பக்கங்கள் செல்ல

cross tab2

Saturday, May 9, 2015

புதிய கண்டுபிடிப்பு - தாவரங்களின் அறிவுத்திறன் / நரம்பு உயிரியல் - அவசியம் பார்க்கவேண்டிய காணொளி

புலால்  உணவு கூடாது, உயிர் கொல்லகூடாது என்று சொல்பவர்கள், தாவரங்களை உண்ணலாம் என்று இந்த வாதங்களை வைக்கின்றனர்.

- தாவரங்களுக்கு உயிர் இல்லை என்கிறார் சிலர்
- அவைகளுக்கு ஒரு உயிர்(!!!) என்கிறார் சிலர்
- அவைகள் வலியை உணர்வதில்லை என்கிறார் சிலர்

இது அறிவுப் பூர்வமானதா?  நவீன அறிவியல் என்ன சொல்கின்றது என்று பார்ப்போம்.

இஸ்லாம் என்ன சொல்கின்றது:

 இந்த உலகத்தில் ஒரு உயிரினம் மற்றொன்டை சார்ந்ததே உள்ளதாக படைக்கப்பட்டுள்ளது. அதை படைத்த இறைவன் அனுமதிளித்துள்ளதால், தேவைக்கு ஏற்ப உண்ணலாம். உணவுக்காக அல்லாமல், வேறு எதற்காகவும் எந்த உயிரினத்தையும் கொல்லக் கூடாது என்கிறது இஸ்லாம்.


படரவிடப்பட்ட, படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். [6:141]

"அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று இருக்கிறது. [6:11]"

இங்கே இரண்டு வகையான சோதனை செய்யப்படுகின்றது:

1. நல்ல நிலையில் உள்ள தாவரத்தை தொடும்போது, உடனடியாக  ஏற்படும் மாற்றம்

2.  மருந்து (alcohol - anesthesia) கொடுக்கப்பட்ட தாவரத்தின் செயல்திறன் - எந்த வித எதிர் திறனும் இல்லை

3. நல்ல நிலையில் உள்ள தாவரத்தை பிடுங்கும்போதோ அல்லது  எரிக்கும்போதோ மனித உயிரை போன்று ஏற்படும் மாற்றம்



தாவரத்தின் நரம்பு உயிரியல் தொடர்பான சோதனை: (Plant Nuro Biology)




இவைகள் எல்லாவற்றையும்  பார்த்துவிட்டு,  தாவரங்களை கொல்வது, விலங்கினங்களை கொல்வது போல் ஆகாது என்று எவரும் சொன்னால், அது விதண்டாவாதமே அன்றி பகுத்தறிவானது அன்று!

thanks:

1 comment:

  1. அருமை சகோ. இதன் வீடியோ content ஐ உரைநடையில் சுருக்கமாக தந்தால் நமது திருக்குர்ஆன் நற்செய்தி மலரில் வெளியிட உதவியாக இருக்கும்

    ReplyDelete