பக்கங்கள் செல்ல

Saturday, April 4, 2015

Killing Jesus


ஆத்திகன் Vs நாத்திகன்  என்ற முகநூல் குழுமத்தில் சகோதரர் டேவிட் பிரவீன், " Killing Jesus" என்ற ஒரு டாகுமெண்டரி பற்றிய செய்தியை பதிவு செய்து இருந்தார்:


// இயேசு ஒவ்வொரு முறை அற்புதம் செய்யும் போதும் ஜெபம் செய்கிறார். அற்புதம் செய்து முடித்ததும் அன்னாந்து வானத்தைப் பார்க்கிறார். அற்புதங்களைக் குறித்து மக்கள் அவரைப் பாராட்டும்போது அவர் வானத்தை பார்த்தபடி இருக்கிறார். இந்த காட்சிகள் தவறாமல் எல்லா அற்புதங்களிலும் காட்டப்படுகிறது. நான் இதுவரை பார்த்த இயேசுக் குறித்த படங்களில் இல்லாத காட்சி அமைப்பு.//


இந்த வரிகள் என்னை மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இது பற்றி குரான் என்ன சொல்கின்றது  என்று பார்ப்போம்:

திருக்குர்ஆன், இயேசு பல அற்புதங்களை செய்துள்ளார்கள் என்று சான்று பகர்கின்றது:

1தொட்டில் குழந்தையாக  இருந்தபோது மக்களிடம் பேசினார்:

"மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!
"அவர் தொட்டில் பருவத்திலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்லவராகவும் இருப்பார்'' (என்றும் கூறினர்)  [ 3:45,46]

2. இறந்தவர்களை உயிர்பித்தார்:
இயேசு களிமண்ணில் இருந்து பறவைகளை உண்டாக்கினார், குருடர்களை பார்க்க வைத்தார், தொழு நோயாளிகளை குணப்படுத்தினார், இறந்தவர்களை உயிர்பித்தார், மக்களிடம், அவர்கள் எதை அன்று உண்டார்கள், எதை வீட்டில் சேமித்து வைத்தார்கள் என்பதையும் அறிவித்தார். திருக்குர்ஆன் சொல்கின்றது:
இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.)
"உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். 
- உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். 
-  அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; 
- இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; 
- நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; 
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது'' (என்றார்) [3:49]
இதில்  "அல்லாஹ்வின் விருப்பபடி" என்பதை கவனித்தால் உண்மை புரியும்.  மேலே சகோதரர் டேவிட் கவனித்ததும் இதை மெய்ப்படுத்துகின்றது.

ஏனென்றால் சில சமயங்களில், இயேசு அவர்களால் அற்புதங்கள் செய்ய இயலாத தருணங்களும் ஏற்பாட்டன  என்பதை பைபளில் அறிந்துகொள்ளலாம்.

அற்புதம் செய்யும் முன்பும், பின்பும் இயேசு அவர்கள் ஜெபித்துள்ளர்கள், வானத்தை நோக்கி பிரார்த்தனை செய்துள்ளார்கள் என்பதும் நிச்சயமாக உண்மையே என்பதில் முஸ்லிகளாகிய எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

இறுதியாக திருக்குர்ஆன் கூறுகின்றது:

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! [5:75]
குரான், சூரா மர்யமில், அல்லாஹ் மர்யமுக்கும், அங்குள்ள மக்களுக்கும் நடந்த உறையாடலை பற்றி சொல்கின்றான்:
ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்ததில்லை'' (என்றனர்) [19:28]

 அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! "தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?'' என்று அவர்கள் கேட்டார்கள்.[19:29]

         உடனே அவர் (அக்குழந்தை), "நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு 
        அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான். (என்று 
        கூறினார்.) [19:30]
நான் எங்கே இருந்தபோதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. [19:31-32]

 நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது  சாந்தி இருக்கிறது'' (என்றார்) [19:33]

             -- Nadodi Tamilan -- 

No comments:

Post a Comment