பக்கங்கள் செல்ல

cross tab2

Friday, May 8, 2015

அர்த்தமுள்ள கேள்விகள் - 15 - இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும்?


இணையதளங்களிலும் & சமூக வலைத்தளங்களிலும் இஸ்லாம் அனைவரிடமும் போர் செய்ய தூண்டுவதாக ஒரு வதந்தி அண்மைக்காலமாக பரவுகின்றது. இஸ்லாம் போர் செய்ய அனுமதித்ததை இவர்கள் தமக்கு ஏற்றாற் போல் வளைத்து அவதூறு பரப்பி வருகின்றனர் உண்மையில் இஸ்லாம் எதற்காக போரை அனுமதித்தது ?? வேண்டுமென்றே அனைவருடனும் யுத்தம் செய்ய சொல்கிறதா?? என்பதை இப்போது பார்ப்போம். 

கேள்வி  :

எங்கள் பக்கத்து வீட்டு இந்து நண்பரிடம் எனக்கு நீண்ட நாளாக பழக்கம் உண்டு. அவரிடம் இஸ்லாத்தை அறிமுகம் செய்தேன். குர்ஆனையும் அவருக்கு படிக்கக் கொடுத்தேன். அவருக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டது. அதில் இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும்   மனிதனை மனிதன் கொன்று குவிப்பதும் பொருளாதாரத்தைச் சேதப்படுத்துவதும் தன்னுடைய பாதையில் போர் செய்வதாக சிறப்பித்துக் கூறுவதா? இது இறைவனின் மகா கருணைக்கு இழுக்காக இல்லையா? என்று கேட்கிறார் விளக்கம் தரவும்.

- எம். முஹம்மது மூஸா, மதுரை.

பதில்:

போர் செய்யுமாறு கட்டளையிடும் வசனங்களைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். திருக்குர்ஆனில் உள்ள  பல கட்டளைகள் அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன. அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது. திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு மரண தண்டனை, அல்லது நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக்  கண், பல்லுக்குப் பல் என்பன போன்ற சட்டங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது.  மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

போர் குறித்த வசனங்களும் இது போல் அரசின் மீது  சுமத்தப்பட்ட  கடைமையயே தவிர  தனி நபர்கள்  மற்றும் குழுக்கள் மீது சுமத்தப்பட்டதல்ல. இவ்வாறு நாம் கூறுவதற்கு குர்ஆனிலேயேசான்றுகள் உள்ளன. 4:75 வசனத்தில்  பலவீனர்களுக்காக  நீங்கள்  ஏன் போரிடக்  கூடாது? என்று  கூறப்படுகிறது. பலவீனர்கள் என்பது  மக்காவில் சிறுபான்மையினராக  இருந்த முஸ்லிம்களைக் குறிக்கும். அவர்கள் மக்காவில் சொல்லொனாத துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். ஊரை விட்டு தப்பித்தால் போதும் என்ற அளவுக்கு அவர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டன. ஆயினும் அவர்களை அழைத்துப் போர் செய்யுமாறு கட்டளையிடாமல்,  அவர்களுக்காக  நீங்கள் ஏன் போர் செய்யக்கூடாது என்று நபிகள் நாயகம்  (ஸல்) தலைமையில் அமைந்த முஸ்லிம் அரசுக்கு திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. பலவீனர்களும், பாதிக்கப்பட்டவர்களும் போர் நடவடிக்கையில் இறங்கலாம்  என்றிருந்தால் போரிடுமாறு அந்தப் பலவீனர்களுக்குத் தான் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். 8:60 வசனத்தில்  பலவிதமான  போர்த் தளவாடங்களைத்  தயார்படுத்திக் கொள்ளுமாறு  கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. ஒரு நாட்டுக்குள் பலவீனமாகவும், சிறுபான்மையாகவும் உள்ள தனி நபரோ, குழுக்களோ இப்படி திரட்டிக் கொள்வது சாத்தியமாகாது. இது அரசாங்கத்தினால் மட்டுமே  சாத்தியமாகக் கூடியதாகும். இஸ்லாமிய அரசு அமைந்து, போர் செய்ய வேண்டிய  காரணங்கள் அனைத்தும் இருந்து, போர் செய்வதற்கான படை பலம் இல்லாவிட்டால் அப்போது இஸ்லாமிய அரசின் மீது கூட போர் செய்வது கடமையாகாது. எதிரிகளின் படை பலத்தில் பத்தில்  ஒரு  பங்குதான் போதுமான படை பலமாக  முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. (திருக்குர்ஆன் 8:65)

பின்னர்  மக்களிடம்  காணப்பட்ட பலவீனத்தைக் கருத்தில் கொண்டு எதிரியின் படை  பலத்தில் பாதி படை பலம்  இருந்தால் மட்டுமே  இஸ்லாமிய அரசின் மீது போர் கடைமயாகும்; அதை விடக் குறைவாக இருந்தால் போர் செய்யாமல்  அடங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது   தான் குர்ஆனின் கட்டளை. (திருக்குர்ஆன் 8:66). படை பலம்  பாதிக்கும்  குறைவாக இருந்தால் இஸ்லாமிய அரசாங்கம் கூட போரிடக் கூடாது என்றால் நாட்டில் சிறுபான்மையாக வாம் மக்கள் மீது போர் எவ்வாறு கடமையாகும்? இதனால் மிகப்பெரிய இழப்புகள் தான் சமுதாயத்துக்கு ஏற்படும் என்பதால் தான் போரைக் கடமையாக்காமல் பொறுமையை இறைவன் கடமையாக்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பட்ட கஷ்டத்தை யாரும் பட்டிருக்க முடியாது.  அந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படை திரட்டவில்லை. பொறுமையைத்  தான்  கடைப்பிடித்தனர். மதீனாவுக்குச் சென்று  ஆட்சியும்  அமைத்து போர் செய்வதற்கான  காரணங்கள்  ஏற்பட்ட போது தான் போர் செய்தனர். இதை முஸ்லிம்கள் சரியாகப்
புரிந்து நடந்து கொண்டால் மக்கள் இஸ்லாத்தை நோக்கி தம் பார்வையைத் திருப்புவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே அரசாங்கத்தின் மீது தான் தேவையேற்படும் போது போர் கடமையாகும். தனி நபர்கள் மீது அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து மக்காவை விட்டு வெளிேயற்றப்பட்டனர். மதீனா  வந்து தனி அரசையும் உருவாக்கினார்கள். இதன் பிறகும் மக்காவாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் எஞ்சியிருந்தோரைத் துன்புறுத்தியதாலும்,  சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்யும்  கடைமையயை இறைவன் விதித்தான்.

எந்த ஒரு நாடும் வம்பு செய்யும்  நாட்டுடன் கடைப்பிடிக்கும் கடினப் போக்கை விட மிகக் குறைந்த அளவே இஸ்லாம் கடினப் போக்கை கையாண்டது. கொல்லுங்கள்! வெட்டுங்கள்! என்றெல்லாம் கூறப்படும்  கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித்தான் நடக்க வேண்டும். வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:190, 9:13) சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:191, 22:40) போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் இல்லை! (திருக்குர்ஆன் 2:192) அநீதி  இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள்,  பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர்! (திருக்குர்ஆன் 4:75, 22:39-40) சமாதானத்தை விரும்புேவாருடன் போர் இல்லை! (திருக்குர்ஆன் 8:61) · மதத்தைப் பரப்புவோர் உடன் இல்லை!(திருக்குர்ஆன் 2:256, 9:6, 109:6) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. நியாயமான காரணம் இருந்தால் மட்டும் முஸ்லிம்  அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. தனி நபர்கேளா, குழுக்களோ ஜிஹாத்  என்ற  பெயரில் வன்முைறையில் இறங்கினால் அது தவறாகும். சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் தொடுக்கப்பட்டது. போரை முதல் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும்  இருக்கிறது. (திருக்குர்ஆன்  2:190, 9:12,13)

சகோதரர் P. ஜெயினுலாப்பதீனால் எழுதப்பட்ட அர்த்தமுள்ள கேள்விகள் அறிவு பூர்வமான பதில்கள் என்னும் புத்தகத்தில் இருந்து........ 

எதிர்தொடர் 13: குர்ஆனும் ஹதீஸும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

          இந்த தொடரில் நாம் கட்டுரையாளரின் வாதங்களுக்கு மறுப்பு கூறும் முன் அல்லாஹ்வின் வேதம் மற்றும் நபி(சல்) அவர்களது சுன்னாஹ் ஆகியவற்றை குறித்து ஒரு சிறிய அறிமுகத்தை பார்ப்போம். அல்லாஹ் நபி(சல்) அவர்களுக்கு தனது வகீயின் மூலம் சிறிது சிறிதாக 23 ஆண்டுகாலம் இந்த திருகுர்ஆனை இறக்கியருளியுள்ளான். அதை சிறிது சிறிதாக இறக்கியதற்கான காரணத்தை அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.
மக்களின் உள்ளத்தை உறுதிபடுத்த:

 وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَوْلا نُزِّلَ عَلَيْهِ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً كَذَلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤَادَكَ وَرَتَّلْنَاهُ تَرْتِيلا (٣٢)

      இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித்தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.( அல் குர்ஆன் 25:32. )

            மேலே நான் சாயமிட்டு காட்டி இருக்கும் نُزِّلَ – என்பதற்கு படிப்படியாக என்று பொருள். மக்களின் உள்ளத்தை பலபடுத்த அல்லாஹ் குர் ஆனை படிப்படியாக இறக்கியதாக கூறுகிறான். இவ்வாறு ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப குர்ஆன அருளப்பட்டதால் நம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் அல்லாஹ் இறைநம்பிக்கையை அதிகப்படுத்தினான். அல்லாஹ் பின் வருமாறு கூறுகிறான் தனது திருமறையில்.

      ஓர் அத்தியாயம் அருளப்படும் போது "இது உங்களில் யாருக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தியது?'' என்று கேட்போரும் அவர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோருக்கு இது நம்பிக்கையை அதிகமாக்கியது. அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். (அல் குர்ஆன் 9:124).

      நாம் மேலே கூறிய வசனங்கள் மக்களின் உள்ளத்தை வலுப்படுத்தும் என்றும் இறைநம்பிக்கையை அதிகப்படுத்தும் என்றும் கூறுகின்றன. இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். 1400 வருடங்களுக்கு பிறகு உள்ள நமக்கு இந்த வசன்ங்களின் பொருளை தெளிவாக உணர வேண்டுமானால் இந்த வசனங்களின் இறங்கிய சூழலை நாம் அறிந்திருக்க வேண்டும். அன்றிருந்த மக்களுக்கு இந்த வசனங்கள் எப்படி இறைநம்பிக்கையை அதிகப்படுத்தியது என்பதை அந்த சூழலை கருத்தில் கொண்டு நாம் கவனிக்கும் பட்சத்தில் மிக தெளிவாக புரியும்.  ஆக இந்த இடத்தில்தான் ஹதீஸ்களின் தேவை ஏற்படுகிறது. எந்த ஒரு புத்தகமாக இருந்தாலும். அந்த புத்தகத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால்


1. அந்த புத்தகதில் அதன் விளக்கம் உள்ளதா என்பதை தேட வேண்டும். குர் ஆனில் நம்பிக்கை தொடர்பான விஷயங்களை இவ்வாறு ஆய்வு செய்வதால் புரிந்து கொள்ள முடியும்.


2. அந்த புத்தகம் எழுத்தப்பட்ட காலத்தை கருத்தில் கொள்வது. குர்ஆனை பொறுத்த வரை அதன் வசனங்கள் இறங்கிய சூழலை அறிந்து கொள்வது. இதை ஹதீஸ்களை ஆய்வு செய்வதால் மட்டுமே பெற முடியும்.

3. அந்த புத்தகத்தின் ஆசிரியரின் விளக்கம். இங்கு அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட தூதரால் விளக்கப்படுதல்.
  
      அல்லாஹ் தனது வேதத்தில் பின்வருமாறு கூறுகிறான்:
மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம்.(அல் குர்ஆன் 17:106. )

         இந்த இறைதூதர் இடைவெளிவிட்டு ஓதிக்காண்பிக்க என்று அல்லாஹ் கூறுகிறான். எப்படி இந்த தூதர் ஓதிக்காண்பிப்பார் என்பதையும் அல்லாஹ் தனது இறைவேதத்தில் பின் வருமாறு கூறுகிறான்.

 لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلالٍ مُبِينٍ (١٦٤)

      நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்.( அல் குர்ஆன் 3:164. )

                 இந்த வசனத்தில் நான் சாயமிட்டிருக்கும் பகுதி  الْكِتَابَ وَالْحِكْمَةَ – எனபதற்கு வேதமும் ஞானமும் என்று பொருள். இந்த இடத்தில் و – என்பது தமிழில் இடம் பெறும் உம்மை தொகையாகும். அல்லாஹ் இறைதூதர் வேதத்தையும் ஞானத்தையும் கற்று கொடுப்பார் என்று தெளிவாக கூறுகிறான். மேலும் அல்லாஹ் பின்வருமாறு

 وَلَوْلا فَضْلُ اللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُ لَهَمَّتْ طَائِفَةٌ مِنْهُمْ أَنْ يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ إِلا أَنْفُسَهُمْ وَمَا يَضُرُّونَكَ مِنْ شَيْءٍ وَأَنْزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا (١١٣)

 (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும், அன்பும் உம் மீது இல்லாதிருந்தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழிகெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழிகெடுத்துக் கொள்கின்றனர். அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உமக்கு வேதத்தையும், ஞானத்தையும் அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.(அல் குர்ஆன் 4:113).

மேலும் நபி(சல்) அவர்கள் எதை கற்று கொடுத்தார்கள் எனபதும் மக்கள் தனகளது வீடுகளில் எதை ஓதுகிறார்கள் எனபதையும் தெளிவாக பின் வரும்வசனத்தில் கூறுகிறான்.
 وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا (٣٤)

      உங்கள் வீடுகளில் நினைவு கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான். ( அல் குர்ஆன் 33:34)

           தனது வேத்தை விளக்க இறைதூதரை இறக்கியதும் அதற்கான  ஞானத்தையும் அவருக்கு கற்று கொடுத்தான் என்பதையும் விளங்க இதுவே போதுமானது .நாம் இனி இதுகுறித்த கட்டுரையாளரின் அறியாமையை வெளிப்படுத்துவோம்.[ refer:Source]

குர் ஆன் உண்மையில் உரைநடையா? கவிதையா? அல்லது வேறுவகையான இலக்கிய தன்மையுடையதா?
குற்றச்சாட்டு 1:
நமது பதில்:
      முதலில் இந்த கட்டுரையாளர் ஒரு விஷயத்தை புரியாமல் பேசுகிறார். அதாவது இலக்கியம் என்பது எழுத்து வடிவில் உருவாக்கப்படும் ஒரு படைப்பு. அது கட்டுரையாக கூட இருக்கலாம். இதை புரிந்து கொள்ள அரபிய அறிவு எல்லாம் தேவை இல்லை. சாதரண மொழியறிவு போதுமானது. ஆக இது அல் குர்ஆன் கவிதை யல்ல. இவர் இதுவரை கூறியதில் உண்மையான ஒரு செய்தி. இது குறித்து ஒரு நபிமொழி ஒன்றை பார்த்துவிட்டு இது குறித்து விளக்க துவங்கினால் சரியாக இருக்கும்.

      இப்னு அப்பாஸ்)ரலி) கூறியதாவது, நபி(சல்) அவர்களிடம் சென்ற அல் வலீத் பின் அல் முகிரா விடம் இறைதூதர் குர் ஆனை ஓதிக்காண்பித்தார்கள். அது அவனது உள்ளத்தை மென்மையாக்கியது போன்று தெரிந்தது. அபூஜகல் இது குறித்து கேள்விப்பட்டு அவரிடம் சென்று என் சிறியதந்தையே! நீங்கள் முஹம்மதிடம் சென்று அவரது வேதத்தை செவியுற்றதற்காக  (உங்களை தக்க வைக்க) உங்களது கிளையார்கள் உங்களுக்கு கொடுக்க செல்வததை திரட்டிகொண்டுள்ளனர்என்று கூறினான். அதற்கு அவன் கூறினான், “எனது செல்வ வளம் குறித்து குரைஷியர் நன்கு அறிவர்”. அப்போது அபூஜகல்அப்படியென்றால் நீங்களும் முஹம்மதை எதிர்கிறீர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் அவர் குறித்து மக்கள் வெறுக்குமாறு ஏதேனும் கூறுங்கள்என்று கூறினான். அப்போது(வலித்) அவன்: “நான் என்ன கூறுவது. அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னை விட உங்களில் கவிதை மற்றும் அதன் வகைகள் குறித்து நன்கு அறிந்த எவரும் இலர். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் கூறுபவை எந்த கவிதை வகையையும் ஒத்திருக்க வில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவரது வார்த்தைகள் இனிமையானதாகவும், கருணைமிக்கதாகவும் அதன் துவக்கம் பழக்குலையாகவும், அதன் இறுதி பறிக்கப்பட்ட கனியாகவும் இருக்கிறது . அது சிறந்தது. அதை விட சிறந்தது இல்லை.நான் சொல்வது என்பதை குறித்து சிந்திக்க சிறிது நேரம் கொடுஎன கூறினான். பிறகு அது வொரு சுனியம் தான். அதை மற்றவரிடம் இருந்து கற்று கொண்டார் என்று குர் ஆன் கூறுவதை போன்று கூறினான் ( அல்குர்ஆன் 74: 24,25). (அல்லாஹ் இவர் குறித்துதான் அல்முத்தஸ்ஸிர் சூராவின் 11 முதல் 26 வரையிலான வசனங்களை இறக்கினான்).
            நூல் : அலி இப்னு அஹமத் அல் வாஹிதியின் அஸ்பாப் அல் நுசூல்

அறிவிப்பாளர் தொடர்:
Muhammad ibn ‘Abd Allah ibn Nu‘aym Muhammad ibn ‘Ali al-Saghani> Ishaq ibn Ibrahim al-Dabari> ‘Abd al-Razzaq> Ma‘mar> Ayyub al-Sikhtiyyani> ‘Ikrimah> Ibn ‘Abbas

ஆக மேற்கூறிய நபிமொழி குர் ஆன கவிதை யல்ல என்பதையும். வலீத் பின் அல் முகீரா அது எந்த வகையான கவிதை நடையிலும் சேரவில்லை என்பதையும் தெளிவாக கூறுகிறார். ஆம் அவரது வாசகங்கள் உன்மையானவை. அரபு கவிதையை சொல்லின் ஓசையை அடிப்படையாக கொண்டு பின் வரும 16 வகைகளாக பிரிக்கலாம். இந்த இலக்கணத்தின் அடிப்படையிலேயே அனைத்து அரபு கவிதைகளும் அடங்கி விடும். அவை  தாவில் (طويل) . பாஸித்(بسيط) . வாஃபிர்(وافر) . காமில்(كامل) . ரஜ்ஸ்(رجز)  .ஃகாஃபிஃப்(خفيف)  . ஹசஜ்(هزج) . முதகாரிப்(متقارب)  . முன்சரிஹ்(منسرح)  . முக்ததப்(مقتضب)  . முதாரிய்(مضارع)  .மதீத்(مديد)  .முஜ்தத்(مجتثّ)  .ரமால்(رمل)  .முதாரிக் (متدارك) . சரீஹ்(سريع)   [REFER]
                இதில் எந்த வகையான ஓசைநயத்திற்கும் ஒத்ததாய் அல் குர்ஆன் இல்லை. ஆக அது கவிதையல்ல என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ்வும் தன்னுடைய வேதத்தில் அதை தெளிவாக குறிப்பிடவும் செய்கிறான் .(அல் குர்ஆன் 36:69). ஆக குர்ஆன் இலக்கியத்தின் எந்த வகையை சார்ந்தது. ஒருவேளை அது உரைநடையா என்று ஆய்வு செய்வோம். அரபிய உரைநடை இரண்டு வகையானது 1. சஜ் 2. முர்சல். இவற்றில் இரண்டாமவது சாதரண உரைநடை. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உரைநடை. முதலாமவது ஒசைநயத்துடன் கூடிய உரைநடை. ஆக குர் ஆனின் நடை சஜ் வகையதா என்றால் அது அதன் தன்மையுலும் இருந்து வேறுபட்டுள்ளது. சஜ் வகையான உரைநடைகளில் இறுதி ஒசையானது பரவலாக பல எழுத்து வடிவங்கள் மாறி மாறி இடம் பெறும். ஆனால் குர் ஆனில் ஒசை முடிவு பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஓரே ஒசை யுடையதாய் முடிவுறுவதாக Devin J. Stewart கூறுகின்றனர். இதனால்தான் Arthur J. Arberry, பின்வருமாறு கூறுகிறார்: குர் ஆன் உரையும் அல்ல கவிதையும் அல்ல. ஆனால் இவற்றின் தனிதன்மையுடைய இணைவு  (Arthur J. Arberry, The Koran, Oxford University Press, 1998) மேலும் இது குறித்து . Devin J. Stewart குறிப்பிடும் போது குர்ஆனின் நடையானது குரானிக் சஜ்( Quranic Saj) என்ற தனிதன்மையுடைய இலக்கிய அமைப்பு என்று கூறுகிறார்.( Devin J. Stewart, Saj’ in the Qur’an: Prosody and Structure). ஆக குர்ஆன் தனக்கென ஒரு இலக்கிய நடையுடையது என்பதை பார்த்தோம். இதுவல்லாத சில சிறப்புகள் இருப்பதாகவும் அறிஞர்கள் கூறுகினறனர். அவற்றுள் சில இந்த வசனங்களின் சொற்களில் நாம் எந்த வகையான மாற்றமும் செய்ய இயலாது. மீறி செய்யும் போது அதன் ஓசை நயம் கெட்டுவிடும் அல்லது பொருந்தா பொருள் ஏற்படும். அந்த இடத்தில் இருக்கும். அதற்கு இணையான வெறு வார்த்தைகளை அங்கு பொருத்த இயலமல் இருப்பதும் அதன் தனிச்சிறப்பில் ஒன்று. இதனால் தான் முஸைலமா முதல் பஸ்ஸார் இப்னு புர்த் என்று பல வித்தகர்களும் குர் ஆன் போன்ற ஒன்றை உருவாக்க எண்ணி மண்ணை கவ்வியதாக வரலாறு கூறுகிறது. [REFER]

குற்றச்சாட்டு 2:ஹதீஸின் தேவை என்ன?


நமது பதில்:
      அல்லாஹ்வே குர்ஆனில் நபி(சல்) அவர்களை வேததிற்கு விளக்கம் அளிக்கக்கூடியவராக அதன் அறிவுடன் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளான் என்பதை இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளோம். அதில் இடப்பட்டிருக்கும் கட்டளைகள் யாவும் தெளிவானவை. அதற்கு செயல் விளக்கம் நபி(சல்) அவர்கள் கொடுப்பார்கள் என்பதை முன்பே இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளோம்.

குற்றச்சாட்டு 3: பொருள் கொள்ள முடியாத வசனங்களா?

      இந்த வசனம் (அல் குர்ஆன் 3: 7) பல மொழிப்பெயர்ப்புகளில் இவர் குறிப்பிடும் படியாகவே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசனத்தை எப்படி பொருள் கொள்வது என்பது குறித்து முதலில் பார்ப்போம். அரபு மொழியின் அடிப்படையில் இந்த வசனத்திற்கு இருவாராக பொருள் கொள்ள முடியும் . ஆயினும் இந்த வசனத்திற்கு பின்வருமாறு பொருள்கொள்வதுதான் சரியானதாகும்.

 هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلا أُولُو الألْبَابِ (٧)

 (முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.    (அல்குர்ஆன் 3:7)

     அல்லாஹ் இந்த வேதத்தில் பல இடங்களில் இதை தெளிவானதாக இறக்கியுள்ளதாக கூறியுள்ளான். புத்தகத்தை புரியும் அடிப்படையை முன்பே விளக்கியுள்ளோம். இதில் இடம் பெறும் பிற வசனங்களை கருத்தில் கொண்டு இந்த வசனத்தை இவ்வாறு பொருள் கொள்வதுதான சரியானதாகும். மேலும் இந்த வசனத்தை ஆழ்ந்து கவனித்தால் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளலாம் .எப்படி என்றால் அல்லாஹ்விற்கு மட்டுமே பொருள் விளங்கக்கூடிய வசனங்கள் எப்படி அது பல பொருள் தரும். அது எந்த பொருளும் தரவே கூடாது.  அதில் உள்ள பொருளை கொண்டு எப்படி உள்ளங்களில் கோளாறு உடையவர்கள் குழப்பம் செய்ய முடியும்.ஆக அது பல பொருள் தந்தாலும் அதனை கல்வியில் தேர்ந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பது சரியான மொழியாக்கம் தான்
       இதற்கு உதாரணமாக அல்லாஹ்வின் தன்மைகளாக அவனது முகம், கை, கால் என்று இடம் பெறும் இடங்களில் எந்த மாற்று பொருளும் கொடுக்காமல் அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டும். அதன் தன்மைகளை ஆய்வு செய்து அதில் நமது கருத்துகளை திணிக்க முற்படக்கூடாது. ஏன்னென்றால் அவனுக்கு நிகர் எதுவுமில்லை என்பது இந்த வேதத்தின்  தெளிவான தாய் வசனமாகும். அவனது தன்மைகள் குறித்த அறிவை நாம் பெற்றிருக்க வில்லை என்று ஏற்று கொள்ள வேண்டும். அல்லாஹ்விடம் இருந்து வந்ததாக நம்பிக்கை கொள்ள வேண்டும் 

குற்றச்சாட்டு 4: சட்டமாற்றம் ஏன்?


நமது பதில் :
   முதலில் இவ்வாறு வசனங்கள் மாற்றப்படுவதற்கு அல்லாஹ் தனது திருமறையில் என்ன காரணத்தை முன்வைகிறான் என்பதை பார்ப்போம்.
         ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா? (அல் குர்ஆன் 2:106)
     அல்லாஹ் மேற்கூறிய வசனத்தில் ஒரு வசனத்திற்கு பகரமாக இன்னொரு சிறந்த வசனம் இடம் பெறும் என்று கூறுகிறான். இதன் பொருள் அந்த காலத்திற்கு தகுந்த சட்டத்தை அல்லாஹ் மாற்றி அமைப்பான். உதாரணமாக ஆட்சி இல்லாத போது குற்றவியல் தண்டனை குறித்த சட்டங்களை மக்களுக்கு கூறுவதால் எந்த பயனும் இல்லை. அதனால் ஏன் குழப்பம் கூட ஏற்படலாம். இதே ஆட்சி அமைக்கும் போது குற்றவியல் தண்டனை குறித்த சட்டங்கள் வழங்கப்பட்டது. சூழல்கள் மாற மாற அதற்கு ஏற்ற சட்டங்களை அல்லாஹ் படிப்படியாக இறக்கியுள்ளான். இறுதியாக மாற்றப்பட்ட வசனங்கள் அனைத்தும் அதற்கான சூழல்கள் ஏற்படும் போது இன்றும் நடைமுறைபடுத்தும் சாத்தியகூறுகளுடன் உள்ளது. இதுவே இது இறைவேதம் என்பதற்கு சான்றாக உள்ளது.
குற்றச்சாட்டு 5: மாற்றப்பட்டவை ஏன் இன்னும் காணப்படுகிறது.

நமது பதில்:
        இதுவும் இறைவேதம் என்பதற்கு சான்றாக உள்ளது. மனிதனே வழங்கி மனிதனே மாற்றும் சட்டங்கள் அனைத்தும் இந்த கட்டுரையாளர் நினைப்பதுபோல் தான் இருக்கும். ஆனால் குர் ஆன் நபி(சல்) அவர்களது காலத்திலேயே தொகுப்பட்டதாக பின் வரும் நபிமொழிகள் கூறுகின்றன.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக் காடிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.
மேலும், நபி(ஸல்) அவர்கள், 'குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் எனக்கு ஓதிக் காட்டி வந்தார்" என்று கூறினார்கள்.
இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஃபாத்திமா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.  (புஹாரி 3220)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
ஒவ்வோர் ஆண்டுக்கொரு முறை (வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற) குர்ஆன் வசனங்களை நபி(ஸல்) அவர்களுக்கு (மொத்தமாக) ஓதிக்காட்டுவது வழக்கம். நபி(ஸல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை அவர்களுக்கு (ஜிப்ரீல்) ஓதிக்காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் (ரமளான் மாதத்தின் இறுதிப்)பத்து நாள்கள் 'இஉதிகாஃப்' மேற்கொள்வது வழக்கம். அவர்கள் இறந்த ஆண்டு, (ரமளானில்) இருபது நாள்கள் 'இஉதிகாஃப்' மேற்கொண்டார்கள்.(புஹாரி 4998)

                மேற்குறிபிட்டபடி குர் ஆன ஒலி வடிவத்தில் அதன் அத்தியாயங்களில் உள்ள வசன்ங்கள்  சரிபடுத்தப்பட்டது. பிறகு நபிதொழர்கள் முழுமையாக எழுத்து வடிவில் தொகுத்தனர். அவர்கள் தொகுத்த போதும் அல்லாஹ்வின் தூதர் எப்படி ஒலிவடிவில் விட்டு சென்றார்களோ அதன் அடிப்படையிலேயே தொகுத்தனர். பின் வரும் செய்தி ஏன் சட்டம் மாற்றம் தொடர்பானது இடம் பெற்றிருக்கிறது என்பதை விளக்கிவதாய் உள்ளது.

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
நான், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம், 'உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்யட்டும்! ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான்' எனும் (திருக்குர்ஆன் 02:240 வது வசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (திருக்குர்ஆன் 02:234) மாற்றிவிட்டதே! இதை 'ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?' அல்லது 'இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே)விட்டுவைக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்' என்று பதிலளித்தார்கள்.(புஹாரி 4530). 
    ஏன் நபிதோழர்கள் மாற்றம் குறித்து அறிந்து இருந்தும் மாற்றவில்லையென்றால் அதன் உன்மை அமைப்பு அல்லாஹ்வால் வழங்கப்பட்டவாறு  அப்படியே பாதுகாக்கத்தான். மனிதனால் கூறப்பட்டிருந்தால் இவர் குறிப்பிடுவதுபோல மற்றபட்ட சட்டங்கள் இல்லாமல் இருந்திருக்கும். அதில் எந்த மாற்றத்தையும் புகுத்தவில்லை என்பதே குர் ஆன் இன்றுவரை பாதுகாக்கப்பட்டது என்பதற்கு சான்று.

Wednesday, May 6, 2015

இஸ்லாம்: விமர்சனங்களும் பதில்களும் பகுதி - 01 - ஜிஸ்யா வரி



ஜிஸ்யா வரி

சமூக இணையத்தளங்களில் இஸ்லாத்தின் விரோதிகளால் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் தவறாக சித்தரிக்கப்பட்டு காட்டப்படுகின்றது. இதற்கு இஸ்லாத்தின் விரோதிகள் பயன்படுத்தும் ஓர் ஆயுதம் ஜிஸ்யா வரியாகும். ஜிஸ்யா என்றால் என்ன? அது ஏன்? என்பதை பார்ப்போம்.

இவ்வசனத்தில் (9:29) முஸ்லிம் அல்லாதவரிடம் ஜிஸ்யா வரி வசூலிக்குமாறு கூறப்படுகிறது. இது பிற மதத்தவர் மீது செய்யும் அக்கிரமம் போல் கருதப்படுகிறது. இது பற்றி உண்மை நிலையை அறிந்து கொண்டால் ஜிஸ்யா வரியை யாரும் குறை கூற மாட்டார்கள்.

இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகின்றது?

இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஸகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால் நடைகள், விளைவிக்கும் தானியங்கள் மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் ஸகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஸகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸகாத் என்பது இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஸகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப் போருக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஸகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஸகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமல் இருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாக கீழ்க்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

1. முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.

2. முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸகாத் வரி விதிப்பது.

3. முஸ்லிமல்லாதவர்கள் மீது வேறு விதமான வரி விதிப்பது.

இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லி மல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.

வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவார்கள். மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியான உரிமை அவர்களுக்கு இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கி விட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதவர்களும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

ஸகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்த வரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஸகாத் அமைந்துள்ளது.

இந்த ஸகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது, இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும். இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள், வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும்.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஸகாத் எனும் வரியை விதிக்க முடியாது.

ஸகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஸகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும், உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்குக் காட்டுவார்கள்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்புத் தர மாட்டார்கள். இயன்ற வரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஸகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.

வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.

இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

"ஸகாத்" என்ற வகையிலில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே "ஜிஸ்யா" எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விடப் பல மடங்கு அதிகமாக வரி செலுத்தினர்.

இஸ்லாமிய ஆட்சி நடந்த நாடுகளில் பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத் தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.

நன்றி: இந்தப்பதிவை உருவாக்கியவருக்கு! (Facebook இல் இருந்த எடுத்த கட்டுரை)