பக்கங்கள் செல்ல

cross tab2

Wednesday, September 7, 2016

ஹஜ் பயணம் - பாகம் 1

இந்தியாவைப் பொறுத்தவரை "ஹஜ் பயணம்" என்பது மத வேறுபாடின்றி அனைவரும் அறிந்துள்ள ஒரு விடயம். இதன் உண்மையான விபரம் என்ன? அங்கே செல்லும் முஸ்லிம்கள் அன்றாட நிகழ்வுகள் பற்றி "அல்ஜசீரா" செய்தி நிறுவனம் தொகுத்துத் தருகின்றது... அனைத்து சகோதர(ரி)களும் பலன் பெரும் நோக்கத்தில் சுருக்கமாகத் தருகின்றோம்.

20 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் உலகம் முழுவதிலிருந்தும் ஹஜ் எனும் புனித பயணமாக சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிற்குச் சென்றுள்ளனர்.
உலகில் கூடும் மிகப்பெரிய மக்கள் கூட்டங்களில் ஒன்றான இந்த ஹஜ், இஸ்லாமிய கட்டாயக் கடமைகளில் ஒன்று. இது மக்களை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தவும், இறைவனுக்கு அடிபணிவதில் ஆர்வமூட்டும் வகையிலும் அமைந்துள்ளது.
பழமையான கஃபா படம் 
முஹம்மது நபி அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி அவர்கள் நடந்து சென்றப் பாதை மட்டுமில்லாமல், பைபிளில் சொல்லப்பட்டுள்ள தூதுவர்களான ஆப்ரஹாம், இஸ்மேவேல் போன்றோரின் வழிமுறையாகவும் அமைந்துள்ளது.
7 முறை காபாவை வலம் வருவது, மேலும் சபா & மர்வா என்று சொல்லக்கூடிய இரண்டு மலைகளுக்கிடையே 7 முறை வலம் வருவது போன்ற கடுமையான உடல் உழைப்பைக் கொண்டுள்ளது தான் இந்த ஹஜ் பயணம்.


இன்றைய கஃபா



ஹஜ் பயணம் - 2 - ஹஜ்ஜின் வரலாறு: ஜம்ஜம் நீரூற்று


ஹஜ் பயணம் - 2

ஹஜ்ஜின் வரலாறு: ஜம்ஜம் நீரூற்று

4000 வருடங்களுக்கு முன்பு  மனிதர்கள் வசிக்காத, வறண்ட  ஒரு பாலைவனம் தான் மக்கா.

Safaa & Marwa
இப்ராஹீமிடம்(ஆப்ரஹாம்), அவர் மனைவி ஹாஜாராவையும், குழந்தை இஸ்மாயீலையும் பாலஸ்த்தீனத்திலிருந்து, அரேபியாவில் கொண்டு வந்து விட்டு விடுமாறு இறைவன் கட்டளையிடுகிறான். இறைக் கட்டளையை ஏற்று, மக்கள் நடமாட்டமில்லாத அரேபியாவில் இபுறாஹீம் அவர்கள் விட்டு விட்டு சென்று விடுகின்றார்கள்.

குழந்தை இஸ்மாயில் பசியினால் துடிக்கும்போது, தாய் ஹாஜரா  ஏதாவது உதவி கிடைக்குமா என்று ஏங்கிய வண்ணம் அங்கே இருந்த ஸபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓடிச் சென்று பார்க்கின்றார்கள்.

இறுதியில் இறைவனிடம் பிரார்த்தித்த நிலையில், குழந்தைக்கு அருகே மயக்கமடைந்து விடுகின்றார்.

Zamzam water entering the well from the stony horizon
இறைக் கட்டளையின்பேரில், வானவர் ஜிப்ரயில் மூலம்  அங்கிருந்து மிகச் சிறந்த நீரூற்று வெளிப்படுகின்றது. நீர் பல வழிகளிலும் ஓட, ஹாஜரா கல்களையும்  மண்ணையும் வைத்து "ஜம்ஜம்" என்று கூறியவாறே  தடுக்க முயற்சிக்கின்றார். இதனைக் கொண்டு தான் இந்த நீரூற்று "ஜம்ஜம்" என்று அழைக்கப்படுவதாக ஒரு தகவலும் உண்டு.

 கடுமையான பாலைவனத்தில் மிகச் சிறந்த நீரூற்று இவர்களின் வசம் வந்ததால் இதை வைத்து கடந்து செல்லும் ஆடு மேய்ப்பவர்களிடம் உணவுகளை பரிமாற்றம்  செய்து வந்தனர்.
   
Conducting Water Sampling Test
4000 வருடங்களுக்கு முன்பு, வறண்ட பாலைவனத்தில் உண்டான ஒரு நீரூற்று, இன்று வரை பல்லாயிரம் மடங்கு அதிகமாக பலனளித்து கொண்டிருப்பது, மிகப் பெரிய அதிசயங்களில் ஒன்று.

ஹஜ் முடிந்து வருபவர்கள், கேன்களில் ஜம்ஜம் நீர் கொண்டு வருவதை காணலாம். முஸ்லீம் நண்பர்களிடம் கேட்டு அருந்திப் பாருங்கள்.  இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு.


Zamzam drinking water container for hajis


அன்று ஹாஜரா அவர்கள், இரன்டு மலைக்குன்றுகளுக்கிடையே ஓடிய சம்பவத்தை வருங்கால சந்ததிகள் நினைவு கூறும்  விதமாகத் தான் மக்கா பயணம் செல்பவர்களின் அலுவல்களில் 7 முறை இரு மலைகளுக்கிடையே நடப்பதும்  ஒன்று.

Part 1: ஹஜ் பயணம் - பாகம் 1

Ref:
1.   BBC 
2.   Zam Zam studies and Research Center 


Monday, September 5, 2016

மக்கா பாதுகாப்பான நகரமா?

"அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக"
-----------------------------------------------------------------------------
இயற்கைச் சீற்றங்களின் கொடுமைகளிலிருந்து அதிக அளவு பாதுகாப்பான உலக நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்திலும், சவூதி அரேபிய மூன்றாவது இடத்திலும் உள்ளது.
1400 வருடங்களுக்கு முன்புள்ள ஒரு புத்தகத்தில் இவ்வளவு தீர்க்கமாக

சொல்லமுடியுமென்றால், அது மனித அறிவினால் நிச்சயம் முடியாது என்பது பாமரனுக்கும் தெரியும்.
திருக்குரானில் இறைவன் மக்காவின் பாதுகாப்பு பற்றி பல இடங்களில் கூறுகின்றான்:

95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-

2:125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;

14:35. நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).

29:67. அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?

இது மனித அறிவு தான் என்று சொல்லும் பகுத்தறிவாதிகள் (!!), 21ம் நூற்றாண்டில் உள்ள அறிவியல் அறிவோடு இது போன்ற ஒரு அறிவிப்பை செய்யலாமே !
இறைவன் தன் கருணையினால் பாதுகாப்பாக அமைத்திருந்தாலும், மனித அறிவைக் கொன்டு செயல்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இவர்கள் பின்தங்கி இருப்பது வேதனைக்குரியது.


Wednesday, August 24, 2016

திருக்குர்ஆன் மலர்கள்: 2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)

திருக்குர்ஆன் மலர்கள்: 2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2): சீர்த்திருத்தவாதத்திற்கு எதிராக   பயங்கரவாதம்     சவுதி அராபியாவில் மக்கா நகரில் பிறந்து வளர்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது நாற்...

Tuesday, August 23, 2016

திருக்குர்ஆன் மலர்கள்: 1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)

திருக்குர்ஆன் மலர்கள்: 1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1): பொறுமை - தர்மத்தின் காவலர்களின் கடமை! இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள். அதன் இனியொரு பொருள் கீழ்படிதல் என்பது.  படைத்த இறைவனுக்கு கீ...