பக்கங்கள் செல்ல

cross tab2

Wednesday, May 20, 2015

எதிர்தொடர் 14:பூமியின் வடிவத்தில் குழப்பமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்


எதிர்தொடர் 14: பூமியின் வடிவத்தில் குழப்பமா?
      இந்த கட்டுரையில் கட்டுரையாளர் குர் ஆன் பூமியை தட்டையானது என்று கூறுகிறது என்று நிறுவ படாதபாடு படுகிறார்.[refer:Source]அல்லாஹ் பூமியை எப்படி படைத்திருக்கிறான் என்பதை குர் ஆன் எப்படி விளக்குகிறது என்பதையும் கட்டுரையாளரின்  குற்றச்சாட்டுகள் எவ்வளவு மொன்னைத்தனமானது என்பதையும் பார்ப்போம்.

அல்குர்ஆன் வசனம் 79: 30 கூறுவது என்ன?
      இந்த குறிப்பிட்ட வசனம் முதலில் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம். அதன் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

 وَالأرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا (٣٠)

வார்த்தை
மூல சொல்
( Root)
பொருள்
வார்த்தை இடம்பெறும் இதர இடங்கள்
أرْضَ
أ ر ض
(பெயர்ச்சொல்) பூமி, தரை, பூமியின் மேற்பரப்பு, நிலம்,1
25 க்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகிறது. உம்: அல் குர் ஆன் 2:71, 5:33, 6:59, 
بَعْدَ
ب ع  د
பின்னர்2

ذَلِكَ
ذ ل ك
இதன்3

دَحَاهَا
د ح ه
(வினைச்சொல்) விரித்தல், உப்ப செய்தல், பரப்புதல், வீசியெரிதல், பன்படுத்துதல், மென்மையாக்குதல் நிறைவாக்குதல் பெரிதாக்குதல், சமமாக்குதல், 4
79:30. மேற்கூறிய ஒரு இடத்தில் மட்டுமே இடம் பெறும் சொல். இந்த சொல்லை வயிறு பெரிதாவதை குறிப்பதற்கும் பயன்படுத்துவர்.4


இந்த வசனத்தில் இடம் பெறும் د ح ه என்ற சொல் மிக விரிந்த பொருளை உடையது. அவற்றை ஒவ்வொன்றையும் இந்த வசனத்தில் பொருத்தி பார்ப்போம்.

மொழியாக்கம் 1;

79:30. இதன் பின்னர் பூமியை விரித்தான்.

   இங்கு விரித்தல் என்பது பெரிதாக்குதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை இந்த இடத்தில் பொருத்தினால் பூமி பெரிதாக்கப்பட்டது என்று பொருள் படும். இது இன்றைய அறிவியலுக்கு எந்த விதத்திலும் முரண்பட வில்லை. இன்று அறிவியல் முதலில் Planet Embryo தோன்றியதாகவும். பிறகு அது பெரிதானது என்றும் அறிவியல் கூறுகிறது. மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் விக்கிபீடியா வலைதளத்தில் பார்க்கவும். (refer A, B)

மொழியாக்கம் 2:

79:30. இதன் பின்னர் மேற்பரப்பை பன்படுத்தினான்.

     இங்கு அர்த என்பதற்கு மேற்பரப்பு என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. دَحَاهَا என்பதற்கு பன்படுத்தினான்( smoothed out) என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு முன் சென்ற பல அறிஞர்களினால் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பூமியை மனிதன் வாழ்வதற்கு தயார் படுத்துதல் என்று பொருள். எப்படி நெருப்புகோழி தனது முட்டையை இட இடத்தை (أدحية- உத்ஹியத்துன்) ஏற்றதாக மாற்றுமோ அது போல. பின் வரும் அறிவிப்பு இதை உறுதி செய்கிறது.

ஸயீத இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்:
ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘எனக்குக் குர்ஆனில் சில வசனங்கள் முரண்படுவதாக தெரிகிறதே!” என்று கேட்டார். அவையாவன:................
3.’உங்களைப் படைப்பது அதிகச் சிரமமான வேலையா? அல்லது வானத்தைப் படைப்பதா? அல்லாஹ் அதனை நிர்மானித்தான். அதன் முகட்டை அவன் உயர்த்தினான். பிறகு அதை ஒழுங்கு படுத்தினான். மேலும் அதன் இரவை மூடி அதன் பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர், பூமியை அவன் விரித்தான்.” எனும் (திருக்குர்ஆன் 79:27-30) வசனங்கள் பூமியை அல்லாஹ் படைப்பதற்கு முன்னால் வானத்தை நிர்மானித்ததாகக் குறிப்பிடுகின்றன்.........................

அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்.......................................
        அல்லாஹ் இந்த பூமியை படைத்தது இரண்டு நாட்களில். பிறகு வானத்தை படைத்து அதனை இரண்டு நாட்களில் சீராக்கினான். பிறகு அவன் பூமியை விரித்தான். மேலும் இங்கு விரித்தல் என்பது பூமியில் இருந்து புல்வெளியையும் நீரையும் வெளிப்படுத்துதல் ஆகும். அதன் பிறகு மலைகளையும், ஒட்டகங்களையும், குன்றுகளையும் மற்றும் இடைபட்ட வற்றையும் இரண்டு நாட்களில் படைத்தான். இதுதான் அல்லாஹ் கூறும் “அவன் பூமியை விரித்தான்” என்பதன் பொருளாகும்.........................
                  நூல்: புஹாரி, அல்ஃபுஸ்ஸிலத் அத்தியாயதின் விளக்கவுரை 
பாடம்: திருக்குர்ஆன் விளக்கவுரை,பாகம் 5  பக்கம் 578-580
     மேலும் இப்னு கஸீர் தனது தஃப்ஸீரில்  பாகம் 1, பக்கம் 116ல் 2:29 வசனத்திற்கான விளக்கத்தில் இதே கருத்தை பதிவு செய்துள்ளார். அர் ராஸி அவர்களும் இதே பொருளில் இந்த வசனத்தை கையாண்டுள்ளார். மேலும் விரித்தல்( spread out) என்பது தட்டையான பரப்பில் மட்டும் செய்ய முடியும் என்பது தவறானது. மிகபெரிய உருண்டை வடிவத்தின் மேலும் விரிக்கலாம்.

       ஆக இவை இரண்டு மொழியாக்கமும் பூமியின் வடிவம் குறித்து பேசவில்லை. அதன் படைப்பு முறை குறித்தும் அதன் படிநிலைகள் குறித்தும் கூறுகிறது. இந்த வசனம் குர்ஆனின் மொழியியல் அற்புதத்தை விளக்குவதாகவும் உள்ளது. பரந்த விளக்கம் அளிக்கும் ஒரு சொல்லை சரியான இடத்தில் பொருத்தி அது இந்த ஆசிரியர் கூறுவது போல் எந்த வடிவமாக இருந்தாலும் அதற்கு பொருந்துவதாய் உள்ளது ஒரு மொழியியல் அற்புதம் அல்லவா! அல்லாஹ் அனைத்திலும் மிகைத்தவன் ஞானமிக்கவன். பூமியின் வடிவம் குறித்த தனது கருத்தை நிலைநாட்ட இன்னும் சில வசனங்களை கட்டுரையாளர் கையாண்டுள்ளார்.  

      அவற்றில் இடம்பெறும் مدد – மதத்,- விரித்தல், பலப்படுத்துதல், அதிகப்படுத்துதல், பெரிதாக்குதல்5 போன்ற பொருளிலும் அல்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது

 كُلا نُمِدُّ هَؤُلاءِ وَهَؤُلاءِ مِنْ عَطَاءِ رَبِّكَ وَمَا كَانَ عَطَاءُ رَبِّكَ مَحْظُورًا (٢٠)

              இவர்களுக்கும், அவர்களுக்கும், அனைவருக்கும் உமது இறைவனாகிய நாம் நமது அருளை அதிகமாகக் கொடுப்போம். உமது இறைவனின் அருள் மறுக்கப்பட்டதாக இல்லை.( அல் குர்ஆன் 17:20). 

         மேற்குறிப்பிட்ட விளக்கம் தான் இந்த சொல்லிற்கும். பெரிதாக்குதல் என்ற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், பரப்புதல் என்ற பொருளில் பயன்படுத்தினாலும் இந்த வசனம் அறிவியலுக்கு முரண்படாது. மேலும் விரித்தல் என்ற சொல்லானது பெரிய அளவிலான எந்த வடிவம் உள்ள பொருளின் மீதும் செய்யலாம். நிலம் அல்லது மேற்பரப்பை விரித்தான் என்று பொருள் கொண்டால் அது எந்த அறிவியல் முரணையும் ஏற்படுத்தாது.

            - فرسஃபரஸ- பரப்புதல், பெரிதாக்குதல், விரியச்செய்தல்,6 என்ற பொருளில் பயன்படுத்த பட்டுள்ளது. மேலும் ஃபரஸுன்7 என்ற பெயர்சொல்லுக்கு பரந்து விரிந்த நிலம்/இடம் என்று பொருள். ஆக இந்த கட்டுரையாளர் குறிப்பிடும் அல் குர்ஆன் 51:48 வசனத்தில் இடம் பெரும் ஃபரஸ என்ற சொல்லுக்கு பரந்ததாக ஆக்கினான் என்று பொருள் வரும்.  ஆக இந்த மூன்று சொற்களும் விரித்தல், பரவச்செய்தல், பெரிதாக்குதல், பரந்ததாக ஆக்குதல் போன்ற பொருளில் பூமி தொடர்பான வசனங்களில் பயன்படுத்தினால் எந்த வகையிலும் பூமி தட்டையானது என்று பொருள் படாது.
 وَاللَّهُ جَعَلَ لَكُمُ الأرْضَ بِسَاطًا (١٩)
                      71:19 அல்லாஹ்வே உங்களுக்காக அதை பரந்ததாக அமைத்தான்' (என்றும் கூறினேன்.)
                   இதற்கு பின் உள்ள வசனத்தை படித்தால் இந்த இடத்தில் உள்ள بساطا8 – என்ன கூறுகிறது என்பதை விளங்க முடியும்.
 لِتَسْلُكُوا مِنْهَا سُبُلا فِجَاجًا (٢٠)

                        71: 20. "அதனால் பல வழிகளில் நீங்கள் செல்வதற்காக          

          மேலே அவர் குறிபிட்ட எந்த வசனமும் தட்டை என்பதை நேரடியாக உணர்த்த போதுமானதாக இல்லை. ஒரு இடத்தில் சரியான பொருள் கொள்ளும் வாய்ப்பு இருக்கும் போது அந்த இடத்தில் தவறான பொருளைதான் கொள்வேன் என்று கட்டுரையாளர் ஏனோ அடம்பிடிக்கிறார். நல்ல வேளையாக இந்த சொற்களுக்கு எல்லாம் நீட்டல் என்ற பொருள் உள்ளது ஆக பூமியை கம்பி வடிவிலானது என்று கட்டுரையாளர் வாதிடவில்லை! இப்படி எந்த காலத்திற்கு பொருந்துமாறு வார்த்தை அமைப்பு எவ்வாறு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு மேலே அவர் குறிப்பிடும் வசனங்களே எடுத்துகாட்டு. இறுதியாக அவர் சில சிந்தனைக்குரிய! சில கேள்விகளை பதிந்துள்ளார் அவற்றை சற்று பார்ப்போம்.




நமது பதில்:
      அல் குர்ஆன் குறித்து இந்த கட்டுரையாளர் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அல் குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல. அதில் படைப்பு குறித்தும் சில விஷயங்கள் மனிதனுக்காக சொல்லப்பட்டுள்ளது. அவை இன்றைய அறிவியலுக்கு ஒன்றி செல்வதாய் உள்ளது. ஆக பூமி உருண்டை என்று அறிவிக்க வேண்டும் என்ற கட்டுரையாளரின் கருத்து தவறானது. அடுத்ததாக பூமி தட்டை இல்லை என்பதை உணர்த்தும் பல வசனங்கள் குர் ஆனில் காட்ட இயலும்.
உதரணமாக பின் வரும் இறைவசனங்களை கவனித்தால் புரியும்.

 خَلَقَ السَّمَاوَاتِ وَالأرْضَ بِالْحَقِّ يُكَوِّرُ اللَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لأجَلٍ مُسَمًّى أَلا هُوَ الْعَزِيزُ الْغَفَّارُ (٥)
      39:5. தக்க காரணத்துடனேயே வானங்களையும், பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலகட்டம் வரை ஓடும். கவனத்தில் கொள்க! அவனே மிகைத்தவன்; மன்னிப்பவன். (அல் குர்ஆன் 39:5)
இந்த வசனத்தில் இடம்பெறும்  يُكَوِّرُ – யுகவ்விரத்9 என்ற சொல்லிற்கு உருண்டையான பொருளின் மீது சுருட்டுதல் அல்லது போர்துதல் என்பதாகும்.

குர் ஆனில் கூறப்பட்ட ஒரு விசயம் , அதை மக்கள் புரிந்து கொண்டனர் என்றாலும் நபி(சல்) அவர்களிடம் அது குறித்து கேட்கமாட்டார்கள். ஆக அவற்றை நம்மால் ஹதீஸ்களில் பெற இயலாது. இது குறித்து ஏன் நபி(சல்) அவர்கள் விளக்க வில்லை என்பதற்கு இதுதான் காரணம். 

 رَبُّ السَّمَاوَاتِ وَالأرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ (٥)
(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன். (அல் குர்ஆன் 37:5)

மேற்குறிபிட்ட வசனம் பூமி தட்டையானது அல்ல என்பதை விளக்குவதாய் உள்ளது. பூமி தட்டையானதாக இருந்தால் உலகம் முழுவதும் சூரியன் உதிக்கும் திசையும் மறையும் திசையும் ஒன்றாகத்தான் இருக்கும். பூமியின் ஒவ்வொரு புள்ளியிலும் சூரியன் உதிப்பதால் தான் பல கிழக்குகள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நபித்தோழர்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து:

நபித்தொழர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது புரிதல்:
      இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் فلك – ஃபலக்க10 என்ற சொல்லிற்கு உருண்டை சுழல்வது போல சுழல்வது என்று பின் வரும் வசனத்திற்கு
(அல் குர்ஆன் 21:33 ) விளக்கம் அளித்ததாக தஃப்சீர் இப்னு கஸீர் கூறுகிறது.



وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ (٣٣)

       
          ஃபலக்க என்ற இந்த சொல்லைத்தான் பெண்ணின் மார்பு, புட்டம் போன்ற உறுப்புகளின் வடிவத்தை குறிக்க அரபுகள் பயன்படுத்துவர் என்று Lanes Lexicon10 கூறுகிறது. இந்த சொல்லிற்கான இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையிலேயே இந்த சொல்லை இவ்வாறு விவரிக்கிறார் W.H.Lane என்பது குறிப்பிடதக்கது.



இப்னு கார்தாத்பாஹ்:

      272- 360 ஹிஜ்ரியில் வாழ்ந்த புவியியலாளர். தனது புத்தகத்தின் அரம்ப பக்கங்களில் பூமி உருண்டை வடிவிலானது என்று தனது புத்தகமான அல் மஸாலிக் வல் மமாலிக் பக்க எண் 4ல்  கூறுகிறார்.



அபி உபைதா முஸ்லிம் பின் அஹமத்:
            மேலும்  அபி உபைதா முஸ்லிம் பின் அஹமத், அல் இத்ரீஸி போன்ற அறிஞர்களும் பூமி உருண்டை வடிவிலானது என்று கூறுகின்றனர். இவர்கள் யாரும் மார்க்க அறிஞர்கள் இல்லை ஆயினும் இவர்கள் எந்தவித தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை. கிறித்தவ உலகம் கலீலியோவை படுத்திய பாட்டை இங்கு சுட்டுவது சரியாக இருக்கும். அத்தகைய எந்த தாக்குதலுக்கும் இவர்கள் உள்ளாக வில்லை என்பது நான் முன் கூறிய கருத்தை உறுதி செய்கிறது. மக்கள் புரிந்து கொண்டதால் நபி(சல்) அவர்களுக்கு விளக்க தேவை ஏற்படவில்லை என்று நான் குறிப்பிட்ட கருத்தை இங்கு நினைவு கூறுகிறேன். 

இப்னு ஹஸம் அவர்களது புரிதல்:
       இவரும் பூமி உருண்டை வடிவில் உள்ளது என்று குர் ஆனை கொண்டு வாதிட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர். இவர் தனது புத்தகமான அல் ஃபசல ஃபில் மிலால் வல் அஹ்வா வல் நிஹால்(2/78) ல் அல் குர்ஆன்  39:5 வசனத்தின் அடிப்படையில் கூறுகிறார். 

இப்னு தைமிய்யா அவர்களது புரிதல்:
         பூமி எந்த வடிவிலானது என்ற கேள்வி இப்னு தைமிய்யா அவர்களிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில் அபூ ஹுஸைன் அஹ்மத் இப்னு ஜாஃபர், இமாம் இப்னு ஹசம், அல் ஜவ்ஸி போன்ற மார்க்க அறிஞர்கள் பூமி உருண்டை வடிவிலானது என்று கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுவிட்டு அது உருண்டை வடிவில் இல்லை என்று கூறும் எந்த அறிஞரையும் நான் கண்டதில்லை என்றும் கூறுகிறார்.  இது அவரது மஜ்முவில் 6/586ல் காணப்படுகிறது. அர்ராஸி அவர்களும் பூமி உருண்டை என்ற கருத்தை தனது தஃப்ஸீரில் (19/131)  ல் கூறுகிறார்.

              மேலும் பூமியின் விட்டத்தை அளவிட்டு கூற குழு அமைத்த அல் மாமுன், பூமியின் விட்டதை அளவிட்ட அல் ஃபர்கானி, பூமியின் சுற்றளவை அளவிட்ட அல் பிருனி போன்ற அறிஞர்கள் பூமி உருண்டை என்றே நம்பினர்.மேலும் இவை அனைத்திற்கு காரணமாக அமைந்தது கிப்லாவை கண்டறிய இஸ்லாமியர்கள் எடுத்து கொண்ட சிரத்தைதான் என்று டேவிட் கிங்க் கூறுகிறார். (REF1)(REF2).




       வாடிகன் இன்றுதான் ஏற்று கொண்டுள்ளது இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே ஏற்று கொண்டது என்பதற்கான ஆதாரம் தான் மேலே கூறிய அனைத்தும். எப்போதும் கிறித்தவத்திற்கு ஒத்தூதும் பிழைப்பை விட்டுவிட்டு சிறிது உன்மையை தேடினால் சிறப்பானதாக இருக்கும் என்று கதாசிரியருக்கு அறிவுரை கூறத்தான் தோன்றுகிறது . ஒட்டகத்தை குறிக்கும் சொல் 1000 இருக்க பூமியின் வடிவத்தை கூற சொல் கிடைக்க வில்லையா என்று கேட்டுள்ளார். ஒன்றை இந்த கட்டுரையாளர் மறந்து விட்டார். குர் ஆன் எந்த இடத்திலாவது பூமியின் வடிவத்தை குறிப்பிட தட்டை என்று கூறியுள்ளதா? பூமியின் படைப்பின் பல நிலைகள் குறித்துதான் குர் ஆன் பேசியுள்ளது. எந்த இடத்திலும் குர் ஆன் பூமியின் வடிவம் தட்டையானது என்று நேரடியாக கூறியுள்ளதா? அதை கட்டுரையாளர் கூற முடியுமா.?அடுத்ததாக அரபி குறித்து ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது வார்த்தை கிடைக்க வில்லையா என்று. அரபியில் கூறப்படும் வார்த்தைகள் யாவும் 1 முதல் 3 எழுத்து அடிச்சொற்களால் ஆனவை. 28 எழுத்துகள் மாறி மாறி இடம் பெற்று அடிசொற்களை உருவாக்கியுள்ளன. அப்படி இருக்கையில் எப்படி தனி சொற்கள் அமையும். அதிகப்படியான சொற்கள் அடிசொற்களில் இருந்து மறுவிதான் இருக்கும். இது அரபுக்கும் ஏனைய மொழிக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்........
References
1.Arabic- English lexicon by E.W. Lane page no 1/48
2.Arabic- English lexicon by E.W. Lane page no 1/225
3.Arabic- English lexicon by E.W. Lane page no 3/141
4.Arabic- English lexicon by E.W. Lane page no 3/857
5.Arabic- English lexicon by E.W. Lane page no 7/2696
6.Arabic- English lexicon by E.W. Lane page no 6/2369
7.Arabic- English lexicon by E.W. Lane page no 6/2370
8.Arabic- English lexicon by E.W. Lane page no 1/203 
9.Arabic- English lexicon by E.W. Lane page no 7/2637   
10Arabic-English lexicon by E.W. Lane page no 6/2443-44

External links:
http://www.tyndalearchive.com/tabs/lane/


Saturday, May 16, 2015

சரியான ஹதீஸ்களும், தவறான ஹதீஸ்களும் - உண்மையான அளவுகோள் என்ன?

திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பரவலாக மக்கள் அறிந்து வைத்துள்ளனர். 
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொடர்பான செய்திகளை ஏற்கத்தக்கவை எனவும் ஏற்கத்தகாதவை எனவும் வகைப்படுத்தி இருப்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்கவும் இல்லை. இதைச் சிலர் அறிந்திருந்தாலும் ஏன் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர். 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாததை இரண்டாகப் பிரித்து சிலவற்றை நாம் நிராகரிப்பதாக அவர்கள் புரிந்து கொள்கின்றனர். 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது அனைத்துமே ஏற்கத்தக்கவை என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களாஎன்பதில் ஏற்படும் சந்தேகம் காரணமாகவே சில ஹதீஸ்கள் மறுக்கப்படுகின்றன என்பதை விளக்கவே இந்நூல். சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

அறிவிப்பாளர் சரியில்லை என்று நாம் காரணம் கூறி ஒரு ஹதீஸை நிராகரிக்கும் போது அறிவிப்பாளர்கள் சஹாபாக்கள் (நபி தோழர்கள்) தானே சஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்கும் போது அறிவிப்பாளரை ஏன் குறை சொல்ல வேண்டும் என்றும் சிலர் நினைக்கின்றனர். 
நாம் சஹாபாக்களைக் காரணம் காட்டி எந்த ஹதீஸையும் மறுப்பதில்லை. சஹாபாக்கள் அல்லாத அறிவிப்பாளர்களை மட்டுமே காரணம் காட்டுகிறோம் என்ற உண்மை இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 
சரியான ஹதீஸ்களையும் தவறான ஹதீஸ்களையும் எவ்வாறு கண்டறிவது என்று ஆசைப்படுவோருக்கு முழுமையான விளக்கம் இன்ஷா அல்லாஹ் இந்நூலில் கிடைக்கும். 
ஹதீத்களின் வகைகள் & அதன் தரத்தை, இந்த படம் தெளிவாக  விளக்குகின்றது. 

மேலும் சரியான விளக்கத்திற்கு, இந்த நூலை படிக்கவும்.  Download PDF

மாற்று வழி

ச.நூருல் ஹசன்


அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.......

ஒரு வருடத்திற்கு தமிழகத்தில் மட்டும் 1.65 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வெளியேறுகிறார்களாம்.....
ஆனால் வேலையோடு வெளியேருபவர்களோ.. வெறும் 32 முதல் 35 ஆயிரம் மாணவர்கள் மட்டும் தானாம்...
இது போதாதென்று டிப்ளோமா முடித்த மாணவர்களும் கூட இதே போன்ற நிலைதானாம்...

தமிழகத்தில் பட்டதாரிகளின்  எண்ணிக்கையில் பொறியியல் பயின்றவர்களின் எண்ணிக்கையே அதிகம் என புள்ளி விவரம் கூறுகிறது.. பட்டபடிப்பு முடித்தவர்களுக்கேனும் அவர்கள் சாராத துறையல்லாமல் மற்ற வேறு துறைகளில் வேலை கிடைத்து விடுகிறது...  ஆனால் பொறியியில் படித்தவர்களோ அவர்கள் சார்ந்த துறையில் வேலையில் ஈடுபடவே விருப்பம் கொள்கிறார்கள்... 

இப்படியே அனைவரும் இன்ஜினியரிங் டிப்ளோமா மட்டும் படித்து கொண்டும் பிறகு படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் திண்டாடும் மாணவர்களும் வருடா வருடம் குறைந்த பாடில்லை.





ஏன் இதற்கு மாற்று வழியே இல்லையா?.. இல்லை மாற்று வழியில் செல்ல இந்த மாணவர்கள் தயங்குகிறார்களா?

உண்மை என்னவென்றால் இதுவே..அனைவருக்கும் ஒரு நாற்காலி, தனக்கு கீழ் வேலை செய்ய நான்கு பணியாட்கள்.. ஆப்பிள் ஐபோன்.. ஏசி பொருத்தப்பட்ட அறை.. பத்தாதற்கு பொழுது போக்கிற்கு முகநூல் வாட்சப்... இது தான் எல்லோரின் கனவும்.. ஆனால் நடப்பதோ...

உல்டா.......

வேலையை நாமே செய்த காலம் போய்.. வேலை நம்மை தேட வைக்கும் நிலைக்கு வந்துவிட்டோமே இதற்கு வேறு என்ன வழி...
முதலில் ஒரு ஒரு மாணவன் தன்னுடைய வாழ்கையில் எந்த வழியை தேர்ந்தெடுத்தால் நிலையான பொருளாதாரத்தை ஈட்ட கூடிய தொழிலை அல்லது வேலையை அடையலாம் என சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினாலேயே தன்னுடைய விருப்பத்தை சரியான தொலை நோக்கு பார்வையல்லாத உலகின் கண்கவர், ஆடம்பர வாழ்க்கைக்காக ஆட்டுமந்தையில்  ஆடுகள் செல்வது போல் பொறியியல் அல்லது பட்டபடிப்பு  ஆகியவற்றை தேர்ந்தெடுத்து படிக்க சென்று விடுகிறான். அதிலும் குறிப்பாக பொறியியல் மாணவர்கள் தான் படித்து முடித்த உடனே கையில் வேலையோடு வெளி வந்து விடுவோம் என்ற கனவோடு கல்லூரிகளில் லட்சகணக்கில் பணத்தை ஈடு செய்கிறான். பட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களில் பாதிக்கும் அதிகமானோர் ஆசையும் பொறியியலை பயின்று வேலையோடு திரும்ப வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் பட்டப்படிப்புகளை தேர்வு செய்கின்றனர். இல்லையேல் பொறியியலை நம்பி எலி பொறிக்குள் சிக்கிய நிலை தான் அவர்களுக்கும்.

மாற்று வழியை நாமே ஏற்படுத்த வேண்டும்

ஒரு இன்ஜினியரிங் மாணவன் படிக்க ஒரு வருடத்திக்று குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்கிறான்.. அதுவும் அவன் படிப்பிற்காக அல்ல.. கல்லூரிகளின் பிழைப்புக்காக,... 
இதை ஒரு முதலீடாக நினைத்தே அனைத்து பெற்றோரும் அவ்வளவு பெரிய தொகையையும் பிள்ளையின் நல்வாழ்விற்காக செலவு செய்கின்றனர்.. ஆனால் முதலீடு நான்கு வருடம் கழித்து வெறும் காகிதத்தில் தான் கிடைக்கிறது.. பையனின் மார்க் சீட் மூலமாக...
அதே முதலீட்டை விவசயமோ அல்லது நலிவடைந்து தொய்வடைந்து கொண்டு வரும் தொழில்களில் செலுத்தினால்....



ஆம்...
இன்று மிகவும் நலிவடைந்து கொண்டிருக்கும் மிகவும் முக்கியமான தொழில் விவசாயம்...
நாம் படிப்பது நல்ல பொருளாதாரத்துடனான எதிர்காலத்தை எண்ணி தான்... விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டிருந்த எத்தனையோ மக்கள் முன்னொரு காலத்தில் செல்வந்தர்க்காகலாக வாழ்ந்துள்ளதை நாம் வரலாறுகளில் படித்திருப்போம் (அதனை வரலாறாக படிக்க வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டோம்.)
ஆனால் இன்றோ சேற்றில் கால் வைக்க மனமில்லாமல் நம் வாழ்க்கை சேறாக மாறும் நிலைக்கு இந்த இன்ஜினியரிங் படிப்பை நம்பி மாற்றி (ஏமாற்றி) கொண்டோம்...
இதோ அதனை மாற்ற ஒரு எளிய வழி...
ஒரு கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் சுமார் 800 முதல் 1000 வரை இருப்பார்கள்..(எ.கா: முதல் வருடம்)அதில் வேலை கிடைப்பதோ 200 முதல் 300 பேருக்கே.. மீதமுள்ளோர் தான் செய்திருக்கும் முதலீட்டை (கல்லூரி கட்டணத்தை) 10 முதல் 20 மாணவர்கள் சேர்ந்து அதை வைத்து ஒரு நிலத்தை வாங்கி.. அங்கு விவசாயம் செய்ய துவங்கினால், பிறகு காலையும் மாலையும் மட்டுமே சிறிது நேரம் பொழுதை கழிப்பது போல் வயலில் வேலை செய்து விட்டு.. மீதமுள்ள நேரங்களில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் முகநூளிலும் வாட்சப்பிலும் அழகாக நம் வாழ்கையை களிக்கலாம்... நல்ல முறையில்.. மேலும் உதவிக்கு டிப்ளோமா படித்த/படிக்க நினைக்கும் மாணவர்களும் இணைந்தால் கண்டிப்பாக விவசாயமும் வலம் பெரும்... தனக்கென தொழிலை உருவாக்கி விட்டோம் இனி எவனிடமும் கைகட்டி நிற்க தேவை இல்லை என்ற வைராக்கியத்துடனும் நம் வாழ்கையில் பயணிக்கலாம்....
இத்தோடு மட்டும் நில்லாமல் பேரிடர் காலங்களில் ஏற்படும் விவசாய இழப்புகளை எதிர்கொள்ள எண்ணிடலங்கா பொறியியல் மற்றும் அறிவியல் துறை மாணவர்கள் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகளை இது போன்ற முயற்சிகளின் போது பயன்படுத்தினோமேயானால் நிச்ச்சயம் நாட்டின் வளர்ச்சியையும் நாம் வார்த்தெடுப்பது உறுதி. மேலும் பல மாணவர்கள் அதனை போன்ற கண்டுபிடிப்புகளை சோதனையாக செயல்படுத்தி காட்டவும் இந்த முயற்சி ஒரு ஏதுவாக அமையும்..

வெறும் கார்போராட்டுகளுக்கு அடிமையாக மட்டுமே சேவகம் செய்வதை விட நாட்டின் வளர்ச்சிக்கு நேரடியாக உதவும் இது போன்ற முயற்சிகளை மாணவர்கள் கையிலெடுப்பது அவசியமும் கூட...



ஆனால்.....
இதையெல்லாம் எவன் சார்.. கேக்க போறான்...
நீங்க சொல்லிபுட்டு போய்டுவீங்க... அங்க சேத்துல இறங்கி உளுவுறது யாரு...
இந்த எண்ணம்...
ஏன் படித்த படிப்பிற்கு சம்மந்தமே இல்லாமல் கூலி வேலைக்கு வெளிநாடு செல்லும் போது தோன்றவில்லை...
ஏன் நான்கு லட்சம் செலவு செய்து பெற்றோரை வருத்தும் போது தோன்றவில்லை...
ஏன் வேலையே கிடைக்காமல் வெட்டியாக பொழுதை கழிக்கும் போது தோன்றவில்லை...
???????????????
மாற்றம் ஒன்றே மாறாதது...  பொறியியலும் பட்டமும் மட்டுமே வாழ்க்கைக்கு போதும் என நினைப்பவர்களிடதிலே தான் சாதனை என்ற வார்த்தை இடம் பெறாமல் போகிறது. சாதித்து காட்ட இது போன்ற முயற்சிகளே வழிவகுக்கும்.

தொழிலை நாம் உருவாக்குவோம்.. வேலையை நாம் கொடுப்போம்..
உழைப்போம்.. உயர்வோம்...

- ச.நூருல் ஹசன்.

இதுபோல் ஒன்றை உங்களால் கொடுக்க முடியுமா?


இறைவன், திருக்குரானை  மனித கரங்கள் விளையாடுவதை விட்டும் பாதுகாப்பதாக உறுதி அளித்துள்ளான்.

திருக்குரான் எப்படி பாதுகாக்கப்படுகின்றது?

- உலகில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களாலும் ஒவ்வரு நொடியும் மனனம் செய்யப்படுகின்றது

- எந்தெந்த நவீன தொழில்நுட்பம் வந்தாலும், அதைகொண்டும் பாதுகாப்பு செய்யப்படும்

- உலகிலே குரானைபோல் மனனம் செய்யும் வேறு எந்த புத்தகமும் இதுவரை வந்ததும் இல்லை, வரவும் முடியாது!

- எந்தவித நவீன தொழிநுட்பம் இல்லாமல் போனாலும், மிக எளிதில் குரான் தொகுக்கப்பட்டுவிடும் - மனிதர்களின் உள்ளத்தில் பாதுகக்கப்படுவதால்

இங்கே ஒரு மிக நேர்த்தியான முறை (PATTERN) தெரிகின்றதே...இதை யாராலும் ஏற்படுத்த முடியுமா? இறைவன் பாதுகாகின்றான் என்பதற்கு இதுவே சான்று!

இதுவரை எந்த மாற்றத்திற்கும் ஆகாத, யாராலும் மாற்றவே முடியாது என்ற உறுதிமொழியை தரும், இந்த திருக்குரானை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டாமா?


அல்லாஹ்  கூறுகின்றான்:


  1.  நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்" [15:9]
  2.  இது பாக்கியமான வேதம். இதன் வசனங்களை அவர்கள்   சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு அருளினோம்." [38:29]
  3. அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? [47:24]
  4. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ்அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் [4:82]