பக்கங்கள் செல்ல

Saturday, September 6, 2025

யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்

 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم 

யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்

        நாம் சென்ற தொடரில் யாக்கோபின் நிருபத்தின் வரலாற்று அறிமுகம், அதன் நியமன அங்கிகாரம் பெற்றத்தின் படி நிலைகளையும்  தரவுகளுடன் விளக்கியிருந்தோம். மேலும் அதன் நம்பகத்தன்மை எப்படி கிறித்தவ உலகில் நிலையற்றதாய் இருக்கிறது என்பதையும் அதே நிலை தற்காலத்திலும் நீடிக்கிறது என்பதையும், புதிய ஏற்பாட்டின் அறிஞர்களின் கூற்றினாலும், புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் இந்த நிருபம் எழுதப்பட்டதாக குறிப்பிடும் கால நிர்ணயத்தில் இருக்கும் முரண்பாடுகளை கொண்டும் விளக்கியிருந்தோம். இந்த நிருபத்தின் எழுத்தர் குறித்த நம்பகத்தன்மையை சந்தேகிப்பதற்கு தற்காலத்தில் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் முன்வைக்கும் காரணங்களையும், அந்த காரணங்களில் சிலவற்றையும் விளக்கமாக காணவுள்ளோம்.

யாக்கோபும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களும்

        தற்காலத்தில் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள், யாக்கோபின் நிருப எழுத்தர்  குறித்து சந்தேகிப்பதற்கு முன்வைக்கும் காரணங்களையும், அவர்களது ஆக்கங்களையும் பட்டியலிடுகிறோம்

அறிஞர் முன்வைக்கும் காரணம்/வாதம் காரணம் முன்வைக்கப்படும் அறிஞரின் ஆக்கம்
 Oecumenius (Byzantine commentator) அதன் தாமதமான நியமன ஏற்பு. Commentary on the Catholic Epistles
Martin Luther (1483–1546) விசுவாசத்தினால் மட்டுமே நீதிமான்களாக்கப்படுதல் (ரோமர், கலாத்தியர்) என்ற பவுலின் போதனைக்கு யாக்கோபு முரண்படுவதாகத் தோன்றுவது. Preface to the New Testament (1522 revised 1546)
Andreas Karlstadt (1486–1541 யாக்கோபின் அப்போஸ்தலத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியது Apologia(1520)
Erasmus of Rotterdam (1466–1536) நீதியாளன் யாக்கோப்பின் (கலிலேய அராமேய மொழி பேசுபவர்) அசாதாரணமான  பாணியிலான கிரேக்க மொழியின் நேர்த்தி. Annotations on the New Testament (1516)
Louis Cappellus (1585- 1658) மொழியியல் சிக்கல்கள் Critica Sacra(1650)
Johann Salomo Semler
(1725–1791)
யாக்கோபு அப்போஸ்தலர் அல்லாதவராகக் கருதப்படுகிறது. 2 ஆம் நூற்றாண்டு அநாமதேய கிறிஸ்தவரால் எழுதப்பட்டிருக்கலாம். கடிதம் படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதன் சந்தேகத்திற்குரிய தோற்றத்தை பிரதிபலிக்கிறது என்று கூறப்படுகிறது. Abhandlung von freier Untersuchung des Kanon (1771- 1775)
Jean Le Clerc (1657- 1736)மொழியியல் மெருகு மற்றும் ஆரம்பகால சபை பிதாக்களின் சாட்சியங்களின் பற்றாக்குறை Ars Critica and  Annotations on the New Testament(1703)
Johann David Michaelis (1717–1791) கலிலேயே யூதரான  யாக்கோப்பின்  மிகவும் நேர்த்தியான கிரேக்கம யாக்கோப்பு நிருபத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. ஆரம்பகால பேட்ரிஸ்டிக் எழுத்துக்களில் ஜேம்ஸ் அரிதாகவே மேற்கோள் காட்டப்பட்டதாகவும், இது தாமதமான மற்றும் சந்தேகத்திற்குரிய ஏற்றுக்கொள்ளலைக் குறிக்கிறது  Introduction to the New Testament(Einleitung in die gottlichen Schriften des Neuen Bundes, 1750- 1767)
Edward Evanson (1731–1805)யாக்கோபின் நிருபம், பவுலின் நம்பிக்கையின் இறையியலை சமப்படுத்த வடிவமைக்கப்பட்ட பிற்கால மோசடியாகக் கருதப்படுகிறது The Dissonance of the Four Generally Received Evangelists: And the Evidence of Their Respective Authenticity, Examined; with that of Some Other Scriptures Deemed Canonical
Gotthold Ephraim Lessing (1729-1781) ஆரம்பகால நியதி சர்ச்சைகள் Theological writings (1774-1778)
Johann Gottfried Eichhorn (1752- 1827) ஹெலனிஸ்டிக் கிரேக்க பாணி மற்றும் பாலஸ்தீனிய யூத கிறிஸ்தவத்துடன் தொடர்பு இல்லாதது Einleitung in das Neue  Testament (1804)
Ferdinand Christian Baur (1792–1860) பவுலிய மற்றும் யூத-கிறிஸ்தவ பிரிவுகளை சமரசம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட 2 ஆம் நூற்றாண்டின் உருவாக்கமாக யாக்கோபின் நிருபத்தை கண்டார். இது புனைப்பெயரில் எழுதப்பட்ட்து.  யாக்கோபின்  மரணத்திற்குப் பிறகு நீண்ட காலத்திற்குப் பிறகான சர்ச் மோதல்களைப் பிரதிபலிக்கிறது. Paulus, der Apostel Jesu Christi(1845) and Kirchengeschichte der drei ersten Jahrhunderte (1853)
Karl Weizsacker (1822- 1899) மிகவும் மெருகூட்டப்பட்ட கிரேக்கம். அசல் நிருப  அம்சங்கள் ஏதுமில்லாத ஒரு ஒழுக்கவியல் பிரசங்கமாக யாக்கோபின் நிருபத்தை கருதுகிறார். Das apostolische Zeitalter der christlichen Kirche (1886)
Albrecht Ritschl (1822–1889) யாக்கோபு நிருபத்தின் கிரியைக்கான முக்கியத்துவம், பவுலிய எதிர்ப்புக்கு வேண்டுமென்றே செய்யப்பட்ட திருத்தமாகக் கருதப்படுகிறது. Die Entstehung der altkatholischen Kirche(1850)
Adolf Hilgenfeld (1823–1907) பவுலின் இறையியலை மென்மையாக்குவதற்காக எழுதப்பட்ட, அப்போஸ்தலிக்கத்திற்குப் பிந்தையது என்று யாக்கோபின் நிருபம் என்று வாதிடுகிறார். கிரியைக்கான நீதி தொடர்பாக தேவாலயத்திற்குள் நடந்த போராட்டத்தின் சான்றாக இதைக் காண்கிறார். Einleitung in das Neue  Testament (1875)
Martin Dibelius (1883–1947) 19 ஆம் நூற்றாண்டின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட அவரது விளக்கவுரை, யாக்கோபின் நிருபத்தை ஒரு உண்மையான அப்போஸ்தலிக்க கடிதமாக அல்லாமல் ஒரு ஞான அறிவுரையாகக் கருதியது. ஜேம்ஸை அசல் நிருபத்தின் அம்சங்கள் இல்லாத ஒரு ஒழுக்கவியல் பிரசங்கமாகக் கருதினார். James (Hermeneia, 1975; orig. 1921)
Heinrich Julius Holtzmann (1832- 1910) இது முதலாம் நூற்றாண்டு பாலஸ்தீனத்திற்குப் பொருந்தாது, ஆனால் பிற்கால ஹெலனிஸ்டிக் சூழலைப் பிரதிபலிக்கிறது. Lehrbuch der neutestamentlichen Theologie(1896)
James Moffatt (1870–1944) யாக்கோபின் பெயரில் இட்டுக்கட்டபட்ட ஒன்று. ஜெருசலேமின் யாக்கோபு அல்லாத வேறொருவரால் நேர்த்தியான கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. An Introduction to the Literature of the New Testament. (1911)
Rudolf Bultmann (1884–1976) யாக்கோபின் நிருபத்தை ஹெலனிஸ்டிக்-யூத ஞான மரபில் அப்போஸ்த்தலர் அல்லாத ஒருவரால் எழுதப்பட்டது.  யாக்கோபின்  கடிதமாக அல்ல, ஒழுக்கவியல்  கூற்றுக்களின் தளர்வான தொகுப்பாக இதைப் பார்த்தார். Theology of the New Testament(1948)
Hans Conzelmann (1915–1989) Martin Dibelius உடன் உடன்படுகிறார்: யாக்கோபின் நிருபம்  அப்போஸ்தலருக்குப் பிந்தையது. மேலும்  யாக்கோபின்  சொந்த போதனையை விட பொதுவான திருச்சபை போதனையை பிரதிபலிக்கிறது. Einleitung in das Neue  Testament (1963)
Raymond E. Brown (1928–1998) பாணி மற்றும் இறையியல் காரணமாக, யாக்கோபு வரலாற்று  யாக்கோபாக  இருக்க வாய்ப்பில்லை. An Introduction to the New Testament (1997)
Luke Timothy Johnson (b. 1943) 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பான்மையான அறிஞர்களின் ஒருமித்த கருத்தான,  யாக்கோபின் நிருபம்  அப்போஸ்தலருடையது அல்ல என்பதை அவர் ஏற்கிறார். The Letter of James (AYB, 1995)
 Werner Kümmel (1905-1995)   யாக்கோபின் நிருபம்  புனையப்பட்டது, 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 2 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாக்கோபின்  பெயரை பயன்படுத்தி யாரோ எழுதியது. Introduction to the New Testament(1966)
James Hardy Ropes (1866- 1933) சிறந்த கிரேக்க பாணி மற்றும் பாலஸ்தீனிய பின்னணி இல்லாமை. ஜெருசலேம் அல்லாத புலம்பெயர் ஹெலனிஸ்டிக் கிறிஸ்தவத்தின் தயாரிப்பு. The Epistle of St. James (ICC Commentary 1916)
 John Painter (b. 1935) ஜெருசலேமின் யாக்கோபின் நேரடி எழுத்துருவாக்கத்திற்கு எதிராக வாதிடுகிறார். பிற்கால சூழலில் யூத-கிறிஸ்தவ நெறிமுறை மரபை வலுப்படுத்த  யாக்கோபின்  பெயரில் புனையப்பட்ட கடிதமாக பார்க்கிறார். James(2004)
Dale C. Allison Jr. (b. 1955)இவர், யாக்கோபு நிருபத்தின் முன்னணி  நிபுணர்.  யாக்கோபின் கிரேக்க பாணி மற்றும் ஞான அறிவுரை வகை  யாக்கோபின் நேரடி எழுத்துருவாக்கத்தை சாத்தியமற்றதாக்குகிறது. இது 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்டதைக் குறிக்கிறது. A Critical and Exegetical Commentary on the Epistle of James (ICC, 2013)
Richard Bauckham (b. 1946) இதன் நம்பகத்தன்மைக்கு அதிக சார்பு நிலையை கொண்டிருந்தாலும், புனையப்பட்டது என்ற அறிஞர்களின் ஒருமித்த கருத்தை ஏற்கிறார். யாக்கோபின் நேரடி எழுத்துருவாக்கம் என்பதற்குப் பதிலாக யாக்கோபை மையமாகக் கொண்ட மரபினால் இந்த நிருபம் எழுத்தப்பட்டது என்கிறார். Essays on James (Collected in studies of jude/james, 2000s)
Patrick J. Hartin (b. 1949) யாக்கோபின் நிருபத்தை ஹெலனிஸ்டிக் யூத-கிறிஸ்தவ ஞானத்தைப் பிரதிபலிப்பதாகக் கருதுகிறார், வரலாற்று ஜேம்ஸ் அல்லாமல் பிற்கால சீடர் ஒருவர் அவரது பெயரில் எழுதியதாகக் கூறுகிறார். James (Sacra Pagina, 2003)
Dan McCartney, Sophie Laws’ successors, Margaret Mitchell) மிகவும் மெருகூட்டப்பட்ட கிரேக்கம், நிருப வடிவம் அல்லாமல் ஞானம்/பிரசங்க வடிவம்,. ஆரிகன் /யூசிபியஸுக்கு போன்றவர்களுக்கு முன் அரிதான ஆதி திருச்சபை பிதாக்களின் சான்றுகள், பவுலுடன் இறையியல் மோதல் ஆகிய காரணத்தை முன்னிறுத்துகின்றனர். --
Pheme Perkins இந்த உரையை ஒரு அப்போஸ்தலிக்கத் தலைவருக்கு அல்ல, கிரேக்கமயமாக்கப்பட்ட கிறிஸ்தவ ஒழுக்க ஆசிரியருக்குக் முன்மொழிகிறார் The Letter of James” (New Interpreter’s Bible, Vol. XII, 1998)
Peter H. Davids பெயர் தெரியாத புனைவாக கருதுகிறார். "யாக்கோபின் நிருபம்" அதிகாரத்திற்காக ஏற்கனவே உள்ள ஞான உரையுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் The Epistle of James (NIGTC, 1982) 

    மேலே தரப்பட்டுள்ள பட்டியலில் மிகப்பெரும்பான்மை அறிஞர்களின் சந்தேகத்திற்கான காரணம் பின்வருபவையே.
💥தாமதமான நியமன ஏற்பு 
💥பவுலின் போதனைக்கு யாக்கோபு முரண்படுவதாகத் தோன்றுவது 
💥நீதியாளன் யாக்கோப்பின் (கலிலேய அராமேய மொழி பேசுபவர்) அசாதாரணமான ஹெலனிஸ்டிக் பாணியிலான கிரேக்க மொழியின் நேர்த்தி. 
💥அசல் நிருப அம்சங்கள் ஏதுமில்லாத ஒரு ஒழுக்கவியல் பிரசங்கமாக இருப்பது.

        மேலே பட்டியலிடப்பட்ட காரணத்தில் முதலில் கூறப்பட்டது குறித்து சென்ற கட்டுரையில் விளக்கியுள்ளோம். மேலும் சில காரணங்களை நாம் விளக்குவதை விட, கிறித்தவ வரலாற்றில் மிக முக்கியமானவராக கருத்தப்படும் ஒருவரின் விளக்கத்தை முன்வைப்பதே இங்கு ஆகப்பொருத்தமானதாக இருக்கும். அவர் வேறு யாரும் அல்ல, புரோட்டஸ்டண்டின் தந்தை என்று கிறித்தவ உலகால் அழைக்கப்படும் மார்டின் லூதர் அவர்கள்தான். 

மார்டின் லூதரின் விமர்சனம்

        யாக்கோபின் நிருபம் குறித்த விமர்சனத்தை பொருத்தவரை பலர் இதனை சர்ச்சைக்குரியது என்று கி.பி.3ம் நூற்றாண்டு முதல் கூறிவந்திருந்தாலும், இந்த விமர்சனத்தை நாம் அறிந்த வரையில் நேர்த்தியாக முதன் முதலில் முன்வைத்தவர் புரட்டஸ்தாந்தத்தின் தந்தையான மார்டின் லூதர்தான். அதனை அவரது எழுத்துக்களில் இருந்தும், பேச்சுக்களில் இருந்தும் முன்வைக்கிறோம்.

        In a word, St. John’s Gospel and his first Epistle, St. Paul’s Epistles, especially Romans, Galatians and Ephesians, and St. Peter’s first Epistle are the books that show you Christ and teach you all that it is necessary and good for you to know, even though you were never to see or hear any other book or doctrine. Therefore St. James’ Epistle is really an epistle of straw, compared to them; for it has nothing of the nature of the Gospel about it.

சுருக்கமாகச் சொன்னால், புனித யோவானின் நற்செய்தி மற்றும் அவரது முதல் நிருபம், புனித பவுலின் நிருபங்கள், குறிப்பாக ரோமர், கலாத்தியர் மற்றும் எபேசியர், மற்றும் புனித பேதுருவின் முதல் நிருபம் ஆகியவை உங்களுக்கு கிறிஸ்துவைக் காட்டி, உங்கள் அனைவருக்கும் கற்பிக்கும் புத்தகங்கள். நீங்கள் வேறு எந்த புத்தகத்தையும் கோட்பாட்டையும் பார்க்கவோ கேட்கவோ இல்லை என்றாலும், அதை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம் மற்றும் நல்லது. எனவே, புனித யாக்கோபின் நிருபம், அவற்றுடன் ஒப்பிடும்போது உண்மையில் வைக்கோலால் ஆன நிருபம்; ஏனெனில் அதில் நற்செய்தியின் தன்மை எதுவும் இல்லை. ( PREFACE TO THE NEW TESTAMENT 1545 (1522), WORKS OF MARTIN LUTHER VOL. 6 by Martin Luther , THE AGES DIGITAL LIBRARY COLLECTIONS P.No. 339)

        Though this Epistle of St. James was rejected by the ancients, I praise it and hold it a good book, because it sets up no doctrine of men and lays great stress upon God’s law. But to state my own opinion about it, though without injury to anyone, I consider that it is not the writing of any apostle.

My reasons are as follows. 

First: Flatly against St. Paul and all the rest of Scripture, it ascribes righteousness to works, and says that Abraham was justified by his works, in that he offered his son Isaac, though St. Paul, on the contrary, teaches, in Romans 4:2, that Abraham was justified without works, by faith alone, before he offered his son, and proves it by Moses in Genesis 15:6. Now although this Epistle might be helped and a gloss be found for this work-righteousness, it cannot be defended against applying to works the saying of Moses in Genesis 15:6, which speaks only of Abraham’s faith, and not of his works, as St. Paul shows in Romans 4. This fault, therefore, leads to the conclusion that it is not the work of any apostle.  

Second: Its purpose is to teach Christians, and in all this’ long teaching it does not once mention the Passion, the Resurrection, or the Spirit of Christ. He names Christ several times, but he teaches nothing about Him, and only speaks of common faith in God. For it is the duty of a true apostle to preach of the Passion and Resurrection and work of Christ, and thus lay the foundation of faith, as He Himself says, in John 15:27, “Ye shall bear witness of me.” All the genuine sacred books agree in this, that all of them preach Christ and deal with Him. That is the true test, by which to judge all books, when we see whether they deal with Christ or not, since all the Scriptures show us Christ (Romans 3:21), and St. Paul will know nothing but Christ (1 Corinthians 15:2). What does not teach Christ is not apostolic, even though St. Peter or Paul taught it; again, what preaches Christ would be apostolic, even though Judas, Annas, Pilate and Herod did it.

        But this James does nothing more than drive to the law and its works; and he mixes the two up in such disorderly fashion that it seems to me he must have been some good, pious man, who took some sayings of the apostles’ disciples and threw them thus on paper; or perhaps they were written down by someone else from his preaching. He calls the law a “law of liberty,” though St. Paul calls it a law of slavery, of wrath, of death and of sin (Galatians 3:23; Romans 7:11).  
       Moreover, in James 5:20, he quotes the sayings of St. Peter, “Love covereth the multitude of sins” (1 Peter 4:8) and “Humble yourselves under the hand of God” (1 Peter 5:6), and of St. Paul (Galatians 5:10), “The Spirit lusteth against hatred”; and yet, in point of time, St. James was put to death by Herod, in Jerusalem, before St. Peter.  So it seems that he came long after Sts. Peter and Paul.  
        In a word, he wants to guard against those who relied on faith without works, and is unequal to the task [in spirit, thought, and words, and rends the Scriptures and thereby resists Paul and all Scripture], and would accomplish by insisting on the Law what the apostles accomplish by inciting men to love. Therefore, I cannot put him among the chief books, though I would not thereby prevent anyone from putting him where he pleases and estimating him as he pleases; for there are many good sayings in him.
    புனித யாக்கோபின் இந்த நிருபம் பழங்காலத்தவர்களால் நிராகரிக்கப்பட்டாலும், நான் அதைப் பாராட்டுகிறேன், இதை ஒரு நல்ல புத்தகமாக வைத்திருக்கிறேன், ஏனெனில் இது மனிதர்களின் எந்தக் கோட்பாட்டையும் அமைக்கவில்லை மற்றும் கடவுளின் சட்டத்தின் மீது அதிக அழுத்தத்தை அளிக்கிறது. ஆனால், அதைப் பற்றி யாருக்கும் பாதிப்பில்லாமல் என் சொந்தக் கருத்தைச் சொன்னால், “அது எந்த இறைத்தூதர் எழுதியது அல்ல என்று கருதுகிறேன்” என்பதே. 
என்னுடைய காரணங்கள் பின்வருமாறு

முதலாவது: புனித பவுலுக்கும் வேதாகமத்தின் மற்ற எல்லா பகுதிகளுக்கும் எதிராக, அது கிரியைக்கு நீதியைக் கூறுகிறது, மேலும் ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கை பலியாகக் கொடுத்ததன் மூலம் தனது கிரியையினால் நீதிமானாக்கப்பட்டதாகக் கூறுகிறது, ஆனால் புனித பவுல், மாறாக, ரோமர் 4:2 இல், ஆபிரகாம் தனது மகனை பலியாகக் கொடுப்பதற்கு முன்பு, கிரியையினால் இல்லாமல், விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்பட்டதாகக் கற்பிக்கிறார், மேலும் ஆதியாகமம் 15:6 இல் மோசேயின் மூலம் இதை நிரூபிக்கிறார். இந்த கிரியை-நீதி என்பதற்கு, இந்த நிருபம் துணையாக இருந்து அதற்கு விளக்கத்தை , கொண்டிருந்தாலும், ஆதியாகமம் 15:6-ல் மோசேயின் வார்த்தையை, கிரியைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியாது, ரோமர் 4 இல் புனித பவுல் காட்டுவது போல, இது ஆபிரகாமின் விசுவாசத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது, அவருடைய செயல்களைப் பற்றி அல்ல. எனவே, இந்தக் குறை, இது எந்த அப்போஸ்தலரின் எழுத்தும் அல்ல என்ற முடிவுக்கு இட்டுச் செல்கிறது. 

இரண்டாவது: இதன் நோக்கம் கிறிஸ்தவர்களுக்குக் கற்பிப்பதாகும், மேலும் இந்த நீண்ட போதனைகளில் அது ஒருமுறை கூட பாடுகள், உயிர்த்தெழுதல் அல்லது கிறிஸ்துவின் ஆவியைக் குறிப்பிடவில்லை. அவர் பலமுறை கிறிஸ்துவின் பெயரைக் குறிப்பிடுகிறார், ஆனால் அவரைப் பற்றி எதுவும் கற்பிக்கவில்லை, மேலும் கடவுள் மீதான பொதுவான நம்பிக்கையைப் பற்றி மட்டுமே பேசுகிறார். ஏனென்றால், கிறிஸ்துவின் பாடுகள், உயிர்த்தெழுதல் மற்றும் கிரியையைப் பற்றிப் பிரசங்கிப்பதும், அதன் மூலம் விசுவாசத்தின் அடித்தளத்தை அமைப்பதும் ஒரு உண்மையான அப்போஸ்தலரின் கடமையாகும், அவர் தாமே யோவான் 15:27 இல், "நீங்கள் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பீர்கள்" என்று கூறுகிறார். எல்லாப் புத்தகங்களும் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகின்றனவா இல்லையா என்பதைப் பார்க்கும்போது, எல்லாப் புத்தகங்களையும் மதிப்பிடுவதற்கான உண்மையான சோதனை அதுதான், ஏனென்றால் எல்லா வேதவாக்கியங்களும் நமக்குக் கிறிஸ்துவைக் காட்டுகின்றன (ரோமர் 3:21), மேலும் புனித பவுல் கிறிஸ்துவைத் தவிர வேறு எதையும் அறியமாட்டார் (1 கொரிந்தியர் 15:2). கிறிஸ்துவைப் போதிக்காதது அப்போஸ்தலருடையது அல்ல, புனித பேதுரு அல்லது பவுல் அதைக் கற்பித்திருந்தாலும் கூட; இன்னும், கிறிஸ்துவைப் பிரசங்கிப்பது அப்போஸ்தலருடையதாய் இருக்கும். அதை யூதாஸ், அன்னாஸ், பிலாத்து மற்றும் ஏரோது செய்திருந்தாலும் கூட,.

    ஆனால் இந்த யாக்கோபு நியாயப்பிரமாணத்தையும் அதன் செயல்களையும் நோக்கிச் செல்வதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை; இரண்டையும் மிகவும் ஒழுங்கற்ற முறையில் குழப்புகிறார், அவர் ஒரு நல்ல, பக்தியுள்ள மனிதராக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது, அவர் அப்போஸ்தலர்களின் சீடர்களின் சில கூற்றுகளை எடுத்து காகிதத்தில் எழுதியிருக்கலாம்; அல்லது ஒருவேளை அவை வேறொருவரால் அவரது பிரசங்கத்திலிருந்து எழுதப்பட்டிருக்கலாம். அவர் நியாயப்பிரமாணத்தை "சுதந்திரத்தின் சட்டம்" என்று அழைக்கிறார், ஆனால் புனித பவுல் அதை அடிமைத்தனம், கோபம், மரணம் மற்றும் பாவத்தின் சட்டம் என்று அழைக்கிறார். (கலாத்தியர் 3:23; ரோமர் 7:11) 
        மேலும், யாக்கோபு 5:20-ல், அவர் புனித பேதுருவின் கூற்றுகளான "அன்பு திரளான பாவங்களை மூடும்" (1 பேதுரு 4:8) மற்றும் "தேவனுடைய பலத்த கைக்குள் தாழ்மைப்படுங்கள்" (1 பேதுரு 5:6, யாக்கோபு 4:10) மற்றும் புனித பவுலின் கூற்றுகளான "ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது;" (கலாத்தியர் 5:17) ஆகியவற்றை மேற்கோள் காட்டுகிறார்; ஆனாலும், அந்த காலப்பகுதியில், புனித யாக்கோபு எருசலேமில், புனித பேதுருவுக்கு முன்பாக ஏரோதுவால் கொல்லப்பட்டிருந்தார். எனவே இவர் புனித பேதுரு மற்றும் பவுல் ஆகியோருக்கு பின்னர் நீண்ட காலத்திற்கு பிறகு வந்ததாகத் தெரிகிறது.  
        சுருக்கமாகச் சொன்னால், கிரியைகள் இல்லாமல் விசுவாசத்தை நம்பியிருப்பவர்களிடமிருந்தும், [ஆவி, சிந்தனை மற்றும் வார்த்தைகளில், வேதவசனங்களைக் கிழித்து, அதன் மூலம் பவுலையும் எல்லா வேதவசனங்களையும் எதிர்ப்பவர்களிடமிருந்தும்] அவர் தற்காக்க விரும்புகிறார், மேலும் அப்போஸ்தலர்கள் மனிதர்களை அன்பு செய்யத் தூண்டுவதன் மூலம் நிலைநிறுத்துவதை நியாயப்பிரமாணத்தை வலியுறுத்துவதன் மூலம் நிலைநிறுத்துகிறார். ஆகையால், அவருடையதை முக்கிய புத்தகங்களில் சேர்க்க முடியாது, இருப்பினும் யாரும் அவருடையதை அவர் விரும்பும் இடத்தில் வைப்பதையும், அவர் விரும்பும் விதமாக மதிப்பிடுவதையும் நான் தடுக்க மாட்டேன்; ஏனென்றால் அவரிடம் பல நல்ல வார்த்தைகளும் உள்ளன. (PREFACE TO THE EPISTLES OF SAINT JAMES AND SAINT JUDE 1545 (1522), WORKS OF MARTIN LUTHER VOL. 6 by Martin Luther , THE AGES DIGITAL LIBRARY COLLECTIONS P.No. 374-375)

        மேலே குறிப்பிட்ட மார்டின் லூதரின் கருத்து யாக்கோபின் நிரூபம் பின்வரும் காரணங்களால் இது அப்போஸ்தலிக்க தகுதியை இழக்கிறது

👉   நம்பிக்கையினால் மட்டும் அல்ல செய்யும் செயலினால் ஒருவர் நியாயம்       தீர்க்கப்படுவார் என்ற யாக்கோபு நிருபத்தின் மையக்கருத்து பவுல் உள்ளிட்டோரின் கொள்கைக்கு மாற்றமானது. 

👉   கிறிஸ்துவை பற்றி பேசிய யாக்கோபு ஒரு இடத்திலும் சிலுவை பாடுகள், அதன் மீதான நம்பிக்கை பற்றி வாய்திறக்கவில்ல 

👉 நியாயப்பிரமானத்தை பின்பற்றுவதை உயர்த்தி பிடிக்கிறது. ஆனால் பவுல் நியாயப்பிரமானம் அடிமைகளின் சட்டம் என்கிறார். 
👉 பேதுரு மற்றும் பவுலின் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது இதை எழுதிய யாக்கோபு அப்போஸ்தலர் யாக்கோபு அல்ல மாறாக பேதுரு மற்றும் பவுலிற்கு பிறகு வந்த யார் என்று தெரியாத யாக்கோபு.
    நாம் பட்டியலிட்ட காரணங்களையும் தாண்டி மார்டின் லூதர் தெளிவாக இந்த நிருபத்தின் அப்போஸ்தலிக்க தன்மையை கேள்விக்குள்ளாக்கும் காரணங்களை பட்டியலிட்டுவிட்டார் என்று எண்ணுகிறோம். மொழியியல் குறித்த சிக்கலை அடுத்த பகுதியில் பார்ப்போம்…இன் ஷா அல்லாஹ்.