பக்கங்கள் செல்ல

cross tab2

Wednesday, February 12, 2025

சர்ச்சைக்குரிய பவுலிய கடிதங்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடி- பவுலிய கடிதங்கள் களும்


            நாம் புதிய ஏற்பாட்டின் புத்தங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடராக கண்டு வருகிறோம். சென்ற தொடரில் கிறித்தவ புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு ஆதாரப்பூர்வ பவுலிய கடிதங்களில் இருக்கும் இடைச்செருகல்கள் குறித்து பார்த்திருந்தோம். இந்த கட்டுரையில் இன் ஷா அல்லாஹ் பவுலிய கடிதங்களில் “பவுலால் எழுதப்பட்டதா?” என்று புதிய ஏற்பாட்டு  அறிஞர்களால் சந்தேகிக்கப்படும்  2தெசலோனிக்கேயர், கொலோசெயர், எபேசியர், 1தீமோத்தேயு, 2தீமோத்தேயு, தீத்து, எபிரேயர்  ஆகிய ஏழு கடிதங்கள் குறித்தும், அவ்வாறு சந்தேகிக்கப்படுவதற்கான காரணங்கள் குறித்தும் சுருக்கமாக காணவிருக்கிறோம். 

பவுலிய கடிதங்கள் ஏன் அறிஞர்களால் சந்தேகிக்கப்படுகிறது

ஆன்மீக கருத்து முரண்பாடுகள்
👉இயேசுவின் வருகை எப்போது???
👉சபை ஏசுவின் சரீரமா? அல்லது ஏசு சபை எனும் சரீரத்தின் தலையா?
👉இரட்சிப்பு என்பது இப்போது நடந்து கொண்டிருக்கிறதா?? நடக்கப்போவதா?
மொழியியல் வேறுபாடுகள்
👉ஆயர் நிருபங்களில் இடம் பெறும் தனித்த வார்த்தைகளின் பட்டியல்
பவுலிய கடிதங்களை பவுலுடையது என்று நம்ப மறுக்கும் கிறித்தவ அறிஞர்கள்

1.முதலாம் நூற்றாண்டில் மற்றவர்கள் பெயரில் இட்டுக்கட்டி புத்தகங்கள் மற்றும் கடிதங்களை புனைவது மலிந்து கிடந்தது. பவுல் கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கும் போதே புனைவுகள் ஆரம்பமானது.

2.இவ்வாறு இட்டுகட்டி எழுதப்படுவதை பிரித்தரியும் செயல்முறை எதுவும் இல்லாதது.

3.பவுலிய கடிதங்களின் உண்மை தன்மையை அறியும் விதத்தில் அவரது மாணவர்கள் யாரும் அதனை உறுதிபடுத்தும் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது. பவுலின் நேரடி மாணவரால் எழுதப்பட்ட்தாக கருதப்படும் அப்போஸ்தல நடபடிகளே பவுலிய கடிதங்கள் குறித்து வாய்திறக்காமல் இருப்பது.

4.பிரபலமானது என்று கருதப்படும் பவுலிய கடிதங்கள் பவுலின் மரணத்தின் நூறு ஆண்டுகளுக்கு பிறகே பெரும் பயன்பாட்டிற்கு வந்தமை. அதாவது பவுலை கண்டவர்களின் காலத்திற்கு பிறகு பரலவாலாக்கப்பட்டது.
    பவுலிய கடிதத்தொகுப்பு குறித்த சென்ற தொடர்களில் இன்னும் பல காரணங்களை நாம் பட்டில்யலிட்டு இருந்தோம். இது போன்ற காரணங்களால் பவுலிய கடிதங்களின் எழுத்தர் பவுல்தானா என்று உறுதி படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனால் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் ஆன்மீக கருத்தியல், மொழியியல், வரலாற்று சூழல் போன்ற அளவீடுகளை முன்னிறுத்தி அதனை உறுதிப்படுத்த முயல்கின்றனர். அவரகள் முன்வைக்கும் அளவீடுகளில் இரண்டை மட்டும் நாம் சிறிது பார்வையிடுவோம்.


    இக்கடிதங்களில் காணப்படும் கோட்பாடுகள், எடுத்துக்காட்டாக, இறுதிக்காலம், இரட்சிப்பு, கிறிஸ்தவ தத்துவம் மற்றும் தேவாலய அமைப்பு குறித்த பார்வைகள், பவுலின் மற்ற கடிதங்களில் உள்ள கருத்துகளுக்கு மாறாக இருக்கும்.

உதாரணமாக 1தெசலோனிக்கேயர் மற்றும்  2தெசலோனிக்கேயர் ஆகிய கடிதங்களை ஒப்பீடு செய்வோம். இதில் 1தெசலோனிக்கேயர் ஆதாரப்புர்வமானதாக பெரும்பான்மை அறிஞர்களால் ஏற்பட்டது. 2தெசலோனிக்கேயர் சந்தேகத்திற்குரியதாக பெரும்பான்மை அறிஞர்களால் சர்ச்சைக்குள்ளானது. அவற்றில் இடம் பெறும் இறுதிகாலம் குறித்த செய்திகளை ஒப்பீடு செய்வோம்.

    சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.                       (1 தெசலோனிகேயர் 5:1-2)

    ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந் திரும்பினதையும், அவர் மரித்தோரில் இருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.( 1 தெசலோனிக்கேயர் 1:9-10)
👉2 தெசலோனிக்கேயர் கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் அதனால் சஞ்சலப்படாமல் இருக்கவும், அது மோசம் போக்குபவனின் சொல் என்றும் கூறுகிறது. , கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது என்று கூறுகிறது.
    அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.( 2 தெசலோனிக்கேயர் 2:1-4)

         அதாவது 1 தெசலோனிக்கேயர் இறுதிகாலம் சமீபமாய் இருப்பதாகவும் அது எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்று சொல்லி எச்சரிக்கை செய்கிறது, அதற்கு மாற்றமாக 2 தெசலோனிக்கேயர் இறுதிகாலம் சமீபமாய் இருப்பதாக யாரவது, அந்த நிரூபமாவது சொன்னால் அதனை மோசடி என்கிறது. இப்படி இரண்டும் முரண்படுவதால் சில புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் 1 தெசலோனிக்கேயர் கடிதத்தை சந்தேகிக்கின்றனர். ஏனென்றால் 2 தெசலோனிக்கேயர் இப்படி வந்த போலியான நிரூபம் குறித்து எச்சரிக்கை செய்வதால், இறுதிகாலம் சமீபமாய் இருப்பதாக கூறும் 1 தெசலோனிக்கேயர் போலி என்று அந்த அறிஞர்கள் பெரும்பான்மை கருத்தியலுக்கு மாற்றமாக கூறுகின்றனர்.

    அதேபோல் எபேசியருக்கான நிரூபம் இரட்சிப்பு, சபை குறித்த கருத்தியல்களில் சர்ச்சைகளற்ற பவுலிய கடிதங்களில் இருந்து முரண்படுவதாக இந்த புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் கூறுகின்றனர்.

நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள். 
(1 கொரிந்தியர் 12:27)

கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.(எபேசியர் 5:23) 

இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.(ரோமர் 5:9-10)

அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். 

    மேற்குறிபிட்ட கொள்கை முரண்பாடுகளின் அடிப்படையில் கிறித்தவ உலகத்தில் பிரிவுகளே உள்ளன என்பதும் அது குறித்த விவாதங்கள் இன்றும் நடைபெற்று வருகிறது என்பதும்   குறிப்பிடத்தக்கது. இவை எல்லாம் முரண்பாடுகளாய் முஸ்லீம்களுக்கு மட்டும் தெரியவில்லை, கிறித்தவ உலகில் இவை பிரிவுகளை தோற்றுவிக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த கருத்தியல்கள் என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் நிலவி வரும், இவ்விரண்டு வேறுபட்ட கோட்பாடுகளையும் தாங்கி நிற்கும் கடிதங்களின் எழுத்தர்கள் வேறு வேறானவர்கள் என்ற கருத்து ஏற்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 


    இக்கடிதங்களில் உள்ள சொற்கள், வாக்கிய அமைப்புகள் மற்றும் எழுத்து முறை, நடை ஆகியவை சர்ச்சைகளற்ற பவுலிய எழுத்துகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுகின்றன. எப்படி ஒவ்வொரு மனிதனின் கைவிரல் ரேகையும் வேறுபட்டு தனித்து விளங்குகிறதோ, அதே போல ஒவ்வொரு எழுத்தரின் சொற்கள், வாக்கிய அமைப்புகள் மற்றும் எழுத்து முறை, நடை போன்ற மொழியியல் கூறுகளும் தனித்தவையாக் விளங்குகிறது. எனவே இந்த மொழியல் கூறுகளை ஒன்றிணைத்து எழுத்துரேகை (Writeprint) என்று தற்காலத்தில் அழைக்கின்றனர். மேற்குறிப்பிட்ட மொழியல் அடிப்படையில் பவுலிய கடிதங்களை ஆய்வு செய்தோமென்றால் 2தெசலோனிக்கேயர், கொலோசெயர், எபேசியர், 1தீமோத்தேயு, 2தீமோத்தேயு, தீத்து, எபிரேயர் ஆகிய கடிதங்கள் பவுலின் பெயரால் புனையப்பட்டவை என்பதை அறிந்து கொள்ளலாம். Greek concordance-ஐ பயன்படுத்தி பின்வரும் 152 தனித்த வார்த்தைகளை நாம் கண்டறிந்துள்ளோம். இந்த வார்த்தைகள் ஆயர் நிருபங்களில் மட்டுமே இடம் பெறும் வார்த்தைகள், புதிய ஏற்பாட்டின் எந்த இடத்திலுமோ, குறிப்பாக ஏனைய 7 பவுலிய கடிந்தங்களிலும் இடம்பெறவில்லை.

S.No. Words Strong’s Number Usage/Definition Verses
1. άγνεία G47 Purity 1 Timothy 4:12; 5:2
2. ἀγωγή G72 Manner of life 2 Timothy 3:10
3. ἀδηλότης G83 Uncertain 1 Timothy 6:17
4. ἀθλέω G118 Strive 2 Timothy 2:5
5. αἱρετικός G141 Heretic Titus 3:10
6. αἰσχροκερδής G146 Sordid 1 Timothy 3:3,3:8, Titus 1:7
7. ἀκαίρως G171 Out of season 2 Timothy 4:2
8. ἀκατάγνωστος G176 That cannot be condemned Titus 2:8
9. ἀκρατής G193 Incontinent 2 Timothy 3:3
10. ἄλλως G247 Otherwise 1 Timothy 5:25
11. ἄμαχος G269 Not a brawler 1 Timothy 3:3, Titus 3:2
12. ἀμοιβή G287 Requite 1 Timothy 5:4
13. ἀναζωπυρέω G329 Stir up 2 Timothy 1:6
14. ἀνάλυσις G359 Departure 2 Timothy 4:6
15. ἀνανήφω G366 Recover self 2 Timothy 2:26
16. ἀναψύχω G404 Refresh 2 Timothy 1:16
17. ἀνδραποδιστής G405 For men stealers 1 Timothy 1:10
18. ἀνδροφόνος G409 Manslayer 1 Timothy 1:9
19. ἀνεξίκακος G420 Patient 2 Timothy 2:24
20. ἀνεπαίσχυντος G422 Not ashamed 2 Timothy 2:15
21. ἀνεπίληπτος G423 Blameless 1 Timothy 3:2, 5:7, 6:14
22. ἀνήμερος G434 Fierce 2 Timothy 3:3
23. ἀνόσιος G462 Unholy 1 Timothy 1:9, 2 Timothy 3:2
24. ἀντιδιατίθεμαι G475 That oppose themselves 2 Timothy 2:25
25. ἀντίθεσις G477 Opposition 1 Timothy 6:20
26. ἀντίλυτρον G487 A ransom 1 Timothy 2:6
27. ἀπαίδευτος G521 Unlearned 2 Timothy 2:23
28. ἀπέραντος G562 Endless 1 Timothy 1:4
29. ἀπόβλητος G579 Be refused 1 Timothy 4:4
30. ἀπόδεκτος G587 Acceptable 1 Timothy 2:3, 5:4
31. ἀποδοχή G594 Acceptation 1 Timothy 1:15, 4:9
32. ἀποθησαυρίζω G597 Lay up in store 1 Timothy 6:19
33. ἀποτρέπω G665 Turn away 2 Timothy 3:5
34. ἀπρόσιτος G676 Inaccessible 1 Timothy 6:16
35. ἄρτιος G739 Perfect 2 Timothy 3:17
36. ἀστοχέω G795 Err, swerve 1 Timothy 1:6,  6:21, 2 Timothy 2:18
37. αὐθεντέω G831 Usurp authority over 1 Timothy 2:12
38. αὐτοκατάκριτος G843 Condemned of self Titus 3:11
39. ἀφιλάγαθος G865 Despiser of those that are good 2 Timothy 3:3
40. ἀψευδής G893 That cannot lie Titus 1:2
41. βαθμός G898 Degree 1 Timothy 3:13
42. βδελυκτός G947 Abominable Titus 1:16
43. βελτίον G957 Very well 2 Timothy 1:18
44. βλαβερός G983 Hurtful 1 Timothy 6:9
45. γάγγραινα G1044 Canker 2 Timothy 2:17
46. γενεαλογία G1076 Genealogy 1 Timothy 1:4, Titus 3:9
47. γόης G1114 Seducer 2 Timothy 3:13
48. γραώδης G1126 Old wives' 1 Timothy 4:7
49. γυμνασία G1129 Exercise 1 Timothy 4:8
50. γυναικάριον G1133 Silly woman 2 Timothy 3:6
51. δειλία G1167 Fear 2 Timothy 1:7
52. διαβεβαιόομαι G1226 Affirm constantly 1 Timothy 1:7, Titus 3:8
53. διάγω G1236 Lead life, living 1 Timothy 2:2, Titus 3:3
54. διατροφή G1305 Food 1 Timothy 6:8
55. διδακτικός G1317 Apt to teach 1 Timothy 3:2, 2 Timothy 2:24
56. δίλογος G1351 Double tongued 1 Timothy 3:8
57. διώκτης G1376 Persecutor 1 Timothy 1:13
58. ἐγκρατής G1468 Temperate Titus 1:8
59. ἑδραίωμα G1477 Ground 1 Timothy 3:15
60. ἔκγονον G1549 Nephew 1 Timothy 5:4
61. ἔκδηλος G1552 Manifest 2 Timothy 3:9
62. ἐκστρέφω G1612 Subvert Titus 3:11
63. ἐνδύνω G1744 Creep 2 Timothy 3:6
64. ἔντευξις G1783 Intercession, prayer 1 Timothy 2:1, 4:5
65. ἐντρέφω G1789 Nourish up in 1 Timothy 4:6
66. ἐπανόρθωσις G1882 Correction 2 Timothy 3:16
67. ἐπαρκέω G1884 Relieve Timothy 5:10, 5:16
68. ἐπιδιορθόω G1930 Set in order Titus 1:5
69. ἐπίορκος G1965 Perjured person 1 Timothy 1:10
70. ἐπιπλήσσω G1969 Rebuke 1 Timothy 5:1
71. ἐπιστομίζω G1993 Stop mouths Titus 1:11
72. ἐπισωρεύω G2002 Heap 2 Timothy 4:3
73. ἑτεροδιδασκαλέω G2085 To teach different doctrine 1 Timothy 1:3, 6:3
74. εὐμετάδοτος G2130 Ready to distribute 1 Timothy 6:18
75. εὐσεβῶς G2153 Godly 2 Timothy 3:12, Titus 2:12
76. ἤρεμος G2263 Quiet 1 Timothy 2:2
77. θεόπνευστος G2315 Given by inspiration of God 2 Timothy 3:16
78. θεοσέβεια G2317 Godliness 1 Timothy 2:10
79. ἱεροπρεπής G2412 As becometh holiness Titus 2:3
80. Ἰουδαϊκός G2451 Jewish Titus 1:14
81. καλοδιδάσκαλος G2567 Teacher of good things Titus 2:3
82. καταλέγω G2639 Take into the number 1 Timothy 5:9
83. κατάστημα G2688 Behaviour Titus 2:3
84. καταστολή G2689 Apparel 1 Timothy 2:9
85. καταστρηνιάω G2691 Begin to wax wanton against 1 Timothy 5:11
86. καυτηριάζω G2743 Sear with a hot iron 1 Timothy 4:2
87. κενοφωνία G2757 Vain 1 Timothy 6:20, 2 Timothy 2:16
88. κνήθω G2833 To scratch 2 Timothy 4:3
89. κοινωνικός G2843 Willing to communicate 1 Timothy 6:18
90. κόσμιος G2887 Of good behaviour, modest 1 Timothy 2:9, 3:2
91. λογομαχέω G3054 Strive about words 2 Timothy 2:14
92. λογομαχία G3055 Strife of words 1 Timothy 6:4
93. μάμμη G3125 Grandmother 2 Timothy 1:5
94. ματαιολογία G3150 Vain jangling 1 Timothy 1:6
95. ματαιολόγος G3151 Vain talker Titus 1:10
96. μεμβράνα G3200 Parchment 2 Timothy 4:13
97. μετάλημψις G3336 Taking 1 Timothy 4:3
98. μηδέποτε G3368 Never 2 Timothy 3:7
99. μητραλῴας G3389 Murderer of mothers 1 Timothy 1:9
100. μονόω G3443 Be desolate 1 Timothy 5:5
101. νεόφυτος G3504 Novice 1 Timothy 3:6
102. νεωτερικός G3512 Youthful 2 Timothy 2:22
103. νηφάλεος G3524 Sober 1 Timothy 3:2, 3:11, Titus 2:2
104. νομίμως G3545 Lawfully 1 Timothy 1:8,  2 Timothy 2:5
105. νοσέω G3552 To be sick 1 Timothy 6:4
106. ξενοδοχέω G3580 Lodge strangers 1 Timothy 5:10
107. οἰκοδεσποτέω G3616 Guide the house 1 Timothy 5:14
108. οἰκουρός G3626 Keeper at home Titus 2:5
109. ὁμολογουμένως G3672 Without controversy 1 Timothy 3:16
110. ὀργίλος G3711 Soon angry Titus 1:7
111. παραδιατριβή G3859 Perverse disputing 1 Timothy 6:5
112. παραθήκη G3866 Committed unto 2 Timothy 1:12
113. πάροινος G3943 Given to wine 1 Timothy 3:3, Titus 1:7
114. πατραλῴας G3964 Murderer of fathers 1 Timothy 1:9
115. περιούσιος G4041 Peculiar Titus 2:14
116. περιπείρω G4044 Pierce through 1 Timothy 6:10
117. περιφρονέω G4065 Despise Titus 2:15
118. πιστόω G4104 Assure of 2 Timothy 3:14
119. πλέγμα G4117 Broidered hair 1 Timothy 2:9
120. πλήκτης G4131 Striker 1 Timothy 3:3, Titus 1:7
121. πορισμός G4200 Gain 1 Timothy 6:5, 6:6
122. πραγματεία G4230 Affair 2 Timothy 2:4
123. πραϋπάθεια G6073 Gentleness 1 Timothy 6:11
124. πρεσβῦτις G4247 Aged woman Titus 2:3
125. πρόγονος G4269 Forefather, parent 1 Timothy 5:4, 2 Timothy 1:3
126. πρόκριμα G4299 Prefer one before another 1 Timothy 5:21
127. πρόσκλισις G4346 Partiality 1 Timothy 5:21
128. ῥητῶς G4490 Expressly 1 Timothy 4:1
129. σεμνότης G4587 Gravity, honesty 1 Timothy 2:2, 3:4, Titus 2:7
130. στυγνητός G4767 Hateful Titus 3:3
131. σωφρονίζω G4994 Teach to be sober Titus 2:4
132. σωφρονισμός G4995 Sound mind 2 Timothy 1:7
133. σωφρόνως G4996 Soberly Titus 2:12
134. σώφρων G4998 Discreet, sober, temperate 1 Timothy 3:2, Titus 1:8, 2:2
135. τεκνογονέω G5041 Bear children 1 Timothy 5:14
136. τεκνογονία G5042 Childbearing 1 Timothy 2:15
137. τυφόω G5187 High-minded, be lifted up with pride, be proud 1 Timothy 3:6, 6:4, 2 Timothy 3:4
138. ὑπερπλεονάζω G5250 Was exceeding abundant 1 Timothy 1:14
139. ὑπόνοια G5283 Surmising 1 Timothy 6:4
140.ὑποτύπωσις G5296 Form, pattern 1 Timothy 1:16, 2 Timothy 1:13
141. φιλάγαθος G5358 Love of good men Titus 1:8
142. φίλανδρος G5362 Love their husbands Titus 2:4
143. φιλαργυρία G5365 Love of money, avarice 1 Timothy 6:10
144. φίλαυτος G5367 Lover of own self 2 Timothy 3:2
145. φιλήδονος G5369 Lover of pleasure 2 Timothy 3:4
146. φιλότεκνοςG5388 Love their children Titus 2:4
147. φρεναπάτης G5423 Deceiver Titus 1:10
148. φροντίζω G5431 Be careful Titus 3:8
149. χαλκεύς G5471 Coppersmith 2 Timothy 4:14
150. χρήσιμος G5539 Profit 2 Timothy 2:14
151. ψευδολόγος G5573 Speaking lies 1 Timothy 4:2
152. ὠφέλιμος G5624 Profit(-able) 1 Timothy 4:8,  2 Timothy 3:16, Titus 3:8

சந்தேகத்திற்குரிய பவுலிய கடிதங்களும் அதனை பவுலுடையது என்று நம்ப மறுக்கும் கிறித்தவ அறிஞர்களும்:

    மேலே நாம் விளக்கியிருந்த விஷயங்கள் கிறித்தவ புதிய ஏற்பாட்டு அறிஞர்களை எந்த நிலையில் நிறுத்தியுள்ளது என்பதை விளக்க 2011ம்  ஆண்டு நாட்டிங்ஹமில் நடை பெற்ற பிரிட்டிஷ் புதிய ஏற்பாட்டு மாநாட்டில் அறிஞர்களின் கருத்துக்கேட்பின் முடிவுகளை கீழே தருகிறோம்.
Appendix: A Snapshot of Scholarly Opinions in Britain Concerning the Authorship of the Pauline Letters. 
When this paper was initially presented at the British New Testament Conference in Nottingham on the 2nd of September 2011, the audience was surveyed for their opinions on the authorship of the thirteen Pauline letters. The survey was not rigorously scientific, only those who felt inclined returned their forms. My estimate is that approximately 70% of the audience participated. For each of the thirteen Pauline letters and also for Hebrews  respondents were asked whether they considered each letter to written by Paul, or not, or whether they were undecided. There were approximately 109 respondents, although two more cast an opinion only in relation to 2 Thessalonians, and one or two decided not to record their opinions in relation to the Pastoral Epistles. A final question in the survey asked respondents which of Paul’s epistles they considered to be the first he wrote. The results were as follows: (Foster, P 2012, ''Who Wrote 2 Thessalonians: A Fresh Look at an Old Problem'', Journal for the Study of the New Testament , vol. 35, no. 2, pp. 150-175.)

இந்த ஆய்வுக் கட்டுரை செப்டம்பர் 2, 2011 அன்று நாட்டிங்ஹாமில் நடந்த பிரிட்டிஷ் புதிய ஏற்பாட்டு மாநாட்டில் முதன்முதலில் சமர்ப்பிக்கப்பட்டபோது, பதின்மூன்று பவுலின் கடிதங்களின் ஆசிரியர் குறித்த அவர்களின் கருத்துகளுக்காக பார்வையாளர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு முற்றிலும் அறிவியல் பூர்வமானது அல்ல, விருப்பமுள்ளவர்கள் மட்டுமே தங்கள் படிவங்களைத் திருப்பி அனுப்பினர். எனது மதிப்பீட்டின்படி, பார்வையாளர்களில் சுமார் 70% பேர் பங்கேற்றனர். பதிலளித்தவர்களிடம் பதின்மூன்று பவுலின் கடிதங்களும் மற்றும் எபிரேயர் கடிதமும்,  ஒவ்வொரு கடிதத்தையும் பவுல் எழுதியதாகக் கருதுகிறீர்களா, இல்லையா, அல்லது அவை தீர்மானிக்கப்படவில்லையா என்று கேட்கப்பட்டது. ஏறக்குறைய 109 பேர் பதிலளித்தனர், இருப்பினும், மேலும் இருவர் 2 தெசலோனிக்கரைப் பற்றி மட்டுமே கருத்து தெரிவித்தனர், மேலும் ஒருவர் அல்லது இருவர் ஆயர் நிருபங்கள் தொடர்பாக தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தனர். பவுல் எழுதிய முதல் நிருபம் எது என்று பதிலளித்தவர்களிடம் கணக்கெடுப்பின் இறுதிக் கேள்வி கேட்கப்பட்டது. முடிவுகள் பின்வருமாறு:(Foster, P 2012, ''Who Wrote 2 Thessalonians: A Fresh Look at an Old Problem'', Journal for the Study of the New Testament , vol. 35, no. 2, pp. 150-175.)


        மேற்குறிபிட்ட ஆய்வில் 2தெசலோனிக்கேயர், கொலோசெயர், எபேசியர், 1தீமோத்தேயு, 2தீமோத்தேயு, தீத்து, எபிரேயர் ஆகிய கடிதங்கள் சந்தேகத்திற்குரியவை அல்லது புனையப்பட்டவை என்று குறிப்பிடத்தக்க அளவிலான கிறித்தவ புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் வாக்களித்துள்ளனர்.

    பவுலிய கடிதங்களில் ஏற்பட்ட இடைச்செருகல்களும், பவுலின் பெயரில் புனையப்பட்ட கடிதங்களை உள்ளே செருகியதுமே கிறித்தவ இறையியலிலேயே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது என்பதை பவுலிய கடிதங்கள் குறித்த நமது கட்டுரைகளையும் அதில் பதிவு செய்யப்படும் ஆதாரங்களையும் பார்க்கும் யாரும் விளங்கிக்கொள்ளலாம். இப்படி இறையியலிலேயே முரண்பாடுகளை பவுலிய கடிதங்கள் தாங்கி நிற்பதாலேயே டெர்டுள்ளியன் பவுலை பேதக்காரர்களின் அப்போஸ்தலன் (hæreticorum apostolus) என்று கூறுமளவிற்கு (Tertullian, Anti-Marcion. Book III Chapter 5). சென்றுவிட்டார் போலும்...அல்லாஹு அஃலம்.

Friday, December 13, 2024

பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்

    நாம் சென்ற கட்டுரையில் பவுலிய கடிதங்களின் அனுமானங்கள் குறித்தும் அது எப்படி பவுலையே எழுத்தராக ஏற்க மறுக்கிறது என்பதையும் கண்டோம். மேலும் எப்படி பவுலிய கடிதங்கள் இட்டுக்கட்டபட்டவை என்று  உறுதிபடுத்தும்படியான வரலாற்று தரவுகளையே கிறித்தவ வரலாறு தாங்கி நிற்கிறது என்பதையும் சென்ற இரு கட்டுரைகளிலும் விளக்கியிருக்கிறோம். இந்த கட்டுரையில் ஆதாரப்பூர்வமான கடிதங்களாக பெரும்பாலான புதிய ஏற்பாட்டு அறிஞர்களால் ஏற்கப்பட்ட 7 பவுலிய கடிதங்களில் காணப்படும் இடைச்செருகல்கள் குறித்து காணயிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்…..

பவுலிய கடிதங்களில் இடைச்செருகல்கள் இருப்பதை உறுதி படுத்தும் காரணிகள்


    பின்வரும் காரணங்களினால் பவுலிய கடிதங்களில் இடைச்செருகல் இருப்பதற்கான வாய்ப்புகளை நாம் உறுதிபடுத்துகிறோம்.
👉புதிய ஏற்பாட்டு மொத்த ஆதிகாரபூர்வ வடிவம் ஏற்படுவதற்கு கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் தேவை பட்டுள்ளது. பவுலிய கடிதங்கள் அதிகாரப்பூர்வமானவையாக திருச்சபையினால் அறிவிக்கப்பட கிட்டத்தட்ட குறைந்த பட்சம் 100 ஆண்டுகள் ஆகியுள்ளதை கிறித்தவ வரலாறு தெளிவாக காட்டுகிறது. இருக்கும் ஆதாரங்களில் பழமையான, புதிய ஏற்பாட்டின் அதிகாரபூர்வ நூல் வரிசையை கொண்டிருப்பதாக கருதப்படுவது மூயூரோடேரியன் துண்டுகள்தான். ஆனால் அதுவும் எழுதப்பட்டதாக கருதப்படுவது இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான். இந்த 100 ஆண்டுகள் எந்த நூலிலும் இடைச்செருகல் ஏற்பட போதுமானது. பவுலின் நேரடி மாணவர்கள் மறைந்திருப்பார்கள், அதனை சாரிபார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கும். ஆதாரப்பூர்வ கடிதங்கள் எப்படி திருச்சபையின் கைகளுக்கு வந்து சேர்ந்தது, யாரால் பாதுக்காக்கப்பட்டது போன்ற எந்த தரவுகளும் கி.பி. 150 வரை கிறித்தவ வரலாற்றில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தீர்ப்பதற்கே கிறித்தவ உலகிற்கு பல அனுமான கோட்பாடுகள் தேவைபடுகிறது என்பதை சென்ற கட்டுரைகளில் கண்டிருந்தோம்.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பவுலிய கடிதங்களின் நிலை குறித்த தெளிவான தரவுகள் இல்லாமல் இருப்பது. மார்சியோனின் சுருக்க பவுலிய கடிதங்களின் தொகுப்பிற்கு முந்தைய விரிவான கடிதங்களை உடைய தொகுப்புக்கள் ஏதும் கிடைக்கவில்லை.

👉திருச்சபை தனித்த கடிதங்களை பாதுகாத்து வந்ததற்கான எந்த வரலாற்று தரவுகளும் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இல்லாமல் இருப்பது, திருச்சபைகள் கடிதங்களை பாதுகாக்கவில்லை என்பதை காட்டுகிறது. இதன் மூலம் திருச்சபைகள் பவுலின் பெயரால் புலக்கத்தில் இருந்த சில கடிதங்களை தொகுத்திருக்கிறது என்பது உறுதியாகிறது. இந்த கடிதங்கள் எப்படி தொகுக்கப்பட்ட நிலைக்கு வந்தது என்பதற்கு எந்த வரலாற்று தரவுகளும் இல்லை.

👉திருச்சபைகளினால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப்பட்ட பவுலிய கடிதங்கள் மார்சியோன், ஞானவாதக்காரர்களுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருந்த நேரம். அந்த நேரத்தில் மார்சியோன், கிறித்தவ திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் யூத கூருகளை ஏடுகளில் நுழைப்பதாக குற்றம் சாட்டினார்.(1) கிறித்தவ திருச்சபையோ மார்சியோன் ஏடுகளில் இருந்து நீக்கம் செய்வதாக குற்றம் சாட்டின. இது குறித்த மங்கலான நிலையே கிறித்தவ வரலாற்றில் காணப்படுகிறது. எனவே அவர் அவர் சார்ந்த சபைகளுக்கு ஏற்ப பவுலிய கடிதங்களில் கூட்டல் கழித்தல் செய்திருக்கின்றனர் என்பதை உறுதிபடுத்த முடிகிறது.

👉பவுலிய கடித தொகுப்பாளர்களுக்கு எந்த கடிந்தங்கள் கிடைத்தன என்பதற்கு எந்த தரவுகளும் இல்லை. பவுலின் பெயரால் புனையப்பட்டதாக பெரும்பான்மை கிறித்தவ அறிஞர்களால் ஏற்கப்படும், 1 மற்றும் 2 தீமோத்தேயு, தீத்து ஆகிய கடிதங்கள் பவுலினது என்று தவறாக சேர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக கொலோசெயர் 4:16 லவோதிக்கேயாவில் இருந்து வரும் பவுலிய நிருபம் விடப்பட்டுள்ளது. என்ன அளவுகோலை கொண்டு பவுலிய கடிதங்கள் தொகுப்பில் சேர்க்கப்பட்டன என்பதற்கு எந்த வரலாற்று தரவுகளும் இல்லை. மேலும் 2 கொரிந்தியர், பல கடிதங்கள் ஒன்றினைத்து உருவாக்கப்பட்ட ஒரு கடிதம் என்று பெரும்பான்மை கிறித்தவ அறிஞர்களால் இன்று கூறப்படுகிறது. இவை அனைத்தும் முன்சென்ற 3ம் காரணியின் முடிவை உறுதி படுத்துவதாய் உள்ளது.
        நாம் முன்சென்ற கட்டுரைகளில் மேற்குறிபிட்ட காரணிகள் குறித்தும், அந்த காரணிகள் தோற்றுவித்த அனுமான்ங்கள் குறித்தும், அந்த அனுமானங்கள் தோற்றுவிக்கும் சிக்கல்கள் குறித்தும் விளக்கமாக கண்டிருந்தோம். நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் புதிய ஏற்பாட்டினை ஆய்வு செய்யும் யாருக்கும் ஏற்படும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் புதிய ஏற்பாடு உருவாகி கொண்டிருந்த காலத்திலேயே இடைச்செருகல்களும், திரிபுவாதங்கள் பவுலிய கடிதங்களில் நுழையத்துவங்கி விட்டது என்பதை உறுதி படுத்தும் விதமாக பின்வரும் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் இடம்பெறுவதை நாம் காணமுடிகிறது.

        பவுலின் போதனைகளிலும், கடிதங்களிலும் இடைச்செருகல்கள் ஏற்பட துவங்கியது என்பது பவுலின் காலத்திலேயே என்பதை அந்த கடிதங்களே கூறிகின்றன.
    மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள். (2 பேதுரு 3:15-16)
    நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும். (ரோமர் 3:8)
    ரோமருக்கு எழுதிய கடிதம் பவுலின் மூன்றாவது மிஷனரி பயணத்தின் போது எழுதப்பட்டதாக தற்கால அறிஞர்கள் கூறுகின்றனர். பவுலின் வாழ்நாளிலேயே இந்தமாதிரியான திரிவு வாதங்கள் பவுலிய போதனைகளில் உள் நுழைந்துவிட்டன என்பதை காட்டுகிறது. இப்படி பவுலின் போதனைகள் பவுலின் காலத்திலேயும், அதன் சமீபத்திலுமேயே சிதைய துவங்கியது என்பதை மேற்குறிப்பிட்ட புதிய ஏற்பாட்டின் வசனங்கள் கூறுகின்றன. அதவாது பவுலின் போதனைகளிலும், கடிதங்களிலும் இடைச்செருகல்கள்களும் கூட்டலும் குறைத்தலும் வர துவங்கிவிட்டது என்பதை மேற்குறிபிட்ட வசனங்கள் பட்ட வர்த்தனமாய் ஒப்புக்கொள்கின்றன. எனவேதான் Harry Y. Gamble பின்வருமாறு கூறுகிறார்.
The larger collections of Paul's letters that come into view in the second century, consisting variously of ten, thirteen, and fourteen letters, were outgrowths of these earlier small and perhaps regional collections.  
இரண்டாம் நூற்றாண்டில் கவனத்திற்கு வந்த பவுலிய கடிதங்களின் பெரிய தொகுப்புகள், பத்து, பதின்மூன்று மற்றும் பதினான்கு கடிதங்களை கொண்டவை, இவை முந்தைய சிறிய மற்றும் சிலவேலைகளில் பிராந்திய சேகரிப்புகளின் வெளிவளர்ச்சிகளாக இருந்தன.(Harry Y. Gamble., Books and Readers in the Early Church P.No.100)

Paul's copies would have been a valuable resource to his associates, who eventually collated and revised them. Ultimately, they would have transcribed them, together with some pseudonymous letters, in a comprehensive format. 
பவுலின் பிரதிகள் அவரது கூட்டாளிகளுக்கு மதிப்புமிக்க ஆதாரமாக இருந்திருக்கும், அவர்கள் இறுதியில் அவற்றைத் தொகுத்து திருத்தினார்கள். இறுதியில், அவர்கள் சில புனைவு கடிதங்களுடன், விரிவான வடிவத்தில் அவற்றைப் படியெடுத்திருப்பார்கள்.(Harry Y. Gamble., Books and Readers in the Early Church P.No.101)
    யார் இப்படி புனைவுகளை உள்ளே திணித்து தொகுப்புக்களை உருவாக்கியிருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இது குறித்த தரவுகள் எதுவும் இல்லை. இப்படி புனைவுகளை இடைச்செருகல்கள் செய்து பவுலிய கடிதங்கள் திருத்தப்பட்டுள்ளது என்பதுமட்டும் வரலாற்று தரவுகள், வரலாற்றில் ஏற்பட்ட வாத பிரதி வாதங்களின் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு இடைச்செருகள் செய்யப்பட்டதாக தற்கால புதிய ஏற்பாட்டு அறிஞர்களால் கருத்தப்படும் பவுலிய கடிதங்களின் பகுதியை சிறு பட்டியலாக BeDuhn J.D., டெக்ஸாசின் டிரினிட்டி பல்கலைகழகத்தின் பேராசிரியர் வில்லியம் O. வாக்கர், கிறித்தவ மதகுரு மற்றும் கயஸ் கல்லூரியின் கல்வி தலைவரான J.V.M. ஸ்டர்டி  ஆகியோர் தங்களது நூல்களில் தொகுத்து வழங்கியுள்ளனர், இம்மூவரின் ஆக்கங்களில் காணப்படும் சிறு பட்டியலை இங்கு நாம் தொகுத்து தருகிறோம்.

1.ரோமர்


 வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. 1:3-4 Loisy (1935: 9)
2. 1:18-32 Michelsen (1876); Couchoud (1926); Harrison (1936: 298f); Carrington (1939); Hawkins (1941); O'Neill (1975: 40-45)
3. 1:18-32- 2:29 O'Neill (1975: 40-45)
4. 1:19-2:1 P. N. Harrison
5. 2:1 Bultmann (1947); Schmithals (1975, marginal note).
6. 2:13 Schmithals (1975, marginal note)
7. 2: 14f. Weisse
8. 2:15b-16 Sahlin (1953)
9. 2:16 Bultmann (1947); Schmithals (1975, marginal note)
10. 3:9-20 Hawkins (1941)
11. 3:10-18 Weisse (1833); Pierson and Naber (1886); Michelsen (1887);  Van Manen (1880); Schenke and Fischer (1978: 142f.);
12. 3:12-18 O'Neill (1975)
13. 3:23-26 Hawkins (1941)
14. 3:24/25-26 Talbert (1966)
15. 4:1 & 4:17b Schenke and Fischer (1978: 144)
16. 4:1 Weisse
17. 5:1 Schmithals (1975)
18. 5:5-10 Schenke and Fischer (1978: 144)
19. 5:6-7 Keck (1979: 237-38); Schmithals (1975, marginal note)
20. 5:7 Semler (1810)
21. 5:12-21 Barnes (1947: 239); O'Neill (1975: 96-107)
22. 6:17b Bultmann (1947); Schmithals (1975, marginal note)
23. 7:25b Bultmann; Schmithals (1975, marginal note). 
24. 8:1 Weisse, Bultmann (1947); Schmithals (1975, marginal note)
25. 8: 9-11 François Refoulé(1987)
26. 10:17 Bultmann (1947); Schmithals (1975, marginal note).
27. 13:1-7 Pallis (1920); Loisy (1922: 104, 128; 1935: 30-31; 1936: 287);  Windisch (1931); d. Barnikol (1931b); Eggenberger (1945); Barnes (1947: 302, possibly); Kallas (1964-65); Munro (1983: 56f., 65-67); Sahlin (1953); Bultmann (1947). 
28. Ch15,16 முழுவதும் Baur (1836b; 1849; 1845); Schwegler (1846: I, 296); Zeller (1854: 488); Volkmar (1856; 1875: xvff., 129ff.); Lucht (1871); Ryder (1898); Smith (1901); Scholten (1876); Davidson (1882: 125-28; 1894: 12631)
29. 16:17-20 Volkmar (1875); Pfleiderer (1887: 145).
30. 16:17-18 Loisy (1935: 29)
31. 16:24 Cranfield; Mangold (1884)
32. Ch16 முழுவதும் Weiss (1872); Hawkins (1941); Knox (1954); Friedrich (1961).
33. 16:25-27 Reiche (1833); Krehl (1845); Delitzsch (1849); Davidson (1868: 134-37; 1882: 118-21; 1894: 120-23); Lucht (1871); Hilgenfeld (1872: 469ff.; 1875: 326f.); Pfleiderer (1873: 314); Seyerien (1874); Volkmar (1875); Schultz (1876); Mangold (1884: 44-81); Bruckner; Lipsius; von Weizsacker (1886: 334); Jiilicher (1894: 71); Corssen (1909: 1-45); Lake (1914: 359f.); Wendland (1912: 351); Weiss (1917: 534); Burton (1921: 509); Loisy(1922: 106, 134); Harnack (1931); Barnikol (1931a; 1933: 116-48); Dodd (1932: 245); Manson (1948); Gaugler (1945); Zuntz (1953); Michel (1955: 19f.); Barrett (1958: 10-13,286); Friedrich in RGG3, V, 1138; Beare (1962b: 112f.); Marxsen (1964); Fuller (1966: 56); Fitzmyer in Brown, Fitzmyer and Murphy (eds) (1990: 292); Bornkamm (1969); Lohse (1972); Kasemann (1973); Cranfield (1975: 6-9); Schmithals (1975); Vielhauer (1975: 187f.); Gamble (1977: 10710, 123f.); Schenke and Fischer (1978: I, 136f.); Elliot (1981); Dunn (1988: 912f.); Ziesler (1989: 25); Donfried (1970); Kamiah (1956)


வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. 1 கொரிந்தியர் முழுவதும் Bauer; Pierson; Loman
2. 1:2 Weiss (1917: 534); Gilmour (1962: 688).
3. 1:2b Weiss (1910: xli, 3f.); Dinkler ; Schmithals (1965: 188f;  197~258);Schenke(1978:92f).
4. 1:12 Weiss; Heinrici (1880); Pearce in Bowyer (1812); Goguel (1926: IV,  2); Michaelis.
5. 1:16 Holsten (1880: 461 n.9, not asserted absolutely)
6. 2:6-16 Widmann (1979), E. Earle Ellis(1974)
7. 4:6 Straatman; van de Sande Bakhuyzen (1880)
8. 4:17 Weiss (1910: xli, 120); Gilmour; Dinkler
9. 6:3 Holsten
10. 7:8 Holsten
11. 7:11ab Holsten
12. 7:14 Holsten
13. 7:17 Weiss (1910: xli); Gilmour; Dinkler. 
14. 7:17-24 Munro (1983: 80f.)
15. 7:36-38 Holsten; Barnes (1947: 229)
16. 8 ch. முழுவதும் Munro (1983)
17. 10 ch. முழுவதும் Barnes (1947)
18. 10:1-22 Lamar Cope(1990)
19. 10:4bHolsten
20. 10:13 Clemen; Pierson and Naber (1886: 81f.).
21. 10:17 Clemen.
22. 10:23-11:1 Munro 1983: 75-79
23.10:29b-30 Hitzig; Zuntz. 
24. 11:2-16 Loisy (1935: 60f., 73f.,); Walker (1975; 1983; 1989); Cope (1978); Trompf (1980); Munro (1983: 69-75).
25. 11:5b-6 Holsten
26. 11:10 Holsten; Lang; Wassenbergh (1815: 66); Straatman; Baljon; Owen; Lotze; Neander; Baur (1845: 636).
27. 11:11Straatman
28. 11:11f Weiss (1910: xli).
29. 11:13-15 Holsten
30. 11:16 Straatman; Prins; Baljon; Weiss (1910: xli, 276f.); Gilmour; Dinkler
31. 11:23-28 Straatman; Bruins; Lehman and Fridrichsen (1922); Loisy (1922: 43,67; 1935: 69-74). J. Magne (1 Corinthians 11:23-25)
32. 11:30 Prins.
33. 13 ch. முழுவதும் Lehmann and Fridrichsen; Loisy (1922: 43,67); (1935: 69-74); Barnes(1947: 230); Titus (1959); Schenke (1978).
34. 14:33-38, 14:33-38,
35. 14:33 Weiss (1910: xli); Gilmour; Dinkier; Loisy (1935: 73).
36. 14:33b-35 Kummel; Straatman; van de Sande Bakhuyzen (1880); Holsten (1880: 495-97); van Manen (1880: 284-85); Genootsch (1880: 259f.); Schmiedel (1891); Weinel; Weiss (1910: 342); Allworthy (1917: 9597); Dinkier; Loisy (1922: 43; 1933: 20 n.6; 1948: 363; 1961: 287); Leipoldt (1952); Zuntz (1953); Wendland (1954); Conzelmann (1969: 289f.); Ruef (1971: 154£.); Scroggs (1972); Munro (1973; 1983: 15f.); Jewett (1978); Perrin and Duling (1982: 180)
37. 14:34-35 Heinrici; Pfleiderer (1887: 169n); Easton (1947); Fascher  (1953); Leipoldt (1954); Schweizer (1959: 152); Fitzer (1963); Bittlinger  (1967); Barrett (1987: 699-708); Murphy-O'Connor (1979: 81-84). Cf. also  Clemen (1894: 49f.)
38. 15 ch. முழுவதும் Barnes (1947: 228)
39. 15:3-11 Straatman, van Manen, Teylers
40. 15:5b Holsten
41. 15:21f.,42-49 O'Neill (1975: 96)
42. 15:56 Friedrich Wilhelm Horn
43. 16:22Schmiedel; Baljon (1884); Holsten (1880: 450f.); Rovers; Bruins

3.2 கொரிந்தியர்:

வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. 1.1b Schmithals; Schenke and Fischer (1978: 112).
2. 3:12-18  Halmel (1904).
3. 4:3, 4,6, Halmel (1904)
4. 4:4, Baljon; Wassenbergh
5. 5:16 Schmithals; Giittgemanns (1966: 290ff.).
6. 6:14-7:1 Schrader (1835: IV, 300f.); Ewald (1857: 12, 282f.); Straatman (1863: I, 138-46); Baljon; Holsten (1868: 386); Michelsen (1873); Rovers (1874: I, 137); van de Sande Bakhuyzen (1880: 266f.); Davidson (1882: 60; 1894: 63); Krenkel (1890: 332); Halmel (1904: 115-29); Jiilicher and Fascher (1931: 87f.); Groussow (1951a, 1951b); Dinkier in RGG3 IV, 18,22; Fitzmyer (1961); Gnilka (1968); Georgi (1986/7: 21-22); Marxsen (1964); Braun (1966: 201-204); Fuller (1966: 41-42); Wendland (1968); Rissi (1969: 7980); Klinzing (1971: 172-82); Dahl (1972: 62-69); Betz (1973); Gunther (1973: 308-13); Perrin and Duling (1982: 182); Vielhauer (1975: 153); Bultmann (1976: 169); Schenke and Fischer (1978: 110f., 117f.); Lang; Findeis (1983: 66); Klauck (1988: 60-61); Wiirzburg (1988: 60-61); Kuhn (1951-52; 1954); Jewett (1978: 433 n.4).
7. 11:32-12:1 Michelsen (1873).
8. 12:2 Matthes; Rovers (1870); Scholten (1876).
9. 13:13 Burton (1921: 509); Goodspeed (1945; 57); Furnish (1984: 587); Barrett

4.கலாத்தியர்:

வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. கலாத்தியர் முழுவதும் Bauer (1850-52); Loman (1882); Pierson (1878); Pierson and Naber (1886: 26f.); Steck (1888); van Manen; Friedrich (1891); Kalthoff (1904); Johnson (1887); and Robertson. O'Neill (1972) பெரும் இடைச்செருகல் இருப்பதாக கூறுகிறார்
2. 2:3-8Warner (1951).
3. 2:7b-8Straatman, van Manen (1890: 513ff.); V6lter (1890: 90); Barnikol (1931a); Schenke and Fischer (1978: 79-81); O'Neill (1972). 
4. 2:18Schmithals (1973)
5. 3:16bBurton (1921: 509f.)
6. 3:19aGaston (1982); Eshbaugh (1979); and Walker (1988)
7. 3:20Burton (1921: 190-92
8. 4:25aSchmithals (1973); Schenke; O'Neill (1975); Bentley (1962); Mace(1729, who omits it from Sinaiticus); Mill; Schott; Prins (1872); Naber (1878, "insertion work of an ass"); Holsten (1880: 171f.); van de Sande Bakhuyzen (1880); Baljon (1889: 185); Thijm (1890); Cramer (1890);  Clemen; Burton (1921: 259f.).
9. 5:7Scott
10. 5:7bSemler; Koppe; Holsten (1880: 175)
11. 5:16-24Sturdy

5.பிலிப்பியர்:

வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. பிலிப்பியர் முழுவதும்Baur and Schwegler ,Volkmar and Hitzig Davidson (1882: 164)
2. 1.1bBruckner; Volter (1892); Schmiedel (1902); Moffatt (1918: 171); Riddle and Hutson (l946: 123); Marxsen (1964: 57); Fischer (1973); Schenke and Fischer (1978: 126). 
3. 2:6-11Loisy (1935: 91f.; 1948: 364); Bruckner (1885; 1890: xix, 219ff.); but cp. Marxsen (l969: 22-37); Holsten (1876); Barnikol (1932b); Barnes (1947: 244), Berlage (l880: 80ff.); Schmiedel
4. 3:1-4.9Schrader apud Davidson (1882: 158).
5. 3:1Clemen.
6. 3:2,5Weisse
7. 3:9Wassenbergh
8. 3:10fSchmiedel
9. 3:18Laurent
10. 3:20Bruckner; Clemen
11. 4:2fEwald
12. 4:3Schenke

6.1 தெசலோனிக்கேயர்:

வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. 1:2-10Fuchs (1963-64)
2. 1:9-10Friedrich (1965)
3. 2:1-16Loisy (1935: 85)
4. 2:13Wassenbergh
5. 2:14-16Van der Vies; Ritschl (1847); Rodrigues (1876); Pierson and Naber; Spitta (1889: 501; 1901: 190); Schmiedel (1891: 17); Pfleiderer; Teichmann (1896); Mansfield; Drummond; Loisy (1922: 135, 139; 1935: 85); Goguel; Bammel (1959); Eckhart (1961); Schmithals (1965: 89ff.).
6. 2:15fKoster (1980); Schmidt (l983).
7. 3:2b-5aLoisy (l922: 135, 139f.)
8. 3:5Clemen; von Dobschutz; Eckhart
9. 4:1-8, 10b-12Eckhart
10. 4:1-12Munro (1983: 86-88)
11. 4:1Schenke and Fischer (l978: 70); Friedrich (1973; 1976); Harnisch (1973); Eckhart (1961); Hitzig (1856); Schmiedel (l891: 34); Weiss; Schenke and Fischer (1978: 1, 70)
12. 5:1-11Friedrich (1965)
13. 5:12-22 and 5:27Eckhart

7.பிலேமோன்:

வ.  எண் இடைச்செருகல் என்று கூறப்படும் வசனம் இடைச்செருகல் என்று கூறும் புதிய ஏற்பாட்டு அறிஞர்
1. 5-6Bruckner
2. 19aZuntz
    

    மேலே நாம் குறிப்பிட்டுகாட்டிய பட்டியல் பவுலிய கடிதங்களில் ஆதாரப்பூர்வமானவையாக கருதப்படும் 7 கடிதங்களில் எவ்வளவு இடைச்செருகல்கள் உள்ளன என்பதையும், அது குறித்து கிறித்தவ அறிஞர்களே கூறி வருகின்றனர் என்பதையும் இங்கு தோழுரித்து காட்டியுள்ளோம். மேலும் தனது வாதமான, கிறித்தவ நம்பிக்கைக்கு மாற்றமாக புதிய ஏற்பாடு உருவாக்கத்தின் காலத்தை பிற்படுத்தியதாக நிறுவவே  J.V.M. ஸ்டர்டி அவர்கள் இந்த நீண்ட அட்டவனையை தயார் படுத்தி உள்ளார். இந்த ஆக்கத்தை REDRAWING THE BOUNDARIES: The Date of Early Christian Literature by J.V.M.Sturdy என்று தலைப்பிட்டு Jonathan Knight என்ற அறிஞர் வெளியிட்டுள்ளார்.   பவுலிய கடிதத்தில் இடைச்செருகல்கள் மலிந்து இருக்கிறது என்பது நவீன கருத்தல்ல. இது பல கிறித்தவ புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் அறிந்து ஒத்துக்கொண்ட பரம ரகசியம்????. இந்த இடைச்செருகல்களின் தீவிரத்தன்மை குறித்து கேம்பிட்ஜ் பல்கலைகழகத்தின் ஆர்மண்ட் இறையியல் கல்லூரி பேராசிரியராகிய J. C. O'NEILL பின்வருமாறு கூறுகிறார்:
        These conclusions are painful for us to contemplate for, though they do little to diminish the worth of the great classical detailed commentaries, they shatter the foundation of all the systems built on a rock called Paul. It is painful to have to admit that we cannot know Paul until we set aside the glosses and interpolations, and more painful to have to admit that passages we once regarded as keys to the apostle's thought might be later additions. But we can do nothing else, for that is where the evidence points.  
    இந்த முடிவுகள் நாம் சிந்திக்க மிகவும் வேதனையானவை, ஏனென்றால் அவை சிறந்த தொன்மையான விரிவான வர்ணனைகளின் மதிப்பைக் குறைக்கவில்லை என்றாலும், அவை பவுல் என்ற பாறையின் மீது கட்டப்பட்ட அனைத்து அமைப்புகளின் அடித்தளத்தையும் சிதைத்துவிடும். வியாக்கியானங்களையும் இடைச்செருகல்களையும் ஒதுக்கி வைக்கும் வரை பவுலை அறிய முடியாது என்பதை ஒப்புக்கொள்வது வேதனையானது. மேலும் ஒரு காலத்தில் அந்த அப்போஸ்தலரின் சிந்தனையின் திறவுகோலாக நாம் கருதிய பகுதிகள் பின்னர் சேர்க்கப்படவை என்பதை ஒப்புக்கொள்வது மிகவும் வேதனையானது. ஆனால் நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாது, ஏனென்றால் அதுதான் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. (P.No.386, Glosses and Interpolations in the Letters of St Paul by J. C. O'NEILL, STUDIA EVANGELICA VOL. VII, Papers presented to the Fifth International Congress on Biblical Studies held at Oxford, 1973 Edited by ELIZABETH A. LIVINGSTONE)

    அதாவது J. C. ஓ’நீல் அவர்களது கருத்தின் படி பவுலிய அடித்தளத்தில் அமைக்கப்பட்ட அனைத்தும், இடைச்செருகல்கள் பவுலிய கடிதங்களில் உள்ளன என்பதை ஏற்பதினால் சரிந்துவிழுந்துவிடும் என்று கூறுகிறார். மேலும் இந்த இடைச்செருகல்கள் பவுல் குறித்து உண்மையான புரிதலை நம்மால் எட்டமுடியாமல் தடுக்கிறது என்றும் கூறுகிறார். அந்த அளவிற்கு பவுலிய கடிதங்களில் இடைச்செருகல்கள் உள்ளே நுழைந்துள்ளது என்பதை இதன் மூலம் J. C. ஓ’நீல் சொல்லாமல் சொல்கிறார்.   மேலும் இப்படி உள்ளே நுழைந்த இடைச்செருகல்களை ஏன் களையெடுக்க இயலவில்லை அல்லது கூடாது என்பதை வில்லியம் O. வாக்கர் தனது நூலில் பின்வருமாறு தொகுத்து தருகிறார்.   

     In short, most of the writings comprising the New Testament exhibit non-Pauline ideational features and some even anti-Pauline features, some of these writings are attributed to people other than their actual authors, most are of non-Pauline and indeed unknown origin, and some contain multiple strata of material. Moreover, all of this is well known, not only by New Testament scholars but also by the graduates of reputable theological seminaries. So far as I am aware, however, no responsible scholar or ecclesiastical leader has, for this reason, called for the removal of any of these writings from the New Testament Canon. 

    Indeed, the Church has long since decided, de facto if not de jure, that neither the presence of multiple strata of material, non-Pauline and indeed unknown and even 'false' authorship, nor non-Pauline and even anti-Pauline ideas constitutes a necessary bar to inclusion of a document within the Canon. If this is the case regarding entire documents, why should it not also apply to specific passages within documents? In principle, the recognition that 1 Cor. 14.34-35, for example, is a non- Pauline interpolation is not so different from the acknowledgment that the Gospel according to Luke is composed of various strata of material, that the Gospel according to John is of unknown authorship, that the Letter to the Ephesians is pseudonymous, and that the Letter of James is non-Pauline and even anti-Pauline in flavor.8 If these documents are to be retained in the New Testament Canon, what possible basis could there be for the removal of 1 Cor. 11.34-35 or other non-Pauline interpolations? 

    It should also be noted that when the early Church eventually arrived at a consensus regarding the limits of the Canon, the various documents were included in their final, 'canonical' form, not in some putative earlier or 'original' form and not with the proviso that any parts later judged to be secondary were to be removed. Thus, any non-Pauline interpolations that might then have appeared in the Pauline letters became a part of the Canon of Christian Scripture. (P.No.240-241, Interpolations in the Pauline Letters William O. Walker, Jr)

    சுருக்கமாக, புதிய ஏற்பாட்டை உள்ளடக்கிய பெரும்பாலான எழுத்துக்கள் பவுலின்  சிந்தனை அல்லாத அம்சங்களையும், மேலும் சில பவுலியத்திற்கு எதிரான அம்சங்களையும்   வெளிப்படுத்துகின்றன, இந்த எழுத்துக்களில் சில அவற்றின் உண்மையான ஆசிரியர்களைத் தவிர வேறு நபர்களுக்கு உரியதாக கூறப்படுகிறது, பெரும்பாலானவை பவுலியம்  அல்லாதவை மற்றும் உண்மையில் அறியப்படாத தோற்றம் கொண்டவை, மேலும் சில, பல அடுக்கு மூலங்களைக் கொண்டுள்ளன. மேலும், இவை அனைத்தும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களால் மட்டுமல்ல, புகழ்பெற்ற இறையியல் செமினரிகளில் பட்டம் பெற்றவர்களாலும் நன்கு அறியப்பட்டவை. எவ்வாறாயினும், நான் அறிந்த வரையில், எந்தவொரு பொறுப்புள்ள அறிஞரும் அல்லது திருச்சபைத் தலைவரும், இந்த காரணத்திற்காக, புதிய ஏற்பாட்டு நியதியிலிருந்து இந்த எழுத்துக்கள் எதையும் அகற்றுமாறு கோரவில்லை. 

    உண்மையில், பல அடுக்கு (ஆவணங்களை) கொண்டிருப்பதும், பவுலிய அல்லாத மற்றும் உண்மையில் அறியப்படாத மற்றும் 'பொய்யான' ஆசிரியத்துவம் கொண்டிருப்பதும், அல்லது பவுலிய அல்லாத மற்றும் பவுலிய எதிர்ப்பு கருத்துக்களை கொண்டிருப்பதும் , , திருச்சபை நீண்ட காலமாக முடிவு செய்துள்ளதின் படி நடைமுறையில் இல்லையென்றாலும், நியதிக்குள் ஒரு ஆவணத்தை சேர்ப்பதற்கு அவை தடையாக இருக்கவில்லை. முழு ஆவணங்கள் சம்பந்தமாக இப்படி நிலை இருந்தால், ஆவணங்களில் உள்ள குறிப்பிட்ட பத்திகளுக்கும் ஏன் இது பொருந்தக்கூடாது? கொள்கையளவில், எடுத்துக்காட்டாக, 1 கொரி. 14.34-35, பவுலின் அல்லாத இடைச்செருகலை அங்கீகரித்தல் என்பது, லூக்காவின் சுவிசேஷம் பல்வேறு அடுக்குப் ஆவணங்களால் ஆனது, யோவானின் சுவிசேஷம் அறியப்படாத எழுத்தருடையது, எபேசியர்களுக்கான நிருபம் என்பது புனைவு, யாக்கோபின் நிருபம்  பவுலிய அல்லாத மற்றும் சுவையில் பவுலியத்திற்கு எதிரானது ஆகியவற்றையெல்லாம் ஒப்புக்கொள்வதில் இருந்து வேறுபட்டதல்ல. இந்த ஆவணங்கள் புதிய ஏற்பாட்டு நியதியில் தக்கவைக்கப்பட வேண்டுமென்றால், 1 கொரி. 11.34-35 அல்லது மற்ற பவுலிய அல்லாத இடைச்செருகல்களை அகற்றுவதற்கு என்ன அடிப்படை இருக்க முடியும்?

ஆரம்பகால திருச்சபை இறுதியில் நியதியின் வரம்புகள் குறித்து ஒருமித்த கருத்துக்கு வந்தபோது, பல்வேறு ஆவணங்கள் அவற்றின் இறுதி, 'நியமன' வடிவத்தில் சேர்க்கப்பட்டன, சிலவகையான முந்தைய அல்லது 'அசல்' வடிவத்தில் சேர்க்கப்படவில்லை என்பதையும், பிற்பாடு இரண்டாம் நிலை என்று தீர்மானிக்கப்படும் எந்தப் பகுதியும் அகற்றப்படும் என்ற நிபந்தனையுடனும் சேர்க்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, பவுலிய கடிதங்களில் தோன்றிய பவுலிய அல்லாத இடைச்செருகல்கள் கிறிஸ்தவ வேதாகமத்தின் நியதியின் ஒரு பகுதியாக மாறியது. (P.No.240-241, Interpolations in the Pauline Letters William O. Walker, Jr)

    வில்லியம் O. வாக்கர் பொருத்தவரை மொத்த புதிய ஏற்பாடே இடைச்செருகல்களாலும், அட்ரஸ் இல்லாதவர்களாலும் புனையப்பட்டு எழுதப்பட்ட நூல். அதில் ஒன்றை தூக்கினால் அதுவே மொத்த புதிய ஏற்பாட்டிற்கும் சாவு மணி அடிக்க போதுமானதாய் மாறிவிடும். எனவே அதில் எத்துனை புனைவுகளும், இட்டுக்கட்டலும் இருந்தாலும், அதனை அறிஞர்கள் சுட்டிக்காட்டி பிரித்து காட்டினாலும், புதிய ஏற்பாட்டின் நியமத்தை தக்கவைத்தே ஆக வேண்டும் என்ற அவல நிலை கிறித்தவ உலகில் இருப்பதை பட்டவர்த்தனமாக ஒத்துக்கொள்கிறார். மேலும் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட புதிய ஏற்பாட்டின் நூல்கள் எதுவும் அதன் முந்தைய அசல் வடிவில் கிறித்தவ திருச்சபைக்கு கிடைக்கவில்லை என்பதையும் அவர் சுட்டி காட்டுகிறார். பவுலிய கடிதங்கள் மொத்தம்  13ல் 6 புனைய பட்டவை. மீதம் இருக்கும் 7 இடைச்செருகல்களால் பாழாக்கப்பட்டுள்ளதை நமது கட்டுரை தெளிவாக கூறுகிறது.