பக்கங்கள் செல்ல

Wednesday, August 27, 2025

கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم 

கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்

    கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மை குறித்து தொடராக கண்டுவருகிறோம். சென்ற கட்டுரைகளில் பவுலிய நிருபங்களின் அவல நிலையையும், அதன் நம்பகத்தன்மை குறித்து கிறித்தவ புதிய ஏற்பாட்டின் அறிஞர்களே சந்தேகத்தை எழுப்பி வருவது குறித்தும் சுருக்கமாக கண்டிருந்தோம். அந்த வரிசையில் அடுத்ததாக இடம் பெறுவது புதிய ஏற்பாட்டின் கத்தோலிக்க நிருபங்கள் என்று அழைக்கப்படும், 1) யாக்கோபு, 2) 1 பேதுரு, 3) 2 பேதுரு, 4) 1 யோவான், 5) 2 யோவான், 6) 3 யோவான், 7) யூதா ஆகிய ஏழு நிருபங்களின் நம்பகத்தன்மை குறித்து கிறித்தவ உலகில் என்ன கருத்து நிலவுகிறது என்பதை தனிதனியாக காணவிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ். இந்த ஏழு நிருபங்களும் கி.பி.4ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே கத்தோலிக்க நிருபங்கள் என்று அழைக்கபடலாயிற்று. அதில் முதலாவதாக யாக்கோபு நிருபம் குறித்து இந்த பகுதியில் காண்போம்.

யாக்கோபு நிருபம்- அறிமுகம்

        யாக்கோபு நிருபத்தை பொறுத்தவரையில் அதனை இயற்றியது யாக்கோபு என்பவராவார். இவர் இந்த கடிதத்தை சிதறிக்கிடக்கும் 12 யூத கோத்திரத்திற்கு எழுதியதாக இந்த நிருபமே கூறுகிறது. ஆனால் என்றும் போல் நிருபத்தின் அங்கிகாரம், யார் இந்த யாக்கோபு என்பதில் எல்லாம் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இந்த கேள்வி நமது வழமையான கேள்விதான். ஒரு நூல் உண்மையில் ஏசுவின் காலத்தை சேர்ந்தவரால் எழுதப்பட்டு, அது திருச்சபைகளில் வாசிக்கப்பட்டும் வரும் அளவிற்கு பிரபலமானதாக இருந்தால் ஆசிரியரை அடையளப்படுத்துவதில் ஏன் சிக்கல் நிலவுகிறது என்ற கேள்விதான் அது. சரி கிறித்தவ அறிஞர்கள் மத்தியில் என்ன என்ன கருத்து குழப்பம் நிலவுகிறது என்பதை முதலில் காண்போம்.


யாக்கோபு நிருபம் ஆதிகால கிறித்தவத்தில் அதன் நிலை குறித்த வரலாற்று தரவுகளில் மிக சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் தக்க தரவுகளுடனும் Werner Georg Kümmel என்ற ஜெர்மானிய புதிய ஏற்பாட்டு அறிஞரால்  தனது Einleitung in das Neue Testament [Introduction to the New Testament] வழங்கப்பட்டுள்ளது
        From early times until today opinions about the origin and character, time and value of James have varied widely (cf. the detailed presentation in A. Meyer, 8 ff.). Already in I Clement and the Shepherd of Hermas are found echoes of James, but they are not so clear that they would not be understandable from common dependence upon paraenetic tradition (see Dibelius, 30 ff.). The Epistle is missing from the Muratorian canon and the chief witnesses of the “Vetus Latina.” It is never quoted by Tertullian, Cyprian, Irenaeus, and Hippolytus. Not until after 200 do definite traces of James appear in Palestine and epistles "De virginitate,” falsely ascribed to Clement of Rome, in the papyrus fragment and in Origen, who often cites it as "Scripture,” but once as ἡ φερομένη Ἰακώβου ἐπιστόλη (the alleged epistle of James) (Commentary on John, 8, 24; edited by Preuschen, 325), and thereby hints that it is disputed. Eusebius (EH II, 23, 25; III 25, 3) still enumerates James among the "Antilegomena,” but mentions for the first time that many recognize the Lord’s brother as the author. In the Syrian Church scruples against James did not cease, even after James was taken up into the Peshitta. Theodore of Mopsuestia rejected it. 
    In the Greek Church, however, James was generally recognized since the Synod of Laodicea (360) and Athanasius. In the West the earliest witness is the Codex Corbeiensis (ff), which reproduces an old Latin translation from the fourth century. Under the influence of Hilary, Hieronymus, and Augustine, James was defined as canonical at the Synods of Rome (382) and Carthage (397). Yet Hieronymus’ de viris illustribus 2 carried doubts about the authenticity of James into the Middle Ages, to which were joined the cautious doubt of Erasmus and the sharp polemic of Luther.
    ஆரம்ப காலங்களிலிருந்து இன்று வரை யாக்கோபின் தோற்றம் மற்றும் தன்மை, காலம் மற்றும் மதிப்பு பற்றிய கருத்துக்கள் பரவலாக வேறுபடுகின்றன (cf. A. Meyer, 8 ff இல் விரிவான விளக்கக்காட்சி). ஏற்கனவே முதலாம் கிளெமென்ட் மற்றும் ஹெர்மாஸின் மேய்ப்பர் ஆகியவற்றில் ஜேம்ஸின் எதிரொலிகள் காணப்படுகின்றன, ஆனால் அதன் அறிவுரை பாரம்பரியத்தின் பொதுவான சார்பிலிருந்து அது புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு தெளிவாக இல்லை (பார்க்க டிபெலியஸ், 30 ff.). இந்த நிருபம் முரடோரியன் நியதியிலும், "வெட்டஸ் லத்தினா" வின் முக்கிய ஆவாணங்களிலும் இல்லை. இது டெர்டுல்லியன், சைப்ரியன், ஐரேனியஸ் மற்றும் ஹிப்போலிட்டஸ் ஆகியோரால் ஒருபோதும் மேற்கோள் காட்டப்படவில்லை. 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பாலஸ்தீனத்தில், ரோமின் கிளெமெண்டினுடையது என்று பொய்யாகக் கூறப்பட்ட "டி வர்ஜினிடேட்" என்ற நிருபங்களின் பாப்பிரஸ் துண்டில் யாக்கோபின் திட்டவட்டமான தடயங்கள் தோன்றின.  அதனை வேதம் என்று அடிக்கடி மேற்கோள்காட்டும் ஓரிகன் தனது ஆக்கத்தில், ஒருமுறை “யாக்கோபின் நிருபம் என்று கூறப்படும்” என்று குறிப்பிட்டிருப்பது அது சர்ச்சைக்குரியது என்று சுட்டிக்காட்டுகிறது  யூசிபியஸ் (EH II, 23, 25; III 25, 3) இன்னும் யாக்கோபை "ஆண்டிலெகோமெனா"வில் பட்டியலிடுகிறார், ஆனால் பலர் கர்த்தருடைய சகோதரரை ஆசிரியராக அங்கீகரிப்பதாக முதல் முறையாகக் குறிப்பிடுகிறார். (ஆண்டிலெகோமெனா- என்பது சர்ச்சைக்குரிய கிறித்தவ நூல்களை குறிப்பதற்கு யூசிபியஸினால் பயன்படுத்தப்பட்ட சொல்லாக்கம்). . யாக்கோபு பெஷிட்டாவில் சேர்க்கப்பட்ட பிறகும் கூட, சிரிய திருச்சபையில் யாக்கோபு க்கு எதிரான மனக்கசப்புகள் நிற்கவில்லை. மோப்சுவெஸ்டியாவின் தியோடர் அதை நிராகரித்தார். 
இருப்பினும், கிரேக்க திருச்சபையில், லாவோதேக்கியா (கி.பி 360) மற்றும் அதானசியஸ் ஆயர் பேரவைக்குப் பிறகு யாக்கோபு பொதுவாக அங்கீகரிக்கப்பட்டது. மேற்கில், நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழைய லத்தீன் மொழிபெயர்ப்பை மீண்டும் மறு உருவாக்கம் செய்த கோடெக்ஸ் கோர்பியென்சிஸ் தான் முதல் சாட்சி. ஹிலாரி, ஹைரோனிமஸ் மற்றும் அகஸ்டின் ஆகியோரின் செல்வாக்கின் கீழ், யாக்கோபு ரோம் (382) மற்றும் கார்தேஜ் (397) ஆயர் சபைகளில் நியமனமாக வரையறுக்கப்பட்டது. ஆயினும்கூட, ஹைரோனிமஸின் டி விரிஸ் இல்லஸ்ட்ரிபஸ் 2, யாக்கோபின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களை இடைக்காலம் வரை கொண்டு சென்றது, அவற்றுடன் எராஸ்மஸின் எச்சரிக்கையான சந்தேகமும் லூதரின் கூர்மையான விவாதமும் இணைந்தன. (P.No.285 Einleitung in das Neue Testament [Introduction to the New Testament translated in Eng., by A. J. Mattill, Jr.] 
        மேற்குறிப்பிட்ட படியே தற்கால The New Oxford Annotated Bible with Apocrypha- New Revised Standard Version பின்வருமாறு கூறுகிறது.
    The early fourth-century ce church historian Eusebius noted that the letter found slow acceptance into the Christian canon despite the fact that it was “regularly used in very many churches” as one of the       “ ‘general’ epistles” (Hist. eccl. 2.23; 3.25). The Muratorian Canon (late second century) does not mention James, but the letter was included in Bishop Athanasiuss influential canon list ca. 367 ce. Its canonicity was then largely secure until the Protestant Reformation in the sixteenth century when Martin Luther moved it (along with Hebrews, Jude, and Revelation) to the end of the New Testament; in Luther’s view it lacked essential elements of the gospel. But John Calvin and Philip Melanchthon, like the Council of Trent (1546), defended both the canonical status and theological value of the letter. 

 நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த சர்ச் வரலாற்றாசிரியர் யூசிபியஸ், இந்தக் கடிதம் "பொதுவான" நிருபங்களில் ஒன்றாக "பல சர்ச்சுகளில் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும்" கிறிஸ்தவ நிருபத்தில் மெதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று குறிப்பிடுகிறார். (Hist. eccl. 2.23; 3.25). முராடோரியன் நியதி (இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி) யாக்கோபைப் பற்றி குறிப்பிடவில்லை, ஆனால் அந்தக் கடிதம் பிஷப் அதனாசியஸின் செல்வாக்குமிக்க நியதி பட்டியலில் சுமார் கி.பி.367 ல் சேர்க்கப்பட்டுள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் வரை அதன் நியமனத்தன்மை பெரும்பாலும் பாதுகாப்பாக இருந்தது, மார்ட்டின் லூதர் அதை (எபிரேயர், யூதா மற்றும் வெளிப்படுத்துதலுடன் சேர்த்து) புதிய ஏற்பாட்டின் கடைசிக்கு நகர்த்தினார்; லூதரின் பார்வையில் இது நற்செய்தியின் அத்தியாவசிய கூறுகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஜான் கால்வின் மற்றும் பிலிப் மெலன்ச்டன், ட்ரெண்ட் கவுன்சிலைப் போலவே (1546), கடிதத்தின் நியமன நிலை மற்றும் இறையியல் மதிப்பு இரண்டையும் பாதுகாத்தனர். (P.No.2119, The New Oxford Annotated Bible with Apocrypha- New Revised Standard Version)

          மேலே நாம் குறிப்பிட்டு காட்டிய குறிப்புக்கள், யாக்கோபின் நிருபம் கி.பி.4ம் நூற்றாண்டில் தான் பெரும்பகுதி கிறித்தவர்களால் நியமன நிருபமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை தெளிவாக கூறுகின்றன. மீண்டும் கி.பி.16ம் நூற்றாண்டில் லூதர் போன்றவர்கள் அது அப்போஸ்தொலிக்க எழுத்தக்களா?? என்று சந்தேகித்தனர் என்று கூறுகிறது. 

 யார் இந்த யாக்கோபு????

யாக்கோபு நிருபத்தை பொறுத்தவரையில் யார் இந்த யாக்கோபு என்று எந்த குறிப்பும் இடம் பெறவில்லை. புதிய ஏற்பாட்டை பொறுத்தவரை யாக்கோபு என்ற பெயர் கொண்ட குறைந்த பட்சம் நான்கு நபர்களை காண இயலும். 

வ.எண் யாக்கோபும் அடையாளமும் வசனம்
1 பன்னிருவரில் ஒருவரான யோவானின் சகோதரன் செபதேயுவின் மகன் யாக்கோபு- பெரிய யாக்கோபு மத்தேயு: 4:21; 10:2-3; 17:1; 20:20-23; 26:37; 
மாற்கு: 1:19-20; 1:29; 3:17; 5:37; 9:2; 10:35, 41; 13:3; 14:33; லூக்கா 5:10; 8:51; 9:28, 54;
 அப்போஸ்தலர் நடபடிகள்: 1:13; 12:2
2 பன்னிருவரில் ஒருவரான அல்பேயுவின் மகனான யாக்கோபு- சின்ன யாக்கோபு
மத்தேயு 10:3; மாற்கு 3:18; லூக்கா 6:15;
அப்போஸ்தலர் நடபடிகள் 1:13;
3 ஏசுவின் சகோதரனாகிய யாக்கோபு
மத்தேயு 12:46-50, 13:55; மாற்கு 3:21, 6:3;
யோவான் 7:3-5; அப்போஸ்தலர் நடபடிகள் 1:14; கலாத்தியர் 1:19,2:9;
4 பன்னிருவரில் ஒருவரான யூதாவின் சகோதரனாகிய யாக்கோபு


லூக்கா 6:16; அப்போஸ்தலர் நடபடிகள் 1:13

    இவர்களில் எந்த யாக்கோபினால் இந்த கடிதம் எழுதப்பட்டது என்பது கிறித்தவர்களின் ஆதிகாலம் முதலே குழப்பத்தில் இருப்பதாக கிறித்தவ வரலாற்று ஆவணம் கூறுகிறது.

யாக்கோபிற்கு தொடர்பில்லாத கடிதம்-  2ம் நூற்றாண்டின் முற்பகுதி
     Hegesippus who lived near the apostolic age, in the fifth book of his Commentaries, writing of James, says “After the apostles, James the brother of the Lord surnamed the Just was made head of the Church at Jerusalem. Many indeed are called James. This one was holy from his mother’s womb. He drank neither wine nor strong drink, ate no flesh, never shaved or anointed himself with ointment or bathed. He alone had the privilege of entering the Holy of Holies, since indeed he did not use woolen vestments but linen and went alone into the temple and prayed in behalf of the people, insomuch that his knees were reputed tohave acquired the hardness of camels’ knees.”( De Viris Illustribus Liber Ad Dextrum Lives of Illustrious Men NPNF (V2-03) Philip Schaff P.No.625)
    அப்போஸ்தலர் காலத்திற்கு அருகில் வாழ்ந்த ஹெகெசிப்பஸ், யாக்கோபின் எழுக்களை, தனது விளக்கவுரைகளின் ஐந்தாவது புத்தகத்தில், "அப்போஸ்தலர்களுக்குப் பிறகு, நீதிமான் என்ற வேறு பெயர் கொண்ட கர்த்தருடைய சகோதரரான யாக்கோபு எருசலேமில் உள்ள திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்" என்று கூறுகிறார். உண்மையில் பலர் யாக்கோபு என்று அழைக்கப்படுகிறார்கள். இவர் தாயின் கர்ப்பத்திலிருந்தே பரிசுத்தமானவர். அவர் திராட்சை ரசமோ மதுபானமோ குடிக்கவில்லை, இறைச்சி சாப்பிடவில்லை, மொட்டையடிக்கவில்லை, தைலம் பூசவில்லை, குளிக்கவில்லை. அவர் மாத்திரமே மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார், ஏனென்றால் அவர் கம்பளி ஆடைகளை உபயோகிக்கவில்லை, ஆனால் கைத்தறி ஆடைகளை மட்டுமே பயன்படுத்தினார், மேலும் அவர் தனியாக கோவிலுக்குள் சென்று மக்கள் சார்பாக ஜெபம் செய்தார், அதனால் அவரது முழங்கால்கள் ஒட்டகங்களின் முழங்கால்களின் கடினத்தன்மையைப் பெற்றதாகப் புகழ் பெற்றன. .”( De Viris Illustribus Liber Ad Dextrum Lives of Illustrious Men by Jerome NPNF (V2-03) Philip Schaff P.No.625)

        யாக்கோபு யார் என்று விவரித்த ஹெகேசிப்பஸ் இவரது மடல் குறித்து வாய் திறக்க வில்லை. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் எருசலேம் சபை குறித்து மிக சிரத்தை எடுத்துக்கொண்ட ஒரு கிறித்தவ வரலாற்று ஆசிரியர் ஹெகேசிப்பஸ்.   

    Now, if the one who does not believe that Jesus is the Christ will die in his sins, it is clear  that the one who does not die in his sins has believed in the Christ. But he who dies in his sins, even if he says that he believes in the Christ, has not believed in him so far as truth is concerned, and if faith is mentioned but it lacks works, such faith is dead, as we have read in the epistle that is in circulation as the work of James.(Commentary of Origen on Gospel of John 8:24)

    இயேசுவே, கிறிஸ்து என்று விசுவாசியாதவன் தன் பாவங்களிலே மரிப்பான் என்றால், தன் பாவங்களிலே மரியாதவன் கிறிஸ்துவை விசுவாசித்தான் என்பது தெளிவாகிறது. ஆனால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொன்னாலும், தன் பாவங்களில் மரித்தவன், சத்தியத்தை பொறுத்தவையில், அவரை இதுவரை அவன் விசுவாசிக்கவில்லை. விசுவாசம் சொல்லப்பட்டாலும், அதில் கிரியைகள் இல்லாவிடில், அந்த விசுவாசம் செத்துவிட்டது என்று, யாக்கோபின் எழுத்து என்று புழக்கத்தில் உள்ள நிருபத்தில் நாம் படித்திருக்கிறோம்.(Commentary of Origen on Gospel of John 8:24)  

     அதாவது மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஓரிகன்தான் முதன் முதலில் இப்படி ஒரு மடல் யாக்கோபின் பெயரில் புழக்கத்தில் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஓரிகனின் இந்த வார்த்தை பிரயோகம் ஓரிகனே இந்த கடிதத்தின் எழுத்தர் குறித்து உறுதியற்ற நிலையில் இருந்துள்ளார் என்பதை காட்டுகிறது.

யாக்கோபுதான் இந்த மடலை எழுதனாரா?- சர்ச்சையான 3ம் நூற்றாண்டின் பிற்பகுதி

    25. These things are recorded in regard to James, who is said to be the author of the first of the so-called catholic epistles. But it is to be observed that it is disputed; at least, not many of the ancients have mentioned it, as is the case likewise with the epistle that bears the name of Jude, which is also one of the seven so-called catholic epistles. Nevertheless we know that these also, with the rest, have been read publicly in very many churches. (P.No.236, The Martyrdom of James, who was called the Brother of the Lord, The Church History of Eusebius). 

25.கத்தோலிக்க நிருபங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் முதலாவது நிருபத்தின் ஆசிரியர் என்று கூறப்படும் யாக்கோபைப் பற்றி இந்தக் காரியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அது சர்ச்சைக்குரியது என்பதைக் கவனிக்க வேண்டும்; கத்தோலிக்க நிருபங்கள் என்று அழைக்கப்படும் ஏழு நிருபங்களில் ஒன்றான யூதாவின் பெயரைக் கொண்ட நிருபத்தைப் போலவே, முன்னோர்களில் பலர் இதைக் குறிப்பிடவில்லை. ஆயினும்கூட, இவையும், மற்றவற்றுடன், பல தேவாலயங்களில் பகிரங்கமாக வாசிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம்(P.No.236, The Martyrdom of James, who was called the Brother of the Lord, The Church History of Eusebius).  

யாரோ யாக்கோபின் பெயரில் இட்டுக்கட்டியுள்ளார்- கி.பி 4ம் நூற்றாண்டு 

James, who is called the brother of the Lord, surnamed the Just, the son of Joseph by another wife, as some think, but, as appears to me, the son of Mary sister of the mother of our Lord of whom John makes mention in his book, after our Lord’s passion at once ordained by the apostles bishop of Jerusalem, wrote a single epistle, which is reckoned among the seven Catholic Epistles and even this is claimed by some to have been published by someone else under his name, and gradually, as time went on, to have gained authority.”( De Viris Illustribus Liber Ad Dextrum Lives of Illustrious Men NPNF (V2-03) Philip Schaff P.No.625)

    சிலர் நினைப்பது, யாக்கோபு, கர்த்தரின் சகோதரன் என்று அழைக்கப்படும் ஜோசப்பின் மற்றொரு மனைவியின் மகன், நீதிமான் என்று புனைப்பெயரிடப்பட்டவர், ஆனால், எனக்குத் தோன்றுவது, அவர், யோவான் தனது புத்தகத்தில் குறிப்பிடும், நம் ஆண்டவரின் தாயின் சகோதரி மேரியின் மகன், நமது கர்த்தரின் பாடுகளுக்கு பின்பு அப்போஸ்தலர்களால் எருசலேமின் பிஷப்பாக நியமிக்கப்பட்டவர், ஏழு கத்தோலிக்க நிருபங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நிருபத்தை எழுதியவர். மேலும் இது கூட வேறு யாரோ ஒருவரால் அவரது பெயரில் வெளியிடப்பட்டதாகவும், காலப்போக்கில் படிப்படியாக அதிகாரம் பெற்றதாகவும் சிலர் கூறுகின்றனர் .”( De Viris Illustribus Liber Ad Dextrum Lives of Illustrious Men by Jerome NPNF (V2-03) Philip Schaff P.No.625)

யார் இந்த யாக்கோபு? கி.பி 16ம் நூற்றாண்டு 

    But as to the author, there is somewhat more reason for doubting. It is indeed certain that he was not the Son of Zebedee, for Herod killed him shortly after our Lord’s resurrection. The ancients are nearly unanimous in thinking that he was one of the disciples named Oblias and a relative of Christ, who was set over the Church at Jerusalem; and they supposed him to have been the person whom Paul mentioned with Peter and John, who he says were deemed pillars, (Galatians 2:9.) But that one of the disciples was mentioned as one of the three pillars, and thus exalted above the other Apostles, does not seem to me probable. I am therefore rather inclined to the conjecture, that he of whom Paul speaks was the son of Alpheus. I do not yet deny that another was the ruler of the Church at Jerusalem, and one indeed from the college of the disciples; for the Apostles were not tied to any particular place. But whether of the two was the writer of this Epistle, it is not for me to say. (Commentaries on the Catholic Epistles by John Calvin P.No,245)

ஆனால் அந்த ஆசிரியரைப் பொறுத்தவரை, சந்தேகிக்க இன்னும் கொஞ்சம் காரணம் இருக்கிறது. அவர் செபதேயுவின் மகன் அல்ல என்பது நிச்சயமாக உறுதி, ஏனென்றால் நம் கர்த்தர் உயிர்த்தெழுந்த சிறிது காலத்திலேயே ஏரோது அவரைக் கொன்று விட்டார். அவர் சீடர்களில் ஒருவரான ஒப்லியாஸ் என்றும், எருசலேம் தேவாலயத்தின் மீது பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் என்றும்,  கிறிஸ்துவின் உறவினர் என்றும் முன்னோர்கள் ஏறக்குறைய ஒருமனதாக எண்ணுகிறார்கள்; அவர், பவுலால், தூண்களாக கருதி, பேதுரு மற்றும் யோவானுடன் குறிப்பிடுப்படும் நபர் என்றும் அவர்களால் கருதப்படுகிறார் (கலாத்தியர் 2:9.). ஆனால், மூன்று தூண்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டு, மற்ற அப்போஸ்தலர்களை விட உயர்ந்தவர் என்று குறிப்பிடப்படும் அந்த சீடர்களில் ஒருவர், எனக்குச் சாத்தியமானவராக தோன்றவில்லை. எனவே, பவுல் யாரைப் பற்றிப் பேசுகிறாரோ அவர் அல்பேயுவின் மகன் என்ற யூகத்தை நான் ஏற்கிறேன். மற்றொருவர் எருசலேம் திருச்சபையின் ஆட்சியாளராக இருந்தார் என்பதையும், ஒருவர் சீடர் குழுவைச் சேர்ந்தவர் என்பதையும் நான் இன்னும் மறுக்கவில்லை; ஏனென்றால் அப்போஸ்தலர்கள் எந்த குறிப்பிட்ட இடத்துடனும் தொடர்புடையவர்கள் அல்ல. ஆனால் இருவரில் ஒருவர் இந்த நிருபத்தை எழுதியவரா என்பதை நான் சொல்ல முடியாது. (Commentaries on the Catholic Epistles by John Calvin P.No,245)

        யூசிபியசின் காலத்திலும் (கி.பி.260- 339), ஜேரோமின் காலத்திலும், ஏன் ஜான் கால்வினின் காலத்திலும் கூட இந்த கடிதத்தின் எழுத்தர் யார் என்பது சர்ச்ச்சைக்குரிய விஷயமாக இருந்துள்ளது என்பது இதன் மூலம் விளங்குகிறது. ஒரு நூல் வேதத்தில் நுழையும் அளவிற்கு தனித்துவமிக்கது எனும் போது அதன் சொந்தக்காரர் யார் என்பதில் சர்ச்சை நிலவியது என்றால், ஆரம்ப காலம் முதலே மக்களின் பெரும் பயன்பாட்டில் அந்த கடிதம் இருந்தது என்பது ஏற்புடைய கருத்தல்ல. இது அல்லாமல் தற்காலத்தில் இந்த கடிதம் அறியப்படாத ஒருவரால் எழுதப்பட்டது என்ற அனுமானமும் கிறித்தவ அறிஞர்களிடம் உலாவுகிறது. இதனை விளக்க தற்கால புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் இந்த மடலின் எழுதப்பட்ட காலம் குறித்த மாறுபட்ட யூகங்களை Dale C. Allison Jr.' அவர்களது "James: A Critical and Exegetical Commentary": P.No.28-29ல் இருந்து  கீழ்வரும் அட்டவணையில் தருகிறோம்.

எழுதப்பட்ட காலமும்- குழம்பித்திரியும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களும்

வ.எண் புதிய ஏற்பாட்டு அறிஞர் எழுதப்பட்டதாக கருதப்படும் காலம்
1. Harnack 120–150 A.D
2. Spitta before 50 A.D
3. Zahn 44–66 A.D
4. Knowling 40–50 A.D
5. Ropes 75–125 A.D
6. Jülicher120–150 A.D
7. Dibelius 80–130 A.D
8. Chaine57–62 A.D
9. Marty late first,early second century A.D
10. Massebieaubefore 50 A.D
11. Kittel 40–50 A.D
12. Enslin 70–125 A.D
13. Schoeps 100–150 A.D
14. Young 117–138 A.D
15. Hunter 60–100 A.D
16. Mussnerbefore the death of James the Just A.D
17. Elliott-Binns40–50 A.D
18. Kümmel 80–100 A.D
19. Cantinat the last decades of the first century A.D
20.Lawspost-60s A.D
21. J.A.T. Robinson 47 or 48 A.D
22.Ruckstuhl 80–100 A.D
23. Frankemölle the last quarter of the first century or beginning of the second century
24. Floor 40–50  A.D
25. Wolmarans 125–130  A.D
26. S. Wilson the last quarter of the first century  A.D
27. Webber late first or early second century  A.D
28. Penner 40–60  A.D
29. Hahn-Müller not before the last third of the first century  A.D
30. Sleeper 75–85  A.D
31. P. Rolland the year 56  A.D
32. Moo the middle 40s 
33.Riesner before the middle 40s
34. Hartin the late sixties after James’ death
35. Burchard the last decades of the 1st century A.D
36. Popkesshortly before or after CE 100 
37. Maier before or around 50 A.D
38. Fabris 70–100 A.D
39. Dschulniggca. ca. 60 
40. Nienhuis the middle of the second century A.D
41. Konradt before 85 A.D
42. McKnightthe 50s
43. Varner 48 or earlier 
44. Broer 70–100 A.D

       மேலே கொடுக்கப்பட்ட கால அட்டவணையில் கணிசமான புதிய ஏற்பாட்டின் அறிஞர்கள் இந்த நிருபம் அப்போஸ்தலர்களாக கருதப்படும் யாக்கோபுகளின் மரணத்திற்கு பிறகு எழுதப்பட்டதாக கூறுகிறார்கள். அதாவது யாக்கோபு என்ற பெயரால் யாரோ ஒருவர் எழுதியிருக்கிறார் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். எனவே தான் யாக்கோபு நிருபத்தின் நிலை குறித்து Robert M. Grant பின்வருமாரு கூறுகிறார்.
        In view of the prominence of James it is rather surprising that the epistle is used by no Christian writer before Origen, writing at Alexandria early in the third century. No Western writer mentioned it until the fourth century, and at that time it was still rejected by some Syrian churchmen. Both Erasmus and Luther, for different reasons, doubted its apostolic authorship. Today such doubts persist.  (A Historical Introduction to the New Testament by Robert M. Grant ,P.No.183) 
யாக்கோபின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ளும் போது, மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அலெக்ஸாண்ட்ரியாவின் ஓரிகன் எழுதியதற்கு முன்பு எந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் இந்த நிருபத்தைப் பயன்படுத்தவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான்காம் நூற்றாண்டு வரை எந்த மேற்கத்திய எழுத்தாளரும் இதைக் குறிப்பிடவில்லை, அந்தச் சமயத்திலும் அது சில சிரிய சர்ச் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டது. இராஸ்மஸ் மற்றும் லூதர் இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக, அதன் அப்போஸ்தலிக்க எழுத்தாக்கத்தை சந்தேகித்தனர். இன்றும் அத்தகைய சந்தேகங்கள் நீடிக்கின்றன.  (A Historical Introduction to the New Testament by Robert M. Grant ,P.No.183)

    யாக்கோபின் நிருபம் இன்றும் சந்தேத்திற்குரிய ஒரு நிருபமாகவே புதிய ஏற்பாட்டில் இடம் பெறுகிறது என்று Robert M. Grant குறிப்பிடுகிறார். மேலும் லூதர் போன்றவர்கள் இதை எழுதியது, ஏசுவின் சீடரா என்பதையே சந்தேகித்ததாக கூறுகிறார் Robert M. Grant.   யாரால் எழுதப்பட்டது என்பதே இன்று வரை சர்ச்சையாக இருக்கும் ஒரு நிருபம்தான் யாக்கோபின் இந்த நிருபம். இந்த நிருபத்தை ஏன் கிறித்தவ உலகம் சந்தேகக் கண்ணுடன் அணுகுகிறது?????......அதன் காரணங்களை நாம் அடுத்த பகுதியில் பட்டியலிடுவோம். இன் ஷா அல்லாஹ்...