பக்கங்கள் செல்ல

Wednesday, May 6, 2020

ஆயிஷா(ரலி)யும் அவரது பொம்மைகளும்


       நபி(ஸல்)- ஆயிஷா(ரலி) திருமணம் குறித்த அடுத்த விமர்சனம் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) பூப்பெயவதற்கு முன்பே புணர்ந்தார்கள் என்பதுதான். ஆனால் சென்ற தொடரில் ஆயிஷா(ரலி) அவர்களது வயது குறித்தும் அவர்கள் பூப்பெய்திய பிறகுதான் வீடு கூடினார்கள் என்பதும் தெளிவான வரலாற்று அவணங்களை முன்வைத்து விளக்கப்பட்டுவிட்டது. 

      இந்த விஷயத்தில் நேரடியான எந்த ஆதாரத்தையும் இதுவரை இந்த அவதூறு பரப்பிகள் எடுத்து வைக்கவில்லை. அவர்கள் தங்களது ஆவணமாக முன்வைப்பது 

1.ஆயிஷா(ரலி) அவர்கள் திருமணத்திற்கு பிறகும் பொம்மைகளை வைத்து விளையாடினார்கள் என்பதும் அதற்கான் இப்னு ஹஜர் அவர்களது விளக்கமும்தான்.
2.எதியோப்பியர்கள் விளையாட்டை ஆயிஷா(ரலி) கண்டு ரசித்த சம்பவத்தையும்,
3.ஆயிஷா(ரலி) தொடர்பான அவதூறு சம்பவத்தையும்,
4.ஆயிஷா(ரலி) இறுதி ஹஜ்ஜில் தான் பூப்பெதினார்கள் கற்பனைவாதமும் தான் இவர்களின் கைச்சரக்கு. அவற்றை ஒவ்வொன்றாக இன்ஷா அல்லாஹ் காண்போம், அதன் விளக்கத்தையும் காண்போம்.…
ஆதாரம் 1:

புகாரி 6130. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

        நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேள். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோரிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

முஸ்லிம் 2780. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

          நான் ஏழு வயதுடையவளாக இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள்.

  மேற்குறிபிட்ட இரண்டு செய்திகளின் அடிப்படையில் ஆயிஷா (ரலி) பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததால் அவர்கள் பூபெய்தவரில்லை என வாதிடுகின்றனர்.

      அவர்கள் இந்த விமர்சனத்தை வளுவாக பதிய மேலும் ஒரு காரணமும் உண்டு. அதாவது ஆயிஷா(ரலி) குறித்த புகாரி ஹதீஸ் எண் 6130 வை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது விளக்க நூலான ஃபத்ஹுல் பாரியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
قال الخطابي في هذا الحديث أن اللعب بالبنات ليس كالتلهي بسائر الصور التي جاء فيها الوعيد وإنما أرخص لعائشة فيها لأنها إذ ذاك كانت غير بالغ قلت وفي الجزم به نظر لكنه محتمل لأن عائشة كانت في غزوة خيبر بنت أربع عشرة سنة إما أكملتها أو جاوزتها أو قاربتها وأما في غزوة تبوك فكانت قد بلغت قطعا فيترجح رواية من قال في خيبر ويجمع بما قال الخطابي لأن ذلك أولى من التعارض

அல் கத்தாபி கூறினார்கள்: “ இந்த ஹதீஸில் கூறப்படும் பொம்மைகளை வைத்து விளையாடுவது என்பது தடுக்கப்பட்ட மற்ற உருவங்களை பயன்படுத்துவது போன்றது அன்று. ஆயிஷா(ரலி) அவர்கள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது அவர் பருவ வயதை அடையாதவர் என்பதால்தான்”. என்னை பொறுத்தவரை , நேராக கூறுவது என்றால் அது கேள்விக்குறியதுதான். ஆயினும் கைபர் யுத்ததின் போது ஆயிஷா(ரலி) பருவ வயதை அடையாமலிருக்கவும் சாத்தியம் உண்டு. அப்போது ஆயிஷா(ரலி) அவர்களுக்கு சற்று ஏறக்குறைய 14 வயதிருக்கும். தபூக் யுத்ததின் போது அவர்கள் நிச்சயம் பருவமடைந்துவிட்டார்.கைபர் யுத்ததின் போது இது நடந்தது என்று கூறப்பட்ட அறிவிப்புகளே ஏற்புடையவையாகும். மேலும் இதில் முரண்பாடுகளை தீர்க்க கத்தாபியின் கருத்தே ஏற்புடையது. கருத்தொற்றுமை முரண்பாடுகளை விட சிறந்தது. (ஃபத்ஹுல் பாரி 10/527)
    ஆனால் மேற்குறிபிட்ட இந்த செய்தி முழுமையானது அல்ல. முழுமையானதை இங்கு பதியும் படசத்தில் இவர்களது கருத்து அடிபட்டுவிடும் என்பதற்காகத்தான் இவர்கள் இப்னு ஹஜர் அவர்களது ஆய்வின் தங்களுக்கு சாதகமான முடிவை மட்டும் பதிகிறார்கள். இதோ விடுபட்ட முற்பகுதி: 
لْحَدِيثِ عَلَى جَوَازِ اتِّخَاذِ صُوَرِ الْبَنَاتِ وَاللَّعِبِ مِنْ أَجْلِ لَعِبِ الْبَنَاتِ بِهِنَّ وَخُصَّ ذَلِكَ مِنْ عُمُومِ النَّهْيِ عَنِ اتِّخَاذِ الصُّوَرِ وَبِهِ جَزَمَ عِيَاضٌ وَنَقَلَهُ عَنِ الْجُمْهُورِ وَأَنَّهُمْ أَجَازُوا بَيْعَ اللَّعِبِ لِلْبَنَاتِ لِتَدْرِيبِهِنَّ مِنْ صِغَرِهِنَّ عَلَى أَمْرِ بُيُوتِهِنَّ وَأَوْلَادِهِنَّ قَالَ وَذَهَبَ بَعضهم إِلَى أَنه مَنْسُوخ واليه مَال بن بطال وَحكى عَن بن أَبِي زَيْدٍ عَنْ مَالِكٍ أَنَّهُ كَرِهَ أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ لِابْنَتِهِ الصُّوَرَ وَمِنْ ثَمَّ رَجَّحَ الدَّاودِيّ أَنه مَنْسُوخ وَقد ترْجم بن حِبَّانَ الْإِبَاحَةَ لِصِغَارِ النِّسَاءِ اللَّعِبَ بِاللِّعَبِ وَتَرْجَمَ لَهُ النَّسَائِيُّ إِبَاحَةَ الرَّجُلِ لِزَوْجَتِهِ اللَّعِبَ بِالْبَنَاتِ فَلَمْ يُقَيَّدْ بِالصِّغَرِ وَفِيهِ نَظَرٌ قَالَ الْبَيْهَقِيُّ بَعْدَ تَخْرِيجِهِ ثَبَتَ النَّهْيُ عَنِ اتِّخَاذِ الصُّوَرِ فَيُحْمَلُ عَلَى أَنَّ الرُّخْصَةَ لِعَائِشَةَ فِي ذَلِكَ كَانَ قبل التَّحْرِيم وَبِه جزم بن الْجَوْزِيِّ وَقَالَ الْمُنْذِرِيُّ إِنْ كَانَتِ اللُّعَبُ كَالصُّورَةِ فَهُوَ قَبْلَ التَّحْرِيمِ وَإِلَّا فَقَدْ يُسَمَّى مَا لَيْسَ بِصُورَةٍ لُعْبَةً وَبِهَذَا جَزَمَ الْحَلِيمِيُّ فَقَالَ إِنْ كَانَتْ صُورَةٌ كَالْوَثَنِ لَمْ يَجُزْ وَإِلَّا جَازَ وَقِيلَ مَعْنَى الْحَدِيثِ اللَّعِبُ مَعَ الْبَنَاتِ أَيِ الْجَوَارِي وَالْبَاءُ هُنَا بِمَعْنَى مَعَ حَكَاهُ بن التِّينِ عَنِ الدَّاوُدِيِّ وَرَدَّهُ قُلْتُ وَيَرُدُّهُ مَا أخرجه بن عُيَيْنَةَ فِي الْجَامِعِ مِنْ رِوَايَةَ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيِّ عَنْهُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ فِي هَذَا الْحَدِيثِ وَكُنَّ جِوَارِي يَأْتِينَ فَيَلْعَبْنَ بِهَا مَعِيَ وَفِي رِوَايَةِ جَرِيرٍ عَنْ هِشَامٍ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ وَهُنَّ اللُّعَبُ أَخْرَجَهُ أَبُو عَوَانَةَ وَغَيْرُهُ وَأَخْرَجَ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ عَائِشَةَ قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ فَذَكَرَ الْحَدِيثَ فِي هَتْكِهِ السِّتْرَ الَّذِي نَصَبَتْهُ عَلَى بَابِهَا قَالَتْ فَكَشَفَ نَاحِيَةَ السِّتْرِ عَلَى بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ قَالَتْ بَنَاتِي قَالَتْ وَرَأَى فِيهَا فَرَسًا مَرْبُوطًا لَهُ جَنَاحَانِ فَقَالَ مَا هَذَا قُلْتُ فَرَسٌ قَالَ فَرَسٌ لَهُ جَنَاحَانِ قُلْتُ أَلَمْ تَسْمَعْ أَنَّهُ كَانَ لِسُلَيْمَانَ خَيْلٌ لَهَا أَجْنِحَةٌ فَضَحِكَ فَهَذَا صَرِيحٌ فِي أَنَّ الْمُرَادَ بِاللُّعَبِ غَيْرُ الْآدَمِيَّاتِ

"இந்த ஹதீஸ் தடுக்கப்பட்ட உருவங்கள் மற்றும் படங்களை உருவாக்கி அதனை கொண்டு இளம் பெண்களை வீட்டு பொறுப்புகளையும, குழந்தைகள் பராமரிப்பையும் பயிற்றுவிக்க பயன்படுத்தலாம் என்பதற்கான அனுமதியாக கருத்தப்படுகிறது. 
இவ்வாறு இயாள் . அவர்கள் தனது சமூகத்திடம் தீர்பளித்துள்ளார்: இளம் பெண்கள் வீட்டு நிர்வாகத்தை கற்கவும், குழந்தை வளர்ப்பை அறியவும் இத்தகைய பொம்மைகளைசெய்து விற்கலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளார்கள்.
மேலும் தஹபீ இந்த சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்று கூறுகிறார்கள்.
இப்னு பத்தால் அவர்களது கருத்து:, இப்னு ஜியாத் பின்வருமாறு கூறுகிறார்: இமாம் மாலிக் அவர்கள் தனது மகள்களை இவ்வாறு பொம்மைகளை வழங்கி விளையாட அனுமதித்த நபரை கண்டித்தார்கள். மேலும் இந்த சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்றும் கூறினார்கள்.
இப்னு ஹிப்பானின் கருத்தின் படி இளம் பெண்கள் கற்பதற்காக பொம்மைகளை பயன்படுத்தலாம்.
அந்நஸயீ கருத்தின் படி: ஒரு மனிதர் தனது மனைவியை இத்தகைய பொம்மைகளை கொண்டு விளையாட அனுமதிக்கலாம். அவர் அதை சிறுமிகளுக்கு மட்டுமே ஆனது என்று கொள்ளவில்லை.(அது பொதுவாக அனைவருக்கும் உரியது).
பைஹகீயின் கருத்தின் படி: இது தடை செய்யப்படுவதற்கு முன்பானது ஆகும். ஆகவே அன்று அவர் பொம்மைகளை வைத்து விளையாட அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுவே இப்னு ஜவ்ஸீ அவர்களது கருத்தாகும்.
அல் முந்தீர் அவர்களது கருத்தின் படி: அந்த பொம்மை தடுக்கப்பட்ட உருவமாக இருந்தால் இந்த சம்பவம் தடைக்கு முன்பானதாக இருக்கும். அப்படி இல்லையென்றார் அந்த உருவம் தடுக்கப்பட்டதாக இருக்காது. மேலும் கூறினார்கள் அது சிலை போல் இருந்தால் தடுக்கப்பட்டது. இல்லையெறால் அனுமதிக்கப்பட்டது.......
( மேற்குறிபிட்ட கருத்துக்களை எல்லாம் பதிவிட்டிவிட்டு அபூதாவூத்தின் பின்வரும் ஹதீஸ் குறித்து இப்னு ஹஜர் பேசுகிறார்)
முஃமீன்களின் அன்னை ஆயிஷா(ரலி) கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தபூக்கில் இருந்தோ, கைபரில்(அறிவிப்பாளர் சந்தேகத்துடன் அறிவிக்கிறார்) இருந்தோ வந்த போது காற்றடித்து எனது கிடங்கினில் தொங்கவிடப்பட்ட திரைச்சீலை விலகியது. அங்கிருக்கும் பொம்மைகள் தெரிந்தன. (நபி(சல்)) அவர்கள் "இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு "அது குதிரை" என்று பதிலளித்தார்கள் . (நபி(சல்)) அவர்கள் " அதிலிருப்பது என்ன?” என்று கேட்டார்கள். “அவை இரண்டு இறக்கைகள்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர்கள் " என்ன இரண்டு இறக்கைகள் இருக்கும் குதிரையா! “என்று வினவினார்கள். அதற்கு(ஆயிஷா(ரலி)) அவர்கள் " ஏன் சூலைமான்(அலை) அவர்களிடம் இரண்டு இறக்கை இருக்கும் குதிரை இருந்ததை நீங்கள் அறிந்ததில்லையா?” என்றார்கள். மேலும் : இதை கேட்டதும் நபி(சல்) அவர்கள் தனது கடைவாய்பல் தெரியும் அளவிற்கு சிரித்தார்கள் என்று (ஆயிஷா(ரலி) கூறினார்கள். (அபூதாவுத் 4934) இதில் தெளிவாக இருக்கிறது மனிதன்னாலாத உருவ பொம்மைகளையும் அவர்கள் வைத்திருந்தது.
இவை அனைத்தையும் பதிவிட்ட பிறகு மேற்குறிபிட்ட அறிஞர்களின் கருத்துக்களை ஒன்றினைக்கும் பொருட்டு அல் கத்தாபி அவர்களது கருத்தை முன்வைக்கிறார்கள் இப்னு ஹஜர் அவர்கள்.)
அல் கத்தாபி கூறினார்கள்: “ இந்த ஹதீஸில் கூறப்படும் பொம்மைகளை வைத்து விளையாடுவது என்பது தடுக்கப்பட்ட மற்ற உருவங்களை பயன்படுத்துவது போன்றது அன்று. ஆயிஷா(ரலி) அவர்கள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது அவர் பருவ வயதை அடையாதவர் என்பதால்தான்”. என்னை பொறுத்தவரை , நேராக கூறுவது என்றால் அது கேள்விக்குறியதுதான். ஆயினும் கைபர் யுத்ததின் போது ஆயிஷா(ரலி) பருவ வயதை அடையாமலிருக்கவும் சாத்தியம் உண்டு. அப்போது ஆயிஷா(ரலி) அவர்களுக்கு சற்று ஏறக்குறைய 14 வயதிருக்கும். தபூக் யுத்ததின் போது அவர்கள் நிச்சயம் பருவமடைந்துவிட்டார்.கைபர் யுத்ததின் போது இது நடந்தது என்று கூறப்பட்ட அறிவிப்புகளே ஏற்புடையவையாகும். மேலும் இதில் முரண்பாடுகளை தீர்க்க கத்தாபியின் கருத்தே ஏற்புடையது. கருத்தொற்றுமை முரண்பாடுகளை விட சிறந்தது. (ஃபத்ஹுல் பாரி 10/527)

மேலும் காதி இயாத் அவர்களது 7/447 إكمال المعلم بفوائد مسلم என்ற நூலில் முஸ்லிம் ஹதீஸ் எண் 2440/2780 இன் விளக்கமாக இந்த கருத்தை முன்வைத்துள்ளார்: 
كنت ألعب بالبنات عند رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : فيه جواز اللعب بهن، وتخصيصهم من الصور المنهى
عنها لهذا الحديث، ولا فى ذلك من تدريب النساء فى

பெண்களுக்கு கற்பிப்பதற்காக , தடுக்கப்பட்டவை என்று ஹதீஸ்களில் ஒதுக்கப்பட்ட உருவங்களை வைத்து அவர்கள் விளையாட அனுமத்திக்கலாம்
ஆனால் மேற்குறிபிட்ட இப்னு ஹஜர் அவர்களது தீர்வினில் தவறுகள் உள்ளன. 
1.ஆயிஷா(ரலி) அவர்கள் கைபர் வரை பருவம் அடையவில்லை என்பதற்கும் அவர்கள் தபூக்கிற்கு பிறகு பருவம் அடைந்தார்கள் என்பதற்கும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இன்று வரை பெண்கள் 9 முதல் 14 வயதிற்குள்ளாக பூபெய்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நாம் முன்பே கண்ட அபூதாவுத் அறிவிப்பான ஆயிஷா(ரலி) பருவம் அடைந்த பின்பே வீடு கூடினார்கள் என்பதற்கும், ஆயிஷா(ரலி) பொதுமை படித்திய 9 வயது பருவம் எய்தல் என்ற ஹதீஸிற்கும் நேர் முரணானது. மேலும் இந்த ஹதீஸ் பற்றி விளக்க முற்பட்ட ஹாபிழ் இப்னு ஹஜர் தனது தல்கீஷ் அல் ஹபீரில் (3/399 ஹதீஸ் எண்: 1695) இன் விளக்கமாக பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
وَرَدَ قَوْلُهَا: الْخَيْلُ ذَوَاتُ الْأَجْنِحَةِ فِي حَدِيثٍ آخَرَ لِعَائِشَةَ أَيْضًا: أَنَّهَا كَانَتْ تَلْعَبُ بِذَلِكَ وَهِيَ شَابَّةٌ، لَمَّا دَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي قُدُومِهِ مِنْ غُزَاةِ، أَخْرَجَهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيُّ وَالْبَيْهَقِيُّ. 
ஆயிஷா(ரலி) அவர்களது வார்த்தையான இறக்கையுடன் கூடிய குதிரை மற்றுமோர் ஹதீஸில் இடம் பெறுகிறது. அவர் இளம் பெண்ணாக, நபி(சல்) அவர்கள் ஒரு போரில் இருந்துவரும் போது விளையாடிக்கொண்டிருந்தார். மேலும் இந்த ஹதீஸ் அபூதாவுதிலும், நஸயீலும், பைஹகீயிலும் இடம் பெறுகிறது.
(நூல்:தல்கீஷ் அல் ஹபீரில் 3/399, ஹதீஸ் எண்: 1695)
    ஆக அவரே அல்கத்தாபியின் கருத்தில் உறுதியற்ற நிலையில் இருந்ததால்தான் ஃபத்ஹுல் பாரியில் இப்படி கூறுகிறார் ஹதீஸின் விளக்கத்தில் " என்னை பொறுத்தவரை , நேராக கூறுவது என்றால் அது கேள்விக்குறியதுதான்.” என்று.

2.அல் கத்தாபியின் கருத்தில் கூறுவதற்காக, ஆயிஷா(ரலி) அவர்களது மேற்குறிபிட்ட சம்பவம் கைபரின் போது நடந்தது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மாறாக இந்த சம்பவம் தபூக் யுத்தத்திற்கு பிறகு நடந்தது என்பதற்கு ஹதீஸ்கள் உண்டு. பைஹகீயின் சுனன் அல் குப்ராவில்(20982) தெளிவாக நபி(சல்) அவர்கள் தபூக்கில் இருந்துதான் வந்தார்கள் என்று இடம் பெறுகிறது
أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ الْمُزَكِّي , أنبأ أَبُو الْحَسَنِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبْدُوسٍ , ثنا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ , ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ , أنبأ يَحْيَى بْنُ أَيُّوبَ , حَدَّثَنِي عُمَارَةُ بْنُ غَزِيَّةَ , أَنَّ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ التَّيْمِيَّ , حَدَّثَهُ , عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ عَائِشَةَ , رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ وَقَدْ نَصَبْتُ عَلَى بَابِ حُجْرَتِي عَبَاءَةً , وَعَلَى عُرْضِ بَيْتِي سِتْرًا أَرْمِنِيًّا , فَدَخَلَ الْبَيْتَ فَلَمَّا رَآهُ قَالَ: " مَا لِي يَا عَائِشَةُ وَالدُّنْيَا؟ " , فَهَتَكَ السِّتْرَ حَتَّى وَقَعَ بِالْأَرْضِ , وَفِي سَهْوَتِهَا سِتْرٌ , فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ , فَقَالَ: " مَا هَذَا يَا عَائِشَةُ؟ " , قَالَتْ: بَنَاتِي , قَالَتْ: وَرَأَى بَيْنَ طُوبِهَا فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رُقَعٍ , قَالَ: " فَمَا هَذَا الَّذِي أَرَى فِي وَسَطِهِنَّ؟ " , قَالَتْ: فَرَسٌ , قَالَ: " مَا هَذَا الَّذِي عَلَيْهِ؟ " , قَالَتْ: جَنَاحَانِ , قَالَ: " فَرَسٌ لَهُ جَنَاحَانِ؟ " , قَالَتْ: أَوَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ بْنِ دَاوُدَ خَيْلًا لَهُ أَجْنِحَةٌ؟ قَالَتْ: فَضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ 
ஆக ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களது இந்த ஹதீஸின் புரிதலில் தவறு இருக்கிறது.

நாம் மிக சுருக்கமாக இந்த விளக்கத்தை புரிய வேண்டுமானால் இந்த ஹதீஸ் குறித்து மூன்று கருத்துக்கள் நிலவுகின்றன.
1.இது அனைவருக்குமானது. ஆகுமாக்கப்பட்டது கற்பித்தல் என்ற நோக்கத்திற்காக. இந்த கருத்தை காதி இயாள், நஸயீ போன்றவர்கள் முன்வைக்கிறார்கள். இந்த கருத்தை முன்வைத்துதான் தனது வாதத்தையே ஹாபிள் இப்னு ஹஜர் ஆரம்பிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
2. இந்த அனுமதி மாற்றப்பட்டது என்ற கருத்து. இதனை தஹபீ இப்னு பத்தால், பைஹகீ, இப்னு ஜவ்ஸீ போன்றவர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால் இஸ்லாமின் இறுதியில்தான் தபூக் யுத்தம் நடை பெற்றது ஆக இந்த அனுமதி இஸ்லாமின் இறுதி காலம் வரை இருந்தது என்பதை அறிய முடிகிறது. அதனால் இந்த முடிவு தள்ளப்படுகிறது. மேலும் ஆயிஷா(ரலி) சிறுமி என்றால் இவர்களின் இந்த வாதம் தேவையற்றது. பருவம் அடையாதவரின் குற்றங்கள் கணக்கிடப்படாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
3.இறுதியாக ஆயிஷா(ரலி) சிறுமி என்பதால் இந்த அனுமதி பொருந்தும். என்ற வாதம். இதுவும் பலவீனமான கருத்துதான் ஆயிஷா(ரலி) தபூக் யுத்ததின் போது 15 வயதுடையவர் எனும் போது பருவமடைந்தவருக்கும் இந்த அனுமதி இருப்பதை அறிய முடிகிறது. ஆக ஹாபிழ் இப்னு ஹஜரின் அல் கத்தாபியிர்கு ஒத்தமைந்த கருத்தும் தள்ளப்படுகிறது,
         ஆக இன்றும் இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் கற்பதற்காக உருவங்களை பயன்படுத்தலாம் என்ற விதியை அறிஞர்கள் ஏற்றுள்ளனர். மேலும் பொம்மைகளை கொண்டு விளையாடுவது பெண்களுக்கு விருப்பமான ஒரு விளையாட்டு. இன்றும் பூப்பெய்த பெண்களுக்கும், இளம் பெண்களுக்குமான மாபெரும் உலகளாவிய பொம்மைக்கான சந்தை உண்டு. மேலும் பார்பீ போன்ற பொம்மைகள் இளம் பெண்களை குறிவைத்து தயாரிக்கப்படுவது நாம் அறிந்தது. ஒரு வேலை கட்டுரையாளர் மனித சஞ்சாரம் இல்லாத தனித்தீவில் வாழ்கிறார் போலும். 

              அவதூறு பரப்புபவர்களின் வாதம் ஆயிஷா(ரலி) பருவம் எய்தாதவர் என்பதால் பொம்மையை கொண்டு விளையாட அனுமதி வழங்கப்பட்டது. ஆகவே அவர் பருவமடையவில்லை. நமது வாதம் இந்த அனுமதி அனைவருக்குமானது. ஆக இந்த சட்ட அனுமதியை கொண்டு பருவம் எய்தினார் எய்தவில்லை என்பதை அறிய முடியாது. தெளிவாக சென்ற தொடரில் அவர் வீடு கூடும் போது பருவம் எய்திவிட்டார் என்பதற்கு ஆதாரம் பதியப்பட்டுள்ளது. அதற்கு மறுப்பு கூறுபவரிடம் சட்ட ஆய்வுகளை விட ஆயிஷா(ரலி) பருமடையவில்லை என்ற நேரடி ஆதாரத்தையே நாம் எதிர் பார்க்கிறோம்.

No comments:

Post a Comment