பக்கங்கள் செல்ல

Tuesday, August 9, 2022

அல் ஃபாத்திஹா மற்றும் அல் முஅவ்விததைன் சூராக்கள் குர்ஆனின் பகுதிகளா?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ



        குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களுக்கு தொடர்ச்சியாக இந்த தொடரின் ஊடாக பதிலளிக்கப்பட்டுவருகிறது. அந்த வரிசையில் அடுத்தாக இடம் பெறும் பகுதி இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் இன்றிருக்கும் குர்ஆனின் சில சூராக்களை குர்ஆனின் பகுதியாக ஏற்கவில்லை என்பதாகும். அது குறித்த இஸ்லாமோஃபோபுகளின் வாதத்தையும், அதற்கு அடிப்படையாக அமைந்த ஆதாரங்களையும் அதன் விளக்கத்தையும் பார்ப்போம்.

أخبرنا : محمد بن الحسن بن مكرم بالبصرة قال: ، حدثنا : داود بن رشيد قال : ، حدثنا : أبو حفص الأبار ، عن منصور ، عن عاصم بن أبي النجود ، عن زر بن حبيش قال: لقيت أبي بن كعب فقلت له: إن بن مسعود كان يحك المعوذتين من المصاحف ويقول: أنهما ليستا من القرآن فلا تجعلوا فيه ما ليس منه

            உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை சந்தித்து, "இப்னு மஸ்வூத் (ரலி) அல்முஅவ்விததைன் சூராக்கள் குர்ஆனின் பகுதியல்ல, அதன் பகுதியல்லாதவற்றை அதில் சேர்க்க வேண்டாம் என கூறி அவற்றை முஸ்ஹஃப்பில் இருந்து அழிக்கிறார்" என்று கூறினேன்.         (அறிவிப்பாளர்: ஸிர்ரு இப்னு ஹுபைஷ், நூல்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 4429)
ஆதாரம் 2:
            இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தனது முஸ்ஹஃப்பில் அல் ஃபாத்திகா மற்றும் அல் முஅவ்விததைன் சூரக்களை எழுதவில்லை என்று அல்சூயூத்தி அவர்களது இத்கான், துர்ருல் மன்சூர் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இஸ்லாமோஃபோபுகளால் முன்வைக்கப்படும் வாதம்:

            இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களாலேயே குர்ஆனின் பகுதியல்ல என்று மேற் குறிப்பிடப்பட்ட அல்முஅவ்விததைன் ((113, 114 ஆகிய சூரக்கள்) மற்றும் அல் ஃபாத்திஹா ஆகிய சூராக்கள் இன்றைய குர்ஆனில் உள்ளது. எனவே குர்ஆனில் அதிகப்படுத்துதல் ஏற்பட்டிருப்பதால் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பதே இஸ்லாமோஃபோபுகளின் மேற்குறிபிட்ட ஆதாரங்கள் அடிப்படையிலான வாதம் ஆகும். இன்ஷா அல்லாஹ் இவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கான பதிலை காண்போம்.

நமது பதில்:

        மேற்குறிபிட்ட ஆதாரம் 1ம் அதை போல் இருக்கும் ஏனைய ஆதாரங்களின் நம்பகத்தன்மை மற்றும் அதன் அறிவிப்பாளர்கள் குறித்த விமர்சனத்தை இங்கு பதிவிட்டு அதன் நிலையை விளக்கினாலே மேற்குறிபிட்ட இஸ்லாமோஃபோபுகளின் வாதம் எவ்வளவு பலவீனமானது என்பதை விளங்க போதுமானதாக இருக்கும்.
        இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் அல்முஅவ்வித்தைன் (113 மற்றும் 114) சூராக்கள் குர்ஆனின் பகுதியல்ல என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறுவதாக இடம் பெறும் அறிவிப்புக்கள் இரண்டு அறிவிப்பாளர்கள் 1.அபூ இஸ்ஹாக் மற்றும் 2.ஸிர்ரு இப்னு ஹுபைஷ் வழியாக பின்வருமாரு இடம் பெறுகிறது.



மேற்குறிபிட்ட இவ்விரு அறிவிப்பாளர்கள் குறித்து சிறு விளக்கம்:


1. அபூ இஸ்ஹாக்
ﺃﺑﻲ ﺇﺳﺤﺎﻕ اﻟﺴﺒﻴﻌﻲ ﺃﺣﺪ اﻷﻋﻼﻡ اﻷﺛﺒﺎﺕ ﻗﺒﻞ اﺧﺘﻼﻃﻪ ﻭﻟﻢ ﺃﺭ ﻓﻲ اﻟﺒﺨﺎﺭﻱ ﻣﻦ اﻟﺮﻭاﻳﺔ ﻋﻨﻪ ﺇﻻ ﻋﻦ اﻟﻘﺪﻣﺎء ﻣﻦ ﺃﺻﺤﺎﺑﻪ ﻛﺎﻟﺜﻮﺭﻱ ﻭﺷﻌﺒﺔ ﻻ ﻋﻦ اﻟﻤﺘﺄﺧﺮﻳﻦ ﻛﺎﺑﻦ ﻋﻴﻴﻨﺔ ﻭﻏﻴﺮﻩ
        அபூ இஸ்ஹாக் அஸ் ஸுபையீ குழப்பம் ஏற்படுவதற்கு முன்பு நல்ல அறிஞராக இருந்தார். அல் புகாரியில் அவரிடம் இருந்து அவரது முற்கால தோழர்களான அஸ் ஸவ்ரி, ஸுஅபா போன்றவர்கள் அறிவித்தவை மட்டுமே இடம் பெற்றுள்ளது. பிறகாலத்தவர்களாகிய இப்னு உயைனா மற்றும் ஏனையோர் அறிவித்தவை இடம் பெறவில்லை....(ஃபத்ஹுல் பாரி 1/431)
قال بن الصلاح اختلط أبو إسحاق اختلط أبو إسحاق ويقال إن سماع سفيان بن عيينة منه بعدما اختلط وتغير حفظه قبل موته
இப்னு ஸலாஹ் கூறியதாவது :
            அபூ இஸ்ஹாக் குழம்பி போனவர். மேலும் கூறினார்கள்: இவரிடம் இருந்து ஸுஃப்யான் இப்னு உயயைனா இவருக்கு குழப்பம் ஏற்பட்ட பிறகு செவியேற்றவர். மரணத்திற்கு முன்பு இவரது நினைவாற்றல் தவறிவிட்டது. (அல் கவாகிப் அல் நய்யிராத் 1/349)
قرأ أبو إسحاق السبيعي القرآن على الأسود بن يزيد النخعي وأبي عبد الرحمن السُلميّ، وقد قرأ عليه القرآن عرضًا حمزة بن حبيب الزيات. وكان يقرأ القرآن كاملاً كل ثلاثة أيام.
        அபூ இஸ்ஹாக், அல் அஸ்வத் இப்னு யஸீத் அன் நகயீ மற்றும் அபூ அப்தி ரஹ்மான் அஸ்ஸுலாமி, ஆகியோரின் ஓதலை ஓதக்கூடியவர். இவரின் ஓதலை ஹம்ஸா இப்னு ஹபீப் அல் ஜய்யாத் ஓதினார். இவர் மூன்று நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதிவிடுபவர்.(ஸியார் உல் ஆலம் உல் நுபுலா 5/ 392-401)

மேற்குறிபிட்ட அபூ இஸ்ஹாக் குறித்த விமர்சனங்களை ஆய்வு செய்தால் பின்வரும் நிலைபாட்டை இவரது ஹதீஸ்களில் எடுக்க முடியும்.


1. இவர் ஒரு காரீ. குர்ஆனை முழுமையாக 3 நாட்களில் ஓதும் அளவிற்கு கிராத்தில் புலமை மிக்கவர். இவரது ஓதல் கிராத் அல் ஹம்ஸா என்ற முத்தவாதீர் கிராத் ஆகும். முத்தவாதீர் கிராத் என்பது ஒவ்வொரு தலைமுறையினராலும் சரிகாணப்பட்ட ஓதல் முறை ஆகும்.

2. இவரது ஹதீஸ்களை பொறுத்தவரை இவரது இறுதி காலத்தில் கூஃபாவாசிகளிடம் அறிவித்துள்ளார். அதில் இமாம் புஹாரி அவர்கள் தனது ஸஹீஹ் புகாரியில் முற்கால தோழர்களான அஸ் ஸவ்ரி, ஸுஅபா போன்றவர்கள் அறிவித்த அறிவிப்புக்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இந்த விமர்சனத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட ஆதாரத்தின் அறிவிப்பாளர் தொடர் 1-ஐ ஆய்வுக்கு உட்படுத்தினால் அபூ இஸ்ஹாக்கின் கூஃபாவாசிகள் வழியாக வரும் அறிவிப்புகள் ஸஹீஹ் புகாரியில் பின்வரும் எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அ). சுஅபா வழியாக 56 ஹதீஸ்கள், ஸுஃப்யான் அஸ் ஸவ்ரி வழியா 16 ஹதீஸ்கள், அல் அஹ்வஸ் வழியாக 5 ஹதீஸ்கள்

ஆ). ஸுலைமான் அல் அஃமஸ் வழியாகவும், அப்துல் ஹமீத் இப்னு அல் ஹஸன் வழியாகவும் எதுவும் இடம் பெறவில்லை.
        எனவே மேற்குறிபிட்ட விளக்கத்தின் அடிப்படையில் அபூ இஸ்ஹாக்கின் அறிவிப்புக்கள் கூஃபாவாசிகள் வழியாக வரும் போது ஒன்று அவை அவரது முத்தவாதீர் கிராத்துடன் ஒற்றமைந்து இருக்க வேண்டும், அல்லது கூஃபா வாசிகளில், இவரது மாணவர்களில், முற்காலத்தவர்கள் என்று இமாம் புஹாரி அவர்களால் தரப்படுத்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த இரண்டு அளவீட்டிலும் பொருந்தாத செய்திகள் மறுக்கப்படும் பலவீன்மான செய்திகளாகும்.

        எனவே மேற்குறிபிட்ட முடிவுகளின் அடிப்படையில் வேறுபட்ட பல கிரந்தங்களில் இடம் பெறும் இது குறித்த ஏற்கப்பட்ட ஹதீஸ்களை தரப்படுத்தியுள்ளோம்



            மேற்குறிபிட்ட ஹதீஸ்களில் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள், அவர்களால் எழுதப்படாதவற்றை, அவர்களது முஸ்ஹஃப்பில் எழுதுவதை தடுத்தார்கள் என்று இடம் பெறுகிறது. குர்ஆனின் சேர்கக்கூடாது என்று இடம் பெறவில்லை.

        அதேபோல் மேற்குறிபிட்ட முடிவுகளின் அடிப்படையில் வேறுபட்ட பல கிரந்தங்களில் இடம் பெறும் இது குறித்து ஏற்கப்படாத ஹதீஸ்களை தரப்படுத்தியுள்ளோம்.


            மேற்குறிப்பிட்ட அப்துல் ஹமீத் இப்னு அல் ஹஸன் வழியாக இடம் பெறும் ஹதீஸ் அறிவிப்பு அப்துல் ஹமீத் இப்னு அல் ஹஸன் அவர்களால் மேலும் பலவீனமடைகிறது. இப்னு அபீ ஹாத்தம் அல் ராஸீ தனது ஜரஹ் வல் தஹ்திலில் கூறும் போது (பாகம் 6 பக்கம் 10 ) அப்துல் ஹமீத் இப்னு அல் ஹஸன் பலவீனமானவர் என்று கூறுகிறார். எனவே அபூ இஸ்ஹாக் வழியாக வரும் ஹதீஸ்களில் ஏற்கப்படாத கூஃபா வாசிகளின் அறிவிப்பில் மட்டுமே அல்லாஹ்வின் வேதத்தில் அல்லது குர்ஆனில் இல்லாதவற்றை சேர்க்கக்கூடாது என்று இடம் பெறுகிறது. இவரது கிராத்தின் அடிப்படையிலும் இவரது செய்தியை தரப்படுத்த இயலும் அடுத்த அறிவிப்பளாரான ஆஸீம் இப்னு பஹ்தலா அவர்கள் குறித்த விமர்சனத்தையும் பார்த்து விட்டு அதையும் பதிவோம்.

2. அஸீம் இப்னு பஹ்தலா:
عاصم بن بهدلة وهو بن أبي النجود بنون وجيم الأسدي مولاهم الكوفي أبو بكر المقريء صدوق له أوهام حجة في القراءة وحديثه في الصحيحين مقرون من السادسة 
        ஆஸிம் இப்னு பஹ்தலா அவர் இப்னு அபீ நஜுத் என்பவராவார். இவரது கிளையார் அல் அஸத் கோத்திரதாரின் அடிமைகள் ஆவர். இவரது ஆசிரியர் அல் கூஃபி அபூ பகர் அல் மக்ரிஃ ஆவார். உண்மையாளர் ஆனால் தவறிழைப்பவர். ஓதலில் நம்பகதன்மையுடையவர்.மேலும் இரண்டு சஹீஹிலும் இவரது ஹதீஸ்கள் ஒத்தமைந்தவைளுடன் உள்ளன. (தக்ரீப் அல் தஹ்தீப், ப.எண்:285)

மேற்குறிபிட்ட ஆஸிம் இப்னு பஹ்தலா குறித்த விமர்சனங்களை ஆய்வு செய்தால் பின்வரும் நிலைபாட்டை இவரது ஹதீஸ்களில் எடுக்க முடியும்.

1. முன்சென்றவர் போலவே இவரும் காரீ. இவரது கிராத் - கிராத் அல் ஹஃப்ஸ் என்ற முத்தவாதீர் கிராத் ஆகும். முத்தவாதீர் கிராத் என்பது ஒவ்வொரு தலைமுறையினராலும் சரிகாணப்பட்ட ஓதல் முறை ஆகும்.

2. இவரது ஹதீஸை பொறுத்தவரை ஹதீஸ்களில் தவறிழைப்பவர். இவரது ஹதீஸை வேறு ஒரு ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரை கொண்ட ஹதீஸ் உறுதி படுத்தும் என்றிருந்தால் இவரது செய்தி ஏற்கப்படும்.

            எனவே மேற்குறிபிட்ட முடிவுகளின் அடிப்படையில் ஸஹீஹ் புகாரியில் இடம் பெறும் இது குறித்த ஏற்கப்பட்ட ஹதீஸ்களை தரப்படுத்தியுள்ளோம்.




அதேபோல் மேற்குறிபிட்ட முடிவுகளின் அடிப்படையில் வேறுபட்ட பல கிரந்தங்களில் இடம் பெறும் இது குறித்து ஏற்கப்படாத ஹதீஸ்களை தரப்படுத்தியுள்ளோம்.


        எனவே இவர் மட்டுமே தனித்து அறிவிக்கும், எந்த ஸஹீஹான அறிவிப்பாளர் தொடர் கொண்ட ஹதீஸாலும் உறுதி படுத்த முடியாத, ஏற்க்கபப்படாத ஹதீஸ்களில் மட்டுமே "குர்ஆனில் இல்லாதவற்றை சேர்க்கக்கூடாது" என்ற வாசகம் இடம் பெறுகிறது.

                மேலும் இவ்விருவரின் ஓதலின் அடிப்படையிலும் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்ட ஹதீஸ்களாக பின்வரும் ஹதீஸ்கள் உள்ளன.



அல் ஃபாத்திஹா சூராவை இப்னு மஸ்வூத்(ரலி) மறுத்தார்களா?

    தலைப்பில் கொடுக்கப்பட்ட விமர்சனத்திற்கு இஸ்லாமோஃபோபுகள்  ஹதீஸ்களை முன்வைத்து எந்த வாதத்தையும் தங்களது வலைதளத்தில் வைத்திருப்பதாக நாம் தேடிய வரை இல்லை. இந்த செய்தியை இங்கு பதிவிட்டு விளக்குவோம்.
ﻭﺭﻭﻱ ﻋﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ اﻟﻨﺨﻌﻲ ﺃﻥ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻛﺎﻥ ﻻ ﻳﻜﺘﺐ ﻓﺎﺗﺤﺔ اﻟﻜﺘﺎﺏ، ﻭﻳﻘﻮﻝ ﻟﻪ: "ﻟﻮ ﻛﺘﺒﺘﻬﺎ ﻟﻜﺘﺒﺘﻬﺎ ﻓﻲ ﺃﻭﻝ ﻛﻞ ﺷﻲء"،
        இப்ராஹீம் அந் நஃஹயீ கூறியதாவது: இப்னு மஸ்வூத்(ரலி) ஃபாத்திகத்துல் கிதாபை எழுதமாட்டர்கள். அது குறித்து "அதை எழுதவேண்டுமானால் நான் ஒவ்வொன்றின் துவக்கத்திலும் எழுதியிருப்பேன்" என்று கூறினார்கள்.
(அபூ பகர் அல் பாக்கிலானியின் அல் இன்திஸார் 1/320, துர்ருல் மன்சூர் 1/10)

        மேற்குறிபிட்டஹதீஸை பார்க்கும் எவரும் இப்னு மஸ்வூத்(ரலி), அல் ஃபாத்திகா சூராவை குர்ஆனின் பகுதியல்ல என்று கூறவில்லை என்று புரிந்து கொள்வார்கள். மேலும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களே அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை குர்ஆனின் பகுதிதான் என்று அல்குர்ஆன் அல்ஹிஜ்ர் சூராவின் 87 வது வசனத்தின் விளக்கத்தில் கூறுகிறார்கள்.
ﺣﺪﺛﻨﻲ اﻟﻤﺜﻨﻰ ﻗﺎﻝ: ﺛﻨﺎ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﻋﻮﻥ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻫﺸﻴﻢ، ﻋﻦ ﻳﻮﻧﺲ، ﻋﻦ اﺑﻦ ﺳﻴﺮﻳﻦ، ﻋﻦ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ: {ﺳﺒﻌﺎ ﻣﻦ اﻟﻤﺜﺎﻧﻲ}[ اﻟﺤﺠﺮ: 87] ﻗﺎﻝ: «ﻓﺎﺗﺤﺔ اﻟﻜﺘﺎﺏ»
            இப்னு மஸ்வூத்(ரலி) கூறியதாவது "திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு" (அல்குர்ஆன் அல்ஹிஜ்ர்:87) என்பது ஃபாத்திஹ துல் கிதாப்.(அல் ஃபாத்திஹா ஸூரா) ஆகும். அறிவிப்பாளர்: இப்னு ஸீரின், நூல்: தஃப்ஸீர் தபரி 14/114.
மேற்குறிபிட்ட இந்த செய்தி அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களின் பின்வரும் கருத்தை உறுதிபடுத்துவதை நாம் காணமுடிகிறது.

அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது
    நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள. நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழு.து முடித்த பின்), அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன், அதற்கு அவர்கள், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்ததூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8-24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா என்று கேட்டார்கள்-(7). பிறகு என்னிடம், குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்கு கற்றுத் தருகிறேன் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அலஃபாத்திஹா அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்-(8). எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள். புகாரி 4474)
        மேலும் இப்ராஹீம் அந் நஃஹயீ அவர்கள் அறிவிக்கும் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஒரு குறையும் உள்ளது. அதாவது இப்ராஹீம் அந் நஃஹயீ  அவர்களது பிறப்பு ஹிஜ்ரி 47,  இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது மரணம் ஹிஜ்ரி 50. இது குறித்து தஹ்தீப் அல் தஹ்தீப்பில்(1/178) பின்வருமாறு இடம் பெறுகிறது
ﻭﻗﺎﻝ اﺑﻦ اﻟﻤﺪﻳﻨﻲ: "ﻟﻢ ﻳﻠﻖ اﻟﻨﺨﻌﻲ ﺃﺣﺪا ﻣﻦ ﺃﺻﺤﺎﺏ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺁﻟﻪ ﻭﺳﻠﻢ"
        மேலும் இப்னு மதீனீ அவர்கள் "அந் நஃஹயீ அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களது எந்த தோழர்களையும் சந்தித்ததில்லை" என்று கூறுகிறார்கள்.

            அல் ஃபாத்திஹா சூரா குர்ஆனின் பகுதியல்ல என்று இப்னு மஸ்வூத்(ரலி) மீது கூறப்படும் கூற்று பின்வரும் முரண்களையும் பிழைகளையும் கொண்டுள்ளது

1. அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களின் கருத்துக்கு மாற்றமானது

2. அதை வழிமொழிந்த இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் கருத்துக்கு முரண்

3. இவை அனைத்தையும் விட அந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் முறிந்த செய்தி.
        மேலும் அல்ஃபாத்திஹா மற்றும் அல்முஅவ்வித்தைன் (113 மற்றும் 114) சூராக்கள் குர்ஆனின் பகுதியல்ல என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறுவதாக இடம் பெறும் அறிவிப்புக்கள் அனைத்தும் பலவீனமான ஹதீஸ்கள் என்பதை அறிஞர்களும் உறுதிபடுத்தியுள்ளனர்.


ﺣﺪﺛﻨﺎ اﻟﺤﺴﻦ ﺑﻦ ﻳﺤﻴﻰ اﻷﺭﺯﻱ، ﻗﺎﻝ: ﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﻳﻌﻘﻮﺏ اﻟﻜﺮﻣﺎﻧﻲ، ﻗﺎﻝ: ﻧﺎ ﺣﺴﺎﻥ ﺑﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﻋﻦ اﻟﺼﻠﺖ ﺑﻦ ﺑﻬﺮاﻡ، ﻋﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﻋﻦ ﻋﻠﻘﻤﺔ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﺃﻧﻪ ﻛﺎﻥ ﻳﺤﻚ اﻝﻣﻌﻮﺫﺗﻴﻦ ﻣﻦ اﻟﻤﺼﺤﻒ ﻭﻳﻘﻮﻝ: «ﺇﻧﻤﺎ §ﺃﻣﺮ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻥ ﻳﺘﻌﻮﺫ ﺑﻬﻤﺎ» ، ﻭﻛﺎﻥ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻻ ﻳﻘﺮﺃ ﺑﻬﻤﺎ، ﻭﻫﺬا اﻟﻜﻼﻡ ﻟﻢ ﻳﺘﺎﺑﻊ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﺃﺣﺪ ﻣﻦ ﺃﺻﺤﺎﺏ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭﻗﺪ ﺻﺢ ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻧﻪ ﻗﺮﺃ ﺑﻬﻤﺎ ﻓﻲ اﻟﺼﻼﺓ ﻭﺃﺛﺒﺘﺘﺎ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ
            அல்கமா அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) முஸ்ஹஃபில் அல் முஅவ்விததைன் சூராக்களை அழிக்கக்கூடியவராக இருந்தார். மேலும் அவர்கள் "இவற்றை கொண்டு பாதுகாப்பு தேடவே நபி(சல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என்று கூறுவார்கள். மேலும் அப்துல்லாஹ்(ரலி) அல் முஅவ்விததைன் சூராக்களை ஓதமாட்டார்கள். ஆனால் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மீதான இந்த தனித்த கருத்தை நபித்தோழர்கள் யாரும் ஏற்கவில்லை. மேலும் நபி(சல்) அவர்கள் இவ்விரண்டையும் தொழுகையில் ஓதியுள்ளார்கள் என்பதும், அவை முஸ்ஹஃபில் இடம் பெற்றுள்ளவை என்பதும் நிறுபிக்கபட்டவையாகும்.( முஸ்னத் பஸ்ஸார் 1586)
                நாம் முன்பே கூறியது போல் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம்
அல்முஅவ்விததைன் முஸ்ஹஃப்பின் பகுதி அல்ல என்று இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று கூறப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான்" அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் ஓதியவாறு தான் ஓதுவதாக இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களே கூறுவதாக" அமையும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது அறிவிப்பு (முஸ்னத் அஹ்மத் 21181), அதைத்தான் கூறுகிறது. குர்ஆனின்  பகுதியை இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் மறுக்க வில்லை  என்பதை உபை இப்னு கஅப்(ரலி) அறிந்திருந்ததால்தான் எந்த சலனமும் (குர்ஆனின் ஒரு பகுதியை மறுப்பது இறைமறுப்பு) இன்றி அதற்கு பதிலளிக்கிறார்கள்.

ﻭﻛﻞ ﻣﺎ ﺭﻭﻱ ﻋﻦ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻣﻦ ﺃﻥ اﻟﻤﻌﻮﺫﺗﻴﻦ ﻭﺃﻡ اﻟﻘﺮﺁﻥ ﻟﻢ ﺗﻜﻦ ﻓﻲ ﻣﺼﺤﻔﻪ ﻓﻜﺬﺏ ﻣﻮﺿﻮﻉ ﻻ ﻳﺼﺢ؛ ﻭﺇﻧﻤﺎ ﺻﺤﺖ ﻋﻨﻪ ﻗﺮاءﺓ ﻋﺎﺻﻢ ﻋﻦ ﺯﺭ ﺑﻦ ﺣﺒﻴﺶ ﻋﻦ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻭﻓﻴﻬﺎ ﺃﻡ اﻟﻘﺮﺁﻥ ﻭاﻟﻤﻌﻮﺫﺗﻴﻦ
        அல் ஃபாத்திஹா மற்றும் முஅவ்விததைன் சூராக்கள் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அல்முஸ்ஹஃப்பின் (குர்ஆனின் ) பகுதியல்ல என்று கூறுவாதாக வரும் அனைத்து அறிவிப்புக்களும் பொய்யானவை ,இட்டுக்கட்டபட்டவை. அவை ஸஹீஹானவை அல்ல. மாறாக அல் ஃபாத்திஹா மற்றும் முஅவ்விததைன் சூராக்களை உள்ளடக்கிய இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் இருந்து ஜிர்ர் இப்னு ஹுபைஸ் வழியாக இடம்பெறும் ஆஸிமின் ஓதலே உண்மையானவை (இப்னு ஹஸம் அவர்களது முஹல்லாஹ் 1/32)
ﺃﺟﻤﻊ اﻟﻤﺴﻠﻤﻮﻥ ﻋﻠﻰ ﺃﻥ اﻟﻤﻌﻮﺫﺗﻴﻦ ﻭاﻟﻔﺎﺗﺤﺔ ﻭﺳﺎﺋﺮ اﻟﺴﻮﺭ اﻟﻤﻜﺘﻮﺑﺔ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ ﻗﺮﺁﻥ ﻭﺃﻥ ﻣﻦ ﺟﺤﺪ ﺷﻴﺌﺎ ﻣﻨﻪ ﻛﻔﺮ ﻭﻣﺎ ﻧﻘﻞ ﻋﻦ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻓﻲ اﻟﻔﺎﺗﺤﺔ ﻭاﻟﻤﻌﻮﺫﺗﻴﻦ ﺑﺎﻃﻞ ﻟﻴﺲ ﺑﺼﺤﻴﺢ ﻋﻨﻪ .
        முஸ்லீம்கள் எந்த கருத்து வேறுபாடுமின்றி அல்முஸ்ஹஃப்பில் எழுதப்பட்டுள்ள அல் ஃபாத்திஹா , முஅவ்வித்தைன் மற்றும் ஏனைய சூராக்களை குர்ஆன் என்று ஏற்றுள்ளனர். அதில் எந்த ஒன்றையும் மறுப்பவர் இறைமறுப்பு செய்தவர் ஆவார். அல் ஃபாத்திஹா மற்றும் முஅவ்விததைன் குறித்து இப்னு மஸ்வூத்(ரலி) கூறுவதாக வருபவை பொய்யானவை. அவரிடம் இருந்து நம்பகத்தன்மையுடன் அறிவிக்கப்படவில்லை. (அல் மஜ்மூ அந்நவவீ 3/396)

        எனவே அல் ஃபாத்திஹா மற்றும் முஅவ்வித்தைன் சூராக்கள் குர்ஆனின் பகுதியல்ல என்று இப்னு மஸ்வூத்(ரலி) மீது கூறப்படும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவை. அதன் அடிப்படையில் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற இஸ்லாமோஃபோபுகளின் வாதம் பிழையானது என்பது இந்த கட்டுரையின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.....


No comments:

Post a Comment