பக்கங்கள் செல்ல

Wednesday, May 6, 2020

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) யை மணந்ததால் அவர் ஒரு குழந்தை புணர்வாளர்: விமர்சனமும் பதிலும்


                  நபி(ஸல்) அவர்கள் குறித்த இந்த விமர்சனம் சற்று விளக்கமாக காண வேண்டிய ஒன்று. முதலில் இந்த விமர்சனத்தில் இடம் பெறும் குழந்தை புணர்வாளர்(Pedophile) என்ற மனநிலை பாதிப்பின் விளக்கம் இதுவே.
“ Over a period of at least 6 months, recurrent, intense sexually arousing fantasies, sexual urges, or behaviors involving sexual activity with a prepubescent child or children (generally age 13 years or younger)” (P.No: 697 DIAGNOSTIC AND STATISTICAL MANUAL OF MENTAL DISORDERS, FIFTH EDITION)
" குறைந்தது ஒரு ஆறு மாத காலமாக, பூப்பெய்தாத அல்லது குழந்தைகளின் மீதான தொடர்ச்சியான தீவிர பாலியல் தூண்டுதல் கற்பனைகள்,பாலியல் தூண்டுதல்கள் அல்லது பாலியல் செயல்பாடு சம்பந்தப்பட்ட நடத்தைகளில் ஈடுபடுதல்" 
மேற்குறிபிட்ட இந்த குற்றச்சாட்டில் ஒன்றையும் நபி(சல்) அவர்களின் மீது இந்த விடயத்தில் நிறுவ இயலாது. 

  நபி(சல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) மட்டுமே 6 வயதில் மணமுடிக்கப்பட்டவர். அவர் பூப்பெய்த பிறகு உறவு கொள்ளப்பட்டார். அதாவது 9 வயதில். அதனால்தான் ஆயிஷா(ரலி) பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
حدثنا إسحاق، قال: أبنا زكريا بن عدي، عن أبي المليح، عن حبيب بن أبي مرزوق، عن عائشَة -رضي الله
عنها-، قالت: إذا بَلَغَت الجاريَة تِسعًا فهي امرأة
ஆயிஷா(ரலி) கூறியதாவது, “சிறுமி 9 வயதை அடைந்ததும் பெண்ணாகிறாள்"  (நூல்: مسائل ஹதீஸ் எண்:1289 ; ஆசிரியர்: حرب بن إسماعيل الكرماني)
அறிவிப்பாளர் தொடர்
عائشَة -رضي الله عنه ا حبيب بن أبي مرزوق حسن بن عمر بن يحيى )أبي المليح( زكريا بن عدي إسحاق بن إبراهيم بن مخلد بن إبراهيم بن مطر

         இந்த ஹதீஸை நாம் குறிபிட்டதும் இஸ்லாம் மீது அவதூறு பரப்புபவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு தெரியாமல் கூறுகிறார் என்று உளறுகின்றனர். ஆனால் ஆயிஷா(ரலி) அவர்கள்தான் மாதவிடாய் குறித்து மிக அதிகமாக விளக்கியவர்கள். இது ஹதீஸ் கிதாப்களை படிக்கும் யாரும் அறிந்து கொள்ளலாம். அதனால் பெண்ணுக்கும் சிறுமிக்கும் ஆயிஷா(ரலி) க்கு வித்தியாசம் தெரியாது என்பது எல்லாம் சுத்த பேத்தல். 
              மேலும் மேற்குறிபிட்ட பூப்பெய்துதல் குறித்த ஆயிஷா (ரலி) அவர்களது ஹதீஸை பின்வருமாரு அல் பைகஹீ அவர்கள் தனது நூலான சுனன் அல் குப்ராவில் விளக்குகிறார்கள்:
الشَّافِعِيِّ قَالَ: أَعْجَلُ مَنْ سَمِعْتُ بِهِ مِنَ النِّسَاءِ يَحِضْنَ نِسَاءٌ بِتِهَامَةَ يَحِضْنَ لِتِسْعِ سِنِينَ
ஷாஃபி(ரஹ்) அவர்கள் கூறியதாவது: திகாமாவில் பெண்கள் ஒன்பது வயது அடைந்ததுமே பூப்பெய்வதாக கேள்விபட்டுள்ளோம்.
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ قِرَاءَةً عَلَيْهِ حَدَّثَنِي أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الشَّعْبِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَرْزَنَانِيُّ ثنا أَحْمَدُ بْنُ طَاهِرِ بْنِ حَرْمَلَةَ ثنا جَدِّي ثنا الشَّافِعِيُّ، قَالَ: " رَأَيْتُ بِصَنْعَاءَ جَدَّةً بِنْتَ إِحْدَى وَعِشْرِينَ سَنَةً حَاضَتِ ابْنَةَ تِسْعٍ وَوَلَدَتِ ابْنَةَ عَشْرٍ وَحَاضَتِ الْبِنْتُ ابْنَةَ تِسْعٍ وَوَلَدَتِ ابْنَةَ عَشْرٍ وَيُذْكَرُ عَنِ الْحَسَنِ بْنِ صَالِحٍ، أَنَّهُ قَالَ: أَدْرَكْتُ جَارَةً لَنَا صَارَتْ جَدَّةً بِنْتِ إِحْدَى وَعِشْرِينَ سَنَةً وَعَنْ مُغِيرَةَ الضَّبِّيِّ أَنَّهُ قَالَ: احْتَلَمْتُ وَأَنَا ابْنُ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً وَرُوِّينَا عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ: " إِذَا بَلَغَتِ الْجَارِيَةُ تِسْعَ سِنِينَ فَهِيَ امْرَأَةٌ " تَعْنِي وَاللهُ أَعْلَمُ فَحَاضَتْ فَهِيَ امْرَأَةٌ

         ஷாஃபி(ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் யமனில் 21 வயதில் பாட்டியாகும் பெண்ணை கண்டிருக்கிறேன். அவரது மகள் 9 வயதில் பூப்பெய்தி 10 வயதில் பெண் பிள்ளை பெற்றார். மேலும் அப்பெண்ணின் மகளும் 9 வயதில் பூப்பெய்தி 10 வயதில் பிள்ளை பெற்றார்.(அதாவது 19 அல்லது 20 வயதிலேயே பேரக்குழந்தைகளை கண்டுவிடுவார்கள்) மேலும் இப்னு ஸலாஹ் கூறினார்கள்: எனது அருகாமையில் 21 வயதை அடைந்த பாட்டி இருக்கிறார். மேலும் முகீரா அத் தபி கூறினார்கள் " பண்ணிரண்டு வயதில் நான் பருவ வயதை அடைந்திருந்தேன்.” மேலும் ஆயிஷா(ரலி) அவர்களது மற்றோரு அறிவிப்பில் "சிறுமி 9 வயதை அடைந்ததும் பெண்ணாகிறாள்" என்றிருக்கிறது. அதாவது அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு அதனால் பெண்ணாகிறாள் என்று பொருள்.அல்லாஹ்வே அறிந்தவன் (நூல்: பைஹகீ அவர்கள் ஸுனன் அல் குப்ரா ஹதீஸ் எண்:1531/1588 ;1/476)
மேலும் நபி(சல்)- ஆயிஷா(ரலி) சம்பவம் குறித்து பதிவிட்ட அபூதாவுத் அவர்கள் பின்வருமாரு விளக்குகிறார்கள்:
دَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالاَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزَوَّجَنِي وَأَنَا بِنْتُ سَبْعِ سِنِينَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ أَتَيْنَ نِسْوَةٌ - وَقَالَ بِشْرٌ فَأَتَتْنِي أُمُّ رُومَانَ - وَأَنَا عَلَى أُرْجُوحَةٍ فَذَهَبْنَ بِي وَهَيَّأْنَنِي وَصَنَعْنَنِي فَأُتِيَ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَبَنَى بِي وَأَنَا ابْنَةُ تِسْعٍ فَوَقَفَتْ بِي عَلَى الْبَابِ فَقُلْتُ هِيهْ هِيهْ - قَالَ أَبُو دَاوُدَ أَىْ تَنَفَّسَتْ - فَأُدْخِلْتُ بَيْتًا فَإِذَا فِيهِ نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ. دَخَلَ حَدِيثُ أَحَدِهِمَا فِي الآخَرِ.
             உம்முல் முஃமினீன் ஆயிஷா(ரலி கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்கள் எனக்கு ஆறு அல்லது ஏழு வயதில் மணமுடித்தார்கள். நாங்கள் மதீனா வந்த போது, பிஸ்ர் அவரது அறிவிப்பின் படி’; உம்மூ ரூமான் நான் ஊசல் ஆடிக்கொண்டிருக்கும் போது வந்தார்கள். என்னை அழைத்து சென்று தயார் படுத்தி அலங்கரித்தார். பிறகு நான் நபி(சல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டேன். என்னை அவர்கள் வீடு கூடிய போது வயது ஒன்பது. அவர்(உம்மு ரூமான்) என்னை வாசல் அருகில் நிறுத்திவிட்டு சிரித்தார்கள்.
       அபுதாவூத் கூறினார்கள்:அதாவது என்ன கூறுகிறார்கள் என்றால், "நான் பூபெய்தினேன், பிறகு நான் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டேன், அங்கு சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் கூறினார்கள் நல்ல அருளும் வளமும் ஏற்படட்டும். ..............(அபுதாவுத் 4933) 
                ஆக மேற்குறிபிட்ட செய்தி தெளிவாக கூறுகிறது ஆயிஷா(ரலி) பூப்பெய்தியதும் தான் நபி(சல்) அவர்கள் வீடு கூடினார்கள் என்பதை. ஆக 9 வயதில் பூபெய்துவது அங்கு நடக்கும் இயல்பான விஷயமாக இருந்திருக்க வேண்டும். மேலும் இன்றும் கூட சில நேரங்களில் பெண்பிள்ளைகள் 8 அல்லது 9 வயதில் பூப்பெய்துகின்றனர். இது மேலை நாடுகளிலும் , ஆசிய நாடுகளிலும் ஏற்படத்துவங்கியுள்ளது. இது குறித்து டாக்டர் ,சாரா கிரக்மேன் குறிப்பிடுகிறார்.(1)
“It is not uncommon for girls to start their period as young as 8 or 9,” says Dr. Sara Kreckman, UnityPoint Health pediatrician.”
             இது ஒன்றும் புதிதல்ல என்று டாகடர் கூறுவதின் பிண்ணனி நாம் வேளாண்மை செய்து குடியேறிய காலங்களில் பெண்ணின் பூபெய்யும் வயது 7 முதல் 13 ஆக இருந்தது. என்று ஆய்வுகள் கூறுகின்றன.(Changing times: The evolution of puberty P.D. Gluckman a,∗, M.A. Hanson ,) 

            ஆக பூபெய்தல் என்பது 7ல் இருந்து 13 வரை நிகழ்வது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அது நமது மரபுகளில் பதிந்த ஒன்று. அதை ஆயிஷா(ரலி) யும் சந்தித்ததால்தான் 9 வயதில் சிறுமி பெண்ணாகிறாள் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இப்படி ஒரு சிறுமியை திருமணம் முடித்து அவர் பூப்பெய்த பிறகும் அந்த திருமணம் தொடர்கிறது என்றால் இது நிச்சயம் குழந்தை புணர்வாளருக்கான அடையாளம் அல்ல. அதாவது பீடோஃபிலியாவின் அடிப்படை அளவியலே அடிபடுகிறது. 

       மேலும் இத்தகைய திருமண முறைகள் முன்பே அந்த சமுகத்தில் நிறைந்து காணப்பட்டது என்பதை வரலாறு தெளிவாக பதிவிட்டுள்ளது. நபி(ஸல்)-ஹதீஜா(ரலி) ஆகியோரின் பெண்பிள்ளைகளான ஜைனப் பின்த் முஹம்மத்(சல்) அவர்களின் வாழ்க்கை குறிப்பை பார்த்தோம் என்றால் அவர்களுக்கும் இந்த வகையான திருமணமே நிகழ்ந்துள்ளது, அவரது பிறப்பு குறித்து இப்னு அப்தில் பர் இயற்றிய அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிபத அல் அஸ்ஹாப் அறிவிப்பாளர் எண்:3360 இல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
قد تقدّم انها اكبر بناته صلّى الله عليه وسلم بلا خلاف الا ما لا يصح وانما الخلاف فيها وفى القاسم أيهما ولد أوّلا قال ابن اسحاق سمعت عبد الله بن محمد بن سليمان يقول ولدت زينب بنت رسول الله صلى الله عليه وسلم فى سنة ثلاثين من مولده صلّى الله عليه وسلم وادركت الاسلام واسلمت وهاجرت وكان رسول الله صلّى الله عليه وسلم محبا لها*
ஜைனப் பின்த் முஹம்மது(சல்) நபி(சல்) அவர்களின் முப்பதாவது வயதில் பிறந்தார்கள். (நூல் الاستيعاب في معرفة الأصحاب)

மேலும் அவரது திருமணம் குறித்து பின்வருமாறு இடம்பெறுகிறது இப்னு சஃத் தாரிக் அல் குப்ராவில் 
زينب بنت رسول الله صلى الله عليه وسلم وأمها خديجة بنت خويلد بن أسد بن عبد العزى بن قصي وكانت أكبر بنات رسول الله صلى الله عليه وسلم تزوجها بن خالتها أبو العاص بن الربيع بن عبد العزى بن عبد شمس بن عبد مناف بن قصي قبل النبوة

…….ஜைனப் பிந்த் முஹம்மது(சல்) அவர்கள் தனது அத்தை மகனான அபு அல் ஆஸ் அவர்களை நபித்துவத்திற்கு முன்பு திருமணம் செய்தார்கள்……(நூல்: الطبقات الكبرى ابن سعد vol 8/4098)

    ஆக நபி(ஸல்) அவர்களது முதல் மகளான ஜைனப்(ரலி) அவர்களும் தனது 10 வயதிற்கு முன்பாகவே திருமணம் செய்விக்கப்பட்டார். 

அதுபோல் ருகைய்யா பின்த் முஹம்மது(சல்) நபி(சல்) அவர்களது இரண்டாவது மகளும் இவ்வாறே திருமணம் முடிக்கப்பட்டார்கள்:
ذكر الزبير بن بكار وغيره انها أكبر بناته صلّى الله عليه وسلم وصححه الجرجانى النسابة وقد تقدّم أن الاصح والذى عليه الاكثر أن زينب أكبرهنّ ولدت رقية ولرسول الله صلّى الله عليه وسلم ثلاث وثلاثون سنة
……..ருகைய்யா(ரலி) நபி(ஸல்) அவர்கள் 33 வயதாக இருக்கும் போது பிறந்தார். (நூல்:தாரிக் அல் ஹமீஸ் பாகம் 1, பக்கம்: 274)
மேலும் அவரது திருமணம் குறித்து பின்வருமாறு இடம்பெறுகிறது
رقية بنت رسول الله صلى الله عليه وسلم وأمها خديجة بنت خويلد بن أسد بن عبد العزى بن قصي كان تزوجها عتبة بن أبي لهب بن عبد المطلب قبل النبوة
        ருஹைய்யா நபி(ஸல்) அவர்களது மகள், கதீஜா(ரலி) பிந்த் குவைலித் அவரது தாயாராவார். உத்பா பின் அபிலஹபிற்கு நபி(சல்) அவர்களது நபித்துவத்திற்கு ( நபி(சல்) அவர்கள் 40 வயதில் நபித்துவம் பெற்றார்கள்) முன்பு திருமணம் முடிக்கப்பட்டார்.      (الطبقات الكبرى ابن سعد Vol:8/4099)
         ஆக நபி(சல்) அவர்களது முதல் இரு மகளும் ஆயிஷா(ரலி) அவர்களை போன்றே திருமணம் செய்யப்பட்டுள்ளார்கள். இதே போன்று உம்மு குல்தும் பின்த் முஹம்மது(சல்) அவர்களது மூன்றாம் மகளும் இப்படித்தான் திருமணம் செய்துள்ளார்கள். ஆக நபித்துவத்திற்கு முன்பு நிகழந்த பல திருமணங்கள் நபி(சல்) மற்றும் ஆயிஷா(ரலி) போன்ற திருமணங்கள்தான். மேலும் இத்தகைய ஒரு செயலை நபி(ஸல்) அவர்கள் மட்டுமே செய்திருந்தால் இதையே காரணமாக காட்டி இஸ்லாமிய எதிரிகளான குரைஷி இறைமறுப்பாளர்களும், யூதர்களும் நபி(ஸல்) அவர்களை விமர்சனம் செய்திருப்பார்கள். இங்கு ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டியது உள்ளது. அதாவது திருமணம் குறித்த இஸ்லாமிய நெறிகள் தோன்றுவதற்கு முன்பு அந்த சமூகத்தில் எந்த நடைமுறை இருந்ததோ அதுவே பின்பற்றப்பட்டது. அதனால்தான் இந்த திருமணம் எந்த விமர்சனத்திற்கும் ஆளாகவில்லை. மேலும் இந்த திருமணம் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மக்காவில் குரைஷியர்களின் கை மேலோங்கி இருந்த போதே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் அந்த தருணத்தில் நபி(ஸல்) அவர்கள் அபுதாலிப் அவர்களை இழந்திருந்த நேரம். மேலும் அக்கால நடைமுறைகள் பற்றி நாம் மேலுள்ள் இஸ்லாமிய ஆவணங்களில் காணப்படும் இத்தகைய திருமணம் குறித்த வரலாற்று ஆவணங்களை தேடிய போது பின்வரும் செய்தி நமக்கு கிடைத்தது ."WORLD CIVILIZATIONS by Philip J. Adler East Carolina University & Randall L. Pouwels University of Central Arkansas SIXTH EDITION P.No: 26 என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது
“Marriage was always arranged by the two families; something so important could never be left to chance attraction. A great many of the clay tablets dug up in Mesopotamian ruins deal with marital contracts. Some of them were made when the bride and groom were still babies. Such early arrangements were especially common for girls, who normally were considerably younger at marriage than their husbands. Marriage usually involved the exchange of bride money and a dowry. Bride money was a payment by the groom’s family to the bride’s family as specified in the marital contract. The dowry was also specified in the contract and was paid by the bride’s family to the groom when the couple began to live together”
மேலும் ஒரு பெண் பூப்பெய்துவதே வரலாறு நெடுக அவளது இசைவ்வுக்கான வயதாக கருத்தப்பட்டுவந்தது.
Age of Consent A Historical Overview Vern L. Bullough PhD, DSci, RN
            Age of Consent throughout history has usually coincided with the age of puberty although at sometimes it has been as early as seven. Early on age of consent was a familial or tribal matter and only became a legal one in the Greco-Roman period.
              இது போன்ற திருமணங்கள் அன்று மலிந்து காணப்பட்டதை இஸ்லாமிய ஆவணங்கள் அடிப்படையிலும் வரலாற்று ஆவணங்கள் அடிப்படையிலும் தெளிவாக அறிய முடிகிறது. இஸ்லாம் குறித்து அவதூறு பரப்பித்திரியும் மூடர்கள் நபி(சல்) அவர்கள் இத்தகைய திருமணம் செய்ததால் குழந்தை புணர்வாளர் என்று வாதிட்டால் நபி(ஸல்) அவர்களது காலத்தில் நபித்துவத்திற்கு முன்பிருந்து அதாவது கிபி 610 முன்பிருந்த ஒட்டு மொத்த அரபியே சமூகத்தையும் குழந்தை புணர்வாளர்கள் என்று கூறப்போகிறாரா... 

                ஒருவேலை இப்படியான ஒரு மூடத்தனத்தை இந்த அவதூறு பரப்பிகள் வேண்டுமானால் செய்வார்கள். ஆனால் அரபு சமூகம் மட்டும் இதில் விதிவிலக்கல்ல. இந்தியாவிலும் கூட 1891 வரை 10 வயது பெண்ணின் அனுமதியுடன் திருமணத்திற்கு பின் உறவு கொள்ளுவது அனுமதிக்கப்பட்டிருந்தது. 1891 ல் பிரிடடிஷ் இந்தியாவில் இசைவுக்கான வயது 10ல் இருந்து 12 ஆக மாற்றப்பட்டது. (Age of Consent Act 1891)(1) .12 வயதிற்கு முன்பாக அனுமதியுடனோ(திருமணம் மூலமாக) அனுமதி இல்லாமலோ உறவு கொண்டால் அது மைனர் பாலியல் துஷ்பிரயோகமாக கருத்தப்பட்டது. இந்த சட்டத்தை இயற்றும் போது ஆங்கிலேயேர்கள் வெள்ளை அல்லாத இனத்தவர்கள் முன்பே பூப்பெய்துவிடுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டதால்தான், 12 வயதாக நிர்ணயித்தனர். அன்று பிரிட்டனில் இசைவுக்கான வயது 16. மேலும் இத்தகைய பூபெய்தும் வயதின் உயர்வு கூட 19ம் நூற்றாண்டின் மத்திய காலத்திலேதான் நடைபெறத்துவங்கியதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Age at Menarche in Relation to Adult Height: The EPIC Study

In several countries, age at menarche remained stable or has even started to increase since the mid 20th century , whereas in other countries the downward trend still continues (2)
          அன்று 1891ல் இந்தியாவில் இந்த சட்டம் லோக்மானிய திளக் போன்றவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இன்றிலிருந்து சுமார் 150 வருடங்களுக்கு முந்தைய நிலை இப்படி இருக்க இன்றிலிருந்து 14 நுற்றாண்டுகளுக்கு முந்தைய நிலையை இன்றிருக்கும் காலக்கண்ணாடியால் பார்ப்பது எவ்வளவு அறியாமை என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். 

                    நபி(சல்) அவர்களது ஆயிஷா(ரலி) திருமணம் சிறுமி துஷ்பிரயோகம் என்று வாதிடும் மேற்குறிபிட்ட அவதூறு பரப்பிகள், தங்களின் வம்சாவளியினரும் ஃபீடோபைல்கள் என வாதிடப்போகிறார்களா ….. இஸ்லாம் மீது சேற்றை வாரி இறைக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

No comments:

Post a Comment