பக்கங்கள் செல்ல

Monday, July 6, 2015

மாற்று மதத்தை சேர்ந்தவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ரமலான் நோன்பு!


" கடந்த 4 நாட்களாக, ஒரு மாற்று மத கண்ணோட்டத்தில் இதை அறிந்து கொள்ள, நான் நோன்பு வைத்து வருகின்றேன். மிகவும் சிரமமாக உள்ளது. வெளியில் இருந்து பார்ப்பதை விட, அனுபவிக்கும் போது  தான் அதன் கடினம் தெரிகின்றது. நோன்போடு இருக்கும் போது,  ஆவல் அதிகம் ஏற்படுகின்றது. ஆசையை அடக்குவது, இறை கட்டளையினால் நோன்பு வைக்கும் மக்களுக்கு உண்மையிலேயே உதவும்." (Khaleej Times நிருபர்)

"என்னுடைய நோன்பு வெற்றிகரமாக இருந்ததின் கரணம் என்னவென்றால், உணவின் அத்தியாயவசத்தையும், மேலும் சமுதாயத்தில் உணவின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது. உணவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, அது நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு, விருந்தோம்பலின் அடையாளமாகவும் உள்ளது." (Kevin Childress)

 உலக மக்கள் தொகையில் 4 ல் 1 நபர்  நோன்பு வைக்கின்றனர்  என்பதனால்,   அதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதில் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
Japan Students Fasting

கடந்த சில வருடங்களாக இதன் விழிப்புணர்வு முஸ்லிம் அல்லாத மக்களிடம் அதிகரித்து வருகின்றது.  தன்னால் இயன்ற அளவிற்கு,  அவர்களும் நோன்பு வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் உள்ள University of Tennessee (Knoxville), முஸ்லிம் மற்றும் முஸ்லிம்  அல்லாத 250 மாணவர்கள் , பட்டினி பற்றிய உலக கவனத்தை ஈர்ப்பதற்காகவும், உணவு செமிப்பகத்திர்க்கு நிதி உதவிக்காகவும் நோன்பு வைத்தனர்.

அதேபோல் அமெரிக்காவில் உள்ள வர்ஜினிய பல்கலைகழகம் (Virginia Commonwealth University - Richmond) 1800 மாணவர்கள் நோன்பு வைத்தனர்.
ஜப்பான், இங்கிலாந்து இன்னும் பல நாடுகளில் நோன்பு வைக்கும் ஆர்வம் அதிகரித்து கொண்டு வருகின்றன.

இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், என்னுடைய மாற்று மத நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: குறைந்தது ஒரு நாலாவது நோன்பு வையுங்கள், நல்லதொரு ஆன்மீக பலனை உணர்வீர்கள்.

"நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது" [2:183]அமெரிக்காவில் இப்தார்

அமெரிக்காவின் முதல் அரசு  இப்தார் விருந்து டிசம்பர் 9, 1805 ல் தாமஸ் ஜெபர்சன், துனிசியாவின் தூதர் சிதி சொலைமான் அவர்களை இரவு விருந்திற்கு அழைத்தபோது ஆரம்பித்தது.
Obama's Iftar Party

1996ல் கிளிண்டன் ஈத்-அல்-பித்ர்  விருந்து அளித்தனர். 2001ல் புஷ், வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து அளித்தார். ஒபாமா அதை தொடர்ந்தது விருந்து அளித்து வருகின்றார்.
Ref:

http://www.washingtonpost.com/rweb/life/a-month-of-fasting--and-feasting--for-muslims-in-the-nations-captial/2015/07/05/c6b19852-20c7-11e5-bf41-c23f5d3face1_story.html?tid=kindle-app


http://www.startribune.com/more-non-muslims-take-part-in-ramadan-in-minnesota/215010491/

http://www.beliefnet.com/Faiths/Islam/2006/10/Fasting-Friends.aspx#

http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?xfile=data/ramadannews/2015/June/ramadannews_June86.xml&section=ramadannews

http://www.parliamentofreligions.org/news/index.php/2014/06/engaging-in-something-marvelous-a-non-muslim-learns-from-his-ramadan-fast/

No comments:

Post a Comment