃபில் ஓதலாம் என்ற சலுகையை இரண்டு சரத்துகள் கட்டுப்படுத்தியதால் இது சாத்தியமானது. அடுத்ததாக இப்னு முஜாஹித் அவர்கள் கிபி 900ல் அதில் ஏழு கிராத்தை நபி(சல்) அவர்களின் நேரடி அறிவிப்பாளர் தொடருடன் கூடிய வெகுஜன ஓதலாக சரிகண்டார்கள். அதுதான் இன்றுவரை இருக்கும் ஏழு கிராத்கள் ஆகும். நாம் முன்பே குர்ஆன் எப்படி கற்றுக்கொடுக்கப்பட்டது என்பதை விளக்கியுள்ளோம். வெகுஜன மக்கள் ஓதுவார்கள், அதை வெகுஜன மக்கள் கற்பார்கள். இதனால்தான் தனித்த ஓதல்கள் மறுக்கப்படுகிறது. எனவே  தற்காலத்தில் இருக்கும் பெரும்பான்மை ஓதல் அல்லாத ஏனைய முத்தவாதீரான ஓதல்களும் நபி(ஸல்) அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட ஓதல்கள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


       இன்றைய கிறித்தவ மிசனரிகள் மற்றும் இஸ்லாமோஃபோபுகளின் மூல ஆதாரமாக விளங்கும் ஆன்சரிங்க் இஸ்லாம் வலைதளத்தில் சாமூவேல் கிரீன் குர்ஆனின் மாறுபட்ட ஓதல்கள் பற்றி எழுதிய கட்டுரையில் வர்ஸிற்கும் ஹஃப்ஸுக்கும் (இதை நாம் பெரும்பான்மை மக்களின் ஓதல் என்று கூறுகிறோம்) இடையில் 1354 வேறுபாடுகள் இருப்பதாக கதை அளந்துள்ளார். இது குறித்து இங்கு விளக்க வேண்டும் . எழுத்து வடிவங்களின் அடிப்படையில் ஹஃப்ஸ் மற்றும் வர்ஸுக்கு இடையே 51 அங்கிகரிக்கப்பட்ட  மாறுபாடுகள் உள்ளது. சில வட்டார மொழிகளில் சில எழுத்துக்களை அலிஃபுடன் கூடிய ஃபத்தாவை( நெடில் ‘அ’) நெடில் ‘எ’ என வாசிப்பார்கள். இத்தகைய உச்சரிப்பையும் உள்ளடக்கினால்தான் 1354. அதே போல் குர்ஆனில் 10243 வேறுபாடு உள்ளதாக கதை விட்டுள்ளார். அதுவும் அது போலத்தான் . அவர் அதற்கு ஆதாரமாக مـعـجـم الـقـراءات الـقـرآنـيـة مـع مـقـدمـة فـي الـقـراءات لأشـهـر الـقـراء என்ற நூலில் 10243 என்று கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அதன் இறுதி அத்தியாயத்தின் படத்தையும் இணைத்துள்ளார். அதில் கூறிய படி ஹஃப்ஸின் ஓதலுக்கும், அல் தூரியின் ஓதலுக்கும் என்ன வேறுபாடு என்பதை கேட்போம்.
அல் தூரியின் ஓதல்


ஹஃப்ஸின் ஓதல்


           மேற்குறிபிட்ட மாறுபாட்டை இமாலா என்ற பதத்தால் مـعـجـم الـقـراءات الـقـرآنـيـة مـع مـقـدمـة فـي الـقـراءات لأشـهـر الـقـراء நூல் ஆசிரியர் கூறியுள்ளார். அவர் கூறிய உதாரணத்தில் மலிக்கினாஸ் என்பது ஹஃப்ஸின் ஓதல் என்றால் மலிக்கினேஸ் என்பது தூரியின் ஓதல். இத்தகைய உச்சரிப்பு மாறுபாடுகளையும் சேர்த்துதான் மொத்தம் 10243. இந்த அடிப்படை கூட தெரியாத ஒரு கூமுட்டைத்தான் இவர்களுக்கு ஆதாரம் என்றால்….சாமூவேல் கிரீன் போன்றவர்கள் இந்த இஸ்லாமோஃபோபுகளையும், கிறித்தவ மிசனரிகளையும் என்ன நினைத்துள்ளார் என்று விளங்கிக்கொள்ள வேண்டும். இதையும் ஆதாரமாக இந்த கூமுட்டைகள் தூக்கித்திரிகிறார்கள்.

மேற்குறிபிட்ட மொத்த கட்டுரையில் இருந்து பின்வரும் முடிவுகளை அடைய முடியும்:
1. அஹ்ரூஃப் என்பது மக்கள் ஓதும்போது ஏற்படும் சிரமத்தை குறைக்க அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சலுகை ஆகும்.

2. இது சலுகை என்பதை மக்கள் புரிந்து கொண்டதால்தான் சட்ட விளக்கங்களை பெரும்பான்மை ஓதலில் அதாவது நபி(சல்) அவர்களது இறுதி ஓதலில் இருந்து எடுத்துக்கொள்கிறார்கள். 

3. ஏழு அஹ்ரூஃப் என்பது ஒரு வசனத்தை இலக்கண அடிப்படையிலும், மொழிவழக்கின் அடிப்படையிலும் மாறுபட்டு ஓதுவதற்கான உட்சபட்ச வரம்பாகும். ஹர்ஃப் என்பதற்கு வரம்பு என்ற பொருளும் உண்டு என்பது குறிப்பிடதக்கது.

4. கிராத் என்பது அஹ்ரூஃபின் அடிப்படையில் தோன்றும் எண்ணிலடங்கா ஓதல்களாகும். அங்கிகரிக்கப்பட்ட ஓதல் என்பதை 1) நபி(சல்) அவர்களது அங்கீகாரிக்கப்பட்ட வெகுஜன ஓதல்முறையும், 2)அரபு இலக்கணமும் கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் 7 முத்தவாதீரான கிராத்களை மட்டுமே இன்று காண முடிகிறது.

5. மேற்குறிபிட்ட புரிதலின் அடிப்படையில் குர்ஆனை எழுத்து வடிவில் கொண்டுவரும் போது எண்ணிலடங்கா கிராத்தில் கொண்டு வர இயலாது. ஏதேனும் ஒரு ஓதலில்தான் தொகுக்க இயலும். அதனால்தான் ஏழு மாறுபட்ட முறைகளிலும் குர்ஆனை  எழுத யாரிடமும் நபி(சல்) அவர்கள் கட்டளையிட்ட ஆதாரத்தை காண முடியவில்லை. அதனால்தான் உஸ்மான்(ரலி) அவர்களின் முஸ்ஹஃப் நபி(சல்) அவர்களது இறுதி ஓதலில் - அர்தா அல் ஆகிராவில் என்ற கிராத் அல் ஆம்மா- பெரும்பான்மை ஓதல் என்னும் ஓரே கிராத்தில் தொடுக்கப்பட்டது.  ஓதல் என்பதை மேற்குறிபிட்ட இரண்டு அலகுகள் கட்டுப்படுத்தும் போது மக்களே தாங்கள் கற்றவாறு ஓதிக்கொள்வார்கள். எழுத்து வடிவிலான மஸாஹிஃப் எந்த தாக்கத்தையும் ஓதலில் ஏற்படுத்தாது. அதனால்தான் ஒவ்வொரு முஸ்ஹஃபுடன் கிராத் அல் ஆம்மாவை ஓதும் காரிகளையும் அனுப்பிவைத்தார்கள். மக்கள் அதை புரிந்து கொண்டதால்தான் சட்டத்தை கிராத் அல் ஆம்மாவில் இருந்து எடுத்துக்கொண்டார்கள், ஓதலில் இருக்கும் சலுகையை பயன்படுத்தி ஓதிக்கொண்டார்கள்.

     மேற்குறிபிட்ட கருத்துக்களை புரிந்து கொண்டாலே போதும் கிறித்தவ மிசனரிகள் மற்றும் இஸ்லாமோஃபோபுகளின் மூன்று வாதங்களும் அதன் நோக்கமும்  எவ்வளவு மூடத்தனமாது என்பதை விளங்க . அல்லாஹு அஃலம்….

Friday, October 30, 2020

உஸ்மான்(ரலி) அரசாணையும் இப்னு மஸ்ஊத்(ரலி) எதிர்ப்பும் ஏற்பும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு,இப்னு மஸ்ஊத்(ரலி),இப்னு மஸ்ஊத்(ரலி),குர்ஆன் குழு,உபை இப்னு கஅப்(ரலி),பிரதிகள் எரிப்பு,அலி(ரலி),

        உஸ்மான்(ரலி) அவர்கள், அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவினால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனை இஸ்லாமிய பேரரசின் பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார்கள். அதனோடு ஒரு கட்டளையும் பிறப்பித்தார்கள். அதாவது ஏனைய குர்ஆன் பிரதிகளை அழிக்க கட்டளை பிறப்பித்தார்கள். குர்ஆனை ஸைத் இப்னு ஸாபித்(ரலி) தொகுத்ததற்கும், ஏனைய குர்ஆன் பிரதிகளை பரிமுதல் செய்து எரிக்கவும் பிறபிக்கப்பட்ட கட்டளையை எதிர்த்தவர் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆவார்கள். இதற்கு இஸ்லாமோஃபோபுகள் வைக்கும் வாதங்களும் அதற்கான பதிலும்  இதோ. 

وَلِذَلِكَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ يَا أَهْلَ الْعِرَاقِ اكْتُمُوا الْمَصَاحِفَ الَّتِي عِنْدَكُمْ وَغُلُّوهَا فَإِنَّ اللَّهَ يَقُولُ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ فَالْقُوا اللَّهَ بِالْمَصَاحِفِ قَالَ الزُّهْرِيُّ فَبَلَغَنِي أَنَّ ذَلِكَ كَرِهَهُ مِنْ مَقَالَةِ ابْنِ مَسْعُودٍ رِجَالٌ مِنْ أَفَاضِلِ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم

     மேலும் இது குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்கள்: இராக் மக்களே! உங்களிடம் இருக்கும் மஸாஹிஃப்களை மறைத்து வைத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: "யார் மறைக்கிறாரோ அவர், தாம் மறைத்தவற்றுடன் மறுமை நாளில் வருவார், எனவே அல்லாஹ்வை உங்களது மஸாஃஹிப்களுடன் சந்தியுங்கள்” அல் ஜுஹ்ரி கூறியதாவது: “இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களது இந்த முடிவை தலைசிறந்த நபிதோழர்கள் சிலர் எதிர்த்ததாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது” (திர்மிதி 3104)
இஸ்லாமோ போஃபுகளின் குருட்டு வாதமும் நமது பதிலும்:

             மேற்குறிபிட்ட செய்தியை பதிவிட்டு மிசனரிகள் ஒரு நிகழவின் ஒரு பக்கத்தை மட்டுமே கூறுகின்றன. அதாவது

1. அதாவது ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் குர்ஆன் தொகுப்பினை இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் எதிர்த்தது அன்றைய மொத்த சமூகத்தின் எதிர்ப்பு. 

2. குர்ஆன் பிரதிகளை எரிப்பது என்பது உஸ்மான்(ரலி) இன் தனிப்பட்ட முடிவு. அதற்கும் சமூகத்திற்கு தொடர்பில்லை 

உஸ்மான்(ரலி) அமைத்த குர்ஆன் தொகுப்பு குழுவும் அதன் முடிவும்:

     உஸ்மான்(ரலி) குர்ஆனை தொகுக்க முடிவு செய்தபோது ஸைத் இப்னு சாபித்(ரலி) உட்பட நான்கு எழுத்தர்களையும் உள்ளடக்கிய பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினை அமைத்தார்கள்.
خْبَرَنَا عَارِمُ بْنُ الْفَضْلِ قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ وَهِشَامٍ عَنْ مُحَمَّدٍ بْنِ سِيرِينَ أَنَّ عُثْمَانَ جَمَعَ اثْنَيْ عَشَرَ رَجُلا مِنْ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِيهِمْ أُبَيُّ بْنُ كَعْبٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي جَمْعِ الْقُرْآنِ.

      இப்னு சீரின் கூறியதாவது:  உஸ்மான்(ரலி) குர்ஆனை தொகுக்க முடிவு செய்ததும் குரைஷி மற்றும் அன்சாரிகளில் இருந்து பன்னிரண்டு பேர் கொண்ட சபையை உருவாக்கினார்கள். அதில் உபை இப்னு காஃப் (ரலி) மற்றும் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) உள்ளடங்குவர்.(தபக்கத் இப்னு சாஃத் 3/381)

      உபை இப்னு கஆப்(ரலி) அவர்களும் அந்த குழுவில் இடம் பெற்றி ருந்தார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட குழுவிற்கு உஸ்மான்(ரலி) மேலும் ஒரு கட்டளையை பிறப்பித்தார்

أخبرنا أبو بكر محمد بن عبد الباقي أنا الحسن بن علي أنبأ أبو عمر بن حيوية أنا أحمد بن معروف نا الحسين بن الفهم نا محمد بن سعد قال وأنا محمد بن عمر حدثني هشيم عن المغيرة عن مجاهد أن عثمان أمر أبي بن كعب يملي ويكتب زيد بن ثابت ويعربه سعيد بن العاص وعبد الرحمن بن الحارث 
முஜாஹித்(ரஹ்) கூறியதாவது: 
உஸ்மான்(ரலி), உபை இப்னு காஃப்(ரலி) அவர்களை ஓதவும், அதை ஜைத் இப்னு தாபித்(ரலி) அவர்கள் எழுதவும் , அதை ஸயீத் இப்னு அல் ஆஸ்(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அல் ஹாரித்(ரலி) அவர்களை பிரதி எடுக்கவும் கட்டளை இட்டார்கள் (தாரிக் திமிஸ்க் 34/276:3779) 
      அதனால்தான் மேற்குறிப்பிட்ட செய்தியை ஒத்த செய்தியை அலி இப்னு அப்துல் மாலிக் தனது நூலான கன்சூல் உம்மாலில் பதிவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறார். 

عن عطاء أن عثمان بن عفان لما نسخ القرآن في المصاحف أرسل إلى أبي بن كعب، فكان يملي على زيد بن ثابت وزيد يكتب ومعه سعيد بن العاص يعربه، فهذا المصحف على قراءة أبي وزيد.
       அதாஃ அவர்கள் கூறியதாவது: உஸ்மான்(ரலி) குர்ஆனை தொகுத்த போது, உபை இப்னு கஅப்(ரலி)யை அழைத்து ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் ஓதிக்காண்பிக்கவும்,அதை ஸைத் இப்னு ஸாபித்(ரலி) எழுதவும் கட்டளை இட்டார்கள். அவருடன் ஸயீத் (ரலி) அவர்களும் அதை செய்தார்கள். அதனால் இந்த முஸ்ஹஃப் உபை மற்றும் கஅப் அவர்களது ஓதலில் அமைந்ததாகும் .(கன்சூல் உம்மால் 4789) 
     மேலும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் குறித்து நபி(சல்) அவர்கள் குறிப்பிடும் சில செய்திகள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முக்கியத்துவம் குறித்து நாம் புரிந்து கொள்ள அவசியமாகும்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم” أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ وَأَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ أُبَىُّ بْنُ كَعْبٍ وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ وَأَعْلَمُهُمْ بِالْحَلاَلِ وَالْحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ أَلاَ وَإِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا وَإِنَّ أَمِينَ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ “هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
அனஸ் பின் மாலிக்(ரலி) அறிவிப்பதாவது: 
    அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் கூறியதாவது: எனது சமூதாயத்தில் மிக்க கருணையுள்ளவர் அபூபகர் ஆவார். அல்லாஹ்வின் கட்டளைகளை கைகொள்வதில் மிக்க உறுதியானவர் உமர் ஆவார். உண்மையில் மிகுந்த அடக்கமுடையவர் உஸ்மான் இப்னு அஃபான் ஆவார். அவர்களில் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுவதில் தலைசிறந்தவர் உபை இப்னு கஅப் ஆவார். சொத்துரிமை சட்டங்களில் மிகுந்த அறிவுடையவர் ஸைத் இப்னு சாபித் ஆவார். ஹலால் ஹராம் ஆகியவற்றில் மிகுந்த அறிவுடையவர் முஆத் இப்னு ஜபல் ஆவார். ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு நம்பிக்கைக்கு உரியவர் இருப்பார், அதுபோல் இந்த சமூதாயத்தின் நம்பிக்கைக்கு உரியவர் அபூ உபைதா பின் ஜர்ராஹ் ஆவார் (திர்மிதி 3791) 
     குர்ஆனை தொகுக்க அமைக்கப்பட்ட குழுவில் குர்ஆன் குறித்து நன்கு அறிந்த, முழு குர்ஆனையும் அதன் இறுதி வடிவத்தையும் மனனமிட்ட ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும், குர்ஆனை நன்கு ஓதக்கூடிய உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. இவ்வாறு தொகுக்கப்பட்ட குர்ஆன் ஏனைய நபித்தொழர்களிடம் ஓதிக்காண்பிக்கப்பட்டு அனைத்து பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக இப்னு கதீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: 
وإنما كتبها زيد بن ثابت فى أيامه وغيره، فنسبت إلى عثمان؛ لأنها بأمره واشارته، ثم قُرِئَتْ على الصحابة بين يدى عثمان، ثم نفذت إلى الآفاق, رضى الله عنه.
         அல்லது அவர்களது காலத்தில் அவர்களது கட்டளையால் ஸைத் பின் ஸாபித் அவர்களால் எழுதப்பட்டதால் இது உஸ்மான்(ரலி) அவர்களது என்று அழைக்கப்படுகிறது. இது நபி தோழர்களிடம் உஸ்மான்(ரலி) முன்னிலையில் ஓதிக்காண்பிக்கப்பட்டு நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்பட்டது. அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக..(அல் ஃபதாயில் குர்ஆன் இப்னு கதீர் 1/89) 
     இவ்வாறு நபித்தோழர்களின் அங்கிகாரம் பெற்ற குர்ஆன் பிரதிதான் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது. மேலும் முன் சென்ற தொடரில் உஸ்மான்(ரலி) அவர்களது தொகுப்பு, அர்தா அல் அஹீரா தான் என்ற சாட்சியம் பகிரும் சமூர(ரலி) அவர்களின் செய்தியையும் பார்த்தோம் என்பது குறிப்பிடதக்கது. 


      மேலும் இப்படி குர்ஆன் ஓதலில் தலைசிறந்தவர்கள் மற்றும் ஏனைய நபித்தோழர்களின் முடிவின் அடிப்படையில்தான் ஏனைய குர்ஆன் பிரதிகள் அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது:
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنِ الْعَيْزَارِ بْنِ جَرْوَلٍ، مِنْ رَهْطِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: " اللَّهَ اللَّهَ أَيُّهَا النَّاسُ، وَإِيَّاكُمْ وَالْغُلُوَّ فِي عُثْمَانَ وَقَوْلَكُمْ: حَرَّاقُ الْمَصَاحِفِ، فَوَاللَّهِ مَا حَرَقَهَا إِلَّا عَنْ مَلَأٍ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ 
   சுவைத் இப்னு ஃகஃபாலா கூறியதாவது: “நான் அலி பின் அபிதாலிப்(ரலி) கூறுவதை செவியுற்றேன். “மக்களே! உஸ்மான்(ரலி) அவர்களின் மீது வரம்பு மீறுதல் குறித்தும் அவர்களை குர்ஆன் பிரதிகளை எறித்தவர் என்று கூறுவதில் இருந்தும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக முஹம்மது (சல்) அவர்களது தோழர்களின் சபையின் அறிவுரையின் பேரிலேயே அதை அவர்கள் எறித்தார்கள்.         (நூல்: தாரிக் மதினா அல் இப்னு ஸபாஹ் ஹதீஸ் எண் 1598, 3/996)

மேலும் அலி(ரலி) அவர்கள் கூறினார்கள்

حَدَّثَنا عَبْدُ اللَّهِ قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ النَّهْشَلِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، وَمُحَمَّدُ بْنُ أَبَانَ الْجُعْفِيُّ، كِلَاهُمَا عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ قَالَ شُعْبَةُ: عَمَّنْ سَمِعَ سُوَيْدَ بْنَ غَفَلَةَ يَقُولُ: سَمِعْتُ عَلِيًّا يَقُولُ: رَحِمَ اللَّهُ عُثْمَانَ، لَوْ وُلِّيتُهُ لَفَعَلْتُ مَا فَعَلَ فِي الْمَصَاحِفِ (وإسناده صحيح، كما قال الحافظ في " الفتح " ٩ / ١٦)
       அலி (ரலி) அவர்கள் கூறியதாவது : உஸ்மான்(ரலி) மீது அல்லாஹ் கருணை புரியட்டும். நான் உஸ்மான்(ரலி) அவர்களின் இடத்தில் இருந்திருந்தால் , குர்ஆன் பிரதிகளுக்கு உஸ்மான்(ரலி) செய்ததையே நானும் செய்திருப்பேன்.( அல் மஸாஹிஃப் இப்னு அபி தாவூத் 1/98)
         இஸ்லாமோஃபோபுகளின் இரண்டு வாதங்களும் மேற்குறிபிட்ட அலி(ரலி) அவர்களது கூற்றினால் தவிடு பொடி ஆவதை காணமுடிகிறது. 

இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் எதிர்ப்பும் ஏற்பும் 

      இப்னு மஸ்ஊத்(ரலி) ஆரம்பத்தில் கூஃபாவில் இருக்கும் காலங்களில் உஸ்மான்(ரலி அவர்களின் இந்த முடிவை எதிர்த்த போதும், பிற்காலத்தில் அதன் நியாயங்களை அறிந்து அதை சரி கண்டார்கள். மேலும் அவர்கள் மதீனாவிற்கு சென்ற பிறகும் பல தூதுக்குழுக்கள் அவர்களை சந்தித்து இது குறித்து தெளிவு பெற்று வந்தார்கள் என்பதை அறிய முடிகிறது
عَمْرُو بْنُ شُرَحْبِيلَ عن عبد الله بن مسعود أنه أتاه ناس من أهل الكوفة فقرأ عليهم السلام وأمرهم بتقوى الله عز وجل وأن لا يختلفوا في القرآن ولا يتنازعوا فيه فإنه لا يختلف ولا ينسى ولا ينفد لكثرة الرد
    அம்ர் இப்னு ஸுரஹ்பீல், இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிப்பதாக கூறுவதாவது : கூஃபாவில் இருந்து சிலர் அவரிடம் வந்தனர். அவர்களுக்கு சலாம் கூறிவிட்டு, அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! இந்த குர்ஆன் குறித்து வேறுபட கூடாது , அதனோடு மாறுபட கூடாது, ஏனென்றால் அது மாறுபடவோ மறக்கடிக்கவோ படாது, தொடர் எதிர்ப்பால் நீர்த்தும் போகாது , என்று அறிவுரை கூறினார்கள். (தப்ராணி அல் கபீர் 10076: 10/97, அல் மஜ்மு அல் ஜவாயித் 11582: 7/153 )

 حَدَّثَنَا إبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ ح وَحَدَّثَنَا فَهْدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو غَسَّانَ مَالِكُ بْنُ إسْمَاعِيلَ النَّهْدِيُّ قَالَا: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ قَيْسٍ الْيَشْكَرِيُّ أَبُو هَمَّامٍ، عَنْ عُثْمَانَ بْنِ حَسَّانَ الْعَامِرِيِّ، عَنْ فُلْفُلَةَ الْجُعْفِيِّ قَالَ: " فَزِعْتُ فِيمَنْ فَزِعَ إلَى عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ فِي الْمَصَاحِفِ، فَدَخَلْنَا عَلَيْهِ، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: إنَّا لَمْ نَأْتِكَ زَائِرِينَ؛ وَلَكِنَّا جِئْنَا حِينَ رَاعَنَا هَذَا الْخَبَرُ، قَالَ: " إنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى نَبِيِّكُمْ مِنْ سَبْعَةِ أَبْوَابٍ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، وَإِنَّ الْكِتَابَ كَانَ يَنْزِلُ أَوْ يُنْزَلُ مِنْ بَابٍ وَاحِدٍ عَلَى حَرْفٍ وَاحِدٍ " 

                           ஃபுல்ஃபுலா அல் ஜுஃபீ கூறியதாவது; “அல் மஸாஹிஃப்"  (உஸ்மான்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பு) குறித்து அறிந்து கொள்ள சென்றவர்களில் நானும் ஒருவர், நாங்கள் சென்ற போது எங்களில் ஒருவர் , “ நாங்கள் உங்களை சந்திக்க வந்திருப்பது , இது குறித்த செய்தி எங்களை அடைந்ததும் அதை பற்றி அறியவே என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்ஊத்(ரலி) பின் வருமாறு பதிலளித்தார்கள்.: நிச்சயமாக குர்ஆன் ஏழு உச்சரிப்பு முறைகளில் ஏழுவாசல்களின் வழியாக இறக்கப்பட்டதாகும். உங்களுக்கு அனுப்பப்பட்ட ஏடுகள் ஒரு வாசல் வழியாக வந்தது. ஒரே உச்சரிப்பையும் கொண்டது. (இமாம் தஹவீ யின் முஸ்கில் அல் அஸார் 3094) 

இப்னு அபி தாவூத் அவர்களின் கருத்து:
    மேற்குறிபிட்ட ஹதீஸை இப்னு மஸ்ஊத்(ரலி) உஸ்மான்(ரலி) குர்ஆன் தொகுப்பு குறித்த கருத்து எனும் தலைப்பின் கீழ் இப்னு அபிதாவூத் கொண்டுவருகிறார்.(ப.எண்:82)

இப்னு அதிர் அவர்களது வரலாற்று குறிப்பு:

فَلَمَّا نَسَخُوا الصُّحُفَ رَدَّهَا عُثْمَانُ إِلَى حَفْصَةَ، وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ، وَحَرَقَ مَا سِوَى ذَلِكَ، وَأَمَرَ أَنْ يَعْتَمِدُوا عَلَيْهَا وَيَدَعُوا مَا سِوَى ذَلِكَ. فَكُلُّ النَّاسِ عَرَفَ فَضْلَ هَذَا الْفِعْلِ, إِلَّا مَا كَانَ مِنْ أَهْلِ الْكُوفَةِ فَإِنَّ الْمُصْحَفَ لَمَّا قَدِمَ عَلَيْهِمْ فَرِحَ بِهِ أَصْحَابُ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَإِنَّ أَصْحَابَ عَبْدِ اللَّهِ وَمَنْ وَافَقَهُمُ امْتَنَعُوا مِنْ ذَلِكَ وَعَابُوا النَّاسَ فَقَامَ فِيهِمُ ابْنُ مَسْعُودٍ وَقَالَ وَلَا كُلُّ ذَلِكَ فَإِنَّكُمْ وَاللَّهِ قَدْ سُبِقْتُمْ سَبْقًا بَيِّنًا، فَارْبِعُوا عَلَى ظَلْعِكُمْ. وَلَمَّا قَدِمَ عَلِيٌّ لْكُوفَةَ فَعَابَ عُثْمَانَ بِجَمْعِ النَّاسِ عَلَى الْمُصْحَفِ فَصَاحَ بِهِ وَقَالَ: اسْكُتْ فَعَنْ مَلَأٍ مِنَّا فَعَلَ ذَلِكَ، فَلَوْ وُلِّيتُ مِنْهُ مَا وُلِّيَ عُثْمَانُ لَسَلَكْتُ سَبِيلَهُ.
   அவர்கள் குர்ஆன் தொகுப்பை பிரதி எடுத்தப்பிறகு, அதனை (அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதியை ) ஹஃப்ஸா(ரலி) இடமே திருப்பி அனுப்பினார்கள். குர்ஆனின் பிரதிகளை அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பினார்கள்.. ஏனைய பிரதிகளை எறித்து விட்டார்கள். மேலும் அதை சார்ந்திருக்கவும் ஏனையவற்றை விட்டுவுடவும் கட்டளை பிறப்பித்தார்கள். அனைத்து மக்களும் அதன் நன்மையை கருதி அதன் படி செயல்பட்டனர், கூஃபா மக்களை தவிர. நபி(சல்) அவர்களது தோழர்கள் குர்ஆன் பிரதிகள் கொண்டுவரப்பட்டபோது மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களது தோழர்களும் அவர்களை ஏற்றவர்களும் அதை ஏற்க மறுத்து நிந்தித்தனர். அதனால் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களிடம்; “இது அனைவருக்குமானது அல்ல. அல்லாஹ்வின் மீது ஆணையாக முன்பே உங்களுக்கு இது குறித்து கூறப்படுள்ளது. அதாவது உங்களது பிரதிகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று. ஆனால் அலி(ரலி) அவர்கள் கூஃபா வந்த போது, ஒரு மனிதர் அவரிடம் வந்தார், மக்கள் கூடினர். உஸ்மான்(ரலி) அவர்களை குர்ஆன் தொகுத்தல் குறித்து ஏசத் துவங்கினர். உடனே (இப்னு மஸ்ஊத் (ரலி) எழுந்து “அனைவரும் அமைதியாக இருக்குமாறு கத்தினார்கள். மேலும் இது நம் கண் முன்னே நடந்துள்ளது. உஸ்மான்(ரலி) அவர்களது பொறுப்பு என்னிடம் ஒப்புவிக்கப்பட்டாலும் நானும் நிச்சயம் அதே வழியையே தேர்வு செய்திருப்பேன் என்று கூறினார்கள். (காமில் இப்னு அதீர் 2/482-483)

இப்னு அஸாகிரின் கருத்து:

روي عن ابن مسعود أنه رضي بذلك وتابع ووافق رأي عثمان في ذلك وراجع وذلك

     இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் பிற்காலத்தில் உஸ்மான்(ரலி) அவர்களது முடிவை சரி கண்டு ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது (இப்னு அஸாகிரின் தாரிக் அல் திமிஸ்க் 33/140) 

இப்னு கஸீரின் கருத்து 

كَتَبَ إِلَيْهِ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ يَدْعُوهُ إِلَى اتِّبَاعِ الصَّحَابَةِ فِيمَا أَجْمَعُوا عَلَيْهِ مِنَ الْمَصْلَحَةِ فِي ذَلِكَ، وَجَمْعِ الْكَلِمَةِ، وَعَدَمِ الِاخْتِلَافِ، فَأَنَابَ وَأَجَابَ إِلَى الْمُتَابَعَةِ، وَتَرَكَ الْمُخَالَفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ…… وَفِي رِوَايَةٍ الْخِلَافُ شَرٌّ فَإِذَا كَانَ هذا متابعة من ابن مسعود إلى عُثْمَانَ فِي هَذَا الْفَرْعِ فَكَيْفَ بِمُتَابَعَتِهِ إِيَّاهُ في أصل القرآن؟…..
     உஸ்மான்(ரலி) ஏனைய நபித்தோழர்கள் எதை அதன் நன்மை கருதியும், கருத்தொற்றுமையினாலும் ஏற்கொண்டார்களோ அதை பின்பற்றுமாறு (இப்னு மஸ்ஊத்(ரலி)) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதனால் அதை ஏற்று தனது எதிர்ப்பை கைவிட்டு அதை பின்பற்றினார்கள்…அல்லாஹ் அவர்கள் அனைரையும் பொருந்திக்கொள்வானாக…. ஆக உஸ்மான்(ரலி) அவர்களை ஏனைய சிறிய விசயங்களிலேயே இப்னு மஸ்ஊத்(ரலி) ஏற்று செயல் பட்டார்கள் என்றால் , குர்ஆன் விசயத்திலும், மக்களுக்கான ஓதலை நிர்ணயம் செய்ததிலும் எந்த அளவிற்கு பின்பற்றி இருப்பார்கள்’ (இப்னு கஸீரின் அல் பிதாயா வநிகாயா 7/217)

  அபுபக்கர் அல் அன்பாரியின் கருத்து

قَالَ أَبُو بَكْرٍ: وَمَا بَدَا مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ مِنْ نَكِيرِ ذَلِكَ فَشَيْءٌ نَتَجَهُ الْغَضَبُ، وَلَا يُعْمَلُ بِهِ ولا يؤخذ به، ولا يشك في ان رَضِيَ اللَّهُ عَنْهُ قَدْ عَرَفَ بَعْدَ زَوَالِ الْغَضَبِ عَنْهُ حُسْنَ اخْتِيَارِ عُثْمَانَ وَمَنْ مَعَهُ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبَقِيَ عَلَى مُوَافَقَتِهِمْ وَتَرَكَ الْخِلَافَ لَهُمْ. فَالشَّائِعُ الذَّائِعُ الْمُتَعَالَمُ 

        அபுபக்கர் அல் அன்பாரி கூறியதாவது: ஆரம்பத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களது எதிர்ப்பானது கோபத்தினால் ஏற்பட்டதாகும் ஆனால் அதில் அவர்கள் செயல் படவும் இல்லை அதில் அவர்கள் நிலைக்கவும் இல்லை. பின்னாளில் அவரது கோபம் மறைந்த போது உஸ்மான்(ரலி) மற்றும் ஏனைய நபித்தோழர்களின் முடிவை ஏற்றுக்கொண்டு தனது எதிர்ப்பை விடவும் செய்தார்( தஃப்ஸீர் அல் குர்துபீ 1/54)
    மேற்குறிபிட்ட ஹதீஸ்களின் அடிப்படையிலும், அதன் வரலாற்று குறிப்புகளின் அடிப்படையிலும் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் எதிர்ப்பு ஆரம்பத்தில் அறியாமையினால் ஏற்பட்டது என்பதையும், பிற்காலத்தில் அலி(ரலி) அவர்களின் வருகையின் போதும், உஸ்மான்(ரலி) அவர்களின் விளக்க கடிதத்தினாலும் அவர்கள் எதிர்ப்பை கைவிட்டர்கள் என்பதை விளங்க முடிகிறது. குருட்டு இஸ்லாமோஃபோபுகளின் வாதங்கள் அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சியால் தோன்றியது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

Thursday, October 29, 2020

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு,ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?


          குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விளக்கங்கள் கொடுக்கப்படும் போது அதற்கு இஸ்லாமிய எதிர்ப்பாளர்களிடம் புறப்படும் விமர்சனங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்த தலைப்பு ஆகும். இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் ஓதல் குறித்த சிறப்புகளை முன்னிறுத்தி, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது தொகுப்பில் குறை இருப்பதாகவும் , நபி(சல்) அவர்களால் புகழப்பட்ட இப்னு மஸ்ஊத்(ரலி) போன்ற நபித்தோழரே இதனை எதிர்த்துள்ளார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இஸ்லாமோஃபோபுகள் பெரும் முயற்சியை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்வின் உண்மை நிலை என்ன என்பதை இங்கு காண்போம் இன் ஷா அல்லாஹ்.

     குர்ஆனை ஓதவும் அதனை கற்றுக்கொடுக்கவும் நபி(சல்) அவர்களால் பெரிதும் முன்னிறுத்தப்பட்டவர் இப்னு மஸ்ஊத்(ரலி) என்று மிசனரிகள் முதற்கொண்டு பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் முன்னிறுத்தப்படுவதற்கு ஆதாரமாய் அமைந்த  ஹதீஸ்களையும் அதன் மூலம் அவர்கள் வைக்கும் வாதங்களை சற்று பார்போம்.

ஆதாரம் 1:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

       இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி 3806)
   குறிப்பு: மேற்குறிபிட்ட செய்தியில் இடம் பெறும் முஆத் இப்னு ஜபல் மற்றும் சாலிம் இருவரும் அபூபகர்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்திலேயே மரணித்துவிட்டார்கள். இதில் எஞ்சியவர்கள் இப்னு மஸ்ஊத்(ரலி) மற்றும் உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோர் மட்டுமே. என்பது குறிப்பிடதக்கது.

        மேலும் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள்தான் மக்காவில் ஹிஜ்ரத்திற்கு முன்பு நபி(சல்) அவர்களுடன் குர்ஆனை ஓதக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.

ஆதாரம் 2:

قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ وَالْفَضْلُ بْنُ دُكَيْنٍ قَالا: حَدَّثَنَا الْمَسْعُودِيُّ عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: كَانَ أَوَّلُ مَنْ أَفْشَى الْقُرْآنَ بِمَكَّةَ مِنْ فِيَّ رَسُولِ الله.
     காஸிம் இப்னு அப்துர் ரஹ்மான் கூறியதாவது: நபி(சல்) அவர்களிடம் இருந்து முதன் முதலில் குர்ஆனை மக்காவில் ஓதியவர் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆவார்கள்.(தபக்கத் இப்னு சாஃத் 3/112)
 இதுவல்லாத மேலும் ஒரு செய்தியையும் முன்வைக்கிறார்கள்: அதாவது ஸைத்(ரலி) அவர்களை விட இப்னு மஸ்ஊத்(ரலி) தான் சிறந்தவர் என்று இப்னு மஸ்ஊத்(ரலி) கூறுவதான பின்வரும் செய்தியையும் முன்வைத்து ஸைத் இப்னு ஸாபித்(ரலி) இந்த பொறுப்பிற்கு தகுதியற்றவர் என்பதாக வாதிக்கின்றனர். 

ஆதாரம் 3:

قَالَ الزُّهْرِيُّ فَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ كَرِهَ لِزَيْدِ بْنِ ثَابِتٍ نَسْخَ الْمَصَاحِفِ وَقَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ أُعْزَلُ عَنْ نَسْخِ كِتَابَةِ الْمُصْحَفِ وَيَتَوَلاَّهَا رَجُلٌ وَاللَّهِ لَقَدْ أَسْلَمْتُ وَإِنَّهُ لَفِي صُلْبِ رَجُلٍ كَافِرٍ يُرِيدُ زَيْدَ بْنَ ثَابِتٍ 
       அல் ஜுஹ்ரி கூறியதாவது உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா தெரிவிப்பதாவது ,அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) மஸாஹிஃப்களை பிரதி எடுப்பதை விரும்பவில்லை. மேலும் கூறினார்கள் : முஸ்லீம் மக்களே! அந்த முஸ்ஹஃபையும் , அவரது ஓதலையும் பிரதி எடுப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இஸ்லாத்தை தழுவிய போது அவர் (ஸைத் (ரலி) இறைமறுப்பாளரின் முதுகில் இருந்தார். (திர்மிதி 3104) 

 குருட்டு வாதம்:

     மேற்குறிபிட்ட செய்திகள் மற்றும் இன்ன பிற செய்திகளை முன்னிறுத்தி பின்வரும் வாதங்களை இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முன்வைக்கிறார்கள்:

1.  இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் மட்டுமே குர்ஆன் ஓதலில் தலைசிறந்தவர்  அதனால்  இப்னு மஸ்ஊத்(ரலி) மட்டுமே குர்ஆனை கற்று கொடுக்க , தொகுக்க முழு தகுதிவாய்ந்தவர். 

2. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை இப்னு மஸ்ஊத்(ரலி)யே விமர்சித்திருப்பதால் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) இதற்கு தகுதியற்றவர் . 

இப்னு மஸ்ஊத்(ரலி) மட்டும்தான் குர்ஆன் ஓதலில் தலைசிறந்தவரா?

        மேற்குறிபிட்ட ஆதாரம் 1 மற்றும் 2 நபி(சல்) அவர்களிடம் மக்காவிலும், மதீனாவின் ஆரம்ப காலத்திலும் இப்னு மஸ்ஊத்(ரலி) குர்ஆனை நபி(சல்) அவர்களிடம் இருந்தே கற்றவராய் இருந்தார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது. ஆனால் நபி(சல்) அவர்களின் மரணத்திற்கு பின்னான இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் கருத்து முழு குர்ஆனையும் அவர்கள் நபி(சல்) அவர்களிடம் கற்கவில்லை என்பதை பிரதிபளிப்பதாய் இருக்கிறது.

ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
        (ஒரு முறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "யார் மோசடி செய்கிறாரோ அவர், தாம் மோசடி செய்தவற்றுடன் மறுமை நாளில் வருவார்" (3:161) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி விட்டு, "யாருடைய ஓதல் முறைப்படி நான் ஓத வேண்டுமெனக் கூறுகிறீர்கள்? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை ஓதிக்காட்டியுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், அவர்களிலேயே நான்தான் இறைவேதத்தை நன்கு கற்றவன் என்பதை அறிந்துள்ளார்கள். என்னைவிட (இறைவேதத்தை) நன்கு அறிந்த ஒருவர் இருக்கிறார் என நான் அறிந்தால், (அவர் எங்கு இருந்தாலும் சரி) அவரை நோக்கி நான் பயணம் மேற்கொள்வேன்" என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூடியிருந்த (அந்த) அவையில் வீற்றிருந்தேன். அவர்களில் எவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை; அதற்காக அவரைக் குறை கூறவுமில்லை.(முஸ்லிம் 4860)
      மேற்குறிபிட்ட இந்த செய்தி இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் நேரடியான சாட்சியாக இருக்கிறது. 


        இதற்கு மாற்றமாக நபி(சல்) அவர்களது காலத்தில் அவர்களின் நாவினாலே முழு குர்ஆனையும் கற்றவர்கள் பலர் இருதுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. அதில் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் ஒருவர் ஆவார்கள். 
கதாதா(ரஹ்) அறிவித்தார்.
          இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித் ஆகியோர் தாம் அவர்கள்" என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.(புகாரி 3810)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: «جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةٌ مِنَ الْأَنْصَارِ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَبُو الدَّرْدَاءِ، وَسَعْدُ بْنُ عُبَادَةَ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَفِي حَدِيثِ زَكَرِيَّا وَكَانَ جَارِيَةُ بْنُ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ قَدْ قَرَأَهُ إِلَّا سُورَةً أَوْ سُورَتَيْنِ
ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது:
       நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேரும் அன்சாரிகள் ஆவார்கள். அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அபூ ஸைத்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), சஅத் இப்னு உபாதா(ரலி) மற்றும் உபை இப்னு கஃப்(ரலி) ஆவர். மேலும் ஸகரிய்யா அவர்களது அறிவிப்பில் , முஜம்மி பின் ஜாரியா(ரலி) முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள் ஒன்றிரண்டு சூராக்களை தவிர என்று இடம் பெற்றுள்ளது. ( மஜ்ம உல் கபீர் 2092) 
أخبرنا أبو بكر محمد بن عبد الباقي أنا الحسن بن علي أنا أبو عمر بن حيوية أنا أحمد بن معروف نا الحسين بن الفهم نا محمد بن سعد أنا محمد بن يزيد الواسطي عن إسماعيل بن أبي خالد عن الشعبي قال جمع القرآن على عهد رسول الله صلى الله عليه وسلم ستة نفر أبي بن كعب ومعاذ بن جبل وأبو الدرداء وزيد بن ثابت وسعد وأبو زيد وكان مجمع ابن جارية قد جمع القرآن إلا سورتين أو ثلاثا وكان ابن مسعود قد أخذ بضعا وسبعين سورة وتعلم بقية القرآن من مجمع.
         ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது: நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேர் ஆவார்கள். அவர்கள் உபை இப்னு கஃப்(ரலி),முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி),சஅத் (ரலி) மற்றும் அபூ ஸைத்(ரலி), ஆவர். மேலும் முஜம்மி இப்னு ஜாரியா குர்ஆன் முழுவதையும் மனனமிட்டிருந்தார்கள் இரண்டு அல்லது மூன்று சூராக்களை தவிர. மேலும் இப்னு மஸ்ஊத்(ரலி) 70 சூராக்களை மனனமிட்டிருந்தார்கள். குர்ஆனின் ஏனைய பகுதியை முஜம்மி(ரலி)- அவர்களிடம் இருந்து மனனமிட்டார்கள்.        (அல் தாரிக் வ அல் திமிஸ்க் பாகம் 47 பக்கம் 111) 
       அதாவது நபி(சல்) அவர்களிடம் இருந்து குர்ஆனின் எழுவது சூராக்களை இப்னு மஸ்ஊத்(ரலி) கற்றுள்ளார்கள். ஏனைய சூராக்களை முஜம்மி(ரலி) அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டார்கள் என்பதை மேற்குறிபிட்ட செய்தியும், இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் சுய சாட்சியமும் தெளிவாக விளக்குகின்றன.

" நிதர்சனம் என்னவென்றால் அபூபக்ர்(ரலி), உமர்(ரலி) மற்றும் உஸ்மான்(ரலி) ஆகியோர் ஸைத்தை(ரலி) குர்ஆனை தொகுக்க முன்னிறுத்தியது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களைவிட ஸைத் அவர்கள் சிறந்தவர் என்பதற்காக அல்ல. இப்னு மஸ் ஊத்(ரலி) இஸ்லாமில் முந்தியவர், அதிக போரில் பங்கு பெற்றவர் மேலும் பல சிறப்புக்கள் அவருக்கு உண்டு. ஆனால் ஸைத்(ரலி) அவர்கள் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களைவிட குர்ஆனில் அதிகம் கற்றவர். அவர்கள் நபி(சல்) அவர்களது காலத்திலேயே முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள். மாறாக இப்னு மஸ்ஊத்(ரலி) எழுவது சூராக்களைதான் மனனமிட்டிருந்தார்கள். யார் நபி(சல்) அவர்களது காலத்திலேயே முழூ குர்ஆனையும் கற்று மனனமிட்டிருந்தாரோ அவர்தான் குர்ஆனை தொகுக்க முழு தகுதி உடையவர் அதனால் தேர்வு செய்யவும் பட்டார். இது இப்னு மஸ்ஊத்(ரலி) மீதான தாக்குதலாக எந்த அறிவற்றவரும் கருதக்கூடாது, இருவரிலும் ஸைத்(ரலி) அவர்கள் அதிகம் குர்ஆனை மனமிட்டவர் என்பதானது அனைத்திலும் சிறந்தவர் என்ற பொருளைத்தராது ஏனென்றால் ஸைத்(ரலி) அபூபகர் மற்றம் உமரை விட அதிகம் குர்ஆனை மனனமிட்டவர், ஆனால் அவர்கள் இருவரின் சிறப்பில் (ஸைத்(ரலி) மேன்மையானவரோ, நிகரனாவரோ அல்ல என்பது உறுதியானது." (தஃப்ஸீர் குர்துபீ 1/54)
மேற்குறிபிட்ட செய்திகளில் இருந்து இரு விசயங்கள் தெளிவாகிறது. 

1. நபி(சல்) அவர்களது நாவுகளில் இருந்து முழுமையாக குர்ஆனை மனனமிட்டவர்களில் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் ஒருவர். இவர்தான் நபி(சல்) அவர்கள்து இறுதி ஓதலின் சாட்சியும் ஆவார்கள். இது குறித்து சென்ற தொடரில் விளக்கியுள்ளோம்

2.  மறுபக்கத்தில் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் 70 சூராக்களை மனனமிட்டிருந்தார்கள். 

   மேற்குறிபிட்ட செய்திகளே போதுமானது ஸைத்(ரலி) குர்ஆனை தொகுக்க முழு தகுதியுடையவர் என்பதை புரிந்து கொள்ள. மேலும் நபி(சல்) அவர்களின் நெருங்கிய தோழர்களான அபூபகர்(ரலி), உமர்(ரலி), ஹப்ஸா(ரலி), உஸ்மான்(ரலி) உள்ளிட்ட பலரால் அறியப்படாத ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் குறை பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் வந்து சில இஸ்லாமிய புத்தகங்களை அறையும் குறையுமாக வாசித்த ஓரியண்டலிஸ்ட்களுக்கும்,  அவர்களின் பிதற்றலை அப்படியே நம்பும் அரைவேக்காடு இஸ்லாமோஃபோபுகளுக்கும் தெரிந்துவிட்டதா என்ன??????

குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ       நபி(சல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு குர்ஆனை தொகுக்கும் குழுக்கள் இரண்டு முறை இஸ்லாமிய கலிஃபாக்களால் நியமிக்கப்பட்டுள்ளது. முதல் முறை அபூபக்ர்(ரலி) அவர்களால், இரண்டாவது முறை உஸ்மான்(ரலி) அவர்களால். இரண்டிலுமே ஸைத் பின் ஸாபித்(ரலி) பங்குபெற்றுள்ளார்கள். குர் ஆன் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களிற்கான விளக்கங்களை புரிந்து கொள்ள முதலில் மேற்குறிப்பிட்ட ஸைத பின் ஸாபித்(ரலி) அவர்களின் நியமனத்தின் நியாயங்கள அறிந்து கொள்வது அவசியமாகும். அது குறித்த ஹதீஸ்களை முதலில் பார்ப்போம்.
அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தில்

          ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.

         யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி) இருந்தார்கள். 

அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்:
          உமர் அவர்கள் என்னிடம் வந்து, 'இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள். நான் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர்(ரலி) (ஏதும்) பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.
        (பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) 'நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹி (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.

       அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்' என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.
         (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்யுன்) அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128 , 129)
             (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது.(புகாரி 4679).

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

        ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.
        எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷியரின் (வட்டார) மொழிவழக்குப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். (புஹாரி 4987.)

     மேற்குறிபிட்ட செய்தியில் முதல் செய்தியை ஆய்வு செய்யும் போது அபூபக்ர்(ரலி) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள் குறித்து பின்வரும் முக்கியத்துவங்களை முன்வைத்து அவரது நியமனத்தின் காரணத்தை விளக்குவதை நாம் புரிந்து கொள்ளலாம்:

1. புத்திசாலியான இளைஞர். ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் புத்தி கூர்மை உடையவராகவும், இளைய வயதுடையவராகவும் இருந்தார்கள்.

2. நபி(சல்) அவர்களின் எழுத்தர். ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களின் எழுத்தராகவும் குறிப்பாக வஹி செய்திகளை எழுதுபவராக இருந்தார்கள்.

3. மிகுந்த நம்பத்தகுந்தவர்.
      மேற்குறிபிட்ட சிறப்புகள் அல்லாமல், இந்த குர்ஆனை தொகுப்பதற்கு ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் நியமிக்கப்பட மேலும் சில சிறப்பு காரணங்களும் உண்டு.  அவற்றையும் நாம் காண்போம்.

கதாதா(ரஹ்) அறிவித்தார்.

       இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் தாம் அவர்கள்" என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.(புகாரி 3810)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: «جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةٌ مِنَ الْأَنْصَارِ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَبُو الدَّرْدَاءِ، وَسَعْدُ بْنُ عُبَادَةَ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَفِي حَدِيثِ زَكَرِيَّا وَكَانَ جَارِيَةُ بْنُ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ قَدْ قَرَأَهُ إِلَّا سُورَةً أَوْ سُورَتَيْنِ 
ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது: 
     நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேரும் அன்சாரிகள் ஆவார்கள். அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அபூ ஸைத்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), சஅத் இப்னு உபாதா(ரலி) மற்றும் உபை இப்னு கஃப்(ரலி) ஆவர். மேலும் ஸ்கரிய்யா அவர்களது அறிவிப்பில் , முஜம்மி பின் ஜாரியா(ரலி) முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள் ஒன்றிரண்டு சூராக்களை தவிர என்று இடம் பெற்றுள்ளது.                        ( மஜ்ம உல் கபீர் 2092)
         மேற்குறிபிட்ட அறிவிப்புகளின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் ஸைத பின் ஸாபித்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது காலத்திலேயே குர்ஆனை முழுமையாக மனனமிட்டவர்களில் ஒருவர் என்பது நிரூபனமாகிறது.


قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ: قَرَأَ زَيْدُ بْنُ ثَابِتٍ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَامِ الَّذِي تَوَفَّاهُ اللَّهُ فِيهِ مَرَّتَيْنِ، وَإِنَّمَا سُمِّيَتْ هَذِ الْقِهِرَاءَةُ قِرَاءَةَ زَيْدِ بْنِ ثَابِتٍ، لأَنَّهُ كَتَبَهَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَرَأَهَا عَلَيْهِ، وَشَهِدَ الْعَرْضَةَ الأَخِيرَةَ، وَكَانَ يُقْرِئُ النَّاسَ بِهَا حَتَّى مَاتَ، وَلِذَلِكَ اعْتَمَدَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ فِي جَمْعِهِ، وَوَلاهُ عُثْمَانُ كِتْبَةَ الْمَصَاحِفِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ
அபூ அப்துர் ரஹ்மான் அல ஸலாமி கூறியதாவது:

     ஸைத்(ரலி), நபி(சல்) அவர்களிடம், நபி(சல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை ஓதிக்காட்டினார்கள். அந்த ஓதல்தான் ஸைத்தின் ஓதல் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அவர் நபி(சல்) அவர்களுக்காக அதை எழுதினார்கள், அவர்களிடம் ஓதியும் காட்டினார்கள். நபி(சல்) அவர்களின் இறுதி ஓதலான அர்தத் அல் ஆகிராவின் சாட்சியுமாக இருந்தார்கள். அதையே அவர்கள் இறக்கும் வரையில் மக்களுக்கு கற்றும் கொடுத்தார்கள். அதனால்தான் அபுபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்கள் இருவரும் அவரை தொகுக்க நியமித்தார்கள். மேலும் உஸ்மான்(ரலி) அவர்களும் அவரை தொகுக்க நியமித்தார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. (அல் பாகவியின் ஸ்ரஹ் அஸ் ஸுன்னாஹ் 4/526) 
    மேலும் இதை அறிவிக்கும் அபூ அப்துர் ரஹ்மான் அல் ஸலாமிதான் குர்ஆனை கற்று கொடுக்க உஸ்மான்(ரலி) அவர்களால் கூஃபாவிற்கு அனுப்பப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களது மாணவரும் கூட ( சியார் அல் நுஃபுலா இமாம் தஹபி 4/268).

        இப்படி ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது இறுதி ஓதலை மனமிட்டிருந்ததால்தான் அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்ட குர்ஆன் ஓதலை நபிதோழர்களும், தாபியீன்களும் அர்தா அல் ஆகீரா என்று குறிப்பிடுகின்றனர். இது குறித்து சென்ற தொடரில் நாம் விளக்கியுள்ளோம்.

أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ الْخَلَدِيُّ، ثنا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ، بِمَكَّةَ، ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «عُرِضَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَاتٍ فَيَقُولُونَ: إِنَّ قِرَاءَتِنَا هَذِهِ هِيَ الْعَرْضَةُ الْأَخِيرَةُ
       சமூரா (ரலி) அவர்கள் கூறியதாவது ; நபி(சல்) அவர்களுக்கு பல முறை குர்ஆன் ஓதிகாண்பிக்கப்பட்டது. இன்று நமது ஓதல்தான் அர்தத் அல் ஆகிரா (இறுதி ஓதல்) என்று கூறப்படுகிறது.( முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் 2904) 
      அல்ஹசன் அல் பஸரி கிபி 642ல் பிறந்தவர் ஆவார். உஸ்மான(ரலி) அவர்களது ஆட்சிக்காலம் கிபி 644- 656 வரையிலானது கிபி 650ல் தான் குர்ஆனை தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அல்ஹசன் அல் பஸரி அவர்களிடம் சமூரா(ரலி) (மரணம் கிபி 680) குறிப்பிட்டு கூறுவதாக மேற்குறிபிட்ட செய்தி இடம் பெறுகிறது. ஆக மேற்குறிபிட்ட செய்தியானது உஸ்மான்(ரலி) அவர்களின் தொகுப்பு குறித்துதான் பேசுகிறது என்பது நமக்கு தெளிவாக நிருபனமாகிறது. 
    மேலும் உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தை சேர்ந்தவரும், இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களில் மாணவர்களில் ஒருவரான உபைதா(ரஹ்) அவர்கள் இப்னு ஸீரின் வழியாக பின்வரும் செய்தியை குறிப்பிடுகிறார்கள்: 

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَعَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبِيدَةَ، قَالَ: الْقِرَاءَةُ الَّتِي عُرِضَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ هِيَ الْقِرَاءَةُ الَّتِي يَقْرَؤُهَا النَّاسُ الْيَوْمَ فِيهِ
    உபைதா அவர்கள் கூறியதாவது: நபி(சல்) அவர்கள் இறந்த ஆண்டில் ஓதப்பட்டதுதான் நபி(சல்) அவர்களது ஓதல் ஆகும். அதைதான் இன்று மக்கள் ஓதி கொண்டிருக்கிறார்கள் (முஸன்னஃப் இப்னு அபிஷைபா 30291) 
   உபைதா அவர்கள் அபூபகர்(ரலி) அவர்களது காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர், உஸ்மான்(ரலி) காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர் ஆவார். 

    மேற்குறிபிட்ட செய்திகள் ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் குர்ஆனை தொகுக்கும் குழுவில் நியமிக்கப்பட்டதற்கான தெளிவான காரணங்களை விளக்க போதுமானது. மேலும் மேற்குறிபிட்ட செய்திகளில் இடம் பெறும் அபூ அப்திர் ரஹ்மான் ஸ்லாமி, உபைதா, இப்னு சீரின் என்று அனைவரும் இப்னு மஸ்ஊத்(ரலி) உள்ளிட்ட பல நபிதோழர்களின் மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட குர்ஆனிற்கு கலிஃபாக்களான அபூபக்ர்(ரலி), உஸ்மான்(ரலி) அவர்கள் வழங்கிய அங்கீகாரம், குர்ஆன் தொகுப்பினை கண்ட முதல் இரு தலைமுறையான சஹாபாக்கள் மற்றும் தாபீயீன்களின் சாட்சியங்கள் ஆகியவையே, ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பு நபி(சல்) அவர்களது இறுதி ஓதல்தான் என்பதை நிறுவ போதுமானது.. மேற்குறிபிட்ட ஆதாரங்களை மறுக்கும் வண்ணம் நேரடியான எதிர் சாட்சியங்கள் எதையும் கொண்டு வரமுடியாத மிசனரிகளும், இஸ்லாமோஃபோபுகளும் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் எதிர்ப்பு குறித்த சில செய்திகளை தூக்கித்திரிகின்றன. அது குறித்து அடுத்த தொடரில் இன் ஷா அல்லாஹ் காண்போம்.