பக்கங்கள் செல்ல

Wednesday, May 6, 2020

நபி(ஸல்), ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம்




             இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கிய பங்குவகிப்பவை பால்ய விவாகம் குறித்ததாகவே இருக்கிறது. இவை அனைத்தும் தனித்த கட்டுரைகளாக, சில நேரங்களில் இஸ்லாமிய அறிஞர்களின் மறுப்புக்கு மறுப்பாக காணப்படுகிறது. இவை அனைத்தையும் தொகுத்து அதன் சாரத்தை விளக்கி விமர்சனத்தை உடைப்பதே நமது இந்த தொடரின் நோக்கம் ஆகும். இவர்களின் இந்த விமர்சனங்கள் யாவும் இரண்டு மையபொருளில் அமைந்துள்ளன. 

1.நபி(ஸல்) அவர்களது சிறுவயது ஆயிஷா(ரலி)யுடனான திருமணம்.

2.பால்ய விவாகம் குறித்த இஸ்லாமின் நிலைப்பாடு.

ஆக மேற்குறிபிட்ட இரண்டு மையப்பொருள்களின் அடிப்படையில் நமது இந்த கட்டுரை தொடர்களை இன்ஷா அல்லாஹ் காண்போம்.

                    நபி(சல்) அவர்களது ஆயிஷா(ரலி) உடனான பால்ய விவாகம் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் முன்பு நபி(ஸல்) அவர்களது இந்த திருமணம் குறித்து விளக்கமாக இடம்பெறும் செய்தியை காண்போம். இந்த திருமணம் குறித்து பல செய்திகள் ஹதீஸ்களில் தனிதனியாக துண்டுச்செய்திகளாக இடம் பெறுவதால் முஸ்னத் அஹ்மதின் இந்த செய்தி முழுமையாக ஒரே செய்தியாக அனைத்தையும் விளக்குவதால் இந்த செய்தியில் இருந்து நமது கட்டுரையை ஆரம்பம் செய்வோம். 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، وَيَحْيَى، قَالَا: لَمَّا هَلَكَتْ خَدِيجَةُ، جَاءَتْ خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ امْرَأَةُ عُثْمَانَ بْنِ مَظْعُونٍ، قَالَتْ: يَا رَسُولَ اللهِ أَلَا تَزَوَّجُ؟ قَالَ: " مَنْ؟ " قَالَتْ: إِنْ شِئْتَ بِكْرًا، وَإِنْ شِئْتَ ثَيِّبًا؟ قَالَ: " فَمَنِ الْبِكْرُ؟ " قَالَتْ: ابْنَةُ أَحَبِّ خَلْقِ اللهِ عَزَّ وَجَلَّ إِلَيْكَ عَائِشَةُ بِنْتُ أَبِي بَكْرٍ، قَالَ: " وَمَنِ الثَّيِّبُ؟ " قَالَتْ: سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ، آَمَنَتْ (3) بِكَ، وَاتَّبَعَتْكَ عَلَى مَا تَقُولُ "، قَالَ: " فَاذْهَبِي فَاذْكُرِيهِمَا عَلَيَّ "، فَدَخَلَتْ بَيْتَ أَبِي بَكْرٍ، فَقَالَتْ: يَا أُمَّ رُومَانَ مَاذَا أَدْخَلَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ مِنَ الْخَيْرِ وَالْبَرَكَةِ؟ قَالَتْ: وَمَا ذَاكَ؟ قَالَتْ: أَرْسَلَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْطُبُ عَلَيْهِ عَائِشَةَ، قَالَتْ: انْتَظِرِي أَبَا بَكْرٍ حَتَّى يَأْتِيَ، فَجَاءَ أَبُو بَكْرٍ، فَقَالَتْ: يَا أَبَا بَكْرٍ مَاذَا أَدْخَلَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ مِنَ الْخَيْرِ وَالْبَرَكَةِ؟ قَالَ: وَمَا ذَاكَ؟ قَالَتْ: أَرْسَلَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْطُبُ عَلَيْهِ عَائِشَةَ، قَالَ: وَهَلْ تَصْلُحُ لَهُ؟ إِنَّمَا هِيَ ابْنَةُ أَخِيهِ، فَرَجَعَتْ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ (1) ، قَالَ: " ارْجِعِي إِلَيْهِ فَقُولِي لَهُ: " أَنَا أَخُوكَ، وَأَنْتَ أَخِي فِي الْإِسْلَامِ، وَابْنَتُكَ تَصْلُحُ لِي "، فَرَجَعَتْ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، قَالَ: انْتَظِرِي وَخَرَجَ، قَالَتْ أُمُّ رُومَانَ: إِنَّ مُطْعِمَ بْنَ عَدِيٍّ قَدْ كَانَ ذَكَرَهَا عَلَى ابْنِهِ، فَوَاللهِ مَا وَعَدَ وَعْدًا قَطُّ، فَأَخْلَفَهُ لِأَبِي بَكْرٍ، فَدَخَلَ أَبُو بَكْرٍ عَلَى مُطْعِمِ بْنِ عَدِيٍّ وَعِنْدَهُ امْرَأَتُهُ أُمُّ الْفَتَى، فَقَالَتْ يَا ابْنَ أَبِي قُحَافَةَ لَعَلَّكَ مُصْبِئُ (2) صَاحِبَنَا مُدْخِلُهُ فِي دِينِكَ الَّذِي أَنْتَ عَلَيْهِ، إِنْ تَزَوَّجَ إِلَيْكَ، قَالَ أَبُو بَكْرٍ لِلْمُطْعِمِ بْنِ عَدِيٍّ: أَقَوْلُ هَذِهِ تَقُولُ، قَالَ: إِنَّهَا تَقُولُ ذَلِكَ، فَخَرَجَ مِنْ عِنْدِهِ، وَقَدْ أَذْهَبَ اللهُ عَزَّ وَجَلَّ مَا كَانَ فِي نَفْسِهِ مِنْ عِدَتِهِ الَّتِي وَعَدَهُ فَرَجَعَ، فَقَالَ لِخَوْلَةَ: ادْعِي لِي رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَتْهُ فَزَوَّجَهَا إِيَّاهُ وَعَائِشَةُ يَوْمَئِذٍ بِنْتُ سِتِّ سِنِينَ، ثُمَّ خَرَجَتْ فَدَخَلَتْ عَلَى سَوْدَةَ بِنْتِ زَمْعَةَ، فَقَالَتْ: مَاذَا أَدْخَلَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَيْكِ مِنَ الْخَيْرِ وَالْبَرَكَةِ؟ قَالَتْ: مَا ذَاكَ؟ قَالَتْ: أَرْسَلَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْطُبُكِ عَلَيْهِ، قَالَتْ: وَدِدْتُ ادْخُلِي إِلَى أَبِي فَاذْكُرِي ذَاكَ لَهُ، وَكَانَ شَيْخًا كَبِيرًا، قَدْ أَدْرَكَتْهُ (3) السِّنُّ، قَدْ تَخَلَّفَ عَنِ الْحَجِّ، فَدَخَلَتْ عَلَيْهِ، فَحَيَّتْهُ (4) بِتَحِيَّةِ الْجَاهِلِيَّةِ، فَقَالَ: مَنْ هَذِهِ؟ فَقَالَتْ: خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ، قَالَ: فَمَا شَأْنُكِ؟ قَالَتْ: أَرْسَلَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ أَخْطُبُ عَلَيْهِ سَوْدَةَ، قَالَ: كُفْءٌ (1) كَرِيمٌ، مَاذَا تَقُولُ صَاحِبَتُكِ؟ قَالَتْ: تُحِبُّ ذَاكَ، قَالَ: ادْعُهَا لِي فَدَعَتْهَا، فَقَالَ (2) : أَيْ بُنَيَّةُ إِنَّ هَذِهِ تَزْعُمْ أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَدْ أَرْسَلَ يَخْطُبُكِ، وَهُوَ كُفْءٌ (3) كَرِيمٌ، أَتُحِبِّينَ أَنْ أُزَوِّجَكِ بِهِ، قَالَتْ: نَعَمْ، قَالَ (4) : ادْعِيهِ لِي، فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ فَزَوَّجَهَا إِيَّاهُ، فَجَاءَهَا أَخُوهَا عَبْدُ بْنُ زَمْعَةَ مِنَ الْحَجِّ، فَجَعَلَ يَحْثِي عَلَى (5) رَأْسِهِ التُّرَابَ، فَقَالَ بَعْدَ أَنْ أَسْلَمَ: لَعَمْرُكَ (6) إِنِّي لَسَفِيهٌ يَوْمَ أَحْثِي فِي رَأْسِي التُّرَابَ أَنْ تَزَوَّجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ، قَالَتْ عَائِشَةُ: فَقَدِمْنَا الْمَدِينَةَ فَنَزَلْنَا فِي بَنِي الْحَارِثِ مِنَ (7) الْخَزْرَجِ فِي السُّنْحِ، قَالَتْ: فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ بَيْتَنَا وَاجْتَمَعَ إِلَيْهِ رِجَالٌ مِنَ الْأَنْصَارِ، وَنِسَاءٌ فَجَاءَتْ بِي (8) أُمِّي وَإِنِّي لَفِي (1) أُرْجُوحَةٍ بَيْنَ عَذْقَيْنِ تَرْجَحُ بِي، فَأَنْزَلَتْنِي مِنَ الْأُرْجُوحَةِ، وَلِي جُمَيْمَةٌ فَفَرَقَتْهَا، وَمَسَحَتْ وَجْهِي بِشَيْءٍ مِنْ مَاءٍ، ثُمَّ أَقْبَلَتْ تَقُودُنِي حَتَّى وَقَفَتْ بِي عِنْدَ الْبَابِ، وَإِنِّي لَأَنْهَجُ حَتَّى سَكَنَ مِنْ نَفْسِي، ثُمَّ دَخَلَتْ بِي فَإِذَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ عَلَى سَرِيرٍ فِي بَيْتِنَا، وَعِنْدَهُ رِجَالٌ وَنِسَاءٌ مِنَ الْأَنْصَارِ، فَأَجْلَسَتْنِي (2) فِي حِجْرِهِ، ثُمَّ قَالَتْ: هَؤُلَاءِ أَهْلُكِ فَبَارَكَ اللهُ لَكِ فِيهِمْ، وَبَارَكَ لَهُمْ فِيكِ، فَوَثَبَ الرِّجَالُ وَالنِّسَاءُ، فَخَرَجُوا وَبَنَى بِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِنَا، مَا نُحِرَتْ عَلَيَّ جَزُورٌ، وَلَا ذُبِحَتْ عَلَيَّ شَاةٌ، حَتَّى أَرْسَلَ إِلَيْنَا سَعْدُ بْنُ عُبَادَةَ بِجَفْنَةٍ كَانَ يُرْسِلُ بِهَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا دَارَ إِلَى نِسَائِهِ وَأَنَا يَوْمَئِذٍ بِنْتُ تِسْعِ سِنِينَ " (3) 
                 அபூ ஸலாமா அவர்கள் கூறியதாவது: கதீஜா ரலி இறந்தபின் ஹவ்லா பின்த் (ரலி) உஸ்மான் (ரலி) அவர்களது மனைவி அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் “நீங்கள் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “யாரை” என்று கேட்டார்கள். அதற்கு ஹவ்லா(ரலி) அவர்கள் “நீங்கள் கண்ணி பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது விதவையை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா? என்று வினவினார்கள். அதற்கு நபி(சல்) அவர்கள் :கண்ணிப்பெண் யார்? அதற்கு (ஹவ்லா(ரலி)) அவர்கள் “இவ்வுலகில் உங்களுக்கு பிரியமானவரான அபூபக்ர்(ரலி) அவர்களது மகள் ஆயிஷா(ரலி).” என்று பதிலளித்தார்கள். நபி(சல்) அவர்கள் விதவை யார்?” என வினவினார்கள். அதற்கு (ஹவ்லா(ரலி)) அவர்கள் “சவ்தா பிந்த் சம்ஆ(ரலி); அவர்கள் உங்களை நம்பிக்கை கொண்டு உங்களை பின்பற்றினார்கள் ” என்று பதிலளித்தார்கள்.. நபி(சல்) அவ்ர்கள் “ அப்படியானால் அவர்களிடம் என்னைபற்றி கூறுங்கள்” என்று கூறினார்கள்.  அதனால் அபூபகர்(ரலி) அவர்களது வீட்டிற்கு சென்று “உம்மு ரூமானே! என்ன ஒரு சிறந்த நன்மையையும், அருளையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான்! அதற்கு உம்மு ரூமான் அவர்கள் “என்ன அது?” என்று வினவினார்கள். அதற்கு ஹவ்லா(ரலி) அவர்கள் “ நபி(சல்) அவர்கள் ஆயிஷாவை பெண் கேட்டு அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினார்கள். அதற்கு உம்மூ ரூமான் அவர்கள் “அபூபக்ர்(ரலி) வரட்டும். பொறுத்திருங்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர்(ரலி) அவர்கள் வந்ததும், ஹவ்லா(ரலி) அவர்கள்” அபூபக்ரே! என்ன ஒரு சிறந்த நன்மையையும், அருளையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான்!” என்று கூறினார்கள் . அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் : “என்ன அது?” என்று வினவினார்கள். அதற்கு ஹவ்லா(ரலி) அவர்கள் “ நபி(சல்) அவர்கள் ஆயிஷாவை பெண் கேட்டு அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அபூபகர்(ரலி) அவர்கள் “அவருக்கு அவள் ஏற்றவளா? அவள் அவரது சகோதரனின் மகள் ஆயிறே?” என்று வினவினார்கள். பின்பு ஹவ்லா(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களிடம் சென்று இது குறித்து கூறினார்கள்” அதற்கு நபி)சல்) அவர்கள்,” நீங்கள் திருப்பிச்சென்று நீங்களும் நானும் இஸ்லாமிய கொள்கை சகோதரர்கள் தான். மேலும் உங்களது மகள் எனக்கு ஏற்றவள்தான் என்று கூறுவீராக” என்று கூறினார்கள். ஹவ்லா(ரலி) திரும்பிச் சென்று அபூபகர்(ரலி) அவர்களிடம் அதை கூறினார்கள். அதற்கு அபூபக்ர்(ரலி)” சற்று பொறுங்கள்” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்கள். உம்மூ ரூமான்(ரலி) கூறினார்கள், “முத்யீம் பின் அதீ அவர்கள் தனது மகனிற்கு அவளை நிச்சயித்து இருந்தார்கள். அல்லாஹ்வின் மீதனையாக அபூபகர்(ரலி) வாக்குறுதி கொடுத்துவிட்டு மீறமாட்டார்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர்(ரலி) அவர்கள் முத்யீம் பின் அதீ அவரது மனைவியுடன் இருக்கும் போது சென்றார்கள். அப்போது அவர்து மனைவி, உம்மு அல் சபி “ உங்களது மகளிற்கு எனது மகனை திருமணம செய்தால் அவனையும் உங்களது மார்கத்திற்கு மாற்றி அவனையும் ஸாபியீயாக மாற்றிவிடுவீர்கள்” என்று கூறினார்கள். அபுபகர்(ரலி) முத்யீம் அவர்களை பார்த்து, “இதற்கு என்ன பொருள்” என்று கேட்டார்கள். அதற்கு முத்யீம் அவர்களும் அதையே கூறிவிட்டார்கள். அபூபக்ர(ரலி) அவர்கள் தனது சத்தியத்தை திரும்பப்பெறும் பாதையை அல்லாஹ் எளிமையாக்கிவிட்டான் என்று எண்ணிக்கொண்டார்கள். எனவே அவர்கள் வீட்டிற்கு திரும்பி "அல்லாஹ்வின் தூதரை அழைத்து வாருங்கள்” என்று ஹவ்லா(ரலி)விடம் கூறினார்கள். ஹவ்லா(ரலி) அழைத்துவ்ந்த்தார்கள். ஆயிஷா(ரலி)வை அவர்களது ஆறாம் வயதில் நபி(சல்) அவர்களுக்கு திருமணம் முடித்து கொடுத்தார்கள். பிறகு(ஹவ்லா(ரலி) சவ்தா பிந்த் ஜம்ஆ(ரலி) அவர்களிடம் சென்று, “என்ன ஒரு சிறந்த நன்மையையும், அருளையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான்! என்று கூறினார்கள். அதற்கு(ஸவ்தா(ரலி)) அவர்கள், “அது என்ன?”, என்று வினவினார்கள். அதற்கு ஹவ்லா(ரலி) அவர்கள் “ நபி(சல்) அவர்கள் உங்களி பெண் கேட்டு அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினார்கள். அதற்கு (ஸவ்தா(ரலி)) அவர்கள் “நீங்கள் எனது தந்தையிடம் சென்று இதை கூற விரும்புகிறன்” என்று குறிபிட்டார்கள். அவரது வயது அவரை மிகவும் முதிர்ந்த பெரியவராய் காட்டியது. அவர் அப்போது அவர் ஹஜ்ஜிற்கு செல்ல வில்லை. அவரிடம் சென்று அறியாமை கால வழக்கப்படி முகமன் கூறினார்கள். அவர் “யாரது?” என்று கேட்டார். அதற்கு “ஹவ்லா பின்த் ஹாக்கிம்” என்று கூறினார்கள். “என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு ஹவ்லா(ரலி) “ஸவ்தாவை பெண் பேசிவர முஹம்மது பின் அப்துல்லாஹ் என்னை அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினார்கள். அதற்கு “சரியான தேர்வுதான்”, என்று கூறிவிட்டு “உனது தோழி என்ன கூறினார்” என்று வினவினார். அதற்கு “உங்களது விருப்பம்” என்று கூறிவிட்டார் என்று கூறினார். அவரை என்னிடம் வரச்சொல்லுங்கள் என்றதும் (ஹவ்லா) அழைத்தார்கள். “உன்னுடைய நிலை என்ன? முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப் அவர்கள் உன்னை பெண் கேட்டுள்ளார்கள்; அவர் சரியான தேர்வு, அவருக்கு உன்னை மனம் முடிக்கலாம் என்று விரும்புகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு “சரி” என்று (ஸவ்தா(ரலி)) அவர்கள் பதிலளித்தார்கள். “அவரை என்னிடம் அழைத்துவாருங்கள்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் அவர்களிடம் வந்து, அவருக்கு முகமன் கூறினார்கள். அவரை திருமணம் முடித்தார்கள். பிறகு ஹஜ்ஜில் இருந்து திரும்பிய அப்த் இப்னு ஜம்ஆ, அவரின் (ஸவ்தா(ரலி) சகோதரர் இதனை அறிந்து தனது தலையில் மண்ணை வாரி இறைத்துக்கொண்டார். அவர் இஸ்லாத்தை ஏற்ற பின் “அன்றைய நாளில் நபி(சல்) அவர்கள் சவ்தா பிந்த் ஜம்ஆவை திருமணம் செய்ததற்காக மடமையினால் எனது தலையில் மண்ணை வாரி இறைத்துக்கொண்டேன்” என்று கூறினார். ஆயிஷா(ரலி) கூறியதாவது, “பிறகு நாங்கள் மதீனாவிற்கு சென்ற பிறகு அல் ஜன்ஹ் (எனும் இடத்தில்) கஸ்ரஜின் பனீ அல் ஹாரீதாவின் குலத்தாரோடு தங்கவைக்கப்பட்டோம். மேலும் கூறினார்கள்: பிறகு நபி(சல்) அவர்கள் எங்களது வீட்டில் நுழைந்தார்கள். அங்கு அன்சாரிகளும் கூடினார்கள். மேலும் எனது தாயார், நானும் என் தோழிகள் சிலரும் இரண்டு மரங்களுக்கு இடையே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது எங்களிடம் வந்தார். என்னை ஊஞ்சலில் இருந்து அழைத்துச்சென்றார்கள். முடியை இரண்டாக வகுடெடுத்து சீவினார்கள். பிறகு என் முகத்தை நீரினால் கழுவினார்கள். பிறகு என்னை கதவின் அருகில் அழைத்துச்சென்றார்கள். எனக்கு மூச்சு வாங்கியது , அமைதி அடையும் வரை அங்கேயே நின்றிருந்தேன். பிறகு என்னை உள்ளே அழைத்து சென்றார்கள். அங்கு நபி(சல்) அவர்கள் எங்களது வீட்டின் கட்டிலில் அமர்ந்து இருந்தார்கள்., மேலும் அவர்களுடன் அன்சாரி ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். அவர்கள் என்னை எனது இருக்கையில் அமர்த்தினார்கள். அதன் பிறகு (எனது தாயார்) “இவர்கள்தான் உனது குடும்பத்தினர். அல்லாஹ் உன்னை அவர்களுக்கு அருளாகவும்,அவர்களை உனக்கு அருளாகவும் ஆக்குவானாக” என்று கூறினார்கள், பிறகு அங்கிருந்த அன்சாரி ஆண்களும் பெண்களும் எழுந்து சென்றுவிட்டனர். எங்களுடைய இந்த வீட்டில்தான நபி(சல்) அவர்கள் என்னோடு வீடு கூடினார்கள். ஒட்டகமோ ஆடோ எனக்காக அறுக்கப்படவில்லை. பிறகு சஃத் பின் உபாதா எங்களுக்கு ஒரு உணவுதட்டை அனுப்பிவைத்தார்கள், என்றும் நபி(சல்) அவர்கள் மனைவியர்களுடன் இருக்கும் போது அனுப்பிவைப்பார்களே அது போல. அப்போது எனக்கு வயது ஒன்பது ஆகும்.( முஸ்னது அஹ்மத் 25769)
மேற்குறிபிட்ட செய்தியை கவனித்தோம் என்றால் பின்வரும் புரிதல்களை நாம் பெறமுடியும்.

1.நபி(சல்) ஆயிஷா(ரலி) அவர்களது பால்ய திருமணம் என்பது அவர்கள் மட்டுமே செய்த ஒரு திருமணம் அல்ல. அது முன்பே இருந்த நடைமுறைதான். முன்பே ஆயிஷா(ரலி) அவர்கள் முத்யீம் பின் அதீ அவர்களது மகனான ஜுபைர் பின் முத்யீம்(ரலி) (ஜுபைர் பின் முத்யீம்(ரலி பின்னாளில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.) அவர்களுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

2.ஆயிஷா(ரலி)ன் தந்தை அபூபக்ர்(ரலி) அவர்கள் மனமுவந்தே இந்த திருமணத்தை செய்வித்தார்கள். நபி(சல்) அவர்களது வற்புறுத்தல் இதற்கு காரணமல்ல. அல்லாஹ் முத்யீம் அவர்களிடம் செய்த சத்தியத்தை முறிக்க வாய்பளித்துவிட்டான் என்று அபூபக்ர்(ரலி) அவர்களின் எண்ணம் அதை பிரதிபலிக்கிறது. 

        நாம் மேற்குறிபிட்ட நபிமொழியானது மேற்குறிபிட்ட புரிதல்களை தருகிறது. இனி நபி(சல்)- ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் குறித்து இஸ்லாம் குறித்து அவதூறு பரப்புவதையே பிழைப்பாக கொண்டிருக்கும் சில வலைத்தளங்களில் வைக்கப்படும் அரைவேக்காட்டு விமர்சனங்களையும் அதன் விளக்கத்தையும் இன்ஷா அல்லாஹ் காண்போம்.

No comments:

Post a Comment