பக்கங்கள் செல்ல

Friday, July 6, 2018

ஆண்மை பலத்திற்கு லேகியம் தந்த ஜிப்ரீல்(அலை): ஓர் ஆய்வு

ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..............

     இஸ்லாமிய ஆய்வாளர்களாக தங்களை காட்டி கொள்ளும் பல மிசனரிகளும் நாத்தீக கோமாளிகளும் தொடர்ச்சியாக ஒரு குற்றச்சாட்டை நபி(சல்) அவர்கள் மீது கூறிவருகின்றனர். அதாவது ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(சல்) அவர்களின் ஆண்மை விருத்திக்கு லேகியம் கொடுத்ததாக தொடர்ந்து உளறி வருகின்றனர். அவர்கள் இது குறித்த எந்த விரிவான ஆதாரங்களையும் பதிவதில்லை. ஆயினும் ஆங்கில வளைத்தளங்களும் இது குறித்து தொடர்ந்து பரப்பி வருவதால் இந்த செய்தியின் நிலையை சற்று விரிவாகவே கண்டு விடுவோம் இன்ஷா அல்லாஹ்.

செய்தி 1: இப்னு சஃத் பாகம் 1 பக்கம் எண்: 321-322

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

               ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒரு ஜாடி கொண்டுவந்தார்கள். அதிலிருந்து நான் உட்கொண்டேன். அதனால் நாற்பது பேரின் ஆண்மை பலம் எனக்கு கொடுக்கப்பட்டது.

அறிவிப்பாளர் தொடர்:

நபி(சல்) ---> சஃப்வான் இப்னு சுலைம்(தாபியி) (மரணம் 132 AH) --->உசாமா இப்னு ஜைத்--> உபைதுல்லாஹ் இப்னு மூஸா (தபா தாபியி) (பிறப்பு 128 AH)---> இப்னு சாஃத்

         முதலில் இந்த செய்தி அறிவிப்பாளர் முறிந்த அறிவிப்பாகும். அதாவது நபி(சல்) அவர்களிடம் இருந்து எந்த நபித்தோழரும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை. நேரடியாக தாபியி அறிவிக்கிறார். ஆக இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.

            அடுத்ததாக உபைதுல்லாஹ் இப்னு மூஸா (தபா தாபியி) அவர்களுக்கு அறிவிக்கும் உசாமா பின் ஜைத் அவர்கள் நினைவாற்றல் குறைபாடு உடையவர் என இப்னு ஹஜரால் விமர்சிக்கப்பட்டவர்.

            ஆக இரண்டு குறைபாடுகளுடன் இந்த செய்தி மறுக்கப்படும் பலவீனமான நிலையில் உள்ள செய்தியாகும்.


செய்தி 2: இப்னு சஃத் பாகம் 1: ப.எண் 321-322



             முஜாஹித்(ரஹ்) அவர்கள் குறிபிட்டார்கள்: நபி(சல்) அவர்களுக்கு நாற்பது பேரின் பலம் கொடுக்கப்பட்டிருந்தது. சுவர்க்கவாசிகளுக்கு என்பது பேரின் பலம் கொடுக்கப்படும்.

அறிவிப்பாளர் தொடர்:

 முஜாஹித்(ரஹ்) ---> லைத் பின் அபி ரக்கியா--> இஸ்ராயீல் இப்னு யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாக் ---> மாலிக் இப்னு இஸ்மாயீல் அபூ கஸ்ஸான் --> இப்னு சாஃத்

             முதலில் இந்த செய்தி அறிவிப்பாளர் முறிந்த அறிவிப்பாகும். அதாவது நபி(சல்) அவர்களிடம் இருந்து எந்த நபித்தோழரும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை. நேரடியாக தாபியி அறிவிக்கிறார். அதுவும் அவரது கருத்தாக இடம்பெறுகிறது. ஆக இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.

           அடுத்ததாக முஜாஹித்(ரஹ்) அவர்களிடம் இருந்து செய்தியை பெறும் லைத் பின் அபி ரக்கியா யாரென்று அறியப்படாதவர். இவரது அறிவிப்புகள் சஹீஹான அறிவிப்புகளால் வழுசேர்க்கப்படாதவரை ஏற்கும் நிலையை அடையாது என ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார். ஆக இந்த செய்தியும் பலவீனமான செய்திதான்.


செய்தி 3: இப்னு சஃத் பாகம் 1: பக்கம் 322


தாவஸ்(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
                நபி(சல்) அவர்களுக்கு நாற்பது பேரின் ஆண்மை பலம் கொடுக்கப்பட்டிருந்தது.


                இதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் வழுவானவர்களாக இருந்தாலும் இந்த செய்தி அறிவிப்பாளர் முறிந்த அறிவிப்பாகும். அதாவது நபி(சல்) அவர்களிடம் இருந்து எந்த நபித்தோழரும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை. நேரடியாக தாபியி அறிவிக்கிறார். அதுவும் அவரது கருத்தாக இடம்பெறுகிறது. ஆக இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.

                        ஆக இப்னு சஃதில் இடம்பெறும் நபி(ஸல்) அவர்களுக்கு லேகியம் கொடுக்கப்பட்டதாக கூறும் செய்திகள் யாவும் அறிவிப்பாளர் முறிந்த செய்திகளாகவே உள்ளன. அதுவல்லாமல் வாஹிதி நேரடியாக அறிவிக்கும் செய்தியும் இதே நிலையில் தான் இப்னு சாஃதில் இடம் பெற்றுள்ளது.


செய்தி 4: 
أتاني جبريل بِهَرِيسةٍ من الجنة، فأكلتها، فأُعْطِيتُ قوة أربعين رجلا في الجماع.

நபி(சல்) அவர்கள் கூறினார்கள்:
                    ஜிப்ரீல்(அலை) அவர்கள் சுவனத்தில் இருந்து எனக்கு ஹாரிஸா எடுத்து வந்தார்கள். அதை நான் உட்கொண்டேன். அதனால் எனக்கு 40 பேரின் ஆண்மை பலம் வழங்கப்பட்டது

                  மேற்குறிப்பிட்ட செய்தி இப்னு அதி அவர்களது அல் காமில்(1/165) , இப்னு ஜவ்சி அவர்களது அல் மவ்துவு(3/17) ஆகிய கிரந்தங்களில் பின்வரும் அறிவிப்பாளர் தொடருடன் அமைந்துள்ளது

அறிவிப்பாளர் தொடர்
நபி(சல்) --> இப்னு அப்பாஸ்(ரலி) --> அல் தஹ்காக் அல் மசாஹம் --> நஃசல் இப்னு சயீத் இப்னு வர்தான் --> சலாம் இப்னு சுலைமான்

                 இந்த செய்தியில் இடம் பெறும் நஃசல் இப்னு சயீத் இப்னு வர்தான் , சலாம் இப்னு சுலைமான் இருவரும் கைவிடப்பட்டவர்கள். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் பலவீனமானது. ஏற்கத்தகாதது.


செய்தி 5:  

                 மேற்குறிபிட்ட செய்திகள் அல்லாமல் உகைலியின் அல் துஆஃபாவில் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி பின் வருமாறு இடம்பெற்றுள்ளது


حَدَّثَنا أبي رحمه الله، حَدَّثَنا عبد الله بن جعفر الخشاب، حَدَّثَنا أحمد بن مهران، حَدَّثَنا الفضل بن جبير، حَدَّثَنا محمد بن الحجاج، عَن ثور بن يزيد، عَن خالد بن معدان، عَن معاذ بن جبل قال: قيل يا رسول الله هل أوتيت ن طعام الجنة شيء؟ قال: نعم أتاني جبريل بهريسة فأكلتها فزادت في قوتي قوة أربعين رجلا في النكاح.

முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் கூறியதாவது:

               நான் நபி(ஸல்) அவர்களிடம் உங்களுக்கு சுவர்கத்து உணவு எதுவும் வழங்கப்பட்டதா என கேட்டேன். அதற்கு நபி(சல்) அவர்கள் “ஆம்.எனக்கு ஹரீஸா வழங்கப்பட்டது. அதை நான் உட்கொண்டேன். ஆகவே எனது ஆற்றலும், ஆண்மையும் நாற்பது மடங்காக பெருகியது” என்று பதிலளித்தார்கள்.....

             ஆனால் மேற்குறிபிட்ட செய்தியில் முஹம்மது பின் அல் ஹஜ்ஜாஜ் அல் லக்மி என்ற பலவீனமான இட்டுகட்டும் அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.இவரை குறித்து ஹாபிழ் அபூ ஹாதிம் கூறும் போது இவர் ஹதீஸ்களை பொய்யாக இட்டுகட்டி புனைபவர் என விமர்சிக்கிறார். அது போல் அல் தஹபி அவர்கள் விமர்சிக்கும் போது இவர் ஒரு ஹாரிஸா வியாபாரி என்று விமர்சிக்கிறார்,. தாரகுத்னீ அவர்கள் குறிபிட்டும் போது பெறும் பொய்யர் என்கிறார். மேலும் இதே செய்தி அபு நுஐம் அவர்களது அல் திப் அல் நபவீயில் (ஹதீஸ் எண்:444) இடம் பெறுகிறது. அதிலும் மேற்குறிபிட்ட முஹம்மது பின் அல் ஹஜ்ஜாஜ் அல் லக்மி என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.

செய்தி 6:

حَدَّثَنا الحسين بن حموية الخثعمي، حَدَّثَنا محمد بن عبد الله الحضرمي، حَدَّثَنا جمهور بن منصور، حَدَّثَنا محمد بن الحجاج، عَن عَبد الملك بن عمير، عَن ربعي، عَن حذيفة، قال: قال رسول الله صَلَّى الله عَليْهِ وَسلَّم: أطعمني جبريل الهريسة أشد بها ظهري لقيام الليل.

              "ஜிப்ரீல் அலை அவர்கள் எனக்கு ஹாரீஸா கொடுத்தார்கள், நான் இரவில் சக்தியோடு சென்றேன்" என்று நபி(சல்) அவர்கள் கூறினார்கள்.

                 அறிவிப்பாளர்: ஹுதைஃபா(ரலி) ,
                 நூல்: அபு நுஐம் அவர்களது அல் திப் அல் நபவீயில் (ஹதீஸ் எண்:444).

               மேற்குறிபிட்ட இந்த செய்தி அறிவிப்பாளர் தொடரிலும் முஹம்மது பின் அல் ஹஜ்ஜாஜ் அல் லக்மி என்பவரே இடம் பெறுகிறார். ஆக இதுவும் பலவீனமான செய்தி.

செய்தி 7:

أخبرنا أحمد بن محمد في كتابه، حَدَّثَنا علي بن الحسن بن قديد، حَدَّثَنا محمد بن إسحاق الصيني، حَدَّثَنا إبراهيم بن محمد الفريابي، حَدَّثَنا عُمَر بن بكر السكسكي حدثني أرطأة بن المنذر، عَن مكحول، عَن أَبِي هُرَيرة قال: شكى رسول الله صَلَّى الله عَليْهِ وَسلَّم إلى جبريل قلة الجماع فقال: يا رسول الله أين أنت، عَن أكل الهريسة؟ فإن فيها قوة أربعين رجلا


  அபு ஹுரைரா(ரலி) கூறியதாவது:

                 நபி(சல்) அவர்கள் ஒரு முறை தன்னால் உடலுறவு கொள்ள இயலவில்லை என்று ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே தங்களுக்கு ஹாரீஸா குறித்து தெரியாதா?” என்று வினவினார்கள். மேலும் அதில் நாற்பது பேரின் ஆண்மைபலம் உள்ளது என்றும் (ஜிப்ரீல் (அலை)) கூறினார்கள்.

நூல்: அபு நுஐம் அவர்களது அல் திப் அல் நபவீயில் (ஹதீஸ் எண்:445)

             மேற்குறிபிட்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மது இப்னு இஸ்ஹாக் அல் சைனி என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இவர் குறித்து இப்னு அபிஹாத்திம் அல் ராஸி அவர்கள் விமர்சிக்கும் போது இவர் பெரும் பொய்யர், ஹதீஸில் விடப்பட்டவர் என்று விமர்சிக்கிறார். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் பலவீனமானது.

           மேற்குறிபிட்ட செய்தியை கூறிவிட்டு அலி சினா தனது புத்தகத்தில் இந்த செய்தி தபகத் இப்னு சாஃதில் பாகம் 8 பக்கம் 200 ல் அல் வாகிதி அறிவிப்பதாக இடம் பெறுவதாக பச்சை பொய் வேறு. இதையே விக்கி இஸ்லாம், ஆன்சரிங்க் இஸ்லாம் போன்ற வலைத்தளங்கள் வாந்தி எடுத்துள்ளன என்பது குறிபிடதக்கது. மேலும் அல் வாகிதி பொய்யர்களில் பேர்போனவர் என்று இமாம் சாஃபி(ரஹ்) போன்றோர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். இஸ்லாமிய எதிர்ப்பாள்ர்கள் தங்களது பக்தர்களை எந்த அளவிற்கு எடை போட்டுள்ளார்கள் என்பதற்கு இது ஓர் ஆதாரமாகும்.

செய்தி 8:

حَدَّثَنا أحمد بن محمد بن يوسف، حَدَّثَنا ابن ناجية، حَدَّثَنا سفيان بن وكيع، حَدَّثَنا أبي، حَدَّثَنا أسامة بن زيد، عَن صفوان بن سليم، عَن عَطاء بن يسار، عَن أَبِي هُرَيرة، قال: قال رسول الله صَلَّى الله عَليْهِ وَسلَّم: أتاني جبريل بقدر يقال لها الكفيت فأكلت منها أكلة فأعطيت قوة أربعين رجلا في الجماع

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

               ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒரு ஜாடி கொண்டுவந்தார்கள். அதிலிருந்து நான் உட்கொண்டேன். அதனால் நாற்பது பேரின் ஆண்மை பலம் எனக்கு கொடுக்கப்பட்டது. (அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), நூல்:நூல்: அபு நுஐம் அவர்களது அல் திப் அல் நபவீயில் (ஹதீஸ் எண்:442)

         மேற்குறிபிட்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் أسامة بن زيد  என்பவர் பலவீனமானவர். இவர் குறித்து நஸயீ கூறுகையில் பலவீனமானவர் என்று கூறுகிறார்.இப்னு மயின் குறிப்பிடுகையில் இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கதல்ல என்று கூறுகிறார்.அஹ்மத் இப்னு ஹம்பல் கூறுகையில் இவர் பலவீனமானவர் என்று கூறுகிறார். அபுஹாத்தம் கூறும் போது இவர் செவியுறாதவற்றை எழுதுபவர் என்று விமர்சிக்கிறார். ஆக இவரை ஹாபிழ் இப்னு ஹஜர் தவறிழைப்பவர் என்று குறிப்பிடுகிறார்கள்.


மேலும் இத்தகைய செய்திகள் குறித்து ஆய்வு செய்த ஷைக் அல்பானி அவர்கள் தனது சில்சிலா அஹாதித் அல் லைஃபா வல் மவ்தூவு -ல் : 
     “இது போல் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவை. அவற்றில் ஏதேனும் ஒரு குறை இருக்கவே செய்திறது “ என்கிறார்
ஆக நபி(சல்) அவர்களுக்கு சுவர்க்கத்தில் இருந்து லேகியம் கொடுக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும். அவை ஏற்கும் தரத்திலானவை அல்ல.

4 comments:

  1. மாஷாஅல்லாஹ்

    ReplyDelete
  2. நந்தன்July 7, 2018 at 10:42 AM

    இதைத்தான் நாங்களும் சொல்கிறோம். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதெல்லாம் கட்டுக்கதைகள் என்கிறோம். ஒட்டு மொத்தத்தில் ஹதீதுகள் எல்லாம் டுபாங்கூர். தாங்களும் இவற்றை அம்பலப்படுத்துவதற்கு நன்றி.

    அது சரி... ஹாபிழ் இப்னு ஹஜர் என்ன நபியின் வீட்டுக்கு பக்கத்து வீட்டிலா குடியிருந்தார். அவர் சொன்னால் மட்டும் உண்மையாகிடுமா!

    ReplyDelete
    Replies
    1. ஹதீஸ்கள் எல்லாம் சரியானதல்ல.அவற்றில் சில தவறான அடிப்படையற்ற செய்திகளும், நபி(சல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட அவதூறுகள் உண்டு.அதை தரப்படுத்தி மக்களுக்கு எந்த அடிப்படையில் இந்த ஹதீஸை மறுக்கலாம் ஏற்கலாம் என விளக்கும் ஆழ்ந்த ஹதீஸ்கள் மற்றும் வரலாற்று ஞானம் உள்ளவர்கள்தான் ஹாபிழ் என்ற பட்டம் பெற்றவர்கள்......அவர்களில் ஒருவர்தான் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள்.....இத்தகைய ஹதீஸ்களின் தொகுப்பு, பகுப்பாய்வு, சட்டமாக்கள் குறித்த எந்த அடிப்படை ஞானமும் இல்லாதவர்கள்தான் ஹதீஸ்கள் அனைத்தும் டுபாக்கூர் என வாதிப்பார்கள்....

      Delete
  3. மாஷா அல்லாஹ் சகோ அருமையான விளக்கம்

    ReplyDelete