பக்கங்கள் செல்ல

Sunday, November 20, 2016

எதிர் தொடர் 19: சில சந்தேகங்களும் பதில்களும்

ஏக இறைவனின் திருபெயரால்

     சென்ற தொடர்களில் கிறித்தவம் குறித்து ஒரு சிறிய ஆய்வை கண்டோம். நாம் இந்த தொடரில் நமது கட்டுரையாளர் வைக்கும் சில கேள்விகளும் அதற்கான பதிலையும் காண்போம்.

கேள்வி 1: முதலாம் நூற்றாண்டு முஸ்லீம்கள் யார்?
 


நமது பதில்:
      இந்த கட்டுரையாளர் தான் எழுதிய கட்டுரையிலேயே இதற்கான விடையை கூறியுமுள்ளார். ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒரே எண்ண ஒட்டமானது கட்டுரையாளரின் கண்களை மறைத்து விட்ட்து என்றுதான கூற வேண்டும். குர்ஆன் ஈசா(அலை) காலத்து முஸ்லிம்கள் குறித்து கூறும் வசனங்களை கட்டுரையாளர் பதிந்துள்ளார். அல்லாஹ் தான் ஈசா (அலை) மூலமாக விதித்த கட்டளையை ஏற்று கொண்டவர்களை முஸ்லீம் என்கிறான். அவ்வளவுதான்.
குர் ஆன் பின் வருமாறு கூறுகிறது:
                "என்னையும், என் தூதரையும் நம்புங்கள்!' என்று (ஈஸாவின்) சீடர்களுக்கு நான் அறிவித்த போது "நம்பிக்கை கொண்டோம்! நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்விற்கு கட்டுபட்டவர்கள்) என்பதற்கு நீயே சாட்சியாக இருப்பாயாக!'' என அவர்கள் கூறினர்.(அல் குர் ஆன் 5:111).
      அல்லாஹ் கூறுவது இதைத்தான் யார் ஈசா(அலை) அவர்கள் காலத்தில் அல்லாஹ்வை ஏக இறைவனாக ஏற்று, ஈசா(அலை) அவர்களை தூதராக ஏற்றார்களோ அவர்கள் முஸ்லீம்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படி பட்ட கூட்டத்தினர் குறித்தும் இஸ்லாம் குறிப்பிடும் நம்பிக்கை உடைய மக்கள் குறித்தும் உடைந்த சிலுவை பாகம் 9,10,11 தெளிவாக விளக்கியுள்ளோம்.

கேள்வி 2: முதலாம் நூற்றாண்டு முஸ்லீம்கள் சுவடில்லாமல் அழிக்கப்பட்டுவிட்டனரா?   
 

நமது பதில்:
      அரேபிய தீபகர்பத்தில் நபி(ஸல்) அவர்களது காலம் வரை குர் ஆன் குறிப்பிடும் நம்பிக்கைக்குரிய மக்கள் (வராகா பின் நவ்ஃப் போன்றவர்கள்) வாழ்ந்ததற்கான குறிப்புகளை இஸ்லாமிய ஆவணங்கள் தரவில்லையா? 6ம் நூற்றாண்டுவரை அரேபிய தீப கர்பத்தில் இருந்த கிறித்தவர்கள் இஸ்லாத்தை ஏற்று வெற்றியாளர்களாக ஆனதற்கான பல சான்றுகளை இஸ்லாமிய ஆவணங்கள் தருகின்றன. இஸ்லாமிய ஆவணங்கள் நம்பத்தகுந்தவை அல்ல என்று கூறுவோர் கிறித்தவ நூல்களை மட்டுமே முழு ஆதாரமாக கொள்வது கேலிகுரியது. இத்தகைய மேதாவிகளுக்காகத்தான் உடைந்த சிலுவை 9,10,11,12 மற்றும் 13 பாகங்களை வழங்கியுள்ளோம்

கேள்வி 3: ஈஸா அலை அவர்களின் போதனை என்ன ஆனது:
 

நமது பதில்:
      யூத எதிர்ப்பு என்ற ஓரே அற்ப விலைக்கு தங்களது வேதத்தை கிறித்தவர்கள் விற்றனர் என்பதை உடைந்த சிலுவை 13ம் பாகம் தெளிவாக விளக்கியுள்ளது

கேள்வி 4: ஈஸா (அலை) சிலுவையில் அறையப்படவில்லை. வேறு ஒருவர் அவருக்கு ஒப்பாக்கப்பட்டார் என்பதற்கு வேறு ஆதரங்கள்:


நமது பதில்:


       ஈஸா(அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட வில்லை என்பதற்கு உடைந்த சிலுவை 10, 11ல் காலக்கிரம்மாக ஆவணங்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது.

وَقَوۡلِهِمۡ إِنَّا قَتَلۡنَا ٱلۡمَسِيحَ عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَـٰكِن شُبِّهَ لَهُمۡ‌ۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِيهِ لَفِى شَكٍّ۬ مِّنۡهُ‌ۚ مَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّ‌ۚ وَمَا قَتَلُوهُ يَقِينَۢا

      இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.(அல் குர் ஆன் 4:157)
        மேற்குறிபிட்ட வசனத்தில் இடம்பெறும் شُبِّهَ என்ற சொல்லிற்கு ش ب ه என்பது வேர் சொல்லாகும். இந்த சொல்லிற்கு ஒப்பாக்கப்படுதல், நிகராக்குதல், ஒரு பொருளிற்கு அதன் இடத்தில் சில ஒத்த காரணங்களினால் வேறு பொருளை பயன்படுத்துதல் போன்ற பொருளில் பயன்படுத்தக்கூடிய வார்த்தையாகும். உடைந்த சிலுவை  பாகம் 10, 11ல் இயேசு பரபாஸ் என்ற புரட்சிகாரன் கூறித்தும், ஜோசபஸ் போன்றவர்களின் வரலாற்று ஆவணங்களில் இயேசுவின் உயிர்தெழுதல் குறித்த குறிப்புகள் இடம்பெறவில்லை என்பதையும், அதானால் சிலுவையில் அறையப்பட்டது ஈஸா(அலை) அவர்கள் இல்லை என்றும் இயேசு பரபாஸ்தான் என்றும் விளக்கியுள்ளோம்.  

கேள்வி 5: இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று சீடர்கள் நம்பினார்களா?

நமது பதில்:
      சீடர்கள் ஏசுவின் சிலுவை மரணத்தை ஏற்று கொண்டனர் என்பதே சந்தேகத்திற்குரியது. அது குறித்து உடைந்த சிலுவை 10, 11 கட்டுரைகளில் தெளிவாக கண்டோம். ஏன் இன்று இருக்கும் விவிலியத்தில் பேதுருவின் கடிதங்கள்  உட்பட எதிலும் சீடர்களின் கருத்துகள் சந்தேகத்திற்கு இடம் இன்றி இடம் பெற வில்லை. எடுத்துகாட்டாக பேதுருவின் கடிதங்கள் குறித்து ஆக்ஸ்ஃபோர்ட் அனோடேட் பைபில் பின்வருமாறு கூறுகிறது:

 
      ஆக சீடர்களின் வாக்குமூலம் எதுவும் நேரடியாக இல்லை. இருக்கும் செய்திகளுக்கு நேர் எதிரான செய்திகள் சமகாலத்து ஏடுகளில் காணப்படுகிறது. சொற்பமாக இருந்த சீடர்களுக்கு தெரிந்த ஈஸா(அலை) அவர்கள் சிலுவையில் மரணிக்க வில்லை என்ற கருத்துதான் நாம உடைந்த சிலுவை பாகம் 10,11 ல் குறிப்பிடப்படும் பண்டைய ஏடுகளில் காணப்படுகிறது என்பதுதான் எங்களது வாதம்.  ஆக கட்டுரையாளரின் கருத்தான ஈஸா(அலை) அவர்களது சீடர்கள் ஏமாற்றப்பட்டனர் என்பது கிறித்தவ விவிலியத்தை ஆதாரமாகக் கொண்ட அனுமானமே. 

எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண                    உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண

No comments:

Post a Comment