பக்கங்கள் செல்ல

Friday, January 1, 2016

பன்றி இறைச்சி குறித்து நவீன மருத்துவ அறிவியலும், திருக்குர்ஆனும், பைபிளும் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்..!

பன்றி இறைச்சி குறித்து நவீன மருத்துவ அறிவியலும், திருக்குர்ஆனும், பைபிளும் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்..!  (Posted by Brother Tink Fair ) 
பன்றி இறைச்சி குறித்து விக்கிபீடியா
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
2007 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகம் நடாத்திய ஆராய்ச்சியின் படி, பதனம் செய்த பன்றி இறைச்சியை உட்கொள்வதற்கும், நுரையீரலைத் தாக்கும் நோய்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. பாதுகாப்புப் பொருளான சோடியநைத்திரைற்று அதற்கு காரணமாகும். அதிக அளவில் பன்றி இறைச்சி போன்ற சிகப்பு மாமிசம் உண்பதால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சூழ்நிலை காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பன்றி இறைச்சி பொதுவாக உப்பு மற்றும் தெவிட்டிய கொழுப்பு அதிக அளவில் கொண்டதாகும். இவற்றை அதிக அளவில் உட்கொள்வதால் பல தரப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக விக்கிபீடியா தெரிவிக்கின்றது.
மேலும் பன்றி இறைச்சி உண்பதால் ‘டேனியா சோலியம்’ -Taenia solium- (pork tapeworm) என்கின்ற புழு நமது உணவுக்குழாயின் அடிப்பகுதியில் நிரந்தரமாக தங்கி, அங்கே முட்டை இடுகின்றது.. இந்த முட்டைகள் இரத்த நாளங்களினூடாக பயணித்து இதயம், மூளை, கண், நுரையீரல் போன்ற உடல் உறுப்புக்களை செயலழிக்கச் செய்யக்கூடிய மிக ஆபத்தானவையென தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்ற மற்றொரு ஆபத்தான புழுவான Trichura Tichurasis என்கின்ற புழுவும் பன்றி இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் மனித உடலில் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. டேனியா சோலியமும், Trichura Tichurasisம் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தமான புழுவகைகளாகும்.
திருக்குர்ஆனின் ஒளியில் –
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
பன்றி இறைச்சி உண்பதை சர்வ வல்லமை பொருந்திய இறைவன் தடைசெய்துள்ளதாக இறைவேதம் திருக்குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
“தாமாகச் செத்தவை, இரத்தம்,
பன்றியின் இறைச்சி , அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப் பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.”-
(அல்குர்ஆன் 5:3)
இறுதி நாளின் அடையாளமாக இறைத்தூதர் இயேசு – (அலை) அவர்கள் பன்றியைக் கொல்வார்கள் என்று முஹம்மது நபிகளார் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
“என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்”. – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: ஸஹீஹுல் புஹாரி-2222
பைபிளின் ஒளியில் –
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
இறைவாக்கினர் மோசேயின் போதனைகளென நம்பப்படுகின்ற பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான லேவியராகமம் அசுத்தமான மிருகமான பன்றியின் இறைச்சியை சாப்பிட வேண்டாமென்றும், பன்றியின் உடலைத் தொட வேண்டாமென்றும் கட்டளையிடுகின்றது.
“பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.” – லேவியராகமம் 11:7-8
பன்றியின் இறைச்சியை சாப்பிட வேண்டாமென்றும், பன்றியின் உடலைத் தொட வேண்டாமென்றும் இறைவாக்கினர் மோசேயின் போதனைகளென நம்பப்படுகின்ற மற்றொரு பழைய ஏற்பாட்டு நூலான உபாகமும் கட்டளையிடுகின்றது.
“பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.” – உபாகமம் 14:8
பன்றி இறைச்சியை சாப்பிடுபவர்களை மிகக் கடுமையாகத் தண்டிப்பேன் என்று கர்த்தர் எச்சரித்ததாக பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான ஏசாயா குறிப்பிடுகின்றது.
“என்னைக் குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன். நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன். அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி, பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி,
பன்றியிறைச்சியைத் தின்று , தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து: நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள் முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.” – ஏசாயா 65:1-5
கோபம் கொண்ட கர்த்தர் பன்றி இறைச்சி சாப்பிடுகின்றவர்களை உக்கிரமாக, அக்கினி ஜுவாலையால் தண்டிப்பதாக இறைவாக்கினர் ஏசாயாவின் போதனைகளென நம்பப்படுகின்ற ஏசாயா ஆகமம் எச்சரிக்கின்றது.
“தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும்,
பன்றியிறைச்சியையும் , அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
– ஏசாயா 66:17
நவீன கிறிஸ்த்தவத்தின் நிறுவனரான சவுல் என்கின்ற இயற்பெயரையுடைய பவுலின் மார்க்கத்தை ஏற்று, பன்றி இறைச்சி பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலில்தான் தடுக்கப்பட்டுள்ளது எனவே, பன்றி இறைச்சி தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உணவுதான் என்று வாதிடுகின்ற நவீன கிறிஸ்த்தவர்களுக்கு: –
‘வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது’ – என்று குறிப்பிடுவதன் மூலம் ‘நியாயப்பிரமாணத்தை – பழைய ஏற்பாட்டை ’- நிறைவேற்றவே வந்தேன் என்று இயேசு (அலை) அவர்கள் கூறியதாக இயேசுவின் போதனைகளென நம்பப்படுகின்ற பைபிளின் புதிய ஏற்பாட்டு நூலான மத்தேயு ஆகமம் குறிப்பிடுகின்றது.
“நியாயப்பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
மத்தேயு 5:17,18
இயேசு , ஓரிறைக் கொள்கையை உரத்துச் சொன்னார். மக்களுக்கு நல்லதையே போதித்தார்..! அவர் போதித்தவைகளை முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். முஸ்லிம்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை ஆனால் கிருஸ்த்துவர்கள் சாப்பிடுகிறார்கள் ! முஸ்லிம்கள் மது அருந்துவதில்லை..கிருஸ்த்துவர்கள் அருந்துகிறார்கள்! முஸ்லிம்களுக்குப் போல் இயேசுவிற்கும் விருத்தசேதம் நுனித்தோலில் 8ம் நாள் செய்யப்பட்டது ( இதயத்தில் நுனித்தோல் இல்லை என்பதைக் கவனித்துக் கொள்ளவும்) முஸ்லிம்கள் அனைவருமே விருத்தசேதம் செய்கிறார்கள். கிருஸ்தவர்கள் செய்வதில்லை..! இயேசு விபச்சாரத்தை நெருங்கவேயில்லை..அதேபோல் இஸ்லாமிய நாடுகளிலும் விபச்சாரம் குறைந்தேயுள்ளது..! ஆனால் உலகில் விபச்சாரம் மலிந்த 10 நாடுகள் வரிசையில் 9 கிருஸ்த்துவ நாடுகளே முன்னணியில் உள்ளது..!
இதில் என்ன விளங்குகிறது என்றால், இயேசு ஒரு முஸ்லிமாகவே வாழ்ந்தார். முஸ்லிம்கள் பின்பற்றுவதையே போதித்தார்..ஆனால் கிருஸ்த்துவர்களோ பவுலர்களாகவே இருக்கின்றனர். பவுலையே பின்பற்றுகின்றனர்..!
இயேசுவின் பல போதனைகளை பவுல் சிதைத்துள்ளார்..இதற்கான ஆதாரம் பைபிலில் நிறைய உண்டு!. விருத்தசேதத்தினை சிதைத்தவரும் பவுல் தான்..!
இயேசுவின் போதனையில் பன்றி இறைச்சி விலக்கலும் இருந்தது..! 

No comments:

Post a Comment