பக்கங்கள் செல்ல

Monday, July 6, 2015

கூடைப்பந்து விளையாட்டில் சாதனை படைத்த அமெரிக்க முஸ்லிம் மாணவி - இப்தார் விருந்திற்கு ஒபாமா அழைப்பு.

அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் பல்கலைகழக மாணவி இவர். உயர் நிலை பள்ளியில் படிக்கும் பொது, பெண்கள் கூடைபந்து விளையாட்டில் மாநிலத்திலேயே முதலாவதாக பாய்ண்ட்ஸ் எடுத்து சாதனை படைத்துள்ளார்.


பில்கிஸ் அப்துல் காதிர், ஹிஜாப் அணிவது தன் உரிமை என்பதை நிலைநாட்டி அமெரிக்காவில் ஹிஜாப் அணிவதற்க்கு இருந்த தடையை நீக்கி, வெள்ளைமாளிகையில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அதிபர் ஓபாமாவால் கௌரவிக்கப்பட்டார். 

இவர் அங்குள்ள புகழ்பெற்ற இந்தியானா ஸ்டேட்ஸ் அணிக்காக ஆடும் basketball நட்சத்திர வீராங்கனை ஆவார்.
Basketball ஆட்டத்தில் தன் கல்லூரியில் நட்சத்திர வீராங்கனையாக இருந்த பில்கிஸ் அப்துல் காதிர், அமெரிக்க அணிக்காக ஆட வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டிருந்தார். 2014 ல் மேற்படிப்புக்கு சொல்லும் பொழுது உள்நாட்டில் எதாவது ஒரு அணியில் சேர்ந்து சிறப்பாக ஆடி தன் நாட்டு அணியில் இடம் பெற முடிவுசெய்து, அதற்க்காக பதிவு செய்து காத்திருந்தார், பதிலும் வந்தது, தன் கனவை சுக்கு நுறாக்கும் பதிலாக அது இருந்தது.
அமெரிக்காவின் விளையாட்டு துறை FIBA உள்நாட்டு அணியில் தொழில் ரீதியாக ஆடும் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்திருந்தது. FIBA கூறிய காரணம் தான் ஜீரணிக்க முடியாதது.

வீராங்கனைகள் ஹிஜாப் அணிவதால் சக வீராங்கனைகளுக்கு பாதுகாப்பில்லை மேலும் இதனால் சக வீராங்கனைகள் காயம் அடைகிறார்கள் என்று. (ஆனால் உண்மையில் பெண்கள் பங்கு பெறும் விளையாட்டில் பெண்கள் வெறும் போகை பொருளாக காட்டப்படும் நிலையில் தான் உள்ளனர்.) 

இதனால் சற்றும் மனம் தளராமல் சகோதரி, இதற்கு எதிராக போராடினார். கடைசியில வென்றார், FIBA இவரின் போராட்டத்திற்க்கு பணிந்தது அமெரிக்காவில் நடக்கும் போட்டிகளில் ஹிஜாப் அணிந்து கொண்டு ஆட அனுமதி அளித்தது.அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு சோதனை முறை என்ற பெயரில், இதில் எதுவும் பிரச்சினை ஏற்படவில்லை என்றால், நிரந்தரமாக தடையை நீக்க முடிவு செய்துள்ளது.
ஆனால் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் FIFA முடிவு செய்யும் என்று அறிவித்துள்ளது.

இவரின் இந்த போராட்டத்தின் பலனாக, இந்த முடிவு வெளியான ஒரு வாரத்திற்கு பின் கத்தார் நாட்டை சேர்ந்த பெண்கள் அணி ஹிஜாப் அணிய தடை இருந்ததால் சவுத் கொரியாவில் நடந்த சர்வதேச ஆட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.
"நான் ஹிஜாப் அணிவது என் மதத்துக்காகவோ அல்லது என் விருப்பத்துக்காகவும் இருக்கலாம், ஆனால் இதனால் மத்தவங்களுக்கு காயம் ஏற்படுவதாக கூறுவது எப்படி ஏற்க முடியும், நான் பத்து வருடங்களாக இந்த விளையாட்டை ஆடுகிறேன், இது வரை பிற வீராங்கனைகள் என் ஹிஜாப்பால் ஒரு சிறிய காயம் எற்பட்டதாக ஒரு சிறிய புகாரும் இல்லை, மாறாக பிற வீராங்கனைகளின் கூந்தலினால், நான் மட்டுமல்ல சக வீராங்கனைகளும் ஒவ்வொரு ஆட்டத்திலும் தாக்கப்படுகின்றனர். ஆனால் நான், என் முடியை ஹிஜாபின் உள்ளே வைத்து கட்டுவதால், எனக்கும் என்னால் மற்ற வீராங்கனைகளுக்கும் தொந்தரவு ஏற்படுவதில்லை ".
பில்கிஸ் அப்துல் காதிர்.

உலக அளவில் முஸ்லிம்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு, இஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது என்று? ஆனால் நிஜத்தில் இவர்கள் பெண்களுக்கு சுதந்திரம் என்ற பெயரில் அவர்களை போகைப் பொருளாக காட்டுகின்றனர்.இஸ்லாம் இந்த பெண்ணின் திறமைக்கு எந்த விதத்திலும் தடை போடா வில்லை என்பது தான் உண்மை.

நன்றி: மண்ணின் மைந்தன் 

No comments:

Post a Comment